Tnpsc

14th 15th August 2020 Current Affairs in Tamil & English

14th 15th August 2020 Current Affairs in Tamil & English

14th 15th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

14th 15th August 2020 Current Affairs Pdf Tamil

14th 15th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. The ‘COVAX’ facility that was seen in news recently, is an initiative of which international organisation?

[A] World Bank

[B] World Health Organization

[C] International Monetary Fund

[D] World Economic Forum

  • The World Health Organization (WHO) launched a new initiative named ‘COVAX’, which aims to fast–track the development of vaccine against the coronavirus. The ‘WHO’ recently announced that it is renewing its invite to countries to join its facility. ‘WHO’ is also in talks with the manufacturers of the potential vaccines and is gathering funds to promote the mass–production of vaccine.

2. Who has been selected as the new Chairperson of Steel Authority of India Ltd (SAIL)?

[A] Soma Mondal

[B] Gurdeep Singh

[C] R.N Nayak

[D] Balraj Joshi

  • The Public Enterprises Selection Board has selected Soma Mondal as the next Chairperson of the Steel Authority of India Limited (SAIL). She will become the first woman chairperson of the public sector steel giant, if the Appointments Committee of the Cabinet (ACC) approves her appointment. She will also become the first woman to lead a steel company, in the world. The present Chairman Anil Chaudhary is to superannuate this year.

3. India signed contract with which country for development of five eco–tourism zones in Addu city?

[A] Sri Lanka

[B] Bangladesh

[C] Maldives

[D] Thailand

  • India and Maldives recently signed a contract for development of five eco–tourism zones in Addu city of Maldives. The development of the eco–tourism zones is a part of the projects being implemented under the High–Impact Community Development project (HICDP) scheme. It involves a total assistance of USD 5.5 million to the Maldives for high–impact assets development.

4. Who was the Chairperson of Indian Council for Research on International Economic Relations (ICRIER) for 15 years and has stepped down recently?

[A] Isher Judge Ahluwalia

[B] Bina Agarwal

[C] Sonal Varma

[D] Jayati Ghosh

  • Isher Judge Ahluwalia has recently stepped down as the Chairperson of think tank Indian Council for Research on International Economic Relations (ICRIER). She had held this position for 15 years and will be succeeded by the new Chairman Pramod Bhasin, who is currently the Vice Chair of the Board of governors at ICRIER. To honour her contributions, she will be retained as chairperson emeritus.

5. Which organisation has launched a loyalty platform named ‘nth Rewards’?

[A] RBI

[B] NPCI

[C] NITI Aayog

[D] SEBI

  • National Payment Corporation of India (NPCI) has launched a new loyalty platform named ‘nth Rewards’. It is analytics–enabled multi–branded loyalty platform that allows users to earn points through various bank transactions. The points can be redeemed on various products like e–vouchers, hotel and flight bookings. Using the platform, banks and merchants can identify consumer behaviour.

6. IC IMPACTS is an Annual Research conference between India and which country?

[A] Cuba

[B] Canada

[C] Chile

[D] Cyprus

  • IC–IMPACTS is an Annual Research Conference between India and Canada. ‘IMPACTS’ stands for Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation and Sustainability. The conference for the current year was held on 6th August, in a virtual mode.
  • The conference discussed ways of boosting the cooperation between the two countries higher levels by strengthening existing international links, sharing best practices of two countries, and initiating new collaborations.

7. Who hosts the “At Home” reception for freedom fighters, as a part of Anniversary of the Quit India Movement?

[A] Prime Minister of India

[B] Pesident of India

[C] Defence Minister

[D] Chief of Defence Staff

  • The President of India honoured 202 freedom fighters across the country. This was done on the occasion of the 78th anniversary of Quit India Day. Every year, on this occasion, the President of India hosts an “At Home” reception at the Rashtrapati Bhavan to honour the freedom fighters. But this year, State / UT governments are requested to honour the freedom fighters at their homes, on behalf of the President.

8. The book titled ‘Connecting, Communicating, Changing’ is based on third year of office of which Indian leader?

[A] Ramnath Govind

[B] Narendra Modi

[C] M Venkiah

[D] Sunil Arora

  • A book titled ‘Connecting, Communicating, Changing’ will be released by the Defence Minister at Delhi. It narrates the third year in Office of Vice President M. Venkaiah Naidu. The e–version of the book would be released by Union Minister for Information and Broadcasting Prakash Javadekar.
  • The book highlights the Vice President’s travel in India & abroad, his interaction with foreign nationals, world leaders and various sections of the Indian society including farmers, scientists, administrators, industry leaders and artists, among others.

9. Hassan Diab, who was seen in news recently, is the Prime Minister of which country?

[A] Brazil [B] Lebanon

[C] Australia [D] New Zealand

  • Lebanon formed a new government recently under Prime Minister Hassan Diab amidst various economic and political crises. The country remained without an effective government, after the former Prime Minister Saad Al Hariri quit from his role in October 2019 under pressure from protests against state corruption and mismanagement. The President of Lebanon, Michel Aoun nominated Hassan Diab as the new Prime Minister. Hassan Diab is a professor at the American University of Beirut, who heads a new cabinet of 20 members.

10. Which state government has launched ‘Mukhya Mantri Kisan Sahay Yojana’ replacing PM Fasal Bima Yojana?

[A] Punjab

[B] Rajasthan

[C] Gujarat

[D] Uttar Pradesh

  • The Chief Minister of Gujarat Vijay Rupani has recently launched a state–funded scheme named Mukhya Mantri Kisan Sahay Yojana. It has been launched to replace the central crop–insurance scheme Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY). Gujarat has exited from the scheme as it considers that the insurance scheme charges hefty premium cost to the State. The new alternate scheme will cover all farmers for the current kharif season.

நடப்பு நிகழ்வுகள்

1.‘COVAX’ வசதி என்பது எந்தப் பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பாகும்?

அ. உலக வங்கி

ஆ. உலக நலவாழ்வு அமைப்பு

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. உலகப் பொருளாதார மன்றம்

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியது. அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்துகொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதற்காக நிதி திரட்டிவருகிறது.

2.இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. சோமா மொந்தல்

ஆ. குர்தீப் சிங்

இ. R N நாயக்

ஈ. பால்ராஜ் ஜோஷி

  • இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) அடுத்த தலைவராக சோமா மொந்தலை பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தேர்வுசெய்துள்ளது. அவரை நியமனம் செய்ய, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தால், அவர், பொதுத்துறை SAIL நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக ஆவார். மேலும், உலகில், ஓர் உருக்கு நிறுவனத்தை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெறுவார். தற்போதைய தலைவர் அனில் செளத்ரி, இந்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார்.

3.அட்டு நகரத்தில், ஐந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கு, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. மாலத்தீவுகள்

ஈ. தாய்லாந்து

  • இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சூழல் சுற்றுலா மண்டலங்க -ளின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒருபகுதியாகும். அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சொத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது.

4. 15 ஆண்டுகளாக பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவராக இருந்தவரும், அண்மையில் பதவி விலகியவருமானவர் யார்?

அ. ஐஷர் ஜட்ஜ் அலுவாலியா

ஆ. பினா அகர்வால்

இ. சோனல் வர்மா

ஈ. ஜெயதி கோஷ்

  • பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவர் பதவியிலிருந்து ஐஷர் ஜட்ஜ் அலுவாலியா அண்மையில் விலகியுள்ளார். அவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, ICRIER’இன் புதிய தலைவராக, தற்போது ICRIER’இன் ஆளுநர் குழுவின் துணைத்தலைவராக இருந்துவரும் பிரமோத் பாசின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பதற்காக, அவர் ஓய்வுற்ற தலைவராக தொடர்ந்து இருப்பார்.

5. ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. NPCI

இ. NITI ஆயோக்

ஈ. SEBI

  • இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும். இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவைப்பதன்மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது.
  • மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வோர் நடத்தையை அடையாளம் காணவியலும்.

6. ‘IC IMPACTS’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும்?

அ. கியூபா

ஆ. கனடா

இ. சிலி

ஈ. சைப்ரஸ்

  • IC-IMPACTS என்பது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும். ‘Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation & Sustainability’ என்பதன் சுருக்கந்தான் ‘IMPACTS’.
  • நடப்பாண்டுக்கான (2020) மாநாடு ஆக.6 அன்று மெய்நிகராக நடைபெற்றது. தற்போதுள்ள பன்னாட்டு இணைப்புகளை வலுப்படுத்துவதன்மூலமும், இருநாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொ -ள்வதன்மூலமும், புதிய ஒத்துழைப்புகளைத் தொடங்குவதன்மூலமும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள்குறித்து இவ்வாராய்ச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

7.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டுவிழாவின் ஒருபகுதியாக, இந்திய விடுதலைப் போராளிகளுக்கான வரவேற்பை வழங்கியவர் யார்?

அ. பிரதமர்

ஆ. குடியரசுத்தலைவர்

இ. பாதுகாப்பு அமைச்சர்

ஈ. இராணுவத் தலைமைத் தளபதி

  • நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் போராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தெட்டாவது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இத்தருணத்தின்போது, இந்தியக்குடியரசுத்தலைவர், விடுதலைப்போராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார். ஆனால் இந்த ஆண்டு (2020), மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் போராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

8. ‘Connecting, Communicating, Changing’ என்ற தலைப்பிலான நூல், எந்த இந்தியத் தலைவரின் மூன்றாமாண்டு பொறுப்பு நிறைவை அடிப்படையாகக்கொண்டதாகும்?

அ. இராம்நாத் கோவிந்த்

ஆ. நரேந்திர மோடி

இ. M வெங்கையா

ஈ. சுனில் அரோரா

  • இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா அவர்கள் பொறுப்பேற்று 3 ஆண்டுகாலம் நிறைவடைவதையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், குடியரசுத்துணைத்தலைவர் மாளிகையில் நூலொன்றை வெளியிடுகிறார். “இணைத்தல், தொடர்பிலிருத்தல், மாறுதல்” என்பது அந்நூலின் தலைப்பாகும்.
  • இந்நூலின் மின்-பதிப்பை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிடுகிறார். குடியரசுத்துணைத்தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், சொற்களுடனும் இந்நூல் விவரிக்கிறது. உழவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் ஆகிய பலருடன் குடியரசுத்துணைத்தலைவர் கலந்துரையாடியது குறித்த செய்திகளும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய மக்களிடையே அவராற்றிய உரைகள் குறித்தும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமராவார்?

அ. பிரேஸில்

ஆ. லெபனான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. நியூசிலாந்து

  • பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின்கீழ், லெபனான், அண்மையில் ஓர் புதிய அரசாங்கத்தை அமைத்தது. முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டோபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது. லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார். ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமைதாங்குவார்.

10. பிரதம அமைச்சர் பசல் பீமா யோஜனாவுக்கு பதிலாக, ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யோஜனா’வை தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான்

இ. குஜராத்

ஈ. உத்தர பிரதேசம்

  • குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யோஜனா’ என்ற மாநில அரசின் நிதியுதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுக்கு (PMFBY) மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. PMFBY காப்பீட்டுத் திட்டத்திற்கு அதிகம் செலவாவதாக குஜராத் மாநில அரசு கருதுவதால், அம்மாநிலம் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் புதிய மாற்றுத்திட்டம், நடப்பு காரீப் பருவத்திற்கான அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!