Tnpsc

15th & 16th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th & 16th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th & 16th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th & 16th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. எந்தப் போரின்போது தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவு -ம் மே 8-9 அனுசரிக்கப்படுகிறது?

அ) முதலாம் உலகப்போர்

ஆ) இரண்டாம் உலகப்போர்

இ) இந்தோ-சீனப்போர்

ஈ) பிரெஞ்சு புரட்சிகர போர்கள்

  • 2004ஆம் ஆண்டில், ஐநா பொது அவை மே 8-9 தேதிகளை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் அறிவித்தது.
  • UNGA அதன் உறுப்புநாடுகளுடன், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக் -கும் அஞ்சலி செலுத்துவதற்காக, முழுமையான சந்திப்பை நடத்துகிறது. 40 மில்லியன் பொதுமக்கள் மற்றும் 20 மில்லியன் வீரர்கள் கொல்லப்பட் -ட இப்போரை “வரலாற்றில் விடுதலைக்கான காவிய போராட்டங்களில் இது ஒன்று” என்று அமெரிக்கா விவரிக்கிறது.

2. COVID-19 நோய்த்தொற்றை கையாளுவதற்காக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், “பிரிப்புக்கோடு” ஒன்றை உருவாக்கவுள்ள நாடு எது?

அ) நேபாளம்

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) வங்காளதேசம்

  • எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், “பிரிப்புக்கோடு” ஒன்றை உருவாக்க இருப்பதாக சீனா அண்மையில் அறிவித்தது. இது நேபாளத்திலிருந்து சிகரத்தை அடைபவர்களால் சீனத்தரப்பிலிருந்து ஏறுபவர்கள் பாதிக்கப்ப -டுவதைத்தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேபாளத்திலிருந்து மலை ஏறிய பலருக்கு COVID பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

3. புக்கரெஸ்ட் ஒன்பது என்பது எந்தப் பன்னாட்டு கூட்டணியைச் சார்ந்த ஒன்பது நாடுகளின் குழுமமாகும்?

அ) G20

ஆ) ஐரோப்பிய ஒன்றியம்

இ) NATO

ஈ) காமன்வெல்த்

  • பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலந்து, ருமேனியா மற்றும் சுலோவாக்கியா ஆகிய ஒன்பது நாடுகள் NATO’வுக்குள் அரசியல் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை அமைத்தன.
  • புக்கரெஸ்ட் 9 அல்லது B9 எனப்பெயரிடப்பட்ட இது NATO கூட்டணியில், “கிழக்கின் குரல்” என்றும் கருதப்படுகிறது. அண்மையில், B9 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மெய்நிகர் வடிவத்தில் அந்த நாடுகள் இடையே உரையாற்றினார்.

4. அதன் உறுப்பினர்களிடையே சிறந்த வரி ஒருங்கிணைப்புக்காக ஆசிய-பசிபிக் வரி மையத்தை தொடங்கியுள்ள பலதரப்பு நிறுவனம் எது?

அ) AIIB

ஆ) ADB

இ) உலக வங்கி

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) ஆசிய-பசிபிக் வரி மையத்தை தொடங்கியுள்ளது. இது அறிவு பகிர்வை மேம்படுத்துவதற்கான ஒரு திறந் -த தளத்தை உருவாக்கும். மேலும், ADB அதன் உறுப்பினர்கள் மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களிடையே வரிக்கொள்கை குறித்த ஒருங்கிணை -ப்பை வலுப்படுத்தும்.
  • ADB’இன் வளரும் உறுப்புநாடுகளில் உள்நாட்டு வள அணிதிரட்டல் மற் -றும் பன்னாட்டு வரி ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த பிராந்திய மற்றும் பன்னாட்டு வளங்களை இந்த மையம் திரட்டுகிறது.

5. கேரள அரசியலில் பொதுவாக, ‘இரும்புப்பெண்மணி’ என அழை -க்கப்படுபவர் யார்?

அ) K R கெளரி

ஆ) இரம்யா ஹரிதாஸ்

இ) M கமலம்

ஈ) P சதிதேவி

  • கேரளாவைச் சார்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி K R கெளரி வயது முதிர்வின் காரணமான நோய்களால் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள அரசியலில் அவர் பெரும்பாலும் ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் 1957’இல் கம்யூனிஸ்ட் தலைவர் EMS நம்பூதிரிபாட் தலைமையிலான உலகின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்.

6. ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தை புதுப்பிப்பு 2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ) இந்தியன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் லிட்

ஆ) பன்னாட்டு எரிசக்தி முகமை

இ) தேசிய அனல்மின் கழகம்

ஈ) பிரெஞ்சு வளர்ச்சி ஆணையம்

  • “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தை புதுப்பிப்பு – 2021” என்ற தலைப்பிலான அறிக்கையை பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான புதிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க மின் திறன் கூடுதல்கள் குறித்த ஒரு முன் அறிவிப்பை அளிக்கிறது. IEA என்பது பிரான்சின் பாரிஸை தலைமையிட -மாகக்கொண்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது, கடந்த 1974’இல் OECD’இன் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டது.

7. COP26 மக்களின் வழக்குரைஞராக அறிவிக்கப்பட்டவர் யார்?

அ) சர் டேவிட் அட்டன்பரோ

ஆ) டேவிட் மால்பாஸ்

இ) Dr கிறிஸ்டலினா ஜார்ஜீவா

ஈ) கிறிஸ்டின் லகார்ட்

  • இத்தாலியுடன் கூட்டாக இணைந்து இங்கிலாந்தின் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டின் COP26க்கா
    -ன மக்கள் வழக்குரைஞராக பழைமைவாதி, ஒலிபரப்பாளர் மற்றும் வர -லாற்றாசிரியர் சர் டேவிட் அட்டன்பரோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த உச்சிமாநாடு இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ளது. COP26’க்கு முன்னும் பின்னும் முடிவெடுப்பவர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் காலநிலை தொடர்பான அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் ஒருங்கி
    -ணைக்கவும் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

8. வருமான வரிச்சட்டத்தின்படி, பணத்தை ரொக்கமாக பெறுவதற் -கான உச்சவரம்பு என்ன?

அ) `2 இலட்சம்

ஆ) `5 இலட்சம்

இ) `10 இலட்சம்

ஈ) `50 இலட்சம்

  • நோயாளிகளிடமிருந்து `2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தைப் பெறுவதற்கு COVID மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் COVID பராமரிப்பு மையங்களுக்கான வருமான வரி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 269ST’ இல் தளர்வு அறிவித்து நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பணஞ்செலுத்தும் ரசீதுக்கான விலக்கு 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும்

9. ‘மோசமான வங்கி’ எனக் கூறப்படுகிற NARCL’இன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) பத்மகுமார் M நாயர்

ஆ) அஜய் பூஷண் பாண்டே

இ) S C கார்க்

ஈ) K சுப்பிரமணியம்

  • பாரத வங்கியின் (SBI) பத்மகுமார் M நாயர் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார்.
  • ‘மோசமான வங்கி’ என்றும் அழைக்கப்படும் NARCL, 2021 ஜூனில் செய -ல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வழங்குநர்களின் (மு -க்கியமாக பொதுத்துறை வங்கிகள்) வாராக்கடன்களை எடுத்துக்கொள் -வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

10. இந்திய வனவுயிரி நிறுவனம் (WII) வடிவமைத்த திறன்பேசி செயலியைப்பயன்படுத்தி சமீபத்தில் குரங்குகள் கணக்கெடுப்பை நடத்திய மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) ஹரியானா

இ) இராஜஸ்தான்

ஈ) மேற்கு வங்கம்

  • ஹரியானா-2021’க்கான பெரிய வனவுயிரி கணக்கெடுப்பின் ஒருபகுதி -யாக, ஹரியானா, மூன்று நாள் குரங்கு கணக்கெடுப்பை நடத்தியது.
  • ஹரியானா முழுவதுமிருந்து அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் இக்குரங்கு கணக்கெடுப்பில் பங்கேற்றனர். சுமார் 6,000 குரங்குகளை ‘வனவுயிரி கணக்கெடுப்பு ஹரியானா’ என்ற தலைப்பில், இந்திய வனவுயிரி நிறுவனம் அதன் திறன்பேசி செயலி வாயிலாக ஆவணப்படுத்தியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. COVID கட்டளை மையம் உதவி எண் – 104

  • படுக்கை நிலவரம்பற்றி அறிய
  • தொலைபேசி வாயிலாக மருத்துவரின் ஆலோசனையைப்பெற
  • தடுப்பூசி பற்றி அறிந்துகொள்ள
  • COVID தொற்றினால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நோயாளிகளுக்கு

2. அரபிக்கடலில் உருவாகிறது ‘டவ்-தே’ புயல்

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து இன்று (15-05-2021) புயலாக வலுவடைகிறது. இந்தப் புயலுக்கு மியான்மர் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயர் வைக்கப்படவுள்ளது.

3. ஹரியானாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு நோயாக அறிவிப்பு

ஹரியானா மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பை நோயாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப்பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்தப் பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்தப் பூஞ்சை, பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவர்களையே தாக்கியுள்ளது. இந்தப் பூஞ்சை தாக்குதலுக்கு மகாராஷ்டிரத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

4. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கை அடைய இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனின் பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதர் ஜான் கெரி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 450 கிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நிதியாதாரமும் இந்தியாவிடம் தற்போது இல்லை. அதைக் கருத்தில்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக இந்தியா -வுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பில் (OECD) 37 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளைக் காட்டிலும் சீனாவில் கரியமிலவாயு வெளியேற்றம் அதிகளவில் உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தை சீனா பெருமளவில் குறைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

5. அமெரிக்க அதிபரின் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவ -ளியைச் சார்ந்த நீரா டாண்டன் (50) நியமிக்கப்பட்டுள்ளார்.

6. செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய சீன விண்கலம்

சீன விண்கலத்தின் ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாயி -ல் ரோவரை தரையிறக்கிய 2ஆவது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றுள்ளது. ‘ஜுரோங்’ என்ற அந்த ரோவருடன் தியான்வென்-1 விண்க -லம் கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்குள் அவ்விண்கலம் நுழைந்தது.

இந்த நிலையில், விண்கலத்திலிருந்து பிரிந்த ஆய்வு வாகனம், பரந்த நிலப் பரப்பான ‘உடோபியா பிளானிடியா’ என்ற பகுதியில் தரையிறங்கியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீன நெருப்புக் கடவுளான ‘ஜுரோங்’ பெயரிலான இந்த ரோவர் உயர் தெளிவுத்திறன்கொண்ட நிலப்பரப்பு கேமரா உள்ளிட்ட ஆறு அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரக தரைப்பரப்பின் மண் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ‘ஜுரோங்’, தரைப்பரப்பில் தண்ணீர் உள்ளதா, அங்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.

தியான்வென்-1 விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கான சீனாவின் முதல் தனித்துவமான விண்கலமாகும். 2011’இல் ரஷியாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு சீனா அனுப்பிய விண்கலத்திட்டம் தோல்வியடைந்தது.

மூன்றாவது விண்கலம்: ஐந்து டன் எடைகொண்ட தியான்வென்-1 விண்கலம், கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த 3ஆவது விண்கலமாகும். அமெரிக்காவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் பிப்.18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியில் வெற்றிகர -மாகத் தரையிறங்கியது. தியான்வென் விண்கல ரோவர் தரையிறங்கிய பகுதியான ‘உடோபியா பிளானிடியா’ என்ற இடத்திலிருந்து ஜெசேரோ பள்ளத்தாக்கு 2,000 கிமீ தொலைவில் உள்ளது.

பிப்ரவரியில் செவ்வாயை சென்றடைந்த மற்றொரு விண்கலம் ஹோப். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்காவிட் -டாலும் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, அதன் வளிமண் -டலம் மற்றும் காலநிலை குறித்து ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாகத் தரையிறங்கிய விண்கலம் அமெரிக்காவின் வைக்கிங்-1 ஆகும். வைக்கிங்-1 விண்கலம் 1976ஆம் ஆண்டு ஜூலையிலும், வைக்கிங்-2 விண்கலம் அதே ஆண்டு செப்டம்பரி -லும் வெற்றிகரமாகத் தரையிறங்கின. 1971’இல் அப்போதைய சோவியத் யூனியனின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கினாலும், அதன் தகவல் தொடர்பு சில விநாடிகளில் துண்டிக்கப்பட்டது.

7. கரோனா நிவாரணம் விருப்புரிமை நிதியிலிருந்து `1 கோடி வழங்கினார் ஆளுநர்

கரோனா நிவாரண நிதியாக தனது விருப்புரிமை நிதியில் இருந்து `1 கோடியை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிதியை ஆளுநரிடமிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

1. May 8–9 is observed as the of Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during the which war?

A) First World War

B) Second World War

C) Indo–China War

D) French revolutionary wars

  • In 2004, the UN General Assembly declared 8–9 May as a time of remembrance and reconciliation for those who lost their lives during the Second World War. UNGA conducts solemn meeting with its member countries, to pay tribute to all victims of the war. US describes the war as “one of the most epic struggles for freedom and liberation in history,” with 40 million civilians and 20 million soldiers dead.

2. Which country is set to create “a line of separation” at the Mt Everest summit to tackle Covid–19 infection?

A) Nepal

B) China

C) India

D) Bangladesh

  • China has recently announced that is set to create “a line of separation” at the Mt Everest summit. This is expected to prevent climbers from the Chinese side from being infected by those climbing the summit from Nepal. Earlier, a number of Covid–19 cases were diagnosed among those climbing the mountain from Nepal.

3. Bucharest Nine (B9) is a group of nine countries from which international bloc?

A) G20

B) European Union

C) NATO

D) Commonwealth

  • Nine countries—Bulgaria, the Czech Republic, Estonia, Hungary, Latvia, Lithuania, Poland, Romania, and Slovakia established a platform for political consultation and cooperation within NATO. Named as Bucharest Nine, or B9, it is also regarded as the “voice of the Eastern Flank” in the NATO alliance. Recently, in the B9 summit, US President Joseph R Biden addressed the countries in virtual format.

4. Which multilateral institution has launched an Asia Pacific Tax Hub, for better tax coordination among its members?

A) AIIB

B) ADB

C) World Bank

D) IMF

  • The Asian Development Bank (ADB) has launched an Asia Pacific Tax Hub. This will create an open platform to improve knowledge sharing, and strengthen coordination on tax policy among ADB, its members, and development partners.
  • The hub will mobilise regional and international resources to strengthen domestic resource mobilization and international tax cooperation in ADB’s developing member countries.

5. Who is commonly referred to as ‘Iron Lady’ in Kerala politics?

A) K R Gouri

B) Ramya Haridas

C) M Kamalam

D) P Sathidevi

  • Legendary Communist leader Smt. K.R. Gouri of Kerala passed away recently due to age related ailments. She was 102–year–old.
  • She is often referred to as the ‘Iron Lady’ in Kerala politics and was a member of the world’s first democratically elected Communist government cabinet led by Communist legend E M S Nampoothiripad in 1957.

6. Which organisation has released the “Renewable Energy Market Update 2021”?

A) Indian Renewable Energy Development Agency Ltd

B) International Energy Agency

C) National Thermal Power Corporation

D) French Development Authority

  • The report titled “Renewable Energy Market Update 2021” has been recently released by the International Energy Agency (IEA). The report gives a forecast on new global renewable power capacity additions for 2021 and 2022.
  • The IEA is an intergovernmental organisation headquartered at Paris, France. It was formed in 1974, under the framework of OECD.

7. Who has been named the COP26 People’s Advocate?

A) Sir David Attenborough

B) David Malpass

C) Dr Kristalina Georgieva

D) Christine Lagarde

  • Conservationist, Broadcaster and historian Sir David Attenborough has been named as the People’s Advocate for the COP 26 of UN climate change summit to be held under the UK Presidency, in partnership with Italy. The summit is to be held this year in Glasgow. He has been assigned the task to highlight the actions decision makers will need to take ahead of and at COP26 and to integrate all the climate related agendas of the participating nations.

8. As per the Income Tax Act, what is the maximum limit to which money can be transferred in cash?

A) Rs 2 lakh

B) Rs 5 lakh

C) Rs 10 lakh

D) Rs 50 lakh

  • The Central government has relaxed income tax norms for the Covid hospitals, nursing home and Covid care centres for receiving cash of ₹2 lakh or above from the patients. The Ministry of Finance issued notification announcing relaxation in Section 269ST of the Income Tax Act. The exemption for cash payment receipt is for the period of 1st April 2021 to 31st May 2021.

9. Who has been named as the CEO of the proposed ‘bad’ bank – NARCL?

A) Padmakumar M Nair

B) Ajay Bhushan Pandey

C) S C Garg

D) K Subramaniam

  • Padmakumar M Nair of State Bank of India (SBI) will be the Chief executive officer of National Asset Reconstruction Company (NARCL). NARCL, also called as the ‘bad’ bank, is expected to be operational in June 2021. It is a proposed entity for taking over bad loans of lenders, predominantly public sector banks.

10. Which state recently conducted Monkey Census using the mobile application designed by the Wildlife Institute of India?

A) Gujarat

B) Haryana

C) Rajasthan

D) West Bengal

  • Haryana conducted a three–day Monkey Census as a part of a larger Wildlife Census for Haryana–2021. Over 600 people throughout Haryana participated in Monkey Census and documented approximately 6,000 monkeys on a mobile application by the Wildlife Institute of India (WII) titled ‘Wildlife Census Haryana’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!