TnpscTnpsc Current Affairs

13th & 14th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டம் – 2022’இன்படி, 2023-24’இல் இந்தியாவின் மதிப்பிடப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன?

அ) 10.5%

ஆ) 9%

இ) 8% 

ஈ) 6.5%

  • மணிலாவைச் சார்ந்த ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் அதன் ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டம் – 2022’ஐ வெளியிட்டது. தெற்காசியாவின் மிகப்பெரிய பொருளாதார -மான இந்தியா, நடப்பு நிதியாண்டில் (2022-23) 7.5 சதவீதமும், அடுத்த ஆண்டு (2023-24) எட்டு சதவீதமும் வளரும் என்று அது கணித்துள்ளது.

2. 2022 – உலக சுகாதார நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Our Planet, Our Health

ஆ) Climate Change Matters

இ) Personal Hygiene and Public Hygiene

ஈ) Take Care of You and Earth

  • 1948இல் முதலாவது சுகாதார சபையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.7 அன்று உலக சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • உடல்நலன் தொடர்பான சிக்கல்களைப்பற்றி விவாதிக்கவும், குறிப்பிட்ட உடல்நலச் சிக்கல்கள் குறித்து சிறப்பு கவனத்தை ஈர்க்கவுமாக WHO இதனை வழிநடத்துகிறது. நமது கோள், நமது நலன்” என்பது இந்த ஆண்டு (2022) உலக சுகாதார நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

3.Braving the Storms: East Asia and Pacific Economic Update” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) பன்னாட்டு பண நிதியம்

ஆ) உலக வங்கி 

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) BRICS வங்கி

  • உலக வங்கியானது “Braving the Storms: East Asia and Pacific Economic Update” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, அமெரிக்காவில் நிதி இறுக்கம், சீனாவில் கட்டமைப்பு மந்தநிலை மற்றும் உக்ரைனில் போர் ஆகிய மூன்று இடர்கள் கிழக்காசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கு முன்னுள்ளன. இவ்வறிக்கையின் ஏப்ரல் 2022 இதழ், அபாயங்களைத் தவிர்க்கவும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் துணிச்சல் மிகுந்த சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கிறது.

4. 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண்மைப் பொருட்கள் ஏற்றுமதி, எந்தச் சாதனையை எட்டியுள்ளது?

அ) $10 பில்லியன்

ஆ) $20 பில்லியன்

இ) $50 பில்லியன் 

ஈ) $100 பில்லியன்

  • 2021-22ஆம் ஆண்டில் $50 பில்லியன் டாலர்களைக் கடந்து இந்தியாவின் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி புதிய மைல்கல்லை எட்டியது. இதுவே இந்தியாவிலிருந்து விவசாய ஏற்றுமதியில் இதுவரை எட்டப்பட்ட அதிகபட்ச அளவாகும். வேளாண் ஏற்றுமதி 2021-22இல் 19.92% அதிகரித்து $50.21 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது.
  • தரவுகளின்படி, அரிசி ($9.65 பில்லியன்), கோதுமை ($2.19 பில்லியன்), சர்க்கரை ($4.6 பில்லியன்) போன்ற முக்கியப் பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

5. ‘ஒன் ஹெல்த்’ கட்டமைப்பானது எந்த மாநிலத்தில் ஒரு சோதனைத்திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது?

அ) உத்தரகாண்ட் 

ஆ) குஜராத்

இ) கோவா

ஈ) ஹரியானா

  • கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையானது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சுகாதாரக் கட்டமைப்பை ஒரு சுகாதார ஆதரவு அலகுமூலம் செயல்படுத்துதற்கான ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரிவின் முக்கிய நோக்கம், கற்றல்களின் அடிப்படையில் தேசிய அளவிலான ஒரு சுகாதார செயல்திட்டத்தை உருவாக்குவதாகும்.

6. 2022 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Inclusion in the Workplace 🗹

ஆ) Quality Education for All

இ) Leaving No one Behind

ஈ) Disorder, Not a disease

  • உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளானது ஆட்டிசம் உள்ளவர்கள் நாடோறும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுபற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல்.2 அன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Inclusion in the Workplace” என்பது இந்த ஆண்டு (2022) வரும் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளுக்கானக் கருப் பொருள் ஆகும்.

7. 2022 – உலக வானிலை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Early Warning and Early Action 

ஆ) Climate and Water

இ) The Sun, the Earth and the Weather

ஈ) The Ocean, Our climate and Weather

  • ‘உலக வானிலை அமைப்பு (WMO)’ நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் உலக வானிலை நாள் அனுசரிக்கப்படுகிறது. WMO, தற்போது 193 உறுப்பு நாடுகளையும் பிரதேசங்களையும் கொண்டுள்ளது.
  • WMO ஆனது 1961ஆம் ஆண்டு முதல், மார்ச்.23ஆம் தேதி அன்று உலக வானிலை நாளைக்கடைபிடித்து வருகிறது. “Early Warning and Early Action” என்பது இந்த ஆண்டு (2022) உலக வானிலை நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

8. ஒரு சமீப அறிக்கையின்படி, ஆசியா முழுவதும் காப்பீட்டு ஊடுருவல் விகிதம் குறைவாகவுள்ள நாடு எது?

அ) இலங்கை

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) இந்தியா 

ஈ) நேபாளம்

  • சுற்றுச்சூழல் தளமான கிளைமேட் டிரெண்ட்ஸ் தயாரித்த ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, மொத்த ஆசியாவிலும் காப்பீட்டு ஊடுருவலில் இந்தியா மிகக்குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
  • 2021 மேயில் மேற்கு வங்காளத்தைத் தாக்கிய ஆம்பன் சூறாவளிக்குப் பின், இந்தியக் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையில் ¾ பகுதியைச் செலுத்தத் தவறின. இதுவே இம்மிகக்குறைந்த விகிதத்திற்குக் காரணமாகும்.

9. கேலோ இந்தியா – பல்கலைக்கழக விளையாட்டுக்கள் – 2021’ஐ (KIUG 2021) நடத்துகிற நகரம் எது?

அ) சென்னை

ஆ) பெங்களூரு 

இ) ஹைதராபாத்

ஈ) டேராடூன்

  • கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் – 2021’க்கான (KIUG 2021) இலச்சினை, ஜெர்சி, சின்னம் மற்றும் கீதம் ஆகியவற்றை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
  • சின்னமானது ‘வீரா’ என்ற யானையைக் கொண்டுள்ளது. பெங்களூரில் நடைபெறவிருந்த இந்நிகழ்வு, கடந்தாண்டு COVID நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இது KIUG-இன் 2ஆவது பதிப்பாகும். இதில் முதன்முறையாக யோகாசனம் மற்றும் மற்கம்பம் ஆகியவை இடம்பெறும்.

10. 2022 – ICC மகளிர் உலகக்கோப்பையை வென்ற நாடு எது?

அ) இங்கிலாந்து

ஆ) ஆஸ்திரேலியா 

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) இந்தியா

  • ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது ICC மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது.
  • ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி 170 ரன்களை விளாச, இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி., ஐந்து விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. மற்றொரு வீரர் நாட் ஸ்கிவர் 148 ரன்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார். இங்கிலாந்து அணியால் 43.4 ஓவரில் 285 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விக்டோரியாவில் 2026 காமன்வெல்த் போட்டிகள் முதன்முறையாக பல நகரங்களில் நடைபெறுகிறது

23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

வழக்கமாக ஒரே நகரத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள், அந்த ஆண்டு விக்டோரியா மாகாணத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக மெல்போர்ன், கீலாங், பெண்டிகோ, பலாரத், கிப்ஸ்லேண்ட் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த நகரங்களில் இருக்கும் பிரத்யேக விளையாட்டு கிராமங்களில் போட்டிகள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சி மார்ச் மாதத்தில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நிகழவுள்ளது. அப்போட்டிக்காக 16 விளையாட்டுகளைக் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் டி20 கிரிக்கெட் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், வில்வித்தை போன்ற விளையாட்டுகள் இடம்பெறவில்லை. இந்தியா இவற்றில் சிறந்து விளங்குவது நினைவுகூரத்தக்கது. எனினும், வரும் நாள்களில் போட்டியை நடத்தும் நகரங்களின் விருப்பத்தின் அடிப்படையில் இன்னும் சில விளையாட்டுகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பது, இது 6ஆவது முறையாகும். இதற்குமுன் 2018 (கோல்டு கோஸ்ட், 2006 (மெல்போர்ன்), 1982 (பிரிஸ்பேன்), 1962 (பெர்த்), 1938 (சிட்னி) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

2. புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை 01.04.2022 முதல் 31.03.2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்

தேசிய கிராம சுயராஜ்யம் என்னும் புதுப்பிக்கப்பட்ட மத்திய நிதியுதவித் திட்டத்தை 01.04.2022 முதல் 31.03.2026 வரை (பதினைந்தாவது நிதி ஆணையக் காலத்தில்) தொடர்வதற்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிதி தாக்கங்கள்:

இத்திட்டத்தின் மொத்த நிதிச் செலவு `5911 கோடி, இதில் மத்தியப் பங்கு `3700 கோடி மற்றும் மாநிலப் பங்கு `2211 கோடி.

வேலைவாய்ப்பு உருவாக்கம் உட்பட முக்கிய தாக்கம்:

நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உட்பட 2.78 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிர்வாக திறன்களை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும்.

கிராமங்களில் வறுமை இல்லாத மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம், நலமான கிராமம், குழந்தைகளுக்கு நட்பான கிராமம், போதுமான தண்ணீர் வசதி கொண்ட கிராமம், சுத்தமான மற்றும் பசுமை கிராமம், கிராமத்தில் தன்னிறைவான உள்கட்டமைப்பு, சமூக பாதுகாப்பு கிராமம், நல்லாட்சியுடன் கூடிய கிராமம், மற்றும் கிராமத்தில் உருவாக்கப்படும் வளர்ச்சி உள்ளிட்ட இலக்குகளை எட்ட இது உதவும்.

பட்டியல் பிரிவுகள், பழங்குடியினர் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பஞ்சாயத்துகள் கொண்டிருப்பதாலும், அடித்தட்டு மக்களுக்கு நெருக்கமான அமைப்புகளாக இருப்பதாலும், பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவது சமூக நீதி மற்றும் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் சமத்துவத்தையும் உள்ளடக்கிய தன்மையையும் ஊக்குவிக்கும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மின்-ஆளுமையின் அதிகரித்த பயன்பாடு மேம்பட்ட சேவை வழங்கல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அடைய உதவும். கிராம சபைகளை இத்திட்டம் வலுப்படுத்தும். திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும், திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் தேவை அடிப்படையிலான ஒப்பந்தப் பணியாளர்கள் வழங்கப்படலாம்.

பயனாளிகளின் எண்ணிக்கை:

நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உள்ளிட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 லட்சம் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இருப்பார்கள்.

3. அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாட்டம்: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்ப -டும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். மேலும், அவரது எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

4. ஐ.நா. பொருளாதாரம்-சமூக கவுன்சிலின் 4 முக்கிய அமைப்புகளுக்கு இந்தியா தேர்வு

ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் 4 முக்கிய அமைப்புகளுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் நிறுவப்பட்டது. இது ஐநா அமைப்பின் 6 முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். ஐநாவின் 54 உறுப்பு நாடுகளை இந்தக் கவுன்சில் உள்ளடக்கியுள்ளது.

இந்நிலையில், ஐநாவுக்கான இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் சமூக மேம்பாட்டு ஆணையம், தன்னார்வ அமைப்புகளுக்கான குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றுக்கு இந்தியா தேர்வாகி உள்ளது. இதுதவிர, பொருளாதாரம்-சமூகம்-பண்பாட்டு உரிமைகள் குழுவில் இடம்பெற இந்திய தூதர் பிரீத்தி சரண் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐநா உறுப்புநாடுகளுக்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

5. ரெய்க்யாவிக் ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்யாவிக் ஓபன் செஸ் போட்டியில் இந்திய வீரரும், சென்னையைச் சேர்ந்தவரு -மான ஆர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளரானார். இறுதிச்சுற்றில் அவர் சக இந்திய கிராண்ட்மாஸ்டரான டி குகேஷை வீழ்த்தினார்.

6. நாட்டின் ஏற்றுமதி 42,000 கோடி டாலரை எட்டியது

நாட்டின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 42,000 கோடி டாலரை எட்டியுள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பெட்ரோலிய தயாரிப்புகள், பொறியியல், தோல் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் ஆரோக்கியமான நிலையில் இருந்ததையடுத்து நாட்டின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 4,222 கோடி டாலர் அளவிற்கு அதிகரித்தது. இது, முந்தைய 2021ஆம் ஆண்டின் மார்ச் மாத ஏற்றுமதியான 3,526 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 19.76 சதவீதம் அதிகமாகும்.

அதேபோன்று, இறக்குமதியும் கடந்த மார்ச்சில் 24.21% உயர்ந்து 6,074 கோடி டாலராக காணப்பட்டது.

இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை 1,851 கோடி டாலராக அதிகரித்தது. 2021 மார்ச் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,364 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த அளவில் கடந்த நிதியாண்டில் (2021-22) நாட்டின் ஏற்றுமதி வரலாற்று உச்சமாக 41,965 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் `31.50 லட்சம் கோடியாகும்.

மேலும், கடந்த நிதியாண்டில் இறக்குமதியும் 61,189 கோடி டாலராக அதிகரித்தது. இதையடுத்து வர்த்தக பற்றாக்குறை அந்த நிதியாண்டில் 19,224 கோடி டாலர் (`15 லட்சம் கோடி) என்ற அளவில் இருந்தது.

2020-21இல் வர்த்தக பற்றாக்குறை (இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசம்) 10,263 கோடி டாலர் என்ற அளவில் காணப்பட்டது.

இந்தியாவின் மாதாந்திர ஏற்றுமதி முதல்முறையாக நடப்பாண்டு மார்ச் மாதத்தில்தான் 4,000 கோடி டாலர் என்ற மைல்கல்லை கடந்து 4,200 கோடி டாலரை தொட்டதாக வர்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

7. 20 சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில அரசு விருதுகள்: முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்

கைவினைத் தொழில்களுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ், `1 லட்சம் காசோலை அடங்கியது.

இதேபோன்று, சிறந்த கைவினைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், ‘பூம்புகார் மாநில விருது’ அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது `50,000 பரிசுத்தொகை, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிர பதக்கம், தகுதிச்சான்று கொண்டது.

8. ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம், சந்திரோதயம்: கன்னியாகுமரியில் அபூர்வ காட்சியை 16இல் பார்க்கலாம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நின்றவாறு, ஒரே நேரத்தில் சூரியன் மறையும், சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை சனிக்கிழமை (ஏப்.16) பார்க்கலாம்.

ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமி நாளில் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும், சந்திரன் உதயமாவதும் ஒரேநேரத்தில் நிகழுகிறது. நிகழாண்டு அத்தகைய அபூர்வ காட்சி சனியன்று (ஏப்.16) நிகழவுள்ள -து. இந்தக் காட்சியை இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமத்தில் திரளுவது வழக்கம்.

9. அந்தமான் – நிக்கோபர் தீவு இணைப்புத் திட்டம்.

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தேசிய நெடுஞசாலை -4இல் உள்ள பியோட்னாபாத் முதல் பெரார்கஞ்ச் வரையிலான பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி: இந்த 26 கிமீ நீளமுள்ள சாலை அந்தமான் – நிக்கோபார் தீவு இணைப்பு திட்டத்தின்கீழ் `170 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டை மேம்படுத்துவதன்மூலம், போர்ட் பிளேயரில் இருந்து அந்தமான் மாவட்டத்தின் பிற நகரங்களுக்கு தடையற்ற போக்குவரத்து உறுதிசெய்யப்பட்டுள்தாக அவர் கூறினார். தேசிய நெடுஞ்சாலை-4 எனப்படும் ‘அந்தமான் ட்ரங்க் சாலை’ தீவுகளின் உயிர்நாடி என்றும், அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1. As per the Asian Development Outlook (ADO) 2022, what is the estimated growth rate of India in 2023–24?

A) 10.5%

B) 9%

C) 8% 

D) 6.5%

  • Manila–based Asian Development Bank recently released its flagship Asian Development Outlook (ADO) 2022. It projected South Asia’s largest economy India to grow by 7.5% in the current fiscal year (2022–23) and by 8 per cent the next year (2023–24).

2. What is the theme of the ‘World Health Day’ in 2022?

A) Our Planet, Our Health 

B) Climate Change Matters

C) Personal Hygiene and Public Hygiene

D) Take Care of You and Earth

  • April 7 is observed as World Health Day, to celebrate the creation of the World Health Organization (WHO) in 1948 in the First Health Assembly. WHO leads the celebration to discuss health–related issues and to draw attention to specific health issues. The theme for this year’s World Health Day is “Our Planet, Our Health”.

3. Which institution released the ‘Braving the Storms: East Asia and Pacific Economic Update’ Report?

A) International Monetary Fund

B) World Bank 

C) Asian Development Bank

D) BRICS Bank

  • The World Bank released the April 2022 update ‘Braving the Storms: East Asia and Pacific Economic Update’. As per the report, there are three risks for the region: financial tightening in the US, structural slowdown in China, and the war in Ukraine.
  • The April 2022 issue of the report suggests bold reforms to avert the risks and grasp the opportunities.

4. Which milestone has been achieved by India’s agricultural products export in the year 2021–22?

A) $10 billion

B) $20 billion

C) $50 billion 

D) $100 billion

  • India’s agricultural products export touched a new milestone by crossing USD 50 billion in the year 2021–22. This is also the highest level ever achieved for agriculture exports from India.
  • The agricultural exports have grown by 19.92% during 2021–22 to touch USD 50.21 billion. As per the data, the highest ever exports have been achieved for staples like rice (USD 9.65 billion), wheat (USD 2.19 billion), sugar (USD 4.6 billion).

5. The ‘One Health’ framework has been launched as a pilot project in which state?

A) Uttarakhand 

B) Gujarat

C) Goa

D) Haryana

  • The Department of Animal Husbandry & Dairying has launched a pilot project in the state of Uttarakhand to implement the One Health Framework by One Health Support Unit.
  • The key objective of the Unit is to develop a national One Health roadmap based on the learnings of the pilot project implementation.

6. What is the theme of the World Autism Awareness Day – 2022?

A) Inclusion in the Workplace 

B) Quality Education for All

C) Leaving No one Behind

D) Disorder, not a disease

  • World Autism Awareness Day aims to create awareness about the obstacles that people with autism face every day. Each year, World Autism Awareness Day is celebrated on April 2 globally to spread awareness about autism spectrum disorder.
  • This year, the theme of World Autism Awareness Day is ‘Inclusion in the Workplace’.

7. What is the theme of the ‘World Meteorological Day’ – 2022?

A) Early Warning and Early Action 

B) Climate and Water

C) The Sun, the Earth and the Weather

D) The Ocean, Our climate and Weather

  • The World Meteorological Day is observed to commemorate the day on which ‘World Meteorological Organisation (WMO)’ was founded.
  • WMO now has 193 member countries and territories. WMO has been observing World Meteorological Day since 1961 on March 23. The theme of this year’s World Meteorological Day is “Early Warning and Early Action”.

8. As per a recent report, which country has the lowest rate of insurance penetration across Asia?

A) Sri Lanka

B) Afghanistan

C) India 

D) Nepal

  • A recent report prepared by environmental platform Climate Trends has pointed out that India has the lowest rate of insurance penetration across Asia.
  • The Indian insurance companies were among the worst performers scoring below 10 per cent for the quality of their disclosures. Indian insurance companies failed to pay close to three–fourths of the claimed amount for Cyclone Amphan, which hit the West Bengal during May 2021.

9. Which city is the host of Khelo India University Games 2021 (KIUG 2021)?

A) Chennai

B) Bengaluru 

C) Hyderabad

D) Dehradun

  • Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur launched the logo, jersey, mascot and anthem of the Khelo India University Games 2021 (KIUG 2021).
  • The mascot is an elephant named as ‘Veera’. The event to be held in Bengaluru, postponed due to the ongoing Covid crisis last year, will be the second edition of KIUG. It includes Yogasana and Mallakhamb for the first time.

10. Which country won the ICC Women’s World Cup 2022?

A) England

B) Australia 

C) South Africa

D) India

  • Australian Team defeated England by 71 runs in the final to win their record seventh ICC Women’s Cricket World Cup.
  • Alyssa Healy of Australia smashed 170 to take Australia to a mammoth 356 for five against England in the final. Another player Nat Sciver remained unbeaten on 148. The England team could score only 285 in 43.4 overs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!