TnpscTnpsc Current Affairs

19th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக நிமோனியா நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 12 

ஆ) நவம்பர் 14

இ) நவம்பர் 16

ஈ) நவம்பர் 18

  • உலக நிமோனியா நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதல் உலக நிமோனியா நாளை நடத்துதற்காக 100’க்கும் மேற்பட்ட குழந்தைகள் அமைப்புகள் குழந்தைகளில் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் இணைந்தன.
  • உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ், நிமோகாக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி (PCV) திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. நிமோனியாவால் குழந்தைகளிடையே ஏற்படும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைப்பது மற்றும் அந்நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவில், 5 ஆண்டுகளுக்கு முன் 1.2 மில்லியன் குழந்தைகள் இறந்ததாகவும், அதில் 15.9% இறப்புகள் நிமோனியாவால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2. ‘பழங்குடியினர் பெருமைதின மகாசம்மேளனத்தை’ நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மத்திய பிரதேசம் 

இ) சிக்கிம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • பழங்குடியினர் பெருமை தின மகாசம்மேளனமானது நவ.15ஆம் தேதி அன்று மத்தியபிரதேச மாநிலம் ஜம்பூரி மைதானம் போபாலில் நடந்தது. பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளில் இம்மகாசம்மேளனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு (2021), பழங்குடியின பெருமை தின மகாசம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

3. ‘HARBINGER-2021’ என்பது பின்வரும் எந்த இந்திய அமைப்பால் அறிவிக்கப்பட்ட ஓர் உலகளாவிய ஹேக்கத்தான் ஆகும்?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி 

இ) இந்திய உச்ச நீதிமன்றம்

ஈ) இந்திய தேர்தல் ஆணையம்

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முதல் ‘HARBINGER 2021 – Innovation for Transformation’ என்ற ஹேக்கத்தானை ‘ஸ்மார்ட்டர் டிஜிட்டல் பேமெண்ட்ஸ்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவித்தது.
  • ஹேக்கத்தானுக்கான பதிவு நவ.15 முதல் தொடங்குகிறது. அனைவரும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை அணுகும் வகையிலான தீர்வுகளை உருவாக்குதற்கு பங்கேற்பாளர்களை இந்த ஹேகத்தான் அழைக்கிறது.

4. வளரும் நாடுகளின் ஒத்த எண்ணம் கொண்ட குழுவில் (LMDCs) எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?

அ) 12

ஆ) 18

இ) 24 

ஈ) 36

  • 24 நாடுகள், ஒத்த எண்ணம் கொண்ட வளரும் நாடுகளின் குழுவில் (LMDCs) உறுப்பினர்களாக உள்ளன. அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களில் பேச்சுவார்த்தையாளர்களாக பணியாற்றுகின்றனர். இதில் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்டவை அடங்கும்.
  • சமீபத்தில் LMDC’களும் ஆப்பிரிக்க நாடுகளும், 2030 – COP 26 உச்சி மாநாட்டில் தொடங்கி, காலநிலை நிதியாக உலக செல்வந்த நாடுகள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் $1.3 டிரில்லியன் டாலர்கள் தரவேண்டும் எனக் கோரியுள்ளன.

5. ‘Shuttler’s Flick: Making every match count’ என்பது யாரின் சுய சரிதை ஆகும்?

அ) கோபி சந்த் 

ஆ) P V சிந்து

இ) கரோலினா மரின்

ஈ) சாய்னா நேவால்

  • இந்திய தலைமை தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளரான பி கோபி சந்த் தனது சுயசரிதையான ‘Shuttler’s Flick: Making every match count’ஐ முறைப்படி வெளியிட்டார். இந்நூலை பிரியா குமாருடன் இணைந்து அவர் எழுதியுள்ளார். பேட்மிண்டனில் ஒரு வீரராக, பயிற்சியாளராக அவர் மேற்கொண்ட பயணத்தையும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், P V சிந்து உட்பட சிறந்த வீரர்களை உருவாக்குவதில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இந்நூல் விவரிக்கிறது.

6. இறுதி கிளாஸ்கோ COP 26 ஒப்பந்தம் புவி வெப்பமடைதலை __டிகிரி செல்சியஸில் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

அ) 1

ஆ) 1.5 

இ) 2.0

ஈ) 3.0

  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை உச்சி மாநாடு, புவி வெப்பமடைதலை 1.5° செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஓர் உலகளாவிய ஒப்பந்தத்துடன் முடிவடைந்து உள்ளது. இந்த கிளாஸ்கோ ஒப்பந்தம், பைங்குடில் வாயுக்களை மிக மோசமான அளவில் வெளியிடும் புதைபடிவ எரிபொருளான நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பதற்கு வெளிப்படையாகத் திட்டமிடும் முதல் காலநிலை ஒப்பந்தமாகும்.

7. ‘ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்’ நிகழ்வுகளுக்காக ஒருங்கிணைந்த திறன்பேசி செயலியை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) வெளியுறவு அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) சுற்றுலா அமைச்சகம்

  • கொண்டாட்டங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அணுகும் வகையில், கலாச்சார அமைச்சகம் ‘ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்’ நிகழ்வுகளுக்காக ஓர் ஒருங்கிணைந்த திறன்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்’ என்பது இந்தியா விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டாகும். இந்தச் செயலியில் ‘டிஜிட்டல் மாவட்ட களஞ்சியம்’ மற்றும் ‘ஹிஸ்டரி கார்னர்’ கீழ் ‘பாடப்படாத நாயகர்கள்’ போன்ற பிரிவுகளுக்கான இணைப்புகள் உள்ளன.

8. ‘DAVINCI’ என்பது வெள்ளிக்கோளை ஆராய்வதற்கான எந்த விண்வெளி நிறுவனத்தின் திட்டமாகும்?

அ) NASA 

ஆ) ISRO

இ) JAXA

ஈ) ESA

  • 2030’களின் முற்பகுதியில் VERITAS, (கோளைச் சுற்றி வர) மற்றும் DAVINCIDeep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry, and Imaging ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்குவதன் மூலம் வெள்ளிக்கோளை ஆராய NASA திட்டமிட்டுள்ளது.
  • NASA, வரும் 2029’இல் தொடங்கப்படவுள்ள ‘DAVINCI’ திட்டம் பற்றிய வீடியோவை அண்மையில் வெளியிட்டது. அது, நீர் உள்ளதா என்பது உட்பட பல்வேறு அளவுருக்களை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வெள்ளிக் கோளின் தோற்றம், பரிணாமம் மற்றும் கலவை பற்றிய அடிப்படை கேள்விகளுக்கான பதில்களையும் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. ‘கைசர்-இ-ஹிந்த்’ஐ மாநில பட்டாம்பூச்சியாக அங்கீகரித்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) ஒடிசா

  • முதல்வர் பேமா கந்து தலைமையிலான அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவை, பெரியதும், பிரகாசமான நிறமுள்ளதுமான ‘கைசர்-இ-ஹிந்தை’ மாநில வண்ணத்துப்பூச்சியாக அங்கீகரித்தது.
  • முதல்முறையாக பாக்கே புலிகள் காப்பகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘கைசர்-இ-ஹிந்த்’ (Teinopalpus imperialis) என்றால் ‘இந்தியாவின் பேரரசர்’ என்று பொருள். 90-120 மிமீ இறக்கைகள் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி ஆறு மாநிலங்களில் காணப்படுகிறது.

10. ஞாயிறு, புவி மற்றும் திங்கள் ஆகியவை ஒரு சரியான நேர்க் கோட்டில் நின்று, திங்கள் புவியின் நிழலில் நகரும் நிகழ்வுக்குப் பெயர் என்ன?

அ) சூரிய கிரகணம்

ஆ) சந்திர கிரகணம் 

இ) கோடைகால சங்கிராந்தி

ஈ) குளிர்கால சங்கிராந்தி

  • ஞாயிறு, புவி மற்றும் திங்கள் ஆகியவை ஒரு சரியான நேர்க்கோட்டில் நின்று, திங்கள் புவியின் நிழலில் நகரும் நிகழ்வு ‘சந்திர கிரகணம்’ என்று அழைக்கப்படுகிறது. NASA’இன் கூற்றுப்படி, 580 ஆண்டுகளில் மிகநீளமான பகுதி சந்திர கிரகணத்தை 2021 நவ.17 அன்று அமெரிக்கா காணும். இந்தக் கிரகணம் மூன்று மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கும் என NASA தெரிவித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சாலை விபத்தில் பாதிப்பு: 48 மணி நேர உயா் சிகிச்சையை அரசே அளிக்கும்

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்துக்கான உயா் சிகிச்சையை அரசே அளிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தி:-

ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் 23.9 என்ற அளவில் உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். மேலும் பல்துறை நிபுணா்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படும். சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தத் தேவையான நிா்வாக, நிதி ஆதாரங்களுடன் அது செயல்படும்.

48 மணி நேர சிகிச்சை: சாலை விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும். இதற்காக ‘நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். விபத்தில் பாதித்தோருக்கு முதல் 48 மணி நேர அவசர உயிா் காக்கும் உயா் சிகிச்சையை அரசே இலவசமாக அளிக்கும்.

சாலையோரங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன. முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாதோருக்கும் பிற மாநிலத்தவா், வேற்று நாட்டவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கென ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபருக்கு ரூ.1 லட்சம் வரம்புக்குள் 81 தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன.

அவசர மருத்துவ சேவைகள் சட்டம்: விபத்து நோ்ந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்கும் வகையில் தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டம் இயற்றப்பட உள்ளது. அதன்படி, விரைவாக அணுகுதல், உயிா் மீட்பு சிகிச்சை, பாதிப்பை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல், மறுவாழ்வு சிகிச்சை ஆகிய கூறுகளை அந்தச் சட்டம் கொண்டிருக்கும்.

சாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு உருவாக்கப்படும். சீரான சாலைகள், நம்மைக் காக்கும் 48 மணி நேரம், அவசர மருத்துவ சேவைகள் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி ‘இன்னுயிரை காப்போம்’ என்ற திட்டம் வகுக்கப்படும். சாலை விபத்தில் சிக்கியோரை மீட்டு உயிரைக் காப்பதே இன்னுயிா் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

”முதல்வரது ஆணையின்படி, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, சி.ஏ.பவானிதேவி (வாள் சண்டை), எ.தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி, (தடகளம்), வி.சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்குத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டு 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை (நிலை) எண்.46, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.10.2021-ன் மூலம் ஆணையிட்டுள்ளது.

மேலும், முதல்வரது சீரிய முயற்சியின் கீழ், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பயன்பெறுவர். இதனால் தமிழினத்தின் பழங்காலத் தற்காப்புக் கலைகளில் சிறப்புமிக்க சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா் ஆகியோரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க ஏதுவான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது.

1984- பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அமலாக்கத் துறை இயக்குநருக்கான பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதிவிக் காலத்தை 2022, நவம்பா் 11-ஆம் தேதி வரை நீட்டிக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதாகும் சஞ்சய் குமாா் மிஸ்ரா, அமலாக்கத் துறை இயக்குநராக முதல் முறையாக 2018, நவம்பா் 19-ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். 2020-இல் அவரது முந்தைய இரண்டு ஆண்டுகள் பணி நியமன உத்தரவு மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு மேலும் பணி நீட்டிப்பு செய்யக் கூடாது’ என்று கூறியது.

இந்நிலையில், மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்த இரண்டு அவசரச் சட்டங்களில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநா்களின் இரண்டு ஆண்டு பதவிக் காலம் நீட்டிப்புக்கு பிறகு மீண்டும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பணி நியமனக் குழுக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4. கையூட்டு அபாயம்: தரவரிசையில் 82-ஆவது இடத்தில் இந்தியா!

நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்திலிருந்து 82-ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.

ஊழலுக்கு எதிரான தர நிர்ணய அமைப்பான டிரேஸ், இதுகுறித்து வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொழில்முனைவோரும் நிறுவனங்களும் அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயத்துக்கான தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 77-ஆவது இடத்தில் இருந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான இந்தப் பட்டியலில் 44 புள்ளிகளைப் பெற்று இந்தியா 82-ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.

எனினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைவிட இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மற்றோர் அண்டை நாடான பூடான் இந்தத் தரவரிசையில் 62-ஆவது இடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் வடகொரியா, துருக்மெனிஸ்தான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகளில் தொழிலுக்காக கையூட்டு செலுத்த வேண்டிய அபாயம் அதிக அளவில் உள்ளது.

ஆனால், டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இந்த அபாயம் மிகக் குறைவாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள், ஊழல் தடுப்பு அமைப்புகள் செயலாற்றும் திறன், அரசு சேவைகளின் வெளிப்படைத்தன்மை, ஊடகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் செயலாற்றல் ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

5. சைபா் பாதுகாப்பு: பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா- நியூஸிலாந்து முடிவு

சைபா் பாதுகாப்பு, சைபா் குற்றம் மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இணைந்து செயல்படுவது என முடிவு எடுத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முடிவு புதன்கிழமையுடன் நிறைவடைந்த 2 நாள்கள் காணொலி பேச்சுவாா்த்தையின்போது எடுக்கப்பட்டது.

இந்தியா- நியூஸிலாந்து இடையிலான 2-ஆம் கட்ட சைபா் பேச்சுவாா்த்தையின்போது, சைபா் வெளியில் நிலவும் ஒத்துழைப்பு குறித்தும், அதை மேற்கொண்டு நீட்டிப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், சைபா் பாதுகாப்பு, சைபா் குற்றம் மற்றும் திறன் கட்டமைப்பில் இரு நாடுகளும் பரஸ்பரம் நெருங்கி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைக்கு, இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சக இணைச் செயலா் அடுல் மல்ஹரி தலைமை வகித்தாா். நியூஸிலாந்து பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கொள்கை இயக்குநா் டேன் ஈட்டனும், பாதுகாப்பு விவகார தற்காலிக மேலாளா் ஜாா்ஜினியா சா்கிஷனும் தலைமை வகித்தனா்.

இரு நாடுகளைச் சோ்ந்த பல்வேறு அமைச்சக, துறைகளின் மூத்த அதிகாரிகள் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

6. உருவாகிறது சென்னை ட்ரோன் காவல் பிரிவு

சென்னையில் பொது மக்கள் அதிகமாகக் கூடும் கடற்கரை அல்லது சந்தைப் பகுதியில் மாநகரக் காவல் துறையின் ட்ரோன் காவல் பிரிவு அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிக்க ரூ.3.60 கோடி செலவில் நடமாடும் ட்ரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

ட்ரோன் காவல் பிரிவை உருவாக்குவதற்கான கடிதத்தை பெருநகர சென்னை காவல் ஆணையர் சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பணியாற்றக் கூடிய காவல் அதிகாரிகளுக்கு உதவிட ட்ரோன் காவல் பிரிவை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகள், குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்கள், மக்களைக் காப்பாற்றக் கூடிய வகையில் கடற்கரைகள் போன்ற இடங்களில் நடமாடும் ட்ரோன் பிரிவை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திட்டத்துக்கென மூன்று வகையான ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ட்ரோன் காவல் பிரிவானது, மெரீனா கடற்கரை அருகேயுள்ள காந்தி சிலை அல்லது எலியட்ஸ் கடற்கரை அல்லது பாண்டிபஜார் பகுதியில் அமைத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் ட்ரோன் பிரிவானது தற்காலிக கன்டெய்னர் வடிவில் உருவாக்கப்படும். இது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டிருக்கும். இது தரை மற்றும் முதல் தளம் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். தரை தளம் கட்டுப்பாட்டு அறையாகப் பயன்படுத்தப்படும். மேலே உள்ள தளம் ட்ரோன் இயக்கத்துக்காக உபயோகப்படுத்தப்படும்.

மூன்று வகையான ட்ரோன்கள்: ஒவ்வொரு நடமாடும் ட்ரோன் காவல் பிரிவும் ஒன்பது ட்ரோன்களைக் கொண்டிருக்கும். எச்.டி. தரமுடைய கேமிரா, இரவிலும் படம் பிடிக்கும் வசதி, நேரலையாக ஒளிபரப்பு செய்வது, பொது அறிவிப்புக்கான ஸ்பீக்கர் வசதி, 2 கிலோமீட்டர் தூரம் பறக்கக் கூடிய திறன், 30 நிமிடங்கள் விடாமல் பறக்கும் திறன் என தனித்துவம் வாய்ந்த 6 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

நீண்ட தொலைவுக்குக் கண்காணிக்கும் திறனுடைய ட்ரோன்கள் 2 வாங்கப்பட உள்ளன. இது உயர் ரகமானது. 100 நிமிடங்கள் மற்றும் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் படைத்தது. உயிர் காக்கும் ட்ரோன் என்ற பெயரிலான ட்ரோன் ஒன்று வாங்கப்பட உள்ளது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கும் திறனை இந்த ட்ரோன் பெற்றுள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பறக்கும் திறனுடைய இந்த ட்ரோனின் மொத்த எடை 12 கிலோகிராம்.

இந்த ட்ரோன் பிரிவுகளை உருவாக்குவதற்குத் தேவையான நிதியான ரூ.3.60 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.

7. பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை:

பெங்களூருவில் 24-வது தொழில்நுட்ப மாநாட்டை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, தொழிலதிபர் கிரண் மஜூம்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உள்ளிட்டோர் இணைய வழியில் பங்கேற்று உரையாற்றினர்.

நாளை வரை 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவோர் பங்கேற்கும் அரங்க நிகழ்வுகளில், 300 தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

தொடக்க நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில், “நாட்டுக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கு பலன் தரும் பல புதிய திட்டங்கள் இந்த மாநாட்டின் மூலம் ஆரம்பமாக இருக்கிறது” என்றார்.

மாநாட்டின் 2-வது நாளான இன்று, சிட்னி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை இணைய வழியாக ஒளிபரப்பாகிறது. இதே போல இந்திய – அமெரிக்க புத்தாக்க கூட்டணி மாநாட்டில் இடம்பெறும் மோடியின் உரையும் இந்த மாநாட்டிலும் ஒளிபரப்பாகிறது.

8. ஹரியாணா மாநிலம் குருகிராமில் நாட்டிலேயே முதல் முறையாக மீன்வளத் தொழில் முனைவோர் பயிற்சி நிலையம்

நாட்டில் முதல் முறையாக மீன்வளத் தொழில் முனைவோருக்கானப் பயிற்சி நிலையம், ஹரியாணா மாநிலம் குருகிராமில் தொடங்கப் பட்டுள்ளது.

‘லினாக்-என்சிடிசி ஃபிஷ்ஷரிஸ் இன்குபேஷன் சென்டர் (எல்ஐஎப்ஐசி)’ எனும் பெயரிலான இந்தப் பயிற்சி நிலையத்தை மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பிரதமர் மீன் வளத் திட்டத்தின் (பிஎம்எம்எஸ்ஒய்) கீழ் ரூ.3.23 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (என்சிடிசி) இதனை நிர்வகிக்கிறது.

விழாவில் மத்திய அமைச்சர் ரூபாலா பேசும்போது, “மீன் வளர்ப்பு முதல் அதன் விற்பனை வரை பயிற்சி, ஆலோசனை, தொழில் முதலீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்தும் எல்ஐஎப்ஐசி சார்பில் வழங்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “மீன்வளத் துறை நம் நாட்டில் ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சி பெறுகிறது. நம் நாட்டின் மீன் உற்பத்தி தற்போது 130 லட்சம் டன்னாகவும் அதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.46,000 கோடியாகவும் உள்ளது. 2025-ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 மில்லியன் டன்களாகவும் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாகவும் உயர்த்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

9. உலகின் சுத்தமான ஆற்றில் ஒரு படகு பயணம்: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்

ஆற்றில் படகு செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஆற்றில் பயணிக்கும் படகு வானத்தில் மிதப்பது போல தோன்றுகிறது. அந்த அளவுக்கு அந்த ஆற்று நீர் அவ்வளவு சுத்தமாக உள்ளது. ஆற்றின் அடியில் உள்ள தாவரங்கள், கற்கள் ஆகியவை கண்ணாடி மூலம் பார்ப்பது போல தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.

இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய ஜல் சக்தி அமைச்சகம், “மேகாலயா மாநிலத்தில் ஓடும் உம்காட் ஆற்றில்தான் இந்தப் படகு செல்கிறது. தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு, உலகிலேயே சுத்தமான ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்கும் அம்மாநில மக்களுக்கு நன்றி. நாட்டில் உள்ள அனைத்துஆறுகளும் இதுபோல சுத்தமாகஇருக்க வேண்டும் என விரும்புகிறோம். மேகாலயா மக்களுக்கு தலை வணங்குகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

10. தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி சிபிஐ இணை இயக்குநராக வித்யா ஜெயந்த் நியமனம்

தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து ஒன்றிய பணியாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருப்பவர் வித்யா ஜெயந்த் குல்கர்னி. இவரை சிபிஐ இணை இயக்குநராக நியமித்து ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றுவார். அதன் பின் அவர் மீண்டும் தமிழக காவல் துறைக்கு திரும்புவார். ஒடிசா ஐபிஎஸ் அதிகாரி ஞான்ஷியாம்,் மகாராஷ்டிரா நாவல் பஜாஜ் ஆகியோரும் இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

11. யுனெஸ்கோ செயற்குழுவில் இந்தியாவுக்கு மீண்டும் இடம்

ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு யுனெஸ்கோ ஆகும். இந்த அமைப்பின் செயற்குழுவில் இந்தியா மீண்டும் இணைந்து செயல்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஓட்டெடுப்பில இந்தியாவுக்கு 164 ஓட்டுகள் கிடைத்தன. 2021-2025 ஆண்டுகள், பதவிக்காலம் ஆகும்.

12. உலக பெண்கள் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’

டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.

1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

13. லக்னோ: போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள், மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் நேரடியாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் என 350-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காணொலி முறையிலும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாவோயிஸ்டு வன்முறை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டி.ஜி.பி.க்கள் மாநாட்டின் நேற்றைய அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் வெறும் அடையாள பங்கேற்பை வெளிப்படுத்தாமல், மொத்த அமர்விலும் பங்கேற்று நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தனக்கு இருக்கும் அக்கறையை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதலே போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாட்டில் முழுமையாக பங்கேற்பதை பிரதமர் வழக்கமாக கொண்டுள்ளார். வெறும் பங்கேற்புடன் நில்லாமல், போலீஸ் அதிகாரிகள் தன்னுடன் நேரடியாக கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கி வருகிறார்.

வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்த மாநாடு, மோடியின் அறிவுறுத்தலின்பேரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பிறகு டெல்லிக்கு வெளியே நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மட்டுமே டெல்லியில் இருந்து காணொலி முறையில் நடத்தப்பட்டது. இதைப்போல 2014-ம் ஆண்டு முதல் மாநாட்டின் வடிவம், அமர்வுகளுக்கான தலைப்புகள் உள்ளிட்டவற்றிலும் அதிகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

14. ஆசிய வில்வித்தையில் தங்கம் வென்றார் ஜோதி சுரேகா

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோதி சுரேகா தங்கப் பதக்கம் வென்றார்.

வங்கதேசத்தின் டாக்கா நகரில்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதிசுரேகா, முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ரிஷப் யாதவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார் ஜோதி சுரேகா. இறுதி சுற்றில் இந்திய ஜோடி 154-155 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யுன்ஹீ, சோய் யோங்கி ஜோடியிடம் தோல்வி கண்டது.

15. நவம்பர்.19 – உலக கழிவறை நாள்

1. When is the ‘World Pneumonia Day’ observed?

A) November 12 

B) November 14

C) November 16

D) November 18

  • World Pneumonia Day is observed every year on November 12. Over 100 children organisations joined the Global Coalition against Child Pneumonia to hold the first World Pneumonia Day. Under the universal immunisation programme, the Pneumococcal Conjugate Vaccine (PCV) programme was launched in India.
  • The programme aims to spread awareness and reduce mortality and morbidity among children due to pneumonia. In India, it is estimated that 1.2 million children die before 5 years and 15.9% of deaths are due to pneumonia.

2. Which Indian state is set to host the ‘Tribal Pride Day Mahasammelan’?

A) Gujarat

B) Madhya Pradesh 

C) Sikkim

D) Arunachal Pradesh

  • Tribal Pride Day Mahasammelan is scheduled to be held on November 15 at Jamboori Maidan Bhopal, Madhya Pradesh. Mahasammelan is being organised on the birth anniversary of Lord Birsa Munda. This year, the Prime Minister Narendra Modi will address the Tribal Pride Day Mahasammelan.

3. ‘HARBINGER 2021’ is the global hackathon announced by which Indian organisation?

A) NITI Aayog

B) Reserve Bank of India 

C) Supreme Court of India

D) Election Commission of India

  • The Reserve Bank of India (RBI) announced its first ‘HARBINGER 2021 – Innovation for Transformation’ with the theme of “smarter digital payments”. Registration for the hackathon starts from November 15. The Hackathon invites participants to develop solutions to make digital payments accessible to the under–served, enhance the ease of payments, user experience and security of digital payments.

4. How many countries are members of the Like–Minded Group of Developing Countries (LMDCs)?

A) 12

B) 18

C) 24 

D) 36

  • A group of 24 nations are members of the Like–Minded Developing Countries (LMDCs). They serve as negotiators in international organizations such as the United Nations and the World Trade Organization. It includes China, India, Sri Lanka, and Malaysia among others. Recently the LMDCs and African countries, have sought at least US $1.3 trillion per year from the wealthy countries in climate finance starting from 2030 at COP 26 summit.

5. ‘Shuttler’s Flick: Making every match count’ is the autobiography of which famous personality?

A) Gopi Chand 

B) P V Sindhu

C) Carolina Marin

D) Saina Nehwal

  • India’s chief national badminton coach P Gopi Chand formally launched his autobiography Shuttler’s Flick: Making every match count. The Book has been co–authored by Priya Kumar. It narrates his journey into badminton as a player, coach and the challenges he faced in producing top players, including Olympic medallists Saina Nehwal, P.V. Sindhu, B. Sai Praneeth and former World No.1 K. Srikanth.

6. The Final Glasgow COP 26 agreement aimed at capping global warming at …………. degrees Celsius.

A) 1

B) 1.5 🗹

C) 2.0

D) 3.0

  • UN climate summit in Glasgow, Scotland has concluded with a global agreement aimed at capping global warming at 1.5 degree Celsius. This Glasgow Pact is the first–ever climate deal to explicitly plan to reduce coal, the worst fossil fuel for greenhouse gases.

7. Which Union Ministry has launched a unified mobile app for the ‘Azadi Ka Amrit Mahotsav’ events?

A) Ministry of External Affairs

B) Ministry of Culture 

C) Ministry of Home Affairs

D) Ministry of Tourism

  • The Ministry of Culture has launched a unified mobile app for the ‘Azadi Ka Amrit Mahotsav’ events to enable access to all information related to the celebrations. Azadi Ka Amrit Mahotsav’ is the 75th anniversary of India’s Independence.
  • The app includes links to sections such as ‘Digital District Repository’ and ‘Unsung Heroes’ under ‘History Corner’.

8. ‘DAVINCI’ is a mission of which space agency to explore Venus?

A) NASA 

B) ISRO

C) JAXA

D) ESA

  • NASA has planned to explore Venus by launching two missions in the early 2030s, namely VERITAS, (to orbit the planet) and DAVINCI — Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry, and Imaging. NASA recently released a video about the DAVINCI mission, which is set to launch in 2029.
  • The mission aims to observe various parameters including whether it had water. It will also find answers to fundamental questions about the origin, evolution, and composition of Venus.

9. Which state has approved ‘Kaiser–i–Hind’ as the State butterfly?

A) Assam

B) Sikkim

C) Arunachal Pradesh 

D) Odisha

  • The Arunachal Pradesh State Cabinet headed by Chief Minister Pema Khandu approved the large, brightly coloured Kaiser–i–Hind as the State butterfly. The Cabinet meeting was held at the Pakke Tiger Reserve for the first time.
  • Kaiser–i–Hind (Teinopalpus imperialis) means Emperor of India. This butterfly with a 90–120 mm wingspan is found in six States.

10. What is the phenomenon named, when the sun, Earth and a full moon form a perfect line–up and the moon moves into the Earth’s shadow?

A) Solar Eclipse

B) Lunar Eclipse 

C) Summer Solstice

D) Winter Solstice

  • The phenomenon when the sun, Earth and a full moon form a perfect line–up and the moon moves into the Earth’s shadow is called the Lunar Eclipse. The United States of America would witness the longest partial lunar eclipse and the longest in 580 years on 17th November 2021, as per NASA. NASA has stated that the eclipse would last for three hours and 28 minutes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!