Tnpsc

19th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘மோல்’ எனப் பெயரிடப்பட்ட, எந்த நாட்டின் செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, சமீபத்தில் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது?

அ) சீனா

ஆ) UAE

இ) USA

ஈ) இஸ்ரேல்

  • ‘மோல்’ எனப்பெயரிடப்பட்ட செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, செவ்வாய் கோளில் NASA’இன் இன்சைட் தரையிறங்கிமூலம் பணியில் ஈடுபடுத்தப்
    -பட்டது. செவ்வாய் கோளில் ஆழமாக அகழ தவறியதால், இந்தக் கருவி அந்நாட்டின் அறிவியலாளர்களால் அது செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
  • இதனை, ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் உருவாக்கியது. மிக ஆழமாக தோண்டி செவ்வாய் கோளின் உள்வெப்பநிலையைக் கண்டறிய இது 2019 முதல் முயற்சித்து வருகிறது. இன்சைட் தரையிறங்கி, 2022 வரை தொடர்ந்து செயல்படும்.

2. பெருநிறுவன நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் ICSI தேசிய விருதை வென்ற பெருநிறுவனம் எது?

அ) PFC

ஆ) ITC

இ) NTPC

ஈ) ONGC

  • பெருநிறுவன நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும், இருபதாவது நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் (ICSI) தேசிய விருதுகளில், ‘பட்டியலிடப்பட்ட பிரிவு: பெரிய வகை’இல் ITC லிமிடெட் ‘சிறந்த நிர்வாகம் புரியும் நிறுவனம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
  • இவ்விருதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி AK சிக்ரி தலைமையிலான நடுவர் மன்றம் அறிவித்தது. ITC நிறுவனத்தின் செயலாளர் இராஜேந்திர குமார் சிங்கி, ‘ஆண்டின் ஆளுமை நிபுணர்’ எனத் தேர்வுசெய்யப்பட்டார்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘MINUSMA’ என்றால் என்ன?

அ) மாலியில் ஐநா மேற்கொள்ளும் அமைதிகாக்கும் பணி

ஆ) புதிய கோளின் பெயர்

இ) புதிய விண்மீனின் பெயர்

ஈ) அமெரிக்க கூட்டு வரிச் சட்டம்

  • UN – Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) என்பது மாலியில் ஐநா மேற்கொண்டு வரும் அமைதி காக்கும் பணியாகும். இது, 2013’இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிக ஆபத்தான ஐநா நடவடிக்கையாக கருதப்படுகிறது.
  • அண்மையில், அமைதி காக்கும் படையினர், மாலியின் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 4 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

4. இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை தயாரித்துள்ள நிறுவனம் எது?

அ) BEML

ஆ) BHEL

இ) HAL

ஈ) DRDO

  • இந்தியாவின் முதல் அதிநவீன ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பெங்களூரில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
  • இவ்வலகு, 2280 பயணிகளைக்கொண்டு செல்லும் திறன்கொண்ட எஃகு உடலால் ஆனது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் MRS-1 திட்டத்திற்காக இதுபோன்ற 576 இரயிலை உற்பத்தி செய்வதற்கான பணியாணைகளை BEML பெற்றுள்ளது.

5. இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பும், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு துணை நிறுவனமும் ஆகும். இது, இந்தியாவில் நறுமணப் பொருட்கள் தொடர்பான விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
  • இதன் தலைமையகம் கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. அண்மையில், மூத்த தோட்டக்கலை விஞ்ஞானி ஜே ரெமா இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றார்.

6. ‘ஜல்லிக்கட்டு’ என்பது பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படுகிற ஒரு வீரவிளையாட்டு ஆகும்?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தெலங்கானா

  • தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அலங்கநல்லூரில் நடைபெற்ற புகழ் பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • ‘ஜல்லிக்கட்டு’ என்பது பாரம்பரியமாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற ஓர் ஏறுதழுவுதல் விளையாட்டாகும். இது பொங்கல் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் ‘மாட்டுப்பொங்கல்’ நாளன்று நடத்தப்படுகிறது. பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அரசாணையை தொடர்ந்து இந்நிகழ்வு தொடர்கிறது.

7. பின்வரும் எந்த அமைச்சகத்தின் தலைமையின்கீழ், PMKVY செயல்படுத்தப்படுகிறது?

அ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

ஆ) பழங்குடியின நலத்துறை அமைச்சகம்

இ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) நிலக்கரி அமைச்சகம்

  • பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா (PMKVY), 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 3ஆவது கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மூன்றாங்கட்ட திறன் இந்தியா திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு இலட்சம் பேருக்கு, `948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “போஜன்னகொண்டா” என்பதன் பொருள் என்ன?

அ) பாரம்பரிய பெளத்த தளம்

ஆ) பாரம்பரிய சமண தளம்

இ) குகைக்கோவில்

ஈ) மணி மண்டபம்

  • “போஜ்ஜன்னகொண்டா” என்பது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டினம் அருகே சங்கரம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இந்த இடங்கள், பெளத்தம், சங்கரம் கிராமத்தின் பெரும்பான்மை மதமாக இருந்த பொ. ஆ 4 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும்.
  • அண்மையில், இந்தப் பெளத்த பாரம்பரிய தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “பெளத்த மேளா” கொண்டாடப்பட்டது. இது பொதுவாக, சங்கராந்தி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படுகிறது.

9. STARStreak வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து, இந்தியா, சமீபத்தில் எந்த நாட்டோடு கூட்டிணைந்தது?

அ) ஜெர்மனி

ஆ) இஸ்ரேல்

இ) ஜப்பான்

ஈ) ஐக்கியப் பேரரசு (UK)

  • இந்தியாவின் பாரத் டைனமிக்ஸும் உலகளாவிய ஏரோஸ்பேஸ் நிறுவனமான தேல்ஸும் STARStreak வான் பாதுகாப்பு அமைப்பில் ஒத்துழைப்பு வேண்டி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய மற்றும் UK ஆகிய இரண்டு அரசுகளின் ஆதரவுடன், UK ஆயுதப்படைகள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இந்த அமைப்பு ஏற்றுமதி செய்ய உதவும். இதன்மூலம், பாரத் டைனமிக்ஸ், 60% உள்நாட்டு உள்ளடக்கத்துடன் இந்திய ஆயுதப்படைக்கு இந்த அமைப்பை வழங்க முடியும்.

10. இருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் யார்?

அ) பில் கிளிண்டன்

ஆ) ஆண்ட்ரூ ஜான்சன்

இ) டொனால்ட் டிரம்ப்

ஈ) ரொனால்ட் ரீகன்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. இச்சுற்று குற்றச்சாட்டுடன், டொனால்ட் டிரம்ப் 2ஆவது முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அமெரிக்க அதிபராகிறார்.
  • அண்மையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் அவரது பங்கிற்கு கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவை அவரை குற்றஞ்சாட்டியது.

1. Which country’s Mars Digger probe named the ‘Mole’ was declared dead recently?

A) China

B) UAE

C) USA

D) Israel

  • The Mars Digger probe named the ‘Mole’ was deployed on the Mars by NASA’s InSight Lander. The probe has been recently declared dead by the Scientists, as it failed to burrow deep into the Mars. The heat probe was developed and built by the German Aerospace Center (DLR). It has been trying since 2019, to dig deep and find the internal temperature of the Mars. The InSight lander will continue working till 2022.

2. Which Listed Large Company won the ICSI National Award for Excellence in Corporate Governance?

A) PFC

B) ITC

C) NTPC

D) ONGC

  • ITC Limited has been named the ‘Best Governed Company’ at the 20th Institute of Company Secretaries of India (ICSI) National Awards for Excellence in Corporate Governance, in the ‘Listed Segment: Large Category’.
  • The award was announced by a jury chaired by Former Supreme Court Judge, Justice A K Sikri. ITC’s company secretary, Rajendra Kumar Singhi was also adjudged ‘Governance Professional of the Year’.

3. What is ‘MINUSMA’, which was making news recently?

A) UN Peacekeeping Mission in Mali

B) Name of the New Planet

C) Name of the New Star

D) USA Federal Tax Act

  • UN – Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) is a peace keeping mission of the United Nations in Mali, which was established in 2013. It is considered to be the most dangerous UN operations in the world.
  • Recently, the peacekeepers’ convoy was attacked by an improvised explosive device (IED) by unidentified gunmen of Mali. The attack led to death of 4 peacekeepers and 5 were wounded.

4. Which company has manufactured India’s first driverless metro cars?

A) BEML

B) BHEL

C) HAL

D) DRDO

  • India’s first state of the art driverless metro cars have been manufactured by BEML Limited. It has been manufactured at its manufacturing facility at Bangalore and was unveiled by the Union Defence Minister.
  • The unit is made up of stainless–steel body that has a carrying capacity of 2280 passengers. BEML has obtained orders for manufacture of 576 such cars for Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)’s MRS1 project.

5. Indian Institute of Spices Research, which was seen in the news, is headquartered in which state/UT?

A) Tamil Nadu

B) Kerala

C) Madhya Pradesh

D) Karnataka

  • The Indian Institute of Spices Research (IISR) is an autonomous organization and a subsidiary of Indian Council of Agricultural Research (ICAR), under the Ministry of Agriculture, India.
  • It is engaged in agricultural research related to spices in India and is headquarters in Kozhikode, Kerala. Recently Principal Horticulture Scientist J Rema assumed charge as the new Director of Indian Institute of Spices Research (IISR).

6. ‘Jallikattu’ is an event celebrated in which Indian state/UT?

A) Tamil Nadu

B) Karnataka

C) Andhra Pradesh

D) Telangana

  • Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami flagged off the famous jallikattu event at Alanganallur in Madurai District of the state. Jallikattu is a bull–taming sport traditionally organised in the state, as an important part of the Pongal Festival called the ‘Maatu Pongal’.This event is continued after the state passed an ordinance to conserve the tradition.

7. PMKVY is implemented under the aegis of which ministry?

A) Ministry of Minority Affairs

B) Ministry of Tribal Affairs

C) Ministry of Skill Development

D) Ministry of Coal

  • The Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) was launched in the year 2015 and is implemented by the Union Ministry of Skill Development. The 3rd Phase of the scheme has been launched recently, that aims to impart training to of eight lakh candidates over a scheme period of 2020–2021 with an outlay of Rs 949 crore.

8. What is the term “Bojjannakonda” that is seen in news recently?

A) Heritage Buddhist site

B) Heritage Jain site

C) Cave temple

D) Memorial Hall

  • “Bojjannakonda” is a Buddhist rock–cut cave situated near a village Sankaram near Vishakhapatnam in Andhra Pradesh.
  • The sites are said to date between 4th and 9th Century A.D, when Buddhism is the majority religion of Sankaram village. Recently, annual Bouddha Mela was celebrated in the Buddhist heritage site, which is generally celebrated a day after Sankranti festival.

9. With reference to STARStreak Air Defence system, India has recently teamed up with which country?

A) Germany

B) Israel

C) Japan

D) United Kingdom

  • India’s Bharat Dynamics and the global Aerospace company Thales have signed an agreement to collaborate on the STARStreak Air Defence system.
  • To be undertaken with the support of both the Governments of India and the United Kingdom, the project will enable the export if the system to various customers including the UK Armed Forces. With this, BDL can also offer the system to Indian Armed Force with 60% indigenous content.

10. Who is/was the first U.S President to be impeached twice?

A) Bill Clinton

B) Andrew Johnson

E) Donald Trump

D) Ronald Reagan

  • United States House of Representatives has voted to impeach President Donald Trump after the riots at the Capitol building.
  • With this round of impeachment, the Donald Trump becomes the only US president to be impeached a second time. The House impeached him on the charge of incitement of insurrection for his role in the recent riot by his supporters, at the US Capitol.t

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!