TnpscTnpsc Current Affairs

13th & 14th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த அமைச்சகத்தின் நிர்வாக அதிகார வரம்பின்கீழ் தேசிய நிலப்பணமாக்கல் கழகம் செயல்படுகிறது?

அ) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ) நிதியமைச்சகம் 

இ) MSME அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக `5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து `150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும்.
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரிநிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும். மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும் செயல்படும்.

2. அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு – CERN, அண்மையில் எந்த நாட்டின் கூர்நோக்காளர் தகுதியை இடைநிறுத்தம் செய்துவைத்துள்ளது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) உக்ரைன்

ஈ) பெலாரஸ்

  • ‘CERN’ எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு அண்மையில் ரஷ்யாவின் ‘கூர்நோக்காளர்’ தகுதி நிலையை இடைநிறுத்தம் செய்துவைத்துள்ளது. இது அணுக்களை உடைக்கும் உலகின் மிகப்பெரிய கருவியைக் கொண்ட சர்வதேச அறிவியல் ஆய்வகமாகும்.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அதன் 23 உறுப்புநாடுகளும் கண்டிப்பதாக CERN அறிவித்துள்ளது. உக்ரைன், ஏழு இணை உறுப்புநாடுகளுள் ஒன்றாகும். மேலும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை CERNஇல் கூர்நோக்காளர் தகுதி நிலையைப் பெற்றுள்ளன.

3. இந்தியாவில் ‘WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம்’ நிறுவப்பட்டுள்ள இடம் எது?

அ) எர்ணாகுளம்

ஆ) ஜாம்நகர் 

இ) சிம்லா

ஈ) கொல்கத்தா

  • குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • AYUSH அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு WHO உடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமை இடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.

4. 2022 – தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் கருப்பொருள் என்ன?

அ) Be the voice of New India and find solutions and contribute to Policy 

ஆ) Voice of Youth matters

இ) e-Governance and Use of ICT

ஈ) Participation of Women in Parliament

  • 2022 – தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் 3ஆம் பதிப்பின் தேசிய சுற்று தொடக்க அமர்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
  • இந்த ஆண்டு (2022) தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் கருப்பொருள், “புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைக்குப் பங்களிப்பு செய்யுங்கள்” என்பதாகும். எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழிற்துறைகளில் இணையவுள்ள இளைஞர்களின் குரலைக் கேட்க இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5. சமீபத்தில் வெளியான, ‘UDISE+ அறிக்கை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) சுகாதாரம்

ஆ) கல்வி 

இ) வணிகம்

ஈ) பெண்கள் அதிகாரமளித்தல்

  • இந்தியாவின் பள்ளிக்கல்வி குறித்த ‘ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+)’ அறிக்கை 2020-21 சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இவ்வறிக்கையின்படி, 2020-21 அமர்வில் தொடக்கநிலை முதல் மேல்நிலை வரை பள்ளிக்கல்வியில் சேரும் மாண -வர்களின் எண்ணிக்கை 25.38 கோடியாக உயர்ந்துள் -ளது. மொத்தப் பதிவு விகிதம், 2020-21இல் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டுள்ளது.
  • அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 39.7 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

6. 1996-க்குப் பிறகு மிகநீண்ட மின்வெட்டை விதித்த ஆசிய நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) இந்தோனேசியா

இ) இலங்கை 

ஈ) ஆப்கானிஸ்தான்

  • இலங்கை நாடளாவிய ரீதியில் நாள்தோறும் 7½ மணி நேர மின்வெட்டை அறிவித்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் அறிவிக்கப்படும் மிக நீண்ட மின்வெட்டு இதுவாகும்.
  • அதிகாரபூர்வ தகவல்களின்படி, மின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்ளவில்லை; மாறாக அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குக்கூட போதுமான நிதி இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

7. எந்த மாநிலம்/UTஇல், கிராம இராணுவக் குழுக்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒப்புதல் அளித்துள்ளது?

அ) ஜம்மு-காஷ்மீர் 

ஆ) பீகார்

இ) ஜார்கண்ட்

ஈ) பஞ்சாப்

  • ஜம்மு-காஷ்மீரில் கிராம ராணுவக் குழுக்களை அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிராம இராணுவக்குழுக்களின் உறுப்பினர்கள் கிராம பாதுகாப்பு காவலர்களாக நியமிக்கப்படுவார்கள். 1990-களில், ஜம்மு காஷ்மீரில் 4,125 கிராம இராணுவக் குழுக்கள் இருந்தன.
  • இந்தப் புதிய முயற்சி இக்குழுக்களுக்கு புத்துயிரளிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. அவை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவப்படைகளுக்கு உதவுவதோடு அமைதியை நிலைநாட்டவும் உதவுகின்றன.

8. மானிலிருந்து மனிதனுக்கு COVID-19 பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பதிவுசெய்துள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ரஷ்யா

இ) பிரேசில்

ஈ) கனடா 

  • ஒரு புதிய ஆய்வின்படி, மான்மூலம் மனிதனுக்குப் பரவிய COVID-19இன் முதல் பாதிப்பு கனடாவில் பதிவாகியுள்ளது. வெண்ணிற வாலுடைய மானினங்களில் SARS-CoV-2 மரபணுக்களின் மிகப்பிறழ்ந்த கொத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஆய்வுக்காக, தென்மேற்கு மற்றும் கீழை ஒன்டாரியோவில் உள்ள வெண்ணிற வால் மானின் 300 மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர். தென்மேற்கு ஒன்டாரியோவில் பதினேழு மான்களுக்கு SARS-CoV-2 பாதிப்பு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்.

9. ஐநா (UN) சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனீவா

ஆ) நைரோபி 

இ) பாரிஸ்

ஈ) நியூயார்க்

  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) என்பது, ஐநா அவையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு, மனிதச்சூழல்தொடர்பாக ஸ்டாக்ஹோமில் நடந்த ஐநா மாநாட்டைத் தொடர்ந்து 1972 ஜூனில் நிறுவப்பட்டது.
  • UNEP-இன் தலைமையகம் கென்யாவின் நைரோபியில் உள்ளது. UNEP ஆனது ஐநா சுற்றுச்சூழல் பேரவையின் சிறப்பு இரண்டு நாள் அமர்வில் அதன் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது.

10. WHO-இன் 2022ஆம் ஆண்டு உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) To hear for life, listen with care! 

ஆ) Hearing to all and by all

இ) Hear the needs of vulnerable

ஈ) To hear is to listen

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3ஆம் தேதி உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) உலக செவித்திறன் (Hearing) நாளாக கொண்டாடப்படுகிறது. “To hear for life, listen with care!” என்பது 2022ஆம் ஆண்டில் வரும் உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • இந்த ஆண்டு (2022), வாழ்க்கைப் பாதையில் நல்ல செவித்திறனைப் பேணுவதற்கான வழிமுறையாகப் பாதுகாப்பாகக் கேட்பதன் முக்கியத்துவத்தில் WHO தனது கவனத்தைச் செலுத்தும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1%-ஆக குறைப்பு

நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) முடிவெடுத்துள்ளது. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.

2. மிதாலி ராஜ் புதிய சாதனை:

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்தியாவின் மிதாலி ராஜ். ஆஸி. கேப்டன் மெலின்டா கிளார்க் 23 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தது சாதனையாக இருந்தது.

ஆனால் மிதாலி 24 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து சாதனையை முறியடித்துள்ளார்.

ஜுலன் கோஸ்வாமி புதிய சாதனை:

1 நாள் உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் ஜுலன் கோஸ்வாமி. ஆஸி. வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டை வீழ்த்தியதின்மூலம் நாற்பது விக்கெட்டுகளுடன் புதிய சாதனையை படைத்துள்ளார் ஜுலன் கோஸ்வாமி.

3. உக்ரைன் இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன் தலைநகர் கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம் போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேட்டோவில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவ, மாணவியரை மீட்கும் சவாலான பணியை திறம்பட மேற்கொண்டது. தூதரகத்தின் நடவடிக்கைகளால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் தலைநகரம் கீவை கைப்பற்ற ரஷ்ய ஐராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கீவ் நகரைச் சுற்றி வளைத்துள்ள ரஷ்ய பீரங்கி படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. வான்வழி தாக்குதலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கீவில் செயல்பட்ட இந்திய தூதரகம் அண்டை நாடான போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உக்ரைன் பாதுகாப்பு நிலைமை மேம்பட்ட பிறகு தூதரகத்தை கீவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளன.

ஜோர்டானில், ஆசிய ஜூனியர் மற்றும் யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஜூனியர் பெண்களுக்கான 50 கிலோகிராம் எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் வினி 5-0 என, கஜகஸ்தானின் கரினா டோகுபேவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஜூனியர் பெண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் யாக்சிகா 4-1 என, உஸ்பெகிஸ்தானின் ரஹிமா பெக்னியாசோவாவை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீராங்கனை விதி (ஜூனியர் 57 கிலோகிராம்) 5-0 என, ஜோர்டானின் அயா சுவின்தேவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் நிகிதா சந்த் (60 கிலோகிராம்), ஷ்ருஷ்தி (63 கிலோகிராம்), ருத்ரிகா (75 கிலோகிராம்) வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினர். மஹி (46 கிலோகிராம்), பாலக் (48 கிலோகிராம்), சுப்ரியா (54 கிலோகிராம்), குஷி (81 கிலோகிராம்) பைனலில் தோல்வியடைந்து வெள்ளி வென்றனர்.

5. வரும் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும்: அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேட்டி

வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்தார். நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக்கொண்டுசெல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது.

6. இலங்கையில் உள்ள சம்பூரில் இந்தியா உதவியுடன் 100 MW சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம்

இலங்கையில் 100 மவ் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின்கழகம் & இலங்கை மின்சபை ஒப்பந்தம் செய்துள்ளன.

இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய முதல் இடம் சம்பூர். 2006-ம் ஆண்டு சம்பூர் பகுதியை கைப்பற்றிய பிறகு அந்த இடம் ராணுவத்தால் உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகை யில், திரிகோணமலை மாவட்டம், சம்பூர்பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா – இலங்கை அரசுகளிடையே கடந்த 2011-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என திரிகோணமலை மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தற்போது சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இரு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன.

இதற்கான நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

7. உடான் திட்டத்தின் கீழ் 405 விமான வழித்தடங்கள்

சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தும் பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ், 405 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுவதாக மத்திய வான்போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மொத்தம் 948 வழித்தடங்களில் விமானங்களை இயக்க, இந்தியா விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

இதில், மார்ச்.9ஆம் தேதி நிலவரப்படி, எட்டு ஹெலிகாப்டர் தளங்கள் உட்பட 65 விமான நிலையங்கள் மற்றும் 2 நீர்நிலை விமான நிலையங்களை (Water Aerodromes) உள்ளடக்கி மொத்தம் 405 வழித்தடங்களில் விமான சேவை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய இணைப்புத் திட்டத்தின்கீழ், 14 நீர்நிலை விமான தளங்கள், 36 ஹெலிபேட் உட்பட 154 விமான நிலையங்கள், உடான் திட்டத்தின் கீழ் விமான சேவைகளை தொடங்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

8. வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு: தமிழ்நாட்டில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை

மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த ஜல் சக்தி இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

2016ஆம் ஆண்டு பருவமழையைத் தொடர்ந்து நாட்டில் வெள்ளம் ஏற்படக்கூடிய 20 முக்கிய ஆற்றுப்படுகைகளுக் -கான ஐந்து நாள் வெள்ள முன்னறிவிப்பு முறையை மத்திய நீர் ஆணையம் உருவாக்கி வருகிறது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் GPM (குளோபல் பெரசிப்பிடேஷன் மேனேஜ்மெண்ட்) GSMAP (குளோபல் சேட்டிலைட் மேப்பிங் ஆப் பெரசிபிடே -ஷன் – ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் தயாரிப்பு) மற்றும் ஐஎம்டி (இந்திய வானிலை ஆய்வுத்துறை) ஆகியவற்றின் சர்வதேச மழைப்பொழிவு மாதிரியைப் பயன்படுத்துகின்றன.

இவற்றின் அடிப்படையில் வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்காக, 20 முக்கிய நதிப் படுகைகளுக்கு 1-டி கணித வெள்ள முன்னறிவிப்பு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய அளவில் 2016 வரை 199ஆக இருந்த வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 331 ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் 2016 வரை ஐந்தாக இருந்த வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 15ஆக இருக்கிறது.

வெள்ள முன்னறிவிப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு 2018-19இல் `26.75 லட்சமும், 2019-20 இல் `38.66 லட்சமும், 2020-21இல் `269.04 லட்சமும், 2021-22இல் `215.68 லட்சமும் என மொத்தம் `550.13 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

1. National Land Monetization Corporation (NLMC) functions under the administrative jurisdiction of which Ministry?

A) Ministry of Commerce and Industry

B) Ministry of Finance 

C) Ministry of MSME

D) Ministry of Home Affairs

  • The Union Cabinet, chaired by Prime Minister Shri Narendra Modi has approved the setting up National Land Monetization Corporation (NLMC) as a wholly owned Government of India company with an initial authorized share capital of Rs 5000 crore and paid–up share capital of Rs 150 crore.
  • NLMC will undertake monetization of surplus land and building assets of Central Public Sector Enterprises (CPSEs) and other Government agencies. Going forward, Department of Public Enterprise, Ministry of Finance, will set up the company and act as its administrative ministry.

2. European Organization for Nuclear Research – CERN has recently suspended the observer status of which country?

A) USA

B) Russia 

C) Ukraine

D) Belarus

  • The European Organization for Nuclear Research, known as CERN recently suspended the observer status of Russia. It is the international scientific laboratory which has the world’s largest atom smasher.
  • CERN announced that its 23 member states condemned Russia’s invasion of Ukraine. Ukraine is one of 7 associate member states, and Russia, like the US, Japan and the European Union, had observer status in CERN.

3. Where is the ‘WHO Global Centre for Traditional Medicine’ established in India?

A) Ernakulam

B) Jamnagar 

C) Shimla

D) Kolkata

  • The Union Cabinet has approved the establishment of the WHO Global Centre for Traditional Medicine (WHO GCTM) in Jamnagar, Gujarat under the Ministry of AYUSH. A Host Country agreement was signed between the Government of India and the World Health Organization (WHO). This would be the first and only global out–posted Centre for traditional medicine across the world.

4. What is the theme of National Youth Parliament Festival – 2022?

A) Be the voice of New India & find solutions & contribute to Policy 

B) Voice of Youth matters

C) e–Governance and Use of ICT

D) Participation of Women in Parliament

  • The inaugural session of National round of third edition of National Youth Parliament Festival (NYPF) 2022 was recently held. Sports and Youth Affairs Minister Anurag Thakur addressed the session.
  • Theme of this year’s National Youth Parliament Festival is ‘be the voice of New India and find solutions and contribute to Policy’. The event is organised to hear the voice of the youth, who will join various careers in upcoming years.

5. ‘UDISE+ Report’, which was released recently, is associated with which field?

A) Sanitation

B) Education 

C) Business

D) Women Empowerment

  • Unified District Information System for Education Plus (UDISE+) report 2020–21 on school education of India was released recently. As per the report, the number of students enrolled in school education from primary to higher secondary has improved to 25.38 crore in the 2020–21 session.
  • Gross Enrolment Ratio (GER) has improved in 2020–21 at all levels. The report also adds that as many as 39.7 lakh students of government aided, private school students have shifted to Government schools.

6. Which Asian country has recently imposed its longest power cut since 1996?

A) Bangladesh

B) Indonesia

C) Sri Lanka 

D) Afghanistan

  • Sri Lanka announced nationwide seven–and–a–half–hour daily power cuts. This is the longest power cut announced in Sri Lanka in 26 years since 1996. As per the official sources, the country is not facing an issue of electricity capacity, but a foreign exchange crisis, as the country does not have enough reserves to import fuel.

7. Ministry of Home Affairs (MHA) approved the formation of Village Defence Groups (VDGs) in which state/UT?

A) Jammu and Kashmir 

B) Bihar

C) Jharkhand

D) Punjab

  • Ministry of Home Affairs (MHA) approved the formation of Village Defence Groups (VDGs) in Jammu and Kashmir. The members of the Village Defence Groups will be designated as Village Defence Guards.
  • In 1990s, 4,125 Village defence committees (VDCs) existed in Jammu and Kashmir. This new initiative is seen as a process of rejuvenating VDCs. They assist the forces in counter–terrorism operations and help in maintaining peace.

8. Which country reported the first potential case of deer–to–human COVID–19 transmission?

A) Australia

B) Russia

C) Brazil

D) Canada 

  • The first potential case of deer–to–human COVID–19 transmission has been reported in Canada, according to a new study. The researchers identified highly mutated clusters of SARS–CoV–2 genomes in white–tailed deer.
  • For the study, the researchers analyzed 300 samples from white–tailed deer in South–western and Eastern Ontario. They found that 17 of the deer in South–western Ontario tested positive for SARS–CoV–2.

9. Which is the headquarters of United Nations Environment Programme (UNEP)?

A) Geneva

B) Nairobi 

C) Paris

D) New York

  • The United Nations Environment Programme coordinates responses to environmental issues within the UN system. It was formed after the UN Conference on the Human Environment in Stockholm in June 1972. UNEP is headquartered at Nairobi, Kenya. The UNEP is set to commemorate the 50th anniversary of its creation in a special two–day session of the UN Environment Assembly.

10. What is the theme for WHO’s World Hearing Day 2022?

A) To hear for life, listen with care! 

B) Hearing to all and by all

C) Hear the needs of vulnerable

D) To hear is to listen

  • Every year, 3rd March is organized as World Hearing Day by the World Health Organisation. This year the World Hearing Day is being organized with the theme “To hear for life, listen with care!”. This year, WHO will focus on the importance of safe listening as a means of maintaining good hearing across the life course.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!