TnpscTnpsc Current Affairs

13th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

13th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலகின் உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை-2022’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் 

ஆ. உலக வங்கி

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. NITI ஆயோக்

  • உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை – 2022 அறிக்கையானது ஐநா முகமைகளான FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019-2021இல் 224.3 மில்லியனாகக் குறைந்துள்ளது. உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகைகொண்ட நாடான இந்தியாவில் அதிக பருமனான பெரியவர்கள் மற்றும் இரத்தசோகை உள்ள பெண்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

2. அண்மையில் வெளியிடப்பட்ட பிரபஞ்ச வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மிகப்பழைமையான ஒளியானது கீழ்க்காணும் எந்தத் தொலைநோக்கிமூலம் பிடிக்கப்பட்டது?

அ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

ஆ. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி 

இ. வாயேஜர் விண்வெளி தொலைநோக்கி

ஈ. ஆகாஷ் விண்வெளி தொலைநோக்கி

  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிமூலம் எடுக்கப்பட்ட படத்தை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். இது 13 பில்லியன் ஆண்டுகட்கு முந்தையதும் பிரபஞ்ச வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மிகப்பழமையானதுமான ஒளியாகும். அப்படம் ‘SMACS 0723’ என்றழைக்கப்படுகிறது. இது பூமியின் தென் அரைக்கோளத்திலிருந்து தெரியும் வானின் ஒருபகுதியாகும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, புதிய எரிபொருளான POP-FAME என்பது எதிலிருந்து உருவாக்கப்பட்டது?

அ. ஹைட்ரஜன்

ஆ. பாக்டீரியம் 

இ. பயோமாஸ்

ஈ. நெகிழி

  • அமெரிக்காவின் லாரன்ஸ்-பெர்க்லி ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், பாலி-சைக்ளோ-புரோபனேட்டட் கொழுப்பு அமில மெதில் எஸ்டருக்காக, ‘POP-FAME’ என்ற பாக்டீரிய எரிபொருளிலிருந்து எரிபொருளை உருவாக்கி உள்ளனர். இவ்வெரிபொருளானது ஒரு லிட்டருக்கு 50 மெகா-ஜூல்களுக்கு மேல் ஆற்றல் அடர்த்தி மதிப்புகளைக் கொண்டுள்ளது; அது தற்போது பயன்படுத்தப்படும் ஏவுகல எரிபொருட்களின் திறனைவிட அதிகமாகும்.

4. அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது மற்றும் மிக சமீபத்திய ஆற்றல் பரிமாற்றகம் எது?

அ. பாரத் ஆற்றல் பரிமாற்றகம்

ஆ. ஹிந்துஸ்தான் ஆற்றல் பரிமாற்றகம் 

இ. அம்ரித் ஆற்றல் பரிமாற்றகம்

ஈ. PTC ஆற்றல் பரிமாற்றகம்

  • ஹிந்துஸ்தான் ஆற்றல் பரிமாற்றகம் (HPX), நாட்டின் 3ஆவது ஆற்றல் பரிமாற்றகமாக சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது BSE மற்றும் ஆற்றல் வர்த்தக கழகத்தால் (PTC) ஆதரிக்கப்படுகிறது. PTC இந்தியா மற்றும் BSE முதலீடுகள் HPX இல் தலா 25 சதவீதத்தை வைத்திருக்கின்றன; அதே நேரத்தில் 9.9 சதவீதத்தை ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கிறது. நாட்டின் மற்ற இரண்டு பரிமாற்றகங்கள் இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX) மற்றும் பவர் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (PXIL) ஆகும்; அதே வேளையில், IEX, மொத்த வர்த்தக ஆற்றலில் ஏறக்குறைய 98 சதவிகித அளவுக்கு ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

5. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்பற்றிய தேசிய மாநாடு நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. இராஞ்சி

ஈ. இராய்பூர்

  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான ஆறாவது தேசிய மாநாட்டை புது தில்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தொடங்கிவைத்தார். ‘அமுதப் பெருவிழா’வின் ஒருபகுதியாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இம்மாநாட்டில் பல்வேறு பிரிவுகளில் ‘ராஷ்ட்ரிய கனிஜ் விகாஸ் புரஸ்கார்’ மற்றும் பிற விருதுகளை வழங்கினார்.

6. ‘MIDCOM’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்ற பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டமாகும்?

அ. மலேசியா 

ஆ. மாலத்தீவுகள்

இ. மொரீஷியஸ்

ஈ. மொசாம்பிக்

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், மலேசியாவின் மூத்த பாதுகாப்பு அமைச்சருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இருதரப்பு, பிராந்திய மற்றும் பாதுகாப்பு தொழிற்துறை ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு மற்றும் தற்போதுள்ள மலேசியா-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டத்தின் (MIDCOM) கட்டமைப்பின்கீழ் அவற்றை மேம்படுத்துதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

7. 2022-இல் G-7 உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஜெர்மனி 

இ. இத்தாலி

ஈ. ஐக்கிய பேரரசு

  • தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான இந்தியாவின் வளர்ந்துவரும் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஏழு (G7) நாடுகளின் குழுவை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஜெர்மனியில் நடந்த G7 உச்சிமாநாட்டில், ஜெர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸால் அழைக்கப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தோனேசியா, அர்ஜென்டினா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் பங்காளர் நாடுகளாக இவ்வுச்சிமாநாட்டில் கலந்துகொண்டன.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘வாழும் நிலங்கள் சாசனம்’ என்பதுடன் தொடர்புடைய உலகளாவிய அமைப்பு எது?

அ. G7

ஆ. G20

இ. காமன்வெல்த் நாடுகள் 

ஈ. BRICS

  • ருவாண்டாவின் கிகாலியில் 2022 காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தின் (CHOGM) முடிவில், 54 காமன்வெல்த் உறுப்பினர்களும், ‘வாழும் நிலங்கள் சாசனத்தை’ ஏற்றுக்கொண்டனர். உலக நிலவளங்களைப் பாதுகாக்கவும், நிலச்சீரழிவைத் தடுத்து நிறுத்தவும், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்கு எதிராகவும் உறுப்புநாடுகள் செயல்பட வேண்டும் என்று கட்டுப்பாடற்ற ஒப்பந்தம் கட்டளையிடுகிறது.

9. ஜார்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்குப்பிறகு, இந்தியாவில் யுரேனியம் சுரங்கப்பணியை மேற்கொள்ளவுள்ள மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான் 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • ஜார்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்குப்பிறகு, இந்தியாவில் யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது மாநிலம் இராஜஸ்தான் ஆகும். சிகார் மாவட்டத்தில் உள்ள ரோகில் என்ற இடத்தில் அவ்வரிய கனிமம் காணப்படுகிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த அரிய கனிமத்தின் தாதுவை அகழ்வாராய்ச்சி செய்வதற்காக இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு இராஜஸ்தான் அரசாங்கம் ஒரு கடிதத்தை வழங்கியுள்ளது.

10. ‘சர்வதேச வெப்பமண்டலங்கள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மே.27

ஆ. மே.29

இ. ஜூன்.27

ஈ. ஜூன்.29 

  • வெப்பமண்டலத்தின் முக்கியத்துவத்தையும், இப்பகுதிகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார சவால்களையும் எடுத்துரைப்பதற்காக, ஆண்டுதோறும் ஜூன்.29ஆம் தேதியன்று சர்வதேச வெப்பமண்டலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. வெப்பமண்டலம் என்பது பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளாகும்; அவை, வட மற்றும் தென்னரைக்கோளங்களில் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் அமைந்துள்ளன. இந்தப் பகுதி பூமியின் மக்கள்தொகையில் 40 சதவீதத்தையும் அதன் பல்லுயிர்ப்பெருக்கத்தில் 80 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. NABARD வங்கியின் 41ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான NABARD வங்கியின் 41ஆவது நிறுவன நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் Dr பழனிவேல் தியாகராஜன் இதில் கலந்துகொண்டார்.

2. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம்: புகைப்படம் வெளியிட்டது NASA

பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த ஒரு புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA வெளியிட்டது. நட்சத்திர திரள்கள் நிறைந்து காணப்படும் இந்தப் புகைப்படம், பிரபஞ்சம் குறித்து இதுவரை கிடைத்துள்ள புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமானதும் தெளிவானதுமாகும்.

விண்வெளி ஆய்வுக்காக $10 பில்லியன் டாலர் (சுமார் `79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை NASA கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைதான் NASA வெளியிட்டுள்ளது. 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ‘பிக்பேங்’ எனப்படும் பெருவெடிப்புமூலம் இந்தப் பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.

NASA வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிர்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒருபகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என NASA தெரிவித்துள்ளது. இந்த நட்சத்திர திரள் கூட்டத்துக்கு ‘SMACS 0723’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3. உயர்பதவிகளில் பெண்கள்: மிஸோரம் முதலிடம்

மக்கள் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மேலாளர்கள் உள்ளிட்ட உயர்பதவிகளில் பணிபுரியும் பெண்கள் தொடர்பான ஆய்வறிக்கையில் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உயர்பதவிகளில் உள்ள நபர்களில் சுமார் 71 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்.

நாட்டின் சமூகப்பொருளாதார மேம்பாட்டுக்குப் பெண்களின் பங்களிப்பு மிக அவசியமானதாக உள்ளது. பெண்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. விண்வெளி, பாதுகாப்பு, ஆராய்ச்சி, தகவல்-தொழில்நுட்பம், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து வீறுநடையிட்டு வருகின்றனர்.

அரசியல் ரீதியிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில சட்டப்பேரவைகளிலும், மக்களவையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருந்தாலும், அந்த மசோதா விரைவில் சட்டவடிவு பெறும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 2020 ஜூலை முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்துக்குரிய தொழிலாளர் ஆய்வறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அதில், மக்கள் பிரதிநிதிகள், மேலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளாகப் பெண்கள் பணிபுரிவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

உயரதிகாரிகளாகப் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள்

மிஸோரம் 70.9%

சிக்கிம் 48.2%

மணிப்பூர் 45.1%

மேகாலயம் 44.8%

ஆந்திரம் 43.4%

பெண் உயரதிகாரிகள் குறைவாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

தாத்ரா & நகர் ஹவேலி – டாமன் & டையு 1.8%

உத்தரகண்ட் 3.6%

ஜம்மு-காஷ்மீர் 4.8%

அந்தமான் & நிகோபார் 7.7%

பிகார் 7.8%

பஞ்சாப் 8.4%

பெண் மேலாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள்

மிஸோரம் 40.8%

சிக்கிம் 32.5%

மேகாலயம் 31%

ஆந்திரம் 30.4%

மணிப்பூர் 29%

1. ‘State of Food Security and Nutrition in the World 2022’ report was released by which organisation?

A. United Nations 

B. World Bank

C. World Economic Forum

D. NITI Aayog

  • The State of Food Security and Nutrition in the World 2022 report was issued by UN agencies: FAO, IFAD, UNICEF, WFP and WHO. The number of undernourished people in India has declined in the last 15 years to 224.3 million in 2019–2021. The report also noted that there are more obese adults and anaemic women in India, the world’s second most populous country.

2. The oldest documented light in the history of the universe, which was recently released, was captured by which telescope?

A. Hubble Space Telescope

B. James Webb Space Telescope 

C. Voyager Space Telescope

D. Akash Space Telescope

  • US President Biden unveiled an image taken by the James Webb Space Telescope. It is the oldest documented light in the history of the universe from 13 billion years ago. The image is called by the name of SMACS 0723. It is a patch of sky visible from the Southern Hemisphere on Earth.

3. POP–FAME, a new fuel which was found in the news, was developed from which source?

A. Hydrogen

B. Bacterium 

C. Biomass

D. Plastic

  • Scientists from the US Lawrence–Berkeley Lab have developed a fuel from a bacterium fuel ‘POP–FAME’, for poly–cyclo–propanated fatty acid methyl ester. The fuel has energy density values exceeding 50 mega–joules a litre, which is more than the rocket fuels used at present.

4. Which is India’s third and most recent power exchange that was launched recently?

A. Bharat Power Exchange

B. Hindustan Power Exchange 

C. Amrit Power Exchange

D. PTC Power Exchange

  • Hindustan Power Exchange (HPX), the third power exchange in the country was launched recently. It is backed by BSE and Power Trading Corporation (PTC). PTC India and BSE Investment hold 25 per cent each in HPX, while 9.9 per cent is held by ICICI Bank. The other two exchanges in the country are Indian Energy Exchange (IEX) and Power Exchange of India ltd (PXIL), while IEX holds 98 per cent almost monopoly on the total traded power.

5. Which is the venue of ‘National Conclave on Mines and Minerals’?

A. New Delhi 

B. Mumbai

C. Ranchi

D. Raipur

  • Union Minister for Mines Pralhad Joshi inaugurated the 6th National Conclave on Mines and Minerals in New Delhi. The conclave has been organized as a part of Azadi Ka Amrit Mahotsav. Union Home Minister Amit Shah presented ‘Rashtriya Khanij Vikas Puraskar’ and other awards in different categories at the conclave.

6. ‘MIDCOM’ is a Defence Cooperation Meeting held between India and which country?

A. Malaysia 

B. Maldives

C. Mauritius

D. Mozambique

  • Defence Minister Rajnath Singh held a video conference with Senior Defence Minister of Malaysia, to discuss various issues concerning bilateral, regional and defence industrial cooperation. The ministers discussed the existing defence cooperation activities and framework, and ways to enhance them under the existing Malaysia India Defence Cooperation Meeting (MIDCOM) framework.

7. Which country is the host of G–7 Summit in 2022?

A. France

B. Germany 

C. Italy

D. United Kingdom

  • Prime Minister Narendra Modi urged the Group of Seven (G7) countries to consider investing in India’s emerging market for clean energy technologies. He represented India as a partner country in the G7 Summit in Germany after being invited by German Chancellor Olaf Scholz. Indonesia, Argentina, Senegal and South Africa also attended the summit as partner countries.

8. ‘Living Lands Charter’, which was seen in the news, is associated with which global bloc?

A. G7

B. G20

C. Commonwealth of Nations 

D. BRICS

  • At the conclusion of the 2022 Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Kigali, Rwanda, all 54 Commonwealth members adopted ‘Living Lands Charter’. The non–binding agreement mandates that member countries will safeguard global land resources and arrest land degradation and act against climate change, biodiversity loss and towards sustainable management.

9. After Jharkhand and Andhra Pradesh, which state has entered Uranium Mining in India?

A. Punjab

B. Rajasthan 

C. Gujarat

D. Karnataka

  • After Jharkhand and Andhra Pradesh, Rajasthan is the third state where uranium has been found in India. The rare mineral is found at Rohil in Sikar district. The Rajasthan government has issued a letter of intent (LoI) to Uranium Corporation of India, for excavation of ore of this rare mineral in the state.

10. When is the ‘International Day of the Tropics’ celebrated?

A. May.27

B. May.29

C. June.27

D. June.29 

  • International Day of the Tropics is observed annually on June 29, to highlight the importance of the tropics and the environmental and socio–economic challenges faced in these regions. The Tropics are the regions around the equator that lie between the Tropic of Cancer and the Tropic of Capricorn in the Northern and Southern Hemispheres. This region hosts about 40 per cent of the Earth’s population and 80 per cent of its biodiversity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!