TnpscTnpsc Current Affairs

17th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “Salesforce Global Digital Skills” குறியீட்டில், அதிக டிஜிட்டல் தயார்நிலை மதிப்பெண்ணைப்பெற்ற நாடு எது?

அ) இந்தியா 

ஆ) ஜெர்மனி

இ) ஆஸ்திரேலியா

ஈ) பின்லாந்து

  • ‘Salesforce Global Digital Skills’ குறியீட்டின்படி, 19 நாடுகளில், இந்தியா 100க்கு 63 என்ற அதிகபட்ச டிஜிட்டல் தயார்நிலை மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. 66% பேர் டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான மூலங்களுடன் இருப்பதாகக்கூறியுள்ளனர். 19 நாடுகளில் 23,500க்கும் அதிகமான தொழிலாளர்களிடம் மேற்கொள் -ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சராசரி உலகளாவிய மதிப்பெண் 33 ஆகும்.

Digital Skills Readiness: India leads in digital skills readiness: Salesforce  Global Index - The Economic Times

2. எந்த இந்திய மாநிலம் கல்வி நிறுவனங்களுக்கு ‘சீர்-உடைகளை’ கட்டாயமாக்க உத்தரவு பிறப்பித்துள்ளது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம்

இ) கர்நாடகா 

ஈ) கோவா

  • கர்நாடக கல்விச்சட்டம்-1983இன் 133(2) இன்படி, கல்வித் துறை ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அந்த உத்தரவு ‘ஒரே மாதிரியான சீருடைகளை’ மாணவர்கள் கட்டாயமாக அணிதல்வேண்டும் என்று கூறுகிறது. தனியார்பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையைத் தேர்வு செய்துகொள்ளலாம். அந்த உத்தரவின்படி, நிர்வாகக்குழு சீருடையைத்தேர்ந்தெடுக்கவில்லை என்றால், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொதுச்சட்டம் மற்றும் ஒழுங்கைக் கெடுக்கும் ஆடைகளை மாணாக்கர் அணியக்கூடாது.

Why it is necessary to have a school uniform?

3. சமீபத்தில் காலமான பாடகி லதா மங்கேஷ்கருக்கு எந்த ஆண்டு ‘இந்திய மாமணி’ விருது வழங்கப்பட்டது?

அ) 2001 

ஆ) 2002

இ) 2003

ஈ) 2004

  • அண்மையில் காலஞ்சென்ற பழம்பெரும் பாடகி இலதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல் அடக்கஞ்செய்யப்பட்டது. 36 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
  • கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவுயரிய குடிமக்கள் விருதான ‘இந்திய மாமணி’யை அவர் பெற்றார்.

10 rare photos of legendary singer Lata Mangeshkar | Times of India

4. ஜஸ்டின் டுரூடோ பிரதமராக இருந்துவரும் எந்த நாடு, மிகப்பெரிய தடுப்பூசி-எதிர்ப்புப் போராட்டங்களைக்கண்டு வருகின்றது?

அ) இத்தாலி

ஆ) கனடா 

இ) சுவிச்சர்லாந்து

ஈ) பிரான்ஸ்

  • ஜஸ்டின் டுரூடோ பிரதமராக இருந்து வரும் கனடாவில் தடுப்பூசிக்கெதிரான போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இப்போராட்டங்களுக்கு மத்தியில் தலைநகரமான ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
  • அமெரிக்க-கனடிய எல்லையைக் கடக்கும்போது தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கோபமடைந்த சரக்குந்து ஓட்டுநர்கள், “Freedom Convoy” என்ற பெயரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களை மே. கனடாவில் தொடங்கினர்.

US 'freedom convoy' could disrupt Sunday's Super Bowl, officials warn | US  news | The Guardian

5. 2022இல் ICC U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யார்?

அ) யாஷ் துல் 

ஆ) இராஜ் பாரா

இ) நிஷாந்த் சிந்து

ஈ) ஷேக் ரஷீத்

  • நடப்பு 2022ஆம் ஆண்டு ICC U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு யாஷ் துல் அணித் தலைவராக இருந்தார். ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இது இந்தியாவுக்கான ஐந்தாவது U19 பட்டமாகும். வெற்றிக்கு பங்களித்த மற்ற வீரர்கள் – நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத், ராஜ் பாரா மற்றும் ரவி குமார் உட்பட பலர். இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 189 இரன்களுக்கு ஆட்டமிழந்தது.

India Under-19 star Yash Dhull joins Sachin Tendulkar, Rohit Sharma in  elite list with huge feat on Ranji Trophy debut | Cricket - Hindustan Times

6. ‘மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் திட்டத்திற்கு’ ‘அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்’கடனை வழங்குகிற நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான்

இ) ரஷ்யா

ஈ) ஜெர்மனி

  • ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் (MAHSR) திட்டத்திற்கான ‘அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்’கடனை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்திற்கான முதல் நிலையமாக சூரத் அமைக்கப்பட்டுள்ளது. MAHSR வழித்தடமானது மொத்தம் 12 நிலையங்களை உள்ளடக்கும். அவை சூரத், வதோதரா, ஆனந்த், அகமதாபாத், சபர்மதி, பிலிமோரா, பரூச், மும்பை, தானே, விரார், போயிசர், வாபி ஆகும்.

bullet train fares: Mumbai-Ahmedabad bullet train fares could start as low  as Rs 250 - The Economic Times

7. ‘JIVA’ என்ற வேளாண் சூழலியல் அடிப்படையிலான திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) நபார்டு 

இ) ஐசிஏஆர்

ஈ) சிஎஸ்ஐஆர்

  • வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) சமீபத்தில் வேளாண் சூழலியல்சார்ந்த ‘JIVA’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 11 மாநிலங்களில் 5 வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களை உள்ளடக்கிய நபார்டின் நீர்வடிகால் மற்றும் வறண்ட ஆற்றுப்படுகை திட்டங்களின்கீழ் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாய சமூகத்தை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

National Bank for Agriculture and Rural Development - Wikipedia

8. இந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்காற்றுகிற அமைப்பு எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம் 

இ) நிதி அமைச்சகம்

ஈ) பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) என்பது SEBI சட்டம், 1992இன்கீழ் நிறுவப்பட்ட ஓர் ஒழுங்குமுறை ஆணையமாகும். இது இந்தியாவிலுள்ள பங்குச்சந்தைகளுக்கான முதன்மைக் கட்டுப்பாட்டாளர் ஆகும். SEBI சமீபத்தில் தேசிய பங்குச்சந்தைக்கு (NSE) அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் ஆகியோருக்கு அதன் தலைமை இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை பணியமர்த்துவதில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகளுக்காக அபராதம் விதித்தது.

Securities and Exchange Board of India - Wikipedia

9. இந்திய பாதுகாப்பு அச்சகம் & நாணயம் உற்பத்திக் கழகமானது எதன்கீழ் செயல்படுகிறது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) நிதியமைச்சகம் 

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) வர்த்தக அமைச்சகம்

  • இந்திய பாதுகாப்பு அச்சகம் & நாணயம் உற்பத்திக் கழகம் (SPMCIL) என்பது ஓர் அரசு அச்சிடுதல் மற்றும் நாணய விநியோக நிறுவனமாகும். இது நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. SPMCIL’இன் பதினேழாவது நிறுவன நாளையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பஞ்சதந்திரம்’ குறித்த முதல் வண்ணமயமான நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

At the 13th Foundation Day of Security Printing and Minting Corporation of India  Limited (SPMCIL) in New Delhi, Finance minister Piyush Goyal said that  SPMCIL should have a huge outreach programme to

10.NCRB’இன்படி, ‘பலிவேட்டை’யின் ஒருபகுதியாக அதிக எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெறும் இந்திய மாநிலம் எது?

அ) ஜார்கண்ட் 

ஆ) ஒடிஸா

இ) குஜராத்

ஈ) உத்தர பிரதேசம்

  • தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் கூற்றுப்படி (NCRB), ‘பலிவேட்டை’யின் ஒருபகுதியாக அதிக எண்ணிக்கை
    -யிலான கொலைகள் நடைபெறும் மாநிலங்களுள் ஜார்கண்டிற்கு அடுத்தபடியாக ஒடிஸா உள்ளது.
  • ஒடிஸா மாநில பெண்கள் ஆணையம் சமீபத்தில் ஒடிஸா பலிவேட்டைத்தடுப்புச்சட்டம், 2013இல் கடும் விதிகளைக் கோரியுள்ளது. மேலும் இதனை கொடூரமான குற்றமாகக் கருதி மாநிலத்தில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

Jharkhand free map, free blank map, free outline map, free base map  outline, districts

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இருசக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும்கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதி 138 பிப்ரவரி 15, 2022 அன்று திருத்தப்பட்டதன் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 129இன் கீழ் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு சேணம் (அ) தலைக்கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். இத்தகைய மோட்டார் வாகனங்களின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டராக மட்டுமே இருக்க வேண்டுமென்றும் இந்த அறிவிக்கை கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) விதிகள், 2022 வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப்பின் இந்த விதிகள் அமலுக்கு வரும்.

2. ஒலிம்பிக்ஸ்: ஆரிப் முகமது கான் ஏமாற்றம்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஸ்லாலம் பிரிவில் இந்திய வீரர் ஆரிப் முகமது கான் பந்தயத்தை நிறைவு செய்யாமல் ஏமாற்றமளித்தார். இத்துடன் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டில் ஆடவருக்கான ஸ்லாலம் பிரிவில் களம் கண்டார் ஆரிப்.

இருபந்தயங்கள் நடத்தப்பட்டு, அவற்றில் போட்டியாளர்கள் இலக்கை அடைய எடுத்துக்கொண்ட நேரத்தின் மொத்த கணக்கீட்டின் அடிப்படையில் வெற்றியாளர்கள் இந்த விளையாட்டில் அறிவிக்கப்படுகின்றனர்.

எனினும் இதில் முதல் பந்தயத்தையே ஆரிப் நிறைவு செய்யாமல் தவறவிட்டார். இதனால் அவர் தொடர்ந்து களம் காணும் தகுதியை இழந்தார். இப்பிரிவில் பிரான்ஸ் வீரர் கிளமென்ட் நோயல் மொத்தமாக 1 நிமிஷம் 44.09 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.

ஆஸ்திரியாவின் ஜோகன்னஸ் ஸ்ட்ரோல்ஸ் அவரைவிட 0.61 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டு வெள்ளியும், நார்வே வீரர் செபாஸ்டியன் போஸ் சோல்வாக் 0.70 விநாடிகள் அதிகமாக எடுத்து வெண்கலமும் பெற்றனர். தங்கம்வென்ற கிளமென்ட் நோயல் கடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் 0.04 விநாடிகள் வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்து 4ஆம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டியல்: போட்டியின் 13ஆம் நாளான புதன் கிழமை நிறைவில், நார்வே 28 பதக்கங்களுடன் (13 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) முதலிடத்திலும், ஜெர்மனி 20 பதக்கங்களுடன் (10 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) 2ஆவது இடத்திலும், அமெரிக்கா 19 பதக்கங்களுடன் (8 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம்) 3ஆவது இடத்திலும் உள்ளன.

1. Which country has the highest digital readiness score, in the Salesforce Global Digital Skills Index?

A) India 

B) Germany

C) Australia

D) Finland

  • According to the Salesforce Global Digital Skills Index, among 19 countries, India has the Index’s highest digital readiness score at 63 out of 100. In India, 72 per cent of respondents say they are actively learning digital skills to prepare themselves for future of work.
  • 66 percent said they are equipped with resources to learn digital skills. The Index is based on a survey of over 23,500 workers in 19 countries, with an average global score of 33.

2. Which Indian state issued an order to mandate ‘Uniform style of clothes’ to educational institution?

A) Bihar

B) Uttar Pradesh

C) Karnataka 

D) Goa

  • Invoking 133 (2) of the Karnataka Education Act–1983, the Education Department issued an order which says a uniform style of clothes has to be worn compulsorily. The private school administration can choose a uniform of their choice.
  • As per the order, if the administrative committee doesn’t select uniform, clothes which disturb equality, integrity and public law and order should not be worn.

3. Singer Lata Mangeshkar, who recently passed away, was awarded the Bharat Ratna in which year?

A) 2001 

B) 2002

C) 2003

D) 2004

  • Legendary singer Lata Mangeshkar, who passed away recently, was laid to rest with full state honours. Her career spanned more than half a century and she recorded thousands of songs in 36 languages.
  • The singer was nominated to the upper house of India’s parliament in 1999. She received India’s highest civilian award, the Bharat Ratna, in the year 2001.

4. Justin Trudeau is the Prime Minister of which country that is witnessing massive anti–vaccine protests?

A) Italy

B) Canada 

C) Switzerland

D) France

  • Justin Trudeau is the Prime Minister of Canada, which is witnessing massive anti–vaccine protests. The Capital City of Ottawa declared a state of emergency amidst the huge protests.
  • The “Freedom Convoy” demonstrations began in western Canada, as protests by truckers angry with vaccine requirements when crossing the US–Canadian border.

5. Who is the captain of the Indian team which won the ICC U19 World Cup in 2022?

A) Yash Dhull 

B) Raj Bara

C) Nishant Sindhu

D) Shaik Rasheed

  • Yash Dhull captained the Indian team which won the ICC U19 World Cup in 2022. India defeated England by 4 wickets to win the final held in Antigua. It was also a record fifth U–19 title for India.
  • Other players who contributed to the success include Nishant Sindhu, Shaik Rasheed, Raj Bawa and Ravi Kumar among others. England was bowled out for 189 in 44.5 overs.

6. Which country provides Official Development Assistance (ODA) loan to ‘Mumbai–Ahmedabad High–Speed Rail Project’?

A) USA

B) Japan 

C) Russia

D) Germany

  • Japan International Cooperation Agency (JICA) provides the Official Development Assistance (ODA) loan for the ‘Project for the Mumbai–Ahmedabad High–Speed Rail (MAHSR)’. Surat is set to become the first station for the project. The MAHSR corridor will cover 12 stations in total– Surat, Vadodara, Anand, Ahmedabad, Sabarmati, Bilimora, Bharuch, Mumbai, Thane, Virar, Boisar, Vapi stations.

7. Which institution launched agro ecology–based programme named ‘JIVA’?

A) NITI Aayog

B) NABARD 

C) ICAR

D) CSIR

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) recently launched an agro ecology–based programme JIVA. It aims to promote natural farming under NABARD’s watershed and wadi programmes in 11 states covering five agro–ecological zones. It aims to nudge the farming community towards natural farming.

8. Which body regulates the Stock Exchanges in India?

A) Reserve Bank of India

B) Securities and Exchange Board of India 

C) Finance Ministry

D) Securities and Exchange Commission

  • The Securities and Exchange Board of India (SEBI) is a regulatory authority established under the SEBI Act 1992. It is the principal regulator for Stock Exchanges in India.
  • SEBI has recently penalised the National Stock Exchange (NSE), its former CEOs Chitra Ramkrishna and Ravi Narain for governance lapses in hiring of its chief operating officer Anand Subramanian.

9. Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL) functions under the aegis of which institution?

A) Reserve Bank of India

B) Ministry of Finance 

C) Ministry of External Affairs

D) Ministry of Commerce

  • The Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL) is a government printing and minting agency. It functions under the Ministry of Finance. Finance Minister Nirmala Sitharaman launched the first colour souvenir coin on ‘Panchtantra’ on the occasion of 17th foundation day of Security Printing and Minting Corporation of India Limited (SPMCIL).

10. Which Indian state has the highest number of killings as a part of ‘Witch Hunting’, as per NCRB?

A) Jharkhand 

B) Odisha

C) Gujarat

D) Uttar Pradesh

  • The number of killings as a part of ‘Witch Hunting’ is the second–highest in Odisha, after Jharkhand, according to the National Crime Records Bureau (NCRB). The Odisha State Commission for Women (SCW) has recently sought stringent provisions in the Odisha Prevention of ‘Witch Hunting Act 2013’. It also demanded that branding of victims be treated as heinous crime and punishable in the State.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!