12th Tamil Unit 7 Questions
12th Tamil Unit 7 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 7 Questions With Answers Uploaded Below.
1) அறியா என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) வினையெச்சம்
B) பெயரெச்சம்
C) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அறியா என்ற சொல் முழுமை பெறாமல் உள்ளது. இதனுடன் ‘த’ என்ற எழுத்தை சேர்ப்போம். அறியாத என்ற சொல் கிடைக்கும்.
இப்போதும் இச்சொல் முழு பொருளைத் தரவில்லை. இதனுடன் ஒரு பெயர்ச்சொல்லை சேர்ப்போம். உதாரணமாக பையன் என்ற சொல்லை சேர்த்து எழுதுவோம். அறியாத பையன். இப்போது இச்சொல் முழுமை பெற்றுள்ளது. இவ்வாறு ஒரு சொல்லுடன் பெயர்ச்சொல்லை சேர்க்கும் போது பொருளை தருமாயின் அது பெயரெச்சம் எனப்படும்.
அறியா என்ற சொல்லில் ‘த’ என்ற எழுத்து இல்லை – ஈறுகெட்ட (இறுதி எழுத்து இல்லாத)
அறியாத என்ற சொல்லுடன் பெயர்ச்சொல் சேர்த்தால் பொருள் தருகிறது – பெயரெச்சம்.
இது எதிர்மறைப் பொருளை தருவதால், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
2) கடலைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது எது?
A) அலம்
B) அளக்கர்
C) ஆர்கலி
D) ஆழி
விளக்கம்: கடலைக் குறிக்கும் சொற்கள்:
1. அரலை 2. அரி 3. அலை 4. அழுவம் 5. அளம்
6. அளக்கர் 7. ஆர்கலி 8. ஆழி 9. ஈண்டுநீர் 10. உவரி
11. திரை 12. பானல் 13. பெருநீர் 14. சுழி 15. நீராழி
16. புணர்ப்பு 17. தென்நீர் 18. பௌவம் 19. முந்நீர் 20. வரி
21. ஓதம் 22. வலயம்.
3) கூற்றுகளை ஆராய்க.
1. உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு பட்டினப்பாலையில் உள்ளது.
2. சிலப்பதிகாரத்தில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4) ஞாபகத்தில் மட்டுமே மரங்கள் மீந்திருக்கும்
பொட்டல் வெளியில்
போரின் பின் பிறந்த குழந்தையென
முகையவிழ்ந்து சிரிக்கிறது
அதிசய மலரொன்று – என்ற வரியை எழுதியவர் யார்?
A) தமிழ்நதி
B) தமிழ்ஒளி
C) ஐராவதம் மகாதேவன்
D) முகமது ராவுத்தர்
விளக்கம்: ஞாபகத்தில் மட்டுமே மரங்கள் மீந்திருக்கும்
பொட்டல் வெளியில்
போரின் பின் பிறந்த குழந்தையென
முகையவிழ்;ந்து சிரிக்கிறது
அதிசய மலரொன்று – தமிழ்நதி.
இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
5) இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர் யார்?
A) வெ.இறையன்பு
B) தி.சு.நடராசன்
C) சிற்பி பாலசுப்பிரமணியம்
D) தமிழ்நதி
விளக்கம்: இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர் வெ.இறையன்பு ஆவார். இவர் தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப் பணி அலுவலராய்ப் பணியாற்றி வருபவர். இவர், இ.ஆ.ப தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
6) தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) அறிந்து என்ற சொல்லின் பகுதி – அறி
B) அறுத்து என்ற சொல்லின் பகுதி – அறு
C) காய்நெல் – வினைத்தொகை
D) புக்க – வினையெச்சம்
விளக்கம்: 1. அறிந்து – அறி
அறுத்து – அறு.
பகுதி என்பது கட்டளைச் சொல்லாகவும், அந்த முழுச்சொல்லின் பொருளை (பகுதியே) குறிப்பதாகவும் இருக்க வேண்டும்.
2. காய் நெல் – வினைத்தொகை. வினைத்தொகை என்பது முக்காலத்திற்கும் அச்சொல்லை மாற்றி எழுதும் வகையில் இருக்க வேண்டும். காய் நெல், காய்ந்த நெல், காயும் நெல்
3. புக்க – பெயரெச்சம். புக்க என்றால் புகுந்த என்று பொருள். இச்சொல் முழு பொருளையும் தரவில்லை. இதனுடன் ஒரு பெயர்ச்சொல்லை சேர்ப்போம். உதாரணமாக மாணவன். புகுந்த மாணவன். இப்போது இச்சொல் முழு பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லை சேர்க்கும் போது எச்சசொல் பொருளை தந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.
7) ‘தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன’ – என்று தொன்மம் பற்றி கூறியவர் யார்?
A) பேராசிரியர் உரை
B) இளம்பூரணர் உரை
C) பரிமேலழகர் உரை
D) நாதமுனி உரை
விளக்கம்: தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும், பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள் – இளம்பூரணர் உரை.
‘தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன’ – பேராசிரியர் உரை.
8) ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் புறநானூற்றை கீழ்க்காணும் எந்த தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்?
A) The Four Hundred Songs of War and Wisdom Poems from Classical Tamil, the Purananuru
B) The Songs of War and Wisdom: An Anthlogy of Poems from Classical Tamil, the Purananuru
C) The Four Hundred Songs of War and Wisdom: An Anthlogy of Poems from the Purananuru
D) The Four Hundred Songs of War and Wisdom: An Anthlogy of Poems from Classical Tamil, the Purananuru
விளக்கம்: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் “The Four Hundred Songs of War and Wisdom: An Anthlogy of Poems from Classical Tamil, the Purananuru” என்னும் தலைப்பில் 1999-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
9) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினார் என்ற செய்தியை தெரிவிப்பது எது?
A) பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து
B) பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து
C) பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து
D) பதிற்றுபத்தில் ஐந்தாம் பத்து
விளக்கம்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான். பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்து என்பது சேர மன்னர்களைப் பற்றிய நூல் ஆகும். இதில் முதல் பத்தும் கடைசி பத்தும் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை.
10) ஐராவதம் மகாதேவன் எப்போது தாமரைத்திரு விருதை பெற்றார்?
A) 1980
B) 1992
C) 2009
D) 1970
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது 1970-ஆம் ஆண்டு பெற்றார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
11) ‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று கூறியவர் யார்?
A) ஷேக்ஸ்பியர்
B) ஹிராக்ளிடஸ்
C) அப்துல் கலாம்
D) வெ.இறையன்பு
விளக்கம்: எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம் – வெ. இறையன்பு (இலக்கியத்தில் மேலாண்மை).
126 ஒற்றை வரிகளில் எழுதிய ‘துளிகள்’ என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர்.
‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ – ஹிராக்ளிடஸ்.
12) “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்” என்ற குறட்பாவில் உணர்த்தப்படும் செய்தி என்ன?
A) எதிரியின் தன்மை அறிந்து செயல்பட வேண்டும்
B) தகுந்த காலம், ஏற்ற இடம் அறிந்து செயல்பட வேண்டும்
C) தன் வலிமை அறிந்து செயல்பட வேண்டும்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்” – திருக்குறள் (473)
தம்முடைய வலிமையின் அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டு செயலை தொடங்கி இடையில் அதனை முடிக்க முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர் என்பது மேற்காணும் திருக்குறளின் பொருள் ஆகும்.
13) ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது என்ன திணை?
A) வாகைத் திணை
B) உழிஞைத் திணை
C) தும்பைத் திணை
D) பாடாண் திணை
விளக்கம்: திணை இரண்டு வகைப்படும்.
1. அகத்திணை 2. புறத்திணை
புறத்திணை 12 வகைப்படும்.
1. வெட்சி
2. கரந்தை
3. வஞ்சி
4. காஞ்சி
5. நொச்சி
6. உழிஞை
7. தும்பை
8. வாகை
9. பாடாண்
10. பொதுவியல்
11. கைக்கிளை
12. பெருந்திணை
இதில் பாடாண்; – பாடு + ஆண். பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகள்;. அதாவது, ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுகிறது.
14) “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A) கம்பராமாயணம்
B) புறநானூறு
C) அறநெறிச்சாரம்
D) அகநானூறு
விளக்கம்: “வையகம் முழுவதும் வறிஞர் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” – கம்பராமாயணம் (பாலகாண்டம் – 179).
15) எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று தன் நூல் மூலம் அறிவுரை வழங்கியவர் யார்?
A) வெ.இறையன்பு
B) கோவூர் கிழார்
C) மா.இராமாணிக்கனார்
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: சீனத்தில் புழங்கும் உருவகக் கதைமூலம், நேர மேலாண்மையை பற்றிக் குறிப்பிடும் போது, வெ.இறையன்பு எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று தன் இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
16) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) பார்த்தீனியம்
B) கானல் வரி
C) ஈழம்: கைவிட்ட தேசம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – கவிதைகள்.
கானல் வரி – குறுநாவல்
ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் – நாவல்
மேற்காணும் அனைத்தும் தமிழ்நதி அவர்களின் நூல்களாகும்.
17) அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று கனவு கண்டவர் யார்?
A) மு.வரதராசனார்
B) மா.பொ.சிவஞானம்
C) மா.இராசமாணிக்கனார்
D) சிங்கார வேலனார்
விளக்கம்: அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே, முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலலின்றிக் காண வேண்டும் – மா.இராசமாணிக்கனார் (புதியதமிழகம்)
18) புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜார்ஜ். எல். ஹார்ட் ஆவார். இவர் எந்த பல்லைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார்?
A) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
B) மெல்போர்ன் பல்கலைக்கழகம்
C) இலண்டன் பல்கலைக்கழகம்
D) கலிபோர்னியா பல்கலைக்கழகம்
விளக்கம்: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் “The Four Hundred Songs of War and Wisdom: An Anthlogy of Poems from Classical Tamil, the Purananuru” என்னும் தலைப்பில் 1999-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
19) எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம் என்று கூறியவர் யார்?
A) இராசமாணிக்கனார்
B) அப்துல்கலாம்
C) வெ.இறையன்பு
D) தமிழ்நதி
விளக்கம்: எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம் என்று கூறியவர் – வெ.இறையன்பு (இலக்கியத்தில் மேலாண்மை).
20) “தொன்மை தானே சொல்லுங் காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே” என்று கூறியவர் யார்?
A) தண்டி
B) தொல்காப்பியர்
C) பவணந்தி முனிவர்
D) அகத்தியர்
விளக்கம்: “தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” – தொல்காப்பியர் செய்யுளில் (228)
மேற்காணும் வரிகள் தொன்மம் பற்றிய தொல்காப்பியரின் கூற்று ஆகும்.
21) சோழன் நலங்கிள்ளியை பாடும்போது, இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிய பாடியவர் யார்?
A) கோவூர்கிழார்
B) ஒளவையார்
C) நற்சென்ணையார்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப்பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்.
22) எந்த மன்னன் பகைநாட்டுச் செல்வகளைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினார்?
A) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
B) கோப்பெருஞ்சோழன்
C) ராஜாதிராஜன்
D) கடல்பிறகோட்டிய செங்குட்டுவன்
விளக்கம்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான். பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.
23) வெ.இறையன்புவின் எந்த நூல் 1995ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது?
A) ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
B) ஏழாவது அறிவு
C) உள்ளொளிப் பயணம்
D) மேற்காணும் எவுதுமில்லை
விளக்கம்: வெ.இறையன்பு எழுதிய நூல்கள்:
1. வாய்க்கால் மீன்கள்
2. ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுக்கள்
3. ஏழாவது அறிவு
4. உள்ளொளிப் பயணம்
5. மூளைக்குள் சுற்றுலா
இதில் ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
24) பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே – என்ற வரியில் துஞ்சான் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
A) உறங்குபவன்
B) பயமில்லாதவன்
C) போரிடாதவன்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: மேற்காணும் பாடல் புறநானூற்றின் கடைசி பாடலாகும். கோவூர்கிழார், சோழன் நற்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிய பேசி வியந்த வரிகளாகும். இதில் துஞ்சான் என்ற சொல்லின் பொருள் – உறங்காதவன் என்பதாகும்.இதன் எதிர்ச்சொல் – உறங்குபவன்.
25) “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) கம்பராமாயணம்
D) அறநெறிச்சாரம்
விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அறிநெறிச்சாரம் ஆகும்.
26) கடலைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது எது?
A) அரலை
B) அறி
C) அலை
D) அழுவம்
விளக்கம்: கடலைக் குறிக்கும் சொற்கள்:
1. அரலை 2. அரி 3. அலை 4. அழுவம் 5. அளம்
6. அளக்கர் 7. ஆர்கலி 8. ஆழி 9. ஈண்டுநீர் 10. உவரி
11. திரை 12. பானல் 13. பெருநீர் 14. சுழி 15. நீராழி
16. புணர்ப்பு 17. தென்நீர் 18. பௌவம் 19. முந்நீர் 20. வரி
21. ஓதம் 22. வலயம்.
27) உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம்பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு இடம்பெற்றிருந்த நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) பட்டினப்பாலை
C) பதிற்றுப்பத்து
D) புறநானூறு
விளக்கம்: உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
28) மடியின்மை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கீழ்க்காணும் எதனை வலியுறுத்தியுள்ளார்?
A) ஓர் அரசன் எவ்வாறு போரிடல் வேண்டும்
B) ஓர் அரசன் ஏற்ற காலம் மற்றும் இடம் அறிந்து செயல்பட வேண்டும்
C) ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு ‘மடியின்மை’ என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார்.
29) திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகுத்துக்கொள்ள வேண்டும். என்று அறிவுரை கூறியவர் யார்?
A) அப்துல் கலாம்
B) மா.இராமாணிக்கனார்
C) ஐராவதம் மகாதேவன்
D) வெ.இறையன்பு
விளக்கம்: திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்திதை தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது என்று வெ.இறையன்பு தனது இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலில் கூறியுள்ளார்.
30) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் – என்ற குறட்பாவில் உணர்த்தப்படும் கருத்து என்ன?
A) காலம் அறிந்து செயல்பட வேண்டும்
B) ஏற்ற இடம் அறிந்து செயல்பட வேண்டும்
C) காலம் மற்றும் இடம் அறிந்து செயல்பட வேண்டும்
D) காலம் அமையும் வரை அமைதியாக இருக்க வேண்டும்
விளக்கம்: ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் – திருக்குறள் (484)
ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.
31) கூற்றுகளை ஆராய்க (மா.இராசமாணிக்கனார்).
1. பிற்கால சோழர்கள் வரலாற்றை மட்டும் முழுமையாக ஆராய்ந்தவர்
2. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹொஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர்.
3. கரந்தை தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும், உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்டவர்.
4. சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியுபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: 1. ஆய்வுநெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர்கள் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்
2. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹொஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர்.
3. கரந்தை தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும், உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்டவர்.
4. சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியுபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்.
32) ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருதை எப்போது பெற்றார்?
A) 1980
B) 1992
C) 2009
D) 1970
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது 1970-ஆம் ஆண்டு பெற்றார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
33) வெ.இறையன்பு எழுதிய நூல்களில் பொருந்தாதது எது?
A) ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள்
B) ஏழாவது அறிவு
C) உள்ளொளிப் பயணம்
D) வாய்க்கால் மீன்கள்
விளக்கம்: வெ.இறையன்பு எழுதிய நூல்கள்:
1. வாய்க்கால் மீன்கள்
2. ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுக்கள்
3. ஏழாவது அறிவு
4. உள்ளொளிப் பயணம்
5. மூளைக்குள் சுற்றுலா
6. இலக்கியத்தில் மேலாண்iமை
இதில் ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
எனவே, பொருந்தாதது வாய்க்கால் மீன்கள்.
34) துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் யார்?
A) ஷேக்ஸ்பியர்
B) ஹிராக்ளிடஸ்
C) மில்டன்
D) டால்டாய்ஸ்
விளக்கம்: எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம் – வெ.இறையன்பு (இலக்கியத்தில் மேலாண்மை).
126 ஒற்றை வரிகளில் எழுதிய ‘துளிகள்’ என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர்.
35) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் புறநானூற்றை எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்?
A) 1993
B) 1995
C) 1997
D) 1999
விளக்கம்: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல். ஹார்ட் என்பவர் “The Four Hundred Songs of War and Wisdom: An Anthlogy of Poems from Classical Tamil, the Purananuru” என்னும் தலைப்பில் 1999-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
36) எந்த ஆண்டு முதல் வெ.இறையன்பு பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருகிறார்?
A) 1990
B) 1992
C) 1995
D) 1997
விளக்கம்: வெ.இறையன்பு: தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வருபவர். இவர், இ.ஆ.ப தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர். இவர் 1990-ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
37) காய்நெல் அறுத்து கவளம் கொளினே – என்ற வரியில் காய் நெல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) விளைந்த நெல்
B) விதை நெல்
C) காய்ந்த நெல்
D) யானைக்கு வழங்கும் சோற்று நெல்
விளக்கம்: காய் நெல் என்றால் விளைந்த நெல் என்று பொருள். மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு. இப்பாடலை இயற்றியவர் பிசிராந்தையார். ஆந்தையார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் என்னும் ஊரின் பெயரோடு சேர்த்து பிசிராந்தையார் என அழைக்கப்படுகிறார்.
38) மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும் – என்ற வரியில் மா என்ற சொல்லிற்கு பொருத்தமானது?
A) ஒரு ஏக்கரில் நான்கில் ஒரு பங்கு
B) ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு
C) ஒரு ஏக்கரில் ஐந்தில் ஒரு பங்கு
D) ஒரு ஏக்கரில் இரண்டில் ஒரு பங்கு
விளக்கம்: மா – ஒருநில அளவு (ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு). மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும். ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்கு பல நாட்களுக்கு உணவாகும் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
39) நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே – என்ற வரியில் செறு என்ற சொல்லின் பொருள் என்ன?
A) சேறு
B) வயல்
C) யானை
D) நெற்பயிர்
விளக்கம்: செறு – வயல். மேற்காணும் வரி இடம்பெற்ற நூல் புறநானூறு ஆகும். நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்து சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
40) தொன்மம் என்றால் பல பொருள் உள்ளது. ஆனால் கவிதையில் இது எந்த பொருளை குறிக்கிறது?
A) வனப்பு
B) பழங்கதை
C) இறுகிவிட்ட கருத்து வடிவங்கள்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: தொன்மம் என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ‘தொன்மை’ என்பதுவும் ஒன்றாகும். காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே. தொன்மம் என்னும் சொல் இவை அனைத்தையும் குறிக்கும். ஆனால், கவிதையில் அது பழங்கதையைக் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.
41) உரோமாபுரிச் சிப்பாய்கள் எந்தப் போர்ப்படையில் இடம்பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
விளக்கம்: உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
42) பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் – இவ்வரியில் பிண்டம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நெல்
B) வரி
C) வயல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பிண்டம் – வரி. முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு வரி திரட்ட கூடாது என்பது மேற்காணும் புறநானூறு வரியின் பொருளாகும்.
43) தவறான கூற்றை தெரிவு செய்க (புறநானூறு)
A) புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் நூல்
B) பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
C) இந்நூலை உ.வே.சா 1897-ஆம் ஆண்டு அச்சில் பதிப்பித்தார்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் புறநானூறு-ஐ தமிழ்த்தாத்தா உ.வே.சா 1894-ஆம் அச்சில் பதிப்பித்தார். இந்நூலை 1999-ஆம் ஆண்டு ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
44) யார் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினார்?
A) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
B) கோப்பெருஞ்சோழன்
C) துஞ்சிய கிள்ளிவளவன்
D) நன்மாறன்
விளக்கம்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினார்.
45) எந்த நூலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது?
A) அகநானூறு
B) பதிற்றுப்பத்து
C) புறநானூறு
D) பட்டினப்பாலை
விளக்கம்: புறநானூற்றின்; 56-ஆம் பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.
46) கூற்று 1: தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வணிக உறவு இலக்கியம் மூலமும் தெரிகிறது.
கூற்று 2: ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு.20-ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் சரி
விளக்கம்: தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வணிக உறவு இலக்கியம் மூலமும் தெரிகிறது.
ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு.20-ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்.
47) கீழ்க்காண்பனவற்றில் எது வெ.இறையன்பு எழுதாத நூல்?
A) ஏழாவது அறிவு
B) மூளைக்குள் சுற்றுலா
C) உள்ளொளிப் பயணம்
D) கானல் வரி
விளக்கம்: வெ.இறையன்பு எழுதிய நூல்கள்:
1. வாய்க்கால் மீன்கள்
2. ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுக்கள்
3. ஏழாவது அறிவு
4. உள்ளொளிப் பயணம்
5. மூளைக்குள் சுற்றுலா
6. இலக்கியத்தில் மேலாண்மை
இதில் ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
கானல் வரி என்பது தமிழ்நதி எழுதிய நூல் ஆகும்.
48) “கூற்று: தொன்மம் இலக்கிய உத்தியாக ஏற்கப்பட்டிருக்கிறது.
காரணம்: விளங்காத கருத்துக்களை எளிதில் விளங்க வைக்கமுடிகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: தொன்மங்கள் மக்களின் மனத்திலும் பேச்சிலும் இடம்பெற்றிருப்பதால் அவற்றைப் பயன்படுத்திச் சில செய்திகளைச் சுவையாக சொல்ல முடிகிறது. விளங்காத கருத்துக்களை எளிதில் விளங்க வைக்கமுடிகிறது. ஆகவே, தொன்மம் இலக்கிய உத்தியாக ஏற்கப்பட்டிருக்கிறது.
49) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சூரியன் தனித்தலையும் பகல்
B) இரவுகளில் பொழியும் துயரப்பணி
C) பார்த்தீனியம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – கவிதைகள்.
கானல் வரி – குறுநாவல்
ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் – நாவல்
50) மா.இராசமாணிக்கனார் எழுதாத நூல் எது?
A) சேரர் வரலாறு
B) சோழர் வரலாறு
C) பல்லவர் வரலாறு
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும் உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
51) ஐராவதம் மகாதேவன் எப்போது ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருதை பெற்றார்?
A) 1980
B) 1992
C) 2009
D) 1970
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது 1970-ஆம் ஆண்டு பெற்றார். இந்திய வரலாற்று ஆராளய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
52) நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான் – என்று கூறியவர் யார்?
A) இராசமாணிக்கனார்
B) மு.வரதராசனார்
C) ஐராவதம் மகாதேவன்
D) வெ.இறையன்பு
விளக்கம்: நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன், அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான் – வெ.இறையன்பு.
53) கல்லாதவராக இருந்தாலும் கற்றவரோடு சேரும்போது நல்லறிவு பெறுவர் என்று கூறும் நூல் எது?
A) நான்மணிக்கடிகை
B) நாலடியார்
C) கார்நாற்பது
D) இனியவை நாற்பது
விளக்கம்: உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும். தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூ சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” – நாலடியார் (139)
54) பிசிராந்தையார் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க
A) இவர் புறநானூற்றின் 187-ஆவது பாடலை இயற்றியுள்ளார்.
B) பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
C) ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்
D) இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி பிசிராந்தையார் அரசனுக்கும் அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்.
விளக்கம்: இவர் புறநானூற்றின் 184-ஆவது பாடலை இயற்றியுள்ளார்.
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர்
இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி பிசிராந்தையார் அரசனுக்கும் அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்.
55) தொன்மங்களைக் கொண்டு அரவான்; என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
A) ஜெயமோகன்
B) எஸ்ராமகிருஷ்ணன்
C) அழகிரிசாமி
D) புதுமைப்பித்தன்
விளக்கம்: ஜெயமோகன் – பத்மவியூகம் (சிறுகதை)
எஸ்.ராமகிருஷ்ணன் – அரவான் (நாடகம்)
புதுமைப்பித்தன் – சாபவிமோசனம், அகலிகை (கதைகள்)
அழகிரிசாமி – விட்டகுறை, வெந்தழலால் வேகாது (சிறுகதை)
56) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஒய்வு என்பது கனவு. காரணம் என்ன?
A) உணவு தேடுவதிலேயே பொழுது கழிந்தது
B) புதிய கண்டுபிடிப்புகளுக்காக பொழுதை செலவிட வேண்டியிருந்தது
C) இடப்பெயர்வுக்கே நேரம் போதவில்லை
D) வேளாண்மை செய்ய நேரம் போதுமானதாக இல்லை
விளக்கம்: வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு. அவனது பொழுது, உணவு தேடுவதிலேய கழிந்தது. விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
57) ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது – 1970
B) இந்திய வரலாற்று ஆராய்ச்சி விருது – 1992
C) தாமரைத்திரு விருது – 2009
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது 1970-ஆம் ஆண்டு பெற்றார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
58) காவிரிப் பூம்பட்டினம் என்பது யாருடைய வணிகத் துறைமுகமாக விளங்கியது?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
விளக்கம்: காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழரின் வணிகத் துறைமுகமாகும். இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின், அவற்றின் மீது புலிச்சின்னத்தைப் பொறித்து வெளியே அனுப்பும் சுங்க அதிகாரிகளும் இருந்தனர். வரி கொடுக்காமல ஏய்ப்பவர்கள் அஞ்சும் வகையில் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
59) ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ – புரவி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) வணிகம்
B) படகு
C) கடல்
D) குதிரை
விளக்கம்: புரவி – குதிரை. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
60) தவறான கூற்றை தெரிவு செய்க (புறநானூறு)
A) இந்நூலின் 184-ஆவது பாடலை இயற்றியவர் – பிசிராந்தையார்
B) முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச்செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
C) இந்நூலை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசியர் ஜார்ஜ்.எல். ஹார்ட் என்பவர் 1998-ஆம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: புறநானூற்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் 1999-ஆம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
61) கீழ்க்காணும் நூல்களில் எது வெ.இறையன்பு எழுதிய நூல் அல்ல?
A) வாய்க்கால் மீன்கள்
B) ஈழம்
C) ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
D) இலக்கியத்தில் மேலாண்மை
விளக்கம்: 1. வாய்க்கால் மீன்கள்
2. ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுக்கள்
3. ஏழாவது அறிவு
4. உள்ளொளிப் பயணம்
5. மூளைக்குள் சுற்றுலா
6. இலக்கியத்தில் மேலாண்மை.
ஈழம் என்பது தமிழ்நதி எழுதிய நூல் ஆகும்.
62) ‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று கூறியவர் யார்?
A) ஷேக்ஸ்பியர்
B) ஹிராக்ளிடஸ்
C) அப்துல் கலாம்
D) வெ.இறையன்பு
விளக்கம்: எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு அடர்த்தியுடன் எழுதுகிறோம் என்பதே முக்கியம் – வெ.இறையன்பு (இலக்கியத்தில் மேலாண்மை).
126 ஒற்றை வரிகளில் எழுதிய ‘துளிகள்’ என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் ஹிராக்ளிடஸ். அவர் கிரேக்க நாட்டவர்.
‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ – ஹிராக்ளிடஸ்.
‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ – ஹிராக்ளிடஸ்.
63) நிதி மேலாண்மை பற்றி ‘டைமன்’ என்பவரை மையமாக வைத்து யார் நாடகம் எழுதி சிறந்த வாழ்வியல் விளக்கத்தைத் தந்தார்?
A) காளிதாசர்
B) மில்டன்
C) டால்டாய்ஸ்
D) ஷேக்ஸ்பியர்
விளக்கம்: ‘டைமன்’ என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவனது வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றி பேசியபோதும், விருந்தை உண்டவர்கள் உண்பார்கள் என நம்பி செலவு செய்து வந்தான். ஆனால் அவர்கள் உதவவில்லை. அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான். ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம் ஆகும்.
64) “ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” என்ற பாடலில் உணத்தப்படும் செய்தி?
A) நிதி மேலாண்மை
B) உழைப்பின் மதிப்பு
C) நேர மேலாண்மை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: மேற்காணும் பாடல் ஒளவையாரின் நல்வழி பாடலாகும். இவ்வரியில் வரவு-ஐ விட செலவை குறைத்தல் வேண்டும் என கூறியுள்ளார்.
65) மனிதனுடைய மேலாண்மைப் பண்பு எப்போது உருவானது?
A) ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது
B) குழுவாக செயல்பட்ட போது
C) வேட்டையாடத் தொடங்கிய போது
D) வேளாண்மை செய்த போது
விளக்கம்: மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கியபோது உருவானது. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
66) தமிழ்நதி கீழ்க்காணும் எங்கு பிறந்தார்?
A) யாழ்ப்பாணம்
B) திரிகோணமலை
C) முள்ளிவாய்க்கால்
D) ஈழம்
விளக்கம்: தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்.
67) தொன்மம் பற்றி ‘வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல் அகராதி’ சில கருத்துக்களை கூறியுள்ளது. இதில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன
B) சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்கின்றன.
C) தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவும், புரிந்துகொள்ளவும் முடியும்.
D) தொன்மங்கள் சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும், அவற்றினால் ஏற்படும் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.
விளக்கம்: தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ, புரிந்துகொள்ளவோ முடியாது.
68) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
B) சூரியன் தனித்தலையும் பகல் – கவிதைகள்.
C) கானல் வரி – புதினம்
D) பார்த்தீனியம் – நாவல்
விளக்கம்: நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – கவிதைகள்.
கானல் வரி – குறுநாவல்
ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் – நாவல்
69) அதன் பிறகும் எஞ்சும் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
A) முகம்மது ராவுத்தர்
B) தமிழ்நதி
C) இராசமாணிக்கனார்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதைத் தொகுப்பை எழுதியவர் தமிழ்நதி (கலைவாணி) ஆவார். இவர் ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் ஆவார்.
70) சாபவிமோசனம், அகலிகை ஆகிய இரு கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். இவ்விரண்டு கதைகளும் எதனை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது?
A) சிலப்பதிகாரம்
B) மகாபாரதம்
C) இராமாயணம்
D) குண்டலகேசி
விளக்கம்: இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்துப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதியதைச் சான்றாக கொள்ளலாம்.
71) வெ.இறையன்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வருபவர்.
2. இ.ஆ.ப தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
3. 1990-ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
4. பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களிலும் பங்களிப்பைச் செய்து வருபவர்.
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வருபவர்.
2. இ.ஆ.ப தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
3.1990-ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
4. பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களிலும் பங்களிப்பைச் செய்து வருபவர்.
72) பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில்,
மலரை அடையாளம் கண்டு
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப்பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) வெ.இறையன்பு
C) தமிழ்நதி
D) முகம்மது இராவுத்தர்
விளக்கம்: பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில்,
மலரை அடையாளம் கண்டு
எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப்பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை – தமிழ்நதி
இவ்வரிகள் தமிழ்நதி எழுதிய “அதன் பிறகும் எஞ்சும்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
73) ஸ்ட்ரோபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் எந்த நாட்டு தூதுக்குழு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்?
A) பாண்டிய
B) பல்லவ
C) சோழர்
D) சேரர்
விளக்கம்: ஸ்ட்ரோபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று, கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்.
74) புகளுர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் பற்றிய ஆய்வில் தாம் கண்டறிந்தது தவறு என்பதை ஐராவதம் மகாதேவன் எங்கு குறிப்பிட்டு அதை மாற்றிக் கொண்டார்?
A) முதலாம் உலகத் தமிழ் மாநாடு
B) இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு
C) மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு
D) நான்காம் உலகத் தமிழ் மாநாடு
விளக்கம்: புகளுர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6-வது, 7-வது, 8-வது பாட்டுடைத் தலைவர்கள் என்று ஐராவதம் மகாதேவன் எழுதியிருந்தார். இதை மறுத்து இம்மன்னர்கள் 7-வது, 8-வது, 9-வது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார் மாணவர் ஒருவர். அதைச் சரியென்று உணர்ந்த மகாதேவன் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் அறிஞர்கள் முன்னிலையில் அதைக்குறிப்பிட்டு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
75) காய்நெல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) பண்புத்தொகை
B) அன்மொழித்தொகை
C) வினைத்தொகை
D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விளக்கம்: காய்நெல் – வினைத்தொகை
வினைத்தொகை: முக்காலத்திற்கும் உரியவாறு சொல்லை எழுத முடியும். காய் நெல், காய்ந்த நெல், காயும் நெல்.
76) தமிழ்நதி என்பவர் எந்த பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்?
A) திருகோணமலை பல்கலைக்கழகம்
B) யாழ்பாணப் பல்கலைக்கழகம்
C) சென்னைப் பல்கலைக்கழகம்
D) ஈழப் பல்கலைக்கழகம்
விளக்கம்: தமிழ்நதி (கலைவாணி) என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றர். இவர் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்.
77) போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி – என்று கூறியவர் யார்?
A) வெ.இறையன்பு
B) அப்துல் கலாம்
C) மா.இராமாணிக்கனார்
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: நம்முடன் யாரும் போட்டி போடக் கூடாது. அப்படிப் போட்டிக்கு வரும் அனைவரையும் அழித்துவிட வேண்டும் என எண்ணக் கூடாது. போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது மேலாண்மை விதி – வெ.இறையன்பு.
78) சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று வெளியிட்டு வரலாற்றில் திருப்பதை ஏற்படுத்தியவர் யார்?
A) இரா.கிருஷ்ணமூர்த்தி
B) ஐராவதம் மகாதேவன்
C) வெ.இறையன்பு
D) சிற்பி பாலசுப்பிரமணிம்
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார். சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பதை ஏற்படுத்தியது.
79) தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையாக கருவியாக விளங்குவது எது?
A) உரைநடை
B) செய்யுள்
C) கவிதை
D) கதை
விளக்கம்: தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவியாகக் கவிதை விளங்குகிறது. உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதைகள் மூலமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
80) யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான், உலகமும் கெடுமே – இவ்வரியில் புலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) யானையின் கால்
B) வயல்
C) நெல்
D) புகுந்த
விளக்கம்: புலம் என்றால் நிலம் (வயல்) என்று பொருள். யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போல, அதிகப்படியான வரிவசூலிப்பதால், அரசன் தானும் பயனடைய மாட்டான். நாட்டு மக்களும் துன்புறுவர் என்பது மேற்காணும் புறநானூறு வரியின் பொருளாகும். இது புறநானூற்றின் 184-ஆவது பாடலாகும். இப்பாடலை இயற்றியவர் பிசிராந்தையார் ஆவார். இப்பாடலில், அரசன் எவ்வாறு வரி வசூல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
81) பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் – இவ்வரியில் தப என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நெல்
B) வரி
C) கெட
D) அன்பு
விளக்கம்: தப – கெட. முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு வரி திரட்ட கூடாது என்பது மேற்காணும் புறநானூறு வரியின் பொருளாகும்.
82) வெ.இறையன்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவரின் ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1990-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
2. 2021-ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவரின் ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1995-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
2. 2021-ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
83) அதிசய மலரின்
இதழ்களிலிருந்து தொடங்கும் புன்னகை
பேரூழி கடந்து பிழைத்திருக்கும் மனிதரிடை
பரவிச் செல்கிறது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) வெ.இறையன்பு
B) தமிழ்நதி
C) முகம்மது இராவுத்தர்
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: அதிசய மலரின்
இதழ்களிலிருந்து தொடங்கும் புன்னகை
பேரூழி கடந்து பிழைத்திருக்கும் மனிதரிடை
பரவிச் செல்கிறது – தமிழ்நதி
இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
84) ஐராவதம் மாகதேவன் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. கரூரை அடுத்த புகளுரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளைக் கண்டறிந்தார்.
2. 1965-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் கைத்தறி துறை இயக்குநர் ஆகப் பணியாற்றி வந்தார்.
3. தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சரிவர வாசிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும், சங்ககாலத் தமிழ் மன்னர்களை பற்றிய புறச்சான்றுகள் (இலக்கியச் செய்தி தவிர) திரட்டுதல் என்ற ஆசை கொண்டவர்.
4. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகள் தமிழிலேயே எழுதப்பட்டவை, அவைகளைப் பொருள் சிறக்க வாசிக்க ஒரு முறை இருக்கிறது என்று கண்டறிந்தவர்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: 1962-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் கைத்தறி துறை இயக்குநர் ஆகப் பணியாற்றி வந்தார். இருப்பினும் ஓய்வு கிடைக்கும்போது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
85) எந்த துறைமுகத்தில் மாரிக்காலத்து மழைமேகம்போல, கடல் வழியே வேறு நாடுகளிலிருந்து மரக்கலங்களில் வந்து பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது?
A) முசிறி
B) காவிரிப்பூம்பட்டினம்
C) கொற்கை
D) மாமல்லபுரம்
விளக்கம்: காவிரிப் பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம்போல, கடல் வழியே வேறு நாடுகளிலிருந்து மரக்கலங்களில் வந்து பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது
86) மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் – என்ற வரியில் மெல்லியன் கிழவன் ஆகி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) வயது முதிர்ந்தவன் ஆகி
B) செல்வத்தில் குறைந்தவன் ஆகி
C) மெல்லிய உடல் பெற்றவன் ஆகி
D) அறிவில் குறைந்தவனாகி
விளக்கம்: மெல்லியன் கிழவன் ஆகி – அறிவில் குறைந்தவனாகி என்று பொருள். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பக் கூடாது என்பது மேற்காணும் புறநானூறு வரிகள் உணர்த்தும் பொருள் ஆகும்.
87) தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் முரண்பாடுகள் தெரிய வருகின்றன. இதனை ஐராவதம் மகாதேவன் தன்னுடைய எந்த நூலில் தெளிவுபடுத்துகிறார்?
A) எர்லி தமிழ் எபிகிராபி
B) எர்லி தரமிழி எபிகிராபி
C) எர்லி திராவிடி எபிகிராபி
D) எர்லி தமிழி எபிகிராபி
விளக்கம்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராம்மி வரிவடித்திலிருந்து முரண்பாடுகள் தெரிய வருகின்றன. இவற்றை ஐராவதம் மகாதேவன் தன்னுடை ஆய்வு நூலான ‘எர்லி தமிழ் எபிகிராபி’ யில் தெளிவுபடுத்துகிறார்.
88) “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும், தமித்துப்புட்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்” – என்ற வரியில் உணர்த்தப்படும் செய்தி என்ன?
A) நெல்லை யானையிடமிருந்து பாதுகாக்க வேண்டும்
B) அறுவடையின் போது யானை கொண்டு நெல்லை மிதிக்க வைக்க வேண்டும்
C) அறுவடையின் போது யானைக்கு சோறு வழங்கப்பட வேண்டும்
D) வரி வசூல் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.
விளக்கம்: ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். எனவே அறிவுடைய அரசன் மக்களின் நிலையறிந்து வரி பெற வேண்டும் என்று இப்பாடல் வழியே உணர்த்தப்படுகிறது.
89) ஆறுநாட்டான் குன்றிலிருந்து எல்லா பிராம்மி கல்வெட்டுகளையும் ஒன்றொன்றாகப் படியெடுத்து எப்போது ஐராவதம் மகாதேவன் ஒரு சிறு குறிப்பை வெளியிட்டார்?
A) 1965 மார்ச்
B) 1966 மார்ச்
C) 1965 பிப்ரவரி
D) 1966 பிப்ரவரி
விளக்கம்: ஆறுநாட்டான் குன்றிலிருந்து எல்லா பிராம்மிக் கல்வெட்டுகளையும் ஒன்றொன்றாகப் படியெடுத்து, அதை 1965ஆம் ஆண்டு ஹிந்து தினத் தாளில் புகளுர்க் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு என்ற பெயரில் வெளியிட்டார் ஐராவதம் மகாதேவன்.
90) பொருத்துக.
அ. தமித்து – 1. ஒலிக்குறிப்பு
ஆ. புக்கு – 2. தனித்து
இ. கல் – 3. புகுந்து
ஈ. காய் நெல் – 4. விளைந்த நெல்
A) 1, 2, 3, 4
B) 1, 3, 2, 4
C) 3, 2, 1, 4
D) 2, 3, 1, 4
விளக்கம்: தமித்து – தனித்து
புக்கு – புகுந்து
கல் – ஒலிக்குறிப்பு
காய் நெல் – விளைந்த நெல்.
91) பண்டையத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்வது எந்நூல்?
A) பரிபாடல்
B) திருக்குறள்
C) தொல்காப்பியம்
D) புறநானூறு
விளக்கம்: பண்டையத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்வது புறநானூறு. இது முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
92) கூற்று: ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
காரணம்: தொல்லியலிலும், எழுதியலிலும் இருந்த ஆர்வம்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
93) தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. இதனை பக்குவமாக சொல்லும் நூல் எது?
A) நான்மணிக்கடிகை
B) நாலடியார்
C) கார்நாற்பது
D) இனியவை நாற்பது
விளக்கம்: உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக்கொண்டால் போதும். தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு. நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூ சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” – நாலடியார் (139)
94) ஓய்வு பற்றி வெ.இறையன்பு கூறும் கூற்றுகளை ஆராய்க
1. மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கியபோது உருவானது.
2. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு. அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது
3. விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைக் செய்தபோது, அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
4. ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 1, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கியபோது உருவானது.
2. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு. அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது
3. விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைக் செய்தபோது, அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
4. ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
95) குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி கீழ்க்காணும் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) சிலப்பதிகாரம்
B) புறநானூறு
C) பட்டினப்பாலை
D) பதிற்றுப்பத்து
விளக்கம்: உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
96) “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி” – என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) பதிற்றுப்பத்து
C) பரிபாடல்
D) பட்டினப்பாலை
விளக்கம்: காவிரிப் பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம்போல, கடல் வழியே வேறு நாடுகளிலிருந்து மரக்கலங்களில் வந்து பொருட்களை இறக்குமதி செய்தும், நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது என்ற செய்தியை மேற்காணும் பட்டினப்பாலை பாடல் மூலம் அறியலாம்.
97) தமிழ்நாட்டு வட எல்லை என்ற நூலை எழுதியவர் யார்?
A) மு.வரதராசனார்
B) மா.பொ.சிவஞானம்
C) மா.இராசமாணிக்கனார்
D) சிங்கார வேலனார்
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும் உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட மா.இராசமாணிக்கனார் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
98) ஐராவதம் மகாதேவனுக்கு கல்வெட்டு பற்றி இரு ஆசைகள் இருந்தன. அவை எவை?
A) பொருள் விளங்கவில்லை என்று அறிஞர்களால் படிக்காமல் இருந்த கல்வெட்டுகளை படிக்கும் முறையை கண்டுபிடித்தல்
B) சங்ககாலத் தமிழ் மன்னர்களைப் பற்றிய புறச்சான்றுகளை கண்டுபிடித்தல்
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: கல்வெட்டு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, ஐராவதம் மகாதேவனுக்கு இரு ஆசைகள் இருந்தன. ஒன்று, பொருள் விளங்கவில்லை என்று அறிஞர்களால் அநேகமாகக் கைவிடப்பட்டிருந்த தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சரிவர வாசிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும். மற்றொன்று, சங்ககாலத் தமிழ் மன்னர்களைப் பற்றிய எவ்விதமான புறச்சான்றுகளுமே தமிழகத்தில் கிடைக்கவில்லை என்ற குறை நீங்குமாறு அவர்களுடைய பெயர்களையோ குறிப்புகளையோ கல்வெட்டுகளில் காணவேண்டும் என்பனவாகும்.
99) பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் – இவ்வரியில் பரிவு என்ற சொல்லின் எதிர்ச்சொல் பொருள் என்ன?
A) பிரிவின்மை
B) வரியின்மை
C) கெடுதலின்மை
D) அன்பின்மை
விளக்கம்: பரிவு – அன்பு. இதன் எதிர்ச்சொல் அன்பின்னை ஆகும். முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு வரி திரட்ட கூடாது என்பது மேற்காணும் புறநானூறு வரியின் பொருளாகும்.
100) பிசிராந்தையார் பற்றிய கூற்றை ஆராய்க
1. பிசிர் என்பது சோழ நாட்டிலுள்ள ஒர் ஊரின் பெயர் ஆகும்
2. ஆந்தையார் என்பவர் இவரின் இயற்பெயர் ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் புறநானூற்றின் 184-ஆம் பாடலை இயற்றியவர் பிசிராந்தையார். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் ஆகும்.
101) பொருத்துக.
அ. செறு – 1. தழைக்கும்
ஆ யாத்து – 2. முறைமை
இ. நந்தும் – 3. வயல்
ஈ. வரிசை – 4. சேர்த்து
A) 3, 4, 2, 1
B) 3, 4, 1, 2
C) 2, 3, 4, 1
D) 2, 3, 1, 4
விளக்கம்: செறு – வயல்
யாத்து – சேர்த்து
நந்தும் – தழைக்கும்
வரிசை – முறைமை
102) கடலைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது எது?
A) தென்நீர்
B) பௌவம்
C) முன்னீர்
D) வரி
விளக்கம்: கடலைக் குறிக்கும் சொற்கள்:
1. அரலை 2. அரி 3. அலை 4. அழுவம் 5. அளம்
6. அளக்கர் 7. ஆர்கலி 8. ஆழி 9. ஈண்டுநீர் 10. உவரி
11. திரை 12. பானல் 13. பெருநீர் 14. சுழி 15. நீராழி
16. புணர்ப்பு 17. தென்நீர் 18. பௌவம் 19. முந்நீர் 20. வரி
21. ஓதம் 22. வலயம்.
103) கானல் வரி என்பது தமிழ்நதியின் எவ்வகையான நூல்?
A) சிறுகதை
B) கவிதை
C) குறுநாவல்
D) நாவல்
விளக்கம்: நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – கவிதைகள்.
கானல் வரி – குறுநாவல்
ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் – நாவல்
104) “நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணிமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே” என்ற வரிகளை எழுதியவர் யார்
A) நா.காமராசன்
B) பூரணி
C) தமிழ்நதி
D) இராசமாணிக்கனார்
விளக்கம்: “மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குக் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணிமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே” – பூரணி.
105) மதுரைக்கு அருகில் உள்ள மாங்குடி கல்வெட்டு கீழ்க்காணும் எந்த மன்னனைப் பற்றியது?
A) குலசேகரப் பாண்டியன்
B) நெடுஞ்செழியன்
C) சுந்தரபாண்டியன்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: 1965-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்ககாலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ.ஆ) 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன் – ஐராவதம் மகாதேவன்.
106) புகளுர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் எத்தனையாவது பாட்டுடைத் தலைவர்கள் என்று ஐராவதம் மகாதேவனின் மாணவர் கூறினார்?
A) 6-வது, 7-வது, 8-வது
B) 7-வது, 8-வது, 10-வது
C) 7-வது, 8-வது, 9-வது
D) 5-வது, 6-வது, 7-வது
விளக்கம்: புகளுர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6-வது, 7-வது, 8-வது பாட்டுடைத் தலைவர்கள் என்று ஐராவதம் மகாதேவன் எழுதியிருந்தார். இதை மறுத்து இம்மன்னர்கள் 7-வது, 8-வது, 9-வது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார் மாணவர் ஒருவர். அதைச் சரியென்று உணர்ந்த மகாதேவன் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் அறிஞர்கள் முன்னிலையில் அதைக்குறிப்பிட்டு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாக் கூறினார்.
107) தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்று அழைக்காமல் ________ என்று அழைக்க வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் வேண்டுகோள் விடுக்கிறார்.
A) பழந்தமிழ்
B) செந்தமிழ்
C) முதுதமிழ்
D) நற்றமிழ்
விளக்கம்: தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடித்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் ஐராவதம் மகாதேவன்.
108) தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் யார் காலத்திய பிராம்மி வரிவடித்திலிருந்து முரண்பாடுகள் தெரிய வருகின்றன?
A) அசோகர்
B) சந்திர குப்த மௌரியர்
C) சமுத்திர குப்தர்
D) கனிஷ்கர்
விளக்கம்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராம்மி வரிவடித்திலிருந்து முரண்பாடுகள் தெரிய வருகின்றன. இவற்றை ஐராவதம் மகாதேவன் தன்னுடை ஆய்வு நூலான ‘எர்லி தமிழ் எபிகிராபி’ யில் தெளிவுபடுத்துகிறார்.
109) முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் நூல் எது?
A) பரிபாடல்
B) திருக்குறள்
C) தொல்காப்பியம்
D) புறநானூறு
விளக்கம்: பண்டையத தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்வது புறநானூறு. இது முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
110) ஆட்களற்ற பொழுதில் உலவிய
யானைகளின் எச்சத்திலிருந்து
எழுந்திருக்கலாம் இச்செடி – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) தமிழ்நதி
B) தமிழ்ஒளி
C) ஐராவதம் மகாதேவன்
D) முகமது ராவுத்தர்
விளக்கம்: ஆட்களற்ற பொழுதில் உலவிய
யானைகளின் எச்சத்திலிருந்து
எழுந்திருக்கலாம் இச்செடி – தமிழ்நதி
இக்கவிதை ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
111) பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் – இவ்வரியில் நச்சின் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நசுக்கினால்
B) விஷம்
C) விரும்பினால்
D) ஒலிக்குறிப்பு
விளக்கம்: நச்சின் – விரும்பினால். முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு வரி திரட்ட கூடாது என்பது மேற்காணும் புறநானூறு வரியின் பொருளாகும்.
112) அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – என்ற புறநானூற்று வரியில் நெறி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) வரி
B) அறிவு
C) வழி
D) முறை
விளக்கம்: நெறி – முறை. அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு செழிப்படையும் என்பது மேற்காணும் புறநானூற்று வரியின் பொருளாகும்.
113) ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியளாரும் (நிருவாகத் திறன்) என்ற சுவரோவியம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) திருநெல்வேலி
B) தூத்துக்குடி
C) சிவகங்கை
D) கரூர்
விளக்கம்: ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும் (நிருவாகத் தின்) 17-ஆம் நூற்றாண்டு சுவரோவியம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது.
114) மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்ககாலப் பாண்டிய மன்னாகிய நெடுஞ்செழியனுடையவை என்று எப்போது ஐராவதம் மகாதேவன் கண்டுபிடித்தார்?
A) 1965 நவம்பர் 3
B) 1967 நவம்பர் 3
C) 1969 நவம்பர் 3
D) 1971 நவம்பர் 3
விளக்கம்: 1965-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்ககாலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ.ஆ) 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன் – ஐராவதம் மகாதேவன்
115) ஐராவதம் மகாதேவன் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இவர் எழுதிய கட்டுரை “கல்வெட்டு” என்னும் இதழில் வெளிவந்தது.
2. இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுதியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார்.
3. தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
4. சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
A) 1, 2 சரி
B) 2, 4 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் எழுதிய கட்டுரை “கல்வெட்டு” என்னும் இதழில் வெளிவந்தது.
2. இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுதியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார்.
3. தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
4. சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
116) கடலைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது எது?
A) பெருநீர்
B) சுழி
C) நீராலி
D) புணர்ப்பு
விளக்கம்: கடலைக் குறிக்கும் சொற்கள்:
1. அரலை 2. அரி 3. அலை 4. அழுவம் 5. அளம்
6. அளக்கர் 7. ஆர்கலி 8. ஆழி 9. ஈண்டுநீர் 10. உவரி
11. திரை 12. பானல் 13. பெருநீர் 14. சுழி 15. நீராழி
16. புணர்ப்பு 17. தென்நீர் 18. பௌவம் 19. முந்நீர் 20. வரி
21. ஓதம் 22. வலயம்.
117) புகளுர் கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று ஐராவதம் மகாதேவன் கண்டறிந்தார்?
A) கி.மு. 2
B) கி.பி. 2
C) கி.மு. 4
D) கி.பி. 4
விளக்கம்: ஐராவதம் மகாதேவன் புகளுரிலுள்ள ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகை கல்வெட்டை 1965-ஆம் ஆண்டு ஆராயத் தொடங்கினார். இக்கல்வெட்டு கி.பி. (பொ.ஆ). இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கண்டறிந்தார்.
118) தொன்மங்களைக் கொண்டு பத்மவியூகம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A) ஜெயமோகன்
B) எஸ்ராமகிருஷ்ணன்
C) அழகிரிசாமி
D) புதுமைப்பித்தன்
விளக்கம்: ஜெயமோகன் – பத்மவியூகம் (சிறுகதை)
எஸ்.ராமகிருஷ்ணன் – அரவான் (நாடகம்)
புதுமைப்பித்தன் – சாபவிமோசனம், அகலிகை (கதைகள்)
அழகிரிசாமி – விட்டகுறை, வெந்தழலால் வேகாது (சிறுகதை)
119) உ.வே.சா எப்போது புறநானூற்றை அச்சில் பதிப்பித்தார்?
A) 1890
B) 1894
C) 1897
D) 1898
விளக்கம்: பண்டையத் தமிழகத்தின் அரசியல், சமூக, வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழும் புறநானூற்றை 1894-இல் உ.வே.சா அச்சில் பதிப்பித்தார்.
120) புறநானூற்றின் 184-ஆவது பாடலை எழுதியவர் யார்?
A) ஒளவையார்
B) பிசிராந்தையார்
C) நற்கிள்ளி
D) நக்கண்ணையார்
விளக்கம்: புறம், புறப்பாட்டு என வழங்கப்படும் புறநானூற்றின் 184-ஆம் பாடல் பிசிராந்தையாரால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் அப்போதைய பாண்டிய மன்னன், அறிவுடை நம்பிக்கு அறிவுரை கூறும்படி அமைந்துள்ளது.
121) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) வெகுசன இலக்கியம்
B) முச்சந்தி இலக்கியம்
C) குஜிலி நூல்கள்
D) சிறிய எழுத்துப் புத்தகங்கள்
விளக்கம்: மக்கள் இயல்பாகத் தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். பல்வேறு பொருள்கள் பற்றிய இவ்வெளிப்பாடுகள் மெல்லிய தாளில், பெரிய எழுத்தில், மலிவான அச்சில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்டன. அவை,
1. வெகுசன இலக்கியம்
2. முச்சந்தி இலக்கியம்
3. குஜிலி நூல்கள்
4. காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள்
5. பெரிய எழுத்துப் புத்தகங்கள்
6. தெருப்பாடல்கள்.
122) ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற பாடலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) முகம்மது ராவுத்தர்
D) ராசமாணிக்கனார்
விளக்கம்: ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற ‘தேயிலைத் தோட்டப் பாட்டு’ என்னும் நூலை எழுதியவர் முகம்மது ராவுத்தர் ஆவார்.
123) சிந்துவெளி நாகரிகம் பற்றி தமிழில் முதன்முதலில் ‘மொஹொஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
A) ஐராவதம் மகாதேவன்
B) திரு.நீலகண்ட சாஸ்திரி
C) கே.வி.சுப்பிரமணியனார்
D) மா.இராசமாணிக்கனார்
விளக்கம்: சிந்துவெளி நாகரிகம் பற்றி தமிழில் முதன்முதலில் ‘மொஹொஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர் மா.இராசமானிக்கனார் ஆவார்.
124) இரவில் விண்மீன் கசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்
இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன் – என்ற வரிகளை பாடியவர் யார்?
A) வாணிதாசன்
B) நா.காமராசன்
C) தமிழ்நதி
D) சிற்பிபாலசுப்பிரமணியம்
விளக்கம்: பூமிச்சருகாம் பாலையை
முத்துப்பூத்த கடலாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் கசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்
இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன் – நா.காமராசன்
125) புதிய தமிழகம் என்னும் நூலை எழுதியவர் யார்?
A) மு.வரதராசனார்
B) மா.பொ.சிவஞானம்
C) மா.இராசமாணிக்கனார்
D) சிங்கார வேலனார்
விளக்கம்: மா.இராசமாணிக்கனார் எழுதிய நூல்கள்:
1. புதியதமிழகம்
2. சோழர் வரலாறு
3. பல்லவர் வரலாறு
4. பெரியபுராண ஆராய்ச்சி
5. தமிழ்நாட்டு வட எல்லை
6. பத்துப்பாட்டு ஆராய்ச்சி.
126) புகளுரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளைப் கண்டறியும் வாய்ப்பு ஐராவதம் மகாதேவனுக்கு கிடைத்தது. இது எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) திருச்சி
B) கரூர்
C) வேலூர்
D) தூத்துக்குடி
விளக்கம்: கரூரை அடுத்த புகளுரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளைப் கண்டறியும் வாய்ப்பு ஐராவதம் மகாதேவனுக்கு கிடைத்தது.
127) பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே” – என்ற வரிகள் புறநானூற்றின் எத்தனையாவது பாடல் ஆகும்?
A) 100
B) 150
C) 210
D) 400
விளக்கம்: “பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே” – புறம் -400.
புறநானூற்றின் இறுதிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப்பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்து மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார். இதுவே மேற்காணும் பாடலாகும்.
128) பலர் வர்த்தகம் செய்யும்போது, ‘இலாபம் கிடைக்கிறதே’ என்ற மிதப்பில் தன்னைப் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். வெற்றி வரத் தொடங்கும்போதுதான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A) இராசமாணிக்கனார்
B) அப்துல்கலாம்
C) வெ.இறையன்பு
D) தமிழ்நதி
விளக்கம்: பலர் வர்த்தகம் செய்யும்போது, ‘இலாபம் கிடைக்கிறதே’ என்ற மிதப்பில் தன்னைப் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். பிறகு ‘நாம் தொட்டதெல்லாம் துலங்கும்’ எனத் தெரியாத துறைகளில் இறங்குவார்கள். ஒருநாள் கன்னத்தில் கைவைத்துக் கலங்குவார்கள். வெற்றி வரத் தொடங்கும்போதுதான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலக்கியத்தில் மேலாண்மை என்ற தனது நூலின் மூலம் வெ.இறையன்பு அவர்கள் குறிப்பிடுகிறார்.
129) கூற்றுகளை ஆராய்க
1. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு ‘மடியின்மை’ என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார்.
2. மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கியபோது உருவானது – வெ.இறையன்பு
3. ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் – காலமறிதல்
4. கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி பேசி வியக்கிறார் – அகநானூறு
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி பேசி வியக்கிறார் – புறநானூற்றின் 400-வது பாடல்
130) “அனுபவசாலிகள் செக்குமாடாக இருப்பார்கள். ஆனால் நமக்குத் தேவை ஜல்லிக்கட்டுக் காளைகள்” – என்று தனது இலக்கியத்தில் மேலாண்மை என்ற புத்தகத்தில் கூறியவ்ர் யார்?
A) பாரதியார்
B) விவேகானந்தர்
C) அப்துல்கலாம்
D) வெ.இறையன்பு
விளக்கம்: மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிந்துவிடுவதல்ல. நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஏற்கனவே தயாரித்து வைத்த அறிவுக் கூறுகளைக் கொண்டு நாம் புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது. அதனால்தான் இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் “முன் அனுபவம்” என்பது எதிர்மறையாகிவிட்டது. அனுபவசாலிகள் செக்குமாடாக இருப்பார்கள். ஆனால் நமக்குத் தேவை ஜல்லிக்கட்டு காளைகள் – வெ.இறையன்பு (இலக்கியத்தில் மேலாண்மை).
131) புக்க என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) வினையெச்சம்
B) பெயரெச்சம்
C) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: புக்க – பெயரெச்சம்.
புக்க என்றால் புகுந்த என்று பொருள். இங்கு சொல்லானது முடிவு பெறவில்லை. தொக்கி நிற்கிறது.
இதனுடன் நாம் ஒரு பெயர்ச்சொல்லை சேர்ப்போம். உதாரணமாக வீடு என்ற சொல்லை சேர்த்துப் பார்க்கலாம்.
புகுந்த வீடு. இப்போது சொல் முழுமை பெற்று பொருளை தருகிறது. இவ்வாறு முழுமை பெறாமல் இருக்கும் சொல்லுடன் ஒரு பெயர்ச்சொல்லை சேர்க்கும்போது முழுமைபெற்றால், அது பெயரெச்சம் எனப்படும்.
132) இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து, சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதியவர் யார்?
A) பாலசந்தர்
B) பம்மல் சம்பந்தனார்
C) புதுமைப்பித்தன்
D) ஜெயகாந்தன்
விளக்கம்: இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்துப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதினார்.
133) பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
A) மு.வரதராசனார்
B) ஐராவதம் மகாதேவன்
C) மா.இராசமாணிக்கனார்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும் உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
134) திருவிளையாடற்புராணத்துச் சிவபெருமான், நக்கீரரைக் கொண்டு அழகிரிசாமி, “விட்டகுறை”, “வெந்தழலால் வேகாது” ஆகிய சிறுகதைகளை எழுதியவர் யார்?
A) கி.ராஜநாராயணன்
B) புதுமைப்பித்தன்
C) அழகிரிசாமி
D) ஜெயகாந்தன்
விளக்கம்: திருவிளையாடற்புராணத்துச் சிவபெருமான், நக்கீரரைக் கொண்டு அழகிரிசாமி, “விட்டகுறை”, “வெந்தழலால் வேகாது” ஆகிய சிறுகதைகளை எழுதியவர் அழகிரிசாமி.
135) பிசிராந்தையார் என்னும் பெயரில் பிசிர் என்பது எந்த நாட்டிலிருந்து பெயர் ஆகும்?
A) சேர நாடு
B) சோழ நாடு
C) பாண்டிய நாடு
D) பல்லவ நாடு
விளக்கம்: புறநானூற்றின் 184-ஆம் பாடலை இயற்றியவர் பிசிராந்தையார். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்து ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் ஆகும்.
136) தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க
A) உருவாக்கப்பட்டு இறுகி விட்ட வடிவங்கள்
B) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது
C) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்
D) விளங்காத கருத்துக்களைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
விளக்கம்: தொன்மம் என்பது உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிங்கள்
பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவதன் மூலம் மக்களுக்கு எளிதில் புரியும்.
விளங்காத கருத்துக்களையும் தொன்மம் மூலம் எளிதில் விளங்க வைக்க முடியும்.
137) பொருத்துக (இந்தியத் தொன்மம் – கிரேக்கத் தொன்மம்)
அ. சூரியன் – 1. லூனஸ்
ஆ. சந்திரன் – 2. சோல்
இ. விஸ்வகர்மன் – 3. வன்கன்
ஈ. கணேசன் – 4. ஜோனஸ்
A) 2, 1, 3, 4
B) 2, 1, 4, 3
C) 1, 2, 3, 4
D) 2, 3, 1, 4
விளக்கம்: சூரியன் – சோல்
சந்திரன் – லூனஸ்
விஸ்வகர்மன் – வன்கன்
கணேசன் – ஜோனஸ்
138) கூற்று: ஐராவதம் மகாதேவனின் ஆய்வு இலக்கியத்தையும், கல்வெட்டையும் ஒருங்கிணைத்தது
காரணம்: பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளுர்க் கல்வெட்டில் இடம்பெற்றதை இவர் கண்டுபிடித்தார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளுர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை ஐராவதம் மகாதேவன் கண்டுபிடித்தார். இது இலக்கியத்தையும், கல்வெட்டு ஆய்வையும் ஒருங்கிணைத்தார்.
139) யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக எந்த துறைமுகம் இருந்தததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது?
A) காவிரிப் பூம்பட்டினம்
B) முசிறி
C) கொற்கை
D) மாமல்லபுரம்
விளக்கம்: சங்க இலக்கியங்களின் வாயிலாக முசிறி மிகப்பெரிய துறைமுகமாக, யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருந்ததை அறிய முடிகிறது.
140) கூற்றுகளை ஆராய்க
.1. “பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே” – புறம் – 400
2. “வையகம் முழுவதும் வறிஞர் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” – கம்பராமாயணம்
3. “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டி வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்” – நன்னெறி
4. “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி” – பட்டினப் பாலை
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டி வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்” – அறநெறிச்சாரம்
141) எந்த ஆண்டு மா.இராசமாணிக்கனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது?
A) 2006-2007
B) 2007-2008
C) 2008-2009
D) 2009-2010
விளக்கம்: 2006-2007-ஆம் ஆண்டு மா.இராசமாணிக்கனாரின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுமையாக்கப்பட்டன. இவரே சங்ககாலம் தொடங்கி பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர் ஆவார்.
142) இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் எந்த ஆண்டுகளின் தொகுதியில் புகளுர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலில் கிடைக்கின்றன?
A) 1925-26
B) 1926-27
C) 1927-28
D) 1928-29
விளக்கம்: இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927-28 ஆண்டுகளின் தொகுதியில் புகளுர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலில் கிடைக்கின்றன.
143) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் – என்ற குறட்பாவில் ஞாலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) போர்க்கருவிகள்
B) உலகம்
C) அறிவு
D) போர் முறைகள்
விளக்கம்: ஞாலம் – உலகம்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் – திருக்குறள் (484)
ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.
144) எந்த ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் கைத்தறித் துறை இயக்குநர் ஆகப் பணியாற்றினார் ஐராவதம் மகாதேவன்?
A) 1961
B) 1962
C) 1965
D) 1963
விளக்கம்: 1962-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் கைத்தறித் துறை இயக்குநர் ஆகப் பணியாற்றினார் ஐராவதம் மகாதேவன். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். அதே நேரத்தில் ஓய்வு கிடைக்கும்பொழுது மலைச்சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சேகரிக்கும் சொந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
145) பொருத்துக.
அ. வலிமை – 1. பீமன்
ஆ. நீதி – 2. மனுநீதிச் சோழன்
இ. வள்ளல் – 3. கர்ணன்
ஈ. அறம் – 4. தருமன்
A) 1, 2, 3, 4
B) 1, 2, 4, 3
C) 3, 2, 1, 4
D) 4, 3, 2, 1
விளக்கம்: அறத்திற்கு தருமன், வலிமைக்குப் பீமன், நீதிக்கு மனுநீதிச் சோழன், வள்ளல் தன்மைக்குக் கர்ணன் என்று பலவாறு தொன்மக் கதைமாந்தர்களைப் பண்புக் குறியீடுகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
146) “கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்” என்பது எந்த இலக்கியத்தில் இருந்து நாம் தொன்மமாக பயன்படுத்தி வருகிறோம்?
A) மகாபாரதம்
B) இராமாயணம்
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
விளக்கம்: “கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்” என்பது இராமாயணத்தில் பர்ணசாலையைவிட்டு, சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத் தொடராகும்.
147) அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) அறிஞர் அண்ணா
C) ஐராவதம் மகாதேவன்
D) வெ.இறையண்பு
விளக்கம்: வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனுக்கு, ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்று வெ.இறையன்பு தனது இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலில் கூறியுள்ளார்.
148) Mobile Banking என்பதன் தமிழாக்கம் என்ன?
A) தொலைபேசி வழி வங்கி முறை
B) அலைபேசி வழி வங்கி முறை
C) கைபபேசி வழி வங்கி முறை
D) தொலைதொடர்பு வங்கி முறை
விளக்கம்: Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை.
149) ஆதன் என்ற சொல் கீழ்க்காணும் யாரை குறிக்கும்?
A) பல்லவர்கள்
B) பாண்டியர்கள்
C) சோழர்கள்
D) சேரர்கள்
விளக்கம்: புகளுர் குன்றின் மீதுள்ள குகைளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டில் ஆதன் என்ற சொல் காணப்படுகிறது. இது சேர மன்னர்கள் பற்றியது.
150) சரியான தொடரை தேர்வு செய்க
A) வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
B) கோவிந்தன் குடியிருக்க சுவர் எழுப்பி கூரை அமைத்தார்
C) வனவிலங்கு காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக்குட்டியும் கண்டேன்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: வாழைத் தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.
கோவிந்தன் வசிக்க சுவர் எழுப்பி சுரை மேய்ந்தார்
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக்கன்றும் கண்டேன்
151) கூற்று: புகளுர் ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் காணப்படும் கல்வெட்டுகள் சோழர் காலத்தை சேர்ந்தவையாகும்.
காரணம்: “ஆதன்” என்ற சொல் இக்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: கரூர் மாவட்டம், புகளுர் அருகிலுள்ள ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம். காரணம் “ஆதன்” என்ற சொல் இக்கல்வெட்டில் காணப்படுகிறது.
152) பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் எந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை ஐராவதம் மகாதேவன் கண்டுபிடித்தார்?
A) குடுமியான்
B) உத்திரமேரூர்
C) புகளுர் கல்வெட்டு
D) அத்திரம்பாக்கம் கல்வெட்டு
விளக்கம்: பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளுர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை ஐராவதம் மகாதேவன் கண்டுபிடித்தார். இது இலக்கியத்தையும், கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது.
153) கீழ்க்காண்பனவற்றில் எது ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய நூல்?
A) தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்
B) முள்ளும் மலரும்
C) முச்சந்தி இலக்கியம்
D) வெள்ளை இருட்டு
விளக்கம்: தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்
வெள்ளை இருட்டு – இன்குலாப்
முள்ளும் மலரும் – உமா சந்திரன்
முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வேங்கடாசலபதி
154) பொருத்துக
அ. தப – 1. விரும்பினால்
ஆ. பரிவு – 2. கெட
இ. நச்சின் – 3. அன்பு
ஈ. பிண்டம் – 4. வரி
A) 2, 1, 3, 4
B) 2, 3, 1, 4
C) 1, 2, 3, 4
D) 3, 1, 2, 4
விளக்கம்: தப – கெட
பரிவு – அன்பு
நச்சின் – விரும்பினால்
பிண்டம் – வரி
155) உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம் எது?
A) உண்டு
B) பிறந்து
C) வளர்ந்த
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: உண்டு, பிறந்து – வினையெச்சம்
வினையெச்சம் – முற்றுபெறாத சொல், ஒரு வினைச்சொல்லை சேர்க்கும் போது முழுமையான பொருளை தரும்.
வளர்ந்த – பெயரெச்சம்
பெயரெச்சம் – முற்றுபெறாத சொல், ஒரு பெயர்ச்சொல்லை சேர்க்கும் போது முழுமையான பொருளை தரும்
156) “யானை புக்க புலம் போல” – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் எது?
A) தனக்குப் பயன்படும், பிறருக்குப் பயன்படாது
B) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
C) பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
D) தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
விளக்கம்: யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்கும், அது போல மக்களின் நிலையறியாமல் வரி வசூல் செய்யும் அரசன் தானும் பயனடைய மாட்டான், நாட்டு மக்களும் துன்புறுவர்.
157) மா. இராசமாணிக்கனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியை பயின்றார்.
2. இவரின் காலம் – 1907- 1967
3. தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
4. மதுரைத் தமிழச்சங்கத்தார் நடத்திய பற்றி இறுதத் தேர்வில் தமிழ்த்தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து வளர்ந்தார்.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியை பயின்றார்.
2. இவரின் காலம் – 1907- 1967
3. தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
4. மதுரைத் தமிழச்சங்கத்தார் நடத்திய பற்றி இறுதித் தேர்வில் தமிழ்த்தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து வளர்ந்தார்.
158) கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
A) திரு.கே.வி.சுப்பிரமணியனார்
B) இரா.கிருஷ்ணமூர்த்தி
C) குடவாயில் பாலசுப்பிரமணியன்
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்பிரமணியன்
159) தமிழ்நதி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) இவர் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்
B) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்
C) புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்
D) புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது
விளக்கம்: தமிழ்நதி தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
160) தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும், பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள் – என்று தொன்மம் பற்றி கூறியவர் யார்?
A) பேராசிரியர் உரை
B) இளம்பூரணர் உரை
C) பரிமேலழகர் உரை
D) நாதமுனி உரை
விளக்கம்: தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும், பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள் – இளம்பூரணர் உரை
‘தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன’ – பேராசிரியர் உரை
161) ‘தொன்மம்’ என்பதன் பொருள் என்ன?
A) பழங்கதை
B) பழங்காலம்
C) பழைய வழக்கம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: தொன்மம் என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ‘தொன்மை’ என்பதுவும் ஒன்றாகும். காலம்காலமாக உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிவங்களும் ‘தொன்மங்களே’.
162) ஒளவைக்கு அரிய நெல்லிக்கனியை தந்தவர் யார்?
A) பாரி
B) நள்ளி
C) பேகன்
D) அதியமான்
விளக்கம்: அதியமான் என்பவர் தகடூர் (இன்றைய தர்மபுரி)-யை ஆட்சி செய்தவர். இவர் ஒளவையை ஆதரித்தவர். இவர் அவ்வைக்கு அரிய நெல்லிக்கனியை தந்தார்.
163) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?
A) ஜெயமோகன் – பத்மவியூகம்
B) எஸ்ராமகிருஷ்ணன் – அரவான்
C) அழகிரிசாமி – விட்டகுறை
D) புதுமைப்பித்தன் – வெந்தழலால் வேகாது
விளக்கம்: ஜெயமோகன் – பத்மவியூகம் (சிறுகதை)
எஸ்.ராமகிருஷ்ணன் – அரவான் (நாடகம்)
புதுமைப்பித்தன் – சாபவிமோசனம், அகலிகை (கதைகள்)
அழகிரிசாமி – விட்டகுறை, வெந்தழலால் வேகாது (சிறுகதை)
164) கீழ்க்காணும் யாரால் நெறிப்படுத்தப்பட்ட மா.இராசமாணிக்கனார் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?
A) வே.உமாமகேசுவரன்
B) ந.மு.வேங்கடசாமி
C) உ.வே.சாமிநாதர்
D) மேற்காணும் அனைவரும்
விளக்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி ஆகியோராலும் உ.வே.சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
165) “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்” – என்ற வரிகள் கீழ்க்காணும் யாருடன் தொடர்புடையது?
A) இராமன்
B) இராவணன்
C) வாலி
D) தசரதன்
விளக்கம்: மேற்காணும் வரிகள் கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர் மேற்காணும் பாடல் மூலம் விளக்கியுள்ளார். “வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான்” என்று குறிப்பிடுகிறார்.
166) யார் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அறிவுறுத்துல் செவியுறிவுறூஉ என்னும் துறையாகும்?
A) புலவர்
B) அரசன்
C) மகன்
D) பெற்றோர்
விளக்கம்: செவியுறிவுறூஉ துறை – அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவர் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
167) தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ‘பிராம்மி’ வரிவடிவத்துடன் வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது இதில் பொருந்தாதது எது?
A) தமிழி
B) தரமிழி
C) திராவிடி
D) திராவிடா
விளக்கம்: தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ‘பிராம்மி’ வரிவடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
168) கூற்றுகளை ஆராய்க. (ஐராவதம் மகாதேவன்)
1. ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகையில் உள்ள கல்வெட்டு நான்கு நீண்ட வரிகளில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
2. யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
3. இக்கல்வெட்டின் இரண்டாவது வரியில் ‘கோ’ என்ற சொல் இருந்தது.
4. ‘பெருங்கடுங்கோன்’, ‘இளங்கடுங்கோ’, ‘இளங்கோ’ என்ற பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
A) 1, 2 சரி
B) 2, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகையில் உள்ள கல்வெட்டு நான்கு நீண்ட வரிகளில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
2. யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் ஏனைய பிராம்மிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் போலவே இருந்தது.
3. இக்கல்வெட்டின் இரண்டாவது வரியில் ‘கோ’ என்ற சொல் இருந்தது.
4. ‘பெருங்கடுங்கோன்’, ‘இளங்கடுங்கோ’, ‘இளங்கோ’ என்ற பெயர்கள் இடம் பெற்றிருந்தன
169) புதிய தமிழகம் என்னும் நூலில் மா.இராசமாணிக்கனார் வலியுறுத்திக் கூறுவது எதை?
A) தமிழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி வேண்டும்
B) தமிழகத்தில் புதிய தொழில்நுட்ப மேம்பாடு வேண்டும்
C) தமிழகத்தில் தமிழ் நூலாசிரியர்கள் வேண்டும்
D) வட எல்லையை தீர்மானிக்க வேண்டும்
விளக்கம்: அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே, முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலிலன்றிக் காண வேண்டும் – மா.இராசமாணிக்கனார் (புதியதமிழகம்)
170) தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர் யார்?
A) திரு.கே.வி.சுப்பிரமணியனார்
B) இரா.கிருஷ்ணமூர்த்தி
C) திரு.நீலகண்ட சாஸ்திரி
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: கோவையில் வசித்து வரும் திரு.கே.வி.சுப்பிரமணியனார் அவர்கள் தான் தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்.
171) தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப்பிழைகளை நீக்கி எழுதுக.
“வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன”
A) வாழைத்தோட்டத்தில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன
B) வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன
C) வாழைத் தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன
D) வாழைக்காட்டில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.
விளக்கம்: வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன என்பதே சரியான தொடராகும்.
172) தவறாக பொருந்தி யுள்ளதை தேர்வு செய்க (இந்தியத் தொன்மம் – கிரேக்கத் தொன்மம்)
A) துர்க்கை – ஜீனோ
B) சரஸ்வதி – மினர்வா
C) காமன் – இராஸ்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: துர்க்கை – ஜீனோ
சரஸ்வதி – மினர்வா
காமன் – இராஸ்
173) “மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குக் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று” – என்ற வரிகளை எழுதியவர் யார்
A) நா.காமராசன்
B) பூரணி
C) தமிழ்நதி
D) இராசமாணிக்கனார்
விளக்கம்: “மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குக் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணிமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே” – பூரணி.
174) புகளுரில் உள்ள ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகை கல்வெட்டை எப்போது ஐராவதம் மகாதேவன் ஆராயத் தொடங்கினார்?
A) 1965 பிப்ரவரி 1
B) 1965 பிப்ரவரி 28
C) 1965 பிப்ரவரி 15
D) 1965 பிப்ரவரி 20
விளக்கம்: கரூர் மாவட்டம், புகளுர் அருகிலுள்ள ஆறுநாட்டன் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருப்பதாகவும், அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதைச் சரிவரப் படிக்க முடியவில்லை என்றும், அதில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இக்கல்வெட்டை ஐராவதம் மகாதேவன் 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி ஆராயத் தொடங்கினார்.
175) தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள பிராம்மி கல்வெட்டுகளில் வருவதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று நிறுவியவர் யார்?
A) திரு.கே.வி.சுப்பிரமணியனார்
B) இரா.கிருஷ்ணமூர்த்தி
C) திரு.நீலகண்ட சாஸ்திரி
D) ஐராவதம் மகாதேவன்
விளக்கம்: கோவையில் வசித்து வரும் திரு.கே.வி.சுப்பிரமணியனார் அவர்கள் தான் தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர். அக்கட்வெட்டுக்களில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள பிராம்மி கல்வெட்டுகளில் வருவதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று நிறுவியவர்.
176) எவருடையவோ
சப்பாத்தின் பின்புறம்
விதையாக ஒட்டிக் கிடந்து
உயிர் தரித்திருக்கலாம் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) தமிழ்நதி
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) சுரதா
D) முகம்மது இராவுத்தர்
விளக்கம்: எவருடையவோ
சப்பாத்தின் பின்புறம்
விதையாக ஒட்டிக் கிடந்து
உயிர் தரித்திருக்கலாம் – தமிழ்நதி
இக்கவிதை “அதன் பிறகும் எஞ்சும்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
177) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
A) Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
B) Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
C) Internet Banking – இணையவங்கி முறை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
Internet Banking – இணையவங்கி முறை
178) “முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குறுந்தொகை
B) அகநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
விளக்கம்: “முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” – நற்றிணை (25:1-2).
யானை சினங்கொண்டு பேராற்றலுடன் போர்செய்த சிறப்பினை, முருகனின் வீரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது சங்கஇலக்கியம்.
179) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது என்பது தமிழ்நதியின் எவ்வகையான நூல்?
A) சிறுகதை
B) கவிதை
C) குறுநாவல்
D) நாவல்
விளக்கம்: நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – சிறுகதைகள்
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – கவிதைகள்.
கானல் வரி – குறுநாவல்
ஈழம்: கைவிட்ட தேசம், பார்த்தீனியம் – நாவல்
180) அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது?
A) கடந்தகாலத் துயரங்களை
B) ஆட்களற்ற பொழுதை
C) பச்சையம் இழந்த நிலத்தை
D) அனைத்தையும்
விளக்கம்: தமிழ்நதியின் ‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் மேற்காணும் கருத்தை கூறியுள்ளார்.
181) ‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ – இவ்வரியில் விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் யார்?
A) சோழன் நெடுங்கிள்ளி, பாணர்
B) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
C) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
D) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
விளக்கம்: புறநானூற்றின் கடைசிப் பாடலில் கோவூர்கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியந்த செய்தியே மேற்காணும் பாடல் வரியாகும்.
182) பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தெரிவு செய்க
A) கர்ணன் தோற்றான் போ
B) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
C) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாய் இரு.
D) இந்தா போறான் தருமன்
விளக்கம்: நம் அன்றாடப் பேச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன. தொன்மக் கதைமாந்தர்களைப் பண்புக் குறியீடுகளாக மக்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே பழங்கால கதை மாந்தர்கள் மூலம் நாம் கருத்தை உணர்த்தும் போது எளிமையாக புரிந்து கொள்ளலாம். மேற்காணும் தொடர்களுள், வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி என்பது தொன்மம் அல்ல.
183) மரபு பிழையற்ற தொடரைக் காண்க
A) சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்
B) சிங்கக் குட்டியும் யானைக்கன்றும் கண்டேன்
C) சிங்கக் குருளையும் யானைக்குட்டியும் கண்டேன்
D) சிங்கக் குருளையும் யானைக் கன்றையும் கண்டேன்
விளக்கம்: சிங்கக் குருளையும் யானைக் கன்றையும் கண்டேன் என்பதே சரியான தொடராகும்.
184) மரபுப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
A) கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்
B) கோவிந்தன் வசிக்க சுவர் எழுப்பி கூரை அமைத்தார்
C) கோவிந்தன் வசிக்க சுவர் எழுப்பி கூரை மேய்ந்தார்
D) கோவிந்தன் வசிக்க சுவர் கட்டி கூரை மேய்ந்தார்
விளக்கம்: கோவிந்தன் வசிக்க சுவர் எழுப்பி கூரை மேய்ந்தார் என்பதே சரியான தொடராகும்.
185) பொருத்துக (கிரேக்கத் தொன்மம் – இந்தியத் தொன்மம்)
அ. சீயஸ்பிடர் – 1. கார்த்திகேயன்
ஆ. ஊரனாஸ் – 2. இந்திரன்
இ. டயானிசிஸ் – 3. பலராமன்
ஈ. மார்ஸ் – 4. வருணன்
A) 2, 4, 1, 3
B) 2, 4, 3, 1
C) 4, 2, 1, 3
D) 4, 2, 3, 1
விளக்கம்: இந்திரன் – சீயஸ்பிடர்
வருணன் – ஊரனாஸ்
பலராமன் – டயானிசிஸ்
கார்த்திகேயன் – மார்ஸ்
186) மரபு பிழையற்ற தொடரை காண்க
A) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்
B) முருகன் சேறு உண்டு பால் பருகினான்
C) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் பருகினான்
D) முருகன் சோறு உண்டு பால் குடித்தான்
விளக்கம்: முருகன் சோறு உண்டு பால் பருகினான் என்பதே சரியான தொடராகும்.
187) எந்த ஆண்டு 42-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற்றது?
A) 2015
B) 2019
C) 2018
D) 2017
விளக்கம்: 04.01.2019 முதல் 20.01.2019 வரை 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. “புத்தகங்களை வாசிப்போம், வாழ்க்கையை நேசிப்போம்” என்ற கொள்கையுடன் இப்புத்தக கண்காட்சி நடைபெற்றது.
188) வெ. இறையன்பு எந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றார்?
A) 1993
B) 1994
C) 1995
D) 1997
விளக்கம்: வெ.இறையன்பு, இ.ஆ.ப தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர். இவர் எழுதிய ‘வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல் 1995-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
189) “நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞசினுள்ளே
பாசமெனும் நிழலுண்டே?” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) நா.காமராசன்
B) பூரணி
C) தமிழ்நதி
D) இராசமாணிக்கனார்
விளக்கம்: “நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞசினுள்ளே
பாசமெனும் நிழலுண்டே?” – பூரணி
190) தவறாக பொருந்தியுள்ளதை தெரிவு செய்க
A) Debit Card – பற்று அட்டை
B) Demand Draft – செலுத்து வரைவோலை
C) Teller – விரைவுக் காசாளர்
D) Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
விளக்கம்: Debit Card – பற்று அட்டை
Demand Draft – கேட்பு வரைவோலை
Teller – விரைவுக் காசாளர்
Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
191) “உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) ஜெயகாந்தன்
C) அழகிரிசாமி
D) அப்துல்ரகுமான்
விளக்கம்: “உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?” – அப்துல்ரகுமான்.
தென்மங்கள் முரண்பட்டவை ஒன்றுசேர்ந்திருகிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன. மேற்காணும் பாடல் வரிகள் மூலம் தொன்மத்தைக் கொண்டு முரண்பாட்டை விளக்குகிறார் அப்துல் ரகுமான். இங்குப் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்கள்.
192) கடலைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது எது?
A) ஈண்டுநீர்
B) உவறி
C) திரை
D) பானல்
விளக்கம்: கடலைக் குறிக்கும் சொற்கள்:
1. அரலை 2. அரி 3. அலை 4. அழுவம் 5. அளம்
6. அளக்கர் 7. ஆர்கலி 8. ஆழி 9. ஈண்டுநீர் 10. உவரி
11. திரை 12. பானல் 13. பெருநீர் 14. சுழி 15. நீராழி
16. புணர்ப்பு 17. தென்நீர் 18. பௌவம் 19. முந்நீர் 20. வரி
21. ஓதம் 22. வலயம்.
193) தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – என்ற நூலை எழுதியவர் யார்?
A) செந்தீ நடராசன்
B) இன்குலாப்
C) உமா சந்திரன்
D) ஆ.இரா.வேங்டாசலபதி
விளக்கம்: தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்
வெள்ளை இருட்டு – இன்குலாப்
முள்ளும் மலரும் – உமா சந்திரன்
முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வேங்கடாசலபதி
194) புலம்பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி கீழ்க்காணும் யாருடையது?
A) இராசமாணிக்கனார்
B) தமிழ்ஒளி
C) வெ.இறையன்பு
D) தமிழ்நதி
விளக்கம்: தமிழ்நதி (கலைவாணி) இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாக் கொண்ட கவிஞர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். இவர் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். இவர் புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழியை உடையவர்.
195) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) நீர்க்குமிழி – கே.பாலசந்தர்
B) கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்பிரமணியன்
C) முள்ளும் மலரும் – உமா சந்திரன்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: நீர்க்குமிழி – கே.பாலசந்தர்
கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்பிரமணியன்
முள்ளும் மலரும் – உமா சந்திரன்
196) மா.இராசமாணிக்கனார் யாருடைய வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
விளக்கம்: ஆய்வு நெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்.