Tnpsc

13th & 14th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th & 14th 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பொருளாதார விடுதலைக் குறியீடு – 2021’இல் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) சிங்கப்பூர்

ஈ) பூடான்

  • அமெரிக்க மதியுரையகமான தி ஹெரிடேஜ் அறக்கட்டளை வெளியிட்ட பொருளாதார விடுதலைக் குறியீடு – 2021’இல் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. 89.7 புள்ளிகளுடன், சிங்கப்பூரைத் தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அதைத்தொடர்ந்த முதல் ஐந்து இடங்களுள் ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆசிய–பசிபிக் நாடுகளுள் இந்தியா இருபத்தாறாவது இடத்தில் உள்ளது.

2. ‘டஸ்ட்லிக்’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?

அ) பிரான்ஸ்

ஆ) மியான்மர்

இ) உஸ்பெகிஸ்தான்

ஈ) ஜப்பான்

  • ‘டஸ்ட்லிக் – Dustlik’ என்பது இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு இராணுவப்பயிற்சியாகும். இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியின் இரண்டாம் பதிப்பு (டஸ்ட்லிக்–2) உத்தரகண்ட் மாநிலத்தின் செளபதியாவில் தொடங்கியது.
  • இருநாடுகளின் படைகளைச்சார்ந்த சுமார் 45 இராணுவ வீரர்கள் இப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இக்கூட்டு இராணுவப்பயிற்சியின் முதல் பதிப்பு, கடந்த 2019 நவம்பரில் தாஷ்கண்டில் மேற்கொள்ளப்பட்டது.

3. ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாள் (International Day of Action for Rivers) கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 10

ஆ) மார்ச் 12

இ) மார்ச் 14

ஈ) மார்ச் 16

  • ஆண்டுதோறும் மார்ச்.14 அன்று ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை நாளின் 24ஆவது பதிப்பாகும். நமக்கு வாழ்வு தரும் நீராதாரத்தைப்பற்றி நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும் இது. ‘Rights of Rivers’ என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

4. இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?

அ) பிரதமர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ) உள்துறை அமைச்சர்

ஈ) பாதுகாப்பு அமைச்சர்

  • இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடுவணரசு குழுவொன்றை அமைத்தது. இந்தக்குழு தனது முதல் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. கொண்டாட்டங்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறைகள் குறித்து அப்போது அது விவாதித்தது. இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், H D தேவேகவுடா உள்ளிட்ட 259 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

5. ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக NASA, ESA மற்றும் CSA ஆகியவை இணைந்து, கீழ்க்காணும் எந்தத் தொலைநோக்கியை உருவாக்கி வருகின்றன?

அ) ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

ஆ) கெப்லர் விண்வெளி தொலைநோக்கி

இ) ஸ்பிட்ஸர் விண்வெளி தொலைநோக்கி

ஈ) டிரான்ஸிடிங் எக்ஸோபிளானட் சர்வே செயற்கைக்கோள்

  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை (ESA), கனடிய விண்வெளி ஆய்வு முகமை (CSA) மற்றும் NASA ஆகியவை இணைந்து, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி வருகின்றன. இது, NASA’இன் ஹப்பிள் தொலைநோக்கியின் வாரிசாக இருக்கும். 31 அக்.31 அன்று பிரஞ்சு கயானாவிலிருந்து அரியேன்–5 ஏவுகலத்தின்மூலம் இத் தொலைநோக்கியை விண்ணுக்குச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

6. கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட அனைத்து பெண்கள் கலைக்கண்காட்சியின் பெயர் என்ன?

அ) நாரி சக்தி

ஆ) அக்ஷய பாத்திரம்

இ) ஷக்தி கலா

ஈ) நாரி சம்ரிதி

  • மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் ‘அக்ஷய பாத்திரம்’ என்ற தலைப்பில் அனைத்து பெண்களின் கலைக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இக்கண்காட்சி பன்னாட்டு மகளிர் நாளன்று லலித் கலா அகாதமியில் தொடங்கிவைக்கப்பட்டது.
  • பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 250’க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை இந்தக் கண்காட்சி காட்சிப்படுத்தும்.

7. தொழிலாளர் பணியகத்தின் PLFS & வருடாந்திர ஆய்வின்படி, இந்தியாவில் தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் என்ன?

அ) 27.3%

ஆ) 37.3%

இ) 47.3%

ஈ) 57.3%

  • 2017–18 மற்றும் 2018–19ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு மற்றும் தொழிலாளர் பணியகம் நடத்திய வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலையின்மை ஆய்வுகளின் படி, தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் (WPR) 47.3 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும் உள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மக்களவையில் வழங்கியது.

8. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘SMS ஸ்க்ரப்பிங்’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ) TRAI

ஆ) RBI

இ) தொலைத்தொடர்பு அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

  • ஒவ்வொரு குறுந்தகவலின் (SMS) உள்ளடக்கத்தையும் சரிபார்க்கும் செயல்முறையானது அந்தக் குறுந்தகவல் பயனரைச் சென்றடையும் முன்பே மேற்கொள்ளப்படவேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது.
  • இச்செயல்முறை ‘SMS Scrubbing’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், குறுந்தகவல் ஒழுங்குமுறை –யின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியபோது, சரிபார்க்கப்படாத / பதிவுசெய்யப்படாத பல குறுந்தகவல்கள் தடுக்கப்பட்டன.

9. தேசிய இணையவெளி குற்றம் தொடர்பான புகார்களை அளிக்க பயன்படும் இணையதளத்தை இயக்கும் மத்திய அமைச்சகம் எது?

அ) மின்னணு & IT அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) பாதுகாப்பு அமைச்சகம்

ஈ) சட்டம் & நீதித்துறை அமைச்சகம்

  • இணையவெளி குற்ற நிகழ்வுகளை ஆன்லைனில் புகாரளிப்பதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட பொறிமுறையை வழங்குவதற்காக, உள்துறை அமைச்சகம், கடந்த 2019ஆம் ஆண்டில், தேசிய இணையவெளி குற்றம் தொடர்பான புகாரளிப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 18 மாதங்களில் மொத்தம் 3,17,439 இணையவெளி குற்றங்கள் மற்றும் 5,771 முதல் தகவல் அறிக்கைகள் இந்தத்தளத்தின்மூலம் ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

10. சுகாதாரம் மற்றும் கல்வி மேல்வரி வருவாய்மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து உருவாக்கப்படவுள்ள ஒற்றைத் தொகுப்பு வைப்பு நிதியின் பெயர் என்ன?

அ) பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா நிதி

ஆ) பிரதம மந்திரி ஆரோக்கிய நிதி

இ) பிரதமர் ராஷ்டிரிய ஸ்வஸ்திய நிதி

ஈ) பிரதமர் ஜன் ஆரோக்கிய நிதி

  • சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய்மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து நிதிச்சட்டம் 2007’இன்கீழ் சுகாதாரத்தின் பங்காக காலா –வதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை உருவாக்க பிரதம அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒதுக்கப்பட்ட தொகை, நிதியாண்டின் முடிவிற்குள் காலாவதியாகா –ததை உறுதிசெய்து, ஒதுக்கப்பட்ட வளங்களின் இருப்பைக்கொண் –டு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பன்னாட்டு தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவது இதன் முக்கிய பயனாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிஎல்ஐ திட்டத்தில் ஜப்பான் அதிக பங்களிப்பை வழங்கும்: மத்திய அரசு

மத்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் PLI திட்டத்தில் ஜப்பானின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு, தானியங்கி உள்ளிட்ட பதிமூன்று முக்கிய துறைகளில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக PLI திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. நடுவணரசின் துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடைமுறைகளை அறிமு –கப்படுத்தியதன் ஒருபகுதியாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதுடன் அவற்றின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே PLI திட்டத்தின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக, உணவுப்பதப்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள், உதிரிபாக –ங்கள், ஜவுளி மற்றும் சோலார் பிவி தகடுகள் உள்ளிட்ட துறைகள் அதிக பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தொழில்துறைகளில் ஜப்பான் உலக அளவில் அதிக நிபுணத்துவம் பெற்ற நாடாக விளங்குகிறது. எனவே, இந்தியாவின் PLI திட்டத்தில் ஜப்பான் பெரும் பங்களிப்பை வழங்கும் என்பது இந்தியாவின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

2. சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு: இமையம், வீரப்ப மொய்லி உள்ளிட்டோருக்கு விருது

2020’ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டு –ள்ளன. அதில், தமிழில் ‘செல்லாத பணம்’ நாவலை எழுதிய எழுத்தாளர் இமையம், கன்னடத்தில் ‘ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக்விஜயம்’ பெருங்கவிதை நூலை எழுதிய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, ஆங்கிலத்தில் ‘When God is a Traveller’ என்ற கவிதை நூலை எழுதிய அருந்ததி சுப்பிரமணியம் உள்ளிட்ட இருபது பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஓர் அனுபவ நூல் என மொத்தம் இருபது மொழிகளில் வெளியான இருபது நூல்கள் சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாவல்களுக்காக, இமையம் (தமிழ்), நந்த கரே (மராத்தி), மகேஷ் சந்திர சர்மா கௌதம் (சமற்கிருதம்), ஹுசைன் அல் ஹேக் (உருது) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறுகதை தொகுப்புகளுக்காக, அபூர்வ குமார் சைகியா (அஸ்ஸாமி), தரணிதர் ஒவாரி (போடோ), ஹிதய் கொல் பாரதி (காஷ்மீரி), காமாகாந்த் ஜா (மைதிலி), குருதேவ் சிங் ரூபனா (பஞ்சாப்) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கவிதை நூல்களுக்காக, அருந்ததி சுப்பிரமணியம் (ஆங்கிலம்), ஹரீஷ் மீனாட்சி (குஜராத்தி), அனாமிகா (ஹிந்தி), R S பாஸ்கர் (கொங்கணி), இரூங்பாம் தேவன் (மணிப்பூரி), ரூப்சந்த் ஹன்ஸ்டா (சந்தாலி), நிகிலேஷ்வர் (தெலுங்கு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாடக நூல்களுக்காக, கியான் சிங் (டோக்ரி), ஜேதோ லால்வானி (சிந்தி) ஆகிய இருவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

அனுபவக்குறிப்பு நூலுக்காக, வங்கமொழி எழுத்தாளர் மணிசங்கர் முகோ –பாத்யாய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலையாளம், நேபாளி, ஒடியா, இராஜஸ்தானி ஆகிய மொழிகளில் வெளிவந்த படைப்புகளுக்கு பின்னர் விருது அறிவிக்கப்படும். சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு `1,00,000 ரொக்கத்துடன் தாமிர கேடயம் பரிசளிக்கப்படும். விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

3. இந்தோ–பசிபிக் பிராந்தியத்துக்கான COVID தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி. ‘QUAD’ மாநாட்டில் முடிவு

இந்தோ–பசிபிக் பிராந்தியத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பது என்று ‘QUAD’ கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் நிதியுதவி அளிப்பதென்றும், ஆஸ்திரேலியா தடுப்பூசி எடுத்துச்செல்லும் போக்குவரத்துக்கான உதவிகளை அளிப்பது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தோ–பசிபிக் பிராந்திய நலனுக்காக இம்மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான முடிவு இது. இதன்மூலம், மிகப்பெரிய அளவிலான முதலீட்டில் 2022’ஆம் ஆண்டு இறுதிக்குள் கோடிக்கணக்கான COVID தடுப்பூசிகளை இந்தியா தயாரிக்கவுள்ளது.

4. வளர்ச்சிமிகு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாம் இடம்

அனைவரையும்கவரும் விதத்திலான வளர்ச்சியைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாமிடத்தைப் பிடித்துள்ளதாக பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 12 மாதங்களில் மிகச்சிறந்த வளர்ச்சியை தக்கவைக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்பட்டியலில் 17 சதவீத பங்களிப்புடன் ஜெர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், BREXIT ஒப்பந்தத்துக்குப் பிறகு பிரிட்டன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு (11%) முன்னேறியுள்ளது. இதன்மூலம், அந்நாடு இந்தியாவை (8 சதவீதம் / 5ஆவது இடம்) விஞ்சியுள்ளது. இதே பட்டியலில், ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி ஜப்பான் ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ரேஷன் பொருள்களை வாங்க, “மேரா ரேஷன்” செயலி அறிமுகம்

நாடு முழுக்க ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ முறை விரைவில் முழுமையாக அமலபடுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக ‘மேரா ரேஷன்’ என்கிற திறன்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ முறையை முதன்முதலில் நடுவணரசு 2019ஆம் ஆண்டு நான்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை தற்போது 2020 டிசம்பர் மாதம் 32 மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பதினேழு மாநிலங்களில் முழுமையாக செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. இதையொட்டி மத்திய அரசு ‘மேரா ரேஷன்’ என்கிற திறன்பேசி செயலியையும் உருவாக்கியுள்ளது.

6. தமிழ்நாட்டில் இணையவழி கல்வியை கற்பிக்க 11 உயர்கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி

இணையவழி கல்வியை வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் 11 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அனுமதி வழங்கி -யுள்ளது. நாடு முழுவதும் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழியில் கல்வி பயிற்றுவிக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி ‘NAAC’ அங்கீகாரம் அல்லது தேசிய தரவரிசை பட்டியலில் (NIRF) முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே UGC அனுமதி வழங்குகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் இணையவழி கல்வி திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை நடத்த 37 கல்வி நிறுவனங்களுக்கு UGC அனுமதி வழங்கியுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 11 உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலையில் பதினொரு படிப்புகளுக்கும், மதுரை காமராஜர் பல்கலையில் 11 படிப்புகளுக்கும், பெரியார் பல்கலையில் 7 படிப்புகளுக்கும், அழகப்பா பல்கலையில் 12 படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதுதவிர 6 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

7. மிதாலி ராஜ் சாதனை:

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மிதாலி ராஜ். லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக அவர், 35 ரன்களை கடந்தபோது அனைத்து விதமான சர்வ
-தேச கிரிக்கெட்போட்டிகளிலும் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இச்சாதனையை எட்டும் இரண்டாவது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். இவ்வகை சாதனையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

8. நாட்டின் தொழில் துறை உற்பத்தியில் மீண்டும் பின்னடைவு

நாட்டின் தொழிற்துறை உற்பத்தியில் ஜனவரி மாதத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவி -வரத்தில் தெரிவித்துள்ளதாவது: உற்பத்தி, சுரங்கம் மற்றும் பொறியியல் துறைகளின் உற்பத்தி கணிசமான அளவுக்கு குறைந்து போனதன் விளைவாக நாட்டின் தொழில் துறை உற்பத்தி 2021 ஜனவரி மாதத்தில் 1.6 சதவீதமாக மீண்டும் பின்னடைந்துள்ளது.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண் (ஐஐபி) கணக்கீட்டில் 77.6 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் உற்பத்தி துறையின் செயல்பாடு ஜனவரியில் 2 சதவீதமாக சரிந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தி -ல் 1.8 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்தத்துறையைப்போன்றே பொறியியல் துறையின் செயல்பாடும் 4.4 சதவீத சரிலிருந்து 9.6 சதவீத பின்னடைவை நோக்கி சென்றுள்ளது. சுரங்கத் துறையும் 4.4 சதவீத வளர்ச்சி விகிதத்திலிருந்து 3.7 சதவீதமாக பின்னடைந்துள்ளது.

ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் ஐஐபி 12.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் வளா்ச்சி விகிதம் அதிக மாற்றமின்றி 0.5 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

9. எழுத்தாளர் கே வி ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடாமி விருது எழுத்தாளர் கே வி ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. `50,000 ரொக்கமும், செம்புப்பட்டயமும் விருதாக அளிக்கப்படுவது வழக்கம்.

1. Which country topped the Economic Freedom Index 2021?

A) India

B) Sri Lanka

C) Singapore

D) Bhutan

  • Singapore topped the Economic Freedom Index 2021 released by the US think–tank, The Heritage Foundation. With 89.7 points, Singapore is followed by New Zealand in second place, Australia, Switzerland and Ireland in the top–5. India is ranked 26th in Asia–Pacific.

2. ‘Dustlik’ is a military exercise between India and which country?

A) France

B) Myanmar

C) Uzbekistan

D) Japan

  • ‘Dustlik’ is a military exercise between India and Uzbekistan. The second edition of the joint military exercise “Dustlik–2” started at Chaubatia in Uttarakhand. Around 45 military personnel of armies of both the countries are participating in the exercise. The first edition of the joint military exercise was carried out in Tashkent in November 2019.

3. Who is the head of the committee formed to commemorate the 75 years of India’s independence?

A) Prime Minister

B) President

C) Home Minister

D) Defence Minister

  • The Central government formed a committee to commemorate the 75 years of India’s independence, headed by the Prime Minister. The committee held its first meeting recently. It will discuss procedures related to activities for the celebrations. The committee consists of 259 members including former President Pratibha Patil, former prime ministers Manmohan Singh and HD Devegowda.

4. When is the International Day of Action for Rivers is observed?

A) March 10

B) March 12

C) March 14

D) March 16

  • International Day of Action for Rivers is observed every year on March 14. This year, it is the 24th edition of the International Day of Action for Rivers. It is a day dedicated to save, celebrate and make people around us aware about our life-giving source of water. The theme of International Day of Action for Rivers – 2021 is ‘Rights of Rivers’.

5. Which telescope is being manufactured in collaboration between NASA, ESA and CSA, as a successor of Hubble Telescope?

A) James Webb Space Telescope

B) Kepler Space Telescope

C) Spitzer Space Telescope

D) Transiting Exoplanet Survey Satellite

  • The James Webb Space Telescope is being manufactured in collaboration between European Space Agency (ESA), Canadian Space Agency (CSA) and NASA. It is a successor of NASA’s Hubble Telescope and will complement its discoveries. The telescope is scheduled for launch from French Guiana on an Ariane 5 rocket on 31 October 2021.

6. What is the name of the All–Women’s Art Exhibition inaugurated by the Minister of Culture and Tourism?

A) Nari Shakti

B) Akshya Patra

C) Shakti Kala

D) Nari Samriddhi

  • Union Minister of Culture and Tourism Prahlad Singh Patel inaugurated the All–Women’s Art Exhibition titled ‘Akshya Patra’.
  • The exhibition was inaugurated at Lalit Kala Akademi on International Women’s Day. The exhibition will and showcase more than 250 artworks from over 12 countries.

7. What is the Worker Population Ratio (WPR) in India, as per the PLFS and Annual survey by the Labour Bureau?

A) 27.3%

B) 37.3%

C) 47.3%

D) 57.3%

  • As per the results of Periodic Labour Force Survey (PLFS) conducted during 2017–18 and 2018–19 and the Annual Employment–Unemployment surveys conducted by the Labour Bureau, the Worker Population Ratio (WPR) is 47.3 per cent while the unemployment rate is 5.8 per cent. This information was given by the Union Labour Ministry in the Lok Sabha.

8. ‘SMS scrubbing’, which was making news recently is related to which organisation?

A) TRAI

B) RBI

C) Telecom Ministry

D) Finance Ministry

  • The Telecom Regulatory Authority of India (TRAI) issued a guideline that the verification process of every SMS content should be done before it is delivered. The process is known as SMS scrubbing.
  • Recently, when the telecom service providers (TSPs) started implementing the second phase of SMS regulation, several unverified and unregistered SMS messages were blocked.

9. National Cyber Crime Reporting Portal is being operated by which Union Ministry?

A) Ministry of Electronics and IT

B) Ministry of Home Affairs

C) Ministry of Defence

D) Ministry of Law and Justice

  • Ministry of Home Affairs launched the ‘National Cyber Crime Reporting Portal’ in 2019, to provide a centralised mechanism for online reporting of cybercrime incidents. Recently, the Union Home Ministry announced that a total of 3,17,439 cybercrimes and 5,771 FIRs were registered online through the portal in the last 18 months.
  • Maharashtra and Karnataka registered a significant number of cases.

10. What is the name of the Health reserve fund from the proceeds of Health and Education Cess?

A) Pradhan Mantri Swasthya Suraksha Nidhi

B) Pradhan Mantri Arogya Nidhi

C) Pradhan Mantri Rashtriya Swasthya Nidhi

D) Pradhan Mantri Jan Arogya Nidhi

  • The Union Cabinet, chaired by the Prime Minister, has approved the Pradhan Mantri Swasthya Suraksha Nidhi (PMSSN).
  • It is a single non–lapsable Health reserve fund from the proceeds of Health and Education Cess levied under Finance Act, 2007. It ensures that the amount does not lapse at the end of the financial year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!