TnpscTnpsc Current Affairs

18th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘ஹலாரி’ என்பது எந்த இந்திய மாநிலத்தைச் சார்ந்த கழுதை இனமாகும்?

அ) குஜராத் 

ஆ) மகாராஷ்டிரா

இ) பஞ்சாப்

ஈ) பீகார்

  • ‘ஹலாரி’ என்பது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சார்ந்த ஒரு கழுதை இனமாகும். நாட்டில் இவ்வினத்தின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
  • ‘ஹலாரி’ கழுதைகளைப் பாதுகாப்பதற்கான மால்தாரிகளி -ன் (அல்லது பாரம்பரிய கால்நடை மேய்ப்பர்கள்) சந்திப்புக் கூட்டத்திற்கு நடுவண் அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தலைமை தாங்கினார்.

2. MSME அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘MSME கூட்டம் – 2022’ நடைபெறும் மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மகாராஷ்டிரா 

இ) பஞ்சாப்

ஈ) பீகார்

  • சிந்துதுர்க்கில், ‘MSME கூட்டத்தை’ மத்திய குறு, சிறு & நடுத்தர தொழில்கள் (MSME) அமைச்சர் நாராயண் ரானே தொடங்கிவைத்தார். `200 கோடி செலவில் சிந்துதுர்க்கில், MSME-தொழில்நுட்ப மையம் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார். தேசிய SC/ST மையத்திற்கான MSME கூட்டம், இக்கூட்டத்தின் ஒருபகுதியாக தொடக்கப்பட்டது.

3. இந்திய இரயில்வேயின் முதலாவது கதி சக்தி சரக்கு முனையத்தை பின்வரும் எந்தப் பிரிவு இயக்கியது?

அ) சென்னை

ஆ) அசன்சால் 

இ) ஹூப்பள்ளி

ஈ) நாக்பூர்

  • ரயில்வே அமைச்சகம், ‘விரைவு சக்தி பன்னோக்கு சரக்கு முனைய’த்தை அசன்சால் பிரிவில் வெற்றிகரமாக உரு
    -வாக்கியுள்ளது. தாபர்நகர் எனுமிடத்தில் மைதான் பவர் லிட் என்னும் தனியார் நிறுவனம் இம்முனையத்தை இயக்கும். விரைவு சக்தியின் சரக்கு முனையமாக இது அமைந்துள்ளது.
  • மின்திட்டங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி இதுவரை சாலை வழியாகவே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இச் சரக்கு முனையத்தின்மூலம் இரயில்வேயின் வருமானம் மாதத்திற்கு சுமார் `11 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. ‘சர்வதேச பெண் நீதிபதிகள் நாளானது’ முதன்முதலில் எந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது?

அ) 1992

ஆ) 2002

இ) 2012

ஈ) 2022 

  • 2021 ஏப்ரலில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.10 அன்று ‘சர்வதேச பெண் நீதிபதிகளின் நாள்’ கொண்டாடப்படும் என்று ஐநா பொதுச்சபை தீர்மானித்தது. ஐநா பொதுச் சபையில் கத்தாரால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்திய உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி NV இரமணா மற்றும் நான்கு பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தனது முதல் ‘சர்வதேச பெண் நீதிபதிகள் நாளைக்’ கொண்டாடியது.

5. ஆண்டுதோறும் எந்த மாதத்தில், ‘புகைத்தலற்ற நாள்’ அனுசரிக்கப்படுகிறது?

அ) ஜனவரி

ஆ) பிப்ரவரி

இ) மார்ச் 

ஈ) ஏப்ரல்

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையன்று, உலகம் முழுவதும் புகைத்தலற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு (2022) மார்ச்.9 ஆம் தேதி வருகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுவதும் இந்த நாளின் நோக்கமாகும். “Quitting smoking doesn’t have to be stressful” என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

6. ஒவ்வோர் ஆண்டும், எந்தத் தேதியில், உலக NGO நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) பிப்ரவரி.27 

ஆ) மார்ச்.01

இ) மார்ச்.15

ஈ) ஆகஸ்ட்.05

  • உலக NGO நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.27 அன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன. அரசு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பது, கொண்டாடுவது மற்றும் கௌரவிப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

7. 2022-மத்திய கலால் வரி நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) பிப்ரவரி 24 

ஆ) பிப்ரவரி 25

இ) பிப்ரவரி 26

ஈ) பிப்ரவரி 27

  • இந்தியாவின் மத்திய கலால் நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.24 அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

8. வருடாந்திர மாநில பட்ஜெட்டின் ஒருபகுதியாக, ‘சிறார்கள் பட்ஜெட்டை’ தாக்கல்செய்த மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) உத்தர பிரதேசம்

இ) இராஜஸ்தான்

ஈ) மத்திய பிரதேசம் 

  • மத்திய பிரதேசம் மாநிலம் 2022-23ஆம் ஆண்டுக்கான `2.79 இலட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது. முதன்முறையாக, ஆண்டு நிதித்திட்டத்தின் ஒருபகுதியாக, அம்மாநில அரசு ‘சிறார்கள் பட்ஜெட்டை’த் தாக்கல் செய்தது.
  • 18 வயதுக்குட்பட்டோரை இலக்காகக்கொண்டு கல்வி உட்பட 17 துறைகளின்கீழ் 220 திட்டங்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் `57,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ULPIN’ என்பது எந்தத் துறையுடன் தொடர்புடைய தனிப்பட்ட அடையாள எண்?

அ) வரிவிதிப்பு

ஆ) நில வளங்கள் 

இ) MSME

ஈ) டிரோன் பதிவு

  • சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்துக்கென ஒரு தனித்த நிலத் தொடகுப்பு அடையாள எண் (Unique Land Parcel Identification Number – ULPIN) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது நிலவளத்துறையின் டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவேடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கருத்தாக்கப்பட்டது. இம்முன்முயற்சியின்கீழ், 14 இலக்க எழுத்தெண்கொண்ட புவி-இடஞ்சார்ந்த தனித்துவம்மிக்க அடையாள எண் வழங்கப்படுகிறது.

10. காலநிலை மாற்றத்தின் சவால்களைக் கையாள, ‘காலநிலை செயல்திட்டத்தை’ வெளியிட்டு முப்பதாண்டு கால செயல்திட்டத்தை வகுத்த இந்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) மும்பை 

இ) புது தில்லி

ஈ) கொல்கத்தா

  • அண்மையில் வெளியிடப்பட்ட மும்பை காலநிலை செயல் திட்டம் பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிக்க அந்நகரத்திற்கான முப்பதாண்டு கால செயல்திட்டத்தை வகுத்துள்ளது. பிரகன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ஆனது உலக வளங்கள் நிறுவனம், இந்தியா மற்றும் C40 நகரங்கள் வலையமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் இத்திட்டத்தைத் தயாரித்தது.
  • பைங்குடில் வாயுக்களின் சுழிய உமிழ்வு அல்லது 2050க்குள் நிகர சுழிய இலக்கை அடைவது உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால காலநிலை இலக்குகளை இச்செயல்திட்டம் நிர்ணயித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இலங்கைக்கு இந்தியா மேலும் `7,500 கோடி கடனுதவி

நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக, பாரத ஸ்டேட் வங்கிமூலமாக இந்திய அரசு `7,500 கோடி (100 கோடி டாலர்) கடனுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையொப்பமானது.

முன்னதாக, எரிபொருள்கள் வாங்குவதற்காக, இலங்கை அரசுக்கு இந்தியாவின் எக்ஸிம் வங்கி கடந்த மாதம் `3,700 கோடி (50 கோடி டாலர்) கடனுதவி வழங்கியது.

2. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை, சேலத்தில் 2 கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த அகாடமிகள் தொடங்கப்படும். இங்கு இருபாலருக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். முதலில் சென்னை, சேலத்தில் அகாடமிகள் தொடங்கப்படும். பின்னர் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளி நாடுகளிலும் அகாடமி தொடங்கும் திட்டம் உள்ளது.

சென்னையில் துரைப்பாக்கத்திலும், சேலத்தில் சேலம் கிரிக்கெட் அறக்கட்டளையிலும் அகாடமி செயல்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. “ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் 77 கோடி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்

“ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் 77 கோடி பேர் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் சந்திக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, “ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இந்தத் திட்டம் தற்போது 35 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு 77 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

4. தில்லி-காஜியாபாத் இடையே செல்லும் பிராந்திய விரைவுப் போக்குவரத்து புதிய ரயில் மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது. மணிக்கு 100 முதல் 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்தப் புதிய இரயில் நாட்டின் முதல் அதிவேக மெட்ரோ இரயிலாகும்.

5. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 8 சதவீதம் அதிகரிக்கும்

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை நடப்பாண்டில் 8 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) ஓர் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பேரிடரால் ஏற்பட்ட பெரும் சீர்குலைவிலிருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதன் காரணமாக நடப்பு 2022ஆம் ஆண்டில் அதன் கச்சா எண்ணெயின் தேவை 8% அதிகரித்து நாளொன்றுக்கு 51.5 இலட்சம் பீப்பாய்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெயின் தேவை நாளொன்றுக்கு 45.1 இலட்சம் பீப்பாய்களாக இருந்தநிலையில் 2021இல் 47.60 இலட்சம் பீப்பாய்களாக அதிகரித்தது. இது, 5.61% வளர்ச்சியாகும் என OPEC தெரிவித்துள்ளது.

6. ‘உலக அழகி’ப் பட்டத்தை வென்றார் போலந்து இளம் பெண் கரோலினா

2021-ஆம் ஆண்டுக்கான ‘உலக அழகி’ப் பட்டத்தை போலந்தைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா தட்டிச் சென்றுள்ளார்.

70-ஆவது உலக அழகிப் போட்டி, கரீபியன் தீவுகளில் ஒன்றான போர்டோரிகாவில் உள்ள சான் ஜுவான் நகரில் நடத்தப்பட்டது. அதில், 2020-இல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற மானசா வாராணசி உள்பட 97 பேர் கலந்து கொண்டனர்.

இறுதியில், போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகிப் பட்டத்தை வென்றார். அவருக்கு 2020-இல் உலக அழகிப் பட்டம் வென்ற ஜமைக்கா அழகி டோனி ஆன் சிங் கிரீடம் அணிவித்து கௌரவித்தார்.

இந்திய அமெரிக்க அழகியான ஸ்ரீ சாயினி இரண்டாவது இடத்தையும், ஐவரி கோஸ்ட்டைச்சேர்ந்த ஒலிவியா யேஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

7. உலகின் மகிழ்ச்சிகரமான நாடு இதுதாங்க…

உலகின் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐநா வெளியிட்ட குறியீட்டு பட்டியலில் குறைவான மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது நாடாக லெபனான் உள்ளது.

செர்பியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் நல்வாழ்வு குறியீட்டு மதிப்பெண்களில் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளது. பட்டியலில், லெபனான், வெனிசுலா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து உள்ளன.

பொருளாதார சரிவை சந்தித்துவரும் லெபனான், பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்துள்ளது. 146 நாடுகள்கொண்ட பட்டியலில் ஜிம்பாப்வேக்கு அடுத்த இடத்தில் லெபனான் உள்ளது.

போரால் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்தித்துவரும் ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கைப்பற்றினர். தற்போது பட்டியலில், இந்த நாடு கடைசி இடத்தில் உள்ளது. தகுந்த உதவி கிடைக்காவிட்டால் இந்த குளிர்காலத்தில், ஐந்து வயதுக்கு குறைவாக உள்ள 10 லட்சம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கலாம் என்றும் UNICEF எச்சரித்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியான மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பது ஆராயப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக உலக மகிழ்ச்சிகர குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. மூன்றாண்டு காலத்தில், அதன் சராசரி கணக்கிடப்பட்டு சுழியத்திலிருந்து 10 மதிப்பெண்கள் வரை அளிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷிய போர் தொடங்குவதற்கு முன்பே இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு -விட்டது.

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. முதலிடத்தில் பின்லாந்தும் 2ஆவது இடத்தில் டென்மார்க்கும் 3ஆவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளது. சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

3 இடங்கள் முன்னேறி அமெரிக்கா 16ஆவது இடத்தில் உள்ளது. 17ஆவது இடத்தில் பிரிட்டனும் 20ஆவது இடத்தில் பிரான்ஸ் நாடும் இடம்பெற்றுள்ளது.

8. ராணுவ ஆராய்ச்சிக்காக 45 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டி டிஆர்டிஓ சாதனை: பெங்களூருவில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

ராணுவ ஆராய்ச்சி & மேம்பாட்டு கழக (DRDO) அதிகாரிகள் கூறியதாவது: DRDO உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஐபிரிட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்துள்ளது. இக் கட்டிடம் 5ஜி மேம்பட்ட உள்நாட்டு போர் விமானங்களின் தயாரிப்புக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1. ‘Halari’ is a breed of Donkey, native to which Indian state?

A) Gujarat

B) Maharashtra

C) Punjab

D) Bihar

  • ‘Halari’ is a breed of Donkeys native to the Saurashtra region of Gujarat. The population of the breed is fast declining in the country. Union Minister Parsottam Rupala will preside over a meeting of Maldharis (or traditional herdsmen) for the conservation of Halari donkeys.

2. Which state is the host of ‘MSME Conclave 2022’ organised by the MSME Ministry?

A) Gujarat

B) Maharashtra 

C) Punjab

D) Bihar

  • Union Minister for Micro, Small & Medium Enterprises (MSME), Narayan Rane inaugurated the ‘MSME Conclave’ at Sindhudurg. He also announced the establishment of MSME–Technology Centre with an outlay of Rs. 200 Crore, in Sindhudurg. MSME Conclave for National SC/ST Hub was also inaugurated as a part of the Conclave.

3. Which division commissioned the first Gati Shakti Cargo Terminal of Indian Railways?

A) Chennai

B) Asansol 

C) Hubballi

D) Nagpur

  • Ministry of Railways’ Policy regarding ‘Gati Shakti Multi–Modal Cargo Terminal’ (GCT), Asansol division of Indian Railways has successfully commissioned private siding of Maithan Power Limited at Thaparnagar. This is the first such GCT commissioned in Indian Railways since publication of GCT policy in Dec.’2021.
  • Till now the requirement of coal to the power project was being made through road which is expected to convert into 120 inward coal rakes per month. This will enhance Railways’ earnings by approximately Rs 11 crores per month.

4. ‘International Day of Women Judges’ was first celebrated in which year?

A) 1992

B) 2002

C) 2012

D) 2022 

  • During April 2021, the United Nations General Assembly resolved to proclaim 10 March of each year as the ‘International Day of Women Judges’. The resolution was moved by Qatar in the UN General Assembly.
  • The Supreme Court of India celebrated the first ever ‘International Day of Women Judges’ with CJI NV Ramana and four women SC judges.

5. ‘No Smoking Day’ is observed in which month every year?

A) January

B) February

C) March 

D) April

  • Every year on the second Wednesday of March, No Smoking Day is observed across the world. It falls on March 9 this year.
  • The aim of No Smoking Day is to raise public awareness about the dangers and consequences of smoking, as well as to assist smokers in quitting. “Quitting smoking doesn’t have to be stressful” is this year’s theme of ‘No Smoking Day’.

6. Every year, on what date is World NGO Day observed in a several of countries around the world?

A) February 27 

B) March 01

C) March 15

D) August 05

  • World NGO Day is celebrated every year on 27th February in several countries across the world. Non–Governmental Organizations or NGOs work in the upliftment of society.
  • It is an international day to recognize, celebrate and honor non–government and non–profit organizations.

7. On which day is Central Excise Day 2022 observed?

A) February 24

B) February 25

C) February 26

D) February 27

  • Central Excise Day of India is celebrated every year on February 24. The day is being celebrated to honour the service of the Central Board of Excise and Custom (CBEC) to the country.

8. Which Indian state presented ‘Child Budget’ as part of the annual state Budget?

A) Gujarat

B) Uttar Pradesh

C) Rajasthan

D) Madhya Pradesh 

  • Madhya Pradesh presented a Rs 2.79 lakh crore budget for 2022–23 in the Assembly. For the first time, the state government presented a ‘child budget’ as part of the annual financial plan. The budget allotted Rs 57,800 crore for 220 schemes under 17 departments, including education, targeted at children aged under 18.

9. ‘ULPIN’, which was seen in the news, is a unique identification number related to which field?

A) Taxation

B) Land Resources 

C) MSME

D) Drone Registration

  • The Unique Land Parcel Identification Number (ULPIN) was recently launched for Assam. It was conceptualized under the Digital India Land Records Modernization Programme of Department of Land Resources. Under the initiative, a 14–digit alpha numeric geo–spatial unique identification number is issued.

10. Which Indian city released a ‘Climate Action Plan’ and laid down 30–year Roadmap to tackle challenges of Climate Change?

A) Chennai

B) Mumbai 

C) New Delhi

D) Kolkata

  • The Mumbai Climate Action Plan (MCAP) released recently has laid down a 30–year roadmap for the city to tackle the challenges of climate change. Brihanmumbai Municipal Corporation (BMC) prepared the plan with technical support from the World Resources Institute (WRI), India and the C40 Cities network.
  • The action plan has set short, medium and long–term climate goals aimed towards zero emission of greenhouse gas or a net–zero target for 2050.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!