Tnpsc

17th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலக தடகள நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 7

ஆ) மே 8

இ) மே 9

ஈ) மே 10

  • இளையோரிடையே தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் முதன்மையான விளையாட்டாக தடகளத்தை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் மே. 7 அன்று உலக தடகள நாள் அனுசரிக்கப்படுகிறது.

2. நோபல் பரிசுபெற்ற இரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் கொண் -டாடப்படுகிற தேதி எது?

அ) மே 7

ஆ) மே 8

இ) மே 9

ஈ) மே 10

  • இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற முதல் ஆசியரான ரவீந்தரநாத் தாகூரின் பிறந்த நாள் மே.7 அன்று கொண்டாடாப்படுகிறது. ரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞராவார். “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் ‘குருதேவ்’ என்றழைப்பர். இவருடை -ய மற்றொரு பாடல் ‘அமர் சோனார் பங்களா’ வங்கதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரின் பாடல்கள் ‘இரபீந்திர சங்கீத்’ என அழைக்கப்படுகின்றன. தாகூரின் படைப்புகள் ஆங்கிலம், டச்சு, ஜெர் -மன், ஸ்பானிய மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் பரவலாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

3. நடப்பாண்டின் (2021) பன்னாட்டு குடும்பங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Families and inclusive societies

ஆ) Families and new technologies

இ) Families and Climate Action

ஈ) Families, healthy lives and sustainable future

  • கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஐநா அவை பன்னாட்டு குடும்ப நாளைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே. 15ஆம் தேதியன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாள் குடும்பத்தின் முக்கியத்துவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
  • குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப்பொறுப்பு -கள், தொழில்வாய்ப்புக்கள்பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்து -வதும் இந்நாளின் முக்கிய குறிக்கோள்களாகும். “Families and new technologies” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப் பொருளாகும்.

4. நடப்பாண்டில் (2021) வரும் உலக இளைப்பு நோய் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Better Air Better Breathing

ஆ) Uncovering Asthma Misconceptions

இ) Understanding Asthma

ஈ) Stop for Asthma

  • இளைப்புநோய்குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், உலகெங்கும் இளைப்புநோயுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து -வதையும் நோக்கமாகக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் உலக இளைப்பு நோய் நாள் கடை -ப்பிடிக்கப்படுகிறது. இளைப்பு நோய் என்பது நுரையீரலில் சுவாசப்பிரச்ச -னையை ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும்.
  • இந்த நோய் பொதுவாக இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளின்மூலம் தோன்றும். நடப்பாண்டில் மே.4 அன்று “Uncovering Asthma Misconceptions” என்னும் கருப்பொருளுடன் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இளைப்புநோய் என்பது முதன்மையான பரவா நோய்களுள் ஒன்றாகும். இது பொதுவாக குழந்தைகளில் காணப்படுகிற -து. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது ஆஸ்துமாவி -ற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

5. நடப்பாண்டுக்கான (2021) உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Women and Girls in ICT

ஆ) Bridging the standardization gap

இ) Enabling the positive use of Artificial Intelligence for All

ஈ) Accelerating Digital Transformation in challenging times

  • இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க -வும், அவை சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு என்ன சேர்ப்பிக்கின்ற -ன என்பது குறித்தும், டிஜிட்டல் இடைவெளிக்கு அவை எவ்வாறு பால -மாக செயல்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவத -ற்காகவுமாக ஆண்டுதோறும் மே.17 அன்று உலகம் முழுவதும் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள் கொண்டாடப்படுகிறது.
  • நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Accelerating Digital Transformation in challenging times” என்பதாகும். முதல் உலக தந்தி மாநாட்டை நினைவுகூரும் விதமாகவும், பன்னாட்டு தொலைத் தொடர்பு சங்கம் உருவானதை குறிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

6. நடப்பாண்டில் வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Awareness of high blood pressure

ஆ) Know your numbers

இ) Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer

ஈ) Healthy diet, healthy blood pressure

  • ‘அமைதிக்கொலையாளி’ என்றும் ‘உலகளாவிய பொதுநலப்பிரச்சனை’ என்றும் உலக நலவாழ்வு அமைப்பால் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று உலக உயர் இரத்தவழுத்த நாள் கடைப்பிடிக்கப் -படுகிறது. “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருளாகும்.

7. அண்மையில் படம்பிடிக்கப்பட்ட, ‘ஜெசெரோ’ பள்ளம் அமைந்துள்ள வானியல் பொருள் எது?

அ) திங்கள்

ஆ) ஞாயிறு

இ) செவ்வாய்

ஈ) வெள்ளி

  • NASA’இன் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியானது அண்மையில் பழங்கால பள்ளமான ஜெசெரோ பள்ளத்தின் தரையமைப்பு குறித்த ஆய்வினைத் தொடங்கியது. அவ்வாய்வூர்தி அதன் அறிவியல் கருவிகளை பள்ளத்தின் தரையில்படும் பாறைகள்மீது படும்படி வைத்து ஆய்வினைத்தொடங்கியு -ள்ளது. இந்த ஆய்வூர்தியில் உள்ள ‘வாட்சன்’ என்ற நிழற்படக்கருவி பாறைகளை காட்சிப்படுத்தியுள்ளது.

8. நவீன வேதி மின்கல சேமிப்பிற்கான PLI திட்டத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு?

அ) `8,100 கோடி

ஆ) `18,100 கோடி

இ) `48,100 கோடி

ஈ) `78,100 கோடி

  • ACC வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 GWh மின்னாற்றலை சேமித்து வைக்கக்கூடிய அளவில் மின்கலங்களை தயாரிக்கவேண்டும் என்பதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அல்-அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) இத்தாலி

இ) வாடிகன் நகரம்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளி வாசல் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகும். கோவில் மலையின்மீது இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இஸ்ரேலிய ஆயுதப்படைகள் அல்-அக்ஸா மசூதியை தாக்கியதில் 300’ க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவை ஆண்டுவரும் இசுலாமிய போராளிக்குழு -வான ஹமாஸ், ஏவுகணைகளை ஏவின. பின்னர், இஸ்ரேலியர்கள் காசாமீது வான்வழித்தாக்குதலை நடத்தினர். அதில், குறைந்தது 21 பாலஸ்தீனியர்களாவது மரணித்திருப்பர்.

10. ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) பன்னாட்டு செலவாணி நிதியம்

இ) ஐக்கிய நாடுகள்

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஐநா அவையானது சமீபத்தில், ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்த அறிக்கையின் மேம்பட்ட பதிப்பை வெளி -யிட்டது. இதன்படி, ஐநா, நடப்பு 2021ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது அதன் ஜனவ -ரி கணிப்பிலிருந்து 0.2% அதிகமாகும். எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.1% அதிகரிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக இராஜேஷ் லக்கானி நியமனம்

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக இராஜேஷ் லக்கானி, இஆப நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, இஆப இதுகுறித்த ஆணையை பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த இராஜேஷ் லக்கானி இஆப, தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

இப்பொறுப்பில் முன்னதாக பங்கஜ் குமார் என்பவர் இருந்தார். முன்னதாக இஆப அதிகாரி இராஜேஷ் லக்கானி தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்பு -ற வளர்ச்சித் துறைச் செயலராக இருந்த அவர் தமிழக ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. அதி தீவிர புயலானது ‘டவ்-தே’

மத்திய கிழக்கு அரபிக்கடலில் தீவிர புயலாக காணப்பட்ட ‘டவ்-தே’ புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. 6,000 இரயில் நிலையங்களில் இலவச வைஃபை!

நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் இலவசமாக இணைய வசதி அளிப்பதற்கான வைஃபை சேவை திட்டம் 6,000 இரயில் நிலையங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு மும்பை இரயில் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக இரயில் நிலையங்களில் இலவச வைஃபை திட்டம் தொடங்கப்பட்டது. ரயில்டெல் நிறுவனம்மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூகுள், டாட், டாடா அறக்கட்டளை ஆகியவை பின்னர் இத்திட்டத்தில் இணைந்தன. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முக்கியமாக கிராமப்புற மக்களுக்கும் இணையதள சேவையைக் கொண்டுசெல்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேற்கு வங்கத்தில் மிதுனபுரி இரயில் நிலைத்தில் வைஃபை வசதி அமைத்தபோது 5,000 என்ற அளவு எட்டப்பட்டது. இப்போது ஒடிஸா மாநிலம் ஜாரபாதா இரயில் நிலையத்திலும், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரி -பாத் ரயில் நிலையத்திலும் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம் 6,000 இரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை என்ற மைல்கல் எட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. World Athletics Day is observed on which date?

A) May 7

B) May 8

C) May 9

D) May 10

  • The World Athletics Day is observed every year on May 7 to popularize sports among the youth, to promote athletics as the primary sport in schools and institutions and to encourage and introduce new talent and youngsters in the field of athletics.

2. The birth anniversary of Nobel laureate Rabindra Nath Tagore has celebrated on which date in India?

A) May 7

B) May 8

C) May 9

D) May 10

  • The birth anniversary of Asia’s first Nobel laureate Rabindra Nath Tagore has celebrated on May 7, 2021. His songs are known as Rabindra Sangeet. Tagore has composed the national anthems of both India and Bangladesh. Tagore’s own English translations of his collection of Bengali poems Gitanjali fetched him the Nobel Prize for Literature in 1913. Tagore’s works were widely translated into English, Dutch, German, Spanish, and other European languages.

3. What is the theme of 2021 International Day of Families?

A) Families and inclusive societies

B) Families and new technologies

C) Families and Climate Action

D) Families, healthy lives and sustainable future

  • The International Day of Families is observed every year on May 15 across the world to promote awareness of issues relating to families and increase knowledge of the social, economic and demographic progression that affects families. The 2021 theme “Families and new technologies”.

4. What is the theme of the 2021 World Asthma Day?

A) Better Air Better Breathing

B) Uncovering Asthma Misconceptions

C) Understanding Asthma

D) Stop for Asthma

  • The World Asthma Day is celebrated every year on first Tuesday of May to increase awareness about asthma and aims to improve the lives of people with asthma across the world. Asthma is a chronic disease of the lungs which causes breathing problems.
  • Asthma usually appears through symptoms like coughing, tightness in the chest, breathlessness. The 2020 World Asthma Day is observed on 4th of May with theme “Uncovering Asthma Misconceptions”. Asthma is one of the major non–communicable diseases and it is also the most common chronic disease in children. Regular exercise can help reduce asthma symptoms.

5. What is the theme of the 2021 edition of World Telecommunica –tion and Information Society Day?

A) Women and Girls in ICT

B) Bridging the standardization gap

C) Enabling the positive use of Artificial Intelligence for All

D) Accelerating Digital Transformation in challenging times

  • The World Telecommunication and Information Society Day is observed across the globe every year on May 17 to help raise awareness of the possibilities that the use of the Internet and other Information and Communication Technologies can bring to societies and economies, as well as of ways to bridge the digital divide.
  • The 2021 theme is “Accelerating Digital Transformation in challenging times”. The day also marks the anniversary of the signing of the first International Telegraph Convention and the creation of the International Telecommunication Union.

6. What is the theme of the 2021 edition of World Hypertension Day?

A) Awareness of high blood pressure

B) Know your numbers

C) Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer

D) Healthy diet, healthy blood pressure

  • The World Hypertension Day is observed every year on May 17 to spread awareness about the disease that the World Health Organisation calls a “silent killer” and “global public health issue”. The 2021 theme is “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer”.

7. ‘Jezero’ Crater, whose images have been captured recently, is a crater in which astronomical body?

A) Moon

B) Sun

C) Mars

D) Venus

  • NASA’s Perseverance rover has recently started to study the floor structure of the ancient crater– Jezero Crater. The rover has started focusing its science instruments on rocks laying on the floor of the crater. A camera named ‘WATSON’ at the end of the rover’s robotic arm has taken detailed shots of the rocks. The rover is also documenting the historic flights of the rotorcraft of Ingenuity.

8. What is the outlay of the PLI Scheme for Advanced Chemistry Cell (ACC) Battery Storage?

A) Rs 8,100 cr

B) Rs 18,100 cr

C) Rs 48,100 cr

D) Rs 78,100 cr

  • The Union Cabinet approved a ₹18,100 crore production–linked incentive scheme for Advanced Chemistry Cell Battery Storage. The prime objective is to set up 50 GWh manufacturing capacity for advance chemistry cell batteries. This is expected to accelerate switching to electric vehicles to curb pollution and reduce oil imports.

9. Al–Aqsa Mosque, which was making news recently, is located in which country?

A) Israel

B) Italy

C) Vatican City

D) UAE

  • The Al–Aqsa Mosque, located in the city of Jerusalem, Israel, is the third holiest site in Islam. The mosque is said to be built on top of the Temple Mount. Over 300 Palestinians were injured when Israeli armed forces stormed Al–Aqsa Mosque.
  • In retaliation, Hamas, the Islamist militant group that runs Gaza, fired rockets. Israelis then launched an airstrike on Gaza, killing at least 21 Palestinians.

10. Which organisation releases the ‘World Economic Situation and Prospects’ report?

A) World Bank

B) International Monetary Fund

C) United Nations

D) Asian Development Bank

  • The United Nations has recently released the update of the ‘World Economic Situation and Prospects’ report. As per the update, the UN has raised India’s growth forecast to 7.5 percent for the year 2021, which is a 0.2 per cent increase from its projection in January. It also predicted that India’s GDP would grow by 10.1 percent in 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!