Tnpsc

13th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. எந்த வகை வங்கிகளுக்கு `10,000 கோடி மதிப்பிலான சிறப்பு நீண்ட கால ரெப்போ நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது?

அ) கூட்டுறவு வங்கிகள்

ஆ) பிராந்திய கிராமப்புற வங்கிகள்

இ) சிறு நிதிய வங்கிகள்

ஈ) கொடுப்பனவு வங்கிகள்

  • சிறு நிதிய வங்கிகளுக்கு அதன் சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கைகளுக்காக `10,000 கோடி மதிப்பிலான முதல் ஏலத்தை, ரெப்போ விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒரு கடன் வாங்குபவருக்கு `10 இலட்சம் வரை புதிய கடனை வழங்கும் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள், நுண் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும். இந்த வசதி அக்டோபர் 31, 2021 வரை கிடைக்கும்.

2. எந்த நாடு உருவாக்கிய சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு WHO ஒப்புதல் அளிக்கவுள்ளது?

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) இந்தியா

ஈ) இஸ்ரேல்

  • உலக நலவாழ்வு அமைப்பு இறுதியாக அவசரகால பயன்பாட்டிற்காக சினோபார்ம் COVID-19 தடுப்பூசிக்கு நிபந்தனை ஒப்புதல் அளித்துள்ளது. சீனா உருவாக்கிய சினோபார்ம் தடுப்பூசி ஏற்கனவே 45 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சீனா தனது ஐந்து தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை சீனா பயன்படுத்துகிறது.

3. ஆயுஷ் விநியோக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கபசுர குடிநீர், எந்த மருத்துவ முறையைச் சார்ந்த ஒரு மாமருந்தாகும்?

அ) ஆயுர்வேதம்

ஆ) சித்த மருத்துவம்

இ) ஹோமியோபதி

ஈ) யுனானி

  • COVID-19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியான COVID நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக்குடிநீரை நாடு முழுவதும் வழங்கும் மாபெரும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.

4. இந்திய COVID மாறுபாட்டை Variant of Concern என வகைப்படு -த்திய நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஐக்கியப் பேரரசு

இ) சீனா

ஈ) ரஷியா

  • இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்திய மாறுபாட்டின் ஒரு துணை வகையை விசாரணை பிரிவின் கீழிருந்து ஒரு “Variant of Concern” என வகைப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, சமூக பரவலானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வமாக B.1.617 என அழைக்கப்படும் அசல் இந்தியா மாறுபாடு முதன்முதலில் அக்டோபரில் கண்டறியப்பட்டது, மேலும் B.1.617.2 மாறுபாடு அதிக பரவல் திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலிபோர்னியா கான்டார்’ என்றால் என்ன?

அ) அருங்காட்சியகம்

ஆ) கலை வடிவம்

இ) பறவை இனங்கள்

ஈ) கிரிப்டோகரன்சி

  • ‘கலிபோர்னியா கான்டார்’ என்பது ‘புதிய உலக’ கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு கழுகு இனமாகும். இது மிகப்பெரிய வட அமெரிக்க நிலப் பறவையாகும். கடந்த 1987ஆம் ஆண்டில் இந்தப் பறவை, காடுகளில் இருந்து முற்றாக அழிந்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், அழிவின் விளிம்பிலிருக்கும் இந்தப் பறவையினம், கலிபோர்னியாவின் தெகச்சாபி நகரில் உள்ள ஒரு வீட்டில் கூட்டமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

6. காலநிலை & தூய வளி கூட்டணியானது, எந்த அமைப்புடன் இணைந்து உலகளாவிய மீத்தேன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது?

அ) UNFCCC

ஆ) UNCTAD

இ) UNEP

ஈ) UNDP

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து காலநிலை மற்றும் தூய வளி கூட்டணியானது “உலகளாவிய மீத்தேன் மதிப்பீடு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு அறிக்கை குறிப்பாக புதைபடிவ எரிபொருள் துறைசார்ந்த மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் வரும் பயன்களையும், புவி வெப்பமடைதலின் தாக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.

7. “ID-Art” செயலியை தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ) ரிசர்வ் வங்கி

ஆ) CBDT

இ) CBIC

ஈ) இன்டர்போல்

  • இன்டர்போல், “ID-Art” என்ற திறன்பேசி செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, களவாடப்பட்ட கலாச்சார சொத்துக்களை அடையாளம் காணவும், சட்டத்துக்குப்புறம்பான கடத்தலைக் குறைக்கவும், திருடப்பட் -ட படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப் -புகளை அதிகரிக்கவும் உதவும்.
  • திருடப்பட்ட கலைப்படைப்புகளுக்கான இன்டர்போலின் தரவுத்தளத்தை அணுக, உலகெங்குமுள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களால் பயன்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களும் அணுகலாம்.

8. ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது எந்த இந்திய வங்கியுடன், காலநிலையை மையமாகக்கொண்ட, சரி ஒப்பு நிதியுதவிக்கான ஓர் ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது?

அ) பரோடா வங்கி

ஆ) பாரத வங்கி

இ) பஞ்சாப் தேசிய வங்கி

ஈ) HDFC வங்கி

  • காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட இந்திய சிறு வணிகங்களுக்கு, சரிஒப்பு நிதியுதவியை வழங்குவதற்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கி பாரத வங்கியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், 100 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இரு வங்கிகளும் “NEEV FUND I” என்ற புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளன.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘XcodeGhost’ என்றால் என்ன?

அ) கிரிப்டோகரன்சி

ஆ) தீம்பொருள்

இ) ஏவுகலம்

ஈ) COVID திரிபு

  • “XcodeGhost” என்பது ஒரு தீம்பொருளாகும். அது, ஆப் ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட ஐபோன் மற்றும் ஐபாட் செயலிகளில் தீம்பொருளை செலுத்துவதாக கூறப்படுகிறது. இது முதலில் 2015’இல் கண்டுபிடிக்கப்பட்டது. அண்மையில், 128 மில்லியனுக்கும் அதிகமான iOS பயனர்கள் “Xcode Ghost” தீம்பொருளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயனர்களில் 55% பேர் சீனாவிலும், அவர்களுள் 18 மில்லியன் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர்.

10. நடப்பாண்டின் (2021) உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Everywhere for everyone

ஆ) Memorable smiles from around the world

இ) Get Together for the purpose of Humanity

ஈ) Together we are unstoppable

  • உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே.8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ் சிலுவைச்சங்கத்தின் நிறுவனருமான ஹென்றி டுணான்ட் அவர்களின் பிறந்தநாளான இந்நாள், கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து சிறப்புநாளாக அங்கீகரிக்கப்பட்டது.
  • உலகில் யுத்தம் மற்றும் இடர்களால் பாதிப்படைவோருக்கு, மனிதாபிமா -னரீதியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் செஞ்சிலு -வைச்சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன பன்னாட்டளவில் அமைக்கப்பட்டன. “Together we are unstoppable” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பேரவைத் தலைவராக மு அப்பாவு பதவியேற்றார்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். துணைத்தலைவராக கு பிச்சாண்டியும் பதவியேற்றுக்கொண்டார்.

பதினாறாவது பேரவையின் தலைவர்: பதினாறாவது சட்டப்பேரவையின் தலைவராக மு அப்பாவு ஆகியுள்ளார். இதற்குமுன் பேரவைத் தலைவராக ஜெ சிவசண்முகம் பிள்ளை (1952-1955), என் கோபாலமேனன் (1955-1956), யு கிருஷ்ண ராவ் (1957-61), எஸ் செல்லப்பாண்டியன் (1962-67), சி பா ஆதித்தனார் (1967-1968), கே கோவிந்தன் (1969-1971, 1973-1977), கே மதியழகன் (1971-1972), முனு ஆதி (1977-1980), க ராஜாராம் (1980-1985), பி எச் பாண்டியன் (1985-1989), தமிழ்க்குடிமகன் (1989-1991), சேடப்பட்டி முத்தையா (1991-1996), பி டி ஆர் பழனி வேல்ராஜன் (19 96-2001), காளிமுத்து (2001-2006), ஆவுடையப்பன் (2006-2011), டி ஜெயக்குமார் (2011-2012), ப தனபால் (2012-2016, 2016-2021) ஆகியோ -ர் பேரவைத்தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர்.

2. மனிதர்களின் அச்சுறுத்தலால் கேள்விக்குறியாகும் யானைகளின் உயிர்

வேட்டை, வன ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் மற்றும் மனிதர்களின் அச்சுறுத்தலால் யானைகளின் உயிருக்கு கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இமயமலையின் பனிபடர்ந்த பகுதியைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் யானைகள் வாழ்ந்துள்ளன. மனிதர்களின் அதிவேக வளர்ச்சியால் யானைகளின் வாழ்விடம் சுருங்கி இமயமலையின் அடிவாரப் பகுதியான வடகிழக்கு இந்தியா, ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள கிழக்கு மத்திய பகுதி, தென்னிந்தியாவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள் வாழ்ந்து வருகின்றன.

யானைகள் பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன என்பதை உணர்ந்த மத்திய அரசு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை 1992ஆம் ஆண்டு துவக்கியதுடன், இதுவரை 32’க்கும் அதிகமான யானைகள் காப்பகங்களை அறிவித்துள்ளது. இருந்தபோதும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு யானைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு கிடைக்கவில்லை. யானைகள் பாதுகாப்புத் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்தத் திட்டம் மந்த கதியில் செயல்படுவதை உணர்ந்து, திட்டம் முழுத்திறனுடன் செயல்படவும், யானைகளுக்கு உள்ள அச்சுறுத்த -லைக் குறைக்கவும் அரசால் மகேஷ் இரங்கராஜன் தலைமையிலான வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு எலிபெண்ட் டாஸ்க் போர்ஸ் என்று அழைக்கப்பட்டது. இக்குழு ‘கஜா’ என்ற 187 பக்க அறிக்கையை கடந்த 2010ஆம் ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்தது. அதில் யானைகள் வாழ என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போல தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாணையத்தில் ஆளுமைக்குழு உருவாக்கப்பட்டு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

1987 முதல் 2007ஆம் ஆண்டு வரை இரயில் மோதி 150 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 36 சதவீத விபத்துகள் அஸ்ஸாமிலும், 26 சதவீத விபத்துகள் மேற்கு வங்க மாநிலத்திலும், 6% விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளன.

1996 முதல் 1998ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் 253 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 2008 முதல் 2013ஆம் ஆண்டுக்கு வரை 121 யானைகள் வேட்டையாடப்பட்டன. ஐம்பது யானைகள் சாலை, இரயில் விபத்துகளால் 50 யானைகளும், மின்சாரம் பாய்ந்து 111 யானைகளும் உயரிழந்துள்ளன. தற்போது, 12 மாநிலங்களில் சுமார் 30,000 யானைகளே உள்ளதாக கூறப்படுகிறது. யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம் வாழ்விடம் சுருங்குதல், உழவுக்காக காடு திருத்துதல், வேட்டை, மோதல் தொடர்பான இழப்புகள் அதிகம். யானைகள் தங்களது தோற்றத்துக்கு ஏற்றார்போல தினசரி 150 கிலோ பசுந்தீவணகளையும், 100 லிட்டர் தண்ணீரையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 300 முதல் 400 சதுர கிமீ தூரம் யானை பயணிக்கிறது. பருவ நிலைக்கு ஏற்ப தங்களது வாழ்விடங்களை அவ்வப்போது தேர்வுசெய்கிறது. மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக யானை வழித்தடங்களை இழந்து காலநிலைக்கு தகுந்தாற்போல இடம்பெற முடியாமல் யானைகள் பாதிக்கப்படுகின்றன. யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதில் 25 சதவீத வழித்தடம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. மீதமுள்ள 75% பாதுகாப்பற்ற வனப் பகுதிகளுக்கு வெளியே உள்ளன. இதனால் யானைகளை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள காப்புக் காடுகளும், இதர வனப்பகுதிகளும் வேகமாக அழிந்து வருவதால் யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. யானைகள் நீண்டகாலம் வாழ குறைந்தது 5,000 சகிமீ பரப்புகொண்ட காடுகள் அவசியம். இதில்தான் குட்டி இடக்கூடிய 500’க்கும் மேற்பட்ட யானைகள் வாழ முடியும்.

இந்தியாவில் இந்த அளவுகொண்ட காடுகள் அரிதாகி வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உள்ள மெத்தனம், வனப்பகுதிக்கு நடுவே அமைக்கப்படும் இரயில் பாதைகள், சாலைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் யானை-மனித மோதல் அதிகரிக்கிறது. தென்னிந்தியாவில் வனப்பகுதியை அடுத்துள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 15% பயிர் சேதம் ஏற்படுகிறது. யானைகளுக்கு மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக யானைகள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் என்பது தொடர்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தில் யானை ஒன்று வெடிவைத்து தாக்கப்பட்டதில் அதன் வாயில் காயம் ஏற்பட்டு அது வலி தாங்க முடியாமல் தண்ணீரில் நின்று உயிரிழந்த சம்பவம் உலகத்தையே கண்ணீர்விட வைத்தது. நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் ரிசார்ட் உரிமையாளர்கள் தீப்பற்றவைத்த டயரை வீசி யானையை கொன்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்களை வேதனை அடையச்செய்தது.

அதேபோல ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே பிடிக்கப்பட்ட அரிசி இராஜா யானை மூன்று பேரைத் தாக்கி கொண்றதாக அனைவரும் கூச்சலிட்டு யானையை பிடிக்குமாறு தெரிவித்தனர். இதேபோல, உடுமலை வனப்பகுதியில் யானைகள் மீது தாக்குதல் நடத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர வனப் பகுதிகளில் யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

கோயம்புத்தூர் கோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்துள்ளன. இதேபோல ஆனை மலை புலிகள் காப்பகத்தில் அதிகமான எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்துள்ளன. இப்படி யானைகள் உயிரிழப்பு அதிகரித்து யானைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதைத்தடுக்க யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கி அந்த ஆணையத்துக்குத் தேவை
-யான அதிகாரத்தை வழங்கி யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் யானைகள் அழிவதைத் தடுக்கமுடியாது.

யானைகள் அழிந்தால் காடுகள் அழியும், காடுகள் அழிந்தால் மனித இனம் தண்ணீரின்றி அழிந்துவிடும். ஆகவே யானைகள் பாதுகாப்பை உறுதி செய்ய யானைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உயிர்கொடுக்க வேண்டும். யானைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவது, யானைகளின் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவை இன்றியமையாததாக உள்ளது.

3. அமெரிக்க ராணுவ தலைமை தளபதியுடன் நரவணே பேச்சு

இந்திய ராணுவ தலைமைத் தளபதி M M நரவணே, அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜேம்ஸ் சி மெக்கான்விலேவுடன் தொலைபேசியில் உரையாடினார். இருவரிடையே நிகழ்ந்த உரையாடல் குறித்து அதிகாரிக -ள் கூறுகையில் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை சில குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து நரவணே-மெக்கான்விலே ஆலோசித்தனர். அத்துடன் கரோனா தொற்று சூழலை திறம்பட எதிர்கொ -ள்வது தொடர்பாகவும் அவர்கள் விவாதித்தனர் என்றனர்.

இருவரது உரையாடல் தொடர்பாக இந்திய ராணுவமும் சுட்டுரையில் பதிவிட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ராணுவ ரீதியிலாக இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ராணுவ உயர் தொழில்நுட்பம், தளவாடங்கள், புவிசார் வரைபடங்கள் ஆகியவற்றை இந்தியா – அமெரிக்கா இடையே பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளிடையே கையெழுத்தானது. அதற்குமுன் 2018’இல், அமெரிக்காவின் இராணுவ உயர்தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும், மென்பொருள் உள்ளிட்டவை தொடர்பான தரவுகளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2016’இல் இந்தியாவை தனது பிரதான பாதுகாப்புத் துறை கூட்டாளி என்று அமெரிக்கா அறிவித்தது. அதே ஆண்டில், இரு நாட்டு ராணுவ தளங்களையும் இருநாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

4. `18,100 கோடியில் ஏசிசி பேட்டரி உற்பத்தி: பிஎல்ஐ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏசிசி வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, இதுகுறித்து மத்திய தகவல் -ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏசிசி வகை பேட்டரி (அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி செல்) என்பது அதிநவீன வகை பேட்டரியாகும். இதில், மின்சக்தியை ரசாயன ஆற்றலாக மாற்றி சேமித்துவைத்து பின் மீண்டும் மின்சக்தியாக மாற்றிக் கொள்ளமுடியும். இந்த வகை பேட்டரிகளின் தேவையை தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பூர்த்தி செய்து வருகிறோம். எனவே, உள்நாட்டிலேயே இந்த வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஏசிசி வகை பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார் ஊக்குவிப்புத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் `45,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 கிகா வாட் மின்சாரத்தை சேமித்து வைக்கக் கூடிய அளவில் பேட்டரிகளை தயாரிக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் உற்பத்தி செய்து, அதிக அளவில் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

மின்சார வாகனங்கள், சூரியமின்சக்தி உற்பத்தி நிலையங்கள், மின் பகிா்மான கட்டமைப்புகள் ஆகியவற்றில் ஏசிசி பேட்டரிகள் அதிகம் தேவைப்படும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும். மேலும், எரிபொருள் தேவையும் குறையும். இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடும் தொகையில் ரூ.2.5 லட்சம் கோடி வரை மிச்சமாகும். புதிதாக வேலைவாய்ப்புகளும் உருவாகும். ஏசிசி வகை பேட்டரிகள் எளிதில் கிடைக்குமானால், மின்சார வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

ரோப்கார் திட்டத்துக்கு நிலம்: உத்தரகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூனுக்கும், சுற்றுலாத்தலமான முசௌரிக்கும் இடையே போக்குவரத் -து நெரிசலைக்குறைப்பதற்காக ரோப்கார் வழித்தடம் அமைக்கப்படவுள்ள -து. இந்தத் திட்டத்துக்காக, இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான 1,500 சதுர மீட்டர் நிலத்தை உத்தரகண்ட் அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டேராடூன்-முசௌரி இடையே 35 கி.மீ. தொலைவுக்கு `285 கோடியில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. பட்டய கணக்குத் துறையில்

இந்தியா-கத்தார் இடையே ஒப்பந்தம்: இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்துக்கும், கத்தாா நிதி ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக, இந்திய பட்டய கணக்காளர்கள், கத்தாரில் நிதிச் சேவைகள், வரி விதிப்பு, ஆலோசனை, கணக்குத் தணிக்கை ஆகிய பிரிவுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

5. விரிவுபடுத்தப்படுகிறது சூயஸ் கால்வாய்: எகிப்து அறிவிப்பு

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக்கால்வையை விரிவுபடுத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாகும். இந்தியப்பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகத்தான் செங்கடல் பகுதிக்கு பயணித்து வருகின்றன. உலக வர்த்தகத்தில் 10% இந்தக் கால்வாய் வழியாக நடப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் இந்தக் கால்வாய் வழியாக 19,000 கப்பல்கள் கடந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மரைன்’ என்ற நிறுவனம் இயக்கி வரும் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் அண்மையில் சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்காக சிக்கிக்கொண்டது.

400 மீ நீளமும் 59 மீ அகலமும் கொண்ட இந்தக் கப்பல், குறுகிய சூயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கிக்கொண்டதால், அந்த வழியாக வேறு கப்பல்கள் செல்ல முடியாத சூழல் உருவானது. இதனால் பல லட்சம் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்தன. 6 நாள்கள் தீவிர முயற்சிக்குப் பிறகே அந்தக் கப்பல் மீட்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து சீரானது.

இந்தச் சூழலில், சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து அரசு முடிவு செய்துள்ளது. கால்வாயின் தென்கோடியில் சீனாய் தீபகற்பம் பகுதியில் கிழக்கு நோக்கி 40 மீ அளவுக்கு விரிவுபடுத்தவும், கால்வாயின் ஆழத்தை இப்போது உள்ள 66 அடி அன்ற அளவிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவு -ம் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, கடந்த 2015ஆம் ஆண்டு இந்தக்கால்வா -யில் திறக்கப்பட்ட இரண்டாவது வழித்தடமும் 10 கிமீ நீளத்துக்கு விரிவுப -டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், இவ்விரு வழித்தட கால்வாய் 82 கிமீ நீளம்கொண்டதாக விரிவடையும் என்பதோடு, மேலும் அதிக கப்பல்க -ள் எளிதாக கால்வாயை கடக்க வழி ஏற்படும்.

6. எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் ‘கபசுரக் குடிநீர்’ – ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை

அறிகுறி இல்லாத, லேசான, மிதமானகரோனா தொற்றை கபசுரக் குடிநீர் குணப்படுத்துவது ஆராய்ச்சியில் உறுதியானதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் தாம்பரத்தில் செயல்படும் தேசிய சித்த நிறுவனமருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ மையங்களை அமைக்க உள்ளது.

இந்நிலையில், அறிகுறி இல்லாத, லேசான மற்றும் மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கபசுர குடிநீர்மூலம் குணமடைவது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்நடத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆயுஷ்-64 என்ற ஆயுர்வேத மருந்து தொற்றைக் குணப்படுத்துவதும், மத்திய ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி -யில் தெரியவந்துள்ளது. இந்த இரு மருந்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையானவர்களுக்கு கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

7. தமிழ்நாடு உளவுத்துறையில் – DIGஆக ஆசியம்மாள் நியமனம்: முதன்முறையாக பெண் அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு உளவுத்துறை ADGPஆக டேவிட்சன் தேவாசீர்வாதம், DIGஆக ஆசியம்மாளும் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை DIG அந்தஸ்தில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

1. RBI is set to conduct a special long–term repo operation of Rs 10,000 crore for which type of banks?

A) Cooperative Banks

B) Regional Rural Banks

C) Small Finance Banks

D) Payment Banks

  • The Reserve Bank is to conduct the first auction for special long–term repo operations (SLTRO) of Rs 10,000 crore for Small Finance Banks (SFBs), at the repo rate, one auction each month. This will provide fresh lending of up to Rs 10 lakh per borrower and will support small business units, micro and small industries, and other unorganised sector entities. The facility will be available till October 31, 2021.

2. WHO approves emergency use of Sinopharm vaccine, developed by which country?

A) China

B) Russia

C) India

D) Israel

  • The World Health Organisation (WHO) finally granted the conditional approval to Sinopharm COVID–19 vaccine for emergency use. The Sinopharm vaccine, developed by China, was already authorised by 45 countries.
  • China has approved five of its vaccines for emergency use and it is using Sinopharm and Sinovac vaccines for domestic use and export.

3. Kabasura Kudineer, which was included in Ministry of Ayush distribution campaign, is a great medicine from which system of medicine?

A) Ayurveda

B) Siddha

C) Homeopathy

D) Unani

  • Ministry of Ayush is launching a massive nationwide campaign to distribute poly herbal Ayurvedic drug AYUSH 64 and Siddha drug Kabasura Kudineer, to benefit COVID patients, who are in home isolation. Kabasura Kudineer, a Siddha medicine was also subjected to clinical trials for studying the efficacy in Covid–19 patients by Central Council for Research in Siddha (CCRS) under Ministry of Ayush.

4. Which country has classified the Indian COVID variant as Variant of Concern (VOC)?

A) Australia

B) UK

C) China

D) Russia

  • Health authorities in England has elevated one subtype of the Indian variant from under investigation category to a Variant of Concern (VOC). This step has been taken following a rise in the number of cases in the UK and evidence of community transmission. The original India variant officially known as B.1.617 was first detected in October, and the variant B.1.617.2 is found to have more transmission capacity.

5. What is ‘California condor’, which was seen in the news recently?

A) Museum

B) Art form

C) Bird Species

D) Cryptocurrency

  • The California condor is a vulture species belonging to ‘New World’ vulture species. It is the largest North American land bird. The bird is said to have become extinct in the wild in 1987. Recently, a flock of over 15 endangered California condors has reportedly descended on a house in the city of Tehachapi in California.

6. Climate & Clean Air Coalition, in association with which organisation has launched the Global Methane Assessment report?

A) UNFCCC

B) UNCTAD

C) UNEP

D) UNDP

  • Climate & Clean Air Coalition (CCAC) in association with the United Nations Environment Programme (UNEP) has launched a report named “Global Methane Assessment”. The assessment report brings out the benefits of cutting methane emissions especially from the fossil fuel industry and its impacts of global warming.

7. “ID–Art app” has been launched by which organisation?

A) RBI

B) CBDT

C) CBIC

D) Interpol

  • Interpol has launched a mobile app named “ID–Art app”. This app would help identify stolen cultural property, reduce illicit trafficking, and increase the chances of recovering stolen works and artefacts. This has been designed to be used by law enforcement agencies across the globe to get access to the Interpol’s database of stolen works of art. It can also be accessed by the general public.

8. European Investment Bank has entered into a pact with which Indian Bank, for climate focused equity financing?

A) Bank of Baroda

B) State Bank of India

C) Punjab National Bank

D) HDFC Bank

  • The European Investment Bank has entered into a pact with State Bank of India, for equity financing Indian small businesses which are focusses on climate change and sustainability. The pact has been signed for a value of Euro 100 million. The two banks have created a new fund named “NEEV FUND II” to implement this pact.

9. What is ‘XcodeGhost’, which was making news recently?

A) Cryptocurrency

B) Malware

C) Launch Vehicle

D) COVID Variant

  • “XcodeGhost” is a malware, which is claimed for injecting malware into several iPhone and iPad apps that were subsequently uploaded to the App Store. It was originally found in 2015.
  • Recently, more than 128 million iOS users were allegedly affected by the “XcodeGhost” malware. 55% of the affected users are in China while 18 million of them are in the U.S.

10. What is the theme of 2021 World Red Cross Red Crescent Day?

A) Everywhere for everyone

B) Memorable smiles from around the world

C) Get Together for the purpose of Humanity

D) Together we are unstoppable

  • The World Red Cross and Red Crescent Day is observed every year on May 8 to recognize the extraordinary contribution and incredible achievements of the stalwarts and volunteers around the world for helping the people in need anytime, anywhere.
  • The day also marks the birth anniversary Jean Henry Dunant, the founder of International Committee of the Red Cross and the recipient of the first Nobel Peace Prize. The 2021 theme “Together we are unstoppable”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!