TnpscTnpsc Current Affairs

14th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

14th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘வளரும் நாடுகளில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNDP 

ஆ. உலக வங்கி

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. பன்னாட்டு செலவாணி நிதியம்

  • ஐநா வளர்ச்சித்திட்டமானது (UNDP) ‘வளரும் நாடுகளில் வாழ்க்கைச்செலவு நெருக்கடி’ என்றவோர் அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் வறுமையின்மீது பணவீக்கம் மிகக்குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது. இவ்வறிக்கையின்படி, இலக்கு வழங்கல்கள் ஏழைக்குடும்பங்களுக்கு விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவுகின்றன. இந்தியாவில், PMGKAY மற்றும் PMGKYமூலம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உணவு மற்றும் ரொக்கத்தினை சரியான நேரத்திற்குள்ளாக வழங்கியுள்ளது.

2. 2022 ஜூனில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சில்லறை பணவீக்க விகிதம் என்ன?

அ. 5.01 சதவீதம்

ஆ. 6.01 சதவீதம்

இ. 7.01 சதவீதம் 

ஈ. 8.01 சதவீதம்

  • NSO வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, உணவுப்பணவீக்கத்தின் மிதமான காரணத்தால் 2022 மேயில் 7.04 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்க விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 7 சதவீதத்துக்கு மேல் தொடர்ந்து இருந்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 2+/-4 சதவீதத்தைவிட அதிகமாகும்.

3. ‘மாநில விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாடு’ நடைபெறும் இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. அமிர்தசரஸ்

இ. பெங்களூரு 

ஈ. வாரணாசி

  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘மாநில விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சர்களின் தேசிய மாநாடு’ தொடங்கியது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இ-நாம் கீழ், “Platform of Platforms (PoPs)” தொடங்கினார். ‘விடுதலை அமுதப் பெருவிழாவின்’ ஒரு பகுதியாக இம்மாநாட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

4. தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு வெளியீட்டுத் தரவை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம் 

இ. நிதி சேவைகள் துறை

ஈ. பொருளாதார விவகாரங்கள் துறை

  • தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின்கீழ், தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு (IIP) வளர்ச்சித் தரவை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் 7.1%ஆக இருந்த IIP வளர்ச்சி, மே மாதத்தில் 19.6% ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் உற்பத்தித் துறையின் உற்பத்தி 20.6% வளர்ச்சியடைந்தது; அதே வேளையில் சுரங்க உற்பத்தி 10.9% உயர்ந்தது மற்றும் மின்னுற்பத்தி 23.5% அதிகரித்துள்ளது.

5. கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு எதிராக இந்தியாவின் முதல் குவாட்ரி-வேலண்ட் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியைத் (qHPV) தயாரிக்கவுள்ள நிறுவனம் எது?

அ. பயோகான்

ஆ. சீரம் இந்தியா நிறுவனம் 

இ. பாரத் பயோடெக்

ஈ. பயோலாஜிக்கல் இ லிட்

  • கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் முதல் குவாட்ரி-வேலண்ட் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிக்கு (qHPV) இந்தியாவின் தலைமை மருந்துக்கட்டுப்பாட்டகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. qHPV தடுப்பூசி, புனேவைச் சார்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மூலம் தயாரிக்கப்படும். இந்தியாவில் 15 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.

6. இந்தியாவில், ‘பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ. V கிருஷ்ணமூர்த்தி 

ஆ. சாந்த குமார்

இ. ரமேஷ் பாய்ஸ்

ஈ. பிரஹலாத் சிங் படேல்

  • பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL), இந்திய எஃகு கழகம் (SAIL) மற்றும் மாருதி உத்யோக் (தற்போது மாருதி சுசுகி) போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் முன்னாள் தலைவர் டாக்டர் V கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் காலமானார். அவர், ‘பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை’ என்று கருதப்படுகிறார். அவர் இந்திய அரசாங்கத்தின் தொழிற்துறை செயலராகவும், திட்டக்குழுவின் உறுப்பினராகவும், மற்றும் பல பிரதமரின் குழுக்களிலும் பணியாற்றினார். அவரது சேவைகளுக்காக அவருக்கு ‘பத்மஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’ மற்றும் ‘பத்ம விபூஷன்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

7. பேராசிரியர் பிரசாந்த சந்திர மகலனோபிஸின் பிறந்தநாள், இந்தியாவில், கீழ்க்காணும் எந்தச் சிறப்புநாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ. தேசிய திட்டமிடல் நாள்

ஆ. தேசிய புள்ளியியல் நாள் 

இ. தேசிய கணித நாள்

ஈ. தேசிய பொதுக்கொள்கை நாள்

  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.29ஆம் தேதியன்று பேராசிரியர் பிரசாந்த சந்திர மகலனோபிஸின் பிறந்த நாளன்று தேசிய புள்ளியியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. பொதுக்கொள்கையை உருவாக்குவதில் புள்ளிவிவரங்கள் வகிக்கும் பங்குபற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். மூத்த புள்ளியியல் நிபுணர், பிசி மகலனோபிஸ், பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் முதல் திட்டக்குழுவின் உறுப்பினரும் ஆவார்.

8. புதிய வர்த்தக வழித்தடத்தைப்பயன்படுத்தி, ரஷ்ய பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டு வரத் தொடங்கியுள்ள நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

. ஈரான் 

இ. ஈராக்

ஈ. இஸ்ரேல்

  • ஈரானிய அரசு நடத்தும் கப்பல் நிறுவனம், புதிய வர்த்தக வழித்தடத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய பொருட்களை இந்தியாவுக்கு பரிமாற்றத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானைத் தொடாமல் வட ஐரோப்பா, காகசஸ் முதல் கனிமவளம் நிறைந்த மத்திய ஆசியா வரை இந்தியா எளிதாகக் கடந்து செல்வதற்கு இது வழிவகை செய்கிறது. ஈரான் வழியாக 7,200 கிமீ நீள நிலுவையில் உள்ள இந்தப் பன்மாதிரி போக்குவரத்து வழித்தடமானது ரஷ்யா-இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

9. பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுறுவதாக அறிவித்த இயோன் மோர்கன் சார்ந்த அணி எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. இங்கிலாந்து 

இ. ஆஸ்திரேலியா

ஈ. கர்நாடகா

  • இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுற்றார். 35 வயதான அவர், 2019-இல் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை கேப்டனாக இருந்து வென்றார். அது இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் கோப்பையாகும். 2010 ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியிலும் அவர் ஓர் அங்கமாக இருந்தார்.

10. ரிம் ஆப் தி பசிபிக் (RIMPAC) என்ற கடல்சார் இராணுவப்பயிற்சியைத் தலைமையேற்றும் நடத்தும் நாடு எது?

அ. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

ஆ. இந்தியா

இ. ஆஸ்திரேலியா

ஈ. கனடா

  • RIM of the PACific (RIMPAC) என்ற கடல்சார் இராணுவப்பயிற்சி என்பது அமெரிக்காவால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சியாகும். சமீபத்தில் தொடங்கிய இந்தப் பயிற்சிகளில் 26 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் கடல்சார் பதட்டங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், 28ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் பயிற்சியானது திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் ஆளில்லா அலைமேவு கலங்கள் உட்பட நவீனகால அமெரிக்க ஆயுத அமைப்புகள் பங்கேற்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2-ஆவது தங்கம்

தென்கொரியாவில் நடைபெறும் ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது தங்கப்பதக்கத்தை வென்றது. 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் மெகுலி கோஷ்/சாஹு துஷார் மனே கூட்டணி 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெசாரோஸ்/இசுத்வன் பென் இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

இதில் சாகு, சீனியர் பிரிவில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். மெகுலிக்கு இது 2ஆவது தங்கம். அவர் ஏற்கனவே 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறார். இதனிடையே, 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் பாலக்/ஷிவா நர்வால் இணை 16-0 என்ற புள்ளிகளில் மிக எளிதாக கஜகஸ்தானின் இரினா லாக்டியோனோவா/வாலெரி ரகிம்ஸான் கூட்டணியை தோற்கடித்து பதக்கத்தை தனதாக்கியது.

இதையடுத்து, போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா புதன்கிழமை முடிவில் 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது.

2. தொலைதூர கோளில் நீர்: NASA கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வுமையம் கூறியதாவது: பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96 பி-உம் ஒன்று. சுமார் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனைப் போன்ற மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும் அந்த வாயுக் கோளில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை இல்லாத அதிநவீனமான அந்த தொலைநோக்கி செயற்கைக்கோள், வாஸ்ப்-19 பி-இல் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது என்று NASA தெரிவித்துள்ளது.

1. Which institution released the ‘Cost–of–Living Crisis in Developing Countries’ report?

A. UNDP 

B. World Bank

C. World Economic Forum

D. International Monetary Fund

  • UN Development Programme (UNDP) released a report on ‘Cost–of–Living Crisis in Developing Countries’. It shows that inflation will have only negligible impact on poverty in India. As per the report, targeted transfers help poorer households cope with price spikes. In India, targeted and time–bound transfers of food and cash were given to the vulnerable through PMGKAY and PMGKY.

2. What is the rate of retail inflation recorded in India in June 2022?

A. 5.01 per cent

B. 6.01 per cent

C. 7.01 per cent 

D. 8.01 per cent

  • As per the recent data released by the NSO, retail inflation slowed down marginally to 7.01 per cent in June from 7.04 per cent in May 2022 due to moderation in food inflation. The inflation rate continued to remain above the 7 per cent mark for the third month in a row. It is higher than the Reserve Bank of India’s target of 2+/–4 per cent for the medium term, for two quarters.

3. Which is the venue of the ‘National Conference of State Agriculture & Horticulture Ministers’?

A. Jaipur

B. Amritsar

C. Bengaluru 

D. Varanasi

  • Two days’ National Conference of State Agriculture & Horticulture Ministers was inaugurated in Bengaluru, Karnataka. Union Agriculture Minister Narendra Singh Tomar launched “Platform of Platforms (PoPs) under e–NAM”. The conference is organised by Department of Agriculture & Farmers Welfare, to commemorate Azadi Ka Amrit Mahotsav.

4. Which institution releases the Index of Industrial Production (IIP) output data?

A. NITI Aayog

B. National Statistical Office 

C. Department of Financial Services

D. Department of Economic Affairs

  • National Statistical Office (NSO), under the Ministry of Statistics and Programme implementation (MoSPI), releases the the Index of Industrial Production (IIP) growth data. The IIP growth rose to 19.6% in May as against 7.1% in April. The manufacturing sector’s output grew 20.6% in May this year, while the mining output climbed 10.9%, and power generation increased 23.5%.

5. Which company is set to produce India’s first Quadrivalent Human Papillomavirus vaccine (qHPV) against cervical cancer?

A. BioCon

B. Serum Institute of India 

C. Bharat Biotech

D. Biological E Limited

  • The Drugs Controller General of India (DCGI) approved India’s first Quadri–valent Human Papillomavirus vaccine (qHPV) against cervical cancer. The qHPV vaccine will be manufactured by Pune–based Serum Institute of India (SII). Cervical cancer is the second most frequent cancer among women in India between the ages of 15 and 44.

6. Who was called as the ‘Father of Public Sector Undertakings’ in India?

A. V Krishnamurthy 

B. Shanta Kumar

C. Ramesh Bais

D. Prahlad Singh Patel

  • Dr V Krishnamurthy, former chairman of public sector undertakings such as Bharat Heavy Electricals Limited (BHEL), Steel Authority of India (SAIL) and Maruti Udyog (now Maruti Suzuki), passed away recently. He is regarded as the ‘Father of Public Sector Undertakings’.
  • He had served as Secretary of Industries for the Government of India, Member of the Planning Commission, and many other Prime Minister’s Committees. He was conferred Padma Shri, Padma Bhushan and Padma Vibhushan for his services.

7. The birth day of Professor Prasanta Chandra Mahalanobis, is recognised as which special day in India?

A. National Planning Day

B. National Statistics Day 

C. National Mathematics Day

D. National Public Policy Day

  • National Statistics Day is observed in India on June 29 each year, on the birth day of Professor Prasanta Chandra Mahalanobis. The aim is to raise public awareness of the role statistics play in formulating and affecting public policy. The veteran statistician, PC Mahalanobis, is recognised for his contributions to economic planning and statistics. He is the founder of Indian Statistical Institute (ISI) and member of India’s first Planning Commission.

8. Which country has started the transfer of Russian goods to India, using a new trade corridor?

A. UAE

B. Iran 

C. Iraq

D. Israel

  • Iran’s state–run shipping company has started its first transfer of Russian goods to India, using a new trade corridor. The route grants India easy access to a region stretching from North Europe, Caucasus to mineral rich Central Asia, bypassing Pakistan. This 7,200 km long–pending multi–modal transportation corridor via Iran is also expected to boost Russia–India bilateral trade.

9. Eoin Morgan, who announced retirement from international cricket, was from which team?

A. South Africa

B. England 

C. Australia

D. New Zealand

  • The England cricketer Eoin Morgan has retired from international cricket after his 13–year career with England. The 35–year–old won the ICC Men’s Cricket World Cup as Captain in 2019, the first time England Men had won the world title. He was also a part of the England team that won the 2010 ICC Men’s T20 Cricket World Cup.

10. Which country leads the Rim of the Pacific (RIMPAC) maritime military exercise?

A. USA 

B. India

C. Australia

D. Canada

  • Rim of the Pacific (RIMPAC) maritime military exercise is a biennial exercise led by the USA. Twenty–six nations are expected to participate in the operations, which began recently. The 28th biennial exercise aims to promote an open and free Indo–Pacific region as maritime tensions escalate with China. The event will feature the latest US weapons systems, including unmanned surface vessels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!