Tnpsc

17th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மருந்துகளுக்கான PLI திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஆ) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

  • முக்கிய மூலப்பொருட்கள், இடைநிலை மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2020-21 முதல் 2028 -29 வரையிலான நிதியாண்டுக்கு மருந்துகளுக்கான PLI திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே தனது ஒப்புதலை அளித்திருந்தது.

2. ‘பாரத் இ-மார்க்கெட்’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மின்னணு வணிக இணையதளமாகும்?

அ) FICCI

ஆ) KVIC

இ) CAIT

ஈ) TRIFED

  • அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT மின்னணு வணிகத்துக்காக, ‘பாரத் இ-மார்க்கெட்’ என்னும் ஓர் இணையதளத்தை தொடங் -கவுள்ளது. இதை முன்னிட்டு, விற்பனையாளர்களுக்கான, திறன்பேசி செயலி ஒன்றை அன்மையில் அறிமுகம்செய்தது.
  • இந்தச்செயலி வணிகங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை இந்த இணையதளத்தில் பதிவுசெய்துகொள்வதன்மூலம் தங்கள் சொந்த மெய் நிகர் அங்காடியை உருவாக்க உதவுகிறது. இதற்காக அவர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.

3. 2021 மார்ச்சில், எவ்வமைப்பின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது?

அ) BRICS

ஆ) QUAD

இ) BIMSTEC

ஈ) G20

  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் QUAD தலைவர்களின் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். COVID-19’இன் பொருளாதார மற்றும் நல்வாழ்வு பாதிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் இணையவெளி, பயங்கரவாத எதிர்ப்பு, தரமான உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் மனிதாபிமான உதவி, பேரிடர்-நிவாரணம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

4. ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவம்’ கொண்டாட்டங்கள் அனைத்தும் பின்வரும் எந்த இடத்திலிருந்து தொடக்கிவைக்கப்பட்டன?

அ) சபர்மதி ஆசிரமம்

ஆ) இராஜ் காட்

இ) மதுரை

ஈ) செங்கோட்டை, புது தில்லி

  • இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’ (சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வு, மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்றுச்சிறப்புமிக்க உப்புச்சத்தியாகிரக யாத்திரை -யின் 91ஆவது ஆண்டுநிறைவைக்குறிக்கிறது. இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டை முன்னிட்டு, இதர கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

5. அண்மையில் ஆப்பிரிக்காவின் தலைமைத்துவத்திற்கான சிறந்த பரிசை வென்ற மகாமதூ இசெளபெள (Mahamadou Issoufou), எந்த நாட்டின் அதிபராக இருந்தார்?

அ) சாட்

ஆ) நமீபியா

இ) நைஜர்

ஈ) சூடான்

  • இரண்டு பதவிக்காலங்களுக்குப்பிறகு நைஜரின் அதிபர் பதவியிலிருந்து விலகும் மகாமதூ இசெளபெள, ஆப்பிரிக்காவின் தலைமைத்துவத்திற்கா -ன சிறந்த பரிசை வென்றுள்ளார். வறுமை முதல் ஆயுதக்கிளர்ச்சி மற்றும் நாட்டில் பாலைவனமாக்கல் வரை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதற்காக அவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான இப்ராஹிம் பரிசு வழங்கப்பட்டது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “2001 FO32” என்றால் என்ன?

அ) விண்கலம்

ஆ) COVID தடுப்பு மருந்து

இ) சிறுகோள்

ஈ) அருமண் உலோகம்

  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA, இந்த ஆண்டு, 2001 FO32 என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய சிறுகோள் 1.25 மில்லியன் மைல் தொலைவில் புவிக்கு மிகவருகே கடந்து செல்லும் என்று கூறியுள்ளது. இந்த சிறுகோள் 3,000 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது; 20 ஆண்டுகளுக்கு முன்பு இது கண்டுபிடிக்கப்பட்டது.

7. நடப்பாண்டில் (2021) BRICS அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு எது?

அ) பிரேஸில்

ஆ) இரஷ்யா

இ) இந்தியா

ஈ) சீனா

  • நடப்பாண்டிற்கான (2021) BRICS அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. அண்மையில், பொருளாதார & வர்த்தக சிக்கல்கள் குறித்த BRICS தொடர்புக்குழு மார்ச் 9 முதல் 11 வரை இந்தியாவின் தலைமையில் அதன் முதல் கூட்டத்தை நடத்தியது. “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus” என்பது நடப்பாண்டு (2021) BRICS அமைப்பிற்கான கருப்பொருளாகும்.

8. பின்வருவனவற்றுள் பவானி தேவியுடன் தொடர்புடைய விளை -யாட்டு எது?

அ) குத்துச்சண்டை

ஆ) வாள் சண்டை

இ) ஈட்டியெறிதல்

ஈ) பூப்பந்து

  • தமிழ்நாட்டின் வாள் சண்டை சாம்பியனான பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள் சண்டை வீராங்கனை என்ற பெருமை -யை அவர் அடைந்தார்.
  • சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசை முறையின்கீழ் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 2020’இல் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் 2021ஆம் ஆண்டு ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

9. அமெரிக்க துணை தூதரகத்தின் துணிச்சல்மிகு பெண்ணுக்கான பன்னாட்டு விருதுபெற்ற கெளசல்யா சங்கர் சார்ந்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு ஆ) கேரளா

இ) கர்நாடகா ஈ) தெலங்கானா

  • சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அண்மையில் தமிழ் நாட்டைச்சார்ந்த கெளசல்யா சங்கருக்கு, துணிச்சல்மிகு பெண்ணுக்கா
    -ன பன்னாட்டு விருதினை வழங்கியுள்ளது. சாதி அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக்கொண்ட அவ -ர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார்.

10. தேசிய தடுப்பூசி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 15

ஆ) மார்ச் 10

இ) மார்ச் 16

ஈ) மார்ச் 14

  • தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக தேசிய நோய்த்தடுப்பு நாள் என அழைக்கப்படும் தேசிய தடுப்பூசி நாள் ஆண்டுதோறும் மார்ச்.16 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிற -து. போலியோ வைரஸ் மற்றும் பிற கொடிய வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நடப்பாண்டில் (2021) வரும் தேசிய தடுப்பூசி நாள், போலியோ மற்றும் COVID-19 இரண்டையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பல்ஸ் போலியோ’ நோய்த்தடுப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளான 1995 மார்ச்.16 அன்று இந்த நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாடு சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் 75 இடங்களில் ‘அம்ரித்மஹோத்சவ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா நடைபெறும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி, ‘அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று (12.03.2021) நடந்தது.

நாடுமுழுவதும் இன்று (மார்ச் 12) தொடங்கி 75 வாரங்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சி வழியாக நமது கலாச்சாரம், பாரம்பரியம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர வீரர்களின் தியாகங்கள், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நாம் செய்த சாதனைகளை பரவச் செய்ய முடியும்.

உப்புக்கு வரி விதித்த பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி, 1930-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி குஜராத்தில் இருந்து தண்டி வரை உப்பு சத்தியாக்கிரகம் எனும் அகிம்சைவழி போராட்டம் நடத்தி, உப்புக்கான வரியை விலக்கச் செய்தார். வன்முறையற்ற இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன்மூலம் ஈர்க்கப்பட்ட ராஜாஜி, திருச்சி முதல் வேதாரண்யம் வரை உப்பு சத்தியாக்கிரக அணிவகுப்பை மேற்கொண்டார். நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர இயக்கத்தில் தமிழகம் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. காந்தி மதுரைக்கு வந்த பின்னர்தான் மிக சாதாரண உடைகளை அணியத் தொடங்கினார்.

நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்திலிருந்து ‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதன்படி, மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூரும் வகையில், 81 போ் கொண்ட குழு புறப்பட்டது. ஆமதாபாதிலிருந்து தண்டி கடற்கரை வரையிலான 386 கி.மீ. தூரத்தை இவா்கள் 25 நாட்களில் நிறைவு செய்வாா்கள். ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.

மகாத்மா காந்தியடிகள் கடந்த 1930-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி உப்பு மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்யக் கோரி சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடற்கரைக்குப் பாத யாத்திரை மேற்கொண்டாா்.

75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களானது 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன

2. எழுத்தாளர் இமையத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிப்பு

இந்தியாவில் இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று (12.03.2021) அறிவிக்கப்பட்டன. 20 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சாகித்ய அகாடமி விருது, கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்படுகிறது. செல்லாத பணம் என்ற நாவலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு தாமிர பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

தமிழ் மொழியில் எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு விருது கிடைத் துள்ளது. 2018-ல் வெளியான இந்த நாவலை க்ரியா பதிப்பகம்வெளியிட்டுள்ளது. இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கழுதூரில் பிறந்தவர் ஆவார். இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. 1964-ல் பிறந்த இமையம், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்.’ இது 1994-ல் வெளியானது. தமிழ்இலக்கியத்தில் அதுவரை ஆவணப்படுத்தப்படாத புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப் பேசிய அந்த நாவல், பின்னாளில் புதிரை வண்ணார்கள் நல வாரியம்அமைக்கப்பட முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ போன்ற நாவல்களையும் அவர் எழுதினார்.

கடந்த ஆண்டு ‘வாழ்க! வாழ்க!’ என்ற குறுநாவல் வெளியானது. ‘மண் பாரம்’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘நறுமணம்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’ போன்றவை இமையத்தின் சிறுகதைத் தொகுப்புகளாகும்.

இமையத்தின் ‘பெத்தவன்’ நெடுங்கதையை இயக்குநர் மு. களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற தலைப்பில் படமாக இயக்கி வருகிறார். இமையம் தன் எழுத்துக்காக ‘அக்னி அக்‌ஷர விருது’, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது’, ‘அமுதன் அடிகள் இலக்கிய விருது’, தமிழக அரசின் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’, இந்து தமிழ் திசையின் ‘சமகாலச் சாதனையாளர் விருது’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டுக்கான ‘இயல்’ விருதைப் பெற்றுள்ளார், எழுத்தாளர் இமையம். சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு, திருப்பதி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமியின் 2020-ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் 7 கவிதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 20 மொழிகளைச் சேர்ந்த படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கன்னட மொழிக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வீரப்ப மொய்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘பாகுபலி அகிம்சா திக்விஜயம்’ என்ற காவிய கவிதை நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இதேபோல் சாகித்ய அகாடமியின் 2020-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் கவிஞர் ஷக்தி எழுதிய ‘மர நாய்’ கவிதைத் தொகுப்புக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

சோ. தர்மனின் சூல் (நாவல்), எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் (நாவல்), கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி (நாவல்), ஜோ டி குரூஸின் கொற்கை (நாவல்), டேனியல் செல்வராஜின் தோல் (நாவல்), சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு இதுவரை சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்:

2015 – இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) – ஆ. மாதவன்

2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்

2017 – காந்தள் நாட்கள் (கவிதைகள்) – இன்குலாப்

2018 – சஞ்சாரம் (புதினம்) – எஸ். ராமகிருஷ்ணன்

2019 – சூல் (புதினம்) – சோ. தர்மன்

2020 – செல்லாத பணம் (நாவல்) – இமையம்

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழில் ‘செல்லாத பணம்’ நாவலை எழுதிய எழுத்தாளா் இமையம், கன்னடத்தில் ‘ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக்விஜயம்’ பெருங்கவிதை நூலை எழுதிய முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, ஆங்கிலத்தில் ‘வென் காட் இஸ் எ டிராவலா்’ என்ற கவிதை நூலை எழுதிய அருந்ததி சுப்பிரமணியம் உள்பட 20 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாகித்ய அகாதெமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 7 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஒரு அனுபவ நூல் என மொத்தம் 20 மொழிகளில் வெளியான 20 நூல்கள் சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாவல்களுக்காக, இமையம்(தமிழ்), நந்த கரே(மராத்தி), மகேஷ் சந்திர சா்மா கௌதம்(சம்ஸ்கிருதம்), ஹுசைன் அல் ஹேக் (உருது) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

சிறுகதை தொகுப்புகளுக்காக, அபூா்வ குமாா் சைகியா(அஸ்ஸாமி), தரணிதா் ஒவாரி(போடோ), ஹிதய் கொல் பாரதி(காஷ்மீரி), காமாகாந்த் ஜா(மைதிலி), குருதேவ் சிங் ரூபனா (பஞ்சாப்) ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

கவிதை நூல்களுக்காக, அருந்ததி சுப்பிரமணியம் (ஆங்கிலம்), ஹரீஷ் மீனாட்சி(குஜராத்தி), அனாமிகா(ஹிந்தி), ஆா்.எஸ்.பாஸ்கா்(கொங்கணி), இரூங்பாம் தேவன்(மணிப்பூரி), ரூப்சந்த் ஹன்ஸ்டா(சந்தாலி), நிகிலேஷ்வா்(தெலுங்கு) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

நாடக நூல்களுக்காக, கியான் சிங் (டோக்ரி), ஜேதோ லால்வானி(சிந்தி) ஆகிய இருவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

அனுபவக் குறிப்பு நூலுக்காக, வங்க மொழி எழுத்தாளா் மணிசங்கா் முகோபாத்யாய தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம், நேபாளி, ஒடியா, ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் வெளிவந்த படைப்புகளுக்கு பின்னா் விருது அறிவிக்கப்படும். சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தாமிர கேடயம் பரிசளிக்கப்படும். விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

3. இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக இம்ரான் அமின் சித்திக் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு இதே வங்கியில் வளங்கள் மற்றும் அரசு உறவுகள் பிரிவுகளின் பொது மேலாளராக பணிபுரிந்தவர்.

4. மார்ச் 14-ம் தேதி உலக சிறுநீரக தினம். ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் வரும் 2ஆவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – “சிறுநீரக நோயுடன் நன்றாக வாழ்”

5. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் ‘கோவிட்-19’ தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதனைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளது.

டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, இத்தாலி, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்குப் போடப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் ‘கோவிட்-19’ தடுப்பூசியினால் சிலருக்கு ரத்தம் உறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள பல ஐரோப்பிய நாட்டு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த நாடுகள் ‘கோவிட்-19’ தடுப்பூசி விநியோகத்தைக் குறைத்து வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதாரநிறுவனத்தின் தடுப்பு மருந்துஆலோசனைக் குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்துள்ளனர். அதில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கும், ரத்தம் உறைவதற்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லை. கரோனா இறப்புகளை ஆராய்ந்ததில் அதிலும் தடுப்பூசி காரணமாக இறப்புகள் ஏதும் நிகழவில்லை என்று தெரிய வந்துள்ளது.

எனவே மற்ற தடுப்பூசிகளைப் போலவே அஸ்ட்ரா ஜெனிகா பயன்படுத்துவதில் எந்தப் பிரச் சினையும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

6. எச் 1பி விசாவுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் நிறுத்திவைப்பு: அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணிபுரியும் வெளி நாட்டுப் பணியாளர்கள் எச் 1 பி விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் குறைந்தபட்ச அளவு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மிக அதிக அளவில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உத்தரவால் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை பணியில் நியமிப்பது பெரும் பிரச்சினையானது.

இப்புதிய விதிமுறை மே 14, 2021 முதல் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க தொழிலாளர் நலத்துறைக்கு அதிபர் பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

7. சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மிதாலி ராஜ்.

லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடை பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், 35 ரன்களை கடந்த போது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை எட்டும் 2-வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். இந்த வகை சாதனையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

8. உலக நன்மைக்கு குவாட் அமைப்பு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது

முதல்முறையாக நாட்டின் பிரதமர், அதிபர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நேற்று (12.03.2021) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர்ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, “குவாட் அமைப்பு என்பது இந்தியாவின் பாரம்பரியமான வாசுதேவ குடும்பகத்தின் நீட்டிப்பு ஆகும்.

வாசுதேவ குடும்பம்:

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் இந்தியாவின் பண்டைய தத்துவமான ‘வாசுதேவ குடும்பம்’ என்ற தத்துவத்தின் விரிவாக்கமாகவே குவாட் அமைப்பை கருதுகிறேன்,’’ என்றார். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதும் ‘வாசுதேவ குடும்பகம்’ என்ற தத்துவத்தின் விரிவாக்கம்தான் குவாட் என பிரதமர் பேசினார்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிப்பதற்கும், நிலையான, வளமான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க ஆசைப்படு கிறேன். உலக நன்மைக்காக குவாட் அமைப்பு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்” என்றார்.

மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசும்போது, “21-ம் நூற்றாண்டின் தலைவிதியை இந்தோ-பசுபிக் பிராந்தியம் வடிவமைக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரிய ஜனநாயக நாடுகளின் 4 தலைவர்கள் என்ற வகையில், எங்கள் கூட்டு ஒப்பந்தம் அமைதி,ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புஆகியவற்றின் செயல்பாட்டாள ராக இருக்கட்டும். இதே பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படட்டும்” என்றார்.

9. இயற்பியல், கணிதம் பாடங்கள் பொறியியலுக்கு கட்டாயமில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு

இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேடுவை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது.வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக எடுத்து படித்தால் தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் ஏஐசிடிஇ இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10. பிரம்ம குமாரிகள் வித்யாலயா தலைமை நிர்வாகி காலமானார்: ராஜஸ்தானில் இன்று (12.03.2021) இறுதி சடங்கு

பிரம்ம குமாரிகள் அமைப்பின் அகில உலக தலைமை நிர்வாகி ஹிருதய மோகினி உடல் நலக்குறைவினால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 93. உலகில் பெண்களால் நடத்தப்படும் மிகப் பெரிய ஆன்மிக அமைப்பு பிரம்ம குமாரிகள் விஷ்வ வித்யாலயா. இதன் தலைமை நிர்வாகி ஹிருதய மோகினி.

`தாதி குல்ஜார்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மோகினி, தனது 8 வயதில் பிரம்ம குமாரிகள் அமைப்பில் சேர்ந்தார். மனதை ஒருமுகப்படுத்துதல், ஆழ்நிலை தியானம், எளிமை போன்றவற்றில் மிகவும் தேர்ந்தவராக விளங்கினார். உலகம் முழுவதும் 140 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்ட ராஜயோக தியான மையங்களை நிறுவ பெரும் பங்காற்றினார். இவரது ஆன்மிக சேவையை பாராட்டி, வடக்கு ஒடிசா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் ஆப் லிட்டரேச்சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

11. கேரள (கொச்சி) மாநிலத்தினால் நான்காவது சர்வதேச ஆயுர்வேத திருவிழா 2021 (Global Ayurveda Festival 2021) மார்ச் 12 முதல் 19 வரை நடத்தப்பட உள்ளது.

12. மத்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் பிஎல்ஐ திட்டத்தில் ஜப்பானின் பங்களிப்பு பெரும் அளவில் இருக்கும் என எதிா்பாா்ப்பதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலா் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது: தொலைத்தொடா்பு, ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட 13 முக்கிய துறைகளில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிஎல்ஐ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் துறைகளில் பல்வேறு சீா்திருத்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அவற்றின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே பிஎல்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக, உணவுப் பதப்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள், உதிரிபாகங்கள், ஜவுளி மற்றும் சோலாா் பிவி தகடுகள் உள்ளிட்ட துறைகள் இந்த துறைகள் அதிக பயன்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுபோன்ற தொழில்துறைகளில் ஜப்பான் உலக அளவில் அதிக நிபுணத்துவம் பெற்ற நாடாக விளங்குகிறது. எனவே, இந்தியாவின் பிஎல்ஐ திட்டத்தில் ஜப்பான் பெரும் பங்களிப்பை வழங்கும் என்பது இந்தியாவின் மிகுந்த எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா் அவா்.

13. வளர்ச்சி மிகு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 5-ஆம் இடம்

அனைவரையும் கவரும் விதத்திலான வளர்ச்சியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – 1 இடம்; சீனா – 2ம் இடம்; ஜெர்மனி – 3 ஆம் இடம்

14. ரேஷன் பொருள்களை வாங்க ‘மேரா ரேஷன்’ செயலி. ரேஷன் பயனாளிகளுக்காக மேரா ரேஷன் ஆப் என்ற மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் பயனாளிகளுக்காக ‘Mera Ration App’ என்ற மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நேரடி தமிழாக்கம் ‘என் ரேஷன் ஆப்’ என்பதாகும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை தேசம் முழுவதும் வழங்குவதே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் நோக்கம்.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொருட்களை வாங்க இத்திட்டம் உதவுகிறது. தற்போது மேரா ரேஷன் ஆப் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிமுகமாகியுள்ளது. விரைவில் 14 மொழிகளும் பல்வேறு வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும்.

மேரா ரேஷன் ஆப்பின் சிறப்பு அம்சங்கள்: அருகில் உள்ள நியாய விலைக் கடையை தெரிந்துகொள்ளலாம், உணவு தானியங்களை எவ்வளவு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்கள், அண்மையில் வாங்கிய பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகள், ஆதார் இணைப்பு நிலவரம், புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயரும்போது ஆப்பில் பதிவு செய்துகொள்ளலாம்

15. பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை உறுப்பினராக தலைப்பாகை அணிந்த சீக்கியா் ஒருவா் முதல்முறையாக வெள்ளிக்கிழமை (12.03.2021) பொறுப்பேற்றாா்.

கைபா் பாக்துன்கவா மாகாணத்தைச் சோ்ந்த குா்தீப் சிங் என்ற அவா், இம்ரான் கான் தலைமையிலான ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் சாா்பில் செனட் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், தன்னை எதிா்த்துப் போட்டியிட்டவா்களை மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 145 உறுப்பினா்களைக் கொண்ட அவையில் அவருக்கு 103 வாக்குகள் கிடைத்தன.

16. அமெரிக்க சுதந்திர தினமான வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் கரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா். அதிபா் பதவியை ஏற்ற பிறகு, நாட்டு மக்களுக்கு முதல்முறையாக அவா் ஆற்றிய உரையில் இதுகுறித்து அவா் கூறியதாவது:

வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி பெறும் தகுதியுடைய அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கரோனா நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்படும். வரும் ஜூலை மாதம் 4-ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தை பொதுமக்கள் கரோனா பயமின்றி சுதந்திரமாகக் கொண்டாடலாம். மிச மோசமான ஆண்டைக் கடந்ததற்குப் பிறகு, வரும் ஜூலை 4-ஆம் தேதியை நாட்டின் சுதந்திர தினமாக மட்டுமின்றி கரோனாவிடமிருந்து பெற்ற சுதந்திரத்தையும் மக்கள் கொண்டாடுவாா்கள்.

17. உயர் வளிமண்டல ஆய்வுக்காக இஸ்ரோவின் ‘சவுண்டிங் ராக்கெட்’: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் ‘சவுண்டிங் ராக்கெட்’ வெற்றிகரமாக ஏவப் பட்டது.

ககன்யான், சந்திரயான்-3 உட்பட பல்வேறு ஆய்வுத் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சிறிய ரகஆய்வு சாதனங்களை புவியின்தாழ்ந்த சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தவும், வளிமண்டலம் தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் சவுண்டிங் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இஸ்ரோவிடம் ஆர்எச்-200, ஆர்எச்-300, ஆர்எச்-560 என 3 விதமான சவுண்டிங் ராக்கெட்கள் உள்ளன. இது 2 நிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை அதிகபட்சம் 475 கி.மீ. தூரம் கொண்ட புவியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும். அதன்படி, கடந்த 1965-ம்ஆண்டு முதல் இதுவரை இஸ்ரோசார்பில் 100-க்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆர்.எச். 560 ரகம் ராக்கெட்:

அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் ஆர்எச்-560 ரக சவுண்டிங் ராக்கெட் கடந்த 12-ம் தேதி இரவு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

புவி பரப்புக்கு மேல் உள்ள உயர் வளிமண்டலத்தில் வீசக்கூடிய காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் நிலவும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

18. தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவின் மகளுக்கு ரூ.75 லட்சம் நிதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார்

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே உள்ள பட்லபெனுமர்ரு கிராமத்தில் 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தவர் பிங்கலி வெங்கய்யா. சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவர். வைர சுரங்கங்களை கையாள்வதில் நிபுணராக இருந்ததால் ‘டைமண்ட்’ வெங்கய்யா என்றும் பருத்தி வகைகளை அறிந்திருந்ததால் ‘பருத்தி’ வெங்கய்யா என்றும் அழைக்கப்பட்டார். எனினும் இவர் தனது 86-வது வயதில் வறுமையில் வாடி உயிர் நீத்தார்.

நமது நாட்டுக்கென தனி தேசியக் கொடி வேண்டும் என்று காந்தி பல முறை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இதையடுத்து, விதவிதமாக 30-க்கும் மேற்பட்ட கொடிகளை தயாரித்து, காந்தி 1921-ம் ஆண்டு விஜயவாடா வந்திருந்தபோது காண்பித்தார்.

அதை பார்த்த காந்தி, நடுவில் வெண்மை நிறம் இருக்கும்படி கொடியை உருவாக்க யோசனை கூறியுள்ளார். பின்னர் காந்தி கூறியபடி காவி, வெண்மை, பச்சை என முதலில் நம் தேசிய கொடியின் வர்ணம் உருவானது. இந்நிலையில், தற்போது குண்டூர் மாவட்டம், மாசர்லாவில் உள்ள பி.டபிள்யூ காலனியில் வசித்து வரும் பிங்கலியின் மகளான சீதாமகா லட்சுமியை (99) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர், ரூ. 75 லட்சத் திற்கான காசோலையை சீதாமகா லட்சுமிக்கு வழங்கி வணங்கினார்.

19. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்குத் தடை வருகிறது

இலங்கையில் கடந்த 2019ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சிறுபான்மையினர்களான முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை கொண்டு வரப்பட இருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகரா அளித்த பேட்டியில் கூறியதாவது: உள்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு அமை ச்சரவை அனுமதி அளித்து விட்டது. முந்தைய காலங்களில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகள் புர்காக்களை அணியவில்லை. இந்த மத தீவிரவாதத்தின் அடையாளம் சமீபத்தில்தான் தோன்றியது. எனவே, அதற்கு நாங்கள் கட்டாயம் தடை விதிப்போம்.தேசிய கல்விக் கொள்கையை மீறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

19. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு – பயனாளிகளின் வசதிக்காக ‘என் ரேஷன்’ செயலி அறிமுகம்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எந்த ஒரு நியாய விலைக் கடையிலும் ‘ஸ்மார்ட் கார்டை’ பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், புலம்பெயர்ந்து வசிப்பவர்களின் வசதிக்காக ‘என் ரேஷன்’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை அடையாளம் காணவும் தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இந்த செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கி உள்ளது. முதல்கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, படிப்படியாக 14 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோக துறை செய லாளர் சுதான்ஷு பாண்டே கூறும்போது, “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதல்கட்டமாக 4 மாநிலங்களில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டது. மீதமுள்ள அசாம், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 69 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர், என்றார்.

20. ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணி சாம்பியன்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ டி கே மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று (13.03.2021) இரவு நடைபெற்றது.

கொல்கத்தா அணியின் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் மும்பை அணியின் கோலை தடுக்க முயன்ற கொல்கத்தா வீரர் டிரி சேம் சைடு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை அடித்த பிபின் சிங் கோலாக மாற்றினார். இறுதியில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை அணி இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்த முதல் முயற்சியிலேயே அந்த அணி கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. மும்பை அணி கோப்பை வெல்வது இதுவே முதல் முறை.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு ரூ.4 கோடி பரிசாக அளிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை கோவா அணி வீரர் இகோர்அன்குலோ (14 கோல்கள்) பெற்றார். சிறந்த கோல் கீப்பருக்கான தங்க குளோவ்ஸ் விருது ஏ.டி.கே. மோகன் பகான் அணியின் கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்ஜாவுக்கு வழங்கப்பட்டது.

21. மாநில அரசின் அதிகாரிகளாக இருக்கக்கூடியவர்களை மாநில தேர்தல் ஆணையர்களாக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மாநில அரசின் அதிகாரிகளாக இருக்கக்கூடியவர்களை மாநில தேர்தல் ஆணையர்களாக நியமிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநில தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளனர்.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையரின் பொறுப்பை மத்திய, மாநிலங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பது என்பது இந்திய அரசியலமைப்பையே கேலி செய்வது போன்றதாகும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.கோவா மாநிலத்தின் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையரின் கூடுதல் பொறுப்பை அம்மாநில அரசு வழங்கியது. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கோவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு அரசு ஊழியர் அல்லது அதன் அதிகாரத்துவம் கொண்ட நபரை மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க முடியாது. அதனால் கோவா மாநிலத்தின் தேர்தல் ஆணையராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கோவா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தையும் பதிசெய்துக் கொண்ட நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், பி.ஆர்.கவாய் மற்றும் ஹச்.ராய் ஆகியோர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,’ மத்திய மாநில அரசாங்க அதிகாரிகளை மாநிலத்தின் தேர்தல் ஆணையராக நியமிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். இது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரான ஒன்றாகும். இதில் தேர்தல் ஆணையர்கள் என்பவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அந்த விவகாரத்தில் கண்டிப்பாக எந்தவித சமரசமும் கிடையாது. மேலும் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்பதால் அதில் அரசுகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இதுதொடர்பாக கோவா மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

22. ரயில்களில் சரக்குகள் போக்குவரத்து கடந்த நிதியாண்டு அளவை விஞ்சி சாதனைபடைத்திருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரயில்களில் கூடுதல் சரக்குகள் கையாளப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனையாக பாா்க்கப்படுகிறது.

சரக்கு ரயில்களில் கடந்த நிதியாண்டில் 1145.61 மெட்ரிக் டன் அளவில் சரக்குகள் ஏற்றப்பட்ட நிலையில், மாா்ச் 12-ஆம் தேதி வரையிலான 2020-21 நிதியாண்டில் 1145.68 மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்திருப்பதோடு, பொருளாதார வளா்ச்சியில் ரயில்வே தொடா்ந்து பங்களிப்பு செய்துவருகிறது என்பதை இது நிரூபித்திருக்கிறது. மண்டல அளவில் ரயில்வே ஊழியா்கள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளே இந்த சாதனைக்கு முக்கியக் காரணம்.

மாத அடிப்படையில் கணக்கிடும்போது மாா்ச் 11-ஆம் தேதி வரையிலான நிகழ் நிதியாண்டில் 4.34 கோடி டன் சரக்குகள் ரயில்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் கூடுதலாகும். கடந்த நிதியாண்டில் 3.93 கோடி டன் சரக்குகள் ரயில்களில் ஏற்றப்பட்டன.

அதுபோல, 2021 மாரச் மாதத்தில் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 45.49 கி.மீ. என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதல் வேகமாகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் சரக்கு ரயில் சராசரி வேகம் மணிக்கு 23.29 கிலோ மீட்டாராக இருந்தது.

கட்டண சலுகை, தள்ளுபடிகள் அளித்தது, தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியாா் சரக்கு போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் ரயில்வே மண்டல அதிகாரிகள் தொடா்ச்சியான ஆலோசனைகளை மேற்கொண்டது, சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளே சரக்குகளை கையாளும் அளவு அதிகரிப்பதற்கு காரணம்.

கரோனா பாதிப்பை இந்த வகையில் ஒரு வாய்ப்பாக இந்தியன் ரயில்வே பயன்படுத்திக்கொண்டது என்று அவா் கூறினாா்.

23. ஹெச் -1பி விசா: அமெரிக்க புதிய அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தின்போது வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) விண்ணப்பங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தற்போதைய பைடன் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த வகை விசாக்களை பெருமளவில் பயன்படுத்தும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணா்கள் அதிக பலன் பெறுவா் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹெச்-1பி தொடா்பான 3 குறிப்பாணைகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தக் குறிப்பாணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைப் பின்பற்றி பல விசா விண்ணப்பங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை மீண்டும் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். தங்களது விண்ணப்பங்கள் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை யுஎஸ்சிஐஎஸ் ஆய்வு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கும்.

விண்ணப்பதாரா்கள் அவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது, அவா்களது விண்ணப்பங்கள் காலாவதியாகவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அந்த விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை யுஎஸ்சிஐஎஸ் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24. நியூஸிலாந்து மசூதித் தாக்குதலின் 2-ஆவது ஆண்டு தினம்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 2-ஆவது ஆண்டு தினம் அந்த நாட்டில் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

அந்த நகர அரங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவா்கள் கலந்துகொண்டனா்.

நியூஸிலாந்தின் பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் பேசியதாவது:

நியூஸிலாந்தின் கிறைஸ்ட் நகரிலுள்ள இரு மசூதிகளில், கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், அங்கு தொழுகைக்காக வந்திருந்த 51 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த வெள்ளை இனவாதி பிரென்டன் டாரன்ட் (29) இந்தத் தாக்குதலை நடத்தினாா். நியூஸிலாந்தில் மிகப் பெரிய அதிா்ச்சி அலையை அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது.தாக்குதலில் ஈடுபட்ட டாரன்டுக்கு நியூஸிலாந்தின் அதிகபட்ச தண்டனையான ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தாக்குதலின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த ஆண்டில் கரோனா நெருக்கடி காரணமாக ரத்து செய்யப்பட்டது.

25. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு 2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

26. இந்தியாவில் மேலும் 6 தடுப்பூசிகள்; மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தகவல்

மேலும் 6 தடுப்பூசிகள்:

இந்தியா 2 தடுப்பூசிகளை (இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு) உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிகள் 71 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் பல நாடுகள் இந்தியாவிடம் தடுப்பூசிகளை நாடுகின்றன. இந்த நாடுகள் எல்லாம் சற்றே அறிந்த சிறிய நாடுகள் அல்ல. கனடா, பிரேசில் மற்றும் பல வளர்ந்த நாடுகள் இந்திய தடுப்பூசிகளைத்தான் வைராக்கியத்துடன் பயன்படுத்துகின்றன.இன்னும் 6-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வர இருக்கின்றன.பிரதமர் மோடி ஒரு புதிய இந்தியாவை உருவாக்கி, அதை உலக தலைவராக மாற்ற விரும்புகிறார்.

27. அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம் வழங்கப்படுகிறது‌.

28. ‘அலிபாபா’வுக்கு அபராதம் கடுமை காட்டும் சீன அரசு

சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனத்துக்கு, அந்நாட்டிலிருக்கும் ஒழுங்குமுறை அமைப்பு, மிக அதிகளவிலான அபராதம் விதிக்க கூடும் என, அமெரிக்காவின், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை தெரிவித்துஉள்ளது.

சீனாவின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான, ஜேக் மாவுக்கு சொந்தமான நிறுவனம், அலிபாபா. இந்நிறுவனத்துக்கு தான் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்திருப்பதாக கூறி, நிறுவன நம்பிக்கைகள் குறித்த கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும், அலிபாபாவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன், இதே போன்ற காரணத்துக்காக, ‘குவால்காம்’ நிறுவனத்துக்கு, 7,080 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அலிபாபாவுக்கு இதை விட அதிகளவிலான அபராதம் விதிக்கப்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.அண்மைக் காலமாக அலிபாபா நிறுவனர் ஜேக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஜேக் மாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.கடந்த டிசம்பர் மாதத்தில், அலிபாபா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளது, அலிபாபா நிறுவனம்.

29. தடுப்பூசி தயாரிக்க அமெரிக்க நிறுவனம் நிதி

இந்தியாவைச் சேர்ந்த, ‘பயோலாஜிக்கல் – இ’ நிறுவனம், 100 கோடி, ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு, தேவையான நிதி உதவியை அளிப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற, ‘குவாட்’ மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று நடந்தது. இதில் பேசிய, பிரதமர் மோடி, ‘அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய உறுப்பு நாடுகளின் துணையுடன், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு அதிகரிக்கப்படும்; இது, இந்திய – பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

இதையடுத்து, நேற்று, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், இந்தியாவின், ‘பயோலாஜிக்கல் – இ’ நிறுவனம் தயாரிக்க உள்ள கொரோனா உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி டேவிட் மார்க் கூறியதாவது:இந்தியாவில் தடுப்பூசி மருந்துகள், குறிப்பாக கொரோனா தடுப்பூசி மருந்துகளின் தயாரிப்பை அதிகரிக்கும் வகையில், எங்கள் நிறுவனம் நிதியுதவி செய்ய உள்ளது. இது, தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்பதுடன், உலகில் உள்ள அனைத்து சமூக மக்களும் பயன் பெறவும் துணைபுரியும். இந்த வகையில், பயோலாஜிக்கல் – இ நிறுவனத்தின், 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு, நிதியுதவி செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

30. குவாட் நாடுகள் கூட்டம்: அமெரிக்க பிரதிநிதி உரையின் முக்கிய அம்சங்கள்

அமெரிக்காவில் குவாட் நாடுகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனாவை சாராமல் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் மேம்படுவதற்கான உருவாக்கப்பட்டது குவாட் நாடுகள் கூட்டணி. இந்த கூட்டத்தில் சீனாவால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதவிர மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறை, வடகொரிய அணுஆயுத சோதனை, தெற்கு மற்றும் கிழக்கு சீன கடலில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட முக்கிய உலக நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த குவாட் நாடுகள் கூட்டத்தில் இன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், லடாக் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கில் ஈடுபடுவது குறித்துப் பேசினார். இதற்கு குவாட் நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்துக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் தயாரிப்பு, அமெரிக்காவின் தொழில்நுட்பம், ஜப்பானின் நிதி, ஆஸ்திரேலியாவின் புள்ளியியல் ஆகியவை ஒன்றிணைந்து ஒரு பில்லியன் வைரஸ் தடுப்பு மருந்துகளை குவாட் நாடுகளுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது என்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தத் தடுப்பு மருந்து விநியோகம் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

16. வாக்காளர்களுக்கு உதவும் ‘மொபைல் ஆப்’

மேற்கு வங்கம், தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும், 60 ஆண்டுகளுக்கான பொருளாதார, அரசியல் தகவல்கள், ஓட்டுப்பதிவு புள்ளிவிபரங்கள் அடங்கிய, ‘போல்சுபோல்’ என்ற, ‘மொபைல் ஆப்’பினை, கோல்கட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ‘இது, வாக்காளர்களுக்கு பயனளிக்கும்’ என, அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

31. மஸ்க், பெசோஸை பின்னுக்கு தள்ளி 2021ல் அதிக பணம் ஈட்டுவதில் தொழிலதிபர் அதானி முதலிடம்: கூடுதலாக 1.17 லட்சம் கோடி சொத்து சேர்ந்தது

உலகளவில் இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்ததில் எலன் மஸ்க், பெசோஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூர்பெர்க் பொருளாதார இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், உலகின் நம்பர்-1 பணக்காரராக அமேசானின் ஜெப் பெசோஸ், அடுத்த இடத்தில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் உள்ளனர். இந்நிலையில், 2021ல் அதிக பணம் சம்பாதித்தவர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பெசோஸ், மஸ்க்கை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பவர் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி ஆவார். முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, மொத்த சொத்து மதிப்பு 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்தவராக ஆகியுள்ளார். இந்த கால கட்டத்தில் பெசோஸ் 55 ஆயிரம் கோடியும், மஸ்க் 74 ஆயிரம் கோடியும் சம்பாதித்துள்ளனர். ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கூட 58 ஆயிரம் கோடி தான் சம்பாதித்துள்ளார். இதன் மூலம், அதானி குழும பங்குகள் அனைத்து 50 சதவீத வளர்ச்சி கண்டன. குறிப்பாக, அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%, அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் – அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52 % அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்க தொழில்களில் வலுவாக காலூன்றி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டும் எப்படி? சந்தேகம் கிளப்பும் ராகுல்:

அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது குறித்த செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘2020ம் ஆண்டில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்தது? பூஜ்ஜியம். நீங்கள் வாழவே சிரமப்பட்ட நிலையில், அதானி ₹12 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அது, எப்படி என்று எனக்கு சொல்ல முடியுமா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

32. இணையவழி புகை மாசு கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? – ஏப்.9-ம் தேதிக்குள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இணையவழி புகை மாசு கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க தேசியபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தர்மேஷ் ஷா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், “ஒவ்வொரு மாநில மாசுகட்டுப்பாடு வாரியமும் தங்கள்மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை மாசுவை இணையவழியில் உடனுக்குடன் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அதன்மூலம் இணையவழியில் கிடைக்கும் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஓசிஇஎம்எஸ் (Online Continuous Emission Monitoring Sensors) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

ஓசிஇஎம்எஸ் என்பது இணையம் வாயிலாக அந்தந்த மாநிலங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் வெளியேறும் புகை மாசுவின் அளவை, புகை போக்கியில் பொருத்தப்படும் கருவி அளவிட்டு, உடனடியாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் தன்னிச்சையாக பதிவு செய்துவிடும். அதை பொதுமக்கள் எளிதில் பார்க்கலாம். இதன்மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தவிர பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை 24 மணி நேரமும் கண்காணித்து, தங்களின் அடிப்படைஉரிமையான சுத்தமான காற்றைசுவாசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த தீர்ப்பை, தென் மாநிலங்களில் முறையாக அமல்படுத்தவில்லை. சில மாநிலங்களில் ஓசிஇஎம்எஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அதன் தரவுகளை பொதுமக்களால் பார்க்க முடியாத வகையில், கடவுச்சொல்லை பதிவிட்டு உள்செல்லும் வகையில் உள்ளது. சில மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளங்களில் முந்தைய கால, நிகழ்கால தரவுகள்எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே தென் மாநிலங்களில் ஓடிஇஎம்எஸ் திட்டத்தை செயல்படுத்தி, அதை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

33. உலகின் சிறந்த மருத்துவமனைகளில் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை தேர்வு

உலகின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய தர ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா நிறுவனம், நியூஸ் வீக் இதழ் இணைந்து 2021-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனைகளின் நிலையான சிறப்பு செயல்பாடு, சிறந்த மருத்துவர்கள், செவிலியர் பணிவிடை, அதிநவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகின் சிறந்த மருத்துவமனைகளாக இந்தியாவில் இருந்து 11 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக சென்னையில் செயல்பட்டு வரும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

34. டோக்கியோ ஒலிம்பிக் பவானிதேவி தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி தகுதி பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானிதேவி, அண்மையில் ஹங்கேரியில் நடைபெற்ற உலககோப்பை வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்று கால் இறுதியில் தோல்வி கண்டார். இருந்தபோதும் சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின்படி (ஏஓஆர்) அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

35. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மகுடத்துக்காக உத்தரபிரதேசம்-மும்பை அணிகள் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மாதவ் கவுஷிக் 158 ரன்கள் (156 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 313 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட மும்பை பேட்ஸ்மேன்கள், உத்தரபிரதேச பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 73 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அட்டகாசமான தொடக்கம் தந்தார். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்து கோப்பையை வசப்படுத்தியது. ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை எட்டிய ஆதித்ய தாரே 118 ரன்களுடன் (107 பந்து, 18 பவுண்டரி) களத்தில் இருந்தார். மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2003-04, 2006-07, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது.

மும்பை பொறுப்பு கேப்டன் 21 வயதான பிரித்வி ஷா இந்த தொடரில் 8 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 827 ரன்கள் திரட்டியுள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். ‘இந்த தொடரில் எங்களது அணியில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். தனிப்பட்ட நபரின் சாதனையால் மட்டும் வெற்றி கிட்டவில்லை. அணியின் உதவியாளர்கள், வீரர்கள் அனைவருக்கும் இந்த கோப்பை உரித்தானது, என்று பிரித்வி ஷா கூறினார்.

36. ரயில் டிக்கெட் தடையின்றி வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.

தெற்கு ரயில்வே, பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பயணச்சீட்டு வழங்குவதற்காக, பயணச்சீட்டு சாதனை மேலாண்மை என்ற புதிய தொழில்நுட்பத்தை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம், கணினி முன்பதிவு பயணச்சீட்டு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கும்போது, கணினி நெட்வொர்க்கில் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக ஆன்லைன் மூலமாக சரிசெய்ய முடியும். இதன் மூலம், பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயணச்சீட்டு வழங்க முடியும்.

இதற்கு முன்பு இதுபோன்ற ஏதாவது தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டால், அது குறித்து கைகளால் பதிவு செய்து பின்னர் தொடர்புடைய அலுவலகத்துக்கு தெரிவித்து பிரச்சினையை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்தத் தொழில்நுட்பம் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.

இதற்கான சாஃப்ட்வேர் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டதால், ரயில்வே நிர்வாகத்துக்கு செலவு ஏதும் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

37. பார்சல் மேலாண்மை அமைப்பு விரிவுபடுத்த தெற்கு ரயில்வேயில் 58 ரயில் நிலையங்கள் தேர்வு

ரயில்களில் பாா்சல் கையாளுவதை எளிமைப்படுத்தும் வகையில், ரயில்வேயில் பாா்சல் மேலாண்மை அமைப்பு விரிவுப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, தெற்குரயில்வேயில் 58 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. 21 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் கனிணிமயமாக்கப்பட்ட பாா்சல் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தும் பணிகள் நிறைவடையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாா்சல் ரயில் சேவை: இந்தியன் ரயில்வேயில் பாா்சல் ரயில் சேவை முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த சேவையை சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமாக, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா பொதுமுடக்கம் காலத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்ல பாா்சல் ரயில் சேவை பேருதவியாக இருந்தது. இந்தியன் ரயில்வேயில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக,

‘கனிணிமயமாக்கப்பட்ட பாா்சல் மேலாண்மை அமைப்பு’ முதற்கட்டமாக 84 இடங்களில் தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, கூடுதலாக 143 இடங்களிலும், 3-ஆவது கட்டமாக கூடுதலாக 523 இடங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை எம்.ஜி.ஆா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாா்சல் மேலாண்மை அமைப்பு செயல்படுகிறது.

58 ரயில் நிலையங்கள் தோ்வு:

இந்நிலையில், தெற்குரயில்வேயில் பாா்சல் மேலாண்மை அமைப்பை விரிவுபடுத்தும் வகையில், 58 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. 21 ரயில் நிலையங்களில் நடப்பு ஆண்டு இறுதிக்குள் கணினி மயமாக்கப்பட்ட பாா்சல் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தும் பணிகள் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள்தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: இந்த பாா்சல் மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் (www.parcel.indianrail.gov.in) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், பாா்சல்களை அனுப்ப 120 நாள்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பாா்சல் அனுப்புவதற்கான ரயில் போக்குவரத்து வசதிகளை அறிந்து கொள்ளலாம். பதிவு பெற்ற வாடிக்கையாளா்கள் இணையதளம் மூலமாகவே பாா்சல் பதிவு செய்ய விண்ணப்பம் பெறலாம்.இதன்மூலம், உத்தேச பாா்சல் கட்டணம் அறிந்துகொள்ளாம். இதுதவிர பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

21 ரயில் நிலையங்கள்:

தெற்கு ரயில்வேயில் கோயம்புத்தூா், சென்னை எழும்பூா், மதுரை, திருப்பூா், ஈரோடு, நாகா்கோவில், சேலம், காட்பாடி, திருநெல்வேலி, ராஜபாளையம், திண்டுக்கல், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, திருவனந்தபுரம், எா்ணாகுளம், கோட்டயம், திருச்சூா், ஆலுவா, ஆலப்புழா, மங்களூா் சென்ட்ரல் ஆகிய 21 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள்

கணினி மயமாக்கப்பட்ட பாா்சல் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடிவடையும். இதன்மூலம், ரயில்களில் பாா்சல்கள் கையாளுவது எளிமையாக்கப்படும் என்றனா்.

38. இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தூதர் சுற்றுப்பயணம்

இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே அந்த நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மூத்த தமிழ் தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்திய தூதர் கோபால் பாக்லே மூன்று நாள் சுற்றுப் பயணமாக மார்ச் 11 முதல் 13 – ஆம் தேதி வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்தமாகாணங்களில் உள்ள மூத்ததமிழ்தேசிய தலைவர்களை சந்தித்து அவர் உரையாடினார்.

ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலமாக சிறுபான்மையாக உள்ள தமிழ் சமூகம் தங்களது நியாயமான விருப்பங்களை அடையமுடியும் என்பதை இந்திய தூதர் வலியுறுத்தி கூறினார். இது, இலங்கையை வலுப்படுத்த உதவுவதுடன், முன்னேற்றம், அமைதி ஆகியவற்றிலும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார். வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கும், அங்குள்ள மக்களின் தேவைக்கும் முன்னுரிமை தந்து இந்தியா தனது நீண்ட கால ஒத்து ழைப்பை வழங்கிவருகிறது. மேலும், அங்குள்ள தமிழ் தலைவர்கள் மாகாணங்களின் உள்கட்டமைப்பு மேமபாடு, அதிகமான பொருளாதார முதலீடு உள்ளிட்ட கூடுதல் திட்டங்களை முன்னேற்றத்துக்கான மானிய உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து எதிர்பார்ப்பதாக தூதரிடம் அவர்கள் வலியுறுத்தினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 46 – ஆவது கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அங்கு, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் இந்திய தூதரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

39. சிந்து நதி பகிர்வு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சு

சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும், மார்ச்சு 23, 24ல் நடக்க உள்ளது. இந்த சந்திப்பின் போது, செனாப் நதியில் இந்திய நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு குறித்த பாகிஸ்தானின் கவலைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பி.கே.சக்சேனா ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) தெரிவித்தார்.

பாகிஸ்தான் – இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1960ல் சிந்து நதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, மேற்கு பகுதியில் உள்ள சட்லஜ், பியாஸ், ரவி நதிகளில் பாயும் நீரை, இந்தியா முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா, மேற்கு பகுதியில் பாயும் நதிகளில், சில கட்டுப்பாடுகளுடன், நீர் மின் நிலையங்களை அமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

லடாக்கில் தர்புக் ஷியோக், ஷாங்கு, நிமுஷில் லிங், ராங்டோ ஆகிய நீர்மின் திட்டங்களுக்கும், லே பகுதிக்காக ரத்தன் நாக் நீர்மின் திட்டத்துக்கும், கார்கிலுக்காக மங்டும் சங்ரா, கார்கில் ஹண்டர் மேன், தமாஷா ஆகிய நீர்மின் திட்டங்களுக்கும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தநிலையில், சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, இரு நாட்டிலும், சிந்து நதி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரு தரப்பும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தும். இந்த சந்திப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லியில் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 23 – 24ல், டெல்லியில் இந்த கூட்டம் மீண்டும் நடக்க உள்ளது. இந்தியாவின் சிந்து நதி கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சிந்து நதி கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்க உள்ளனர்.

40. ஏழாவது சா்வதேச யோகா தினத்தையொட்டி 100 நாள் கவுன்டவுனை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (13.03.3021) தொடங்கி வைத்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘யோகக் கலையின் வளா்ச்சிக்கு அபரிமிதமான பங்களிப்பு செய்தவா்களிடம் இருந்து நிகழாண்டு ஏப்ரல் மாதம் பிரதமரின் யோகா விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 7-ஆவது சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான 100 நாள் கவுண்டவுன் தொடங்கி வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

41. நாட்டில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் மீதமுள்ள அரசு பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு அரசு சொத்துகளில் இருந்து நிதி திரட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயத்துள்ளதின் ஒரு பகுதியாக கூடுதல் ஆதாரங்களாக இவைக் கண்டறியப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் தனது பங்குகளை இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. கடந்த மாதம் இத்துறையின் அரசு செயலர்களுக்கான அதிகாரக் குழு நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற இரு அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் மீதள்ள இந்திய விமான ஒழுங்காற்று ஆணையத்தின் பங்குகளை விற்பதற்கான முன்மொழிவுகள் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்து விரைவில் அனுப்பி வைக்கப்படும். அடுத்த சில நாள்களில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கும் இது அனுப்பி வைக்கப்படலாம்.

தனியார் மயமாக்கலுக்காக 13 விமான நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி தொகுப்புகளைப் பெற லாபத்தில் இயங்கும் விமான நிலையங்கள், லாபமற்ற விமான நிலையங்களை இணைப்பதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் முதல் கட்ட செயலாக்கத்தில் லக்னெள, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களின் ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றது.

உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விமானநிலைய ஒழுங்காற்று ஆணையம் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைப் பராமரித்து வருகிறது.

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிறது. தில்லி பன்னாட்டு விமான நிலையத்தின் 54 சதவீத பங்குகளை ஜிஎம்ஆர் குழுமம் வைத்திருக்கும் நிலையில் ஏஏஐ 26 சதவீத பங்குகளையும், பிராபோர்ட் ஏஜி, இராமன் மலேசியா ஆகியவை தலா 10 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. ஹைதராபாத் விமான நிலையத்தின் 26 சதவீத பங்குகளை ஆந்திர அரசுடனும், பெங்களூரு விமான நிலையத்தின் 26 சதவீத பங்குகளை கர்நாடக அரசுடன் ஏஏஐ வைத்திருக்கிறது. அண்மையில் நடைபெற்ற 2021-22 பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “புதிய உள்கட்டமைப்புக் கட்டுமானங்களை செய்ய பொது உள்கட்டமைப்பு சொத்துகளில் இருந்து நிதி திரட்டுதல் முக்கிய வழிவகையாகும்’ எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடியும் தனது உரையில், “ஆயில், கேஸ் பைப்லைன் போன்ற 100 அரசு சொத்துகளில் இருந்து ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெறும் வகையில் நிதி திரட்ட அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

42. உடான் திட்டத்தின் கீழ் 390 விமான வழித்தடங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான ஏல விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உடான் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டம் தொடங்கப்பட்டு நடப்பாண்டுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், உடான் திட்டத்தின்கீழ் 325 வழித்தடங்கள் மற்றும் 56 விமான நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதில், ஐந்து ஹெலிகாப்டா் இறங்கு தளம் மற்றும் இரண்டு கடல்விமான தளங்களும் அடக்கம்.

இந்த நிலையில், உடான் 4.1 திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் உள்ள மேலும் பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்திடும் வகையில் 392 விமான வழித்தட சேவைகளுக்கான ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய இந்த ஏல நடைமுறை இன்னும் ஆறு வாரங்களில் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

43. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி அஹமதாபாத்தில் நேற்று (14.03.2021) நடைபெற்றது.

86 டி20 போட்டிகளில் விளாடியுள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 1000, 2000 ரன்களை முதல் வீரராக நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் கடந்திருந்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் 99 போட்டிகளில் 2839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஐபிஎல் டி20 போட்டிகளிலும் விராட் கோலியே ரன் குவிப்பில் முன்னிலையில் உள்ளார். 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5878 ரன்களை குவித்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் பேட்டிங் சராசரியில் 50 ரன்களை கடந்தார் விராட் கோலி.

44. துபாய் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

துபாயில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய முகுருஜா, 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார்.

இரண்டு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் முகுருஜா 7–6, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இவர், 2 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். கடைசியாக 2019ல் மெக்சிகோவில் நடந்த மான்டேரி ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா வாழ்க்கையில் இது 8 ஆவது ஒற்றையர் பட்டம். அதில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடக்கம்.

14. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ் விலி 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் ராபர்டோ பௌதிஸ்டா அகுட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது அவரது 4 ஆவது ஏடிபி பட்டமாகும்.

45. 24 – ஆவது ஃபெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் திங்கள்கிழமை (மார்ச் 15) தொடங்குகிறது.

46. சிறு மாற்றத்தால் வௌவாலிடமிருந்து மனிதா்களைத் தொற்றிய கரோனா.

வௌவாலின் உடலில் இருந்து வந்த கரோனா தீநுண்மி, மனிதா்களைத் தொற்றுவதற்கேற்ப தன்னை மிகச் சிறிய அளவிலேயே உருமாற்றிக் கொண்டதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘பிஎல்ஓஎஸ் பயாலஜி’ அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா திநூண்மியின் உருமாற்றங்கள் குறித்த ஆய்வை ஸ்காட்லாந்தைச் சேந்த கிளாஸ்கோ பல்கலைக்கழ தீநுண்மி ஆய்வாளா் ஆஸ்கா் மேக்லீன் தலைமையிலான குழு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், வௌவாலின் உடலில் இருந்து வந்த கரோனா தீநுண்மி, தன்னை பெரிய அளவில் உருமாற்றம் செய்துகொள்ளாமலேயே மனிதா்களின் உடலில் தொற்றிப் பெருகுவதற்கான திறனைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.

பொதுவாக, ஓா் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்தின் உடலில் உயிா்வாழ்ந்து, பெருக்கம் செய்துகொள்ளும் அளவுக்கு தீநுண்மிகள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்.

ஆனால் கரோனா தீநுண்மியை இந்த மாற்றத்தை மிக விரைவில் அடைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்தது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) நிலவரப்படி, உலகில் 12,01,63,118 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 26,61,508 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளா்; 9,66,88,071 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,08,13,539 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 89,491 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

47. தென் கொரியாவின் ஜெஜு தீவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஜெஜு தீ திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவின் போது ஜெஜுவில் உள்ள ஒரு மலையில் ‘கொரோனா ஒழிந்தது’ என்ற வாக்கியத்தை காட்டும் வகையில் தீ எரிந்தது.

48. சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் செக் குடியரசு நாடு இஸ்ரேல் நாட்டுக்கான தனது தூதரகத்தை திறந்ததற்கு அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

49. ஆஸ்திரேலியா எம். எல். ஏ., வாக நீலகிரி டாக்டர் தேர்வு. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தலில், கோத்தகிரியைச் சேர்ந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர், சட்டசபை உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார்.

கன்னேரிமுக்கு கிராமத்தைச் சேர்ந்த நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கிருஷ்ணா கவுடரின் மகன் ஜெகதீஷ் கிருஷ்ணன், 47. இவர், ஆஸ்திரேலியா நாட்டில், ரிவர்டன் பகுதியில், டாக்டராக பணிபுரிகிறார். இம்மாதம், 2ம் தேதி முதல் சில நாட்கள் நடந்த சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. அதில், ரிவர்டன் தொகுதி யில், தொழிலாளர் கட்சி சார்பில், போட்டியிட்ட ஜெகதீஷ் கிருஷ்ணன், வெற்றி பெற்றுள்ளார். வெளிநாடுகளில், படுகர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது இதுவே, முதல்முறை. டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் கூறுகையில், “இது, நம் நாட்டுக்கும்; நீலகிரி மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும். நம் நாட்டின் பிரதமர் மோடி, எனக்கு வாழ்த்து தெரிவித்தார். என் மருத்துவ பணி தொடரும். ஆஸ்திரேலியா மக்களுக்கு தொடந்து சேவை செய்வேன், என்றார்.

50. ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா தமிழக மக்களுக்கு அழைப்பு

“ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன; பல்வேறு சலுகைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை கழிக்க, தமிழக மக்கள், இங்கு வருகை தர வேண்டும்’ என, ஜம்மு, காஷ்மீர் சுற்றுலாத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், முதலிடம் வகிப்பது ஜம்மு – காஷ்மீர். யூனியன் பிரதேசங்களாக மாறியுள்ள இவற்றிற்கு சுற்றுலா மூலமாகவே வருமானம் கிடைத்து வந்தது. கொரோனா காரணமாக, அங்கு வர்த்தகம், வருமானம் முடங்கியது. இதனால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சீரமைக்கும் வகையில், சுற்றுலாத் துறையை புத்துயிர் பெற செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில், சுற்றுலா பயணியரை கவரும் வகையில், ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத்துறை, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில், ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத்துறை, “டிராவல் ஏஜன்சி சொசைட்டி” உடன் இனணைந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்ற, ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத்துறை கூடுதல் செயலர் வாசம்ராஜா கூறியதாவது: ‘சென்னைவாசிகளை, ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவுக்கு வரவழைக்கும் நோக்கத்தில், இரண்டு நாட்கள் மாரத்தான், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போது, ஜம்மு – காஷ்மீர் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசும், சுற்றுலா பயணியருக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சிறப்பு பேக்கேஜ்களும் உள்ளன. கடந்த, ஜனவரியில், 7.5 லட்சம் சுற்றுலா பயணியர், வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணியருக்கு விளக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில், 20 ரோட் ஷோ’ நடத்தப்பட்டுள்ளன. ஜம்மு, காஷ்மீரில் சுற்றுலா பயணியருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கோடை விடுமுறையை கொண்டாட தமிழக மக்கள் அங்கு வருகை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

51. ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்கள்: இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மேலும் ஒரு சாதனை.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்து, உலகளவில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி, லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 266 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7000 ரன்களை குவித்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.

மிதாலி ராஜ் தற்போது 216-வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 3-வது ஒருநாள் போட்டியின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், உலகளவில் முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் மிதாலி ராஜ் பெற்றார். கடந்த 1999-ம் ஆண்டு, கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ், ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றிருந்தார். இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5,992 ரன்கள் சேர்த்த நிலையில் ஓய்வு பெற்றார். தற்போது, அவரின் சாதனையை மிதாலி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

52. ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி சர்வதேச நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

53. தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு – தடுப்பூசிக்கான குளிர்சாதனப் பெட்டிகள்: இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது

கரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. கரோனா தடுப்பூசியை வைப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி (ஃப்ரீசர் பாக்ஸ்) தேவைப்படுகிறது. இதற்காக, தமிழகம், பிஹார், மணிப்பூர், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

54. பாதுகாப்பு, சேமிப்பு வழங்கும் ‘பச்சாத் பிளஸ்’ புதிய பாலிசி: எல்ஐசி நிறுவனம் அறிமுகம்

பாதுகாப்பு, சேமிப்பு என்ற இரண்டையும் வழங்கக்கூடிய ‘பச்சாத்பிளஸ்’ என்ற புதிய பாலிசியை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குச்சந்தை சாராத, லாபத்தில் பங்கு பெறும், தனி நபர் சேமிப்புத் திட்டமான ‘பச்சாத் பிளஸ்’ என்ற பாலிசியை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. இது பாதுகாப்பு, சேமிப்பு என்ற 2 அம்சங்களையும் வழங்குகிறது.

பாலிசி முதிர்வு அடையும்போது, காப்பீட்டுத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களிடம் வழங்கப்படும். பாலிசி முதிர்வு அடையும் தேதிக்கு முன்பாக, பாலிசிதாரர் மறைந்தால், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும்.

‘பச்சாத் பிளஸ்’ பாலிசிக்கான குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். இதில் உச்சவரம்பு எதுவும் இல்லை. பாலிசிதாரர்கள் தங்களது தேவை மற்றும் வசதிக்கேற்ப அதிகபட்சமாக எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யலாம்.

பிரீமியத் தொகையை ஒரே தவணையிலோ, 5 ஆண்டுகள் வரையிலோ செலுத்தும் வசதி உள்ளது. இந்த பாலிசி திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.

சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதியான, எளிமையான நடைமுறைகள் ‘பச்சாத் பிளஸ்’ பாலிசி திட்டத்தில் உள்ளன.

எல்ஐசி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.licindia.com) ஆன்லைன் மூலமாகவோ, முகவர்கள் அல்லது முகமை நிறுவனங்கள் வாயிலாக நேரடியாகவோ இந்த பாலிசியை பெறலாம். ‘பச்சாத் பிளஸ்’ பாலிசி பற்றிய கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளம் அல்லது முகவர்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது

55. மார்ச் 5: 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. சிறுதானியங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த அறிவிப்பு பயன்படும்.

மார்ச் 5: மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 6: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சாம்பியன்கள், சீனியர் கமிட்டியின் தலைவராக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 8: உலக மல்யுத்த வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடம் பிடித்தார்.

மார்ச் 10: உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தநிலையில், புதிய முதல்வர் தேர்வுசெய்யப்பட்டார்.

மார்ச் 10: மூன்றாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். கரஞ்ச் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

மார்ச் 11: ஆசியாவின் முதல் தேசிய ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம் பிஹார் தலைநகர் பாட்னா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.

56. குர்ஆனின் 26 வசனத்தை நீக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஷியா பிரிவு தலைவர் ரிஜ்வீ மனு

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் வசீம் ரிஜ்வீ, தொடக்கத்தில் இருந்தே அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவானக் கருத்துக்களை தெரிவித்து வந்தார். சன்னி பிரிவு முஸ்லிம்களின் மற்ற விவகாரங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துக்கள் கண்டனத்துக்கு உள்ளாகின.

டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடு காடாக மாற்ற வேண்டும். நாட்டின் மதரஸாக்களில் தீவிர வாதம் வளர்கிறது, என்று ரிஜ்வீ கூறியிருந்தார்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தில் ரிஜ்வீ தாக்கல் செய்த மனுவில், ‘‘முஸ்லிம்களின் புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும்’’ எனக் கோரி உள்ளார். இவை முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், புனிதக் குர்ஆனையும், இறைத் தூதர் முகம்மது நபியையும் ரிஜ்வீ அவமதித்து விட்டதாக ஷியா, சன்னி ஆகிய இரண்டு பிரிவினரும் புகார் கூறுகின்றனர்.

இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ரிஜ்வீயை கைது செய்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று உ.பி. முஸ்லிம்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக, நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற சன்னி பிரிவு முஸ்லிம்கள் மாநாட்டில் ரிஜ்வீயை ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்றும் பத்வா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷியா பிரிவின் முக்கியத் தலைவர் மவுலானா கல்பே ஜாவேத் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘தம்மை ஜிஹாதிகள் எனக் கூறிக் கொள்ளும் தலீபான் உள்ளிட்ட அமைப்புகள், தீவிரவாதத் தை வளர்ப்பவர்கள். இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜிஹாத் என்பது உயிர்களை கொல்வது அல்ல. மாறாக, வாழ்க்கையை பாதுகாப்பது. தம் மீதுள்ள சிபிஐ வழக்கை திசை திருப்பவே குர்ஆன் மீது வழக்கு தொடுத்து, நாட்டில் மதநல்லிணக்கத்தை குலைக்க ரிஜ்வி முயல்கிறார், என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்று கூறும் வசீம், தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பாஜக மற்றும் இந்துத்துவாவுக்கு ஆதரவாக பேசி வந்தார். உ.பி. மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்த வசீம் மீது, 2016, 2017-ம் ஆண்டுகளில் லக்னோ மற்றும் அலகாபாத்தில் வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பு மற்றும் லஞ்ச வழக்குகள் பதிவாகின. கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்விரண்டு வழக்குகளும் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

57. இனவெறித் தாக்குதலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி ராஷ்மி சமந்த் இனவெறி சர்ச்சையால் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் நகரைச் சேர்ந்தவர் 22 வயது ராஷ்மி.

மொத்தம் இருந்த 3,708 வாக்குகளில் 1,966 வாக்குகளைப் பெற்று தலைவராக தேர்வாகியிருந்தார். அவர் மீது சமூக வலைதளங்களில் இனவெறி ரீதியிலான சர்ச்சை வெடித்ததை அடுத்து அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாநிலங்களவையில் பேசும்போது, “இனவெறி விவகாரத்தில் மத்திய அரசு ஒருபோதும் கண்ணை மூடிக் கொண்டு இருக்காது. இனவெறி விவகாரம் எந்த வடிவில் வந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம். இனவெறித் தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதுதொடர்பாக பிரிட்டனுடன் நாங்கள் பேசுவோம்” என்றார்.

58. இடஒதுக்கீட்டுக்கு 50% வரம்பு நிர்ணயித்த 1992 தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா? – விசாரணையை தொடங்கியது உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16% இடஒதுக் கீடு வழங்கும் சட்டம் கடந்த 2018-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இடஒதுக்கீடு 68% ஆக அதிகரித்தது.

1992-ல் மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர் இந்திரா சஹானி தொடர்ந்த வழக்கில் ஓபிசி-க்கான 27% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இடஒதுக்கீடு 50% அளவை தாண்ட கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதி ராக உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 16% இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுத்தி வைத்தது.

இவ்வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் 50% இடஒதுக்கீடு வரம்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா என்பது தொடர்பான விசாரணையை நீதிபதிகள் நேற்று தொடங்கினர்.

இதில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார் வாதிடும்போது, “1992-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை. இத்தீர்ப்பு பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. தற்போது 50% இடஒதுக்கீடு வரம்பு பற்றி மட்டுமே கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே இத்தீர்ப்பை 9 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது. இதனை மறுஆய்வு செய்ய வேண்டுமானால் 11 நீதிபதிகளை கொண்ட அமர்வு அமைக்க வேண்டும். மேலும், 50 சதவீத இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று” என்றார்.

தமிழகம் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிடும்போது, “தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான தனி சூழ்நிலைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை தொடர் புடையது” என்றார்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இவ்வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என் இரு மாநில வழக்கறிஞர்களும் கோரினர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை.

இதையடுத்து இதுதொடர்பாக மாநில அரசுகள் தங்கள் கருத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

59. கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உறுதி: இந்தியா உள்ளிட்ட குவாட் அமைப்பு தலைவர்கள் தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக குவாட் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கின. கடைசியாக இந்த அமைப்பில் சேர்ந்தது ஆஸ்திரேலியாவாகும். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல், தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக, குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு அண்மை யில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர்ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் காணொலி வழியாக பங்கேற்றனர்.

அந்த உச்சி மாநாட்டின்போது, இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது என குவாட் தலைவர்கள் உறுதி பூண்டதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

குவாட் என்பது ஒரு பொதுவான தொலைநோக்குத் திட்டங்களை முன்னேற்றுவதற்கும் அமைதி மற்றும் நாடுகளின் செழிப்பை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒத்த எண்ணம் கொண்ட கூட்டமைப்பு ஆகும். இந்த இலக்குகளை நோக்கிச் செயல்படும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் நாடுவோம்.

அண்மைக் காலங்களில் உலகத்தையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து முன்னேறிய நாடுகளும் போராடி வருகின்றன. அந்த வகையில் குவாட் அமைப்பு நாடுகள்இணைந்து கரோனா வைரஸுக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

சிறந்த தடுப்பூசி: கரோனா வைரஸ் பிரச்சினையைத் தீர்க்க பாதுகாப்பான, எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான, சிறந்த தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க குவாட் அமைப்பு சார்பில் உறுதி பூணப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்க குவாட் அமைப்பு உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து பாடுபடும். இவ்வாறு குவாட் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.

60. உத்தரபிரதேச மாநிலம் மதுரா வட்டத்தில், யமுனை ஆற்றில் யமுனா தேவிக்கு நன்றி சொல்லும் விதமாக ‘சுன்ரி மனோரத்’ திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் நீண்ட புடைவைகளைக் கொண்டு படகுகளை இணைத்தபடி செல்வர்.

61. அன்னிய செலாவணி கையிருப்பில் 4-ம் இடத்தில் இந்தியா.

அன்னியச் செலாவணி கையிருப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 4-வதுஇடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. திடீரென டாலர் வெளியேற்றத்தை சமாளிப்பதற் காக அன்னியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி கணிசமாக அதிகரித்து வந்துள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடமும் உள்ள அன்னியச் செலாவணி ரொக்கக் கையிருப்பு ஒரே அளவில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ரஷ்ய கரன்சி ரூபிளின் மதிப்பு சரிந்ததால் அந்நாட்டின் அன்னியச் செலா வணி கையிருப்பு மதிப்பும் சரிந்தது.

மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி இந்தியா வசம் உள்ள அன்னியச் செலாவணி ரொக்கக் கையிருப்பு 58,300 கோடி டாலராகும். ரஷ்யாவிடம் உள்ள கையிருப்பு 58,010 கோடி டாலராகும்.

சீனாவிடம் அதிக அளவு கையிருப்பு உள்ளதால் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் ஜப்பானும், மூன்றாமிடத்தில் ஸ்விட்சர் லாந்தும் உள்ளன.

62. ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே பாலம்: வரலாற்று நிகழ்வு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து

ஜம்மு காஷ்மீரில் (ரியா மாவட்டத்தில்) செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதனை வரலாற்று நிகழ்வு என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1315 மீட்டர் நீளத்தில் 17 இடைவெளி பகுதிகளைக் கொண்ட ரயில்வே பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் மொத்த நீளத்தில் 476 மீட்டர் ஆற்றின் மீது கட்டப்பட்டுவருகிறது. பாலத்தின் அதிகபட்ச உயரம் கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது. பிரான்சில் உள்ள ஈஃபில் டவர் உயரம் 304 மீட்டர் ஆகும். இதன்மூலம் இந்த ரயில்வே பாலத்துக்கு உலகின் மிக உயரமான கட்டுமானம் என்ற பெருமை கிடைத்துள்ளது.

ரூ.1,250 கோடி மதிப்பிலான இந்தப் பாலம் 266 கிமீ வேகத்தைத் தாங்கக் கூடியது. மேலும் இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பாலத்தின் கட்டுமான வீடியோவை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “செனாப் ஆற்றின் மீது கட்டப்படும் ரயில்வே பாலத்தின் கீழ்பக்க வளைவு கட்டி முடிக்கப்பட்டுள்ளது, மேல்பக்க வளைவு விரைவில் கட்டிமுடிக்கப்படும். உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக உருவாகும் இப்பாலம் மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக இருக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாலம் 2021 டிசம்பரில் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க இந்த ரயில்வே பாலம் பயன்படும் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பாலத்தின் தலைமை பொறியாளர் ஆர்.ஆர்.மாலிக். இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கி வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

63. “சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.”

சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து இணைச் செயலா் சுரேந்தா் சிங் ஐசிஏஐ அமைப்புக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு (ஐசிஏஐ), இந்தியக் கம்பெனிச் செயலா்கள் கல்விக் கழகம் (ஐசிஎஸ்ஐ), இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் தாங்கள் வழங்கும் சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகளை முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாக கருத வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன. இது குறித்து யுஜிசி சாா்பில் நடைபெற்ற 550-ஆவது கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையாகக் கருதப்படும்.

64. தஞ்சை உள்பட 2 உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசியமயமாக்கும் மசோதா: மாநிலங்களவை ஒப்புதல்

தஞ்சை உள்பட இரண்டு உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை (15.03.2021) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்ததுதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹரியாணா மாநிலம் குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோா் பயிற்சி நிறுவனம் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களையும் தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் ‘தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் பயிற்சி மற்றும் மேலாண்மை மசோதா, 2019’ என்ற மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவையில் இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது: இந்த இரண்டு நிறுவனங்களும் தேசிய நிறுவனங்களாக ஆக்கப்படுவதன் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட அனைத்து கொள்கைகளும் இந்த நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மசோதா முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. அதன் மூலம், இப்போது இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து உறுப்பினா்களும் இதன் மீது ஆலோசனைகளை வழங்கியதோடு, இப்போது திருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனா்.

இந்த இரண்டு நிறுவனங்களும் முழு சுதந்திரத்துடன், ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களுக்கு இணையாக செயல்பட முடியும்.

இந்தியா பல வகையான தானியங்கள் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கியபோதும், அவற்றை பாதுகாப்பாக குளிரூட்டிகளில் சேமித்து வைத்தல், பதப்படுத்துதல் துறைகளில் தொடா்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. எனவே, இந்தத் துறையில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றவேண்டியது அவசியம். அதன் மூலம், தானியங்கள் உள்ளிட்ட விளை பொருள்கள் வீணாவதைக் குறைக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் முடியும் என்பதோடு, வேளாண் பொருள்கள் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க முடியும்.

மத்திய அரசின் ‘கிசான் சம்பதா யோஜனா’ திட்டத்தின் கீழ் 107 லட்சம் டன் உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, 444 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 147 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கின்றனா் என்று அவா் கூறினாா்.

65. நாட்டிலேயே கல்விக் கடன் அதிகம் பெற்ற மாநிலம் தமிழகம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி ப. சிதம்பரம் கேள்வி ஒன்று எழுப்பினார். அதில்,நாடு முழுவதும் கல்விக் கடன் பெற்ற மாணவா்கள், திருப்பிச் செலுத்த நடவடிக்கை தொடர்பான கேள்வி கேட்டார்.

இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதில், 2020, டிசம்பா் வரை நாடு முழுவதும் 24,84,397 மாணவர்கள் ரூ.89,883.57 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் ரூ.8,587.10 கோடி (9.55 சதவீதம்) திரும்பி வராத கடனாகவும், தவணை தவறிய கடனாகவும் (என்பிஏ) உள்ளது. ஆனால், இந்தக் கல்விக் கடனை அதிக அளவில் பெற்ற மாநிலங்களாக தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம்ஆகியவை உள்ளன.

தமிழகத்தில் 6,97,066 மாணவா்கள் ரூ.17,193.58 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் 1,68,410 மாணவா்கள் பெற்ற ரூ.3,490.75 கோடி (20.30 சதவீதம்) வாரக் கடனாக உள்ளது. நாட்டிலேயே கல்விக் கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு அடுத்து கல்வியில் அதிக அளவில் கடன் பெற்ற மாநிலமாக கேரளம் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,25,703 மாணவா்கள் ரூ.10,236.12 கோடி வரை கல்விக் கடன் பெற்றுள்ளனா். இதில் 54,519 மாணவா்களின் ரூ.1,396.23 கோடி (13.64 சதவீதம்) வாராக் கடனாக உள்ளது.

இதே மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் 18,311 மாணவா்களுக்கு ரூ.481.80 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,307 மாணவா்களின் ரூ.93.31 கோடி (19.37 சதவீதம்) வாராக் கடனாக உள்ளது. தேசிய அளவில் வாராக் கடனில் புதுச்சேரி 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கல்விக் கடன் குறைவாகப் பெற்ற மாநிலம் பிகாா் ஆகும். ஆனால், வராக் கடன் விகிதத்தில் (25.76%) நாட்டிலேயே பிகாா் முதல் மாநிலமாக உள்ளது. கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கல்விக் கடன் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாராக் கடன் விகிதம் குறைவாக உள்ளது. மேலும், வாராக் கல்விக் கடன் பட்டியலில் பொறியியல் மாணவா்கள் 12.13 சதவீதம், மருத்துவம் சாா்ந்த (நா்ஸிங்) மாணவா்கள் 14.15 சதவீதம் என உள்ளது. இது தவிர 2020, மாா்ச் நிலவரப்படி விவசாயம் (10.33 சதவீதம்), தொழில் துறை (13.60 சதவீதம்) ஆகியவற்றிலும் வாராக் கடன் அதிக அளவில் உள்ளது.

66. டெல்லி பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் ஆரிஸ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

டெல்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆரிஸ் கான் உள்ளிட்டோர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2008 செப்டம்பர் 13-ம்தேதி டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அடுத்த 6 நாட்களில் (19-ம் தேதி) பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகளும் காவல் ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆரிஸ்கான் (அப்போது தலைமறைவானவர்) இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி ஷாஜாத் அகமது, ஆடிப் அமீன் மற்றும் முகமது சஜித் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனிடையே, 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆரிஸ் கான் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்தீப் யாதவ் வழங்கிய தீர்ப்பில், “என்கவுன்ட்டரின் போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் ஆரிஸ்கான் உள்ளிட்டோர் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளன. எனவே, அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் பற்றிய விசாரணை வரும் 15-ம்தேதி நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

67. காப்பீட்டு சட்டத்திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் திங்கள்கிழமை (15.03,2021) தாக்கல் செய்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49%-இல் இருந்து 74%-ஆக அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

அதற்கேற்ப மாநிலங்களவையில் காப்பீட்டு சட்டத்திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

பொருளாதாரம் மற்றும் காப்பீட்டு துறையின் வளா்ச்சிக்காக நீண்ட கால உள்நாட்டு மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அதிகரிப்பதே மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையின் இலக்காக உள்ளது. அந்த இலக்கை அடையும் விதமாக காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் பங்கு 3.6%-ஆக உள்ளது. இது உலக ஜிடிபியின் சராசரியான 7.13%-ஐ விட குறைவு. பொதுக் காப்பீட்டின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. தற்போது நாட்டின் ஜிடிபியில் பொதுக் காப்பீட்டின் பங்கு 0.94%-ஆக உள்ளது. இது உலக ஜிடிபியின் சராசரியான 2.88%-ஐ விட மிகக் குறைவு. இதனைக் கருத்தில் கொண்டு காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது ஆயுள் காப்பீட்டு பிரிவின் வளா்ச்சிக்கு உதவும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

காப்பீட்டு துறையின் இடைநிலை சேவைகளில் ஏற்கெனவே 100% அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

மருந்தியல் கல்லூரிகளுக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து: தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா 2021-ஐ மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கெளடா திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். குஜராத் மாநிலம் ஆமதாபாத், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி, பிகாா் மாநிலம் ஹாஜிபூா், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள 6 மருந்தியல் கல்லூரிகளுக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்க அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

90 ஆண்டுகள் பழைமையான சட்டத்தை ரத்து செய்ய மசோதா: மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா கடற்பயணத்துக்கான கடல்சாா் உதவிகள் மசோதா 2021-ஐ மக்களவையில் தாக்கல் செய்தாா். கடந்த 1927-ஆம் ஆண்டு காலனிய ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட கலங்கரைவிளக்கச் சட்டத்தை ரத்து செய்ய இந்த மசோதா வழிவகுக்கிறது.

68. கேரளத்தில் முதுபெரும் கதகளி நடனக் கலைஞா் சேமஞ்சேரி குஞ்ஞிராமன் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு வயது 105.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி வட்டத்தில் உள்ள சேலியாவைச் சோ்ந்தவா் முதுபெரும் கதகளி நடனக் கலைஞா் சேமஞ்சேரி குஞ்ஞிராமன். குரு கருணாகரன் மேனன் நடத்திய கதகளி நடன குழுவில் இணைவதற்காக தனது 14-ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதன் மூலம், குஞ்ஞிராமனின் கதகளியுடனான உறவு தொடங்கியது.

அதன் பின்னா் அந்தக் கலையை கற்பது, கற்பிப்பது, மேடைகளில் தோன்றி நடனமாடுவது என 90 ஆண்டுகள் தனது வாழ்க்கையை கதகளி நடனத்துக்காக அா்ப்பணித்தாா். கேரளத்தின் வடக்கு மலபாா் பகுதியில் கதகளி கலை பரவச் செய்வதில் முக்கிய பங்காற்றினாா்.

நடனத்தின்போது இவரின் முத்திரைகளும் அபிநயங்களும், வசீகரமும் கதகளி நடனம் மீது மிகுந்த ஆா்வம் கொண்டவா்களின் இதயங்களை கவா்ந்திருந்தன. கதகளியில் ‘கல்லடிக்கோடன்’ பாணி நடனத்தில் அவா் கைதோ்ந்தவராக இருந்தாா். பரதநாட்டியத்தை முதலில் கற்ற அவா், பின்னா் மோஹினியாட்டத்திலும் தனது கவனத்தைத் திருப்பினாா். பிறகு கதகளியில் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.

கடந்த 1945-ஆம் ஆண்டு வடக்கு கேரளத்தின் முதல் நடனப் பள்ளியான பாரதிய நாட்டிய கலாலயத்தை தோற்றுவித்தாா். அதனைத் தொடா்ந்து தனது சொந்த கிராமத்தில் சேலியா கதகளி வித்யாலயம் உள்பட பல நடனப் பள்ளிகளை உருவாக்கினாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இதுதவிர கேரள சங்கீத நாடக அகாதெமி விருது, கலாரத்னம் விருது, மயில்பீலி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.

69. சிறார் நீதி சட்டத்தை அமல்படுத்த கலெக்டர்களுக்கு கூடுதல் அதிகாரம்; நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா தாக்கல்

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (15.03.2021) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தாக்கல் செய்தார்.

நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சா் ஸ்மிருதி இரானி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். சிறாா் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அமைப்புகளை மாவட்ட மாஜிஸ்திரேட்டும், கூடுதல் மாஜிஸ்திரேட்டும் கண்காணிப்பதற்கு அந்த மசோதா வழிவகை செய்கிறது.

மாவட்ட சிறாா் பாதுகாப்பு மையமும் புதிய மசோதாவின்படி மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்காணிப்புக்கு உள்ளாகும். சிறாா் நல பாதுகாப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுபவரின் கல்வித் தகுதி, பின்னணி உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கும் புதிய மசோதா வழிவகை செய்கிறது.

அக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுபவா், சிறாா் நலன் தொடா்பான விவகாரங்களில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்குப் பணியாற்றியவராக இருத்தல் வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறாா் நல பாதுகாப்புக் குழு சாா்பில் நடைபெறும் கூட்டங்களில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை எனில், உரிய விசாரணைக்குப் பிறகு அவா்களைப் பதவியில் இருந்து நீக்க மாநில அரசுகளுக்கு மசோதா அதிகாரம் வழங்குகிறது.

சிறாா் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைப் போக்குவதற்கும், சிறாா்களின் நலனைப் பாதுகாப்பதில் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறாா் மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடையேயான தொடா்பை வலுப்படுத்துவதற்கு மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது. குழந்தைகளைத் தத்தெடுக்கும் விவகாரங்களையும் மாஜிஸ்திரேட் இனி கண்காணிக்க முடியும்.

சிறாா் நலன் பாதுகாப்புக்கான குறைகளைத் தீா்க்கும் அதிகாரியாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் செயல்படுவாா். சம்பந்தப்பட்ட சிறாருடன் தொடா்புடைய நபா்கள், குறைகளை அவரிடம் தெரிவிக்க மசோதா வழிவகை செய்கிறது.

கூடுதல் அதிகாரம்

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) திருத்த சட்டப்படி, இந்த சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கூடுதல் கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படும்.

அந்த பிரிவில் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரின் கல்வித்தகுதி மற்றும் பின்னணி குறித்து ஆராயப்படும். ஒரு உறுப்பினர், தொடர்ந்து 3 மாதங்களாக இந்த பிரிவின் கூட்டங்களுக்கு வராவிட்டால், விசாரணை நடத்தி அவரை நீக்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

குழந்தைகளை தத்தெடுத்தல் குறித்து உத்தரவு பிறப்பிக்க கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மறுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரமும் கலெக்டர்களுக்கு உண்டு.

மேலும் 4 மசோதாக்கள்

3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கத்தக்க குற்றங்கள், ‘கடுமையான குற்றங்கள்’ என வகைப்படுத்தப்படும்.

இந்த மசோதாவுடன், டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய திருத்த மசோதா, சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய மருந்து தயாரிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி திருத்த மசோதா, கடற்பயணத்துக்கான கடல்சார் உதவி மசோதா ஆகிய மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

70. இந்தியாவின் உயா் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2 ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத பணம் பதுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துடன் மத்திய அரசு கைவிட்டது. அதன் பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தபோதும், 1000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகம் செய்யவில்லை. அதற்கு மாற்றாக, புதிய 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ரூ. 2000 நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

2018-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி நிலவரப்படி 336.2 கோடி ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த பணப் புழக்கத்தில் 3.27 சதவீதமாகவும், பண மதிப்பில் 37.26 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நிலவரப்படி 249.9 கோடி ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த பணப் புழக்கத்தில் 2.01 சதவீதமாகவும், பண மதிப்பில் 17.78 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.

குறிப்பிட்ட மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு என்பது, பொதுமக்களின் பரிவா்த்தனை தேவையைப் பூா்த்தி செய்வதற்காக மத்திய அரசு ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து முடிவுசெய்யும் விஷயமாகும். அந்த வகையில், 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் புதிய ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பதற்கான உத்தரவுகள் எதுவும் அரசு அச்சகங்களுக்கு அளிக்கப்படவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம், உயா் மதிப்புடைய நோட்டுகளாகப் பதுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரையிலான 2016-17 நிதியாண்டில் 354.2 கோடி ரூ. 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2017-18 ஆம் நிதியாண்டில் 11.15 கோடி ரூ. 2000 நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டது. அது 2018-19 ஆம் நிதியாண்டில் 4.66 கோடி நோட்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.

71. நெதா்லாந்தில் பொதுமக்களுக்கு அஸ்டொ்ஸெனகா தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் அச்சம் காரணமா பல நாடுகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நெதா்லாந்தும் இணைந்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் உருவாக்கியுள்ள அந்தத் தடுப்பூசியால் ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவது இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக நெதா்லாந்து அதிகாரிகள் அறிவித்தனா்.

ஏற்கெனவே, ஐரிஷ் குடியரசு, டென்மாா்க், நாா்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகள் அந்தத் தடுப்பூசிப் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி, நெதா்லாந்தில் 11,57,192 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 16,069 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

72. தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் போல்ட் வால்ட் பிரிவில் தமிழகத்தின் ரோஸி பால்ராஜ் தங்கம் வென்றார்.

73. அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா துரிதமாக இணைய வேண்டும்: ஈரான்

தங்களுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்பினால், அதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கொள்கைகள் தொடா்பாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் காணொலி மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் அவா் கூறியதாவது:

வரும் ஜூன் மாதம் ஈரானில் தோ்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு சூழல்கள் மாறலாம்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அதில் மந்தமாக இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அந்த நாடு துரிதமாக செயல்பட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக அமெரிக்காதான், இதுதொடா்பான முயற்சிகளை முதலில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மயை உள்ளடக்கிய பி5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள பி5+1 நாடுகளும் ஒப்புக் கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுதாக முன்னாள் அதிபா் டொனால்ட் அரசு 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. எனினும், அந்த ஒப்பத்தில் மீண்டும் இணைய தற்போதைய அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

74. பாரத் நெட் திட்டத்தில் தமிழகத்தில் 17,622 கிராமங்களுக்கு இணைய வசதி 25.03.2021 அன்று முதல் பணிகள் தொடங்கப்படும், என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

75. 26 ஆவது பிரெஞ்சு – ஸ்பானிஷ் உச்சி மாநாடு பிரான்சில் நடைபெறுகிறது. (பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்; ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்)

76. தேசிய சீனியர் தடகளம்: ஈட்டி எறிதலில் அன்னு ராணி புதிய சாதனை

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று தொடங்கியது.

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயது வீராங்கனை அன்னு ராணி 63.24 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 62.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. நேற்று அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (64 மீட்டர்) அவரால் எட்ட முடியவில்லை. இந்த பந்தயத்தில் ராஜஸ்தான் வீராங்கனை சஞ்சனா சவுத்ரி (54.55 மீட்டர்) 2-வது இடமும், அரியானா வீராங்கனை குமாரி ஷர்மிளா (50.78 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேச வீராங்கனை சவிதா பாலும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பாலியானும் முதலிடம் பிடித்தனர்.

77. இந்தியாவுக்கு எண்ணெய் சவுதியை விஞ்சிய அமெரிக்கா.

இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகள் பட்டியலில், இரண்டாவது மிகப் பெரிய நாடாக, அமெரிக்கா மாறி இருக்கிறது. சவுதி அரேபியா, நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவுக்கு, அதிகளவில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்த நாடுகளின் பட்டியலில், இரண்டாவது இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஈராக் உள்ளது.

ஈராக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு, 23 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டிருப்பினும், அந்த நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம், அமொக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் அளவு, 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி, 42 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் முதல் இரண்டு நாடுகளில், சவுதி அரேபியா ஒன்றாக இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது.

78. மீண்டும் அதிகரித்த நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – பிப்ரவரி 2021

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்க தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2021 மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 4.83 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்களில் காணப்பட்ட விலை உயர்வால் கடந்த மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் மே மாதத்தில் 1.89 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், தற்போது 3.87 சதவீதமாக உள்ளது.

இது போல பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 6.24 சதவீதமாக பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெற்றுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் 3.82 சதவீதத்திலிருந்து 4.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புகையிலை பொருட்கள் மற்றும் வீட்டுமனை பணவீக்க விகிதங்களில் பெரிதான ஏற்ற-இறக்கம் இல்லை எனலாம். ஒளி மற்றும் எரிபொருட்களின் விலைவாசி 3.87 சதவீதத்திலிருந்து 3.53 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஆறு சதவீதத்திற்கு மேலாக தான் இருந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க விகித இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவிற்குள் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்க விகித அளவீட்டில் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் 45.86 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. பால் பொருட்கள் 6.6 சதவீதமும், காய்கறிகள் 6.04 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 3.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

வீட்டுமனை 10 சதவீதத்தையும், கல்வி 4.46 சதவீதம் மற்றும் சுகாதாரம் 5.9 சதவீதத்தையும் பங்களிப்பாக பெற்றுள்ளது. எரிசக்தியில் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருத்தல், பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பில் மேம்பாடு இல்லாதது, அதிக நிதி பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் ஆகியவை சில்லரை விலை பணவீக்க ஏற்ற-இறக்கத்திற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன.

79. ”புதுப்பிக்க கூடிய எரிசக்தி மற்றும் காடு வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில், பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில், இந்தியா மட்டுமே சரியாககடைபிடிக்கிறது,” என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ராஜ்யசபாவில் நேற்று (15.03.2021) தெரிவித்தார்.

புதுப்பிக்க கூடிய எரிசக்தி, வாகன புகையினால் ஏற்படும் மாசை குறைப்பது, காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பது உட்பட, பாரிஸ் ஒப்பந்தத்தில், பல்வேறு உறுதிமொழிகளை ஜி-20 நாடுகள் அறிவித்துள்ளன. அந்த உறுதிமொழிகளை, இந்தியா மட்டுமே சரியாக கடைப்பிடித்து வருகிறது.

கடந்த ஆறு ஆண்டு களில், மரங்கள் உள்ள நிலப் பரப்பு, நாடு முழுவதும், 15 ஆயிரம் சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் வேகம் மேலும் அதிகரிக்கும். காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக, மாநில அரசுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு கடந்தாண்டு வழங்கியுள்ளது. வனப்பகுதிகளின் பரப்பை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

80. ‘மார்ஷியல்’ சட்டம் பிரகடனம் மியான்மர் ராணுவம் அதிரடி

மியான்மரின் யாங்கூனில், முழு அதிகாரமும் ராணுவத்திற்கு கிடைக்க வழிவகுக்கும், ‘மார்ஷியல்’ சட்டம், நேற்று, பிரகடனம் செய்யப்பட்டது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. போராட்டம்மேலும், ஆங் சன் சூச்சி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர், சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எண்ணற்ற மக்கள், சாலைகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவதால், நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, போராட்டக் காரர்களை கலைக்கும் பணிகளில், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டில், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. யாங்கூனில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நேற்று முன்தினம் மட்டும், 38 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை, நாடு முழுவதும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.ஆறு பகுதிஇந்நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கத்தில், யாங்கூனில் உள்ள, வடக்கு டகோன், தெற்கு டகோன், டகோன் செய்க்கான், வடக்கு ஒக்கலபா, ஹிலைங் தார் யார் மற்றும் ஷ்வேபியிதா உள்ளிட்ட, ஆறு பகுதிகளில், நேற்று, மார்ஷியல் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக, இந்த குறிப்பிட்ட பகுதிகளில், நிர்வாகம், நீதித் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறை என அனைத்தும் ராணுவ கட்டுப் பாட்டின் கீழ் வந்துள்ளது.

81. இசைத் துறைக்கான மிகப் பெரிய ‘கிராமி’ விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, …”

இசைத் துறைக்கான மிகப் பெரிய ‘கிராமி’ விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, நடைபெற்றது. கொரோனா விதிகளை பின்பற்றி நடந்த இந்த விழாவில், ஆண்களை விட பெண்கள் அதிக விருதுகளை பெற்றனர்.ஒன்பது பிரிவுஇதில், பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், ‘சேவேஜ், பிளாக் பரேட், பிரவுன் ஸ்கின் கேர்ள்’ உட்பட, பாடல், வீடியோ என, ஒன்பது பிரிவுகளில் தேர்வாகி, அவற்றில் நான்கில் விருது களை அள்ளிச் சென்றார். இதன் மூலம், மொத்தம், 28 விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் அதிகம் விருது வென்ற பெண் என்ற சிறப்பை, பியான்ஸ் படைத்துள்ளார்.

இவர், தற்போது, 31 கிராமி விருதுகளை வென்ற, இசையமைப்பாளர், சர்.ஜார்ஜ் சோல்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பியான்சுடன் இணைந்து பாடிய அவரது, ஒன்பது வயது மகள், புளு ஐவி கார்ட்டருக்கு, சிறந்த இணை பாடகிக்கான கிராமி விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த வயதில் கிராமி விருது பெற்ற இரண்டாவது பெண் என்ற சிறப்பை, புளு ஐவி கார்ட்டர் பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான சிறந்த இசை ஆல்பமாக, டெய்லர் ஸ்விப்ட்டின், ‘போக்லோர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இவ்விருது வென்ற முதல் பெண் என்ற சிறப்பை, டெய்லர் ஸ்விப்ட் பெற்று உள்ளார்.

இதற்கு முன், ஸ்டீவ் வன்டர், பிராங்க் சினாட்ரா, பால் சைமன் ஆகியோர் தான் மூன்று முறை விருதுகளை வென்றுள்ளனர். விரைவில் வெளியாக உள்ள, ‘நோ டைம் டு டை’ ஜேம்ஸ்பாண்ட் படத்தின் ‘டைட்டில்’ பாடலுக்காக, எய்லிஷ் விருது வென்றார். முதன் முறையாக, வெளியாகாத ஒரு படத்தின் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடகிக்கான விருதை, ‘வேப்’ பாடலுக்காக, மெகன் தட்டிச் சென்றார். முக கவசம்இரட்டையர் பிரிவில், ‘ரெய்ன் ஆன் மீ’ பாடலுக்கான விருது, லேடி காகா, அரியனா கிராண்டே ஆகியோருக்கு கிடைத்தது.

இந்தாண்டு, சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரின் மகள், அனுஷ்கா சங்கர், மும்பையைச் சேர்ந்த, பிரியதர்ஷனி ஆகியோரின் இசை ஆல்பங்கள், விருதுக்கு தேர்வான போதிலும், வெற்றி வாய்ப்பை இழந்தன. இந்நிகழ்ச்சியில், கனடாவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, லில்லி சிங், டில்லி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முக கவசம் அணிந்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

82. டெல்லி ஆட்சி அதிகாரத்தில் ஆளுநருக்கு முழு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்

ஆட்சி அதிகாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநரின் பங்கு மற்றும் அதிகாரத்தை வரையறுக்கும் திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, டெல்லி தேசிய தலைநகர பிராந்திய திருத்த மசோதா (என்சிடிடி) 2021ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன்படி, முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில்,

* சட்டத்தின் 21வது பிரிவில், கூறப்பட்டுள்ள அரசு’ என்ற வார்த்தை துணைநிலை ஆளுநரை’ குறிப்பதாக மாற்றப்பட வேண்டும். இதற்காக பிரிவு 21ல் புதிதாக துணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றம் அரசு என்று குறிப்பிட்டது துணைநிலை ஆளுநரையே சேரும்.

* சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதாவையும் ஏற்று கொள்ளவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ள 24வது பிரிவுடன், சட்டப்பேரவை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விஷயத்தையும் வெளியே சொல்லக் கூடாது என்ற புதிய உட்பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும்.

* 33வது துணைப்பிரிவு (1)ல் அதன் அலுவல் நடத்தை தொடர்பான’ என்ற வார்த்தைகளுக்கு பிறகு, `மக்கள் சபையின் அலுவல் நடத்தை நடைமுறை மற்றும் விதிகளை பாதிப்பதாக இருக்காது,’ என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.

* திருத்த மசோதா அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தலைநகரின் அன்றாட நிர்வாகம் அல்லது நிர்வாக முடிவு தொடர்பாக விசாரணை நடத்த சட்டப்பேரவைக்கோ அல்லது அதன் குழுவுக்கோ அதிகாரம் உண்டு என்று உருவாக்கப்பட்ட விதிகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

* துணைநிலை ஆளுநர் அல்லது அவரது அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து நிர்வாக நடவடிக்கை முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் கூறியதாக எடுத்து கொள்ள வேண்டும்.

* அரசியலமைப்பு சட்டம் 239ஏஏ.ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பேரவை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களில் துணைநிலை ஆளுநர் விதிகளை உருவாக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா தவிர, சிறார் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார். அதன்படி, சிறார் சீர்திருத்த பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கங்கள் மற்றும் தாதுவளங்கள் மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல் திருத்த மசோதாவை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தாக்கல் செய்தார். கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், அதன் பெயரை கடல் வழிகாட்டுதல்’ என்று மாற்றி கடல் வழிகாட்டுதல் உதவி மசோதாவை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். அகமதாபாத், கவுகாத்தி, ஹாஜிபூர், ஐதாராபாத், கொல்கத்தா, ரேபரேலி உள்ளிட்ட 6 மருந்தக நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்கும் தேசிய மருந்தக கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். 74 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகளை விற்க வகை செய்யும் வகையில் காப்பீடு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

தமிழக நிறுவனத்துக்கு தேசிய அங்கீகாரம் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு உணவு தொழில்நுட்ப நிறுவனம், அரியானாவில் குண்ட்லியில் உள்ள உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய நிறுவனங்களாக அறிவித்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

83. ஏடிபி ஒற்றையர் தரவரிசை 2வது இடத்தில் மெட்வதேவ்

ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். மார்ஷெல் ஓபன் 13 தொடரின் பைனலில் பியரி ஹெர்பர்ட்டுடன் (பிரான்ஸ்) நேற்று முன்தினம் மோதிய மெட்வதேவ் 6-4, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது 10வது ஏடிபி பட்டமாகும். இந்நிலையில், நேற்று வெளியான ஏடிபி தரவரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலை பின்னுக்குத் தள்ளி மெட்வதேவ் 2வது இடத்தை பிடித்தார். செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 6வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் டாப் 10

ரேங்க் வீரர் புள்ளி

1 நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12,008

2 டானில் மெட்வதேவ் (ரஷ்யா) 9,940

3 ரபேல் நடால் (ஸ்பெயின்) 9,670

4 டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 8,625

5 ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6,765

6 ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6,375

7 அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 5,635

8 ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா)

9 டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 3,640

10 மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) 3,453

84. அல்டிமேட் கோ-கோ அறிமுகம்

இந்திய கோ-கோ கூட்டமைப்பு (கே.கே.எஃப்.ஐ )சார்பில் முதன்முறையாக அல்டிமேட் கோ-கோ என்ற பெயரில் தொழில்முறை லீக் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. கே.கே.எஃப்ஐ மற்றும் டாபர் இந்தியா நிறுவனம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றன. இதற்காக டாபர் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ₹200 கோடி முதலீடு செய்கிறது. கடந்த மாதம் குருகிராமில் நடந்த சிறப்பு முகாமில், சிறந்த 130 வீரர்களின் செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மாநில சங்கங்களில் இருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை சோனி குழுமம் பெற்றுள்ளது.

84. சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் எழுதிய ‘லாக்கிங் டவுன் தி புவர்: தி பாண்டமிக் அண்ட் இந்தியாஸ் மாரல் சென்டர்’ (Locking Down the Poor: The Pandemic and India’s Moral Centre) என்ற ஆங்கில நூல் சென்னையில் இன்று (17.03.2021) வெளியிடப்படுகிறது.

85. நாடு முழுவதும் தினமும் உருவாகும் 146 டன் கரோனா மருத்துவக் கழிவுகள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் பரிசோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மூலம் தினமும் 146 டன் மருத்துவ கழிவுகள் உருவாவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரம் கூறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தினமும் சுமார் 616 டன் கழிவுகள் உருவானதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

அதேநேரம், இந்தக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்வதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. மருத்துவக் கழிவு நிர்வாகவிதிகள் 2016-ன்படி, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகள், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாகஅகற்றுவது மற்றும் சுத்திகரிப் பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். இதன்படி, மாநில மாசு கட்டுப்பாட்டுவாரியங்கள் 202 பொது மருத்துவக் கழிவு சுத்திகரித்தல் மற்றும் அகற்றும் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

86. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஏப்ரலில் இந்தியா வருகை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இதையடுத்து, பிரிட்டனின் வர்த்தக நடவடிக்கைகளை முடுக்கிவிடும் விதமாக, வளர்ந்த நாடுகளுடன் அந்நாட்டு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் போரிஸ் ஜான்சன் வருகை தருவதாக இருந்தார். இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்றுவிட்டு இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இந்திய சுற்றுப்பயணத்தை போரிஸ் ஜான்சன் தற்காலிகமாக ரத்து செய்தார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல்மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இருதரப்பு வர்த்தக உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசிக்கவுள்ளதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பெரிய சர்வதேசப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் ஏப்ரல் இறுதியில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. பிரெக்ஸிட் வெளியேறுதலுக்குப் பின்னர் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்த அதுவும் குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய-பசிபிக் சுதந்திர வர்த்தக தொகுதியான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரிட்டன் கடந்த மாதமே விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. அதேபோல் ஆசியான்(ASEAN) கூட்டமைப்பில் ஆலோசகராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

87. இந்திரா நூயி சுயசரிதை – ‘மை லைப் இன் புல்’

‘பெப்சி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, சென்னையை பூர்விகமாக உடைய இந்திரா நூயி (65 வயது) வணிக நிறுவன செயல்பாடுகளில், சர்வதேச புகழ் பெற்றவர். இவர், தன் வாழ்க்கை மற்றும் பணி குறித்த தகவல்களை, ‘மை லைப் இன் புல்’ என்ற பெயரில், சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம், செப்டம்பர் 28, 2021 இல் வெளியாக உள்ளது.

88. இந்தியக் கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல்.

எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவும், ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறியவும் உதவும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் விரைவில் இணையவுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கப்பல் பயன்பாட்டுக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஐஎன்எஸ் துருவ் கப்பலானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பெருங்கடல் கண்காணிப்பு’ கப்பல் ஆகும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஓ) ஆகியவற்றால் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘இந்துஸ்தான் ஷிப்யார்ட்’ நிறுவனத்தால் (சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ்) விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் கட்டமைக் கப்பட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் விரைவில் இந்தியக் கடற்படையில் இணையும்என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை. ஐஎன்எஸ் துருவ் கப்பலில் அதிநவீன மின்னணு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்தியப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை எளிதில் அடையாளம் கண்டு ராணுவத்துக்கு தகவல் அளிக்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தியாவை நோக்கி வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் கண்டறிந்துவிடும். மேலும், இந்திய – பசிபிக் பிராந்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் உண்மையான திறனையும் இக்கப்பலால் மதிப்பிட முடியும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., துருவ், 15 ஆயிரம் டன் எடை கொண்டது. இதில் அதிநவீன, ‘ரேடார்’ வசதிகள் உள்ளன. இதன் வாயிலாக, நம் நாட்டை கண்காணிக்கும் செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை எளிதில் கண்டறிந்து விடலாம்.

ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணையும்பட்சத்தில், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும்தான் இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எஸ் துருவ் கப்பலால் கடற்படையின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் டிஆர்டிஓ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

6. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரரான முரளி ஸ்ரீசங்கர் தகுதி பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில், 24வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற கேரளாவின் முரளி ஸ்ரீசங்கர், முதல் நான்கு வாய்ப்பில் 8.02, 8.04, 8.07, 8.09 மீ., தாண்டினார். ஐந்தாவது வாய்ப்பில் அசத்திய இவர், அதிகபட்சமாக 8.26 மீ., தாண்டினார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க தகுதி இலக்காக 8.22 மீ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர் இவர், தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். கடந்த 2018ல் இவர், 8.20 மீ., தாண்டியிருந்தது தேசிய சாதனையாக இருந்தது.

89. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: போர்ச்சுகல் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் நாடு முழு ஆதரவு அளிக்கும் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐபியு) தலைவர் துவார்த்தே பச்சேகோ தெரிவித்தார்.

மேலும், இந்தியா தனது நலத்துக்கு மட்டுமல்லாமல், சர்வதேச நலனிலும் அக்கறை கொண்ட நாடாக இருந்து, உலக நாடுகளுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

போர்ச்சுகல் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான துவார்த்தே பச்சேகோ, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 7 நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், நாடாளுமன்ற அவை நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை பார்வையிட்டார். இதையடுத்து, அவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து துவார்த்தே பச்சேகோ பேசியதாவது:

கரோனா தொற்று காலக்கட்டத்தில் சமூக, பொருளாதார ரீதியாக எவ்வாறு மீண்டு வருவது என்பது சர்வதேசத்துக்கும் சவாலாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மற்ற நாடுகளால் மதிக்கப்படுவதோடு ஓர் முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.

ஐனநாயக மாண்புகளில் இந்தியாவின் அர்ப்பணிப்புகளை நாள்தோறும் காணமுடியும். தனது நலத்துக்கு மட்டுமல்லாமல், சர்வதேச நலனிலும் அக்கறை கொண்ட நாடாக திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா, பெருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் சாதனை புரிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தத்தை போர்ச்சுகல் வரவேற்கிறது. அதில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் முழு ஆதரவை அளிக்கும் என்றார் அவர்.

90. சீன தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் அனுமதி: இந்தியா உள்பட 20 நாட்டினருக்கு நிபந்தனை

இந்தியா உள்பட 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் சீனா திரும்ப வேண்டுமானால் அந்நாட்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 23,000 இந்திய மாணவா்கள் தங்கி படித்து வந்தனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் மருத்துவம் பயின்று வந்தனா். இதுதவிர நூற்றுக்கணக்கான இந்தியா்கள் பணிபுரிந்து வந்தனா். கடந்த ஆண்டு கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியதால் அவா்கள் அனைவரும் இந்தியா திரும்பினா். கரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவா்கள் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் போனது.

அவா்கள் மீண்டும் சீனா திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்நாட்டிடம் இந்திய தூதரகமும், மாணவா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், அதுகுறித்து சாதகமான பதில் எதையும் சீனா தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சீனா திரும்ப விரும்பும் இந்தியா்கள் அந்நாட்டின் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை தில்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஆனால் சீன தடுப்பூசி இந்தியாவில் கிடைப்பதில்லை. அந்தத் தடுப்பூசிகளை எவ்வாறு பெறுவது என்பதை தனது அறிவிப்பில் சீன தூதரகம் தெரிவிக்கவில்லை.

சீன தடுப்பூசியை செலுத்திக்கொள்வது 20 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் இந்தியா்களும் அடங்குவா் என்றும் சீன அரசு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

91. பின்தங்கியோா் பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியுமெனில் மராத்தா இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் கருத்து (16.03.2021)

சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018 (எஸ்இபிசி)’ என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது. அதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநில அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், ‘மகாராஷ்டிரத்தில் இயற்றப்பட்டுள்ள எஸ்இபிசி சட்டம், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுகிறது’ என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலம் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து, மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நசீா், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள், மாநிலங்களின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை சட்டப் பிரிவு 342ஏ பாதிக்கிறதா? என்பன உள்ளிட்ட 5 கேள்விகளை எழுப்பி, அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு மாநிலங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் எழுத்துபூா்வமான பதிலை சமா்ப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘102-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை (எஸ்இபிசி) நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும். இந்த அரசமைப்பு சட்ட திருத்தத்துக்குப் பின்னா்தான், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மகாராஷ்டிர அரசு இயற்றியிருக்கிறது. எனவே, இந்த சட்டத்தை அனுமதிக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘எஸ்இபிசி பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனா்.

92. இந்தியா-அமெரிக்கா நிதியமைச்சா்கள் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அமெரிக்க ரிசா்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஜேனட் யெல்லனை நிதியமைச்சராக அதிபா் பைடன் நியமித்தாா். அவா் அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு ஜேனட் யெல்லன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் அவா் உரையாடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக, அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கரோனா தொற்று பரவலில் இருந்து விரைவில் மீள்வது, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் நெருங்கிப் பணியாற்றுவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருவதற்கு ஜேனட் யெல்லன் பாராட்டு தெரிவித்தாா். பரஸ்பர விவகாரங்களில் இருதரப்பு, பலதரப்பு ரீதியில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஆா்வமுடன் உள்ளதாக அவா் தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு: பேச்சுவாா்த்தை குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில், ‘சா்வதேச பொருளாதார விவகாரம் குறித்து ஜேனட் யெல்லனுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விவாதித்தாா். உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்காக இந்தியாவுக்கு ஜேனட் பாராட்டு தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சுமாா் ரூ.135 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை வடிவமைத்ததற்காக அந்நாட்டு நிதியமைச்சரை நிா்மலா சீதாராமன் பாராட்டினாா். ஜி20 உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இருவரும் உறுதியேற்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

93. பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: அங்கிதா, சானியாவுடன் இந்திய அணி

பில்லி ஜீன் கிங் கோப்பை உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் லாத்வியாவுக்கு எதிரான ஆட்டத்துக்காக அங்கிதா ரெய்னா, சானியா மிா்ஸா உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அங்கிதா, சானியா தவிா்த்து கா்மான் கௌா் தண்டி, ஜீல் தேசாய், ருதுஜா போசலே ஆகியோா் இந்திய அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த சீசனில், விளையாடுவோா் பட்டியலில் இருந்த ரியா பாட்டியா இந்த சீசனில் ரிசா்வ் பிளேயராக நியமிக்கப்பட்டுள்ளாா். இரட்டையா் பிரிவுக்காக அனுபவமிக்க சானியா மிா்ஸா சோ்க்கப்பட்டுள்ளாா்.

சா்வதேச தரவரிசையில் 359-ஆவது இடத்தில் இருக்கும் ரியாவை விடுத்து, 614-ஆவது இடத்திலிருக்கும் ஜீல் தேசாயை நியமித்தது குறித்த கேள்விக்கு தோ்வுக் குழு உறுப்பினா் ஒருவா், ‘சமீபத்திய ஆட்டங்களில் இருவரது செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

லாத்வியாவின் ஜுா்மாலா நகரில் ஏப்ரல் 16 முதல் 2 நாள்களுக்கு இந்தியா-லாத்வியா அணிகளின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லாத்வியா அணியில் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலினா ஒஸ்டாபென்கா, அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய அனஸ்தாசிஜா செவஸ்டோவா ஆகியோா் இடம்பெறுவதால் இந்த சுற்று இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்குமெனத் தெரிகிறது.

94. தேசிய ஜூனியா் மற்றும் இளையோா் டேபிள் டென்னிஸ் போட்டியில் முறையே ஸ்வஸ்திகா கோஷ், தியா சிதாலே ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாம்பியன் ஆகினா்.

முன்னதாக இளையோா் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிகளில் மகாராஷ்டிரத்தின் தியா சிதாலே 11-8, 11-8, 11-4, 11-9 என்ற செட்களில் உத்தர பிரதேசத்தின் ராதாபிரியா கோயலை வென்றாா். கா்நாடகத்தின் யஷஸ்வினி கோா்படே 7-11, 11-3, 11-6, 11-8, 11-4 என்ற செட்களில் மகாராஷ்டிரத்தின் அனன்யா பாசக்கை வீழ்த்தினாா்.

பின்னா் நடைபெற்ற இறுதிச்சுற்றில் தியா சிதாலே 8-11, 11-7, 11-8, 10-12, 5-11, 11-8, 11-2 என்ற செட்களில் யஷஸ்வினி கோா்படேவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

அதேபோல் ஜூனியா் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுகளில் தில்லியின் ஸ்வஸ்திகா கோஷ் 13-11, 11-6, 9-11, 5-11, 11-3, 11-5 என்ற செட்களில் தில்லியைச் சோ்ந்த லக்ஷிதா நரங்கை வென்றாா். ஹரியாணாவின் சுஹானா சைனி 8-11, 5-11, 11-6, 11-8, 11-8, 11-8, 11-4 என்ற செட்களில் தமிழகத்தின் நித்யஸ்ரீ மணியை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் ஸ்வஸ்திகா கோஷ் 7-11, 11-13, 11-7, 11-4, 11-6, 11-9 என்ற செட்களில் சுஹானா சைனியை தோற்கடித்து சாம்பியன் ஆனாா்.

95. உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!

உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் என்ற நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் ‘உலக காற்றின் தர அறிக்கை, 2020’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைௌ வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: உலகில் உள்ள நாடுகளில் உள்ள 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததில், “மிகவும் மாசடைந்த நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் உள்ளன.” அதிக மாசடைந்த நகரங்களில் சீனாவில் சின்ஜியாங் மற்றும் ஒன்பது இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் 10 ஆவது மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் தில்லி திகழ்கிறது. 2019 முதல் 2020 வரை தில்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக காசியாபாத் உள்ளது என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாசடைந்த நகங்களில் பட்டியலில், காசிதாபாத், புலந்த்சஹார், பிஸ்ராக் ஜலாபூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னௌ, மீரத், ஆக்ரா மற்றும் உத்தரப்பிரேசத்தில் முசாபர் நகர், ராஜஸ்தானில் பிவாரி, பரிதாபாத், ஜிந்த், ஹிஸார், ஃபதேபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்டக் மற்றும் தாருஹேரா, பிகாரில் முசாபர்பூர் ஆகிய நகங்கள் இடம் பெற்றுள்ளன.

மனித செயல்பாடுகளால் 2021 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகரிருப்பதை மீண்டும் காண முடிகிறது. காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு அவசர நடவடிக்கை சாத்தியமானது மற்றும் அவசியமானது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாக நாங்கள் நம்புகிறோம். இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது, “என்று ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹேம்ஸ் கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை என்பது ஆறுதலுக்குரிய செய்தியாகும்.

96. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி நிறுவனம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில், நீண்டகால மூலதனத்தை ஈா்க்கும் ‘மேம்பாட்டு நிதி நிறுவனம் (டிஎஃப்ஐ)’ ஒன்றை அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த நிதி நிறுவனத்தில் வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் ரூ. 111 லட்சம் கோடியை முதலிடு செய்ய மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மேம்பாட்டு நிதி நிறுவனம் ரூ. 20,000 கோடி ஆரம்பகட்ட முதலீட்டுடன் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: இந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கு மத்திய அரசு சாா்பில் ஆரம்பகட்ட முதலீடு வழங்கப்படும். இந்த நிறுவனம், நிதி மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் ஒரு சில ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடி வரை மூலதனத்தை ஈா்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது. ஓய்வூதிய நிதி, தங்க முதலீடு நிதி உள்ளிட்ட மிகப் பெரிய முதலீடு நிதிகளையும், தேசிய உள்கட்டமைப்பு முதலீடு நிதி திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் ஈா்க்கும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மேம்பாட்டு நிதி நிறுவனம் 50 சதவீத அலுவல் சாரா இயக்குநா்கள் உள்பட அனுபவம் வாய்ந்த உறுப்பினா்களைக் கொண்ட நிா்வாகக் குழுவால் நிா்வகிக்கப்படும். வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலும், மிகுந்த நிபுணத்தவம் பெற்ற நபரே நியமிக்கப்படுவாா். இயக்குநா்கள் பொறுப்புக்கு சிறந்த அனுபவம் வாய்ந்த நபா்களை ஈா்க்கும் வகையில், மிகச் சிறந்த ஊதியம் அவா்களுக்கு நிா்ணயிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

மேலும், இதுபோன்ற மேம்பாட்டு நிதி நிறுவனத்தை அமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டது என்று ஐடிபிஐ வங்கியை சுட்டிக்காட்டி கூறிய மத்திய நிதியமைச்சா், ‘இந்த வங்கிகள் பல்வேறு காரணங்களால் அவற்றின் வா்த்தக நடைமுறையை மாற்றிக்கொண்டுவிட்டன. அதன் பிறகு, வங்கிகளை இதுபோன்ற ஆபத்தான நீண்டகால நிதி மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது’ என்று கூறினாா்.

97. கருக்கலைப்புக்கான உச்ச வரம்பை 24 வாரமாக உயா்த்த அனுமதிக்கும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

சிறப்புப் பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உச்ச வரம்பை 24 வாரங்களாக உயா்த்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘மருத்துவ கருக்கலைப்பு (திருத்த) மசோதா, 2020’ என்ற இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஓராண்டுக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாவில் சில திருத்தங்களை முன்வைத்த உறுப்பினா்கள், அதை மாநிலங்களவை தோ்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இருந்தபோதும், இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தாா்.

இதன் மூலம், பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின்கீழ் பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்கும் உச்ச வரம்பு இதுவரை 20 வாரங்கள் என்றிருந்தது, இனி 24 வாரங்களாக உயர உள்ளது.

இந்த மசோதா குறித்து அவையில் மத்திய சுகாதராத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘கருக்கலைப்பு தொடா்பான சா்வதேச நடைமுறைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகே இந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், பெண்களை பாதிக்கக் கூடிய எந்தவொரு சட்டத்தையும் நாங்கள் உருவாக்க மாட்டோம். பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

98. இலங்கையின் கடற்படைக்கு சுமாா் ரூ.81 லட்சம் மதிப்பிலான பயிற்சிக் கருவிகளை இந்தியக் கடற்படை வழங்கியது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் கோபால் பாக்லே கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ரூ.81 லட்சம் மதிப்பிலான பயிற்சிக் கருவிகளை இலங்கையிடம் அவா் அளித்தாா்.

இதற்காக திரிகோணமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை கடற்படையின் கிழக்கு பகுதி தளபதியிடம் அக்கருவிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடா்பாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிராந்திய நாடுகளின் கடற்படையை வலுப்படுத்துவதற்கு இந்தியக் கடற்படை உறுதி கொண்டுள்ளது. இதைக் கடந்த 2019-ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் உறுதிப்படுத்தியிருந்தாா்.

இலங்கை கடற்படைக்குத் தேவையான பயிற்சிக் கருவிகள் வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, நீருக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், நீருக்குள் இருப்பவரைத் தொடா்பு கொள்ள உதவும் தொலைபேசிகள், ஆழ்கடல் வெப்பநிலையை அளக்க உதவும் கருவிகள் உள்ளிட்டவை கடந்த ஆண்டில் இந்தியா சாா்பில் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன.

தற்போது மேலும் சில பயிற்சிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை அகாதெமியின் நூலகத்துக்கு புத்தகங்களும் மின் நூல்களைப் படிக்க உதவும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேம்படுத்துவதில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்கான உதவியை இந்தியக் கடற்படை தொடா்ந்து வழங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

99. கரோனா பாதிப்பின்போது உலக நாடுகளின் தேவையையும் இந்தியா பூா்த்தி செய்தது: பிரதமா்

கரோனா பாதிப்பின்போது உள்நாட்டு சவால்களை திறம்பட சமாளித்ததோடு, உலக நாடுகளின் தேவைகளையும் இந்தியா பூா்த்தி செய்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பின்லாந்து பிரதமா் சன்னா மரினுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட காணொலி வழி மாநாட்டின் போது பிரதமா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5.8 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் 70 நாடுகளை கடந்த சில வாரங்களில் சென்றடைந்துள்ளது’ என்றும் பிரதமா் அப்போது கூறினாா்.

மேலும், ‘வெளிப்படையான, மனிதாபிமான மற்றும் சா்வதேச சட்டத்தின் அடிப்படையில் செல்படுவதையே இந்தியாவும், பின்லாந்தும் நம்பிக்கை கொண்டுள்ளன. தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், தூய்மையான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுவான கூட்டுறவை கொண்டிருக்கின்றன’ என்று கூறிய பிரதமா் மோடி, ‘இந்தியா சாா்பில் உருவாக்கப்பட்டு 121 வெப்ப பிரதேச நாடுகள் இணைந்துள்ள சூரியசக்திக்கான சா்வதேச கூட்டமைப்பிலும், பேரிடா் மீட்பு உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பிலும் (சிடிஆா்ஐ) பின்லாந்து இணைய வேண்டும். அவ்வாறு இணைவது, பின்லாந்து நாட்டின் திறன் மற்றும் அனுபவத்தின் மூலம் இந்த இரு சா்வதேச அமைப்புகள் மேலும் வலுப்பெற உதவும்’ என்று பின்லாந்து பிரதமரை கேட்டுக்கொண்டாா்.

பின்லாந்து பிரதமா் பேசுகையில், ‘கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என்று கூறினாா்.

100. இந்தியஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (எல்ஐசி) 2019-20 ஆண்டில் ரூ.53,954.86 கோடி வருவாய் கிடைத்ததாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மக்களவை திமுக உறுப்பினா் எஸ்.ராமலிங்கம், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினா் டாக்டா் பாரிவேந்தா் ஆகியோா், எல்ஐசிக்கு நாடு முழுவதும் எத்தனை கிளை அலுவலகங்கள் உள்ளன? ஊழியா்கள் எண்ணிக்கை, பாலிசிதாரா் எண்ணிக்கை மற்றும் கடந்த மூன்றாண்டுகளில் கிடைத்த வருவாய் எவ்வளவு? போன்றவை குறித்து மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய நிதியமைச்சா் மக்களவையில் அளித்த பதில் வருமாறு: எல்ஐசிக்கு நாடு முழுவதும் 4,962 அலுவலகங்கள் உள்ளன. இதில் 32,386 உயரதிகாரிகள் உள்பட 1,14,451 போ் பணியாற்றுகின்றனா். தமிழகத்தில் உள்ள 497 அலுவலங்களில் 2,181 உயரதிகாரிகள் உள்பட 8,929 ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை 21,08,37,085 போ் தனிப்பட்ட பாலிசிதாரா்கள் காப்பீடு செய்துள்ளனா். இந்த நிறுவனத்திற்கு 2019-20 ஆண்டில் மொத்தம் ரூ.53, 954.86 கோடி வரை காப்பீட்டு வருவாய் கிடைத்தது. இதில் பாலிசிதாரா்களுக்கு ரூ. 51,257.12 கோடியும், மத்திய அரசுக்கு ரூ. 2,697.74 கோடியும் கொடுக்கப்பட்டது. இதற்கு முந்தைய நிதியாண்டுகளான 2018-19, 2017-18 முறையே ரூ.53,211.91 கோடி மற்றும் ரூ. 48,436.45 கோடி காப்பீட்டு வருவாய் கிடைத்தது என்றாா் அமைச்சா்.

101. செய்திகளுக்கு கட்டணம்: ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் முகநூல் ஒப்பந்தம்

ஆஸ்திரேலியாவின் நியூஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ஊடகச் செய்திகளை வெளியிடுவதற்கு முகநூல் நிறுவனம் கட்டணம் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது.

முகநூல், கூகுள் போன்ற இணையதள பெரு நிறுவனங்கள், பிற ஊடக நிறுவனங்களின் செய்திகளை வெளியிடுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட 3 வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கெனவே, கூகுள் நிறுவனத்துடனும் இதே போன்ற ஒப்பந்தத்தை நியூஸ் காா்ப்பரேஷன் மேற்கொண்டது நினைவூகூரத்தக்கது.

102. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ஆபத்து இல்லை

பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு-அஸ்ட்ராஸெனகா கரோனா தடுப்பூசியை செலுத்துக் கொள்வதால் ரத்தக் கட்டு ஏற்படும் அபாயம் இல்லை என்று ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (ஈஎம்ஏ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, உலகின் பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்து வரும் சூழலில் ஈஎம்ஏ இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எமா் கூக் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் ரத்தக் கட்டுப் பிரச்னையை சந்தித்து வருகின்றனா். பல்வேறு காரணங்களால் அவா்களுக்கு ரத்தக் கட்டு ஏற்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது சிலருக்கு ரத்தக் கட்டு ஏற்படுவதற்கும் அவா்களுக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை.

அந்தத் தடுப்பூசியின் தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி மிகக் கடுமையாகப் பரிசோதித்தபோது, அதன் பக்கவிளைவாக யாருக்கும் ரத்தக் கட்டு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதாகக் கூறப்படுவது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில், அந்தத் தடுப்பூசி கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவற்கு பெரிதும் உதவும் என்பதே எங்களது நிலைப்பாடு.

அதனால் கிடைக்கக் கூடிய அனுகூலத்தை ஒப்பிடுகையில், அதன் அபாயம் மிகவும் குறைவே ஆகும் என்றாா் அவா்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி சரிசமமாகச் சென்றடையச் செய்வதற்காக தொடங்கப்பட்ட கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தத் தடுப்பூசிகள் ஏராளமாக வாங்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதால் பலருக்கு ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடா்ந்து, உலகின் பல்வேறு நாடுகள் அந்தத் தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்தன.

ஏற்கெனவே, ஐரிஷ் குடியரசு, டென்மாா்க், நாா்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகள் அந்தத் தடுப்பூசிப் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் ஸ்வீடனும் செவ்வாய்க்கிழமை இணைந்தது.

இதனால், கரோனா தடுப்பூசி திட்டங்களில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. இந்தச் சூழலில், ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,09,05,070 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 26,74,728 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தாய்லாந்து பிரதமருக்கு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி

பாங்காக், மாா்ச் 16: தாய்லாந்தில் பிரதமா் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

அந்தத் தடுப்பூசியால் ரத்தக் கட்டு ஏற்படுவதாக தகவல் வெளியானவுடன், அதன் பயன்பாட்டை தாய்லாந்துதான் முதல்முறையாக நிறுத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது தடுப்பூசி திட்டம் மிண்டும் தொடங்கப்பட்டு, பிரதமரே அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.

103. 20 நாள்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகளை பதிவு செய்த ஐஸ்லாந்து

ஜஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பல எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் சிறிய தீவு நாடாக உள்ள இந்த நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 20 நாள்களில் மட்டும் 40 ஆயிரம் முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதிக அளவிலாக எரிமலைகள் உள்ளதால் நில அதிர்வுகளின் காரணமாக அவற்றில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எண்ணி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

104. பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை சமீபத்தில் கூடியது. அப்போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கான கூடுதல் வரி வருவாயை சேமிக்க, பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூடுதல் வரி

ஒரு நிதியாண்டில், இந்த நிதியத்தில் சேகரிக்கப்படும் நிதி, அதே நிதியாண்டிற்குள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு செலவிடப்பட வேண்டும். தவறினால், அந்த நிதி, நிதியமைச்சக கருவூலத்தில் சேர்க்கப்பட்டு விடும். தற்போது, கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு, 4 சதவீத கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பயன்கள்:

* பொது கணக்கின் கீழ், சுகாதாரத் துறைக்கு அந்தந்த நிதியாண்டிற்குள் செலவிட முடியும்.

* சுகாதாரம் மற்றும் கல்விக்கான கூடுதல் வரி வருவாய், பிரதமர் சுகாதார பாதுகாப்பு நிதியத்தில் சேர்க்கப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு பிரித்து அளிக்கப்படும்.

* சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், ‘ஆயுஷ்மன் பாரத் – பிரதமர் சுகாதார திட்டம் மற்றும் ஆயுஷ்மன் பாரத் – சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் சார்ந்த சிறப்பு திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும்.

* பேரிடர் காலங்களில் சுகாதாரம் சார்ந்த அவசர உதவிகளுக்கு பயன்படுத்தப்படும்.

வளர்ச்சி நிதி அமைப்பு:

நடப்பு நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க, வளர்ச்சி நிதி அமைப்பு ஏற்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், வளர்ச்சி நிதி அமைப்பு ஏற்படுத்த, மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

105. வீடு தேடி வரும் சுகாதார திட்டம்

மத்திய அரசின், ‘வீடு தேடி வரும் சுகாதாரம்’ என்ற திட்டத்தில், புதிய சாதனையாக, ஒரே நாளில், எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற இலவச ஆரோக்கிய பராமரிப்பு சேவை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஒரு குடும்பம், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சேவைகளை இலவசமாக பெறலாம்.

இது குறித்து, தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆயுஷ்மான் திட்டம் குறித்து, குறிப்பாக குக்கிராமங்களில் உள்ளோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வீடு தேடி வரும் சுகாதாரம் என்ற திட்டம், பிப்.,1ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியானோரை அடையாளம் கண்டு இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், கடந்த, 14ம் தேதி, 8.35 லட்சம் பயனாளிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இது ஒரு சாதனையாகும். தகுதியுள்ளோருக்கு, ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் குடும்பம், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சேவைகளை இலவசமாக பெறலாம்.ஆயுஷ்மான் அட்டை இல்லாதோரும், குறிப்பிட்ட மருத்துவமனைகளில், உரிய விபரங்களை வழங்கி, சுகாதார சேவைகளை இலவசமாக பெற முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, பீஹார், உ.பி., ம.பி., சத்தீஸ்கர், பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், வீடு தேடி வரும் சுகாதார திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இதர மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்தாண்டு, 1.2 கோடி பேருக்கு, ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

106. தேசிய தரமதிப்பீட்டு கவுன்சில் (நாக்) நடத்திய ஆய்வில் மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து (ஏ++) வழங்கப் பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பாடத் திட்டம், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் தகுதி, நிர்வாகம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்தம் 3.54 புள்ளிகள் (சி.ஜி.பி.ஏ.,) வழங்கப்பட்டு உயர் தகுதிக்கு (ஏ++) தேர்வு பெற்றது.

துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில் “அனைவரின் ஒத்துழைப்பு, உழைப்பால் இந்த உயர் அந்தஸ்து கிடைத்தது. மொத்தம் 7 பிரிவுகளில் நடத்திய ஆய்வில் பல்கலை பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு முழு மதிப்பெண் கிடைத்தது” என்றார்.

107. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மார்ச் 26ல் வங்கதேசம் செல்கையில் இரு நாடுகளுக்கு இடையே மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தின் 50வது பொன்விழா சுதந்திர தினம் மார்ச் 26ல் கொண்டாடப் படுகிறது. மேலும் வங்கதேசம் உருவாக காரணமானவரும் அந்நாட்டின் தந்தை என அழைக்கப் படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று துவங்கி இம்மாதம் 27 வரை 10 நாட்கள் விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோல்ஹி, இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, பூட்டான் பிரதமர் லொடாய் ஷெரிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 10 நாள் கொண்டாட்டங்களில் வெவ்வேறு தினங்களில் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 26 மற்றும் 27ல் இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் செல்கிறார்.இந்த பயணம் குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமென் கூறியதாவது:

ஐந்து நாடுகளை சேர்ந்த தலைவர்கள் 10 நாட்கள் இடைவெளியில் வங்கதேசத்துக்கு இதுவரை வந்ததில்லை. எனவே வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்டமாக இதை கருதுகிறோம்.பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அவை எத்துறைகள் சார்ந்தது என்பது இன்னும் இறுதி செய்யப்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

108. தேசிய பாதுகாப்பு படை டி.ஜி.யாக கணபதி நியமனம்

தற்போது விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு டி.ஜி.யாக பதவி வகிக்கும் எம்.ஏ.கணபதி, தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) டி.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1986-ம் ஆண்டு பிரிவு உத்தரகாண்ட் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். கணபதி, வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதி ஓய்வு பெறும்வரை இப்பதவி வகிப்பார்.

தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) சிறப்பு டி.ஜி.யாக உள்ள குல்தீப் சிங், அதன் டி.ஜி.யாக நியமிக்கப்படுகிறார். 1986-ம் ஆண்டு பிரிவு மேற்கு வங்காள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான குல்தீப்சிங், வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெறும்வரை சி.ஆர்.பி.எப். டி.ஜி.யாக பதவி வகிப்பார்.

109. நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கைத்தறி ஏற்றுமதி கழகத்தை மூட மத்திய மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.அதில், மத்திய பொதுத்துறை நிறுவனமான கைவினை மற்றும் கைத்தறி ஏற்றுமதி கழகத்தை மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் இருந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான வருமானத்தை கூட ஈட்டவில்லை. நிறுவனத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அதை மூட முடிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தில் பணியாற்றும் 59 நிரந்தர ஊழியர்களும், 6 நிர்வாக பணியாளர்களும் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு முதலீடு

உள்கட்டமைப்பு துறையில் முதலீட்டுக்கான நிதியை திரட்ட வளர்ச்சி நிதி நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு செயல்வடிவம் அளிக்கும்வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவுடன் ஒப்பந்தம்

மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், மாலத்தீவு விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

110. டுவிட்டருக்கு தடை? – ரஷ்யா எச்சரிக்கை

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது என்றும் ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாததால் இதற்கு மாற்றாக வேறு செயலியை மத்திய அரசை ஏற்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்க பதிவுகளை நீக்க் வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

111. அமெரிக்கா – ஜப்பான் இடையே 2+2 பேச்சுவார்த்தை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது குறித்த தங்களின் பொதுவான கவலைகள் பற்றி தீவிரமாக விவாதித்தனர்.

பைடன் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, கேபினட் அந்தஸ்து கொண்டவர்கள் மேற்கொண்ட முதல் வெளிநாடு சுற்றுப்பயணம் இதுவாகும். கொரோனா பெருந்தொற்று மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டு மந்திரிகளும் ஒப்புக்கொண்டனர்.

அதேபோல், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல், மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு ஆகியவை குறித்து இரு நாடுகளும் விரிவாக ஆலோசித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

112. ஜப்பானில் தனுஷின் ‘அசுரன்’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் அசுரன், இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

அசுரன் படம் ஜப்பானில் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும் சிறந்த தமிழ் பட பிரிவிலும் நாமினேட் ஆகி உள்ளது. இந்த விருது விழா மார்ச் 2021 – 27, 28 ஆகிய தேதிகளில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

113. தேசிய தடகள 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தங்கம் வென்றார்.

பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில், 24வது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில், டுட்டீ சந்த், ஹிமா தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவறாக போட்டியை துவக்கிய அசாமின் ஹிமா தாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்தய துாரத்தை 11.39 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த தமிழகத்தின் தனலட்சுமி 22, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். டுட்டீ சந்த் (11.58 வினாடி) 2வது இடம் பிடித்து ஏமாற்றினார். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் (11.76 வினாடி) 3வது இடம் பிடித்தார்.

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இலக்கை 10.43 வினாடியில் கடந்த தமிழகத்தின் இலக்கியதாசன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங் (10.32 வினாடி), மஹாராஷ்டிராவின் சதிஷ் கிருஷ்ணகுமார் (10.56 வினாடி) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர். 100 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ள ஒடிசா வீரர் அமியா குமார் மாலிக் (10.75 வினாடி), 7வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் கர்நாடகாவின் பூவம்மா (53.57 வினாடி), தமிழகத்தின் சுபா வெங்கடேசன் (54.48 வினாடி) முறையே முதலிரண்டு இடங்களை பிடித்து தங்கம், வெள்ளி வென்றனர். ஹரியானாவின் கிரண் பாஹல் வெண்கலம் கைப்பற்றினார்.

1. Which Union Ministry approves PLI scheme for pharmaceuticals?

A) Ministry of Chemicals and Fertilisers

B) Ministry of Commerce and Industry

C) Ministry of External Affairs

D) Ministry of Petroleum and Natural Gas

  • Union Chemicals and Fertilizers Ministry has approved Production Linked Incentive Scheme for promotion of Domestic manufacturing of Key Starting Materials, Drug Intermediates and Active Pharmaceutical Ingredients. Earlier the Union Cabinet had approved PLI Scheme for Pharmaceuticals over a period of Financial Year 2020–21 to 2028–29.

2. ‘Bharat e Market’ is the e–commerce portal launched by which body?

A) FICCI

B) KVIC

C) CAIT

D) TRIFED

  • Confederation of All India Traders (CAIT), launched a mobile application, to onboard vendors for its upcoming e–commerce portal ‘Bharat e Market’. The application will enable businesses and service providers to register on the portal and create their own virtual shop. There will be no commission charged for creating their own shop.

3. India recently participated in the first historic virtual summit of which association in March 2021?

A) BRICS B) QUAD

C) BIMSTEC D) G20

  • Prime Minister Narendra Modi participated in the first historic virtual summit of QUAD leaders along with US President Joe Biden, Australian Prime Minister Scott Morrison, and Japanese Prime Minister Yoshihide Suga. The leaders discussed economic & health impacts of Covid–19, combat climate change & address challenges, including in cyberspace, counterterrorism, quality infrastructure investment & humanitarian–assistance, disaster–relief.

4. The ‘Azadi ka Amrit Mahotsav’ celebrations were flagged off from which venue?

A) Sabarmati Ashram

B) Raj Ghat

C) Madurai

D) Red Fort, New Delhi

  • Prime Minister Narendra Modi launched the celebration of 75 years of independence ‘Azadi ka Amrit Mahotsav’ by flagging off a symbolic 386–km “Dandi March” from Sabarmati Ashram in Ahmedabad to Dandi.
  • The event marked the 91st anniversary of the historic salt march led by Mahatma Gandhi. He also launched various other cultural and digital initiatives for the India@75 celebrations.

5. Mahamadou Issoufou, who recently won Africa’s top prize for leadership, was the President of which country?

A) Chad

B) Namibia

C) Niger

D) Sudan

  • Mahamadou Issoufou, who is stepping down as the President of Niger after two terms in office, has won Africa’s top prize for leadership. He was awarded the 2020 Ibrahim Prize, for facing significant challenges, ranging from deep poverty to armed rebellion and desertification in the country.

6. What is “2001 FO32” that is seen in news recently?

A) Space Shuttle

B) COVID Vaccine

C) Asteroid

D) Rare Earth Metal

  • The American space agency NASA has stated that the largest asteroid 2001 FO32 would pass by the earth at a very close distance of 1.25 million miles, this year. The asteroid is estimated to be 3,000 feet in diameter and was discovered 20 years ago.

7. Which country is the chair of BRICS 2021?

A) Brazil

B) Russia

C) India

D) China

  • For the year 2021, India has assumed the chairmanship of BRICS. Recently, BRICS Contact Group on Economic and Trade Issues (CGETI) held its first meeting under India’s chairmanship from March 9 to 11. The theme of this year’s BRICS is “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus”.

8. Bhavani Devi is associated with which sport?

A) Boxing

B) Fencing

C) Javelin Throw

D) Badminton

  • Tamil Nadu’s Fencing champion Bhavani Devi has qualified for the Tokyo Olympics to be held this year. She became the first Indian fencer to be qualified for the Olympics. She has been selected by Adjusted Official Ranking Method.
  • The Tokyo Olympics that were to happen in 2020 have been postponed to July 2021 owing to COVID–19 pandemic.

9. Gowsalya Shankar who has been awarded with International Woman of Courage by the US Consulate, belongs to which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Telangana

  • Gowsalya Shankar belonging to Tamil Nadu has been awarded with the International Woman of Courage (IWOC) Award by the US Consulate in Chennai recently. She has been running a trust named Shankar Social Justice Trust since 2017 which aims to fight atrocities against caste–based violence.

10. National Vaccination Day is observed in which date?

A) March 15

B) March 10

C) March 16

D) March 14

  • The National Vaccination Day, also known as National Immunisation Day, is annually observed across India on 16th March to create awareness about the importance of vaccination. The government of India aims to raise awareness about the vaccination against poliovirus and other deadly viruses.
  • The National Vaccination day 2021 aims to eradicate both polio and the COVID–19. The day was first observed on 16th March 1995, the day on which the ‘Pulse Polio’ Immunisation Programme became operational.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!