TnpscTnpsc Current Affairs

15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாமாபெய் என்ற தொல்லியல் தளம் அமைந்துள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) வியட்நாம்

இ) சீனா 

ஈ) சுமத்ரா

  • சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெய்ஜிங்கிலிருந்து நூறு மைல்களுக்கு குறைவான தொலைவில் உள்ள சியாமாபெய் என்ற இடத்தில் பழங் கற்கால பண்பாட்டின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
  • அங்கு, பண்டைய ஹோமினின்கள் ஓச்சர் எனப்படும் செந்நிற நிறமியைப் பயன்படுத்தியது மற்றும் கல்லில் இருந்து சிறிய கத்தி போன்ற கருவிகளை வடிவமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் முந்தையவை என்று நம்பப்படுகிறது.

2. ‘Role of Labour in India’s Development’ என்ற நூலை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஆ) NITI ஆயோக்

இ) பணியாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் 

ஈ) ASSOCHAM

  • ‘இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு’ என்ற நூலினை தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து பிரபல கல்வியாளர்கள் & களப்பணியாளர்கள் எழுதிய 12 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
  • வி வி கிரி தேசிய தொழிலாளர் கல்விக் கழகம் இந்த நூலினை வெளியிட்டுள்ளது.

3. MSME அடைவகம், வடிவமைப்பு & IPR திட்டங்களின் ஒருங்கிணைப்பாக தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தின் பெயர் என்ன?

அ) MSME சாம்பியன்ஸ் திட்டம்

ஆ) MSME புத்தாக்க திட்டம் 

இ) MSME பிளஸ் திட்டம்

ஈ) MSME புரோ திட்டம்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதுமைகள் (வழிகாட்டுதல், வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை) திட்டத்தையும் MSME ஐடியா ஹேக்கத்தானையும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.
  • சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் படைப்புத்திறனை ஊக்குவித்து ஆதரிக்க MSME புதுமைகள் திட்டம் உதவும்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Xenotransplantation’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) கிரிப்டோ-நாணயம்

ஆ) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 

இ) குறைகடத்தி உற்பத்தி

ஈ) பருவநிலை மாற்றம்

  • அயல்பதியஞ்செய்தல் (Xenotransplantation) என்பது அ) மனிதரல்லாத விலங்குமூலத்திலிருந்து உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகள், அல்லது (ஆ) ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மனித உடல் திரவங்கள், செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.
  • இதயம் செயலிழந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் மாற்றப்பட்ட நோயாளி அண்மையில் காலமானார். இது இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.

5. உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எது?

அ) பாதுகாப்பு உபகரணங்கள்

ஆ) கச்சா பெட்ரோலியம் 

இ) சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம்

ஈ) எஃகு

  • உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எரிசக்தி குறிப்பாக கச்சா பெட்ரோலியம் (USD 123 பில்லியன்). அதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியமும் எரிவாயுவும் உள்ளது.
  • சமீபத்தில், உக்ரைன் மீதான போர்த்தொடுப்பாள் பொருளாதாரத்தடைகளால் பாதிக்கப்பட்ட ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி தடையை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் செய்யும் முதன்மையாளராக ரஷ்யா உள்ளது.

6. எந்த மத்திய அமைச்சகத்தால், டிரோன் மற்றும் டிரோன் கூறுகளுக்கான PLI திட்டம் அறிவிக்கப்பட்டது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம்

இ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு டிரோன் தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங் -கள் வரவேற்கப்படுவதாக சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2021 செப்.30 அன்று அறிவிக்கப்பட்டது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வீதமானது மதிப்புக்கூடுதல் தொகையில் 20% ஆகும்.

7. ‘யூரோபா கிளிப்பர் விண்கலம்’ என்பது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ) நாசா 

ஆ) ஈஎஸ்ஏ

இ) ஜாக்ஸா

ஈ) ரோஸ்கோஸ்மாஸ்

  • 2024ஆம் ஆண்டில் வியாழனின் நிலவான யூரோபாவிற்கு ஏவப்படுவதற்கு முன், ‘யூரோபா கிளிப்பர் விண்கலத்தின்’ இறுதிக்கட்டப் பணிகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
  • இந்த விண்கலத்தின் முதன்மை அமைப்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் ஆய்வகக்கத்தால் வடிவமைத்து கட்டப்பட்ட பத்து அடி உயரமுள்ள ஒரு மாபெரும் உந்துவிசை தொகுதி ஆகும்.

8. ‘Lunar Reconnaissance’ சுற்றுக்கலனை ஏவிய நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) ஜப்பான்

ஈ) இந்தியா

  • லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (LRO) என்பது NASA இன் ரோபோ விண்கலமாகும்.
  • இது நிலவின் மையத்தில் இருந்து விலகி துருவ சுற்றுப் பாதையில் அதனைச் சுற்றி வருகிறது. நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் திங்களின் மேற்பரப்பை ஆய்வதற்காக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹோலோங்கி நகரம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேகாலயா

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) இராஜஸ்தான்

ஈ) ஒடிஸா

  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஹோலோங்கியில் கிரீன்பீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் பணியை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் மேற்கொண்டு உள்ளது. இது மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. கிரீன்பீல்ட் விமான நிலையம் `645 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆக.15, 2022 முதல் செயல்படத்தொடங்கும்.

10. எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையால், “பிராஜ் ஹோலி மகோத்சவம்” நடத்தப்படுகிறது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஹரியானா

ஈ) இராஜஸ்தான் 

  • இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை, மார்ச்.12-14 வரை மூன்று நாள் ஹோலி பண்டிகையான, “பிராஜ் ஹோலி மகோத்சவத்தை” நடத்தவுள்ளது.
  • அக்கொண்டாட்ட நிகழ்வுகள் பாரத்பூர், டீக் மற்றும் கமான் நகரங்களில் நடைபெறும். உள்ளூர் விளையாட்டுகள், பாரம்பரிய நடனம் மற்றும் இசையுடன் அனைத்து வயது சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விப்பதற்காக இந்தக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘`5,000 கோடி முதலீடு, 70,000+ வேலைவாய்ப்பு’ – சென்னையில் மிகப்பெரிய ஐடி வளாகத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல்

சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸின் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்தக் கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 5,000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், DLF நிறுவனம் இத்தொகையை படிப் படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.

இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும்.

2. நீர்நிலை ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு முதலிடம்

இராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துாடு கூறியதாவது: நாடு முழுதும், 9.45 இலட்சம் நீர்நிலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில், 18 ஆயிரத்து 691 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 3,920; தெலுங்கானாவில், 3,032 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

3. ஏர் இந்தியாவின் புதிய தலைவராக டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம்

ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரனை நியமித்து டாடா குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. ஏப்ரல்.1ஆம் தேதி இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார். அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின.

துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணிநியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது என இந்தியாவில் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து அவர் பதவியேற்க மறுத்து விட்டார். இந்தநிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் வழங்கியது.

சந்திரசேகரன், டாடா குழுமத்திற்கு தலைமைதாங்கும் முதல் பார்சி அல்லாத தொழில்முறை நிர்வாகி ஆவார்.

4. திருக்குறள் – ‘புளியமரத்தின் கதை’ – தெலுங்கு நூல்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்

உலகப்பொதுமறையாம் திருக்குறள், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகியவற்றின் தெலுங்கு நூல்களை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில்நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்பத்திறனை மேம்படுத்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும், காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப (CTS) நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தம் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்மூலமாக, கணினி மயக்கற்றல் மேம்பாட்டுத் திட்டத்துக்கு காக்னிசன்ட் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக அரசுடன் இணைந்து செயலாற்றும்.

நூல்கள் வெளியீடு: ‘உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள் நூலானது, பேராசிரியர் ஜெயப் பிரகாஷ்மூலமாக தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புகழ்பெற்ற எழுத்தாளர் சுந்தரராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ நூலானது, கெளரி கிருபானந்தனால் தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யப்
-பட்டுள்ளது. இந்த 2 நூல்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

5. சேதி தெரியுமா?

மார்ச் 6: மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவது முறையாகப் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்கிற சிறப்பை இந்தியாவின் மிதாலி ராஜ் பெற்றார்.

மார்ச் 7: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசு வழங்கிய 2020-ஆம் ஆண்டுக்கான ‘மகளிர் சக்தி’ விருது நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் ஜெயமுத்து, தேஜம்மாளுக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான விருது மன நல மருத்துவ நிபுணர் தாரா ரங்கசாமிக்கும் வழங்கப்பட்டன.

மார்ச் 8: தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், இனி குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என மு க ஸ்டாலின் அறிவித்தார்.

மார்ச் 9: குஜராத் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்ச் 9: முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 10: 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

மார்ச் 10: இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

மார்ச் 11: இந்தியாவில் முதன்முறையாக முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்பூங்கா ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.

6. மார்ச்.15 – உலக நுகர்வோர் நாள்

கருப்பொருள்: Fair Digital Finance

1. Archaeological site named Xiamabei, which was in the news recently, is located in which country?

A) Japan

B) Vietnam

C) China 

D) Sumatra

  • Archeologists from China have discovered remnants of an Old Stone Age culture at a site named Xiamabei which is less than 100 miles from Beijing. At the site, it is discovered that ancient hominins used a reddish pigment called ochre and crafted tiny blade–like tools from stone. It is believed that these remains are more than 40,000 years old.

2. Which institution released the book titled ‘Role of Labour in India’s Development’?

A) International Labour Organisation

B) NITI Aayog

C) Ministry of Labour and Employment 

D) ASSOCHAM

  • Union Minister for Labour and Employment Bhupender Yadav released a book titled ‘Role of Labour in India’s Development’.
  • The Book contains 12 articles written by eminent academicians on the contribution of labour in India’s development journey. It was published by V V Giri National Labour Institute, which is an autonomous training institute under the Ministry of Labour.

3. What is the name of the new scheme launched as a consolidation of MSME Incubation, Design and IPR schemes?

A) MSME Champions Scheme

B) MSME Innovative Scheme 

C) MSME Plus Scheme

D) MSME Pro Scheme

  • Union Minister for MSME Narayan Rane launched the MSME Innovative Scheme (Incubation, Design and IPR), as the combination of existing sub–schemes around incubation, design, and intellectual property rights (IPR) for MSMEs.
  • This will act as a hub for innovation activities facilitating development of ideas into viable business proposition which benefits society. The Minister also launched the MSME Idea Hackathon 2022.

4. Xenotransplantation, which was seen in the news recently, is associated with which field?

A) Crypto–currency

B) Organ Transplantation 

C) Semiconductor Manufacturing

D) Climate Change

  • Xenotransplantation is defined as the transplantation into a human recipient of either (a) live cells, tissues or organs from a non–human animal source, or (b) human body fluids, cells, tissues or organs that have had ex–vivo (outside) contact with live non–human animal cells, tissues or organs. Two months after the landmark surgery, where a patient whose failing heart had been replaced with the heart of a genetically altered pig, died recently.

5. Which product is Russia’s biggest contribution to global trade?

A) Defence Equipment

B) Crude Petroleum 

C) Refined Petroleum

D) Steel

  • Russia’s biggest contribution to global trade is Energy especially Crude Petroleum (USD 123 billion).
  • It is followed by Refined Petroleum and Gas. Recently, Russia announced an export ban for more than 200 products after it was hit by sanctions over the invasion of Ukraine. Russia still remains a key energy supplier to European Union countries.

6. PLI Scheme for Drone and Drone Components was announced by which Union Ministry?

A) Ministry of Defence

B) Ministry of Civil Aviation 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of MSME

  • The Ministry of Civil Aviation has invited applications for the production–linked incentive (PLI) scheme for drones and drone components that was announced in 2021. Under the PLI scheme, the incentive for a manufacturer of drones and drone components will be 20 percent of the “value addition” made by the company during the next three years. The scheme was announced in September 2021.

7. ‘Europa Clipper spacecraft’ is a flagship project of which space agency?

A) NASA 

B) ESA

C) JAXA

D) ROSCOSMOS

  • NASA has started assembling the ‘Europa Clipper spacecraft’ in the mission’s final phase before the launch to Jupiter’s moon Europa in 2024. The main body of the spacecraft is a giant 10–foot–tall propulsion module, designed and constructed by Johns Hopkins Applied Physics Laboratory.

8. Which country launched ‘Lunar Reconnaissance Orbiter’?

A) Russia

B) USA 

C) Japan

D) India

  • The Lunar Reconnaissance Orbiter (LRO) is a NASA robotic spacecraft orbiting the Moon in an eccentric polar mapping orbit. NASA’s Lunar Reconnaissance Orbiter is set to capture the surface of the Moon.

9. Hollongi, which was seen in the news, is a city located in which state?

A) Meghalaya

B) Arunachal Pradesh 

C) Rajasthan

D) Odisha

  • Airports Authority of India has undertaken the work of constructing a Greenfield Airport in Hollongi, in the state of Arunachal Pradesh. It is located at 15 kms from the state’s capital city of Itanagar. The Greenfield Airport will be constructed with an estimated amount of Rs 645 crores and will be operational from 15 August 2022.

10. “Braj Holi Mahotsav” is hosted by the tourism department of which state?

A) Uttar Pradesh 

B) Madhya Pradesh

C) Haryana

D) Rajasthan

  • The Tourism Department of Rajasthan is set to host the three–day Holi festival “Braj Holi Mahotsav” from March 12 to 14 in the state. The celebration events would be held in Bharatpur, Deeg and Kaman cities. The celebration is aimed to entertain tourists of all ages with the colours, local sports, traditional dance and music.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!