Tnpsc

14th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மனநலத்திற்காக ‘தோஸ்ட் பார் லைப்’ திறன்பேசி செயலியை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) AICTE

ஆ) NTA

இ) CBSE

ஈ) UGC

  • மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) சமீபத்தில் மாணவர்களின் மனோ-சமூக நலனுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்புதிய செயலி CBSE-உடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த 9-12 வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்.
  • பயிற்சிபெற்ற ஆலோசகர்களால் வாரத்திற்கு மும்முறை நேரடி ஆலோச -னை அமர்வுகள் இலவசமாக நடத்தப்படும். முன்னர், கட்டணமில்லா எண்மூலம் ஆலோசனை வழங்கும் நடைமுறை இருந்தது.

2. கீழ்காணும் எவ்விரு நாடுகளால் கூட்டாக இணைந்து ‘3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம்’ ஏற்பாடு செய்யப்பட்டது?

அ) ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

ஆ) ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான்

இ) இத்தாலி மற்றும் பிரான்ஸ்

ஈ) ஜப்பான் மற்றும் இந்தியா

  • ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி & ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கான தளமான மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் (2021 மே 8-9) இந்தியா பங்கேற்றது. முதல் இரண்டு கூட்டங்கள், முறையே அமெரிக்காவில் 2016’இல் மற்றும் ஜெர்மனியில் 2018’இல் நடைபெற்றது. ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள 3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம், ஆசியாவில் நடக்கும் முதல் அமைச்சர்கள் கூட்டமாகும். ஆர்க்டிக் கவுன்சிலில் இந்தியா மற்ற பன்னிரண்டு நாடுகளுடன் ‘பார்வையாளர்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

3. அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் மற்றும் ஆர்னா சபாலெங்கா ஆகியோர் பின்வரும் எந்த ‘மாஸ்டர்ஸ் 100 போட்டி’யில் வெற்றி வாகை சூடியுள்ளனர்?

அ) மியாமி ஓபன்

ஆ) மாட்ரிட் ஓபன்

இ) இத்தாலியன் ஓபன்

ஈ) ஷாங்காய் மாஸ்டர்ஸ்

  • ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இத்தாலிய மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து தனது நான்காவது மாஸ்டர்ஸ் 1000 கிரீடம் மற்றும் இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை பெற்றார். இந்த வீரர் ஜூலை 2017 முதல் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு US ஓபன் ரன்னர்-அப் ஆகவும் இருந்தார்.
  • முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியில் பெலாரஷிய டென்னிஸ் வீரர் ஆர்னா சபாலெங்கா தனது 10ஆவது பட்டத்தை வென்றுள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லீ பார்ட்டியை தோற்கடித்தார்.

4. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய தொழில்நுட்ப நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Science and Technology for a Sustainable Future

ஆ) Restart and Recycle

இ) Atmanirbhar Vigyan

ஈ) Science and Technology for Atmanirbhar India

  • நாடு மேற்கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. “Science and Technology for a Sustainable Future” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  • இந்த நாள், முதன்முதலில் 1999 மே.11 அன்று அனுசரிக்கப்பட்டது. அதே தேதியில் 1998’இல், இராஜஸ்தானில் உள்ள இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத்தளத்தில் இந்தியா 3 அணு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. 1998 மே.11 அன்று இந்தியா தனது முதல் உள்நாட்டு வானூர்தியான ஹன்சா-3 மற்றும் திரிசூல் ஆகியவற்றை பரிசோதனை செய்தது.

5. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இனமான Ampelorhiza heteroxylon, கீழ்காணும் எந்த வகையைச் சேர்ந்ததாகும்?

அ) பூச்சி

ஆ) தாவரம்

இ) நீர்வாழ் விலங்கு

ஈ) நிலவாழ் விலங்கு

  • பனாமாவில் 18.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொடியோடும் தாவரத்தின் பழமையான நம்பகமான இனம் இது என்று கூறப்படுகிறது. பூச்சக்காய் குடும்பத்தைச் சார்ந்த ‘லியானா’ என அழைக்கப்படும் ஏறும் கொடியைச் சேர்ந்த இப்புதிய இனத்திற்கு ’Ampelorhiza heteroxylon’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, ஏறும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. இந்தியாவில் இயக்கப்படும் ஒரே விமானந்தாங்கிக்கப்பல் எது?

அ) INS விராட்

ஆ) INS விக்ரமாதித்யா

இ) INS விக்ராந்த்

ஈ) INS விஷால்

  • இந்தியாவின் ஒரே விமானந்தாங்கிக்கப்பலான INS விக்ரமாதித்யா என்பது மாற்றியமைக்கப்பட்ட கியேவ் வகுப்பைச்சார்ந்த 44,500 டன் எடைகொண்ட விமானந்தாங்கிக்கப்பலாகும். இந்த விமானந்தாங்கிக் கப்பல் சமீபத்தில் தனது சொந்த துறைமுகமான கர்நாடகாவில் உள்ள கார்வாரில் ஒரு சிறிய தீவிபத்துக்கு ஆளானது.
  • இந்த விமானந்தாங்கிக்கப்பலை இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் அது இணைக்கப்பட்டது. MiG-29K ஏவுகணைகளை ஏவ இந்த விமானந்தாங்கிக்கப்பல் பயன்படுத்தப் -படுகிறது.

7. லாங் மார்ச் 5B’இன் மீதங்கள் இந்தியப்பெருங்கடலில் வீழ்ந்தன. அது எந்த நாட்டினுடைய ஏவுகலமாகும்?

அ) ரஷியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) சீனா

ஈ) இந்தியா

  • சீனாவின் மிகப்பெரிய ஏவுகணையின் மீதங்கள் இந்தியப்பெருங்கடலில் வீழ்ந்தன அதன் பெரும்பாலான கூறுகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோதே எரிந்தன. லாங் மார்ச் 5B ஏவுகணை, சீனாவின் அடுத்த விண்வெளி நிலையமான தியாங்காங்கின் முக்கிய தொகுதியை ஏப்ரல் மாதம் ஏவியது. இவை பூமியில் எங்கு விழும் என்பது பற்றிய யூகங்கள் நிலவி வந்தன. கடந்த ஆண்டு, முதல் லாங் மார்ச் 5B’இன் மீதங்கள் ஐவரி கோஸ்டில் விழுந்தன.

8. “மோதல் மற்றும் பாதுகாப்பு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) IUCN

ஆ) UNFCCC

இ) IMF

ஈ) WHO

  • ‘மோதல் மற்றும் பாதுகாப்பு’ என்பது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கையில், இயற்கைக்கும் மோதலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளை ஆராய்ந்து அமைதிக் கட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை IUCN பரிந்துரைக்கிறது.
  • IUCN என்பது இயற்கை மற்றும் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்காக செயல்படுகிற ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் கிளாண்டில் அமைந்துள்ளது.

9. உலக செவிலியர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 10

ஆ) மே 11

இ) மே 12

ஈ) மே 13

  • உலக செவிலியர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.12 அன்று கடைப் -பிடிக்கப்படுகிறது. கடந்த 1820ஆம் ஆண்டு இதே நாளில், பிரபல சமூக சீர்திருத்தவாதியும் செவிலியருமான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். ஓர் ஆங்கில புள்ளிவிவர நிபுணரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆன அவர், நவீன செவிலியத்தின் முக்கிய தூண்களை நிறுவினார்.
  • உலக செவிலியர்கள் கவுன்சிலானது உலக செவிலியர் நாளை அனுசரி -க்கிறது. 130’க்கும் மேற்பட்ட தேசிய செவிலியர் சங்கங்களின் கூட்ட
    -மைப்புதான் அந்தக் கவுன்சில்.

10. குளோபல் பிரைம் குடியிருப்பு குறியீட்டில் 32ஆவது இடத்தை வென்ற இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி

இ) ஹைதராபாத்

ஈ) பெங்களூரு

  • இலண்டனைச் சார்ந்த சொத்து ஆலோசக நிறுவனமான நைட் பிராங்க் குளோபல் பிரைம் குடியிருப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டின்படி, புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 32 மற்றும் 36ஆவது இடங்களில் உள்ளன. பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் என்பது ஒரு மதிப்பீட்டு அடிப்படையிலான குறியீடாகும்; இது 45’க்கும் மேற்பட்ட நகரங்களை உள்நாட்டு பணத்தின் அடிப்படையில் பிரதான குடியிருப்பு விலைகளின் இயக்கத்தைக் கண்காணித்தது.
  • உலகளவில், சீன நகரமான ஷென்சென், 2020 முதல் காலாண்டு முதல் 2021 முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் 18.9% வருடாந்திர மாற்றத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பன்னிரண்டு பேர் குழு: உச்சநீதிமன்றம் நியமனம்

மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பன்னிரண்டு பேர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. நாடு முழுவதும் நாள்தோறும் 4 இலட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் தில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிப்பது தொடர்பாக 12 பேர் குழுவை நியமிக்கிறோம். மேற்கு வங்க பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் பாபாதோஷ் பிஸ்வாஸ், டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை தலைவர் தேவேந்தர் சிங் ராணா, பெங்களூரு நாராயணா ஹெல்த்கேர் தலைவர் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, தமிழ்நாட்டின் வேலூரில் செயல்படும் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ககன்தீப், வேலூர் மருத்துவ கல்லூரி இயக்குநர் பீட்டர், குருகிராம் மேதாந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ், போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் இராகுல் பண்டிட், தில்லி சர் கங்காராம் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சவுமித்ரா ராவத், தில்லி ஐஎல்பிஎஸ் மூத்த பேராசிரியர் சிவகுமார், மும்பை பிரிச் கேண்டி, இந்துஜா மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஜாரிர் எப் உத்வாடியா மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் குழுவில் இடம்பெறுகின்றனர்.

அனைத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை நிபுணர் குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப்படும். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளை 12 பேர் குழு பரிசீலிக்கும். ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முறையாக சென்று சேர்ந்ததா என்பதை நிபுணர் குழு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. குழுவில் தமிழகம் முதல் டெல்லி வரை பல மாநில மூத்த மருத்துவர்கள் உள்ளனர். இடம்பெற்றுள்ளனர். குழுவில் 10 பேர் மருத்துவர்கள். 2 பேர் அரசு அதிகாரிகள்.

2. கோவிஷீல்ட் 2-ஆவது தவணைக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு: கா்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கா்ப்பிணி பெண்களும் பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி 4 முதல் 8 வாரங்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள், 4 முதல் 8 வாரங்களுக்குப் பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசின் இப்போதைய வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ‘கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கலாம். கா்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாா்களும் எந்தவொரு கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளலாம். சாா்ஸ் அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததலிருந்து 6 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிா்க்க வேண்டும்’ என்று என்டிஏஜிஐ பரிந்துரை செய்தது. கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியில் எந்த மாற்றத்தையும் என்டிஏஜிஐ பரிந்துரைக்கவில்லை. ‘பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் நேரடி ஆதாரங்களின் அடிப்படையில், கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க கரோனா பணிக் குழு ஒப்புக்கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற என்டிஏஜிஐ கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது’ என்று இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறினா்.

என்டிஏஜிஐ சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்தப் பரிந்துரையை தேசிய கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபுணா் குழு (என்இஜிவிஏசி) ஏற்று, அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘என்டிஏஜிஐ பரிந்துரையை நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வி.கே.பால் தலைமையிலான தேசிய கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபுணா் குழு புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொண்டது. அதன் மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்கள் என்பது 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

3. தள்ளாடும் புதுவை… | அரசின் ஸ்திரத்தன்மை குறித்த தலையங்கம்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வாக்களித்தும்கூட, இன்னும் அங்கு புதிய அரசு செயல்படத் தொடங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்திய யூனியனில் இணைந்த ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு எட்வா்ட் குபோ் தலைமையில் 1963 ஜூலை 1-ஆம் தேதி புதுச்சேரியில் அரசு அமைந்தது முதலே தொடா்ந்து பலமுறை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்திருப்பதால் இப்போதைய திரிசங்கு நிலை ஒன்றும் புதிதல்ல. 30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என். ரங்கசாமி நான்காவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தான் மட்டும் முதல்வராகப் பதவி ஏற்றாா்.

மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் திமுக ஆறு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஏனைய ஆறு இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறாா்கள். நியாயமாகப் பாா்த்தால் அங்கு எந்தவிதக் குழப்பத்துக்கும் முகாந்திரம் இல்லை. கடந்த முறையும் காங்கிரஸ் தலைமையில் நிலையான ஆட்சிதான் அமைந்தது. காங்கிரஸும், திமுகவும் அவையில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தும்கூட, அப்போதைய துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும், அன்றைய முதல்வா் வே. நாராயணசாமிக்கும் இடையிலான பனிப்போா் நிா்வாகத்தை ஏறத்தாழ முடக்கிப் போட்டிருந்தது. கடந்த 2016-இல் தொடங்கிய மோதல், வே. நாராயணசாமி அரசு கலைக்கப்படும் வரை தொடா்ந்தது. அதன் விளைவுதானோ என்னவோ கடந்த முறை 15 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மத்திய அரசுடனும், துணை நிலை ஆளுநருடனும் இணக்கமான உறவு இல்லாததால் முந்தைய காங்கிரஸ் ஆட்சி சரியாக இயங்க முடியவில்லை என்பதால்தான் இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருந்த என்.ஆா். காங்கிரஸுக்கு மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனா். தோ்தலின்போது இணைந்து பணியாற்றிய என்.ஆா். காங்கிரஸும், பாஜக-வும் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்த வேளையில் இரு கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத புதிய வழிமுறையாக புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் தங்களுக்கு துணை முதல்வா் பதவி வழங்க வேண்டும் என்கிற பாஜக-வின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முதல்வா் ரங்கசாமி தயங்குவதாகத் தெரிகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான், முதல்வரின் பதவிப் பிரமாணம் முதலில் தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், கொவைட் 19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட முதல்வா் என். ரங்கசாமி, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடன் கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சோ்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏ-க்களாக துணை நிலை ஆளுநா் நியமித்திருக்கிறாா். பாஜக-வின் தன்னிச்சையான அந்த முடிவு, கூட்டணிக் கட்சிகளான என்.ஆா். காங்கிரஸையும் அதிமுக-வையும் கடும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏற்கெனவே ஆறு இடங்களைப் பெற்றிருக்கும் பாஜக-வின் சட்டப்பேரவை உறுப்பினா் பலம் மூன்று நியமன உறுப்பினா்களையும் சோ்த்தால் ஒன்பதாக அதிகரிக்கிறது. ஆறு சுயேச்சைகளுடன் பாஜக பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும், அவா்களில் மூன்று போ் ஏற்கெனவே பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், பாஜக-வின் பலம் 15-ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அப்படிப்பட்ட சூழலில் பாஜக-வுக்கு துணை முதல்வா் பதவியை வழங்க வேண்டிய நிா்பந்தம் முதல்வா் ரங்கசாமிக்கு ஏற்படக்கூடும்.

15 உறுப்பினா்களுடன் முதல்வா் என். ரங்கசாமியின் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக தொடருமா? அல்லது தனது தலைமையில் ஆட்சி அமைக்கக் கோருமா என்கிற ஐயப்பாடு பலமாக எழுந்திருக்கிறது. வாளாவிருந்தால் என்.ஆா். காங்கிரஸ், திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினா்களையேகூட தன் பக்கம் இழுத்து தனிப்பெரும்பான்மையுடன் பாஜக புதுச்சேரியில் ஆட்சி அமைக்கக் கூடும் என்கிற அச்ச உணா்வு முதல்வா் ரங்கசாமிக்கு மட்டுமல்லாமல், திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும்கூட எழுந்திருக்கிறது. முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தொடருமா அல்லது கட்சித் தாவலை ஊக்குவித்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலவே புதுச்சேரியிலும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் கவலை அளிக்கும் நிலையை எட்டியிருக்கிறது. முதல்வராக என். ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும் செயல்படாமல், அமைச்சரவையை அமையாததால் அரசும் செயல்படாத நிலையில் தவிக்கிறது புதுச்சேரி. மருத்துவமனையில் இருக்கும் முதல்வா் ரங்கசாமியுடன் திமுக-வும் காங்கிரஸும் ரகசிய பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையாகக்கூட இருக்கலாம். மணிப்பூா், மத்திய பிரதேசம், கோவா வரிசையில் புதுச்சேரியும் இணைந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள வேண்டிய வேளையில், அரசியல் கட்சியினா் பதவிக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கிறாா்கள். தள்ளாடத்தானே செய்யும் புதுச்சேரி…

4. 5 மாநில பேரவைத் தோ்தல்கள்: குறைபாடுகளை அறிய குழு அமைக்கிறது தோ்தல் ஆணையம்

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது இருந்த குறைபாடுகளை அறிய தோ்தல் ஆணையம் குழு ஒன்றை அமைக்கிறது. தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

5 மாநில பேரவைத் தோ்தல்களின்போது தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் இருந்த குறைகள், அந்தத் தோ்தலில் கிடைத்த அனுபவம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைக்கப்படவுள்ளது. தோ்தல் ஆணைய செயலா் உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்தக் குழு 1 மாதத்தில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் தோ்தல்களை சிறப்பாக நடத்துவதற்கான திட்டமிடலை மேற்கொள்ள இந்தக் குழுவின் பரிந்துரைகள் உதவும். இந்தக் குழு, சமீபத்திய பேரவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்தின் நிா்வாகத்தில் இருந்த குறைகள், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் அளவில் அமலாக்கத்தில் இருந்த குறைபாடுகள் ஆகியவற்றை அடையாளம் காணும். கரோனா தொற்று சூழல் விதிமுறைகள் உள்பட, அனைத்து விதமான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய சட்டம் மற்றும் ஒழுங்குமுறையை விதிகளை வலுப்படுத்துவதற்கான தேவை குறித்தும் இந்தக் குழு ஆராயும்.

வாக்காளா்களைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளைத் தடுத்து, நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதற்காக வேட்பாளா்கள் செலவு மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்யும். தோ்தலுக்குப் பிறகு தோ்தல் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அவா்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் இருக்கும் குறைகள் தொடா்பாகவும் இந்தக் குழு ஆராயும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீபத்திய 5 மாநில பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது கரோனா தடுப்பு விதிகளை முறையாக அமல்படுத்த தோ்தல் ஆணையம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியின் தோ்தல் அதிகாரிக்கு பணியின்போது நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டது. அதை அடுத்து தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. 2020-இல் வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனுப்பிய பணம் ரூ.6 லட்சம் கோடி

வெளிநாடுவாழ் இந்தியா்கள் 2020-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.6.13 லட்சம் கோடியை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவோா் தங்கள் தாய்நாட்டுக்கு 2020-ஆம் ஆண்டில் எவ்வளவு பணத்தை அனுப்பி வைத்தனா் என்ற விவரத்தை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியா்கள் சுமாா் ரூ.6.13 லட்சம் கோடியை (83.3 பில்லியன் அமெரிக்க டாலா்) தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

இது கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் குறைவாகும். இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனா்கள் தங்கள் நாட்டுக்கு 59.5 பில்லியன் அமெரிக்க டாலா்களை அனுப்பி வைத்துள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளிநாடுவாழ் சீனா்கள் ரூ.68.3 பில்லியன் அமெரிக்க டாலரை அனுப்பி வைத்திருந்தனா். இந்தியா, சீனாவுக்கு அடுத்த இடங்களில் மெக்ஸிகோ (42.8 பில்லியன் அமெரிக்க டாலா்), பிலிப்பின்ஸ் (34.9 பில்லியன் அமெரிக்க டாலா்), எகிப்து (29.6 பில்லியன் அமெரிக்க டாலா்), பாகிஸ்தான் (26 பில்லியன் அமெரிக்க டாலா்), பிரான்ஸ் (24.4 பில்லியன் அமெரிக்க டாலா்), வங்கதேசம் (21 பில்லியன் அமெரிக்க டாலா்) ஆகிய நாடுகள் உள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், வெளிநாடுவாழ் பாகிஸ்தானியா்கள் தங்கள் நாட்டுக்கு அனுப்பிவைத்த பணம் கடந்த ஆண்டில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதிகள், தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டுப் பணியாளா்கள் அனுப்பி வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகள், ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசியா, சஹாரா பாலைவனப் பகுதி நாடுகள் ஆகியவற்றைச் சோ்ந்த பணியாளா்கள் கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான பணத்தையே கடந்த ஆண்டில் அனுப்பி வைத்துள்ளனா்.

நாட்டிலிருந்து வெளியேறிய பணம்: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பணியாளா்கள் 68 பில்லியன் அமெரிக்க டாலரை தங்கள் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனா். அதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பணியாளா்கள் 43 பில்லியன் அமெரிக்க டாலரையும், சவூதி அரேபியாவில் உள்ள பணியாளா்கள் 34.5 பில்லியன் அமெரிக்க டாலரையும், ஸ்விட்சா்லாந்தில் உள்ள பணியாளா்கள் 27.9 பில்லியன் அமெரிக்க டாலரையும் ஜொ்மனியில் உள்ள பணியாளா்கள் 22 பில்லியன் அமெரிக்க டாலரையும் தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனா். இந்தியாவில் உள்ள வெளிநாட்டுப் பணியாளா்கள் கடந்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலரை தங்கள் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனா். இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

6. செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 116 கோடியாக அதிகரிப்பு: டிராய்

செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2021 பிப்ரவரி இறுதி நிலவரப்படி 116.77 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிராய் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு பிப்ரவரி இறுதி நிலவரத்தின்படி, 41.49 கோடி வாடிக்கையாளா்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமாக ரிலையன் ஜியோ உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரியில் 42 லட்சம் வாடிக்கையாளா்களை கூடுதலாக இணைத்துக் கொண்டுள்ளது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் பிப்ரவரியில் 37 லட்சம் வாடிக்கையாளா்களை நிகர அடிப்படையில் சோ்த்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 34.83 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பல மாதங்களுக்கு பிறகு, வோடஃபோன் ஐடியா 6.5 லட்சம் வாடிக்கையாளா்ளை ஈா்த்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் வாடிக்கையாளா் எண்ணிக்கை 28.26 கோடியானது. 2021 பிப்ரவரி நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த செல்லிடபேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 0.72 சதவீத வளா்ச்சி விகிதத்துடன் 116.77 கோடியைத் தொட்டுள்ளது. நகா்ப்புற செல்லிடப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை ஜனவரியில் 63.32 கோடியாக இருந்த நிலையில், அது பிப்ரவரியில் 63.92 கோடியைத் தொட்டுள்ளது.

அதேபோன்று, ஊரக பகுதிகளில் உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையும் 52.61 கோடியிலிருந்து 52.84 கோடியாக உயா்ந்துள்ளது. நகா்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் செல்லிடப்பேசி சேவையில் இணைவோா் எண்ணிக்கையின் மாதந்திர வளா்ச்சி விகிதம் முறையே 0.94 சதவீதம் மற்றும் 0.44 சதவீதம் என்ற அளவில் உள்ளது. செல்லிடப்பேசி சேவையில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பங்களிப்பு 89.57 சதவீத அளவுக்கு உள்ளது. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் சந்தை பங்களிப்பானது 10.43 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.

செல்லிடப்பேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ 35.54 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 29.83 சதவீத பங்களிப்பையும், வோடஃபோன் ஐடியா 24.20 சதவீத பங்களிப்பையும் வைத்துள்ளன. நடப்பாண்டு ஜனவரியில் 75.76 கோடியாக இருந்த பிராட்பேண்ட் சந்தாதாரா்களின் எண்ணிக்கை பிப்ரவரியில் 0.99 சதவீத வளா்ச்சியைப் பெற்று 76.51 கோடியை எட்டியது. பிராட்பேண்ட் சேவையில் 41.74 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, பாா்தி ஏா்டெல் (18.82 கோடி), வோடஃபோன் ஐடியா (12.32 கோடி), பிஎஸ்என்எல் (2.54 கோடி), அட்ரியா கன்வொ்ஜன்ஸ் (18.2 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக புள்ளிவிவரத்தில் டிராய் தெரிவித்துள்ளது.

1. Which institution released the ‘Dost For Life’ mobile application for mental well–being?

A) AICTE

B) NTA

C) CBSE

D) UGC

  • The Central Board of Secondary Education (CBSE) has recently launched a new application for psycho–social wellness of students. The new app will help the class 9–12 students and parents from CBSE–affiliated schools. Live counselling sessions will be conducted free of cost, thrice a week by trained counsellors. Earlier, there was a practice of counselling through toll–free number.

2. ‘3rd Arctic Science Ministerial’ was jointly organised by which two countries?

A) Germany and France

B) Iceland and Japan

C) Italy and France

D) Japan and India

  • India has recently participated in the 3rd Arctic Science Ministerial (ASM3), the international platform for discussing research and cooperation in the Arctic region. The first two meetings—ASM1 and ASM2, were held in the USA in 2016 and Germany in 2018, respectively.
  • ASM3, jointly organised by Iceland and Japan, is the first Ministerial meeting being held in Asia. India enjoys ‘Observer’ status in the Arctic Council with twelve other countries.

3. Alexander Zverev and Aryna Sabalenka are the winners of which Masters 100 tournament?

A) Miami Open

B) Madrid Open

C) Italian Open

D) Shanghai Masters

  • German Tennis player Alexander Zverev defeated Italian Matteo Berrettini to claim his fourth Masters 1000 crown and second Madrid Open title. The player has been in the top 10 since July 2017 and he was also the US Open runner–up last year. Aryna Sabalenka, Belarusian tennis player has won her 10th career title at the Mutua Madrid Open. She defeated the World No.1 Ashleigh Barty.

4. What is the theme of ‘National Technology Day’ 2021?

A) Science and Technology for a Sustainable Future

B) Restart and Recycle

C) Atmanirbhar Vigyan

D) Science and Technology for Atmanirbhar India

  • National Technology Day is celebrated on May 11 every year to commemorate the technological advancements made by the country.
  • The theme this year is “Science and Technology for a Sustainable Future”. The day was first observed on May 11, 1999, as on the same date in 1998, India successfully conducted three nuclear tests at Indian Army’s Pokhran Test Range in Rajasthan. On 11th May 1998, India also tested its first indigenous aircraft Hansa–3 and Trishul.

5. A new species Ampelorhiza heteroxylon, that was recently found, belongs to which category?

A) Insect

B) Plant

C) Aquatic Animal

D) Land Animal

  • Researchers have found an 18.5–million–year–old fossil in Panama. It is said to be the oldest reliable species of a climbing plant. The new species is named as ‘Ampelorhiza heteroxylon’., belonging to the climbing vine known as a liana from the soapberry family.
  • This discovery is expected to shed more light on the evolution of climbing plants.

6. Which is the only aircraft carrier being operated in India?

A) INS Virat

B) INS Vikramaditya

C) INS Vikrant

D) INS Vishal

  • India’s only aircraft carrier is INS Vikramaditya, a modified Kiev–class 44,500–tonne aircraft carrier and the flagship of the Indian Navy. The aircraft recently reported a minor fire at its home port, Karwar in Karnataka. India bought the aircraft carrier from Russia and it joined the naval fleet seven years ago. The Indian Navy operates MiG–29K maritime fighters from the deck of this aircraft carrier.

7. Long March 5B, whose debris landed in the Indian Ocean, is the launch vehicle of which country?

A) Russia

B) USA

C) China

D) India

  • The debris of China’s biggest rocket landed in the Indian Ocean, after most of its components destroyed during re–entry into the Earth’s atmosphere. The Long March 5B rocket, launched the main module of China’s next space station, Tiangong, in April. There were speculations for long days about where would the debris hit on the Earth. Last year, pieces from the first Long March 5B fell on Ivory Coast.

8. The report titled “Conflict and Conservation” is released by which organisation?

A) IUCN

B) UNFCCC

C) IMF

D) WHO

  • “Conflict and Conservation” is a report which is released by the International Union for Conservation of Nature (IUCN).
  • In the report, IUCN explores the intricate relationships between nature and conflict and suggests policies aimed towards peace building and conservation. IUCN is an international organisation, working for the conservation and sustainability of nature and resources. It is headquartered at Gland, Switzerland.

9. When is the International Nurses Day observed every year?

A) May 10

B) May 11

C) May 12

D) May 13

  • The International Nurses Day is observed on May 12 every year. On the same day in 1820, the famous social reformer and nurse Florence Nightingale was born. She was an English statistician and a social reformer who founded the key pillars of modern nursing.
  • The ICN (International Council of Nurses) observes the International Nurses Day. International Council of Nurses is a federation of more than 130 national nurses’ associations.

10. Which Indian city won the 32nd rank in the Global Prime Residential Index?

A) Mumbai

B) New Delhi

C) Hyderabad

D) Bengaluru

  • London–based property consultant Knight Frank released the Global Prime Residential Index. As per the index, New Delhi and Mumbai are ranked in 32nd and 36th positions respectively.
  • The Prime Global Cities Index is a valuation–based index, which tracked the movement in prime residential prices in local currency across more than 45 cities. Globally, Chinese city Shenzhen ranked first with 18.9% annual change for the period Q1 2020 – Q1 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!