TnpscTnpsc Current Affairs

15th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘Women in the Boardroom’ என்ற அறிக்கையின்பாடு 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவ சதவீதம் என்ன?

அ) 4.1

ஆ) 7.1

இ) 17.1 

ஈ) 27.1

  • ‘Deloitte’s Women in the Boardroom’ அறிக்கையின்படி, இந்திய வாரியங்களில் உறுப்பினராக உள்ள மகளிரின் பிரதிநிதித்துவ சதவீதம், 2014இல் 9.4 சதவீதமாக இருந்து 2021இல் 17.1%ஆக அதிகரித்துள்ளது.
  • ஆனால், மகளிரின் பிரதிநிதித்துவம் வாரிய தலைமைப் பதவிகளில் 3.6% மட்டுமே உள்ளது. இச்சதவீதம் 2018இல் இருந்து 0.9% குறைந்துள்ளது. உலக அளவில் 19.7 சதவீத வாரிய இடங்களை பெண்கள் கொண்டுள்ளனர். இது 2018ஆம் ஆண்டிலிருந்து 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2. “ஹோகே டௌன்” தேசியப்பூங்காவில் அமைந்துள்ள “ஹோகர் சோனென்ப்ளிக்” மலை உள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) ஜெர்மனி

இ) ஆஸ்திரியா 

ஈ) நியூசிலாந்து

  • ஆஸ்திரியாவில் அமைந்துள்ள “ஹோகே டௌன்” தேசிய பூங்காவில் உள்ள “ஹோகர் சோனென்ப்ளிக்” மலையின் உச்சியில் 3106 மீட்டர் உயரத்தில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, அம்மலை உச்சியில் அளவிடப்பட்ட நானோபிளாஸ்டிக் துகள்களுள் சுமார் 30% நகரங்களிலிருந்து 200 கிமீ சுற்றளவில் உருவாகின்றன.

3. ‘PM-DevINE’ என்ற புதிய திட்டத்தின் மைய முகமை எது?

அ) நபார்டு

ஆ) வடகிழக்குச்சபை 

இ) NITI ஆயோக்

ஈ) IRDAI

  • 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல்செய்யும்போது, புதிய திட்டமாக, வட கிழக்குக்கான பிரதமரின் வளர்ச்சி முன்முயற்சியை ‘PM-DevINE’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ‘PM-DevINE’ வடகிழக்குக்கவுன்சில்மூலம் செயல்படுத்தப்படும்.
  • முதற்கட்டமாக `1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்கின் தேவைகளின் அடிப்படையில் உட்கட்ட -மைப்பு & சமூகவளர்ச்சித்திட்டங்களுக்கு நிதியளிக்கும்.

4. காலநிலை மாற்றமானது தாவரங்களை முன்னதாகவே பூக்கத்தூண்டுகிறது எனக் கண்டறிந்துள்ள நாடு எது?

அ) இத்தாலி

ஆ) UK 

இ) ஜெர்மனி

ஈ) இஸ்ரேல்

  • இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்களின் அண்மைய ஆய்வின்படி, காலநிலை மாற்றம் தாவரங்களை முன்பே பூக்கத்தூண்டுகிறது. UK தாவரங்களின் சராசரி பூக்கும் நாளானது 1986’க்கு முன் இருந்ததைவிட ஒரு மாதம் முன்னதாக உள்ளது.

5. டாம்டாம் போக்குவரத்துக் குறியீட்டின்படி, எந்த இந்திய நகரம் அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ளது?

அ) புது தில்லி

ஆ) மும்பை 

இ) பெங்களூரு

ஈ) சென்னை

  • புவி-இருப்பிட தொழில்நுட்ப வல்லுநரான் டாம்டாம் அதன் வருடாந்திர டாம்டாம் போக்குவரத்துக்குறியீட்டின் 11ஆம் பதிப்பை வெளியிட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டில் 58 நாடுகளில் உள்ள 404 நகரங்களில் காணப்பட்ட போக்கு வரத்து போக்குகளை பகுப்பாய்வுசெய்யும் அறிக்கையாகும். உலக சராசரியான 10 சதவீத நெரிசலைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டது.
  • ஆனால், இந்தியாவின் நான்கு நகரங்கள் இக்குறியீட்டின் முதல் 25 இடங்களுள் இடம்பெற்றுள்ளன. அவை மும்பை (5ஆவது), பெங்களூரு (10ஆவது), மற்றும் புது தில்லி (11ஆவது) மற்றும் புனே (21ஆவது).

6. வருடாந்திர கல்விநிலை அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) பிரதம் அறக்கட்டளை 

இ) கல்வி அமைச்சகம்

ஈ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்

  • பிரதம் அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை ஆய்வுசெய்வதற்காக பள்ளிகளில் விரிவான ஆய்வை நடத்துகிறது. சமீபத்தில், அது ஆண்டு கல்விநிலை அறிக்கையை (ASER, மேவ) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் எண் திறன்கள் COVID காலத்தில் குறைந்துள்ளன.

7. கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு குறித்த தேசிய சிறப்பு மையம் (NCOE-CCU) நிறுவப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ) டிஆர்டிஓ

ஆ) ஐஐடி – பம்பாய் 

இ) IISc – பெங்களூரு

ஈ) இஸ்ரோ

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இந்திய தொழில்நுட்பக்கழகம் பம்பாயில் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடுகுறித்த (NCOE-CCU) தேசிய சிறப்பு மையத்தை நிறுவியுள்ளது. DSTமூலம் மத்திய அரசு நிதியுதவிபெறும் இந்தியாவின் முதல் மையம் இதுவாகும்.
  • இந்தச் சிறப்பு மையம் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களின் திறனை ஆராய்கிறது. இது இந்தியாவின் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய உதவும் என எண்ணப்படுகிறது.

8. சமீபத்தில் எந்த நாட்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் -களால் பண்டைய ரோமானிய குடியேற்றம் கண்டறியப் -பட்டது?

அ) கிரேக்கம்

ஆ) UK 

இ) அமெரிக்கா

ஈ) ரஷ்யா

  • UKஇன் ஆராய்ச்சியாளர்கள், ‘HS2’ எனப்படும் அதிவேக இரயில்பாதைத் திட்டத்துக்காக அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பண்டைய ரோமானிய குடியேற்ற தளத்தைக்கண்டுபிடித்தனர்.
  • சமீபத்திய அகழ்வாராய்ச்சியில், விஞ்ஞானிகள் 40 தலை துண்டிக்கப்பட்ட எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தனர், அவை தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளுடையதாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. துண்டிக்கப்பட்ட தலைகள் கால்களுக்கு இடையிலோ அல்லது காலடியிலோ வைக்க ப்பட்டிருந்தன. இக்குழு இதற்குமுன்பு 1,200 நாணயங்கள், மட்பாண்டங்கள், பகடை, மணிகள் மற்றும் ஈய எடை அளவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்திருந்தது.

9. இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ‘கோஸ்ட் ஆர்மி’க்கு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கிய நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) ஜெர்மனி

ஈ) ரஷ்யா

  • அமெரிக்க (USA) அதிபர் ஜோ பிடன், ‘கோஸ்ட் படை’க்கு அங்கீகாரம் வழங்குவதற்காக “Ghost Army Congressional Gold Medal Act” என்ற சட்டத்தில் கையெழுத்திட்டார். இது இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட ஒரு உத்திசார் படைப்பிரிவாகும்.
  • அமெரிக்கா முழுவதும் கோஸ்ட் படையின் 9 வீரர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

10. COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலை கட்டா -யமாக்கியுள்ள முதல் ஐரோப்பிய நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) இத்தாலி

இ) சுவிட்சர்லாந்து

ஈ) ஆஸ்திரியா 

  • COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதலை கட்டாயமா -க்கியுள்ள முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியா ஆகும்.
  • கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்தது. அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், இதற்கு தனது ஒப்புதலை அளித்தார். இந்தச் சட்டத்தின்படி, 2022 மார்ச் 15’க்குள் நாட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – 54 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன செயலிகளுக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தச் செயலிகளுக்கு தடைவிதிப்பது தொடர்பான முறையான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

ஸ்வீட் செல்பி HD, பியூட்டி கேமிரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவா வீடியோ எடிட்டர், நைஸ் வீடியோ பைடு, ஆப்லாக், ஆன்மையோஜி செஸ், ஆன்மையோஜி அரேனா, எம்பி3 கட்டர், பார்கோடு ஸ்கேனர், நோட்ஸ், யுயு கேம் பூஸ்டர், கரீனா ப்ரீபயர், பேட்லேண்டர்ஸ், விங்க், ரியல் லைட் மற்றும் அஸ்ட்ராகிராப்ட் ஆகிய செயலிகளும் இதில் அடங்கும். சீன செயலிகளுக்கு எதிராக 2ஆம் முறையாக இதுபோன்ற தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் பிரபலமான டிக்டாக், UC பிரவுசர், வீசாட், பிகோ லைவ் உள்ளிட்டவை அடங்கும். இந்த செயலிகளின் செயல்பாடு நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி மத்திய அரசு தடை விதித்தது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் லடாக் பிராந்தியத்தில் சீன இராணுவ ஊடுருவலைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

இரு நாடுகளிடையிலான எல்லைப் பிரச்சினை ஏப்ரல் 2020இலிருந்து நீடித்து வருகிறது. லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரையிலான 3,400 கிமீ நீண்ட தொலைவுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதில் பிரச்சினை ஏற்பட்டது.

2. ஏர் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக இல்கர் ஐசி நியமனம்.

டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. கடந்த பல ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வந்தது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. COVID-19 தொற்று சூழலுக்கு பின்பு ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர் இந்தியாவை வாங்க தலாஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு `18,000 கோடி ஆகும். இதில் `15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதம் உள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய டாடா குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டாடா தெரிவித்திருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி.

1. What is the percentage of Women representation of board seats in India in 2021, as per ‘Women in the Boardroom report’?

A) 4.1

B) 7.1

C) 17.1 

D) 27.1

  • In India, women representation of board seats increased by 9.4 per cent from 2014 to 17.1 percent in 2021 as per Deloitte’s Women in the Boardroom report. But women comprise only 3.6 percent of the board chairs, down by 0.9 percent since 2018.
  • The report finds that globally, women hold 19.7 percent of the board seats, which rose by 2.8 percent since 2018.

2. “Hoher Sonnenblick” mountain in the “Hohe Tauern” National Park is located in which country?

A) Russia

B) Germany

C) Austria 

D) New Zealand

  • A new study has been done at an altitude of 3106 meters at the top of the mountain “Hoher Sonnenblick” in the “Hohe Tauern” National Park in Austria. The study is investigating the amount of plastic trickling down on us from the atmosphere. According to the study, about 30% of the nanoplastic particles measured on the mountain top originate from a radius of 200 kilometers, from cities.

3. Which is the nodal agency of the new scheme ‘PM–DevINE’?

A) NABARD

B) North–Eastern Council 

C) NITI Aayog

D) IRDAI

  • A new scheme, Prime Minister’s Development Initiative for North–East, PM–DevINE was announced by the union minister for Finance Nirmala Sitharaman while presenting the Union Budget 2022–23.
  • PM–DevINE will be implemented through the North–Eastern Council. An initial allocation of Rs. 1,500 crores will be made for the new scheme. It will fund infrastructure and social development projects based on needs of the North–East.

4. Which country’s researchers have found out that Climate change is driving plants to flower earlier?

A) Italy

B) UK 

C) Germany

D) Israel

  • As per a recent study by UK researchers, it has been found that Climate change is driving plants to flower earlier and earlier. The average first flowering date of UK plants is a month earlier than it was before 1986.

5. Which Indian city has the most Traffic congestion, as per TomTom Traffic Index?

A) New Delhi

B) Mumbai 

C) Bengaluru

D) Chennai

  • Geo–location technology specialist TomTom has released the 11th edition of its annual TomTom Traffic Index. It is a report analysing traffic trends seen in 404 cities in 58 countries, during 2021. India fared better than the global average of 10% decrease in congestion.
  • But, four cities from India featured in the Index’s global top–25 list namely Mumbai (5th), Bengaluru (10th), and New Delhi (11th) and Pune (21st).

6. Annual Status of Education Report (ASER) is published by which institution?

A) NITI Aayog

B) Pratham Foundation 

C) Ministry of Education

D) Ministry of Women and Child Development

  • Pratham Foundation annually conducts an extensive survey in schools, to analyse the learning outcome of students. Recently, it released the Annual Status of Education Report (ASER, West Bengal). As per the report, the basic reading and numerical abilities of school children in West Bengal have reduced during COVID–19.

7. The National Centre of Excellence in Carbon Capture and Utilisation (NCOE–CCU) has been established at which institution?

A) DRDO

B) IIT– Bombay 

C) IISc– Bengaluru

D) ISRO

  • The Department of Science & Technology (DST) has established the National Centre of Excellence in Carbon Capture and Utilisation (NCOE–CCU) at Indian Institute of Technology (IIT) Bombay. This is India’s first such centre centrally funded by the DST.
  • This Centre of Excellence explores the potential of Carbon Capture and Utilization (CCU) technologies, which will help India achieve its climate change goals.

8. An ancient Roman settlement has been recently found by the archaeologists in which country?

A) Greece

B) UK 

C) USA

D) Russia

  • The researchers from the United Kingdom found an ancient Roman settlement site while investigating the route of the construction of upcoming high–speed railway called HS2. In a recent excavation, Scientists could find 40 decapitated skeletons, which were likely to have been executed criminals.
  • Many of these were buried in graves with their severed heads placed between their legs or at their feet. The team earlier found 1,200 coins, pottery, cutlery, gaming dice, bells and lead weights.

9. Which country recently provided recognition to the ‘Ghost Army’ deployed in the World War II?

A) USA 

B) China

C) Germany

D) Russia

  • US President Joe Biden signed into law a bill titled, “Ghost Army Congressional Gold Medal Act”, to provide recognition to the ‘Ghost Army’. It is a tactical deception unit deployed by the US during World War II. There are just nine surviving veterans of the Ghost Army across the US.

10. Which became the first European country to introduce a COVID–19 vaccine mandate?

A) Germany

B) Italy

C) Switzerland

D) Austria 

  • Austria became the first European country to introduce a COVID–19 vaccine mandate. The law, which was first introduced in November last year, came into effect recently. The President Alexander Van der Bellen gave his assent to the law, making it compulsory for adults to vaccinate against COVID–19. As per the law, everyone in the country must have an active vaccination status by March 15, 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!