TnpscTnpsc Current Affairs

16th & 17th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th & 17th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th & 17th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘முக்கிய மந்திரி பக்வானி பீமா யோஜனா’ திட்டத்தைச் செயல்படுத்துகிற மாநிலம் எது?

அ) புது தில்லி

ஆ) ஹரியானா 

இ) இராஜஸ்தான்

ஈ) பஞ்சாப்

  • ஹரியானாவின் வேளாண் அமைச்சர், ‘முக்கிய மந்திரி பக்வானி பீமா யோஜனா’ என்ற தளத்தைத்தொடங்கினார். இத்திட்டத்தின்கீழ், இயற்கைப் பேரிடர்களால் உழவர்தம் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அம்மாநில உழவுத் துறையின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்திற்கான தொடக்க நிலை மூலதனமாக `10 கோடியை அம்மாநில அரசு கொண்டிருக்கும்.

2. ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ஏவுகலம்மூலம் தனது முதல் வணிக செயற்கைக்கோளை ஏவிய இந்திய விண்வெளி தொழில்நுட்ப துளிர் நிறுவனம் எது?

அ) பிக்ஸ்ஸல் (Pixxel) 

ஆ) அக்னிகுல்

இ) ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

ஈ) துருவா ஸ்பேஸ்

  • இந்திய விண்வெளி தொழில்நுட்ப துளிர் நிறுவனமான ‘Pixxel’, ‘சகுந்தலா’ அல்லது ‘Pixxel TD-2’ என அழைக்கப் படும் அதன் முதல் வணிக செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.
  • அமெரிக்காவின் கேப் கனாவரலிலிருந்து ஸ்பேஸ்X’இன் டிரான்ஸ்போர்ட்டர்-4 மிஷனில் எலோன் மஸ்க் இயக்கும் ஸ்பேஸ்X’இன் பால்கன்-9 ஏவுகலம்மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

3. ஐநா, ‘அரசுசாரா நிறுவனங்களின் நிகர-சுழிய உமிழ்வு உறுதிகள்’ குறித்த உயர்நிலை வல்லுநர் குழுவில் நியமி -க்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ) இரமேஷ் சந்த்

ஆ) இராஜீவ் குமார்

இ) அருணாபா கோஷ் 

ஈ) அரவிந்த் பனகாரியா

  • அருணாபா கோஷ், ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸால், ‘அரசுசாரா நிறுவனங்களின் நிகர-சுழிய உமிழ்வு உறுதிப்பாடுகள் குறித்த உயர்நிலை வல்லுநர் குழு’வுக்கு நியமிக்கப்பட்டார்.
  • அருணாபா கோஷ் ஆனவர் காலநிலை மற்றும் ஆற்றல் மதியுரைக்குழுவான ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) தசெஅ (CEO) ஆவார். இவ்வல்லுநர் குழுவிற்கு கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற முன்னாள் அமைச்சர் கேத்தரின் மெக்கென்னா தலைமை தாங்குவார்.

4. சமீபத்தில் 13 புதிய மாவட்டங்களை உருவாக்கி, அதன் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கையை 26ஆக உயர்த்திய இந்திய மாநிலம் எது?

அ) தெலுங்கானா

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்களை உருவாக்கி அதன் மொத்த எண்ணிக்கையை 26ஆக உயர்த்தினார். அவ்வனைத்து புதிய மாவட்டங்களும் ஏப்ரல் 4 முதல் நடைமுறைக்கு வந்தன.
  • ஆந்திர பிரதேச மாவட்டங்கள் உருவாக்கும் சட்டத்தின் பிரிவு 3 (5)-இன் கீழ் பதிமூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது.

5. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) ஆப்கானிஸ்தான் 

ஈ) நேபாளம்

  • ஆப்கானிஸ்தான் தற்போது உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உள்ளது.
  • அண்மையில், ஆப்கானிஸ்தானில் கசகசா பயிரிட தடை விதிப்பதாக தலிபான்கள் அறிவித்தனர். மற்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்வது, பயன்படுத்துவது அல்லது கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டது. ஐநா மதிப்பீட்டின்படி, 2017ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் அபின் உற்பத்தி $1.4 பில்லியன் டாலர்களாக இருந்தது.

6. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை 2022 ஏப்ரலின்படி, 2022-23-க்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பு என்ன?

அ) 9.5 சதவீதம்

ஆ) 8.1 சதவீதம்

இ) 7.2 சதவீதம் 

ஈ) 6.9 சதவீதம்

  • இந்திய ரிசர்வ் வங்கி ஓர் இணக்கமான நிலைப்பாட்டை பராமரித்து, 2022-23-க்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை முந்தைய கணிப்பு 7.8 சதவீதத்திற்கு எதிராக 7.2%ஆகக்குறைத்தது.
  • 2022-23 நிதியாண்டின் பணவீக்க முன்கணிப்பு 4.5 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் உருவாகி வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மீதான தீவிர நிச்சயமற்ற தன்மை ஆகியவை இதற்கான காரணங்களாம்.

7. ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவைச் (PMJAY) செயல்படுத்துவதற்கான மைய முகமை எது?

அ) தேசிய மருத்துவ ஆணையம்

ஆ) இந்திய மருத்துவ கவுன்சில்

இ) தேசிய நலவாழ்வு ஆணையம் 

ஈ) எய்ம்ஸ்

  • தேசிய நலவாழ்வு ஆணையமானது (NHA) தேசிய அளவில் PM-JAY-ஐ செயல்படுத்துவதற்கான மைய முகமையாக அமைக்கப்பட்டது. தேசிய நலவாழ்வு ஆணையம், PM JAY இன்கீழ், ஹெல்த் பெனிபிட் பேக்கேஜ், 2022-இன் புதிய பதிப்பைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 365 புதிய நடைமுறைகளைச் சேர்த்து மொத்த எண்ணிக்கையை 1,949 ஆக மாற்றியது.

8. அண்மையில், ‘AVSAR’ திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ) இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் 

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) இந்திய உச்சநீதிமன்றம்

ஈ) இந்திய தேர்தலாணையம்

  • இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI) அண்மையில் விமான நிலையத்தை பிராந்தியத்தின் திறமையான கைவினைஞர்களுக்கான இடமாக (Airport as Venue for Skilled Artisans of the Region – AVSAR) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது விமான நிலையங்களில், சுய உதவி குழுக்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கு (அ) காட்சிப்படுத்துவதற்கு இடம் ஒதுக்குவதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், AAIஆல் இயக்கப்படும் ஒவ்வொரு விமான நிலையத்திலும், 100-200 சதுர அடி பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது.

9. அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் ஊக்குவிப்புக்கான பணிக்குழுவின் தலைவர் யார்?

அ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சக செயலர் 

ஆ) மின்னணு & IT அமைச்சர்

இ) வணிகம் & தொழிற்துறை அமைச்சர்

ஈ) மின்னணு மற்றும் IT செயலர்

  • அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் ஊக்குவிப்புக்கான பணிக்குழுவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.
  • தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளரால் வழிநடத்தப்படும் ஊக்குவிப்பு பணிக்குழு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்; கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் செயலாளர்களைக் கொண்டிருக்கும்.

10. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் முறை எதன் ஊடாக முன் மொழியப்படுகிறது?

அ) USSD

ஆ) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) 

இ) ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (AePS)

ஈ) உடனடி கட்டண சேவை (IMPS)

  • ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, ஒரு சில வங்கிகளால் மட்டுமே வழங்கப்பட்ட அட்டையில்லா ரொக்கம் பெறுதல் சேவை தற்போது அனைத்து வங்கிகளிலும் ATM’களிலும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ)மூலம் கிடைக்கப்பெறும்.
  • வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்காக UPI பயன்படுத்தப்ப -டும், மேலும் இந்நடவடிக்கை பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் மற்றும் நிதி மோசடிகளை ஒழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘உடான்’ மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ் கேஷோத் – மும்பை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது

மத்திய அரசின் மண்டல இணைப்புத் திட்டமான ‘உடான்’ திட்டத்தின்கீழ் கேஷோத்-மும்பை வழித்தடத்தில் விமான சேவைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் 4.1 ஏல முறையின்கீழ் அலையன்ஸ் விமான நிறுவனத்திற்கு இந்த வான் வழித் தடம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடான் – மண்டல இணைப்புத்திட்டத்தின்கீழ் 417 வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்படும்.

2. புதுச்சேரி பல்கலைக்கு பசுமை சாம்பியன் விருது

மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம், 2021-22ஆம் ஆண்டுக்கான ‘மாவட்ட பசுமை சாம்பியன்’ என்ற விருதை புதுச்சேரி பல்கலைக்கு வழங்கி அங்கீகரித்தது.

இந்தப் பல்கலைக்கழகமானது கடந்த 4 ஆண்டுகளாக பசுமை வளாகம், (கிரீன் கேம்பஸ்) என்ற திட்டத்தின் கீழ், பல நிலையான வளர்ச்சி, பருவநிலைமாற்ற தொடர்பான முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

3. ஏப்.20-இல் ‘வாக்ஷீர்’ அறிமுகம்: ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் 6ஆவது நீர்மூழ்கிக்கப்பல்

பி75 ஸ்கார்பீன் திட்டத்தின்கீழ் 6ஆவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’ ஏப்.20ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே 3.75 பில்லியன் டாலர்கள் (சுமார் `28,600 கோடி) மதிப்பில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், இந்திய கடற்படைக்காக 6 ஸ்கார்பீன் ரக தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது. அந்தக் கப்பல்கள் டீசல் மற்றும் மின்சார உதவியுடன் இயங்குபவை. பிரான்ஸில் உள்ள நேவல் குரூப் நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் உள்ள மஸகான் டாக் கப்பல் கட்டுமான பொதுத்துறை நிறுவனத்தால் அந்தக் கப்பல்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கன்டேரி, ஐஎன்எஸ் கரஞ், ஐஎன்எஸ் வேலா ஆகிய 4 ஸ்கார்பீன் கப்பல்கள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ‘வாகீர்’ என்ற பெயர்கொண்ட ஐந்தாவது ஸ்கார்பீன் கப்பல் தற்போது சோதனை ஓட்டத்திலுள்ளது.

4. 144 தொல்காப்பியம் தொடர்பான நூல்கள் பதிவேற்றம்

தொல்காப்பியம் குறித்த 144 நூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழநாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் சனிக்கிழமை டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியரின் 2,733ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

1. Which state implements the ‘Mukhya Mantri Bagwani Bima Yojana’?

A) New Delhi

B) Haryana 

C) Rajasthan

D) Punjab

  • Haryana Agriculture Minister launched the portal of ‘Mukhya Mantri Bagwani Bima Yojana.’ Under this scheme, farmers will be compensated for the damage caused to their crops due to natural calamities.
  • As per the agriculture department, Rs 10 crore will be kept by the state government as initial capital for the scheme.

2. Which Indian space tech start–up launched its first commercial satellite with SpaceX’s Falcon–9 rocket?

A) Pixxel 

B) Agnikul

C) Skyroot Aerospace

D) Dhruva Space

  • Indian space tech start–up Pixxel successfully launched its first fully–fledged commercial satellite apparently called ‘Shakuntala’ or Pixxel TD–2. The satellite was launched with Elon Musk–run SpaceX’s Falcon–9 rocket aboard SpaceX’s Transporter–4 mission from Cape Canaveral in the United States.

3. Which Indian has been appointed to the UN ‘High–Level Expert Group on Net–Zero Emissions Commitments of Non–State Entities’?

A) Ramesh Chand

B) Rajiv Kumar

C) Arunabha Ghosh 

D) Arvind Panagariya

  • Arunabha Ghosh, been appointed by UN Secretary–General Antonio Guterres to the ‘High–Level Expert Group on Net–Zero Emissions Commitments of Non–State Entities’.
  • Arunabha Ghosh is the CEO of the Council on Energy, Environment and Water (CEEW), a climate and energy think tank. The expert group will be chaired by former Canadian Minister of Environment and Climate Change Catherine McKenna.

4. Which Indian state recently carved out 13 new districts, taking the total number to 26?

A) Telangana

B) Andhra Pradesh 

C) Odisha

D) West Bengal

  • Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy digitally inaugurated 13 new districts in the state, taking the total number to 26. All the new districts have come into effect from April 4.
  • The state government issued the official gazette notification for creating 13 new districts under the AP Districts Formation Act, Section 3(5).

5. As of 2022, which country is the world’s biggest opium producer?

A) China

B) India

C) Afghanistan 

D) Nepal

  • Afghanistan is the the world’s biggest opium producer, at present. Recently, the Taliban announced a ban on the cultivation of poppy in Afghanistan.
  • The production, use or transportation of other narcotics was also banned. As per the United Nations estimates, Afghanistan’s opium production was worth USD 1.4 billion in 2017. It has been continuously increasing in recent months.

6. What is the real Gross Domestic Product (GDP) growth projection for 2022–23, as per RBI’s Monetary Policy April 2022?

A) 9.5 per cent

B) 8.1 per cent

C) 7.2 per cent 

D) 6.9 per cent

  • The Reserve Bank of India (RBI) maintained an accommodative stance and cut the real Gross Domestic Product (GDP) growth projection for the 2022–23 to 7.2 per cent, against the earlier projection of 7.8 per cent.
  • The inflation forecast has also been hiked from 4.5 per cent to 5.7 per cent for the FY 2022–23. The reasons are excessive volatility in global crude oil prices and extreme uncertainty over the evolving geopolitical tensions.

7. Which is the nodal agency to implement the Ayushman Bharat –Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)?

A) National Medical Commission

B) Medical Council of India

C) National Health Authority 

D) AIIMS

  • The National Health Authority (NHA) was set–up to implement the set–up to implement the PM–JAY at the national level.
  • The National Health Authority has recently launched a new version of the Health Benefit Package, 2022, under the PM JAY. It added 365 new procedures to take the total to 1,949.

8. Which institution recently launched the ‘AVSAR’ scheme?

A) Airports Authority of India 

B) Reserve Bank of India

C) Supreme Court of India

D) Election Commission of India

  • The Airports Authority of India (AAI) has recently launched Airport as Venue for skilled artisans Of the Region (AVSAR) scheme. It aims to allocate space to Self Help Groups (SHGs) at its airports for selling or showcasing the self–made products of their region.
  • Under this scheme, an area of 100–200 square feet have been earmarked at each AAI–operated airport.

9. Who is the head of the ‘Animation, visual effects, gaming and comic (AVGC) Promotion’ Task Force?

A) Secretary of Ministry of Information & Broadcasting 

B) Minister of Electronics and IT

C) Minister of Commerce and Industry

D) Secretary of Electronics and IT

  • Ministry of Information and Broadcasting constituted Animation, visual effects, gaming and comic (AVGC) Promotion task force, which will recommend a national curriculum framework for higher studies in these segments.
  • The AVGC Promotion task force will be headed by the Secretary of the Ministry of Information & Broadcasting. It will have Secretaries of–Ministry of Skill Development and Entrepreneurship; Department of Higher Education; Ministry of Education; Ministry of Electronics and IT, and DPIIT.

10. As per RBI’s recent notification, Card–less cash withdrawal is proposed through which platform?

A) USSD

B) Unified Payments Interface (UPI) 

C) Aadhaar Enabled Payment System (AePS)

D) Immediate Payment Service (IMPS)

  • As per RBI, Card–less cash withdrawal, which was offered only by a few banks, will now be made available across all banks and ATMs via the Unified Payments Interface (UPI). UPI will be used for customer authorisation and this step is expected to enhance ease of transactions and eliminate frauds.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!