Tnpsc

19th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 07

ஆ) ஆகஸ்ட் 08

இ) ஆகஸ்ட் 10

ஈ) ஆகஸ்ட் 12 

  • உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், 1999’இல் கொண்டாடப்பட்டது.

2. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான கையேட்டை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) தேசிய வளர்ச்சிக் கழகம்

ஆ) NITI ஆயோக் 

இ) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

  • மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (charging) உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதில் மாநில அரசுகள் & உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுவதற்கான கையேடு ஒன்றை NITI ஆயோக் வெளியிட்டது. மின்னேற்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தி மின்சார போக்குவரத்திற்கு நாடு வேகமாக மாறுவதற்கு உதவுவதே இந்தக் கையேட்டின் நோக்கமாகும்.
  • NITI ஆயோக், மின் அமைச்சகம், மின்சார சிக்கனத்திற்கான அலுவலகம் மற்றும் உலக வளங்கள் நிறுவனம், இந்தியா ஆகியவை இணைந்து இக்கையேட்டை உருவாக்கியுள்ளன.

3. தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) கமலேஷ் குமார் பந்த் 

ஆ) சுப்ரா சிங்

இ) Dr ராகேஷ் சர்வால்

ஈ) Dr K ராஜேஸ்வர ராவ்

  • கமலேஷ் குமார் பந்த் இ ஆ ப, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் (NPPA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமானத்திற்கு முன்பு இமாச்சல பிரதேச அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) & இமாச்சல பிரதேசத்தில் நிதி ஆணையர் (மேல்முறையீடு) & இமாச்சல பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பந்த் பணிபுரிந்துள்ளார்.

4. செயற்கைக்கோள் தொலைபேசி வசதிகொண்ட இந்தியாவின் முதல் தேசியப்பூங்கா எது?

அ) கசிரங்கா தேசியப்பூங்கா 

ஆ) கிர் தேசியப்பூங்கா

இ) ஆனைமுடி சோலை தேசியப்பூங்கா

ஈ) அன்ஷி தேசியப்பூங்கா

  • கசிரங்கா தேசியப்பூங்காவானது செயற்கைக்கோள் தொலைபேசிகள் வசதிகொண்ட இந்தியாவின் முதல் தேசியப்பூங்காவாக மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் தொலைபேசிகள் மொபைல் இணைப்புகளற்ற (அ) மோசமான சிக்னலுள்ள பூங்காவின் 6 சரகங்களில் பயன்படுத்தப்படும். பாரத் சஞ்சார் நிகம் லிட் வழங்கும் சேவைக்கான மாதாந்திர செலவை அந்தப் பூங்காவின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

5. உலக யானைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 10

ஆ) ஆகஸ்ட் 12 

இ) ஆகஸ்ட் 14

ஈ) ஆகஸ்ட் 16

  • உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.
  • யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்த வர்த்தகத்தை தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்வு இடங்களில் கொண்டுவிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்?

அ) புது தில்லி 

ஆ) உத்தர பிரதேசம்

இ) குஜராத்

ஈ) கோவா

  • புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகத்தில் உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை மத்திய உழவு & உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்.
  • உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளின் தேவையை உணர்ந்த அரசு அதனை சமாளிக்க முயற்சிக்கிறது. தாவர மரபணு வளங்களின் (PGR) விதைகளை வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்காக 1996ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய மரபணு வங்கி, விதைகளின் வடிவில் சுமார் ஒரு மில்லியன் ஜெர்ம்பிளாஸத்தை பாதுகாக்கும் திறன்கொண்டதாகும். தற்போது 2.7 லட்சம் இந்திய ஜெர்ம்ப்ளாசம் உள்ளது (மொத்தம் 4.52 லட்சம் ஜெர்ம்ப்ளாசங்கள் உள்ளன).

7.உலக தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ராவின் தரநிலை என்ன?

அ) 01

ஆ) 02 

இ) 03

ஈ) 04

  • 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று, உலக தடகள தரவரிசையில் ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் சோப்ரா, 1315 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 1396 மதிப்பெண்கள் பெற்ற ஜெர்மன் தடகள வீரர் ஜோஹன்னஸ் வெட்டர் உள்ளார்.

8. ஐந்து தனித்துவமான ஆப்பிள்களை பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதற்காக எந்த மாநிலத்துடன் APEDA ஒத்துழைத்துள்ளது?

அ) ஜம்மு & காஷ்மீர்

ஆ) இமாச்சல பிரதேசம் 

இ) உத்தரகாண்ட்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக, 5 பிரத்தியேக வகை ஆப்பிள்களை இமாச்சல பிரதேச தோட்டக்கலை பொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் நிறுவனத்துடன் (HPMC) இணைந்து பஹ்ரைனுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஏற்றுமதி செய்துள்ளது.
  • இராயல் டெலிசியஸ், டார்க் பிரௌன் காலா, ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வெலோக்ஸ் மற்றும் கோல்டன் டெலிசியஸ் ஆகிய இந்த வகைகள், இமாச்சல பிரதேசத்திலுள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு APEDA’இல் பதிவுபெற்ற DM என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டது.

9. மாணிக் என்ற புதிய டர்போஃபேன் எஞ்சினுடனான குரூஸ் ஏவுகணையை சோதனை செய்த நாடு எது?

அ) இந்தியா 

ஆ) இஸ்ரேல்

இ) ஜெர்மனி

ஈ) ஜப்பான்

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மாணிக்’ டர்போஃபேன் எஞ்சின்மூலம் இயக்கப்படும் ‘நிர்பை’ என்ற உள்நாட்டு தொழில்நுட்ப குரூஸ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணையை பெங்களூருவில் உள்ள DRDO ஆய்வகமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரம் மற்றொரு DRDO ஆய்வகமான பெங்களூருவில் அமைந்துள்ள கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • 1000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் திறன்கொண்ட ‘நிர்பை’ சப்ஸானிக் ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் உள்ள ராணுவ சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது; அது, 15 நிமிடங்களில் சுமார் 150 கிலோமீட்டரை கடந்துசென்றது.

10. உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 12

ஆ) ஆகஸ்ட் 13 

இ) ஆகஸ்ட் 14

ஈ) ஆகஸ்ட் 15

  • உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில், கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் செப்.1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்

கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது

மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்

கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்

பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்

பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்

பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்

ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்

பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்

பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை

2. பாமாயில் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.11,040 கோடியில் தேசிய திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.11,040 கோடி மதிப்பிலான தேசிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்குர், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர். அப்போது அனுராக் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் பாமாயில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் வெளிநாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்கும் தேசிய அளவிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.11,040 கோடி செலவில் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.8,844 கோடியும், மாநில அரசுகளின் பங்களிப்பாக ரூ.2,196 கோடியும் செலவிடப்படும். மத்திய அரசின் ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்- பாமாயில் உற்பத்தி’ என்ற திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: நாடு முழுவதும் தற்சமயம், 3.70 லட்சம் ஹெக்டேரில் பாமாயில் சாகுபடி செய்யப்படுகிறது. வரும் 2025-26-ஆம் ஆண்டுக்குள் மேலும் 6.5 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பாமாயில் சாகுபடி பரப்பு 10 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும். இதன் மூலம், வரும் 2025-26-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாமாயில் உற்பத்தி 11.20 லட்சம் டன்னாகவும், 2029-30-ஆம் ஆண்டுக்குள் 28 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமாயில் சாகுபடியில் எண்ணெய் வித்துகள் வளா்த்து, லாபம் கிடைப்பதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும். அவ்வளவு காலம் சிறு விவசாயிகளால் காத்திருக்க முடியாது. மேலும், பாமாயில் வித்துகள் உற்பத்தியில் விவசாயிகள் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு உரிய விலை கிடைப்பதில் நிச்சயமின்மை நிலவி வந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் சாகுபடி செய்வதற்கு உகந்த சூழல் உள்ளது. ஆனால், எண்ணெய் உற்பத்திக்கான தொழிற்சாலைகள் இல்லாததால் பாமாயில் சாகுபடி நடைபெறவில்லை. இவற்றைக் கருத்தில்கொண்டு பாமாயில் உற்பத்தியை ஊக்குவிக்க, அதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய பாமாயில் உற்பத்தித் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று விவசாயிகளுக்கு முதல்முறையாக விலை உத்தரவாதமும் அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.

வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.77.45 கோடி: வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை ரூ.77.45 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பொதுத் துறை நிறுவனமான வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனம், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தை ரூ.77.45 கோடியில் வலுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் சிறந்த சாகுபடி முறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல், இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உர பயன்பாட்டை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய பணிகள் போன்ற புதுமையான திட்டங்களை அந்த நிறுவனம் அமல்படுத்துவதற்கு இந்த நிதியுதவி உதவிகரமாக இருக்கும். இதன்மூலம், வடகிழக்கு மாநில விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பது உறுதிசெய்யப்படும். மேலும், உற்பத்திப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதன்மூலம் வடகிழக்கு விவசாயிகளின் விளைபொருள்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்ய ஊக்கப்படுத்த முடியும். நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து செலவுகளும் குறையும். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 33,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.

புவியியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு:

புவியியல் ஆராய்ச்சியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-ஸ்விட்சர்லாந்து இடையே ஒப்பந்தம்:

மருத்துவ ஆராய்ச்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஸ்விட்சர்லாந்தின் எதிர் நுண்ணுயிர்த் தடுப்பு ஆராய்ச்சி அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் பவுண்டேஷன் பார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா- வியத்நாம் கடற்படை பயிற்சி

தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் கடற்படைகள் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டன. பல்வேறு வளங்களைக் கொண்டுள்ள தென்சீனக்கடல்பகுதியையொட்டி வியத்நாம், பிலிப்பின்ஸ், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உள்ளன. அங்கு பிற நாடுகளைப் பின்தள்ளிவிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயன்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் வியத்நாமுடன் இணைந்து இந்தியா அப்பகுதியில் கூட்டுப் பயிற்சி நடத்தியுள்ளது.

இப்பயிற்சிக்கு சீனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையின் ரன்விஜய் ஏவுகணை போர்க்கப்பல், ஐஎன்எஸ் கோரா ஆகியவை இப்பயிற்சியில் பங்கேற்றன.

வியத்நாமை ஒட்டியுள்ள தென்சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. எனவே, தென்சீனக்கடல் உரிமை தொடர்பான பிரச்னையில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. எனவே, இந்தக் கடற்படைப் பயிற்சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தென்சீனக்கடலில் பெரிய அளவில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட வளங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதே நேரத்தில் தென்சீனக்கடலில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள வியத்நாம், பிலிப்பின்ஸ், புருணே உள்ளிட்ட நாடுகளும் அக்கடல் பகுதியில் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

4. இந்தியாவில் முதல்முறையாக வியத்நாம் துணைத் தூதரகம்

இந்தியாவில் முதல்முறையாக வியத்நாம் துணைத் தூதரகம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை வியத்நாம் நாட்டுக்கான இந்திய தூதர் பான் சன் சௌ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள வியத்நாம் துணைத் தூதரகத்தின் கௌரவ துணைத் தூதராக என் எஸ் சீனிவாஸ் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

வியத்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை மேம்படுத்துவதற்காகவே துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. வியத்நாமின் 80 சதவீத மக்கள் பெüத்த மதத்தை பின்பற்றி வருவதால், இந்தியாவுக்கும் வியத்நாமுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.

வியத்நாமின் 26ஆவது முதலீட்டு பங்குதாரராக இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் முதலீட்டு உறவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மருந்து, ஆட்டோமொபைல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய வியத்நாம் சிறந்த நாடாகும். அந்நாட்டில் முதலீடு செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் பெங்களூரில் உள்ளன என்றார்.

5. ஜூனியர் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்

ரஷியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான 61 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவீந்தர் 3-9 என்ற கணக்கில் ஈரான் வீரர் ரஹ்மான் மெளசா அமெளசத்காலிலியிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான பிளே ஆஃப் சுற்றில் 74 கிலோ பிரிவில் இந்தியாவின் யாஷ் 12-6 என்ற கணக்கில் கிர்ஜிஸ்தானின் ஸ்டாம்புல் ஜானிபெக்கை வென்றார். 92 கிலோ பிரிவில் பிருத்வி பாபாசாஹேப் பாட்டீல் 2-1 என்ற கணக்கில் ரஷியாவின் இவான் கிரிலோவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 125 கிலோ பிரிவில் அனிருத் 7-2 என்ற கணக்கில் அஜர்பைஜானின் அய்தின் அஹமதோவை வென்றார். இவர்களுக்கு முன் கெளரவ் பல்யான் (79 கிலோ), தீபக் (97 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.

மகளிருக்கான 76 கிலோ பிரிவில் இந்தியாவின் பிபாஷா அதிரடியாக 6-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தில்னாஸ் முல்கினோவாவையும், 9-4 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஆட்பாக் அல்ஸிபாட்டையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 50 கிலோ பிரிவில் இந்தியாவின் சிம்ரன் அரையிறுதியில் அமெரிக்காவின் எமிலி கிங் ஷில்சனிடம் தோல்வி கண்டார். இதர இந்திய போட்டியாளர்களான சிதோ (55 கிலோ), குசும் (59 கிலோ), அர்ஜு (68 கிலோ) ஆகியோர் தங்களது காலிறுதிச்சுற்றுகளில் தோற்று வெளியேறினர்.

6. யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்திய கலப்பு ரிலே அணிக்கு வெண்கலம்

கென்யாவில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4*400 மீட்டர் ரிலேவில் இந்திய கலப்பு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பரத் ஸ்ரீதர், பிரியா மோகன், சம்மி, கபில் ஆகியோர் அடங்கிய அணி 3 நிமிஷம் 23.3 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவது அணியாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. பின்னர் இறுதிச்சுற்றில் 3 நிமிஷம் 20.60 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆம் இடம் பிடித்தது அதே இந்திய அணி. நைஜீரியா அணி 3 நிமிஷம் 19. 70 விநாடிகளில் வந்து தங்கமும், போலந்து அணி 3 நிமிஷம் 19.80 விநாடிகளில் வந்து வெள்ளியும் வென்றன.

இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா வென்ற 5-ஆவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2002-இல் வட்டு எறிதல் வீராங்கனை சீமா அன்டில் வெண்கலமும், 2014-இல் வட்டு எறிதல் வீராங்கனை நவ்ஜீத் கெளர் தில்லான் வெண்கலமும், 2016-இல் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கமும், 2018-இல் ஓட்டப் பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் தங்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

7. தமிழகம், புதுவை ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆசிரியர் ஆஷா தேவி மாணவர்களுக்கு 10’க்கும் மேற்பட்ட தனித்திறன் பயிற்சிகள் வழங்குவது, மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரித்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கியுள்ளார். அதேபோன்று ஆராய்ச்சி சார்ந்த கல்வியை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை ஆசிரியர் லலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வி ஜெயசுந்தரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதால் இவ்விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வழக்கமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் தில்லி விக்யான் பவனில் செப்.5ஆம் தேதி குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசுத்தலைவர் சார்பில் காணொலிக்காட்சிமூலம் விருதுகள் வழங்கப்பட்டன.

8. துபை மருத்துவப் பல்கலையில் சிறப்பிடம் பெற்ற வேதாரண்யம் மாணவிக்கு ‘கோல்டன்’ விசா

துபை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பார்மஸி பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்ற வேதாரண்யம் மாணவிக்கு, அந்நாட்டரசு 10 ஆண்டுகளுக்கான ‘கோல்டன்’ விசா வழங்கி பாராட்டியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத் துறையை சேர்ந்தவர் ஷர்மினா பேகம் பஷீர் அகமது. இவர், துபை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பார்மஸி முதுகலை பட்டம் படித்து முடித்துள்ளார். பல்கலைக்கழக அளவிலான தேர்ச்சி மதிப்பீட்டில், ஷர்மினா பேகம் பஷீர் அகமது 2ஆம் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து, அந்நாட்டு அரசின் அறிவிப்பின்படி, 10 ஆண்டுகளுக்கான ‘கோல்டன்’ விசா அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

9. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் மணிமேகலை

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.

பௌத்த சமயம் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும், தற்போது அச்சமயத்துக்கான முழுமையான காப்பியமாக இருப்பது தமிழிலுள்ள மணிமேகலை மட்டுமே. சிலப்பதிகாரத்துக்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்த இக்காப்பியத்தை எழுதியவர் சீத்தலைச் சாத்தனார். துறவறத்தை வலியுறுத்தும் இக்காப்பியத்தின்மூலம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பல சமூக சீர்திருத்தக் கருத்துகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, குற்றச்செயல் ஒழிப்பு, சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றுதல், சகிப்புத் தன்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் மணிமேகலை காப்பியத்தை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இக்காப்பியத்தை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில், முதல்கட்டமாக தாய்லாந்தின் தாய், சீனம், ஜப்பானியம், கொரிய, பர்மிய, வியத்நாம், மலாய், சிங்களம், கம்போடியம், இந்தோனேஷியம், மங்கோலியம் உள்பட 18 மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் மொழியாக தாய்லாந்திலுள்ள தாய் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஆணை சமீபத்தில் வழங்கப்பட்டது. இதை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த முனைவர் சுவித் விபுல்ஸ்ரசத் மொழிபெயர்க்கிறார்.

1. On which date of August is International Youth Day celebrated?

A) August 07

B) August 08

C) August 10

D) August 12 

  • International Youth Day is marked on August 12. The theme of the day this year has been decided as “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health”. The first International Youth Day was celebrated in 1999.

2. Which organization has released The Handbook for Electric Vehicle Charging Infrastructure Implementation?

A) National Development Council

B) NITI Aayog 

C) Ministry of New and Renewable Energy

D) Ministry of Road Transport and Highways

  • NITI Aayog today released a handbook to guide state governments and local bodies to frame policies and norms towards setting up charging networks for electric vehicles (EV).
  • The objective is to enhance charging infrastructure and facilitate a rapid transition to electric mobility in the country. The Handbook for Electric Vehicle Charging Infrastructure Implementation has been jointly developed by NITI Aayog, Ministry of Power (MoP), Department of Science and Technology (DST), Bureau of Energy Efficiency (BEE), and World Resources Institute (WRI) India.

3. Who has been appointed as the new chairman of National Pharmaceutical Pricing Authority?

A) Kamlesh Kumar Pant 

B) Shubhra Singh

C) Dr Rakesh Sarwal

D) Dr K Rajeswara Rao

  • Kamlesh Kumar Pant, IAS has been appointed as the new chairman of National Pharmaceutical Pricing Authority (NPPA) by the Appointments Committee of the Union Cabinet. Pant, formerly the Principal Secretary (Revenue) in the government of Himachal Pradesh and also the Financial Commisioner (Appeals) at Himachal Pradesh and the head of the Himachal Pradesh State Pollution Control Board, has taken charge of NPPA with immediate effect.

4. Which National Park has become the first national park in India to be equipped with satellite phones?

A) Kaziranga National Park 

B) Gir National Park

C) Anamudi Shola National Park

D) Anshi National Park

  • Kaziranga National Park has become the first national park in India to be equipped with satellite phones. The satellite phones will be used in pockets of the park’s six ranges with no wireless or poor mobile connectivity. The Park authorities will bear the monthly expenses for the service provided by Bharat Sanchar Nigam Ltd.

5. Which date of August is observed as World Elephant Day?

A) August 10

B) August 12 

C) August 14

D) August 16

  • 12th August is observed as World Elephant Day to draw focus towards protection and conservation of elephants.
  • World Elephant Day aims to accelerate efforts to offer better protection to elephants, prevent the trade of ivory, improving enforcement policies, conserve elephant habitat, illegal poaching, better captive environments for elephants, and reintroduce the captive elephants back in their natural sanctuaries.

6. In which State/UT, Narendra Singh Tomar has inaugurated the world’s second–largest refurbished state–of–the–art National Gene Bank?

A) New Delhi 

B) Uttar Pradesh

C) Gujarat

D) Goa

  • Union Minister for Agriculture and Farmers Welfare Narendra Singh Tomar has inaugurated the world’s second–largest refurbished state–of–the–art National Gene Bank at the National Bureau of Plant Genetic Resources (NBPGR), Pusa in New Delhi. The need for bio fortified crop varieties is being felt, which the government is trying to overcome.
  • The National Gene Bank established in the year 1996 to preserve the seeds of Plant Genetic Resources (PGR) for future generations, has the capacity to preserve about one million germplasm in the form of seeds. Presently it is protecting 4.52 lakh accessions, of which 2.7 lakh are Indian germplasm and the rest have been imported from other countries.

7. What is the rank of Neeraj Chopra in the World Athletics ranking?

A) 01

B) 02 

C) 03

D) 04

  • Javelin Thrower Neeraj Chopra has finished at number 2nd rank in the World Athletics ranking after securing Gold Medal at the Tokyo Olympics 2020. Neeraj Chopra has been ranked second with his score of 1315. He is only behind German athlete Johannes Vetter who is having the score of 1396.

8. With which state, APEDA has collaborated to export five unique varieties of apples to Bahrain?

A) Jammu & Kashmir

B) Himachal Pradesh 

C) Uttarakhand

D) Arunachal Pradesh

  • APEDA in collaboration with Himachal Pradesh Horticultural Produce Marketing and Processing Corporation Ltd (HPMC) exported first consignment comprising of five unique varieties of apples in order to promote agricultural and processed food products exports to newer destinations.
  • 5 varieties of apples including Dark Baron Gala, Royal Delicious, Scarlet Spur, Red Velox & Golden Delicious were exported to Bahrain. These apples were sourced from farmers of Himachal Pradesh. 1st consignment was exported by APEDA registered DM Enterprises.

9. Which country has test fired a cruise missile with a new turbofan engine named Manik?

A) India

B) Israel

C) Germany

D) Japan

  • The Defence Research and Development Organization (DRDO) has successfully tested the ‘Nirbhay’ Indigenous Technology Cruise Missile, powered by the Made–in–India ‘Manik’ Turbofan Engine. The missile was designed by the Aeronautical Development Establishment, a DRDO laboratory in Bengaluru.
  • The engine was designed and developed by another DRDO laboratory, Gas Turbine Research Establishment, which is also based in Bengaluru. The ‘Nirbhay’ subsonic missile, which has a range of 1000 kilometers, was fired from a military testing facility off the coast of Odisha on Wednesday and it flew for nearly 150 kms in 15 minutes.

10. Which date in August is celebrated as the International Left–Handers’ Day?

A) August 12

B) August 13 

C) August 14

D) August 15

  • The International Left–Handers’ Day 2021 is celebrated every year on August 13. It is a way to acknowledge those who, unlike the majority of the population, are born left–handed. A considerable part of the population, almost 10–12% of the global population, consists of left–handers. There are people who are afraid of the left–side or left–handed people. This condition can take the form of a phobia and is known as Sinistrophobia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!