General Tamil

12th Tamil Unit 6 Questions

12th Tamil Unit 6 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.

1) காதை என்பதுடன் தொடர்புடையது எது?

A) மணிமேகலை

B) சூளாமணி

C) பாரதம்

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை (இரட்டை காப்பியங்கள்).

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

2) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) முத்தமிழ் காப்பியம்

B) பொதுமைக் காப்பியம்

C) பெண்ணிய காப்பியம்

D) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:

1. குடிமக்கள் காப்பியம்

2. மூவேந்தர் காப்பியம்

3. முத்தமிழ் காப்பியம்

4. புரட்சிக் காப்பியம்

5. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

6. பொதுமைக் காப்பியம்

7. ஒற்றுமைக் காப்பியம்

8. வரலாற்றுக் காப்பியம்

9. இரட்டைக் காப்பியம்

3) சரியான கூற்றை தெரிவு செய்க

A) போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது.

B) ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருக்கின்றன.

C) புள் ஆனது புல்லைத் தின்னாது

D) எதுவுமில்லை

விளக்கம்: களம் – போர்க்களம். கலம் – பாத்திரம்.

வலம் – வலதுப்புறம் வளம் – செழுமை.

புல் – ஒரு தாவரம் புள் – பறவை.

4) நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நன்னூல்

B) சிலப்பதிகாரம்

C) தொல்காப்பியம்

D) மணிமேகலை

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

நகை – சிரிப்பு.

மருட்கை – வியப்பு.

பெருமிதம் – பெருமை

உவகை – மகிழ்ச்சி

இளிவரல் – சிறுமை

வெகுளி – சினம்.

5) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பாவில் அரண் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அரண்மனை

B) சுற்றுச்சுவர்

C) பாதுகாப்பு

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: அரண் – பாதுகாப்பு. அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

6) ………………….பெருந்தோள் மடந்தை

தாது அவிழ் புரிகுழல்……. என்ற வரிகளில் மடந்தை என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) கோவலன்

B) கண்ணகி

C) மாதவி

D) கவுந்தி அடிகள்

விளக்கம்: மடந்தை – மாதவி. மாதவி அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

7) ஆடலும் பாடலும் அழகும் என்று இக்

கூறிய மூன்றின் ஒன்று குறைவுபடாமல்

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்…… என்ற வரிகளில் ஓர் ஈர்ஆறு ஆண்டு என்பதன் பொருள் என்ன?

A) 6 ஆண்டுகள்

B) 12 ஆண்டுகள்

C) 18 ஆண்டுகள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஓர் ஈர்ஆறு ஆண்டு – 12 ஆண்டுகள்.

ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல், ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

8) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் ஒரீஇ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) விலக்கி

B) செலுத்தி

C) தீமை

D) அறிவுடைமை

விளக்கம்: ஒரீஇ – விலக்கி. இதன் எதிர்ச்சொல் செலுத்தி. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

9) தாமரைஅணி என அழைக்கப்படும் விருது எது?

A) பத்ம ஸ்ரீ

B) பத்ம பூஷன்

C) பத்ம விபூஷண்

D) பாரதரத்னா

விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

1. ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.

2. கலைமாமணி விருது

3. பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)

4. பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

5. செவாலியர் விருது

6. தாதாசாகெப் பால்கே விருது.

10) சினிமா இரசனை – என்ற நூலை எழுதியவர் யார்?

A) செழியன்

B) இரா.காசிராசன்

C) அஜயன் பாலா

D) அம்ஷன் குமார்

விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1, 2, 3

செழியன் – உலக சினிமா 1, 2 பேசும் படம்

இரா.காசிராசன் – காப்பித்தமிழ்

அம்ஷன் குமார் – சினிமா இரசனை.

11) யாரை சிறந்த தூதுவர் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) கடமை அறிந்து செயல்படுவர்

B) காலம் அறிந்து செயல்படுபவர்

C) தக்க இடம் அறிந்து செயல்படுபவர்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து

எண்ணி உரைப்பான் தலை

மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.

12) 21 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பேரியாழ்

B) மகரயாழ்

C) சகோடயாழ்

D) செங்கோட்டியாழ்

விளக்கம்: யாழின் வகைகள்:

1. 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்

2. 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்

3. 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்

4. 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்

13) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஒற்றுமை காப்பியம்

B) வரலாற்று காப்பியம்

C) கோவலன் காப்பியம்

D) இரட்டைக் காப்பியம்

விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:

1. குடிமக்கள் காப்பியம்

2. மூவேந்தர் காப்பியம்

3. முத்தமிழ் காப்பியம்

4. புரட்சிக் காப்பியம்

5. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

6. பொதுமைக் காப்பியம்

7. ஒற்றுமைக் காப்பியம்

8. வரலாற்றுக் காப்பியம்

9. இரட்டைக் காப்பியம்.

14) சிதம்பர ஸ்மரண என்னும் நூலை எழுதியவர் யார்?

A) கே.வி.சைலஜா

B) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

C) ராஜீவ்நாத்

D) ஜான்பால்

விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.

15) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் உய்ப்பது என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தருவது

B) செலுத்துவது

C) செல்வது

D) பேசுவது

விளக்கம்: உய்ப்பது – செலுத்துவது. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

16) Cinematography என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) ஒளிப்பதிவு

B) ஒளிப்படம்

C) இயங்குப்படம்

D) செய்திப்படம்

விளக்கம்: Animation – இயங்குபடம்.

Newsreel – செய்திப்படம்

Cinematography – ஒளிப்பதிவு.

17) பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு என்னும் நூலை எழுதியவர் யார்?

A) கவிமணி

B) பாரதிதாசன்

C) சுத்தானந்த பாரதியார்

D) பாரதியார்

விளக்கம்: பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு – பாரதியார்.

18) கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசனால் எழுதப்பட்ட நூல் அல்ல?

A) வீரத்தாய்

B) புரட்சிக்கவி

C) மாங்கனி

D) பாண்டியன் பரிசு

விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:

1. பாண்டியன் பரிசு

2. தமிழச்சியின் கத்தி

3. இருண்ட வீடு

4. எதிர்பாராத முத்தம்

5. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

6. வீரத்தாய்

7. புரட்சிக்கவி

கண்ணதாசன் எழுதிய நூல்கள்:

1. ஆட்டனத்தி ஆதிமந்தி

2. மாங்கனி

3. ஏசுகாவியம்.

19) படலம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) சூளாமணி

B) கந்தபுராணம்

C) சீவக சிந்தமணி

D) மணிமேகலை

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

20) கூற்றுகளை ஆராய்க.

1. அரச குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால், இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.

2. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

3. முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.

4. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால், ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது

A) 1, 2 சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி.

விளக்கம்: 1. அரச குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால், இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.

2. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

3. முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.

4. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால், ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.

21) ஆடலும் பாடலும் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பை தேர்வு செய்க

A) எண்ணும்மை

B) முற்றுமை

C) உம்மைத்தொகை

D) உவமைத்தொகை

விளக்கம்: ஆடலும் பாடலும் – எண்ணும்மை.

உம்மைத் தொகை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி மறைந்து வரும். எ.கா. ஆடல் பாடல்

எண்ணும்மை – இரு சொற்களுக்கிடையே உம் என்ற விகுதி வெளிப்படையாய் வரும். எ.கா. ஆடலும் பாடலும்.

முற்றும்மை – ஒரே சொல்லில் உம் என்ற விகுதி வரும். எ.கா. ஆடலும்

22) இராவண காவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) கவியோகி சுத்தானந்த பாரதியார்

B) கண்ணதாசன்

C) கவிமணி

D) புலவர் குழந்தை

விளக்கம்: இராவண காவியம் என்னும் நூலை எழுதியவர் – புலவர் குழந்தை

பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்

கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.

23) தண்டியலங்காரம் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இதில் காப்பியம் என்பதை குறிப்பது எது?

A) முத்தகம்

B) குளகம்

C) தொகைநிலை

D) தொடர்நிலை

விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.

24) திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் யார்?

A) ஜார்ஜ் மிலி

B) லூமியர் சகோதரர்கள்

C) எடிசன்

D) பிரான்ஸ் சென்கின்சு

விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.

25) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் நகை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?

A) மகிழ்ச்சி

B) வியப்பு

C) பெருமை

D) சிரிப்பு

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

நகை – சிரிப்பு.

மருட்கை – வியப்பு.

பெருமிதம் – பெருமை

உவகை – மகிழ்ச்சி.

26) “பிறனில் விழைவோர் கிளையோடுங் கெடுப” என்பது எந்த காப்பியத்தின் பாவிகம்?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) மணிமேகலை

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம் ஆகும். காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.

27) ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை எப்போது சாப்ளின் எடுத்தார்?

A) 1940

B) 1930

C) 1920

D) 1915

விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

28) வை.மு.கோதைநாயகி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 115 நாவல்களை எழுதியுள்ளார்.

2. தபால் வினோதம் என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.

3. முதல் நூல் – இந்திர மோகனா.

4. நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. 115 நாவல்களை எழுதியுள்ளார்.

2. தபால் வினோதம் என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.

3. முதல் நூல் – இந்திர மோகனா.

4. நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

29) ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிப்பது எது?

A) முத்தகம்

B) குளகம்

C) தொகைநிலை

D) தொடர்நிலை

விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.

30) கூற்றுகளை ஆராய்க.

1. காப்பியத்தை ஆங்கிலத்தில் EPOS என்பர்.

2. இது கிரேக்கச் சொல்லான EPIC என்பதிலிருந்து பெறப்பட்டது.

3. EPOS என்றால் சொல் அல்லது பாடல் என்று பொருள்.

4. EPOS என்றால் வடமொழியில் காவியம் என்பர்

A) 1, 2 தவறு

B) 1, 3 தவறு

C) 3, 4 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர்.

2. இது கிரேக்கச் சொல்லான EPOS என்பதிலிருந்து பெறப்பட்டது.

3. EPOS என்றால் சொல் அல்லது பாடல் என்று பொருள்.

4. EPOS என்றால் வடமொழியில் காவியம் என்பர்

31) சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன் என்று கூறியவர் யார்?

A) சிவாஜி கணேசன்

B) ராஜீவ் நாத்

C) மார்லன் பிராண்டோ

D) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

விளக்கம்: சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது – சிவாஜி கணேசன்.

32) சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உரைநடையாக மட்டுமே இயற்றப்பட்டுள்ளதால், “உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்” என்று அழைக்கப்படுகிறது.

2. பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உரைநடையாகவும் இயற்றப்பட்டுள்ளதால், “உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்” என்று அழைக்கப்படுகிறது.

2. பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

33) தொல்நெறி – என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) உவமைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தொல்நெறி – பண்புத்தொகை.

தொல்நெறி – தொன்மை + நெறி. தொன்மையான நெறி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.

பண்புத்தொகை:

1. சொல்லைப் பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும்.

2. ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும்.

34) கூற்றுகளை ஆராய்க.

1. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்.

2. அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் மிலி ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் ;கருவியைக் கண்டுபிடித்தார். அதன்பிறகுதான் பிரான்சிஸ் லூமியர் சகோதரர்கள் படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தனர். அடுத்தநிலையில் திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.

35) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பா உணர்த்தும் செய்தி என்ன?

A) மனத்தை கட்டுப்படுத்த வேண்டும்

B) அறிவே அழிவிலிருந்து நம்மை காக்கும்

C) அறிவு பகைவரை அழிக்கும் கருவி

D) அறிவு பின்பு வருவதை முன்பே அறியும் வல்லமை உடையது

விளக்கம்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

36) உலக சினிமா 1, 2 பேசும் படம் – என்ற நூலை எழுதியவர் யார்?

A) செழியன்

B) இரா.காசிராசன்

C) அஜயன் பாலா

D) அம்ஷன் குமார்

விளக்கம்: செழியன் – உலக சினிமா 1, 2 பேசும் படம்

அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1, 2, 3

இரா.காசிராசன் – காப்பித்தமிழ்

அம்ஷன் குமார் – சினிமா இரசனை

37) தாமரைத்திரு என அழைக்கப்படும் விருது எது?

A) பத்ம ஸ்ரீ

B) பத்ம பூஷன்

C) பத்ம விபூஷண்

D) பாரதரத்னா

விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

1. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.

2. கலைமாமணி விருது

3. பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)

4. பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

5. செவாலியர் விருது

6. தாதாசாகெப் பால்கே விருது.

38) காப்பியம் என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?

A) காப் + பியம்

B) காப்பு + இயம்

C) காப் + இயம்

D) காப்பி + அம்

விளக்கம்: காப்பியம் – காப்பு + இயம்.

பொருள்: 1. காப்பு – மரபைக் காப்பது, இயம் – இயம்புவது, வெளிப்படுத்துவது.

மொழியைச் சிதையாது காப்பது.

39) விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை எது?

A) சிலப்பதிகாரம், மணிமேகலை

B) சீவகசிந்தாமணி, வளையாபதி

C) கம்பராமாயணம், சிலப்பதிகாரம்

D) சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்

விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.

40) இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) கண்ணதாசன்

C) கவிமணி

D) நகுலன்

விளக்கம்: இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம் – நகுலன்

41) 17 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பேரியாழ்

B) மகரயாழ்

C) சகோடயாழ்

D) செங்கோட்டியாழ்

விளக்கம்: யாழின் வகைகள்:

1. 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்

2. 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்

3. 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்

4. 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்

42) “கவி கண்காட்டும்” என்ற வரிகளை கூறியவர் யார்?

A) தொல்காப்பியர்

B) பவணந்தி முனிவர்

C) பேராசிரியர்

D) ந.மு.வேங்கடசாமி

விளக்கம்: “கவி கண்காட்டும்” – பேராசிரியர் (தொல்காப்பியம் உரையாசிரியர்).

நாடகத்தில் நடப்பவரிடத்தில் தோன்றும் மெய்ப்பொருள், காண்பவரிடத்திலும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இலக்கியத்தல் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு, இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சார்ந்த மெய்ப்பாடு மிகச்சிறந்த அழகியல் கோட்பாடு.

43) பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தவை எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) கம்பராமாயணம்

விளக்கம்: விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை – சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.

பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.

44) காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. EPOS என்பது எம்மொழிச்சொல்?

A) இலத்தீன்

B) கிரேக்கம்

C) பிரெஞ்சு

D) ஆங்கிலம்

விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOs என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது.

45) சிதம்பர ஸ்மரண என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

A) கே.வி.சைலஜா

B) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

C) ராஜீவ்நாத்

D) ஜான்பால்

விளக்கம்: மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவரால் ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் எர்ணக்குளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இந்நூலை கே.வி.சைலஜா ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

46) கூற்று: சிலப்பதிகாரம், மணிமேகலை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: மணிமேகலையின் கதைத் தொடர்ச்சி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு.

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் (சிலப்பதிகாரம், மணிமேகலை) ‘இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

47) சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று குறிப்பிட்டவர் யார்?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) பாரதியார்

D) வாணிதாசன்

விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.

48) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் குறிப்பிடப்படும் கருத்து என்ன?

A) பிறருக்கு நன்மை செய்தல் வேண்டும்

B) மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

C) மனத்தை அறநெறியில் செலுத்துதல் வேண்டும்

D) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும்

விளக்கம்: மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்

49) எந்த படத்தின் வெற்றி சிவாஜி கணேசனை திரைப்படத்துறையின் உச்சாணிக்கொம்பில் மலரச்செய்தது?

A) பராசக்தி

B) கர்ணன்

C) வீரபாண்டிய கட்டபொம்மன்

D) கப்பலோட்டிய தமிழன்

விளக்கம்: சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின் உச்சாணிக் கொம்பில் மலரச்செய்து அழகுபார்த்தது.

50) இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதை______________என்பர்?

1. புதுக்காவியம்

2. குறுங்காவியம்

3. குறுங்காப்பியம்

4. புதுக்காப்பியம்

A) 1, 3

B) 1, 4

C) 2, 4

D) 2, 3

விளக்கம்: இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும், மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.

51) பாரதசக்தி மகா காவியம்; என்னும் நூலை எழுதியவர் யார்?

A) கவியோகி சுத்தானந்த பாரதியார்

B) கண்ணதாசன்

C) கவிமணி

D) புலவர் குழந்தை

விளக்கம்: பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

இராவண காவியம் – புலவர் குழந்தை

கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்

கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.

52) பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) நகுலன்

C) பாரதிதாசன்

D) அஜயன் பாலா

விளக்கம்: பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் நகுலன். இவரின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. இவர் கும்பகோணத்தில் பிறந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்.

53) கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசனால் எழுதப்பட்ட நூல் அல்ல?

A) சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

B) எதிர்பாராத முத்தம்

C) தமிழச்சியின் கத்தி

D) இராவண காவியம்

விளக்கம்: பாரதிதாசன் எழுதிய நூல்கள்:

1. பாண்டியன் பரிசு

2. தமிழச்சியின் கத்தி

3. இருண்ட வீடு

4. எதிர்பாராத முத்தம்

5. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

6. வீரத்தாய்

7. புரட்சிக்கவி

இராவண காவியம் – புலவர் குழந்தை.

54) அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது எது?

A) அகத்தியம்

B) தண்டியலங்காரம்

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.

55) கீழ்க்காணும் எந்த விருதை சிவாஜி கணேசன் பெறவில்லை?

A) பத்ம ஸ்ரீ

B) பத்ம பூஷன்

C) பத்ம விபூஷண்

D) தாதாசாகெப் பால்கே

விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

1. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.

2. கலைமாமணி விருது

3. பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)

4. பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

5. செவாலியர் விருது

6. தாதாசாகெப் பால்கே விருது.

56) பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க?

1. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாக் கொண்டிருத்தல் வேண்டும்.

2 திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாக் கொண்டிருத்தல் வேண்டும்.

2 திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

57) இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி போன்ற நாடகங்களை எம்மொழியில் எழுதியிருக்கிறார்?

A) தமிழ்

B) மலையாளம்

C) தெலுங்கு

D) சிங்களம்

விளக்கம்: இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீகண்டன் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி போன்ற நாடகங்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.

58) மாதவி தன்னுடைய எத்தனையாவது வயதில் ஆடல் கலையை அரங்கேற்ற விரும்பினாள்?

A) 6-வது வயதில்

B) 12-வது வயதில்

C) 10-வது வயதில்

D) 15-வது வயதில்

விளக்கம்: ஆடலும் பாடலும் அழகும் என்று இக்

கூறிய மூன்றின் ஒன்று குறைவுபடாமல்

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்.

ஆடல், பாடல், அழகு என்னும் இம்முன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்களைச்செய்து ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்.

59) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு – என்ற குறட்பாவில் தீது என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) தீமை

B) நன்மை

C) அறிவின்மை

D) அறிவுடைமை

விளக்கம்: தீது – தீமை. இதன் எதிர்ச்சொல் நன்மை. மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

60) கூற்றுகளை ஆராய்க.

1. ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலை எழுதியவர் கே.வி.சைலஜா ஆவார்.

2. ‘சிதம்பர் ஸ்மரண’ என்னும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ‘சிதம்பர ஸ்மரண’ என்னும் நூலை எழுதியவர் மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஆவார். இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இவரின் இந்நூலை கே.வி.சைலஜா என்பவர் ‘சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி கூறப்பட்டுள்ளது.

61) கூற்றுகளை ஆராய்க.

1. தொல்காப்பிய ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர், ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ என்று போற்றுகின்றனர்.

2. தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் பேராசிரியர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தொல்காப்பிய ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர், ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ என்று போற்றுகின்றனர்.

2. தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணார்.

62) என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என்று கூறியவர் யார்?

A) அமிதாப் பச்சன்

B) மார்லன் பிராண்டோ

C) ஜெமினி கணேசன்

D) மோகன்லால்

விளக்கம்: என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என்று கூறியவர் மார்லன் பிராண்டோ (ஹாலிவுட் நடிகர்).

63) சிலப்பதிகாரத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) குடிமக்கள் காப்பியம்

B) மூவேந்தர் காப்பியம்

C) புரட்சிக் காப்பியம்

D) பண்பாட்டுக் காப்பியம்

விளக்கம்: சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:

1. குடிமக்கள் காப்பியம்

2. மூவேந்தர் காப்பியம்

3. முத்தமிழ் காப்பியம்

4. புரட்சிக் காப்பியம்

5. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

6. பொதுமைக் காப்பியம்

7. ஒற்றுமைக் காப்பியம்

8. வரலாற்றுக் காப்பியம்

9. இரட்டைக் காப்பியம்

64) எந்த ஆண்டு ருதுபேதம் என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது?

A) 1995

B) 1987

C) 1986

D) 1980

விளக்கம்: 1986 இல் நான் ‘ருதுபேதம்’ என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடைபெற்றது.

வி.பெ.கெ. மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தது – 1995.

65) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு – என்ற குறட்பாவின் அணி எது?

A) சொல் பின்வருநிலையணி

B) உருவக அணி

C) பொருள் பின்வருநிலையணி

D) சொற்பொருள் பின்வருநிலையணி

விளக்கம்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு – சொற்பொருள் பின்வரும் நிலையணி.

எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

66) கூற்று: வி.சி.கணேசனுக்கு சிவாஜிகணேசன் என்று பெயர் வைத்தவர் பெரியார்.

காரணம்: அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி.கணேசனுக்கு ‘சிவாஜிகணேசன்’ என்று பெயரிட்டார்.

67) சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது எந்த திரைப்படம்?

A) சத்ரபதி சிவாஜி

B) இராஜராஜசோழன்

C) கர்ணன்

D) வீரபாண்டிய கட்டபொம்மன்

விளக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன என்ற திரைப்படம்தான் சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது. ஆனாலும், ‘கட்டபெம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை’ என்றார்.

68) 7 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பேரியாழ்

B) மகரயாழ்

C) சகோடயாழ்

D) செங்கோட்டியாழ்

விளக்கம்: யாழின் வகைகள்:

1. 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்

2. 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்

3. 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்

4. 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்.

69) இலம்பகம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) சூளாமணி

B) கந்தபுராணம்

C) சீவக சிந்தமணி

D) மணிமேகலை

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

70) ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிப்பது தொடர்நிலை எனப்படும். இது எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.

71) வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல் எது?

A) மாறனலங்காரம்

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

72) கூற்று: சிலப்பதிகாரம் “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனப்படுகிறது.

காரணம்: செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்ட காப்பியம்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால், இது ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப்படுகிறது.

73) டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயர் கொண்ட நகுலன் என்பவர் எந்த ஊரில் பிறந்தார்?

A) சிவகங்கை

B) இராமநாதபுரம்

C) கும்பகோணம்

D) சென்னை

விளக்கம்: கவிஞர் நகுலன்(டி.கே. துரைசாமி) என்பவர் கும்பகோணத்தில் பிறந்தார். நகுலன் கவிதைகள் என்னும் நூல் இவர் எழுதிய நூல் ஆகும்.

74) மருமக்கள் வழி மான்மியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) கவியோகி சுத்தானந்த பாரதியார்

B) கண்ணதாசன்

C) கவிமணி

D) புலவர் குழந்தை

விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்

பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

இராவண காவியம் – புலவர் குழந்தை

கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்.

75) எதிரதாக் காக்கும்அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் – என்ற குறட்பாவில் நோய் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பிணி

B) போரில் தோல்வி

C) துன்பம்

D) தீமை

விளக்கம்: நோய் – துன்பம். பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைக்கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

76) தமிழில் நமக்கு கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

A) அகத்தியம்

B) நன்னூல்

C) தண்டியலங்காரம்

D) தொல்காப்பியம்

விளக்கம்: தொல்காப்பிம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார்.

77) ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்

கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து – என்ற வரியில் எழினி; என்ற சொல்லின் பொருள என்ன?

A) மாதவி

B) ஆடல் மகள்

C) திரைச்சீலை

D) உடை

விளக்கம்: எழினி என்றால் ஆடல் அரங்கேற்றும் மேடையின் திரைச் சீலையைக் குறிக்கும் .

78) மூச்சு நின்று விட்டால்

பேச்சும்

அடங்கும் – என்று கூறியவர் யார்?

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) நகுலன்

D) மருதகாசி

விளக்கம்: மூச்சு நின்;று விட்டால்

பேச்சும்

அடங்கும் – நகுலன்

79) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் உவகை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?

A) மகிழ்ச்சி

B) வியப்பு

C) பெருமை

D) சிரிப்பு

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

நகை – சிரிப்பு.

மருட்கை – வியப்பு.

பெருமிதம் – பெருமை

உவகை – மகிழ்ச்சி

80) தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?

A) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

B) பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

C) பரிமேலழகர்

D) இளம்பூரணார்

விளக்கம்: தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். இவர் அகத்தியரின் மாணவர் ஆவார். இந்நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர் ஆவார்.

81) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு – என்ற குறட்பா உணர்த்தும் செய்தி என்ன?

A) பின்பு வரப்போவதை அறிந்து செயல்பட வேண்டும்

B) மெய்யான பொருளைக் காண்பதே அறிவு

C) மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

D) உலகம் செல்லும் உயர்ந்த நெறியில் செல்ல வேண்டும்

விளக்கம்: உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.

82) புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்

கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு – என்ற வரியில் நெடுவரை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பெரிய மரம்

B) பெரிய மூங்கில்

C) பெரிய மலை

D) பெரிய காடு

விளக்கம்: நெடுவரை – பெரிய மலை. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம். ஆடல் அரங்கு அமைப்பதை பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

83) அரங்கம் அமைக்கும் முறை பற்றிய சிலப்பதிகாரம் கூறியுள்ளது. இதில் பொருந்தாதது எது?

A) அகலம் – எழுகோல்

B) நீளம் – எண்கோல்

C) உயரம் – ஒரு கோல்

D) உத்தரப் பலகை – அரங்கப் பலகை வைத்த இடைநிலம் – இரு கோல்

விளக்கம்: அகலம் – எழுகோல்

நீளம் – எண்கோல்

உயரம் – ஒரு கோல்

உத்தரப் பலகை – அரங்கப் பலகை வைத்த இடைநிலம் – நால் கோல்

84) பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் கீழ்க்காணும் எந்த விருதை சிவாஜி கணேசன் பெற்றார்?

A) கெய்ரோ

B) தாதாசாகிப் பால்கே விருது

C) செவாலியர் விருது

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

1. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.

2. கலைமாமணி விருது

3. பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)

4. பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

5. செவாலியர் விருது

6. தாதாசாகெப் பால்கே விருது.

85) கூற்றுகளை ஆராய்க.

1. பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

2. சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள் தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.

1. பொருள் தொடர்நிலை – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

2. சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்

86) கீழ்க்காணும் எது சிலப்பதிகாரத்தின் பாவிகம் அல்ல?

A) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

B) உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்

C) ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

D) பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப

விளக்கம்: “காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.

1. “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” – கம்பராமாயணம்.

2. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

உரைசால் பத்தியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” – சிலப்பதிகாரம்.

87) அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிற வரை

உள் நின்று

சலிக்கும் காற்று

உள்ளவரை – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) நகுலன்

B) பாலச்சந்திரன்

C) பாரதியார்

D) தி.சு.நடராசன்

விளக்கம்: அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிற வரை

உள் நின்று

சலிக்கும் காற்று

உள்ளவரை – நகுலன்

88) மெய்ப்பாடு எத்தனை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?

A) 7

B) 6

C) 4

D) 8

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

89) கூற்று: சிலப்பதிகாரம் “முத்தமிழ்க் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் “முத்தமிழ்க் காப்பியம்” எனப்படுகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.

90) வை.மு.கோதைநாயகியால் நடத்தப்பட்ட இதழ் எது?

A) கதா மோகினி

B) நாவல் ராணி

C) ஜகன் மோகினி

D) ஏக அரசி

விளக்கம்: இவர், ‘ஜகன் மோகினி’ என்ற இதழை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளராகவும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார்.

91) நகை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) உவமைத் தொகை

B) பண்புத்தொகை

C) அன்மொழித்தொகை

D) தொழிற்பெயர்

விளக்கம்: நகை – தொழிற்பெயர்

நகை – சிரித்தல் என்று பொருள். அல், தல் என்னும் விகுதி பெற்று வந்தால், தொழிற்பெயர் எனப்படும்.

92) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் மருட்கை என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?

A) மகிழ்ச்சி

B) வியப்பு

C) பெருமை

D) சிரிப்பு

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

நகை – சிரிப்பு.

மருட்கை – வியப்பு.

பெருமிதம் – பெருமை

உவகை – மகிழ்ச்சி

93) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) இந்திர மோகனா

B) ஏக அரசி

C) கதா மோகனி

D) நாவல் ராணி

விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்

94) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல் – என்ற குறட்பாவில் ஊங்கும் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பகை

B) துணை

C) நட்பு

D) ஊக்கம்

விளக்கம்: ஊங்கும் – துணையும். நல்ல இனத்தைவிடச் சிறந்தாதாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை

95) பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறும் நூல் எது?

A) அகத்தியம்

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், ‘தண்டியலங்காரமாகும்’. இந்நூலில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

96) நகுலன் என்பவர் கீழ்க்காணும் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்?

A) அண்ணா பல்கலைக்கழகம்

B) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

C) சென்னைப் பல்கலைக்கழகம்

D) பாரதியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: நகுலன் (டி.கே.துரைசாமி) கும்பகோணத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

97) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி – இவ்வரியில் நித்திலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) முத்து

B) புதுமை

C) ஓவியம்

D) மூங்கில்

விளக்கம்: நித்திலம் – முத்து. ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்ற அரங்க அமைப்புப் பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

98) மருட்கை என்ற சொல்லை பிரித்து எழுதுக.

A) மருட் + கை

B) மருள் + கை

C) மரு + கை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மருட்கை – மருள் + கை.

மருள் – பகுதி

கை – தொழிற்பெயர் விகுதி.

99) பின்வருவனவற்றுள் எது கண்ணதாசனுக்கு பொருந்தாதது?

A) மருமக்கள் வழி மான்மியம்

B) ஆட்டனத்தி ஆதிமந்தி

C) மாங்கனி

D) ஏசுகாவியம்

விளக்கம்: கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்

பாரதசக்தி மகா காவியம் – கவியோகி சுத்தானந்த பாரதியார்

இராவண காவியம் – புலவர் குழந்தை

கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்

100) அவர் பல உண்மைகளைக் சொல்கிறார்

ஒரு உண்மையைச் சொல்லாமல்

இருப்பதற்கு………– என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) கண்ணதாசன்

C) பாரதிதாசன்

D) நகுலன்

விளக்கம்: அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்

ஒரு உண்மையைச் சொல்லாமல்

இருப்பதற்கு

ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம், மகா மௌனம் – நகுலன்

101) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) காதை

B) சருக்கம்

C) இலம்பகம்

D) காண்டம்

விளக்கம்: பொருந்தாதது காண்டம் ஆகும்.

1. காப்பியச் சிற்றுறுப்புகள் – காதை, சருக்கம், இலம்பகம், படலம்

2. காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதி ஆகும்.

102) சருக்கம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

A) சூளாமணி

B) கந்தபுராணம்

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

103) கூற்றுகளை ஆராய்க.

1. உரைகளிலும், இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.

2. மகாகாவியம் என்பது காப்பியத்தைக் குறிக்கும் மற்றொரு பெயர் ஆகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைமை எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. எனினும், உரைகளிலும், இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.

2. மகாகாவியம் என்பது காப்பியத்தைக் குறிக்கும் மற்றொரு பெயர் ஆகும்.

104) கீழ்க்காணும் எது காப்பியத்தைக் குறிக்கிறது?

A) தொடர்நடைச்செய்யுள்

B) விருத்தச் செய்யுள்

C) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:

1. பொருட்டொர்நிலைச் செய்யுள்

2. கதைச் செய்யுள்

3. அகலக்கவி

4. தொடர்நடைச்செய்யுள்

5. விருத்தச் செய்யுள்

6. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

7. மகாகாவியம்.

105) கூற்று: சிலப்பதிகாரம் புரட்சிக் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடிய காப்பியம்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: சிலப்பதிகாரம் முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.

106) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் – என்ற குறட்பாவில் திண்ணியர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மனவுறுதியுடையவர்

B) மனவலிமையற்றவர்

C) காத்துக்கொள்ளுதல்

D) எண்ணுதல்

விளக்கம்: திண்ணியர் – மனவுறுதியுடையவர். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

107) மெய்ப்பாடு 8 என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் இளிவரல் என்று குறிப்பிடப்படுவதன் பொருள் என்ன?

A) சிறுமை

B) வியப்பு

C) பெருமை

D) சினம்

விளக்கம்: தொல்காப்பியம் மெய்ப்பாடுகள் 8 என குறிப்பிடுகிறது: அவை,

1. நகை

2. அழுகை

3. இளிவரல்

4. மருட்கை

5. அச்சம்

6. பெருமிதம்

7. வெகுளி

8. உவகை

நகை – சிரிப்பு.

மருட்கை – வியப்பு.

பெருமிதம் – பெருமை

உவகை – மகிழ்ச்சி

இளிவரல் – சிறுமை

வெகுளி – சினம்

108) 16 நரம்புகளைக் கொண்ட யாழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பேரியாழ்

B) மகரயாழ்

C) சகோடயாழ்

D) செங்கோட்டியாழ்

விளக்கம்: யாழின் வகைகள்:

1. 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்

2. 17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்

3. 16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்

4. 7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்

109) தொல்காப்பியம் பற்றி கூற்றுகளை ஆராய்க.

1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.

2. பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்.

3. தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.

4. கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்பும் தொல்காப்பிய அதிகாரம் – யாப்பு அதிகாரம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.

2. பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்.

3. தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.

4. கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்பும் தொல்காப்பிய அதிகாரம் – பொருளதிகாரம்.

110) ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்

கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து – என்ற வரியில் கரந்துவரல் எழினி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் திரை

B) இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்ற பொருந்துமாறு அமைக்கப்படும் திரை

C) மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் திரை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எழினி என்பது திரைச்சீலையை குறிக்கும்.

ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை – ஒருமுக எழினி

இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்ற பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை – பொருமுக எழினி

மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் திரை – கரந்துவரல் எழினி.

111) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்அழிக்கல் ஆகா அரண் – என்ற குறட்பாவில் செறுவார் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நண்பர்

B) பகைவர்

C) தீங்கு

D) பாதுகாப்பு

விளக்கம்: செறுவார் – பகைவர். அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

112) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி – என்ற வரிகளில் ஓவிய விதானம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஓவியம் தீட்டப்பட்ட பலகை

B) ஓவியம் தீட்டப்பட்ட திரைச்சீலை

C) ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்

D) ஓவியம் தீட்டப்பட்ட ஆடை

விளக்கம்: ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர் என்று அரங்க அமைப்பு பற்றி சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

113) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) நித்திலம் – முத்து

B) ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்

C) பூதர் – ஐம்பூதங்கள்

D) உத்தரப் பலகை – கீழ் இடும் பலகை

விளக்கம்: நித்திலம் – முத்து

ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்

பூதர் – ஐம்பூதங்கள்

உத்தரப் பலகை – மேல் இடும் பலகை.

114) புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்

கண்ணிடை ஒருசான் வளர்ந்தது கொண்டு – என்ற வரிகளில் கண் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மாதவின் கண்

B) மூங்கிலின் கணு

C) ஓர் உறுப்பு

D) மூங்கில்

விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் கண் என்பது மூங்கிலின் கணுவைக் குறிக்கும். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.

115) கூற்று: சிலப்பதிகாரம் “மூவேந்தர் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றியவை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் “மூவேந்தர் காப்பியம்” எனவும் அழைக்கப்படுகிறது.

116) எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழை……- என்ற வரிகளில் கழை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) முகபாவனை

B) ஒரு வகை புன்னகை

C) அரங்கம்

D) மூங்கில்

விளக்கம்: கழை – மூங்கில்.

திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கிலை கொண்டு வந்தனர் என்பது மேற்காணும் வரியின் பொருள் ஆகும்.

117) ஆடலும் பாடலும் அழகும் என்று இக்

கூறிய மூன்றின் ஒன்ற குறைபடாமல்,

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு அண்டில்

சூழ்கழல் மன்னற்குக் காட்ட வேண்டி – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் என்பது கீழ்க்காணும் யாரைக் குறிக்கும்?

A) சேர மன்னன்

B) சோழ மன்னன்

C) பாண்டிய மன்னன்

D) பல்லவ மன்னன்

விளக்கம்: சூழ்கழல் மன்னன் – வீரக் கழல் பூண்ட சோழ மன்னன்.

ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது 12வது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் அணிந்த சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள்) என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.

118) ………பெருந்தோள் மடந்தை

தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை – இவ்வரிகளில் புரிகுழல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பூக்களை அணிந்த கூந்தல்

B) நீண்ட கூந்தல்;

C) சுருண்ட கூந்தல்

D) கருமையான கூந்தல்

விளக்கம்: புரிகுழல் – சுருண்ட கூந்தல்.

மாதவி, அழகிய தோள்களை உடையவள். தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் என்பது மேற்காணும் சிலப்பதிகார வரியின் பொருளாகும்.

119) தவறான ஒன்றைத் தெரிவு செய்க.

A) சிறுபொழுது – 6

B) பெரும்பொழுது – 6

C) அகத்திணை – 7

D) புறத்திணை – 10

விளக்கம்: சிறுபொழுது(6) – வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம்.

பெரும்பொழுது(6) – கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.

அகத்திணை(7) – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

புறத்திணை(12) – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

120) ஆர்ப்பரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம், மகா மௌனம். – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) அகிலன்

B) நகுலன்

C) கண்ணதாசன்

D) சிற்பி பாலசுப்பிரமணியன்

விளக்கம்: ஆர்ப்பிரிக்கும் கடல்

அதன் அடித்தளம்

மௌனம், மகா மௌனம் – நகுலன்.

121) நகை என்ற சொல்லின் பகுதி என்ன?

A) நகை

B) நா

C) நகு

D) நகுதல்

விளக்கம்: நகை – நகு + ஐ எனப்பிரிக்கலாம்.

நகை என்ற சொல்லின் பகுதி (வேர்ச்சொல்) நகு என்பதாகும்.

வேர்ச்சொல் (பகுதி):

1. கட்டளைச் சொல்லாக அமைய வேண்டும்

2. அச்சொல்லின் முழு பொருளையும் தர வேண்டும்.

122) பெருஞ்சிறப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்து…….. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நகுலன்

விளக்கம்: பெருஞ்சிறப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்து குளிரேற்றி ஒளியும் ஊட்டி – பாரதிதாசன்.

123) கூற்று: சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடப்பட்ட காப்பியம்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: அரசகுடி அல்லாவதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.

124) பொருத்துக

அ. 21 நரம்புகளைக் கொண்டது – 1. செங்கோட்டியாழ்

ஆ. 17 நரம்புகளைக் கொண்டது – 2. சகோடயாழ்

இ. 16 நரம்புகளைக் கொண்டது – 3. மகரயாழ்

ஈ. 7 நரம்புகளைக் கொண்டது – 4. பேரியாழ்

A) 4, 1, 2, 3

B) 4, 3, 2, 1

C) 4, 2, 3, 1

D) 2, 3, 4, 1

விளக்கம்: 21 நரம்புகளைக் கொண்டது – பேரியாழ்

17 நரம்புகளைக் கொண்டது – மகரயாழ்

16 நரம்புகளைக் கொண்டது – சகோடயாழ்

7 நரம்புகளைக் கொண்டது – செங்கோட்டுயாழ்

125) காண்டம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?

1. பாரதம்

2. கந்தபுராணம்

3. கம்பராமாயணம்

4. சிலப்பதிகாரம்

5. சூளாமணி

A) 1, 5

B) 2, 3

C) 3, 4

D) 4, 5

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

126) பாவிகம் என்பது காப்பியப் பண்பே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகத்தியம்

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) தண்டியலங்காரம்

விளக்கம்: “பாவிகம் என்பது காப்பியப் பண்பே” – தண்டி, நூற்பா.89

127) பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.

128) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது_____________________எனப்படும்.

A) பெருங்காப்பியம்

B) சிறுகாப்பியம்

C) பாவிகம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டே குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

129) நகுலன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.

2. புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்.

3. சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.

4. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.

2. புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்.

3. சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.

4.பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

130) ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற வகையில் வறுமை தருவது எது?

A) கள்ளுண்ணல்

B) திருடுதல்

C) பொய்பேசுதல்

D) சூது

விளக்கம்: சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்

வறுமை தருவதுஒன்று இல்.

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

131) கூற்று 1: காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.

கூற்று 2: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாகும்.

132) பொருத்துக.

அ. காதை – 1. கந்தபுராணம்

ஆ. சருக்கம் – 2. சீவகசிந்தாமணி

இ. இலம்பகம் – 3. சூளாமணி

ஈ. படலம் – 4. சிலப்பதிகாரம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 3, 4, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: காதை – சிலப்பதிகாரம்

சருக்கம் – சூளாமணி

இலம்பகம் – சீவகசிந்தாமணி

படலம் – கந்தபுராணம்

133) ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்……என்ற தொடரில் வெளிப்படும் செய்தி?

1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.

2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

A) 1 சரி 2 தவறு

B) 1 தவறு 2 சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: 1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.

2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்

134) பொருத்துக.

அ. ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை

ஆ. அரசு உவா – 2. மூங்கில்

இ.கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்

ஈ. கழை – 4. எடையளவு

A) 3, 1, 4, 2

B) 4, 2, 1, 3

C) 1, 2, 3, 4

D) 4, 3, 2, 1

விளக்கம்: ஆமந்திரிகை – வாத்தியம்

அரசு உவா – பட்டத்து யானை

கழஞ்சு – எடையளவு

கழை – மூங்கில்.

135) இந்திர மோகனா என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) அஞ்சலையம்மாள்

B) அம்புஜதம்மாள்

C) வை.மு.கேதைநாயகி

D) இலட்சுமிபதி

விளக்கம்: வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் ‘இந்திர மோகனா’ என்பதாகும். இவரே நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

136) குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நகுலன்

விளக்கம்: குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? – பாரதிதாசன்

137) Animation என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) ஒளிப்பதிவு

B) ஒளிப்படம்

C) இயங்குப்படம்

D) செய்திப்படம்

விளக்கம்: Animation – இயங்குபடம்.

Newsreel – செய்திப்படம்

Cinematography – ஒளிப்பதிவு

138) யாரை உருவகப்படுத்தி சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை எடுத்தார?

A) சேக்குவாரா

B) நெல்சல் மண்டேலா

C) மகாத்மா காந்தி

D) ஹிட்லர்

விளக்கம்: சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

இக்கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை, சாப்ளின் உருவாக்கினார்.

139) பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?

A) பாரிஸ்

B) அம்மானே

C) இலண்டன்

D) மெல்போர்ன்

விளக்கம்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் ஆகும். 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் இங்கு தான் திரைப்படம் உருவானது.

140) இயற்கையாக எழும் உணர்ச்சி எந்த நாடக முடிவில் களைப்பு, சிரமத்தை உண்டாக்குகிறது என்று சிவாஜி கணேசன் கூறியுள்ளார்?

A) கப்பலோட்டிய தமிழன்

B) கர்ணன்

C) வீரபாண்டிய கட்டபொம்மன்

D) ராஜராஜசோழன்

விளக்கம்: பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது.

141) எந்த காதையில் இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்?

A) நாமகள் காதை

B) முக்தி காதை

C) வரந்தரு காதை

D) ஆசிரிய காதை

விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் வரந்தருகாதையில் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

142) கூற்றுகளை ஆராய்க.

1. பெருங்காப்பியம்: வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.

2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது பெருங்காப்பியம் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பெருங்காப்பியம்: வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.

2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

143) சிவாஜி கணேசன் பிறந்த மாவட்டம் எது?

A) சேலம்

B) விழுப்புரம்

C) திருநெல்வேலி

D) கோயம்புத்தூர்

விளக்கம்: கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம். சின்னையா கணேசன் என்பதுதான் அவர் பெயர். ஆங்கிலேயரால் சிறை சென்ற தனது தந்தையை 9-வது வயதில்தான் கணேசன் முதன்முதலில் பார்த்தார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை.

144) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) இலைப்பூங்கோதை – பச்சை மாலை அணிந்த அரசி

B) பல்இயம் – இன்னிசைக் கருவி

C) கழஞ்சு – ஒரு வகை எடையளவு

D) புரிக்குழல் – சுருண்ட கூந்தல்

விளக்கம்: இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை

பல்இயம் – இன்னிசைக் கருவி

கழஞ்சு – ஒரு வகை எடையளவு

புரிக்குழல் – சுருண்ட கூந்தல்

145) ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி

விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்து – இவ்வரியில் விருந்து என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உணவு

B) புதுமை

C) நாடகம்

D) ஆடல் நிகழ்ச்சி

விளக்கம்: மேற்காணும் சிலப்பதிகார வரியில் விருந்து என்பது புதுமையைக் குறிக்கும். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தை அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையான, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.

146) சார்லி சாப்ளின் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.

2. “தி கோல்டு ரஷ்”, “தி சர்க்கஸ்” என்பது அவரின் காவியப்படமாகும்.

3. “மார்டன் டைம்ஸ்” என்பது அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்யும் படமாகும்.

4. “சிட்டி லைட்ஸ்” என்பது பேசும் படம் வந்த காலத்திலும் அவர் உருவாக்கிய பேசாப்படமாகும்.

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.

2. “தி கோல்டு ரஷ்”, “தி சர்க்கஸ்” என்பது அவரின் காவியப்படமாகும்.

3. “மார்டன் டைம்ஸ்” என்பது அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்யும் படமாகும்.

4. “சிட்டி லைட்ஸ்” என்பது பேசும் படம் வந்த காலத்திலும் அவர் உருவாக்கிய பேசாப்படமாகும்.

147) மக்களுக்கு இயற்கை அறிவு எதனால் ஏற்படும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) நூல்கள் பல கற்பதனால்

B) சேர்ந்த இனத்தால்

C) பெற்றோரின் வளர்ப்பால்

D) மனத்தால்

விளக்கம்: மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்

இன்னான் எனப்படும் சொல்

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

148) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல் – என்ற குறட்பாவில் அல்லல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பகை

B) துணை

C) துன்பம்

D) ஊக்கம்

விளக்கம்:அல்லல் – துன்பம். நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.

149) நகுலன் எழுதிய நூல்களுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) மூன்று

B) ஏழு

C) கண்ணாடியாகும் கண்கள்

D) வாக்குமூலம்

விளக்கம்: நகுலன் எழுதிய கவிதைகள்:

1. மூன்று

2. ஐந்து

3. கண்ணாடியாகும் கண்கள்

4. நாய்கள்

5. வாக்குமூலம்

6. சுருதி.

150) ஆப்பிரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர் யார்?

A) சிவாஜி கணேசன்

B) அமிதாப் பச்சன்

C) ரஜினகாந்த்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

1. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது.

2. கலைமாமணி விருது

3. பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)

4. பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

5. செவாலியர் விருது

6. தாதாசாகெப் பால்கே விருது.

151) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் – என்ற குறட்பாவின் அணி என்ன?

A) சொற்பொருள் பின்வருநிலையணி

B) உருவக அணி

C) ஏகதேச உருவக அணி

D) உவமை அணி

விளக்கம்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் – சொற்பொருள் பின்வருநிலையணி.

152) கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து

எண்ணி உரைப்பான் தலை – என்ற குறட்பா யாரை பற்றிய கூறுகிறது?

A) மன்னன்

B) தூதுவர்

C) மக்கள்

D) சான்றோர்

விளக்கம்: மேற்காணும் குறட்பா தூதுவரின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர் ஆவார்.

153) அரங்கேற்று காதை சிலப்பதிகாரத்தின் எந்த காண்டத்தில் உள்ளது?

A) புகார்காண்டம்

B) மதுரைக் காண்டம்

C) வஞ்சிக் காண்டம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளன.

1. புகார் காண்டம்

2. மதுரைக் காண்டம்

3. வஞ்சிக் காண்டம்.

இதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்று காதை புகார்க் காண்டத்தில் உள்ளது.

154) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்

B) மெய்ப்பாடு – தமிழண்ணல்

C) காப்பியத்தமிழ் – புதுமைப்பித்தன்

D) சினிமா இரசனை – அம்ஷன் குமார்

விளக்கம்: எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்

மெய்ப்பாடு – தமிழண்ணல்

காப்பியத்தமிழ் – இரா.காசிராசன்

சினிமா இரசனை – அம்ஷன் குமார்

155) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) நகை – நகு + ஐ

B) மருட்கை – மருள் + கை

C) வெகுளி – வெகுள் + இ

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நகை – நகு + ஐ

மருட்கை – மருள் + கை

வெகுளி – வெகுள் + இ.

156) அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தார்ச் சேர்ந்துஒழுகு வார் – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

A) ஏகதேச உருவக அணி

B) சொற்பொருட்பின்வருநிலையணி

C) உருவக அணி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் – தொழில் உவமை அணி

தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

157) பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும் – என்ற குறட்பாவில் தகைமை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தகுதி

B) உரிமை

C) தக்க இடம்

D) தகுதியின்மை

விளக்கம்: தகைமை – உரிமை. யாம் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.

158) வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு – என்ற குறட்பாவில் கேள் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பகைவர்

B) நட்புடையவர்

C) உறவுடையோர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கேள் – உறவுடையோர். வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

159) நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் யார்?

A) வரப்போவதை முன்னனே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்

B) மனத்திட்பம் உடையவர்

C) அரசரைச் சார்ந்து வாழ்கின்றனர்

D) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்

விளக்கம்: எதிரதாக் காக்ககும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்

பின்பு வரப்போவதை முன்பே அறிந்து கொள்ளக் கூடிய வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

160) அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

A) ஜார்ஜ் மிலி

B) லூமியர் சகோதரர்கள்

C) எடிசன்

D) பிரான்ஸ் சென்கின்சு

விளக்கம்: அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் ஜாரஜ் மிலி என்பவர் ஆவார்.

161) பாவிகம் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது?

A) காப்பிய மாந்தரின் பாலினம்

B) காப்பிய மாந்தரின் இயல்பு

C) காப்பியத்தின் அடிப்படைக் கருத்து

D) காப்பிய ஆசிரியரின் வரலாறு

விளக்கம்: காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞர் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.

162) யார் மூலம் பிறந்த திரைப்படம் என்னும் கலை இன்று உலகையே ஆள்கிறது?

A) லூயர் சகோதரர்கள்

B) சாப்ளின் சகோதரர்கள்

C) ஜார்ஜ் மிலி

D) எடிசன்

விளக்கம்: 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் லூமியர் சகோதரர்களால் திரைப்படம் என்னும் கலை பிறந்தது.

163) கீழ்க்காண்பவர்களில் யார் தொல்காப்பிய உரையாசிரியர்?

A) பரிமேழலகர்

B) பின்னத்தூர் நாரயணசாமி அய்யர்

C) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

D) பேராசிரியர்

விளக்கம்: இலக்கண நூலான தொல்காப்பியத்தின் உரையாசிரியர் பேராசிரியர் ஆவார்.

“சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்” – பேராசிரியர்.

164) அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிற வரை – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) நகுலன்

B) பாலச்சந்திரன்

C) பாரதியார்

D) தி.சு.நடராசன்

விளக்கம்: அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை

கடல் இருக்கிற வரை

உள் நின்று

சலிக்கும் காற்று

உள்ளவரை – நகுலன்

165) நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என்றால் நம் கண்கள் தாமாகவே_____________________கோணத்தைத் தேர்வுசெய்து கொள்கின்றன.

A) மீ சேய்மைக் காட்சித்துணிப்பு

B) சேய்மைக் காட்சித்துணிப்பு

C) நடுக் காட்சித்துணிப்பு

D) அண்மைக் காட்சித்துணிப்பு

விளக்கம்: நாம் கடற்கரையில் நின்று கடலைப் பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். நம் கண்கள் தாமாகவே அகண்ட கோணத்தைத் தேர்வுசெய்து கொள்கின்றன. இதைத் திரைப்படத்தில் மீ சேய்மைக் காட்சித்துணிப்பு என அழைக்கிறோம்.

166) பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது, கண்கள் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன. திரைப்படத்தில் இதனை_____________எனலாம்.

A) மீ சேய்மைக் காட்சித்துணிப்பு

B) சேய்மைக் காட்சித்துணிப்பு

C) நடுக் காட்சித்துணிப்பு

D) அண்மைக் காட்சித்துணிப்பு

விளக்கம்: பேருந்தைப் பிடிக்க, சாலையைக் கடக்கும்போது சாலைகளின் இரு பக்கங்களிலும் பார்க்கிறோம். அப்போது நம் கண்கள் இன்னும் கொஞ்சம் சுருங்கி, பொருள்கள் அசைவதைத் தொலைவிலிருந்து பார்த்துப் பதிவுசெய்கின்றன. திரைப்படத்தில் இதனைச் சேய்மைக் காட்சித்துணிப்பு எனலாம்.

167) தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம். இதனை_________________என்கிறோம்.

A) மீ சேய்மைக் காட்சித்துணிப்பு

B) சேய்மைக் காட்சித்துணிப்பு

C) நடுக் காட்சித்துணிப்பு

D) அண்மைக் காட்சித்துணிப்பு

விளக்கம்: பேருந்தை விட்டு இறங்கி நாம் தெருவுக்குள் நடந்து வரும்போது எதிர்ப்படும் ஆட்களை நாம் இடுப்பு அளவில் மட்டுமே கவனப்படுத்துகிறோம். இங்குக் கண்ஆளை முழுதாகப் பார்த்தாலும் நம் கவனம், இடுப்புவரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதை நடுக் காட்சித்துணிப்பு என்கிறோம்.

168) அல்லல் படுப்பதூஉம் இல் – எவரோடு பழகினால்?

A) வாள்போல் பகைவர்

B) மெய்ப்பொருள் காண்பவர்

C) எண்ணியாங்கு எய்துபவர்

D) தீயினத்தார்

விளக்கம்: நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்லை

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.

169) கள்ளுண்ட மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது என்பது?

A) உறங்கியவனிடம் பேசுதல்

B) இரவில் விளக்கில்லாமல் தேடுவது

C) நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது

D) கண்ணின்றி காண முயல்வது.

விளக்கம்: களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று

கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

170) நாம் வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம். இது _____________காட்சித்துணிப்பு எனப்படும்.

A) மீ சேய்மைக் காட்சித்துணிப்பு

B) சேய்மைக் காட்சித்துணிப்பு

C) நடுக் காட்சித்துணிப்பு

D) அண்மைக் காட்சித்துணிப்பு

விளக்கம்: நாம் வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம். அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது. இது அண்மைக் காட்சித்துணிப்பு என்கிறோம்.

171) கூற்று: திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.

காரணம்: திரைப்படத்தில் நடிப்பவரை முன், பின், மேல் என்ற பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்தை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: திரைப்படத்தில் நடிப்பவரை முன், பின், மேல் என்ற பல கோணங்களில் படப்பிடிப்புக்கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம்பிடித்துத் திரையில் காட்ட முடியும். இதனால் திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என் வகைப்படுத்துகிறோம்.

172) சரியான கூற்றை தெரிவு செய்க.

A) கபிலன் திறமையானவர் என்று குமரன் தெரியும்.

B) நேற்று முதல் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

C) உங்களுக்கு யார் நன்மை என நினைக்கிறீர்கள்

D) முருகன் வேகமாக சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

விளக்கம்: கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.

நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்

முருகன் வேகமாக சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

173) வை.மு.கோதைநாயகி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

2. தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார்.

3. தனக்கு ஓரளவு மட்மே எழுத தெரியும் என்பதால் தோழி மூலம் நாடகம் எழுதினார்.

4. கதை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்

A) 1, 4 சரி

B) 1, 2 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

2. தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார்.

3. தனக்கு ஓரளவு மட்மே எழுத தெரியும் என்பதால் தோழி மூலம் நாடகம் எழுதினார்.

4. கதை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்

வை.மு.கோதைநாயகி – வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி (1901-1960).

174) சார்லி சாப்ளினால் தொடங்கப்பட்ட பட நிறுவனம் எது?

A) தி கோல்டு ரஷ்

B) தி சர்க்கஸ்

C) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

D) தி கிட்

விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர். “யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.

175) அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?…….என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) கவிமணி

விளக்கம்: அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? – பாரதிதாசன்.

176) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்

B) தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்

C) ஆமந்திரிகை – வலக்கை வாத்தியம்

D) உத்தரப் பலகை – மேல் கைப் பெருவிரல்

விளக்கம்: குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்

தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்

ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்

உத்தரப் பலகை – மேல் கைப் பெருவிரல்

177) எந்த மாநிலத்தில் உள்ள ஹெக்கோடு என்னும் சிற்றூர் கிராம மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை?

A) ஆந்திரா

B) கர்நாடகா

C) தமிழ்நாடு

D) மஹாராஷ்டிரா

விளக்கம்: கர்நாடகா மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை. 1977இல் ஒரு முயற்சியாக உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.

178) ஆராய்ந்து சொல்கிறவர் யார்?

A) அரசர்

B) சொல்லியபடி செய்பவர்

C) தூதுவர்

D) உறவினர்

விளக்கம்: கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து

எண்ணி உரைப்பான் தலை

தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர்.

179) கூற்று: நாடகம் என்பது ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.

காரணம்: நாடகத்திலிருந்தே பிறந்தது திரைப்படம்.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.

180) சார்லி சாப்ளினுக்கு எந்த வகையில் அமெரிக்க ஆஸ்கார் விருது வழங்கியது?

A) சிறந்த இயக்குனர்

B) சிறந்த தயாரிப்பாளர்

C) சிறந்த நடிகர்

D) வாழ்நாள் சாதனையாளர்

விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது..

181) சார்லி சாப்ளின் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. லிட்டில் டிராம்ப் என்பது அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றமாகும்.

2. தி கிட் என்பது அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை பற்றிய திரைப்படமாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தௌ தௌ கால்சட்டையும் இறுக்கமான கோட்டும் துண்டு மீசையும் பதுவிதமான சேட்டையும் கொண்ட ‘லிட்டில் டிராம்ப்’ என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது. வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ‘தி கிட்’ என்ற வெற்றிப் படமாக்கினார்.

182) ஹிட்லரை விமர்சித்து வந்த முதல் திரைப்படம் எது?

A) தி கிரேட் டிக்டேட்டர்

B) சிட்டி லைட்ஸ்

C) மாடர்ன் டைம்ஸ்

D) தி கோல்டு ரஷ்

விளக்கம்: ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல்படம் – தி கிரேட் டிக்டேட்டர். ‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல. நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதைப் படம் உணர்த்தியது.

183) கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – என்ற நூலை எழுதியவர் யார்?

A) தமிழண்ணல்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) சுஜாதா

D) புதுமைப்பித்தன்

விளக்கம்: கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்.

மெய்ப்பாடு – தமிழண்ணல்

184) பெருங்காப்பியத்திற்கு எத்தனை உறுப்புகள் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்?

A) 10

B) 15

C) 18

D) 14

விளக்கம்: மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவனின் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய 18 உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.

185) கூற்றுகளை ஆராய்க.

1. படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.

2. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.

2. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார்.

186) எந்த ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் பெஷாவர், லாகூர், லக்னோ போன்ற நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு மதராஸ் திரும்பினார்?

A) 1910

B) 1909

C) 1911

D) 1912

விளக்கம்: திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதாராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909-இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.

187) அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு

முரசு எழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப….. என்ற வரியில் அரசு உவா என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அரசரின் ஆணை

B) பட்டத்து யானை

C) தலைக்கோல்

D) இன்னிசைக்கருவி

விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். அரசு உவா என்றால் பட்டத்து யானை என்று பொருள்.

188) இந்திரனின் மகன் யார்?

A) அர்சுனன்

B) சயந்தன்

C) நகுலன்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: இந்திரனின் மகன் சயந்தன் ஆவார். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் தலைக்கோலை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.

189) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப…..என்ற வரியில் குயிலுவ மாககள் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நடனமாடும் பெண்கள்

B) இசைக் கருவிகள் வாசிப்போர்

C) அரசவையில் வீற்றிருக்கும் அமைச்சர்கள்

D) நடனம் காண வந்த பார்வையாளர்கள்

விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதில் குயிலுவ மாக்கள் என்றால் இசைக் கருவிகள் வாசிப்போர் என்று பொருள்.

190) கீழ்க்காண்பனவற்றில் எதனை ஒற்றைக் கோணக்கலை என்று கூறுவர்?

A) நாடகம்

B) திரைப்படம்

C) நடனம்

D) மேற்கூறிய அனைத்தும்

விளக்கம்: திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை எனக் கூறுவர்.

191) Narrator – என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கதை எழுத்தர்

B) வசன எழுத்தர்

C) கதைசொல்லி

D) ஒலிப்பதிவாளர்

விளக்கம்: திரையரங்கில் மௌனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் என்று பெயர்.

Narrator – கதைசொல்லி.

192) ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப்படத்தை பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

2. இப்படம் ஹிட்லரை உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

3. வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் இது.

4. இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் இது.

A) 1, 2 சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

2. இப்படம் ஹிட்லரை உருவகப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

3. வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் இது.

4. இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் இது.

193) உலகத் திரைப்பட வரலாறு 1, 2, 3 – என்ற நூலை எழுதியவர் யார்?

A) செழியன்

B) இரா.காசிராசன்

C) அஜயன் பாலா

D) அம்ஷன் குமார்

விளக்கம்: அஜயன் பாலா – உலகத் திரைப்பட வரலாறு 1, 2, 3

செழியன் – உலக சினிமா 1, 2 பேசும் படம்

இரா.காசிராசன் – காப்பியத்தமிழ்

அம்ஷன் குமார் – சினிமா இரசனை

194) கீழ்க்காணும் எது காப்பியத்தைக் குறிக்கிறது?

A) பொருட்டொடர்நிலைச் செய்யுள்

B) கதைச் செய்யுள்

C) அகலக்கவி

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்:

1. பொருட்டொர்நிலைச் செய்யுள்

2. கதைச் செய்யுள்

3. அகலக்கவி

4. தொடர்நடைச்செய்யுள்

5. விருத்தச் செய்யுள்

6. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

7. மகாகாவியம்

195) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடன்உறைத் தற்று – இக்குறட்பாவில் குடங்கு என்பதன் பொருள் என்ன?

A) குடம்

B) உறவினர்

C) உடன்பாடு

D) குடிசை

விளக்கம்: குடங்கு – குடிசை. அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும்.

196) சூளாமணி என்னும் நூலை சி.வை.தாமோதரனார் எப்போது பதிப்பித்தார்?

A) 1890

B) 1899

C) 1895

D) 1898

விளக்கம்: சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் முறை சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.

197) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) Artist – கவின்கலைஞர்

B) Animation – இயங்குப்படம்

C) Newsreel – செய்திப்படம்

D) Cinematography – ஒலி விளைவு

விளக்கம்: Artist – கவின்கலைஞர்

Animation – இயங்குப்படம்

Newsreel – செய்திப்படம்

Cinematography – ஒலி பதிவு

Sound Effect – ஒலி விளைவு.

198) மயிலைநாதர் என்பவர் கீழ்க்காணும் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

A) தொல்காப்பியம்

B) நன்னூல்

C) தண்டியலங்காரம்

D) அகத்தியம்

விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும், தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.

199) கூற்றகளை ஆராய்க.

1. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தொல்காப்பியம்.

2. தண்டியலங்காரம் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.

200) சார்லி சாப்ளினின் வறுமைமிக்க இளமை வாழ்வை எந்த பெயரில் வெற்றிப்படமாக்கினார்?

A) தி கோல்டு ரஷ்

B) தி சர்க்கஸ்

C) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

D) தி கிட்

விளக்கம்: சார்லி சாப்ளின் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை மறக்க அவர் தயார் அவருக்கு கதை சொன்னார். அதனால் அவர் ஒரு கலைஞராக செதுக்கப்பட்டார். அவரின் வறுமைமிக்க இளமை வாழ்வை “தி கிட்” என்ற பெயரில் வெற்றிப்படமாக்கினர்.

201) Multiplex complex – என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஒளிப்பதிவு அரங்கம்

B) திரைப்பட அரங்கம்

C) ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்

D) பல்தொழில்நுட்ப வளாகம்

விளக்கம்: Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்.

202) பேசாப்படங்கள் எடுத்து வந்த சார்லி சாப்ளின் பேசும் படங்களில் வந்த காலத்தில் எந்த பேசாப் படத்தின் மூலம் எதிரிகளின் எதிர்பார்ப்பை முறியடித்தார்?

A) தி கோல்டு ரஷ்

B) தி சர்க்கஸ்

C) சிட்டி லைட்ஸ்

D) தி கிட்

விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார்.

203) சார்லி சாப்ளின் எந்த திரைப்படத்தின் மூலம் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்?

A) மார்டன் டைம்ஸ்

B) தி சர்க்கஸ்

C) சிட்டி லைட்ஸ்

D) தி கிட்

விளக்கம்: மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார். பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புகளை முறியடித்து ‘சிட்டி லைட்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டார். “மார்டன் டைம்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்.

204) சார்லி சாப்ளினின் சாதனைப்படமான “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற திரைப்படம் எப்போது வெளியானது?

A) 1930

B) 1940

C) 1935

D) 1945

விளக்கம்: சார்லி சாப்ளினுக்கு பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. அவரது சாதனைப்படமான “தி கிரேட் டிக்டேட்டர்” என்ற திரைப்படம் 1940இல் வெளியானது.

205) Artist – என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) பாடாசிரியர்

B) கவின்கலைஞர்

C) எழுத்தாசிரியர்

D) கதையாசிரியர்

விளக்கம்: Artist – கவின் கலைஞர்.

Animation – இயங்குபடம்

Newsreel – செய்திப்படம்

Cinematography – ஒளிப்பதிவு.

206) எந்த ஆண்டு இலண்டன் சென்றுகொண்டிருந்தபோது பொதுவுடையமையாளரான சார்லி சாப்ளினை அமெரிக்கா நாடு கடத்தியது?

A) 1940

B) 1942

C) 1945

D) 1952

விளக்கம்: 1952-இல் சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது. பின் சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தன் தவற்றை உணர்ந்த அமெரிக்கா, மீண்டும் அங்கு வந்துவிடுமாறு சாப்ளினை வேண்ட, சாப்ளினும் ஒத்துக்கொண்டு சென்றார்.

207) காட்சிகளை மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும். இவ்வாறு காட்டுவதை______________என்பர்?

A) மீ அண்மைக் காட்சித்துணிப்பு

B) அண்மைக் காட்சித்துணிப்பு

C) சேய்மைக் காட்சிதுணிப்பு

D) குலஷோவ் விளைவு

விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது. காட்சிகளை மாற்றி வைப்பதன்மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்ட முடியும். இவ்வாறு காட்டுவதைக் “குலஷோவ் விளைவு” என்பார்கள்..

208) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொருள்

B) தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்

C) அரசு உவா – அரசரது ஆணை

D) பரசினர் – வாழ்த்தினர்

விளக்கம்: நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொருள்

தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்

அரசு உவா – பட்டத்து யானை

பரசினர் – வாழ்த்தினர்

209) காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. EPOS என்பதன் பொருள் என்ன?

A) சொல்

B) பாடல்

C) காவியம்

D) A மற்றும் B

விளக்கம்: காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது.

210) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கள்ளுண்பவர் – நஞ்சு உண்பவர்

B) துன்பத்தை உண்டாக்குவது – சூது

C) கள்ளுண்பவரை திருத்துதல் – கடலில் முத்தெடுத்தல் போன்றது

D) இயல்பான நற்பண்பை கெடுப்பது – சூது

விளக்கம்: கள்ளுண்பவர் – நஞ்சு உண்பவர்

துன்பத்தை உண்டாக்குவது – சூது

கள்ளுண்பவரை திருத்துதல் – நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது

இயல்பான நற்பண்பை கெடுப்பது – சூது

211) பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென

நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்து……..என்ற வரியில் பூங்கொடி என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) கண்ணகி

B) மாதவி

C) மணிமேகலை

D) கோப்பெருந்தேவி

விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம் ஆகும். இங்கு பூங்கொடி என்பது மாதவியை குறிக்கும். பொன்னால் செய்யப்பட்ட பூங்கொடி வந்து நடனமாடியது போல் மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.

212) ஈட்டுப்புகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்

வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி

நாயென்றாள், நீ என்றேன் நான் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) புறநானூறு

B) நற்றிணை

C) நந்திக்கலம்பகம்

D) அகநானூறு

விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் நந்திக்கலம்பகம் ஆகும். புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே நீ எங்கள் வீட்டின்முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என்தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள். பிறர் நரி ஊளையிட்டது என்றனர். தோழியோ, நாய் குரைத்தது என்றாள். இல்லை நீ என்றேன் நான் – என்பது இவ்வரிகளின் பொருள் ஆகும். இப்பாடல் நகை (சிரிப்பு)-க்கு எடுத்துக்காட்டாகும்.

213) சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் தண்ணீர் வழங்கப்பட்டதால், தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணி உயிர்துறந்த அரசன் யார்?

A) சேரன் செங்குட்டுவன்

B) நெடுஞ்சேரலதன்

C) சேரன் கணைக்கால் இரும்பொறை

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் உயிர்துறந்தார்.

214) பொருத்துக.

அ. ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை

ஆ. அரசு உவா – 2.. மூங்கில்

இ. கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்

ஈ. கழை – 4. மூங்கில்

A) 3, 1, 4, 2

B) 4, 2, 1, 3

C) 1, 2, 3, 4

D) 4, 3, 2, 1

விளக்கம்: ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்

அரசு உவா – பட்டத்து யானை

கழஞ்சு – எடையளவு

கழை – மூங்கில்

215) பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுப்பது எது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) பொய்பேசுதல்

B) சூது

C) ஆசை

D) திருடுதல்

விளக்கம்: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்

சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

216) உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடன்உறைந் தற்று – என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி என்ன?

A) உருவக அணி

B) உவமை அணி

C) ஏகதேச உருவக அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடன்உறைந் தற்று – உவமை அணி

அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது.

217) பெருங்காப்பியங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளது எது?

A) தமிழ்விடு தூது

B) பொருள்தொகை நிகண்டு

C) திருத்தணிகை உலா

D) B மற்றும் C

விளக்கம்: பொருள்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன.

218) துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுஉண்பார் கள்உண் பவர் – இக்குறட்பாவில் துஞ்சினார் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நஞ்சு உண்பவர்

B) இறந்தவர்

C) உறங்கியவர்

D) பயந்தவர்

விளக்கம்: துஞ்சினார் – உறங்கியவர். உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.

219) களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று – என்ற வரிகளில் களித்தானை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மகிழ்ச்சியுற்றவனை

B) உறங்கியவனை

C) கள்ளுண்டு மயங்கியவனை

D) நீரில் மூழ்கியவனை

விளக்கம்: களித்தானை – கள்ளுண்டு மயங்கியவனை. கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

220) எந்த திரைப்படத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன?

A) மாடர்ன் நியூஸ்

B) மாடர்ன் டைம்ஸ்

C) தி கிரேட் டிக்டேட்டர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மாடர்ன் டைம்ஸ் (1936) திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்துச் செல்கின்றன. அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர். தொழில்மயப்பட்ட சமூகத்தில் மனிதர், மந்தைகள் ஆவதை இக்காட்சிகளின் இணைப்பு உணர்த்துகிறது.

221) ஐம்பெருங்காப்பியம் என்ற சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் யார்?

A) சிவஞான முனிவர்

B) மயிலைநாதர்

C) ஆறுமுகநாவலர்

D) இளம்பூரணர்

விளக்கம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்ச காப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin