TnpscTnpsc Current Affairs

15th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021 – உலகளாவிய சுகாதார காப்பீட்டு நாளுக்கானக் கருப் பொருள் என்ன?

அ) Sustainable Health Coverage

ஆ) Leave No One’s Health Behind: Invest in Health Systems for All 

இ) Universal access to Healthcare

ஈ) Equitable and healthy society

  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.12 அன்று உலக நலவாழ்வு அமைப்பால் உலகளாவிய சுகாதார காப்பீடு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • எந்தவொரு பணநெருக்கடியும் இல்லாமல் அனைத்து மக்களும் தரமான நலவாழ்வுச் சேவைகளைப் பெறுவதை இந்நாள் உறுதிசெய்கிறது. உலகளாவிய நலவாழ்வுக் காப்பீடு ஐநா அவையால் நீடித்த வளர்ச்சி இலக்குகளாக சேர்க்கப்பட்டுள்ளது. “Leave No One’s Health Behind: Invest in Health Systems for All” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

2. நியூ கலிடோனியாவின் தீவுப்பகுதி சமீபத்தில் எந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்க வாக்களித்தது?

அ) பிரான்ஸ் 

ஆ) அமெரிக்கா

இ) ஜப்பான்

ஈ) ரஷ்யா

  • பிரெஞ்சு தீவுப் பிரதேசமான புதிய கலிடோனியாவில் உள்ள வாக்காளர்கள், பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாக்குச் செலுத்தினர். தென் மாகாண பிராந்தியத்தின் தலைவர் சோனியா பேக்ஸ், இதன் முடிவுகளை அறிவித்தார். இதில் பங்கேற்றவர்களில் 96 சதவீதத்தினர் பிரான்சுடன் இருப்பதைத் தேர்ந்தெடுத்தனர். வாக்கெடுப்பு ஐநா மற்றும் பிராந்திய ஆற்றல்களால் கண்காணிக்கப்பட்டது.

3. ‘Commercial Space Astronaut Wings’ திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) ரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

  • ‘Commercial Space Astronaut’ திட்டம் US Federal Aviation Administration (FAA) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 1984ஆம் ஆண்டின் வணிக விண்வெளி வெளியீட்டுச் சட்டத்தின்கீழ் வருகிறது மற்றும் விமானிகள் மற்றும் விமானக் குழுவினரை அங்கீகரிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், FAA ஆனது, விண்வெளியைச் சேரும் நபர்களுக்கு வழங்கப்படும் கமர்ஷியல் ஸ்பேஸ் அஸ்ட்ரோனாட் விங்ஸை இனி வெளியிடப்போவதில்லை என அறிவித்தது.

4. புதுப்பிக்கப்பட்ட DICGC சட்டத்தின்படி, கணக்கு வைத்திருப்பவர் -கள் தாங்கள் காப்பீடு செய்யப்பட்ட வைப்புத்தொகையை ____ நாட்களுக்குள் அணுகலாம்?

அ) 30

ஆ) 45

இ) 90 

ஈ) 180

  • கணக்கு வைத்திருப்பவர்கள் தாங்கள் காப்பீடு செய்த வைப்புத்தொகை -யை 90 நாட்களுக்குள் அணுகுவதை உறுதிசெய்வதற்காக இந்திய அரசு வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது.
  • வங்கி டெபாசிட் காப்பீட்டு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு `1,300 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்தகைய கணக்குகளில் சிக்கியுள்ள மூன்று லட்சம் டெபாசிட்தாரர்கள் நிதியைப் பெறவுள்ளனர்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பக்ஸா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம் 

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) பீகார்

ஈ) மேகாலயா

  • மேற்கு வங்கத்தில் உள்ள பக்ஸா புலிகள் காப்பகத்தில் குறைந்தது 23 ஆண்டுகளுக்குப்பிறகு இராயல் வங்கப்புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு -ள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பக்ஸா புலிகள் காப்பகத்தின் கிழக்கு தாமன்பூர் காட்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் அப்புலியின் படம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1998ஆம் ஆண்டில், இராயல் வங்கப்புலியின் படங்கள் அக்காப்பகத்தில் பதிவாகின. தேசிய வனவுயிரி வாரியத்திடமிருந்து புலிகள் காப்பகம் என்ற அடையாளத்தை இந்தக் காப்பகம் இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

6. உலகின் மிகவுயரமான ரயில்வே பாலத்தூண் கட்டப்பட்டு வரும் நோனி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்/யூடி எது?

அ) சிக்கிம்

ஆ) உத்தரகாண்ட்

இ) மணிப்பூர் 

ஈ) லடாக்

  • மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி பள்ளத்தாக்கில் 141 மீ உயரத்தில் உலகின் மிகவுயரமான ரயில்வே பாலத்தூணை ரயில்வே நிர்வாகம் நிர்மாணித்து வருகிறது. இது 111 கி.மீ நீளமுள்ள ஜிரிபாம்-இம்பால் ரயில் பாதையின் ஒருபகுதியாக உள்ளது. இது மணிப்பூரின் தலைநகரத்தை நாட்டின் அகலப்பாதை நெட்வொர்க்குடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நோனி பள்ளத்தாக்கிலுள்ள இப்பாலம், ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் அமைந்துள்ள மாலா – ரிஜேகா வையாடக்ட்டின் தற்போதைய 139 மீ உயர சாதனையை முறியடிக்கும்.

7. ‘இருவாச்சி திருவிழா’ என்பது பின்வரும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் கொண்டாடப்படும் ஒரு கலாச்சார விழாவாகும்?

அ) அஸ்ஸாம்

ஆ) நாகாலாந்து 

இ) மேற்கு வங்கம்

ஈ) பீகார்

  • நாகாலாந்து மாநிலத்தின் தனித்துவம்மிக்க ‘இருவாச்சி திருவிழா’, “திருவிழாக்களின் திருவிழா” என அழைக்கப்படுகிறது. அதன் பாரம்பரிய முறையில் டிச.1ஆம் தேதி அந்தத் திருவிழா தொடங்கியது. இந்த ஆண்டு (2021) திருவிழாவின் 22ஆவது பதிப்பு ஆகும். கடந்த ஆண்டு, COVID தொற்றுகாரணமாக மெய்நிகர் முறையில் இத்திருவிழா நடத்தப்பட்டது. 10 நாள் நடைபெறும் இவ்விழா, ஆண்டுதோறும் டிசம்பர் தொடக்கத்தில் தொடங்கி நாகாலாந்தின் மாநில தினத்துடன் ஒத்திசைந்து நடக்கிறது.

8. உலக பாரம்பரிய தளமான லியாங்சு நகரத்தின் தொல்பொருள் இடிபாடுகள் உள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா 

இ) கிரேக்கம்

ஈ) தென் கொரியா

  • லியாங்சு நகரத்தின் தொல்பொருள் இடிபாடுகள் ஓர் உலக பாரம்பரிய தளமாகும். யாங்சே நதி டெல்டாவில் உள்ள லியாங்சு கலாச்சாரத்தின் மர்மத்திற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தீர்வு கண்டுள்ளனர். இது உலகின் மிகவும் மேம்பட்ட கற்கால கலாச்சாரங்களில் ஒன்றாக இருந்தது. சமீபத்திய ஆராய்ச்சியில், இக்களிமண் அடுக்கு நாகரிகத்தின் அழிவுக்கு யாங்சே ஆற்றின் வெள்ளம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

9. “Naoroji: Pioneer of Indian Nationalism” என்ற நூலை எழுதியவர் யார்?

அ) தின்யார் படேல் 

ஆ) மிலன் வைஷ்ணவ்

இ) ஓர்னிட் சனி

ஈ) ஜெய்ராம் ரமேஷ்

  • எழுத்தாளர் தின்யார் படேல் தனது “Naoroji: Pioneer of Indian Nationalism” என்ற நூலிற்காக 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப்பரிசை வென்றார். கமலாதேவி சட்டோபாத்யாய் NIF புத்தகப்பரிசானது கடந்த 2018’இல் நிறுவப்பட்டது. இது அனைத்து தேசிய எழுத்தாளர்களின் புனைகதை அல்லாத இலக்கி -யங்களை கௌரவிக்கின்றது. இந்நூல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய 19ஆம் நூற்றாண்டின் தலைவரான நௌரோஜியின் வாழ்க்கை வரலாறு ஆகும். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினாராவார்.

10. அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘அணை பாதுகாப்பு மசோதா, 2019’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) ஜல் சக்தி அமைச்சகம் 

இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • அண்மையில் மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா – 2019 நிறைவேற்றப்பட்டது. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த மசோதா மாநிலங்களின் நீர், அணை உரிமை அல்லது பராமரிப்பு, அல்லது மின்சாரம்போன்ற வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமைகளைக் கைக்கொள்ளும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
  • நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிர் மற்றும் உடைமைகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் அணைகள் தொடர்பான பேரிடர்களைத் தடுக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. வரைவு தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. சபை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பருவநிலை மாறுபாடு தொடர்பான வரைவு தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை 12 நாடுகள் ஆதரித்தன. இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்த்து வாக்களித்தன. சீனா வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

வாக்கெடுப்பின்போது ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி பேசியதாவது:

பருவநிலை மாறுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம் பருவநிலை மாறுபாடு தொடர்பாக ஐ.நா. சபையின் 197 நாடுகளும் ஆலோசித்து தீர்மானிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாடுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது. இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முடிவு எடுக்கும் அதிகாரம் சில நாடுகளின் கைகளுக்கு செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புவி வெப்பம் அதிகரிப்பதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகள் பருவநிலை மாறுபாட்டை தடுக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும். வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கக்கூடாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

2. 7.56 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குரூ.2,750 கோடியில் நலத்திட்ட உதவிகள்: திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழகம் முழுவதும் 7.22 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவற்றில் 1 கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நகர்ப்புறத்தில் 36 லட்சம் பேரும், கிராமப்புறத்தில் 70 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் சட்டப்பேரவையில், வெளியிடப்பட்டன.

தற்போது இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்போது, இதே நேரத்தில் இதர மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

3. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 48%-க்கு மேல் பெண்கள்: மாநிலங்களவையில் தகவல்

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 48.70 சதவீதம் போ் பெண்கள் என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணைமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தால் பெண்கள் கரோன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விகிதம் சற்று குறைவாகவே உள்ளது. கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் உள்ளது. எனினும் கடந்த மே 19-ஆம் தேதி முதல், பாலுட்டும் தாய்மாா்களும், ஜூலை 2 முதல் கா்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உரிய மருத்துவ வல்லுநா்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும்.

டிசம்பா் 8-ஆம் தேதி நிலவரப்படி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 48.70 சதவீதம் பெண்கள் ஆவா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மற்றும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. 2022-இல் வருகிறது இந்திய செஸ் லீக்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கிரிக்கெட், பாட்மின்டன், கால்பந்து போட்டிகளில் இருப்பதைப் போன்று செஸ் விளையாட்டிலும் இத்தகைய லீக் போட்டி முறையை இந்திய சம்மேளனம் முன்னெடுக்கிறது.

இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் இருக்கும் என்றும், அதில் ஒவ்வொரு அணியிலும் இரு சூப்பா் கிராண்ட்மாஸ்டா்கள், இரு இந்திய கிராண்ட்மாஸ்டா்கள், இரு மகளிா் கிராண்ட்மாஸ்டா்கள், ஒரு ஜூனியா் ஆடவா், ஒரு ஜூனியா் மகளிா் என 8 போ் இருப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரு வாரங்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியின் குரூப் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றில் மோதும். போட்டியை இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சா்வதசே அளவிலான சிறந்த வீரா், வீராங்கனைகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதுடன், உள்நாட்டில் இருக்கும் சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு நல்லதொரு களத்தை அமைத்துக் கொடுப்பதே இந்தப் போட்டியின் நோக்கமென சம்மேளனம் தெரிவித்துள்ளது. போட்டி தொடா்பான இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

1. What is the theme of the “International Universal Health Coverage Day” 2021?

A) Sustainable Health Coverage

B) Leave No One’s Health Behind: Invest in Health Systems for All 

C) Universal access to healthcare

D) Equitable and healthy society

  • Every year December 12th is observed as the Universal Health Coverage (UHC) Day by the World Health Organisation. UHC ensures that all people get access to quality health services without any financial hardships.
  • Universal health coverage has been inducted as Sustainable Development Goals (SDGs) by the United Nations. This years’ (2021) is “Leave No One’s Health Behind: Invest in Health Systems for All”.

2. Island Territory of New Caledonia recently voted to stay part of which country?

A) France 

B) USA

C) Japan

D) Russia

  • Voters in the French island territory of New Caledonia chose to stay part of France, in a referendum, hailed by French President Emmanuel Macron. Sonia Backes, President of the Southern Province region, announced the results, which showed 96 percent of those who took part chose to stay in France. The vote was monitored by the UN and regional powers.

3. ‘Commercial Space Astronaut Wings program’ is associated with which country?

A) USA 

B) China

C) Russia

D) Australia

  • Commercial Space Astronaut Wings Program is implemented by the US Federal Aviation Administration (FAA). The program comes under the Commercial Space Launch Act of 1984 and was designed to recognize pilots and flight crew. Recently, FAA announced that it will no longer issue Commercial Space Astronaut Wings, the pins given to individuals reaching space but instead recognise on its website.

4. As per the updated DICGC Act, account holders can access their insured deposit amount within …… days?

A) 30

B) 45

C) 90 

D) 180

  • Indian Government passed an amendment to the Deposit Insurance and Credit Guarantee Corporation Act to ensure that account holders can access their insured deposit amount within 90 days.
  • Prime Minister Narendra Modi attended a bank deposit insurance programme and said that Rs 1,300 crore had been paid to over 1 lakh depositors whose banks faced financial crises. 3 lakh such depositors were set to receive funds stuck in such accounts.

5. Buxa tiger reserve, recently seen in the news, is located in which state/UT?

A) West Bengal 

B) Andhra Pradesh

C) Bihar

D) Meghalaya

  • A Royal Bengal Tiger has been spotted in Buxa tiger reserve in West Bengal, after at least 23 years, as per the West Bengal government. A picture of a tiger was captured on a trap camera in the forest of East Damanpur of Buxa tiger reserve. It was in 1998 that images of a Royal Bengal Tiger were captured at the reserve earlier. The reserve had lost its identity as a tiger reserve from the National Wild Life Board.

6. Noney Valley, where the world’s tallest railway bridge pier is being constructed, is located in which state/UT?

A) Sikkim

B) Uttarakhand

C) Manipur 

D) Ladakh

  • Railways is constructing the world’s tallest railway bridge pier at Noney Valley in the state of Manipur with a height of 141 metres. It is a part of the 111 Kilometre long Jiribam–Imphal railway line, which aims to connect the capital of Manipur with the broad–gauge network of the country.
  • The bridge at Noney Valley will surpass the Mala – Rijeka viaduct’s existing record of 139 meters, located in Montenegro, Europe.

7. ‘Hornbill Festival’ is a cultural festival celebrated in which state/UT?

A) Assam

B) Nagaland 

C) West Bengal

D) Bihar

  • Nagaland’s iconic Hornbill Festival, called as the “festival of festivals”, will be held in its traditional format, starting on December 1. This year is the 22nd edition of the festival. Last year, it was held virtually last year due to the Covid–19 pandemic.
  • The 10–day cultural and tourism annually begins at the start of December and coincides with Nagaland’s statehood day.

8. Archaeological ruins of Liangzhu City, a World Heritage site, is located in which country?

A) Japan

B) China 

C) Greece

D) South Korea

  • Archaeological ruins of Liangzhu City are a World Heritage site. Archeologists have resolved the mystery of the Liangzhu culture in the Yangtze River Delta. It was among the world’s most advanced Neolithic cultures. In recent research, a layer of clay points to a possible connection between the demise of the civilisation and floods of the Yangtze River or floods from the East China Sea.

9. Who is the author of the book “Naoroji: Pioneer of Indian Nationalism”?

A) Dinyar Patel 

B) Milan Vaishnav

C) Ornit Shani

D) Jairam Ramesh

  • Writer Dinyar Patel won the prestigious Kamaladevi Chattopadhyay NIF Book Prize 2021 for his book Naoroji: Pioneer of Indian Nationalism. The Kamaladevi Chattopadhyay NIF Book Prize was instituted in 2018. It honours non–fiction literature from writers of all nationalities.
  • The book is a biography of Naoroji, the 19th–century leader who founded the Indian National Congress. He was the first British MP of Indian origin.

10. Which Union Ministry is associated with the ‘Dam Safety Bill, 2019’ passed recently?

A) Ministry of Home Affairs

B) Ministry of Jal Shakti 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Environment, Forest and Climate Change

  • The Rajya Sabha passed the Dam Safety Bill, 2019 recently. The union minister for Jal Shakti Gajendra Singh Shekhawat clarified that the Bill was not intended to encroach upon the states’ rights on their waters, dam ownership or maintenance, or even resources like power. The bill seeks to ensure the safety of dams across the country and prevent dam–related disasters, which cause great loss to life and property.

2 Comments

  1. Sir for last days stil not yet updated current poroberly what happen sir.. Still now not completed November month full and December months also 2021,kindly update as soon as early sir….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!