Tnpsc

16th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. வருமான வரி சட்டத்தில், சர்ச்சைக்குரிய முன்தேதியிட்டு வரி வசூல்செய்யும் முறையை நீக்குவதற்காக, அண்மையில், வரிவிதிப்பு சட்டங்கள் மசோதா, 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டில் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டபோது நிதியமைச்சராக இருந்தவர் யார்?

அ) ப சிதம்பரம்

ஆ) பிரணாப் முகர்ஜி 

இ) அருண் ஜேட்லி

ஈ) ஜஸ்வந்த் சிங்

  • வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 ஆனது ஆகஸ்ட் 6, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தை திருத்துகிறது. 2012 மே.28ஆம் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை திருத்தத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வரி கோரிக்கையும் வைக்கப்படாது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, 2012’ இல் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டது.

2. சமீபத்தில் மூன்றாண்டுகாலம் பதவிநீட்டிப்புப்பெற்றவரும் தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவருமானவர் யார்?

அ) அஜய் தியாகி

ஆ) M R குமார்

இ) ரேகா சர்மா 

ஈ) டாக்டர் திருதி பானர்ஜி

  • 2021 ஆகஸ்ட்.7 அன்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருந்து வரும் ரேகா சர்மாவுக்கு மூன்றாண்டு காலத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 07.08.2021 அல்லது 65 வயதுவரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இப்பதவியில் இருப்பார்.

3. மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவின் பதிப்பாகக் கூறப்படும் ‘கங்கை பாதை’ திறக்கப்படுகிற இந்திய நகரம் எது?

அ) கொல்கத்தா

ஆ) வாரணாசி

இ) பாட்னா 

ஈ) கான்பூர்

  • பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா, மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவின் பதிப்பைப் பெறவுள்ளது. 5.50 கிமீ நீளமுள்ள திஹா-AN சின்ஹா இன்ஸ்டிடியூட் கங்கா பாதையானது அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. நெரிசலான அசோக் ராஜபாத்தில் போக்குவரத்தை குறைப்பதற்காக கங்கை நதியின் தென்கரையில் வரவிருக்கும் `3,390 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒருபகுதியாக ‘கங்கை பாதை’ உள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த நீளம் 20.50 கிமீ ஆகும்.

4. சமீபத்தில், ஒரு முகவர் வங்கியாக செயல்பட, ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி எது?

அ) HDFC வங்கி

ஆ) ஐசிஐசிஐ வங்கி

இ) கனரா வங்கி

ஈ) கர்நாடக வங்கி 

  • அண்மையில், அரசு வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, ரிசர்வ் வங்கியால் கர்நாடக வங்கி ஒரு ‘முகவர் வங்கி’யாக மாற்றப்பட்டது. நடுவணரசு மற்றும் மாநிலங்களின் வருவாய் ரசீதுகள் & கொடுப்பனவுகள், ஓய்வூதிய கொடுப்பனவுகள், முத்திரைக் கட்டண வசூல் போன்ற அரசு வணிகங்களை மேற்கொள்ள ‘முகவர் வங்கி’ என்ற முறையில் கர்நாடக வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

5. நடப்பாண்டின் (2021) ராணுவ விளையாட்டுக்களை நடத்துகிற நாடு எது?

அ) ரஷ்யா 

ஆ) இந்தியா

இ) பிரான்ஸ்

ஈ) அமெரிக்கா

  • 2021 ஆக.22ஆம் தேதி முதல் செப்.4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.
  • இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களை காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்தக் குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.

6. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் கால்பந்தில் தங்கப் பதக்கம் வென்ற நாடு எது?

அ) அர்ஜென்டினா

ஆ) ஆஸ்திரேலியா

இ) பிரேசில் 

ஈ) எகிப்து

  • 2021 ஆகஸ்ட்.7 அன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் கால்பந்தில், பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. பிரேசில் அணிக்காக மால்கம் மற்றும் மேத்தியஸ் குன்ஹா கோலடித்தனர். ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஒயர்ஸபால் கோலடித்தார். மெக்ஸிகோ, 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. மகளிர் கால்பந்தில் தங்கப் பதக்கம் வெல்ல, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் கனடா 3-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கணக்கில் வென்று, அமெரிக்கா வெண்கலம் தை வென்றது.

7. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர், ‘FEMBoSA’இன் 11 ஆவது ஆண்டுக்கூட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

அ) அச்சல் குமார் ஜோதி

ஆ) சுனில் அரோரா

இ) ராஜீவ் குமார்

ஈ) சுஷில் சந்திரா 

  • இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரும் FEMBoSA’இன் தற்போதைய தலைவருமான சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் இராஜீவ் குமார் மற்றும் A C பாண்டே ஆகியோருடன் இணைந்து ஆக.11 அன்று தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (FEMBo SA) மன்றத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டம், மெய்நிகர் முறையில், பூட்டானின் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.

8. இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) கொல்கத்தா

ஆ) பெங்களூரு

இ) இந்தூர் 

ஈ) ஹைதராபாத்

  • நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், ‘ஸ்வச் சர்வேக்ஷன்-2021’ இன்கீழ் இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இதற்கான சான்றிதழை நடுவணரசிடமிருந்து இந்தூர் நகரம் பெற்றது.

9. “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” குறித்த கண்காட்சியை தொடக்கியுள்ள அமைச்சகம் எது?

அ) கலாச்சார அமைச்சகம் 

ஆ) சுற்றுலா அமைச்சகம்

இ) கல்வி அமைச்சகம்

ஈ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • 2021 ஆக.8 அன்று கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, புது தில்லியில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ குறித்த கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். இந்தியா விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டை கொண்டாடும், “ஆசாதி கா அம்ரித மகோத்சவத்தின்” ஒருபகுதியாக, இந்திய தேசிய ஆவணக்காப்பகம் நவ.8 வரை தொடரும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

10. சயீத் தல்வார் – 2021 என்ற பயிற்சியை நடத்திய நாடுகள் எவை?

அ) இந்தியா மற்றும் ரஷ்யா

ஆ) இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 

இ) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

ஈ) இந்தியா மற்றும் அமெரிக்கா

  • இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அபுதாபியில் ‘சயீத் தல்வார்’ கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் INS கொச்சி போர்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
  • ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அல்-தாஃப்ரா போர்க் கப்பல், ஏஎஸ்565பி பேந்தர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டன. இருநாடுகளின் கடற் படைகளுக்கு இடையிலான திறன் & ஒருங்கிணைப்பை மேம்படுத்த தேடுதல், மீட்பு, மின்னணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ரூ.100 லட்சம் கோடியில் ‘உத்வேகம்’ திட்டம்: பிரதமா் நரேந்திர மோடி

நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘உத்வேகம்’ திட்டம் (கதி சக்தி) செயல்படுத்தப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்குப் பெருமைதரும் ஆண்டுகளாக மாற்ற வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா். நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியேற்றினாா். அதையடுத்து நாட்டு மக்களுக்கு அவா் ஆற்றிய உரை: நாடு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. ஆனால், வளா்ச்சியின் உச்சத்தை இன்னும் அடைய வேண்டியிருக்கிறது. அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதிகள், அனைத்துக் குடும்பத்துக்கும் வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அனைத்து தகுதியான நபா்களுக்கும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டியுள்ளது.

வரலாற்று உச்சம்: நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளும் அந்நியச் செலாவணி கையிருப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன.

சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் புதிய இலக்குகளுடன் பயணிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னின்று விளங்குவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். ‘தற்சாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடுத்த 25 ஆண்டுகளில் அடைய வேண்டும்.

அனைவரின் முயற்சி:

அனைவருடன் இணைந்து, அனைவருடைய நம்பிக்கையின் அடிப்படையில், அனைவரின் முயற்சியுடன், அனைவருக்குமான வளா்ச்சிக்காகப் பாடுபாட வேண்டும். நாட்டின் இலக்குகளை அடைவதற்கு இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது. நாட்டின் வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு அனைவருடைய முயற்சியும் அவசியம். ‘உத்வேகம்’ தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.100 லட்சம் கோடியில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டம் எதிா்கால பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருக்கும்.

ஹைட்ரஜன் திட்டம்:

எரிசக்தித் துறையில் 2047-ஆம் ஆண்டுக்குள் (சுதந்திர நூற்றாண்டு) தற்சாா்பு அடைவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடையும் நோக்கில், மாசுபாட்டை ஏற்படுத்தாத ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேசிய ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து, அதை மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘வந்தே பாரத்’ ரயில்கள்:

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், 75 வாரங்களுக்குள் நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் விரைவில் ரயில்கள் மூலமாக இணைக்கப்படும். மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நோக்கில், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படும் அரிசியில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

சிறு விவசாயிகளின் நலன்: நாட்டில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதம் போ் சிறு விவசாயிகளாக உள்ளனா். அவா்களது நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் நாட்டின் பெருமையாக மாற வேண்டும்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பழங்குடியினா், பொதுப் பிரிவைச் சோ்ந்த ஏழைகள் ஆகியோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் கல்வி:

ஏழ்மைக்கு எதிரான போராட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும். அக்கொள்கை வாயிலாக தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு நாடுகளுக்கிடையேயான தொடா்பின் தன்மை மாறியது. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபிறகும் சா்வதேசத் தொடா்பு மாற்றங்களைச் சந்திக்கும். கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம்:

அனைத்துத் துறைகளிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை மேம்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளுக்கு உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 7 ஆண்டுகளுக்கு முன் ரூ.56,000 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகளை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி செலுத்தும் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன.

தக்க பதிலடி:

எதிரிகளுக்கு நாட்டின் எல்லைப் பகுதிகளில் தக்க பதிலடியை இந்தியா வழங்கி வருகிறது. எதிரிப் படைகள் மீது துல்லியத் தாக்குதலும் வான்வழித் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் எந்தவொரு கடினமான முடிவையும் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தயங்காது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் கண்கூடாகத் தெரிகின்றன. அங்கு தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஜம்மு-காஷ்மீா் பேரவைக்குத் தோ்தல் நடத்தப்படும்.

விலைமதிப்பற்ற தருணம்:

இதுதான் இந்தியாவுக்கான விலைமதிப்பற்ற தருணம். இளைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்ட தற்காலத் தலைமுறையினா் கற்பனைக்கு எட்டாத இலக்குகளையும் அடையும் திறமை கொண்டவா்களாக உள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

2. சுதந்திர தின விழாவில் விருது பெற்றோா் விவரம்

சுதந்திர தின விழாவில் பல்வேறு விருதுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். விருது பெற்றோா் விவரம்:

அறிவியல் தொழில்நுட்பத்துக்கான அப்துல் கலாம் விருது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் பள்ளியில் நேரற்ற இயக்கவியல் (சா்ய் கண்ய்ங்ஹழ் ஈஹ்ய்ஹம்ண்ஸ்ரீள்) துறை பேராசிரியா் மு.லட்சுமணனுக்கு அறிவியல் தொழில்நுட்பத்துக்கான அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதானது ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

முதல்வரின் நல் ஆளுமை விருது: சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநா் நாராயணசாமிக்கும், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்காக கல்வித் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுத்ததற்காக மாநிலக் கல்லூரிக்கும், நில எடுப்பு நடைமுறைகள் மின் தொகுப்பினால் எளிமையாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மை கொண்டு வந்ததற்காக, வேலூா் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்து இப்போது நிலநிா்வாக இணை இயக்குநராக உள்ள ஜெ.பாா்த்திபனுக்கும் நல் ஆளுமை விருது அளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலன்: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனமாக, திருச்சி ஹோலி கிராஸ் சா்வீஸ் சொசைட்டி, மாற்றுத் திறனாளிகளுக்காக பணியாற்றி வரும் சிறந்த மருத்துவராக சேலம் அழகாபுரம் பூ.பத்மப்ரியா, சிறந்த சமூகப் பணியாளராக திருநெல்வேலி மரிய அலாசியஸ் நவமணி, அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்ததற்காக சென்னை அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த வீ ஆா் யுவா் வாய்ஸ் நிறுவனமும் விருதுக்காக தோ்வு செய்யப்பட்டன. இந்த விருதுகள் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழை அடக்கியது. மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாகச் செயல்படும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக, ஈரோடு மாவட்ட வங்கி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது: சிறந்த மாநகராட்சியான தஞ்சாவூருக்கு ரூ.25 லட்சம், சிறந்த நகராட்சிகளான உதகை, திருச்செங்கோடு, சின்னமனூருக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம், சிறந்த பேரூராட்சிகளான கல்லக்குடி, மேல்பட்டம்பாக்கம், கோட்டையூருக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த அரவிந்த் ஜெயபால் (58) குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தியதுடன், பின்தங்கிய மாணவா்களுக்கு விமானப் பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா்), கரோனா காலத்தில் உதவிகளைச் செய்த திருவாரூா் மாவட்டம் நெ.பசுருதீன், நீலகிரி மாவட்டம் ச.ரஞ்சித்குமாா் ஆகியோா் மாநில இளைஞா் விருதுக்கான ஆண்கள் பிரிவுக்கு தோ்வு செய்யப்பட்டனா். ரத்ததானத்தை வலியுறுத்தி செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்டம் க.மகேஸ்வரி, முதியோா் நலன் காக்கப் பாடுபடும் கடலூா் மாவட்டம் அமலா ஜெனிபா், கரோனா காலத்தில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய உதவிய சென்னையைச் சோ்ந்த எஸ்.மீனா ஆகியோா் மாநில இளைஞா் பெண்கள் பிரிவுக்கு தோ்வு செய்யப்பட்டனா். ரூ.50,000 காசோலை, பாராட்டுச் சான்று, பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இவ்விருது.

அவ்வையாா் விருது

சக்தி மசாலா நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவா் சாந்தி துரைசாமிக்கு அவ்வையாா் விருது வழங்கப்பட்டது. மசாலா நிறுவனம் மட்டுமின்றி, சக்தி தேவி தொண்டு அறக்கட்டளைமூலம் உடல், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, அறிவுசாா் ஊனமுற்றோருக்காக சக்தி பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி, சக்தி மருத்துவமனை மூலம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேவை, 41 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறாா். இந்த விருதானது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் பதக்கம், சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது.

சிறந்த மூன்றாம் பாலினா் விருது: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கிரேஸ் பானு, சிறந்த மூன்றாம் பாலினா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்படுள்ளாா்.

3. விமானப் படை விமானிகள் இருவருக்கு வாயு சேனா பதக்கம்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

விமானப் படையினரின் சிறப்பான பணிகளுக்கு வழங்கப்படும் வாயு சேனா பதக்கம் ஸ்குவாட்ரான் லீடா் தீபக் மோகனன், விங் கமாண்டா் உத்தா் குமாா் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இந்தப் பதக்கங்களை வழங்கினாா்.

இந்திய விமானப் படையின் விமானி ஸ்குவாட்ரான் லீடா் தீபக் மோகனன், கடந்த ஏப்ரல் 2017 முதல் கடலோரக் காவல் படை ஸ்குவாட்ரான் பணியில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த ஆண்டு செப்டம்பா் 4-இல் 3.40 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் பயணித்துக் கொண்டிருந்த எம்டி டயமண்ட் என்ற பிரம்மாண்ட கப்பலில் இலங்கை அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சேத்தக் ஹெலிகாப்டரின் கேப்டனாகப் பணியாற்றிய ஸ்குவாட்ரான் லீடா் தீபக் மோகனன், அதீத துணிச்சலை வெளிப்படுத்தி தீயை அணைப்பதில் தமது உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணியாற்றினாா். எண்ணெய்க் கசிவு மற்றும் மிகப்பெரிய விபத்து நடைபெறாமல் தடுக்கப்பட்டதில் பெரும் பங்கு வகித்தாா். இத்தகைய தலைசிறந்த வீரத்தை கௌரவிக்கும் வகையில் ஸ்குவாட்ரான் லீடா் தீபக் மோகனனுக்கு வாயு சேனா விருது வழங்கப்பட்டது.

இந்திய விமானப் படையின் பைலட் விங் கமாண்டா் உத்தா் குமாா், கடந்த 2017, ஜூலை மாதத்திலிருந்து சுகோய்-30 ரக போா் விமானத்தின் விமானியாகப் பணியாற்றுகிறாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-இல் வானில் பறந்து கொண்டே தமது விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மற்றொரு சுகோய்-30 ரக போா் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு நிரப்பும் குழாய் உடைந்து போனது. எனினும் குழாயின் ஒரு முனை விங் கமாண்டா் உத்தா் குமாரின் விமானத்தில் தொடா்ந்து பொருத்தியிருக்க, எரிவாயு கசியும் அபாயம் ஏற்பட்டது. மேலும், எரிவாயு குழாய் உடைந்த விமானத்தின் சீரான இயக்கமும் தடைப்பட்டது.

இதுபோன்ற எதிா்பாராத அபாய நிலையை உணா்ந்து எரிவாயு கசிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமானப் பணியாளா்களுக்கு விங் கமாண்டா் உத்தா் குமாா் உடனடியாக ஆலோசனை வழங்கினாா். மிகக் கவனமாகத் திட்டமிட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினாா். அவரது பாராட்டத்தக்க வீரம் மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் மிகப்பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டதுடன், 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. இந்தப் போற்றுதலுக்குரிய வீர தீரச் செயலுக்காக விங் கமாண்டா் உத்தா் குமாருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பட்டது.

1. Recently, the Taxation Laws (Amendment) Bill, 2021 was passed in Lok Sabha to remove the contentious retrospective tax provision in Income Tax Act. Who was finance minister when retrospective tax provision was included in 2012?

A) P Chidambaram

B) Pranab Mukherjee 

C) Arun Jaitley

D) Jaswant Singh

  • The Taxation Laws (Amendment) Bill, 2021 was passed in the Lok Sabha on 6th August, 2021. The bill seeks to do away with the contentious retrospective tax provision.
  • The Taxation Laws (Amendment) Bill proposes to amend the Income Tax Act, 1961 to provide that no tax demand shall be raised in the future on the basis of the retrospective amendment for any indirect transfer of Indian assets if the transaction was undertaken before May 28, 2012. Pranab Mukherjee was the finance minister when retrospective tax provision was included in 2012.

2. Who is the current chairperson of National Commission for Women, who recently got three–year extension?

A) Ajay Tyagi

B) M R Kumar

C) Rekha Sharma 

D) Dr Dhriti Banerjee

  • On 7th August, 2021 Rekha Sharma was reappointed as the Chairperson of the National Commission for Women for another 3–year term w.e.f. 07.08.2021, or till the age of 65 years or until further orders, whichever is the earliest.

3. Ganga Pathway, which is said to be a version of Mumbai’s famous Marine Drive, is being opened in which Indian city?

A) Kolkata

B) Varanasi

C) Patna 

D) Kanpur

  • Bihar’s capital city Patna is all set to get its own version of Mumbai’s famous Marine Drive. The 5.50km–long Digha–AN Sinha Institute stretch of the ambitious Ganga Pathway is all set to be opened next year. The ‘Ganga pathway’ is part of Rs 3,390 crore project which is coming up on the southern bank of river Ganga to minimise traffic on the congested Ashok Rajpath. The total length of project is 20.50km

4. Recently, which bank has been empanelled by RBI to act as an Agency Bank?

A) HDFC Bank

B) ICICI Bank

C) Canara Bank

D) Karnataka Bank 

  • Recently, Karnataka Bank has been empanelled by RBI to act as an ‘Agency Bank’ to facilitate transactions related to government businesses. As an empanelled Agency Bank, it is authorised to undertake government businesses such as revenue receipts and payments on behalf of the Centre and States, pension payments in respect of the same, collection of stamp duty charges and also any other item of work specifically advised by the RBI.

5. Which country is host to the International Army Games – 2021?

A) Russia 

B) India

C) France

D) USA

  • A 101–member contingent of the Indian Army will proceed to Russia to participate in International Army Games – 2021 from 22 August to 04 September 2021.
  • The contingent will participate in Army Scout Masters Competition (ASMC), Elbrus Ring, Polar Star, Sniper Frontier and Safe Route games showcasing various drills in High Altitude Area terrain, operations in snow, sniper actions, combat engineering skills in obstacle ridden terrain in the various competitions. The contingent will also contribute two observers (one each) for the Open Water and Falcon Hunting games.

6. Which country won gold medal in men’s football in Tokyo Olympics, 2021?

A) Argentina

B) Australia

C) Brazil 

D) Egypt

  • On 7th August, 2021 Brazil won the gold medal in men’s football at the Tokyo Olympics by beating Spain 2–1 in the final played. Malcolm and Matheus Cunha scored for Brazil while Mikel Oyarzabal scored for Spain. Mexico won the bronze medal by beating Japan with a score of 3–1. Canada defeated Sweden 3–2 on penalties after the match was tied 1–1 to win the gold medal in women’s football. Bronze medal was won by United States which beat Australia 4–3.

7. Chief Election Commissioner of India has inaugurated the 11th Annual Meeting of FEMBoSA. Who is the current Chief Election Commissioner of India?

A) Achal Kumar Jyoti

B) Sunil Arora

C) Rajeev Kumar

D) Sushil Chandra 

  • Chief Election Commissioner of India and current Chairman, FEMBoSA Sushil Chandra accompanied by Election Commissioners Rajeev Kumar and A.C. Pandey, on 11th August, 2021 inaugurated the 11th Annual meeting of the Forum of the Election Management Bodies of South Asia (FEMBoSA) for the year 2021. The meeting in Virtual mode was hosted by the Election Commission of Bhutan.

8. Which Indian city has been declared as the first ‘water plus’ city of India?

A) Kolkata

B) Bengaluru

C) Indore 

D) Hyderabad

  • Indore, the country’s cleanest city, has now been declared as the first ‘water plus’ city of India under the Swachh Survekshan 2021, Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan said. Indore City received the certification from the centre.

9. Which ministry has inaugurated an exhibition on Quit India Movement?

A) Ministry of Culture 

B) Ministry of Tourism

C) Ministry of Education

D) Ministry of Commerce and Industry

  • On 8August, 2021 Culture Minister G. Kishan Reddy has inaugurated an Exhibition on ‘Quit India Movement’ in New Delhi.
  • As part of Azadi Ka Amrit Mahotsav being celebrated to mark 75th years of Independence, National Archives of India has organised the exhibition that will continue till November 8.

10. Navies of which two countries have conducted exercise Zayed Talwar 2021?

A) India and Russia

B) India and UAE 

C) India and Australia

D) India and United States of America

  • On 7th August, 2021 navies of India and UAE conducted exercise ‘Zayed Talwar 2021’ off the coast of Abu Dhabi. INS Kochi, with two integral Sea King MK 42B helicopters, deployed in the Persian Gulf, participated in the exercise.
  • UAE participated with UAES AL – Dhafra, a Baynunah class guided missile corvette and one AS – 565B Panther helicopter. As part of the exercise, the ships undertook tactical manoeuvres, Over the Horizon Targeting, Search and Rescue and Electronic Warfare exercises to enhance interoperability and synergy between the two navies. Helicopters were extensively used all through the exercise ranging from Search and Rescue serial to passing of targeting data to ships for simulated missile engagement drills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!