TnpscTnpsc Current Affairs

14th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

14th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் இயற்பியல் ஆய்வுக்கூடமானது எந்நிறுவனத்தின்கீழ் செயல்படுகிறது?

அ) டிஆர்டிஓ

ஆ) இஸ்ரோ 

இ) சி.எஸ்.ஐ.ஆர்

ஈ) பார்க்

  • அகமதாபாத்தைச் சார்ந்த விண்வெளி பயன்பாட்டு மையம் & இயற்பியல் ஆய்வுக்கூடமானது இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின்கீழ் (இஸ்ரோ) செயல்படுகிறது.
  • சமீபத்தில், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘குவாண்டம் சிக்கலை’ வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். நிகழ்நேர குவாண்டம் கீ விநியோகத்தைப்பயன்படுத்தி, 300 மீ இடைவெளி உடைய இரண்டு கட்டிடங்களுக்கு இடையே ஹேக்–புரூப் தொடர்பை மேற்கொண்டனர்.

2. இந்தியா சமீபத்தில் எக்கூட்டமைப்புடன் இணைந்து ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்குறித்த உயர்நிலை மாநாட்டை’ நடத்தியது?

அ) சார்க்

ஆ) ஆசியான் 

இ) பிரிக்ஸ்

ஈ) ஜி–20

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் இந்தோனேசியாவின் ASEAN எரிசக்தி மையமும் இணைந்து ‘ASEAN–India High level Conference on Renewable Energy (RE)’ஐ நடத்துகின்றன.
  • இது தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (TERI) உடன் இணைந்து நடத்தப்படுகிறது. “Experience and Innovations for Integrated Renewables Market” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

3. ‘ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு தடகள வீரர்’ விருதை வென்ற முதல் வீரர் யார்?

அ) விராட் கோலி

ஆ) பங்கஜ் அத்வானி

இ) PR ஸ்ரீஜீஷ் 

ஈ) ஆரிப் கான்

  • மூத்த இந்திய ஹாக்கி கோல்கீப்பர் PR ஸ்ரீஜீஷ், ‘2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க சிறந்த உலக விளையாட்டு தடகள வீரர்’ விருதை வென்றார். 2019ஆம் ஆண்டுக்கான பரிசை வென்ற இந்திய ஹாக்கி மகளிர் அணி கேப்டன் இராணிக்குப்பிறகு, இவ்விருதை வென்ற முதல் வீரரும் இரண்டாவது ஹாக்கி வீரருமானார் ஸ்ரீஜீஷ். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஆடவர் அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

4. அன்டோனியோ கோஸ்டா, எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) இத்தாலி

ஆ) போர்ச்சுகல் 

இ) ஜெர்மனி

ஈ) இஸ்ரேல்

  • அன்டோனியோ கோஸ்டா, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் போர்ச்சுகலின் பிரதமராக பணியாற்றி வருகிறார். சோசலிச கட்சியின் தலைவரான அவர், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

5. ‘தேசிய நிலப்பணமாக்கல் கழகத்தில்’ இந்திய அரசின் பங்கு சதவீதம் எவ்வளவு?

அ) 25%

ஆ) 50%

இ) 75%

ஈ) 100% 

  • பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நிலம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் முக்கியத்துவமற்ற சொத்துக்கள் பணமாக்கலை விரைவாக கண்காணிப்பதற்காக தேசிய நிலப்பணமாக்கல் கழகத்தை அரசாங்கம் அமைத்துள்ளது. `5,000 கோடி ஆரம்பநிலை பங்கு மூலதனத்துடன் 100% இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக இந்தக் கழகம் இணைக்கப்படுகிறது.

6. மத்திய பட்ஜெட்டானது விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளிக்கும் நிதியை அறிவித்தது. அந்நிதியானது எந்நிறுவனம்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது?

அ) பாரத ஸ்டேட் வங்கி

ஆ) நபார்டு 

இ) NABFID

ஈ) REC

  • கூட்டு முதலீட்டு மாதிரியின்கீழ் திரட்டப்பட்ட கலப்புமுறை மூலதனத்துடன்கூடிய நிதி, நபார்டுமூலம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்கு நிதியளிக்க பயன்படும். பயிர் மதிப்பீடு, நிலப்பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் ஆகியவற்றுக்கு ‘கிசான் டிரோன்’ பயன்பாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

7. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘பர்வத மாலா’ திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) சாகச விளையாட்டுகளை ஊக்குவித்தல்

ஆ) மலைகளில் போக்குவரத்து 

இ) புனித யாத்திரை தலங்களை மேம்படுத்துதல்

ஈ) வனவுயிரிகளின் பாதுகாப்பு

  • மத்திய பட்ஜெட்டில் ‘பர்வத மாலா’ (அ) தேசிய கயிற்றுப் பாதைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், J & K மற்றும் வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு நவீன போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

8. நாட்டின் புதிய பாலூட்டி இனமான வெண்கன்ன குரங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) அஸ்ஸாம்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) சிக்கிம்

  • இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் விஞ்ஞானிகள், அருணாச்சல பிரதேச மாநிலத்தில், வெண்கன்னமுள்ள குரங்கை புதிய பாலூட்டி இனமாக கண்டுபிடித்துள்ளனர். இக்குரங்கு வகை முதன்முதலில் சீனாவில் 2015’இல் கண்டுபிடிக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கடைசி பாலூட்டி இனம் இதுவாகும்.

9. கல்லூரிகளில் ஹிஜாப்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தும் மனுக்களை விசாரிக்க, 3 நீதிபதிகள்கொண்ட அமர்வை அமைத்து உள்ள உயர்நீதிமன்றம் எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கர்நாடகா 

இ) மகாராஷ்டிரா

ஈ) உத்தர பிரதேசம்

  • கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநிலத்தில் உள்ள ஒரு சில கல்லூரிகளில் ஹிஜாப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதைக் கேள்விக்குட்படுத்தும் மனுக்களை விசாரிக்க அவர் உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்தார்.
  • இந்த வழக்கில் மிகப்பெரிய அரசியலமைப்புச் சிக்கல்கள் உள்ளதாகக்கண்டறிந்ததால், மனுக்களை வேறொரு பெரிய அமர்விற்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டடுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடகா முழுவதும் இரண்டு நாட்களாக நடந்த பதற்றம் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

10. ஏழு இராணுவ வீரர்கள் பனிச்சரிவில் இறந்த கமெங் செக்டார் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) சிக்கிம்

ஆ) லடாக்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேசத்தின் கமெங் செக்டாரில் உள்ள ஓர் உயரமான பகுதியில் பனிச்சரிவில் சிக்கி, ரோந்துப் பணியிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் ஏழுபேர் உயிரிழந்தனர். 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் சியாச்சின் பனிச்சரிவுககளில் சிக்கி இராணுவம் ஆறு வீரர்களை இழந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி–52!

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்–04 (ரிசாட்–1ஏ) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி–52 ராக்கெட் பிப்.14 அதிகாலை விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது. முன்னதாக, அதற்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு, குறித்த நேரத்துக்குள் அவை நிறைவடைந்தன.

இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்எல்வி சி–52 ராக்கெட் தாங்கிச் செல்லும் இஒஎஸ்–04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.

பூமியில் இருந்து 529 கிமீட்டர் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் அது நிலைநிறுத்தப்பட உள்ளது. புவிக் கண்காணிப்பு, வேளாண், வனஞ்சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன்கொண்டது. இதனுடன் ஆய்வுத்திட்டத்தின்கீழ் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இரண்டு சிறிய வகை செயற்கைக் கோள்களும் ஏவப்படவுள்ளன. இதைத்தொடர்ந்து நிகழ் ஆண்டில் 10’க்கும் மேற்பட்ட இராக்கெட் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்துள்ளது.

2. நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த `26,275 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2025–26ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு `26,275 கோடியை செலவிடவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.

இத்தொகையானது ஜம்முகாஷ்மீர், வடகீழை மாநிலங்கள், மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், புதிதாக பட்டாலியன்களை உருவாக்குதல், அதிநவீன ஃபாரன்சிக் (தடய அறிவியல்) ஆய்வகங்கள் உருவாக்குதல், இதர காவல்துறை கருவிகளை மேம்படுத்துதல் போன்றவற்று –க்கு செலவிடப்படும்.

காவல்துறையை நவீனப்படுத்துதல் திட்டத்தின்கீழ் இத் தொகையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு–காஷ்மீர், தீவிரவாதம் பாதித்துள்ள வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்ட்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் காவல்துறையை மேம்படுத்த `18,839 கோடி செலவிடப்படும். மேலும் `4,846 கோடியானது மாநில காவல்துறையின் படைகளை மேம்படுத்த செலவு செய்யப்படும். பாரன்சிக் ஆய்வகங்களை மேம்படுத்துதல், யூனியன் பிரதேசங்களில் காவல் துறையை மேம்படுத்த `2,080.50 கோடி செலவிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ்: ஆரிப் கானுக்கு 45–ஆவது இடம்

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் 24–ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஜயன்ட் ஸ்லாலம் விளையாட்டில் இந்தியாவின் ஆரிப் முகமது கான் 45–ஆவது இடம் பிடித்தார்.

போட்டியின் 10–ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆல்பைன் ஸ்கீயிங் விளையாட்டில், ஆடவருக்கான ஜயன்ட் ஸ்லாலம் பிரிவில் களம் கண்டார் ஆரிப்.

இப்பிரிவில் இரு பனிச்சறுக்கு பந்தயங்கள் நடத்தப்பட்டு அவற்றில் இலக்கை அடைய போட்டியாளர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மொத்தமாக கணக்கிடப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் ஆரிப் முதல் பந்தயத்தில் 1 நிமிஷம் 22.35 விநாடிகளில் இலக்கை எட்டி 53–ஆவது இடம் பிடித்தார். இந்தப் பந்தயத்தை மொத்தம் 54 போ் நிறைவு செய்தனர். 2ஆவது பந்தயத்தில் ஆரிப், 1 நிமிஷம் 24.89 விநாடிகளில் இலக்கை அடைந்து 44–ஆவது இடம் பிடித்தார். இந்தப் பந்தயத்தை 45 வீரர்கள் நிறைவு செய்தனர்.

இருபந்தயங்களையும் சேர்ந்து மொத்தமாக 2 நிமிஷம் 47.24 விநாடிகள் எடுத்துக்கொண்ட ஆரிபுக்கு இறுதியில் 45ஆவது இடம் கிடைத்தது. சுவிட்ஸர்லாந்தின் மார்கோ ஆடர்மாட் (2 நிமிஷம் 9.35 விநாடிகள்) தங்கமும், ஸ்லோவேகியாவின் ஸான் கிராஞ்ஜெக் (2 நிமிஷம் 9.54 விநாடிகள்) வெள்ளியும், மேத்யூ பேவ்ரே (2 நிமிஷம் 10.69 விநாடிகள்) வெண்கலமும் வென்றனர்.

குளிர்கால ஒலிம்பிக்கில் ஜயன்ட் ஸ்லாலம் பிரிவில் இதுவே இந்தியாவின் அதிகபட்சமாகும். முன்னதாக கடந்த 1968 கிரெனோபல் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஜெரிமி புஜாகோவ்ஸ்கி இதே ஜயன்ட் ஸ்லாலமில் 65ஆவது இடம் பிடித்திருந்தார். போலந்தில் பிறந்த ஜெரிமி தான், குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியராவார்.

முன்னதாக ஆரிப், கடந்த டிசம்பரில் மான்டினீக்ரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இதே பிரிவில் பந்தய இலக்கை அடைய 1 நிமிஷம் 59.47 விநாடிகளே எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆரிப் அடுத்தபடியாக, வரும் புதன்கிழமை நடைபெற இருக்கும் ஸ்லாலம் பிரிவிலும் களம் காண இருக்கிறார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருக்கும் ஒரே இந்திய வீரர் அவர் என்பதும், அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. ‘Space Applications Centre and Physical Research Laboratory’ function under the aegis of which institution?

A) DRDO

B) ISRO 

C) CSIR

D) BARC

  • Ahmedabad–based Space Applications Centre and Physical Research Laboratory function under the aegis of Indian Space Research Organisation (ISRO).
  • Recently, the Scientists from the institute successfully demonstrated ‘Quantum entanglement’. Using real–time Quantum Key Distribution (QKD), they conducted hack–proof communication between two buildings separated by 300 meters.

2. India recently held a ‘High Level Conference on Renewable Energy’ along with which bloc?

A) SAARC

B) ASEAN 

C) BRICS

D) G–20

  • The Ministry of New and Renewable Energy (MNRE) and Ministry of External Affairs (MEA), and the ASEAN Centre for Energy (ACE), Indonesia, are jointly hosting an ‘ASEAN–India High Level Conference on Renewable Energy (RE)’. This is being hosted in collaboration with The Energy and Resources Institute (TERI). The theme for the conference is ‘Experience and Innovations for Integrated Renewables Market’.

3. Who is the first male player to win the ‘World Games Athlete of the Year’ award?

A) Virat Kohli

B) Pankaj Advani

C) PR Srejeesh 

D) Arif Khan

  • Veteran Indian hockey goalkeeper PR Srejeesh won the prestigious World Games Athlete of the Year for his 2021 performances. Sreejesh became the first man and second hockey player to win the award, after India Hockey women’s captain Rani, who won the 2019 prize.
  • He played a significant role in the men’s team that claimed a bronze medal in the Tokyo Olympics.

4. Antonio Costa, has been re–elected as the Prime Minister of which country?

A) Italy

B) Portugal 

C) Germany

D) Israel

  • Antonio Costa is serving as the current Prime Minister of Portugal since 2015. The 60–year–old leader of Socialist Party has been re–elected for the second term in the snap general election.

5. What is the share of the Government of India in the ‘National Land Monetisation Corporation (NLMC)’?

A) 25%

B) 50%

C) 75%

D) 100% 

  • The government has set up a National Land Monetisation Corporation (NLMC) to fast–track monetisation of land and non–core assets of public sector entities, as per the Economic Survey. NLMC is being incorporated as a 100 per cent Government of India owned entity with an initial authorised share capital of Rs 5,000 crore.

6. Union Budget announced a fund to finance start–ups for agriculture and rural enterprise, facilitated through which institution?

A) State Bank of India

B) NABARD 

C) NABFID

D) REC

  • The Union Budget announced a fund with blended capital, raised under co–investment model, will be facilitated through NABARD. It will be used to finance start–ups for agriculture and rural enterprise. The Government would promote the use of ‘Kisan Drones’ for crop assessment, digitisation of land records and spraying of insecticides.

7. What is the objective of the ‘Parvat Mala’ scheme announced recently?

A) Promotion of Adventure Sports

B) Transportation in Hills 

C) Promotion of Pilgrimage Sites

D) Protection of Wildlife

  • The Union Budget announced a new scheme called ‘Parvat Mala’ or National Ropeways Development Programme.
  • The scheme will be launched for regions like Himachal Pradesh, Uttarakhand, J&K, and the northeast to facilitate a modern system of transportation and connectivity in hills.

8. White Cheeked Macaque, a new mammal species in the country, has been discovered in which state?

A) Uttarakhand

B) Assam

C) Arunachal Pradesh 

D) Sikkim

  • Scientists from the Zoological Survey of India (ZSI) have found a new mammal species in the country namely the White Cheeked Macaque, in Arunachal Pradesh. The Macaque was first discovered in China in 2015 and its existence was not known in India before this. The White Cheeked Macaque has white cheeks, long and thick hair on the neck and a longer tail than other Macaques. It is the last mammal to have been discovered in Southeast Asia.

9. Which High court has constituted a three–judge bench to hear petitions questioning a ban on the use of hijabs in colleges?

A) Andhra Pradesh

B) Karnataka 

C) Maharashtra

D) Uttar Pradesh

  • Karnataka High Court Chief Justice constituted a three–judge bench, including himself, to hear a batch of petitions questioning a ban on the use of hijabs in a few pre–university colleges in the state. A single–judge bench of the court had decided to refer the pleas to a larger bench as it found the case involved larger Constitutional issues.
  • The decision came after two days of tension and protests across Karnataka over the issue.

10. Kameng sector, where seven army personnel died in an avalanche, is located in which state/UT?

A) Sikkim

B) Ladakh

C) Arunachal Pradesh 

D) Himachal Pradesh

  • Seven Indian Army personnel, who were part of a patrol team, were struck by an avalanche in the high–altitude area in the Kameng sector of Arunachal Pradesh.
  • All the seven personnel were later found deceased. The area is located at an altitude of 14,500 feet and had been witnessing heavy snowfall since the last few days. The Army had lost six personnel to avalanches and snow–slides in the Siachen Glacier in 2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!