Tnpsc

14th & 15th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th & 15th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th & 15th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th & 15th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எட்டாவது நீதித்துறை அமைச்சர்கள் சந்திப்பை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) தஜிகிஸ்தான் 

இ) சீனா

ஈ) ரஷ்யா

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தை தஜிகிஸ்தான் நடத்தியது.
  • மத்திய சட்டம் & நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தஜிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2021ஆம் ஆண்டு 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு தஜிகிஸ்தான் குடியரசின் நீதி அமைச்சர் M K அசுரியோன் தலைமை வகித்தார். SCO அதன் 20ஆவது ஆண்டு நிறைவை “20 years of SCO: Cooperation for Stability and Prosperity” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடுகிறது. அடுத்த சந்திப்பு 2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெறும்.

2. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து UNSC உயர்மட்ட விவாதத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?

அ) எஸ். ஜெய்சங்கர்

ஆ) TS திருமூர்த்தி

இ) சையது அக்பருதீன்

ஈ) நரேந்திர மோடி 

  • கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தும் “Enhancing Maritime Security” என்ற தலைப்பிலான UNSC உயர்மட்ட விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச சட்டத்தின்படி சர்ச்சைகளை சமாதானமாக தீர்த்துவைக்க வேண்டும் என அந்த விவாதத்தில் கூறினார். UNSC விவாதத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

3.பன்னாட்டு அமைதி & நம்பிக்கையின் ஆண்டாக ஐநா அவையால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 2020

ஆ) 2022

இ) 2021 

ஈ) 2019

  • ஐநா அவையானது 2021ஆம் ஆண்டை பன்னாட்டு அமைதி மற்றும் நம்பிக்கையின் ஆண்டாகவும், நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச ஆக்கபூர்வ பொருளாதார ஆண்டாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டாகவும், குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான சர்வதேச ஆண்டாகவும் அறிவித்துள்ளது. மேலும், கத்தோலிக்க திருச் சபை, 2021’ஐ புனித ஜோசப்பின் ஆண்டாக அறிவித்துள்ளது.

4. தீர்ப்பாய சீர்திருத்த மசோதா, 2021’இன்கீழ், எத்தனை மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் ஒழிக்கப்படும்?

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 9 

  • திரைப்பட சான்றளிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (FCAT) உட்பட ஒன்பது மேல்முறையீட்டு நீதிமன்றங்களை ஒழிக்கக்கோரும் மசோதா நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆக.9’இல் முன்மொழியப்பட்ட இச்சட்டம் மாநிலங்களவைக்குச் சென்றுள்ளது. தீர்ப்பாய சீர்திருத்த மசோதா, 2021’க்கு ஆக.3 அன்று மக்களவை ஒப்புதல் அளித்தது.
  • இந்த மசோதாவின்படி, அத்தகைய தீர்ப்பாயங்களில் உள்ள அனைத்து வழக்குகளும் வணிக நீதிமன்றம் / உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, ஒரே மாதிரியான விதிமுறைகள் மற்றும் சேவை நிபந்தனைகளையும் இந்த சட்டம் வழங்குகிறது.

5. ஆகஸ்ட்.13 அன்று தனது முதல் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) சிக்கிம்

  • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை அந்த மாநிலத்தின் நிதியமைச்சர் P T R பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்.13 அன்று தாக்கல்செய்தார். இது தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் ஆகும். இது, 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டமாகும்.

6. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் நடத்தப்பட்ட எந்த ஆய்வின் கீழ், இந்தியாவில் வறுமை அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது?

அ) நுகர்வு செலவின ஆய்வு 

ஆ) காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு

இ) தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் 2021

ஈ) தேசிய குறிகாட்டி கட்டமைப்பு

  • இந்தியாவின் நுகர்வு செலவின ஆய்வானது (Consumption Expenditure Survey) ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. ஆனால், 2011-2012 முதல் CES தரவு வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வின்கீழ் இந்தியாவில் வறுமை மீண்டும் அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
  • 2017-18ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட CES’இன் தரவுகள் அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. 2021-22’இல் ஒரு புதிய CES நடத்தப்பட வாய்ப்புள்ளது, அதற்கான தரவுகள் 2022’இன் இறுதியில் கிடைக்கும்.

7. ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யும் தமிழ்நாட்டின் சட்டத்தை சமீபத்தில் இரத்துசெய்த உயர்நீதிமன்றம் எது?

அ) சென்னை உயர்நீதிமன்றம் 

ஆ) கேரள உயர்நீதிமன்றம்

இ) மும்பை உயர்நீதிமன்றம்

ஈ) கொல்கத்தா உயர்நீதிமன்றம்

  • ஆன்லைன் விளையாட்டுகளான போக்கர், ரம்மி மற்றும் பங்குகளை உள்ளடக்கிய பிற திறன்சார்ந்த விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்த தமிழ்நாடு இணையவழி விளையாட்டுக்கள் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மட்டும் இரத்து செய்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுமையான தடை என்பது விதிமுறையற்றது மற்றும் பகுத்தறிவற்றது எனக் கூறியது.

8. தேசிய தொழில்துறை வழித்தட திட்டத்தின் (NICP)கீழ் இதுவரை எத்தனை தொழில்துறை வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ) 10

ஆ) 11 

இ) 20

ஈ) 21

  • தேசிய தொழில்துறை வழித்தட திட்டத்தின் (NICP) ஒருபகுதியாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும் 32 திட்டங்களுடன் 11 தொழில்துறை வழித்தடங்களை உருவாக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவை தில்லி-மும்பை தொழில்துறை வழித்தடம், சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடம், கோயம்புத்தூர் வழியாக கொச்சி வரை சென்னை பெங்களூரு-தொழில்துறை வழித்தட விரிவாக்கம் தொழில்துறை வழித்தடம், பெங்களூரு-மும்பை தொழில் துறை வழித்தடம், வைசாக்-சென்னை தொழில்துறை வழித்தடம், ஒடிசா பொருளாதார வழித்தடம் & தில்லி-நாக்பூர் தொழில்துறை வழித்தடம்.

9. உலக இளையோர் மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் நிலை என்ன?

அ) 122 

ஆ) 132

இ) 121

ஈ) 131

  • லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகம், ஆக.10 அன்று வெளியிட்ட 181 நாடுகளிலுள்ள இளையோரின் நிலையை அளவிடும் புதிய உலக இளையோர் மேம்பாட்டு குறியீட்டில், இந்தியா 122ஆவது இடத்தில் உள்ளது. நைஜர் கடைசி இடத்திலும் சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது.
  • இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, நலவாழ்வு, சமத்துவம் & சேர்த்தல், அமைதி & பாதுகாப்பு மற்றும் அரசியல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் குறியீடு 0.00 (குறைந்த) மற்றும் 1.00 (மிக உயர்ந்த) மதிப்பெண் அடிப்படையில் நாடுகளைத் தரவரிசைப் படுத்துகிறது. இது 15 மற்றும் 29 வயதிற்குட்பட்ட உலகின் 1.8 பில்லியன் மக்களின் நிலையை வெளிப்படுத்த, எழுத்தறிவு மற்றும் வாக்களிப்பு உட்பட 27 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.

10. அண்மையில் எந்த நாட்டோடு இணைந்து அல்-மொஹெத் அல் -ஹிந்தி – 2021 என்ற கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்றது?

அ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஆ) சௌதி அரேபியா

இ) கத்தார்

ஈ) ஓமன்

  • இந்தியா மற்றும் சௌதி அரேபியா இடையே வளர்ந்துவரும் பாதுகாப்பு உறவுகளுக்கு சான்றாக, இந்திய மேற்கு கடற்படையின் INS கொச்சி, இம்மாதம், அல்-ஜுபைல் துறைமுகத்துக்கு சென்றது.
  • இந்தக் கப்பலின் வருகை, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறது. ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அல்-மொஹெத் அல்-ஹிந்தி” என்ற இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழக நிதிநிலை அறிக்கை: பெட்ரோல் விலை ரூ.3 குறைந்தது

பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில அரசின் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். மேலும், நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொள்ள நான்கு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

நான்கு முக்கிய அம்சங்கள்: தரவுகளை மையமாகக் கொண்டுள்ள நான்கு முக்கிய நிா்வாகச் சீா்திருத்தங்களைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். அதன்படி, அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்துத் துறைகளிலுள்ள தரவுகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். இதன்படி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது மேம்படுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை பின்பற்றப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் அமைச்சா் தியாகராஜன் தெரிவித்தாா். ஒப்பந்தப்புள்ளிகள், பணிகளுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்

* பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைக்கப்படும்.

* மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி.

* 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு.

* ஆண்டுதோறும் ஜூன் 3-இல் செம்மொழித் தமிழ் விருது (ரூ.10 லட்சம்) அளிக்கப்படும்.

* பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படும்.

* இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: தகுதியானவா்களுக்கு மட்டும்…

* நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* சித்த மருத்துவத்துக்கு தனிப் பல்கலைக்கழகம் * கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்

* புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்

* தூத்துக்குடி மாவட்டத்தில் மரச்சாமான் தயாரிப்பு பூங்கா உருவாக்கப்படும்.

* 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்.

* ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

* ரூ.1,000 கோடியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம்.

* ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

* ரூ.100 கோடியில் நகா்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* 100 ஆண்டுகால பேரவை நிகழ்வு ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்.

* திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும்.

* தமிழ் ஆட்சி மொழிப் பயன்பாடு வலுப்படுத்தப்படும்.

* சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807.56 கோடி ஒதுக்கப்படும்.

* போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து-சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் என மாற்றப்படும்.

* 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள்-கதவணைகள் கட்டப்படும்.

* காசிமேடு மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகள் துணையுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும்.

* 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

* மாநில கல்விக் கொள்கை வகுக்க உயா் நிலைக் குழு உருவாக்கப்படும்.

* அடிப்படை கல்வி, கணித அறிவை உறுதி செய்ய தனி இயக்கம் ஏற்படுத்தப்படும்.

* மாதிரிப் பள்ளிகள் அமைக்க சிறப்புத் திட்டம்.

* 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கரில் நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

* நந்தம்பாக்கம், காவனூரில் நிதிநுட்ப நகரங்கள்.

* துணிநூல் துறையில் கவனம் செலுத்த தனி இயக்குநரகம்.

2. புவிசாா் குறியீடு வழங்கப்பட்ட 3 பொருள்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ள நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு, மதுரை சுங்குடி சேலைகள் மற்றும் நாகா்கோவிலில் தயாரிக்கும் கோவில் நகைகள் ஆகியவற்றுக்கு இந்திய அஞ்சல்துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் 365 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கா்நாடகாவில் 47 பொருள்களுக்கும், அடுத்தபடியாக தமிழகத்தில் 39 பொருள்களுக்கும் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு அஞ்சல் உறை ரூ.75ம், மதுரை சுங்குடி சேலைகள் மற்றும் நாகா்கோவிலில் தயாரிக்கும் கோவில் நகைகள் அஞ்சல்உறை தலா ரூ.50ம் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

3. கேரளத்தில் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் தொடக்கம்: நாட்டில் முதல் முறை

ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்) பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், ட்ரோன் தடயவியல் ஆய்வு மையத்தை நாட்டிலேயே முதல் முறையாக கேரள காவல் துறையினா் தொடங்கியுள்ளனா். ஜம்மு விமானப் படைத் தளத்தில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி ட்ரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். அதில் கட்டடங்களுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது; விமானப் படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா். ஜம்முவில் உள்ள ராணுவப் படைத் தளத்தில் அடுத்த நாளே ட்ரோன் மூலமாகத் தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் சில மாவட்டங்களில் ட்ரோன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. ட்ரோன்கள் மூலமாக நாட்டின் பாதுகாப்புக்குப் புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவரும் வேளையில், ட்ரோன் தடயவியல் ஆய்வு மையத்தை கேரள காவல் துறையினா் தொடங்கியுள்ளனா்.

4. வேளாண் பட்ஜெட்: அறிய வேண்டிய அனைத்து விவரங்களும்.

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை 14.08.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு.

1. 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.

2. ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. மத்திய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

3. நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம்ரூ.319.38 கோடி ஒதுக்கீடு.

4. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு

5. விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.

6. பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.

7. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு

8. நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி, 1,50,000 எக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு.

9. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 இலட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு.

10. ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.

11. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.

12. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி

13. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி.

14. மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.

15. பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.

16. வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.

17. நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.

18. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு.

19. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக” டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி

20. வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்.

21. மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய வேளாண் உபகரணங்கள் தொகுப்பு அரை இலட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு.

22. இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.

23. வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு.

24. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு இலட்சம் ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.

25. திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி

26. கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கம்

27. கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி

28. குறைந்த வாடகையில் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தினை, வலுப்படுத்துவதற்காக, ரூ. 23.29 கோடியில் நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்.

29. மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

30. மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

31. தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு.

32. 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.

33. ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி.

34. ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள்

35. நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க பரிவர்த்தனைக்கூடம், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 இலட்சம்.

36. நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ‘ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்’.

37. கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள்.

38. விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம். அ. முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஹஞநுனுஹ தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவிகித மானியம்

39. ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

40. முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ’முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிப்பு. அ. மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள், இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள், தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

41. சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி.

42. மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி.

43. கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை

44. உணவுப்பதப்படுத்துதலுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு. அ. மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை

45. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய்

46. கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

47. தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்

48. வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க, வேளாண் தொழில் முனைப்பு மையம் வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம்.

49. காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை.

5. சிறப்பாக பணிபுரிந்த தமிழக காவல் துறையினர் 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது

தமிழக காவல் துறையினர் 24 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள 24 காவல் துறை அதிகாரிகளின் தேர்வாகியுள்ளனர்.

6. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டம்: 24 பேருக்கு பணி நியமன உத்தரவு முதல்வா் வழங்கினாா்

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தின்கீழ், 24 பேருக்கு அா்ச்சகா் பணி நியமனத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை கபாலீஸ்வரா் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில், முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாகவுள்ள அா்ச்சகா், பட்டாச்சாரியாா், ஓதுவாா், பூசாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சராகும் திட்டத்துக்கான அரசாணை முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. அவரது வழியில் செயல்படும் அரசானது, இப்போது முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, கோயில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் பயின்று தோ்வு செய்யப்பட்ட 24 அா்ச்சகா்கள், இதர பாட சாலையில் பயிற்சி பெற்ற 34 அா்ச்சகா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். மேலும், ஓதுவாா்கள், நந்தவனம் பராமரிப்பு உள்பட 208 காலிப் பணியிடங்களுக்கான உத்தரவுகளை அவா் அளித்தாா்.

7. ஆக. 14-ஆம் தேதி பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்

இந்திய பிரிவினையின்போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக’ அனுசரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. லட்சக்கணக்கான நமது சகோதரா்களும் சகோதரிகளும் இடம்பெயா்ந்தனா். அப்போது வெறுப்புணா்வால் ஏற்பட்ட வன்முறையில் பலா் உயிரிழந்தனா். அந்தப் போராட்டத்தையும் மக்களின் தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் சமூகப் பிரிவினைகள், ஒற்றுமையின்மை உள்ளிட்டவற்றை நீக்கி சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக மக்கள் உறுதியேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து, ஆக. 14-ஆம் தேதியை பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி: மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால், சுதந்திரத்துடன் பிரிவினையின் துயரங்களையும் மக்கள் அனுபவிக்க நேரிட்டது. பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் அனுசரிக்கப்படும். பிரிவினையின்போது மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை எதிா்கால சந்ததியினருக்குத் தெரியப்படுத்துவதற்கு இந்த தினம் வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டை தனியாக உருவாக்கி, இரு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு 1947-ஆம் ஆண்டில் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தனா். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வகுப்புவாத வன்முறையில் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆக. 15-ஆம் தேதியும், பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆக. 14-ஆம் தேதியும் கொண்டாடுகின்றன.

1. Which country hosted the 8th Justice Ministers meet 2021 of Shanghai Cooperation Organisation?

A) India

B) Tajikistan 

C) China

D) Russia

  • The 8th Justice Ministers meet 2021 of Shanghai Cooperation Organisation meeting was hosted by Tajikistan (2021 SCO Presidency). Union Minister for Law & Justice, Kiren Rijiju participated in the 8th Justice Ministers Meeting 2021 of the Shanghai Cooperation Organisation (SCO) held at Tajikistan virtually.
  • The meeting was chaired by M K Ashuriyon, Minister of Justice of the Republic of Tajikistan. SCO is celebrating its 20th Anniversary under the slogan ‘20 years of SCO: Cooperation for Stability and Prosperity’. The next meeting will be held in Pakistan in 2022.

2. Who chaired the UNSC High–Level Open Debate on Enhancing Maritime Security?

A) S. Jaishankar

B) TS Tirumurti

C) Syed Akbaruddin

D) Narendra Modi 

  • PM Narendra Modi has chaired UNSC High–Level Open Debate on “Enhancing Maritime Security” Stressing on enhancing maritime security. Prime Minister Narendra Modi called for peaceful settlement of disputes as per international law. PM Narendra Modi is the first Indian PM to chair UNSC meet.

3. Which year has been declared by United Nations as International Year of Peace and Trust?

A) 2020

B) 2022

C) 2021 

D) 2019

  • The United Nations has declared 2021 as the International Year of Peace and Trust, the International Year of Creative Economy for Sustainable Development, the International Year of Fruits and Vegetables, and the International Year for the Elimination of Child Labour. Also, the Catholic Church has proclaimed 2021 as the Year of Saint Joseph.

4. Under the Tribunals Reforms Bill, 2021, how many appellate tribunals will be abolished?

A) 5

B) 6

C) 7

D) 9 

  • A bill seeking to abolish as many as nine appellate tribunals, including the Film Certification Appellate Tribunal (FCAT), was approved by Parliament with the Rajya Sabha passing the proposed legislation on August 9, 2021. The Tribunals Reforms Bill, 2021, was approved by Lok Sabha on August 3.
  • All cases pending before such tribunals or authorities will be transferred to the Commercial Court or High Court. The legislation also provides for uniform terms and conditions of service for chairperson and members of various tribunals.

5. Which Indian state government will present its first ever paperless budget on 13th August?

A) Tamil Nadu 

B) Kerala

C) Karnataka

D) Sikkim

  • The Assembly of Tamil Nadu will witness its first ever paperless budget session, with P.T.R. Palanivel Thiaga Rajan, State Finance Minister set to present the revised budget for 2020–21 on 13th August. This will be Tamil Nadu’s first e–budget.

6. Under which survey, conducted by National Sample Survey Office, it is showing that poverty in India is on the rise?

A) Consumption Expenditure Survey 

B) Periodic Labour Force Survey

C) National Accounts Statistics 2021

D) National Indicator Framework

  • India’s Consumption Expenditure Survey (CES) is conducted by National Sample Survey Office every five years. But, CES data has not been released since 2011–2012. Under this survey there are clear indications that Poverty in India is on rise again.
  • CES was conducted in the year 2017–18 but its data was not made public by the Government. A new CES is likely to be conducted in 2021–22 for which data will be available by end of 2022.

7. Which High Court has recently quashed Tamil Nadu’s law banning online games?

A) Madras High Court 

B) Kerala High Court

C) Bombay High Court

D) Kolkata High Court

  • Madras High Court has revoked a law that was passed by the state government of Tamil Nadu which banned online games like poker, rummy and other skill–based games that involve stakes.
  • Quashing an amendment on the Tamil Nadu Gaming Act that banned online games, the court stated that complete ban on online games is disproportionate and irrational.

8. How many industrial Corridors have been approved under the National Industrial Corridor Programme (NICP) so far?

A) 10

B) 11 

C) 20

D) 21

  • The Government of India has approved development of 11 Industrial Corridors with 32 Projects which will be developed in four phases around the country as part of the National Industrial Corridor Programme (NICP).
  • These include: DMIC: Delhi Mumbai Industrial Corridor, CBIC: Chennai Bengaluru Industrial Corridor, Extension of CBIC to Kochi via Coimbatore, AKIC: Amritsar Kolkata Industrial Corridor, HNIC: Hyderabad Nagpur Industrial Corridor, HWIC: Hyderabad Warangal Industrial Corridor, HBIC: Hyderabad Bengaluru Industrial Corridor, BMIC: Bengaluru Mumbai Industrial Corridor, VCIC: Vizag Chennai Industrial Corridor, OEC: Odisha Economic Corridor and DNIC: Delhi Nagpur Industrial Corridor

9. What is India’s rank in the Global Youth Development Index?

A) 122 

B) 132

C) 121

D) 131

  • India is ranked 122nd on a new Global Youth Development Index measuring the condition of young people across 181 countries, released by the Commonwealth Secretariat in London on 10th August.
  • Singapore ranked topmost while Niger came last. The index ranks countries between 0.00 (lowest) and 1.00 (highest) according to the developments in youth education, employment, health, equality and inclusion, peace and security, and political and civic participation. It looks at 27 indicators including literacy and voting to showcase the state of the world’s 1.8 billion people between the age of 15 and 29.

10. India participated in Naval Exercise AL–MOHED AL–HINDI 2021 with which country recently?

A) United Arab Emirates 

B) Saudi Arabia

C) Qatar

D) Oman

  • Bearing testimony to the growing defence ties between India and Saudi Arabia, INS KOCHI, the flagship destroyer of Indian Western Naval Fleet, arrived at Port Al–Jubail on August, 2021. The visit by the ship heralds a new chapter in the bilateral defence ties with the commencement of the harbour phase of first Naval Exercise between the two countries – ‘AL–MOHED AL–HINDI 2021’, according to a statement issued by the Indian Embassy in Riyadh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!