TnpscTnpsc Current Affairs

18th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நடப்பு 2022ஆம் ஆண்டில் உலக தொழுநோய் நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?

அ) ஜனவரி 30 

ஆ) ஜனவரி 31

இ) பிப்ரவரி 01

ஈ) பிப்ரவரி 02

  • உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2022) ஜன.30 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனஞ்செலுத்துதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • “United for Dignity” என்பது நடப்பாண்டு (2022) வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.

2.எந்தத்தேசியத்தலைவரின் நினைவுநாள், இந்தியாவில், ஜன.30 அன்று தியாகிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது?

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மகாத்மா காந்தி 

இ) பகத் சிங்

ஈ) சர்தார் வல்லபாய் படேல்

  • 1948 ஜன.30 அன்று ‘மகாத்மா’ காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாளில், மகாத்மா காந்தி மற்றும் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இந்தியா, தியாகிகள் நாள் அல்லது ஷாஹித் திவாஸை அனுசரிக்கிறது.

3. உலக மனித சகோதரத்துவ நாள் கடைப்பிடிக்கபடுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 02

ஆ) பிப்ரவரி 03

இ) பிப்ரவரி 04 

ஈ) பிப்ரவரி 05

  • ஆண்டுதோறும் பிப்.4 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் உலக மனித சகோதரத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இதே நாளில், “உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித சகோதரத்துவம்” என்ற தலைப்பிலான ஆவணம் கையெழுத்தானது.

4. நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் ‘உலக ஈரநிலங்கள் நாளுக்கான’க் கருப்பொருள் என்ன?

அ) Wetlands for Us

ஆ) Wetlands Action for People and Nature 

இ) Wetlands and COVID-19

ஈ) Save Wetlands

  • ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் புவியில் அதன் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்.2 அன்று உலக ஈரநிலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிற -து. “Wetlands Action for People and Nature” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில்வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும்.

5. உலக பருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 8

ஆ) பிப்ரவரி 9

இ) பிப்ரவரி 10 

ஈ) பிப்ரவரி 11

  • கடந்த 2019ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, பிப்.10ஆம் தேதியை உலக பருப்புநாளாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, உணவு & உழவு அமைப்பின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டாக, கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. “Pulses to empower youth in achieving sustainable agrifood systems” என்பது நடப்பு 2022இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும்.

6. ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 10

ஆ) பிப்ரவரி 11 

இ) பிப்ரவரி 12

ஈ) பிப்ரவரி 13

  • ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாள்’ ஆனது ஆண்டுதோறும் பிப்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • நடப்பாண்டு (2022) ‘அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பன்னாட்டு நாளின்’ ஏழாமாண்டு நாளாகும். ஐநா அவை இந்நாளை கடைப்பிடிக்கின்கிறது. “Equity, Diversity, and Inclusion: Water Unites Us” என்பது 2022’இல் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

7. இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிற நாள் எது?

அ) தேசிய குடற்புழுநீக்க நாள் 

ஆ) தேசிய குருதிச்சோகை நாள்

இ) தேசிய நீரழிவு நாள்

ஈ) தேசிய புற்றுநோய் நாள்

  • இந்தியாவில், ஆண்டுதோறும் பிப்ரவரி.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழுநீக்க நாள் கடைப்பிடிக் -கப்படுகின்றது. 1-19 வயதிற்குள் இருப்போருக்கு குடற் புழுக்களை ஒழிப்பதை இந்நாள் நோக்கமாகக்கொண்டு உள்ளது. அவை மண்வழியாக பரவும் புழுக்களாகும்.
  • WHOஇன் கூற்றுப்படி, இந்தியாவில், 1-14 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 241 மில்லியன் சிறார்கள், ஒட்டுண்ணி குடற்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8. அண்மையில் காலமான லூக் மாண்டாக்னியர் அவரது எந்தக் கண்டுபிடிப்புக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார்?

அ) மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) 

ஆ) எபோலா

இ) சிக்குன்குனியா

ஈ) ரோட்டா வைரஸ்

  • நோபல் பரிசு வென்ற மூத்த தீநுண்மவியலாளர் லூக் மாண்டாக்னியர் சமீபத்தில் பாரிஸில் காலமானார். AIDS நோயை உண்டாக்கும் HIV வைரஸைக் கண்டறிந்ததற் -காக 2008ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை அவர் தனது சக ஊழியரான பிராங்கோயிஸ் பார் -சினூசியுடன் இணைந்து பெற்றார்.

9. பால்-ஹென்றி சண்டோகோ டமிபா, சமீபத்தில் எந்த நாட்டின் அதிபராக அறிவிக்கப்பட்டார்?

அ) புர்கினா பாசோ 

ஆ) நமீபியா

இ) ஜிம்பாப்வே

ஈ) மாலி

  • ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவின் அதிபராக தேசிய ஆயுதப்படையின் லெப்டினன்ட் கர்னலான பால் ஹென்றி சண்டாகோ டமிபா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பிறகு அந்நாட்டின் உயர்மட்ட அரசியலமைப்பு அமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.

10. 2021 ஜனநாயகக்குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 32

ஆ) 46 

இ) 52

ஈ) 85

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட EIUஇன் ஜனநாயகக்குறியீட்டு அறிக்கையில் இந்தியா 46ஆவது இடத்தில் உள்ளது.
  • உலகளாவிய குறியீட்டில் இந்தியா 6.91 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நார்வே மற்றும் நியூசிலாந்து ஆகியவை முறையே முதல் இரண்டு இடங்களையும், வட கொரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகியவை கடைசி இடத்திலும் உள்ளன. அரசியல் கலாச்சாரத்தில் குறைந்த மதிப்பெண்ணான 5-உம் தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றில் அதிகபட்ச மதிப்பெண்ணா -ன 8.67-உம் இந்தியா பெற்றுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கீழடியில் பாசிமணிகள், யானை தந்த பகடை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தொடங்கப்பட்டுள்ள 8ஆம்கட்ட அகழாய்வில், முதல்முறை -யாக பாசிமணிகள், யானை தந்தத்தினாலான செவ்வக வடிவ பகடை ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடைபெற்ற 7ஆம் கட்ட அகழாய்வுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டையகால தமிழர்கள் பயன்படுத்திய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் 8ஆம்கட்ட அகழாய்வுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் ஒரு குழியில் 2 பச்சை நிற பாசிமணிகளும், 2 ஊதா நிற பாசிமணிகளும் மற்றும் யானை தந்தத்தினாலான செவ்வக வடிவ பகடையும் கண்டெடுக்கப்பட்டன.

2. 18.02.2022 – ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர் 163ஆவது பிறந்தநாள்.

1. When is the World Leprosy Day observed in the year 2022?

A) January 30 

B) January 31

C) February 01

D) February 02

  • World Leprosy Day is observed around the world on the last Sunday of January every year. This year World Leprosy Day held on 30 January.
  • The day is celebrated to raise global awareness of this deadly ancient disease and call attention to the fact that it can be prevented, treated and cured. This year theme of World Leprosy Day 2022 is “United for Dignity”.

2. The death anniversary of which national leader was observed as the Martyrs’ Day on January 30 in India?

A) Jawaharlal Nehru

B) Mahatma Gandhi 

C) Bhagat Singh

D) Sardar Vallabhbhai Patel

  • On 30th Jan 1948, Mahatma Gandhi was assassinated by Nathuram Godse in the year 1948. On this day, India observes Martyrs Day or Shaheed Diwas, to pay homage to Mahatma Gandhi and all martyrs who sacrificed their life for the nation’s freedom.

3. When is the International Day of Human Fraternity observed?

A) February 02

B) February 03

C) February 04 

D) February 05

  • The International Day of Human Fraternity is observed every year by the United Nations on February 4. In the year 2019, on the same day, the document entitled “Human fraternity for world peace and living together” was signed in 2019.

4. What is the theme of the ‘World Wetlands Day 2022’?

A) Wetlands for Us

B) Wetlands Action for People and Nature 

C) Wetlands and COVID-19

D) Save Wetlands

  • World Wetlands Day is observed every year on 2nd February to create awareness on the importance of wetlands and its role played in the planet. This year, the theme of the World Wetlands Day is “Wetlands Action for People and Nature”.

5. When is the World Pulses Day observed, across the world?

A) February 8

B) February 9

C) February 10 

D) February 11

  • In 2019, the United Nations General Assembly announced 10 February as the World Pulses Day. This was followed by the celebration of the year 2016 as the International Year of Pulses (IYP), across the world, led by the Food and Agriculture Organization.
  • The day is celebrated to raise awareness about the nutritional values of pulses and ways to tackle malnutrition through pulses. This year, the theme of the World Pulses Day is “Pulses to empower youth in achieving sustainable agrifood systems”.

6. When is the ‘International Day of Women and Girls in Science’ observed?

A) February 10

B) February 11 

C) February 12

D) February 13

  • International Day of Women and Girls in Science’ is observed every year on February 11, across the world. This year, the day will mark the sixth International Day of Women and Girls in Science Assembly. United Nations leads the observance of the day. This year, the theme is “Equity, Diversity, and Inclusion: Water Unites Us”.

7. Which day is observed on February 10 and August 10 every year in India?

A) National Deworming Day 

B) National Anemia Day

C) National Dehydration Day

D) National Cancer Day

  • In India, every year February 10 and August 10 are observed as the National Deworming Day (NDD). The day aims to eradicate intestinal worms within the age bracket of 1–19 years, which are also referred to as Soil–Transmitted Helminths (STH).
  • As per the World Health Organisation, about 241 million children in India between 1–14 years are at risk of parasitic intestinal worms.

8. Luc Montagnier, who passed away recently, won Nobel Prize for Medicine for which discovery?

A) Human Immunodeficiency Virus 

B) Ebola

C) Chikungunya

D) Rotavirus

  • Veteran Nobel-winning virologist Luc Montagnier died in Paris recently. He won the Nobel Prize for Medicine in 2008 for the discovery of the Human Immunodeficiency Virus that causes AIDS, along with his colleague Francoise Barr-Sinoussi.

9. Paul-Henri Sandaogo Damiba has been declared President of which country?

A) Burkina Faso 

B) Namibia

C) Zimbabwe

D) Mali

  • Paul-Henri Sandaogo Damiba, Lieutenant-colonel in the national armed forces, has been declared President of the African country Burkina Faso. The country’s top constitutional body has announced this decision after a coup last month.

10. What is the rank of India in the 2021 Democracy Index report?

A) 32

B) 46 

C) 52

D) 85

  • India is ranked 46 on the EIU’s Democracy Index report, which was released recently. In the Global index, India has scored 6.91. Norway and New Zealand got the top two places respectively, while North Korea, Myanmar, Afghanistan were placed at the bottom. India has the lowest score of 5 on political culture and the highest score of 8.67 on electoral process and pluralism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!