General Tamil

12th Tamil Unit 5 Questions

12th Tamil Unit 5 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.

1) கூற்றுகளை ஆராய்க

1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.

2. இவரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன.

3. திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.

4. சமுதாயத்தின் பொருளாதார, கலை, பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.

A) 1, 2 சரி

B) 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.

2. இவரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன.

3. திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.

4. சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.

2) தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது?

A) மதுரை

B) சென்னை

C) தூத்துக்குடி

D) மும்பை

விளக்கம்: நகரங்கள், சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும் நிகழ்கால வாழ்விற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் அவை துணைநிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.

3) இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?

A) தோப்பில் முகமது மீரான்

B) அசோகமித்திரன்

C) ராமச்சந்திர வைத்தியநாத்

D) ஊரன் அடிகள்

விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் – தோப்பில் முகமது மீரான்

ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

4) வளர்தலம் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) வினையெச்சம்

விளக்கம்: வளர்தலம் – வினைத்தொகை.

வினைத்தொகை – முக்காலத்திற்கும் ஏற்றபடி சொற்களை எழுத முடியும்.

வளர்தலம், வளர்ந்த தலம், வளரும் தலம்.

5) சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல….. என்ற வரிகளில் பாரதிதாசன் குறிப்பிடும் ஒரு வாய்க்கால் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது?

A) கூவம்

B) பக்கிங்காம் கால்வாய்

C) பாலாறு

D) புழல்

விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,

சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல

என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி – பின்பு

தீவிரப் பட்டது வேகம்

என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.

6) குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது?

A) 2 இலட்சம்

B) 1 இலட்சம்

C) ஐம்பதாயிரம்

D) 10 இலட்சம்

விளக்கம்: இன்று சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுபுறப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன. சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது.

7) கிழக்கிந்திய நிறுவனங்கள் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12-13-ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்தவைகளில் பொருந்தாதது எது?

A) சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு)

B) நுங்கம்பாக்கம்

C) மாதவரம்

D) மயிலாப்பூர்

விளக்கம்: சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12-13ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன.

8) எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம், நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது?

A) கி.பி (பொ.ஆ).1647

B) கி.பி (பொ.ஆ).1613

C) கி.பி (பொ.ஆ).1615

D) கி.பி (பொ.ஆ).1858

விளக்கம்: கி.பி (பொ.ஆ).1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது.

9) கொற்றலையாறு, கூவம், அடையாறு, பாலாறு இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய கால்வாய் எது?

A) காட்டன் கால்வாய்

B) விருகம்பாக்கம் கால்வாய்

C) ஓட்டேரி நல்லா

D) பக்கிங்காம் கால்வாய்

விளக்கம்: சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடியது பக்கிங்காம் கால்வாய் ஆகும்.

10) மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலரான யார் ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுந்தார்?

A) தாமஸ் மன்றோ

B) செயின்ட் ஜார்ஜ்

C) பிரான்சிஸ் டே

D) சர்தாமஸ் மன்றோ

விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.

11) கூற்றுகளை ஆராய்க

1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.

2. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்து.

3. வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.

4. மதராசப்பட்டினம் என்ற இப்பகுதி விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.

A) 1, 3 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.

2. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்து.

3. வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.

4. மதராசப்பட்டினம் என்ற இப்பகுதி விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.

12) பின்னாளில் மாநிலக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட கல்லூரி எது?

A) கிறித்துவக் கல்லூரி

B) பிரசிடென்சி பள்ளி

C) சென்னைக் கோட்டைக் கல்லூரி

D) புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி

விளக்கம்: 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி, பின்னாளில் மாநிலக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.

கிறித்துவக் கல்லூரி – 1837

சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812

புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715

13) ஆங்கிலேயரின் நிதியுதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் எது?

A) இராணி மேரிக் கல்லூரி

B) சென்னைப் பல்கலைக்கழகம்

C) பச்சையப்பன் கல்லூரி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்:ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.

14) தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டம் எது?

A) 17ஆம் நூற்றாண்டு

B) 18ஆம் நூற்றாண்டு

C) 19ஆம் நூற்றாண்டு

D) 14ஆம் நூற்றாண்டு

விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில், கல்வி வளர்ச்சியின் உடனிகழ்வான அச்சுப்பரவல், நாளிதழ்ப் பெருக்கம் ஆகியவை சென்னையின் அறிவு வளர்ச்சிக்குத் துணை நின்றன. இதுவே, தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டமாகும்.

15) இந்தியாவின் முதல் பொதுநூலகம் எது?

A) கன்னிமாரா நூலகம்

B) தஞ்சை சரஸ்வதி மகால்

C) சென்னை பொது நூலகம்

D) உ.வே.சா. நூலகம்

விளக்கம்: இந்தியாவின் முதல் பொதுநூலகமான கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகமாகும்.

16) தமிழ்நாடு ஆவணக்காப்பகம் கீழக்காணும் எந்த பாணியில் அமைக்கப்பட்டுள்ளது?

A) இந்திய-இஸ்லாமிய

B) இந்திய-பாரசீக

C) இந்திய-ஐரோப்பிய

D) இந்ததோ-சாரசனிக்

விளக்கம்: ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம்கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய ‘மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்’ சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

17) எட்டுத்தொகை நூல்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க (அகம் புறம் பற்றியதில்)

A) பதிற்றுப்பத்து

B) புறநானூறு

C) பரிபாடல்

D) குறுந்தொகை

விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்

புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.

18) எங்கு கிடைத்த கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு என கூறலாம்?

A) பல்லாவரம்

B) மயிலாப்பூர்

C) கூடுவாஞ்சேரி

D) புழல்

விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.

19) குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது. அங்கு ஓடக்கூடிய எந்த ஆறு மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று என கூறப்படுகிறது?

A) கொற்றலை ஆறு

B) பாலாறு

C) தாமிரபரணி

D) கூவம்

விளக்கம்: சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது. அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று என கூறப்படுகிறது.

20) கூற்றுகளை ஆராய்க.

1. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

2. நெசவாளர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.

3. எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைப்பட்டன.

4. மயிலாப்பூர் கி.பி. (பெ.ஆ) 2-ஆம் நூற்றாண்டில் ‘பாகியான்’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

2. நெசவாளர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.

3. எழும்புர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைப்பட்டன.

4. மயிலாப்பூர் கி.பி. (பெ.ஆ) 2-ஆம் நூற்றாண்டில் ‘தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

21) மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) குணங்குடி மஸ்தான் சாகிபு

B) ஆறுமுக நாவலர்

C) வள்ளலார்

D) திருஞானசம்பந்தர்

விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும் – வள்ளலார்

துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும் என்றும் கந்தவேலை நான் மறவாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் சென்னை கந்தகோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை பாடுகிறார்.

22) சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா – என்று பாடியவர் யார்?

A) வாணிதாசன்

B) கவிமணி

C) பாரதிதாசன்

D) சுப்புரத்தினதாசன்

விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா

நன்மை செய்பவரே – உலகம்

நாடும் மேற்குலத்தார்

தின்மை செய்பவரே – அண்டித்

தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி

23) பொருத்துக.

அ. சென்னை, வடசென்னை – 1. கூவம்

ஆ. மத்திய சென்னை – 2. கொற்றலை

இ. தென்சென்னை – 3. அடையாறு

A) 1, 2, 3

B) 2, 1, 3

C) 3, 1, 2

D) 2, 3, 1

விளக்கம்: சென்னை, வடசென்னை – கொற்றலையாறு

மத்திய சென்னை – கூவம்

தென்சென்னை – அடையாறு

24) படிமம் என்பது எவ்வகையான உவமையை பயன்படுத்திக்கொள்கிறது?

A) காட்சி தருகிற உவமைகள்

B) காட்சி தரா வெறும் உவமைகள்

C) A மற்றும் B

D) மெய் உவமை

விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.

25) கூவம் ஆற்றினை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?

A) மயிலாப்பூர் ஆறு

B) திருவல்லிக்கேணி ஆறு

C) கொற்றலையாறு

D) அடையாறு

விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெத்;தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. கூவம் ஆற்றை, ‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.

26) திருவல்லிக்கேணியில் கிடைக்கும் யாருடைய கல்வெட்டு அப்பகுதி பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது?

A) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

B) இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவன்

C) இராஜசிம்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம். திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு அப்பகுதி பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது

27) எங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரி, இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது?

A) பல்லாவரம்

B) அத்திரம்பாக்கம்

C) கூடுவாஞ்சேரி

D) புழல்

விளக்கம்: பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரி, இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன.

28) இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் யாரால் மல்லியர்பா என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது?

A) யுவான்சுவாங்

B) பாகியான்

C) தாலமி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

29) சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?

A) தாமஸ் பிட்

B) எலியேல்

C) சர் தாமஸ் மன்ரோ

D) வில்லியம் பெண்டிங்

விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணம் உருவாக்கப்பட்டது. ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.

30) வள்ளல் பச்சையப்பர் எந்த நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று அவரது நாட்குறிப்பில் உள்ளது?

A) கூவம்

B) பாலாறு

C) புழல் ஏரி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று அவரது நாட்குறிப்பில் உள்ளது.

31) எப்போது சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து பிரான்சிஸ் டே என்ற ஆங்கில அதிகாரி மயிலாப்பூரின் வடக்கே இருந்த சில குப்பங்களை விலைக்கு வாங்கினார்?

A) 22.08.1642

B) 22.08.1639

C) 15.08.1642

D) 15.08.1639

விளக்கம்: விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639ஆம் நாளில் பிரான்சிஸ் டே, மயிலாப்பூரின் வடக்கே இருந்த சில குப்பங்களை விலைக்கு வாங்கினார்.

32) தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1854

B) 1856

C) 1853

D) 1855

விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.

33) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை – என்ற வரியில் மடநல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) இளமை பொருந்திய பெண்கள்

B) இளமை பொருந்திய ஆண்கள்

C) சிறுவர்கள்

D) சிறுமியர்கள்

விளக்கம்: மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள் என்று பொருள். இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர், திருமயிலை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

34) ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) மாணிக்கவாசகர்

D) வள்ளலார்

விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும் – வள்ளலார.

ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடியை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று வள்ளலார் கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை கேட்கிறார்.

35) மாந்தோப்பு வசந்ததத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) கவிமணி

D) ந.பிச்சமூர்த்தி

விளக்கம்: மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – ந.பிச்சமூர்த்தி.

36) பத்துப்பாட்டு நூல்களில் புறம் பற்றி பேசாத நூல் எது?

A) மதுரைக்காஞ்சி

B) பொருநராற்றுப்படை

C) பட்டினப்பாலை

D) திருமுருகாற்றுப்படை

விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.

37) எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றிய பேசாத நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) புறநானூறு

C) பரிபாடல்

D) குறுந்தொகை

விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்

புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை

38) ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எது?

A) புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி

B) சென்னைக் கோட்டைப் பள்ளி

C) கிறித்துவப் பள்ளி

D) பிரசிடென்ச pபள்ளி

விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.

39) திருவள்ளுவர் என்ற நூலை எழுதியவர் யார்?

A) சோமசுந்தர பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) வாணிதாசன்

D) கவிமணி

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:

1. தசரதன் குறையும் கைகேயி நிறையும்

2. திருவள்ளுவர்

3. சேரர் தாயமுறை

4. தமிழும் தமிழரும்

40) உள்ளொன்று வைத்துப் புறபொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) ஆறுமுகநாவலர்

B) சோமசுந்தரபாரதியார்

C) திருஞானசம்பந்தர்

D) வள்ளலார்

விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும் – வள்ளலார்.

41) திருமயிலை அழைக்கப்படும் நகரம் எது?

A) திருவாரூர்

B) திருப்பரங்குன்றம்

C) திருத்தணிகை

D) மயிலாப்பூர்

விளக்கம்: கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் ‘திருமயிலை’ என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். அங்குள்ள இறைவனுக்குக் கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது.

42) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை – என்ற வரியில் மலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆரவார விழா

B) திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா

C) எழுச்சி தரும் விழா

D) விழாக்கள் நிறைந்த

விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த

கலிவிழா – எழுச்சி தரும் விழா

பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா

ஒலிவிழா – ஆரவார விழா

43) அம்மூவனார் பாடிய பாடல்களை கீழ்க்காணும் எந்த எட்டுத்தொகை நூலில் காண முடியாது?

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) ஐங்குறுநூறு

D) பரிபாடல்

விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

44) மாமயிலை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

A) உவமைத்தொகை

B) வினைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) உரிச்சொற்றொடர்

விளக்கம்: மாமயிலை – உரிச்சொற்றொடர்.

மா என்ற எழுத்து ஒரு சொல்லுடன் சேர்ந்து வந்தால் அது உரிச்சொற்றொடர் எனப்படும்.

45) பூம்பாவாய் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.

A) பூம் + பாவாய்

B) பூ + பாவாய்

C) பூம்பு + ஆவாய்

D) பூம்பா + வாய்

விளக்கம்: பூம்பாவாய் – பூ + பாவாய்.

விதி: பூப்பெயர்முன் இனமென்மையும் தோற்றும் – பூம்பாவாய்.

46) வெரீஇய – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) சொல்லிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) இன்னிசை அளபெடை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வெரீஇய – சொல்லிசை அளபெடை

அளபெடை மூன்று வகைப்படும். அவை,

1. செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை

2. சொல்லிசை அளபெடை

3. இன்னிசை அளபெடை

சொல்லிசை அளபெடை – இ என்னும் எழுத்தில் முடிய வேண்டும் .

வெரீஇய – இதில் ரீ-ர் + ஈ. இதன் இன எழுத்து இ. என்றவாறு வர வேண்டும்.

அதாவது நெடில் ஈ-ம் அதற்கு அடுத்து குறில் இ-ம் வரவேண்டும்.

47) இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?

A) தோப்பில் முகமது மீரான்

B) அசோகமித்திரன்

C) ராமச்சந்திர வைத்தியநாத்

D) ஊரன் அடிகள்

விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் – தோப்பில் முகமது மீரான்

ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

48) பொருத்துக

அ. களிற்றியானை நிரை – 1. 120 பாடல்கள்

ஆ. மணிமிடை பவளம் – 2. 100 பாடல்கள்

இ. நித்திலக்கோவை – 3. 180 பாடல்கள்

A) 1, 3, 2

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 3, 2.1

விளக்கம்: களிற்றியானை நிரை – 120 பாடல்கள்

மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்

நித்திலக்கோவை – 100 பாடல்கள்

49) பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்கவேண்டும் – என்ற வரிகளில் நினது என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) முருகன்

B) சிவபெருமான்

C) திருஞானசம்பந்தர்

D) வள்ளலார்

விளக்கம்: பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும் – வள்ளலார்.

மேற்காணும் வரியில் நினது என்று குறிப்பிடப்படுபவர் சென்னை கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேள் ஆவார்.

50) இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை முறையில் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கட்டடம் எது?

A) உயர்நீதி மன்ற வளாகம்

B) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

C) மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்

D) சேப்பாக்கம் அரண்மனை

விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.

51) Affidavit என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) ஆணையுறுதி சட்டம்

B) ஆணையுறுதி ஆவணம்

C) அதிகார எல்லை

D) தண்டணை

விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்

Conviction – தண்டனை

Jurisdiction – அதிகார எல்லை.

52) கூற்றுகளை ஆராய்க.

1. வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன.

2. தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன.

3. 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது

4. 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 19000 ஆகும்.

A) 1, 2 மட்டும் சரி

B) 3, 4 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: வடசென்னைப் பகுதிகள்; மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

53) பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது?

A) முதலாம் இராஜராஜன்

B) முதலாம் மகேந்திரவர்மன்

C) இராஜசிம்மன்

D) நந்திவர்மன்

விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.

54) கூற்றுகளை ஆராய்க

1. அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

2. புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை

55) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி________________என அழைக்கப்பட்டது?

A) தமிழர் நகரம்

B) இந்தியர் நகரம்

C) வெள்ளையர் நகரம்

D) கருப்பர் நகரம்

விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.

56) மயிலாப்பூரின் சிறப்புகளில் பொருந்தாதது எது?

A) மடலார்ந்த தெங்கின் மயிலை

B) இருளகற்றும் சோதித் தொன்மயிலை

C) கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:

1. மடலார்ந்த தெங்கின் மயிலை

2. இருளகற்றும் சோதித் தொன்மயிலை

3. கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்

4. கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்

5. கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்

6. மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்

7. ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

57) மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களில் பொருந்தாதது எது?

A) பங்குனி – பங்குனி உத்திர விழா

B) மாசி – கடலாட்டு விழா

C) புரட்டாசி – ஓண விழா

D) மார்கழி – திருவாதிரை விழா

விளக்கம்: பங்குனி – பங்குனி உத்திர விழா

மாசி – கடலாட்டு விழா

ஐப்பசி – ஓண விழா

மார்கழி – திருவாதிரை விழா

58) அம்மூவனார் எந்த திணை பாடல்களை பாடுவதில் வல்லவர்?

A) நெய்தல்

B) முல்லை

C) மருதல்

D) பாலை

விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

59) கூற்று: படிமம் என்பது காட்சிதரும் உவமைகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது.

காரணம்: படிமம் காட்சி தரும் உத்தி ஆகும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.

60) தோப்பில் முகமது மீரான் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.

2. தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பவர்

3. புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்கில் இயங்கி வருபவர்

4. இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

5. துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

A) 1, 2, 3 சரி

B) 4, 5 சரி

C) 1, 2, 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காயப்பட்டணம் என்னும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.

2. தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பவர்

3. புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்கில் இயங்கி வருபவர்

4. இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

5. துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

61) சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல….. என்ற வரிகளில் தோணி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) படகு

B) கப்பல்

C) மரப்பலகை

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: தோணி – படகு. பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,

சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல

என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி – பின்பு

தீவிரப் பட்டது வேகம்

என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.

62) பொருத்துக.

அ. புதுமைப்பித்தன் – 1. நெல்லைத்தமிழ்

ஆ. சண்முகசுந்தரம் – 2. கோவைத்தமிழ்

இ. ஜெயகாந்தன் – 3. சென்னைத் தமிழ்

ஈ. தி.ஜானகிராமன் – 4. தஞ்சைத் தமிழ்

A) 2, 1, 3, 4

B) 1, 2, 3, 4

C) 4, 1, 2, 3

D) 1, 2, 4, 3

விளக்கம்: புதுமைப்பித்தன் – நெல்லைத்தமிழ்

சண்முகசுந்தரம் – கோவைத்தமிழ்

ஜெயகாந்தன் – சென்னைத் தமிழ்

தி.ஜானகிராமன் – தஞ்சைத் தமிழ்

63) அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அகநானூறு 3 பிரிவுகளை உடையது.

1. களிற்றியானை நிரை – 120 பாடல்கள்

2. மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்

3. நித்திலக்கோவை – 100 பாடல்கள்

64) கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் – என்ற வரியில் கலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆரவார விழா

B) திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா

C) எழுச்சி தரும் விழா

D) விழாக்கள் நிறைந்த

விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த

கலிவிழா – எழுச்சி தரும் விழா

பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா

ஒலிவிழா – ஆரவார விழா.

65) தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) அருணகிரியார்

C) குணங்குடி மஸ்தான் சாகிபு

D) வள்ளலார்

விளக்கம்: தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே – வள்ளலார்.

66) மதராசப்பட்டிணம் என்பது கீழ்க்காணும் எது இணைந்த பகுதி ஆகும்?

1. வெள்ளையர் நகரம்

2. கருப்பர் நகரம்

3. வண்ணாரப்பேட்டை

4. சிந்தாதிரிப்பேட்டை

A) 1, 3

B) 1, 2

C) 3, 4

D) 1, 2, 3, 4

விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது. இவ்விருப் பகுதிகளும் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.

67) சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர் என்று அறியப்படுபவர் எங்கு பிறந்தார்?

A) சென்னை

B) மருதூர்

C) சிதம்பரம்

D) கந்தகோட்டம்

விளக்கம்: சமரச சன்மாரக்;க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான வள்ளலார் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.

68) கரிசல் இலக்கியம் என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) கோவில்பட்டி

B) சென்னை

C) கோவை

D) மதுரை

விளக்கம்: தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன. கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி இலக்கியம் படைத்தார். தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “கரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.

69) சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி – என்ற வரியில் தெளிர்ப்ப என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஒலிப்ப

B) ஒளிர

C) பரவ

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தெளிர்ப்ப – ஒலிப்ப.

உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.

70) நன்மை செய்பவரே – உலகம்

நாடும் மேற்குலத்தார் – என்று பாடியவர் யார்?

A) வாணிதாசன்

B) கவிமணி

C) பாரதிதாசன்

D) சுப்புரத்தினதாசன்

விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா

நன்மை செய்பவரே – உலகம்

நாடும் மேற்குலத்தார்

தின்மை செய்பவரே – அண்டித்

தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.

71) திருவருட்பா எத்தனை திருமுறைகளாகப் பகுக்கப்பட்டடுள்ளது?

A) 4

B) 6

C) 9

D) 10

விளக்கம்: திருவருட்பா 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாட்டு ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

72) அகநானூறு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட முதல் நூல்.

2. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

3. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானை நிரை (120), மணிமிடை பவளம் (180), நித்திலக்கோவை (100), எனப் பாடல்கள் உள்ளன.

4. அகம், அகப்பாட்டு எனவும் வழங்கப்படுகிறது.

A) 1, 4 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட முதல் நூல்.

2. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

3. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானை நிரை (120), மணிமிடை பவளம் (180), நித்திலக்கோவை (100), எனப் பாடல்கள் உள்ளன.

4. அகம், அகப்பாட்டு எனவும் வழங்கப்படுகிறது.

73) வள்ளலார் எங்கு ஆன்மிக மையத்தை உருவாக்கினார்?

A) சென்னை

B) வடலூர்

C) கந்தகோட்டம்

D) மருதூர்

விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.

74) சோமசுந்தர பாரதியாரின் காலம் என்ன?

A) 1879-1969

B) 1879-1959

C) 1879-1937

D) 1879-1949

விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டயபுரம் அரண்மனையில் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் சோமந்தர பாரதியார். இவரின் காலம் 1879-1959.

75) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) உமணர் – உப்பு வணிகர்

B) தெளிர்ப்ப – ஒலிப்ப

C) புனவன் – கானவன்

D) பகடு – நாய்

விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்

தெளிர்ப்ப – ஒலிப்ப

புனவன் – கானவன்

பகடு – எருது

ஞமலி – நாய்

76) கூற்றுகளை ஆராய்க.

1. அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை

2. புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

3. அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

4. அகமும் புறமும் – பரிபாடல்

5. புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை

A) 1, 2 சரி

B) 4, 5 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை

2. புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

3. அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

4. அகமும் புறமும் – பரிபாடல்

5. புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை

77) உழாஅது – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) சொல்லிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) இன்னிசை அளபெடை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உழாஅது – செய்யுளிசை அளபெடை.

செய்யுளிசை அளபெடை – செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைக்க வரும் அளபெடை செய்யுளிசை அளபெடை எனப்படும்.

78) ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?

A) சென்னை இலக்கியச் சங்கம்

B) கன்னிமாரா நூலகம்

C) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

விளக்கம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.

79) சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் எது?

A) சோழர் தாயமுறை

B) சேரர் தாயமுறை

C) பாண்டிய தாயமுறை

D) பல்லவ தாயமுறை

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:

1. தசரதன் குறையும் கைகேயி நிறையும்

2. திருவள்ளுவர்

3. சேரர் தாயமுறை

4. தமிழும் தமிழரும்

80) கூற்றுகளை ஆராய்க.

1. வடசென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்று வழங்கப்பட்டன

2. தென்சென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைததனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது.

81) சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து பாரதி என்னும் பட்டம் பெற்ற மற்றொருவர் யார்?

A) சோமசுந்தர பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) பாரதிதாசன்

D) கவிராஜ பாரதி

விளக்கம்: சுப்பிரமணிய பாரதியார், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து எட்டையபுரம் அரண்மனையில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த புலவர் ஒருவருக்கு இயற்றிக்கொடுத்த பாடல் மூலம் பாரதி என்னும் பட்டத்தை இவ்விருவரும் பெற்றனர்.

82) எட்டுத்தொகை நூல்களில் அகம் பற்றி பேசாத நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) ஐங்குறுநூறு

C) பரிபாடல்

D) குறுந்தொகை

விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்

புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை

83) என்றூழ் விடர குன்றம் போகும் – என்ற வரியில் என்றூழ் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உப்பங்கழி

B) சூரியனின் வெப்பம்

C) மலைவெடிப்பு

D) ஒளிரும் வளையல்

விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்.

என்றூழ் விடர குன்றம் போகும்.

கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் உப்பை விற்பனை செய்வர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.

84) பழங்காலத்தில் உப்பு விளையும் களத்திற்கு ______________என்று பெயர்?

A) அளம்

B) கழி

C) களம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

85) பெருங்கடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) வினைத்தொகை

B) பண்புத்தொகை

C) அன்மொழித்தொகை

D) பெயரெச்சம்

விளக்கம்: பெருங்கடல் – பண்புத்தொகை

பெருங்கடல் – பெரியதான கடல். இரண்டு சொற்களுக்கு இடையில் ஆன, ஆகிய, ஆகிய இரண்டு பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால் பண்புத்தொகை எனப்படும்.

86) பலிவிழாக் பாடல்செய் பங்குனி உத்திரநாள் – என்ற வரியில் பலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆரவார விழா

B) திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா

C) எழுச்சி தரும் விழா

D) விழாக்கள் நிறைந்த

விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த

கலிவிழா – எழுச்சி தரும் விழா

பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா

ஒலிவிழா – ஆரவார விழா

87) இராணி மேரி கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது?

A) 1914

B) 1857

C) 1768

D) 1856

விளக்கம்: பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.

88) பொருத்துக.

அ. என்றூழ் – 1. அழகிய மீன்

ஆ. மதர்கயல் – 2. சூரியனின் வெப்பம்

இ. எல்வளை – 3. குரல் கேட்ட

ஈ. விளிஅறி – 4. ஒளிரும் வளையல்

A) 1, 4, 3, 2

B) 2, 4, 3, 1

C) 2, 3, 4, 1

D) 2, 1, 4, 3

விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்

மதர்கயல் – அழகிய மீன்

எல்வளை – ஒளிரும் வளையல்

விளிஅறி – குரல்கேட்ட

89) பொருத்துக.

அ. கதழ் – 1. எருது

ஆ. அள்ளல் – 2. நாய்

இ. ஞமலி – 3. விரைவு

ஈ. பகடு – 4. சேறு

A) 1, 3, 4, 2

B) 4, 3, 1, 2

C) 3, 4, 1, 2

D) 3, 4, 2, 1

விளக்கம்: கதழ் – விரைவு

அள்ளல் – சேறு

ஞமலி – நாய்

பகடு – எருது

90) ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை நெறியை உருவாக்கி வளர்த்தவர் யார்?

A) விவேகானந்தர்

B) ராமகிருஷ்ண பரமஹம்சர்

C) வள்ளலார்

D) தயானந்த சரஸ்வதி

விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார்.

91) மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களில் பொருந்தாதது எது?

A) ஐப்பசி – கடலாட்டு விழா

B) கார்த்திகை – விளக்குத் திருவிழா

C) மார்கழி – திருவாதிரை விழா

D) தை – தைப்பூச விழா

விளக்கம்: ஐப்பசி – ஓண விழா

கார்த்திகை – விளக்குத் திருவிழா

மார்கழி – திருவாதிரை விழா

தை – தைப்பூச விழா.

92) தமிழும் தமிழரும் என்ற நூலை எழுதியவர் யார்?

A) சோமசுந்தர பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) வாணிதாசன்

D) கவிமணி

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:

1. தசரதன் குறையும் கைகேயி நிறையும்

2. திருவள்ளுவர்

3. சேரர் தாயமுறை

4. தமிழும் தமிழரும்

93) பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது எது?

A) நெல்

B) தானியம்

C) உப்பு

D) வாசனைப் பொருட்கள்

விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

94) கூற்று: சென்னை நகராட்சி 1666இல் உருவாக்கப்பட்டது.

காரணம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 19000.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

95) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) கிறித்துவக் கல்லூரி – 1837

B) பிரசிடென்சி பள்ளி – 1842

C) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812

D) புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715

விளக்கம்: கிறித்துவக் கல்லூரி – 1837

பிரசிடென்சி பள்ளி – 1840

சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812

புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715.

96) தோப்பில் முகமது மீரானின் எந்த நூல் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது?

A) சாய்வு நாற்காலி

B) கூனன் தோப்பு

C) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன. இவை தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்.

97) பொருத்துக.

அ. வேட்டம் – 1. விலை

ஆ. கொள்ளை – 2. மீன் பிடித்தல்

இ. செறு – 3. மலை வெடிப்பு

ஈ. விடர் – 4. வயல்

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 1, 2, 4, 3

D) 1, 4, 3, 2

விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்

கொள்ளை – விலை

செறு – வயல்

விடர் – மலைவெடிப்பு.

98) 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்லைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1914

B) 1857

C) 1768

D) 1856

விளக்கம்: பல்வேறு தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் வேராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.

99) 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட நூலகம் எது?

A) சென்னை இலக்கியச் சங்கம்

B) கன்னிமாரா நூலகம்

C) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

விளக்கம்: கன்னிமாரா நூலகம்: 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகம் ஆகும்.

100) வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – என்ற அகநானூற்று வரியில் கொள்ளை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கொள்ளையடித்தல்

B) வணிகம் செய்தல்

C) எருது

D) விலை

விளக்கம்: கொள்ளை – விலை.

வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.

101) ஒருமையுடன் என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.

A) இஈஐவழி யவ்வும்

B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

C) A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஒருமையுடன் – ஒருமை + உடன்.

விதி: இஈஐவழி யவ்வும் – ஒருமை + ய் + உடன்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஒருமையுடன்.

102) ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) வள்ளலார்

B) ஆறுமுக நாவலர்

C) கவிமணி

D) விவேகானந்தர்

விளக்கம்: மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற இரண்டும் வள்ளலார் எழுதிய உரைநடை நூல்களாகும்.

103) பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – இவ்வரியில் வேட்டம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வேட்டையாடுதல்

B) மீன்பிடித்தல்

C) உப்பு விளைவித்தல்

D) மலைவெடிப்பு

விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்.

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – அகநானூறு (அம்மூவனார்).

பரதவர் பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்.

104) அம்மூவனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. புறப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர்.

2. நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

3. இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

4. இவரின் பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகையில் தொகுக்கப்படவில்லை

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. புறப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர்.

2. நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.

3. இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.

4. இவரின் பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகையில் தொகுக்கப்படவில்லை

105) கூற்றுகளை ஆராய்க.

1. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு – உப்பங்கழி எனப் பெயர்.

2. கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு – உப்பங்கழி எனப் பெயர்.

2. கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.

106) எந்த நூலிற்காக தோப்பில் முகமது மீரான் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

A) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

B) துறைமுகம்

C) கூனன் தோப்பு

D) சாய்வு நாற்காலி

விளக்கம்: சாய்வு நாற்காலி என்றும் புதினம் 1977இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

107) “எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு” – என்ற வரிகளை கூறியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) சோமசுந்தர பாரதியார்

விளக்கம்: “எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு” – சோமசுந்தர பாரதியார்.

108) “என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” – இதில் தமிழ்க் கப்பல் என்று குறிபிடப்படுபவர் யார்?

A) சுத்தானந்த பாரதியார்

B) சுப்பிரமணிய பாரதியார்

C) சோமசுந்தர பாரதியார்

D) இராஜகோபாலாச்சாரியார்

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். “என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என்று வ.உ.சி பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.

109) தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

A) தேங்காய்ப்பட்டினம்

B) தேரூர்

C) விளாத்திக்குளம்

D) முத்துப்பேட்டை

விளக்கம்: தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தோங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.

110) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. சென்னைக் கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாடல் ஐந்தாம் திருமுறையில் தெய்மணிமாலை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

2. சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர்

3. இவர் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்

4. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய கவிதை நூல்கள் ஆகும்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. சென்னைக் கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாடல் ஐந்தாம் திருமுறையில் தெய்மணிமாலை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

2. சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர்

3. இவர் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்

4. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள் ஆகும்.

111) மயிலாப்பூரின் சிறப்புகளில் பொருந்தாதது எது?

A) கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்

B) கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்

C) மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்;

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:

1. மடலார்ந்த தெங்கின் மயிலை

2. இருளகற்றும் சோதித் தொன்மயிலை

3. கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்

4. கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்

5. கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்

6. மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்

7. ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

112) என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி – பின்பு

தீவிரப் பட்டது வேகம் …… என்ற வரிகளில் என்னுருந் தோழரும் நானும் என்ற வரிக்கு பொருந்தாதவர் யார்?

A) மயிலை சீனி, வேங்கடசாமி

B) ப.ஜீவானந்தம்

C) பாரதிதாசன்

D) சிங்காரவேலர்

விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,

சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல

என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி – பின்பு

தீவிரப் பட்டது வேகம்

என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.

113) இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த – என்ற அகநானுற்று வரியில் செறு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வீரம்

B) நெல்

C) உப்பு

D) வயல்

விளக்கம்: செறு – வயல்.

இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த – அகநானூறு (அம்மூவனார்).

நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.

114) வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்ட வள்ளல் யார்?

A) பாரதியார்

B) விவேகானந்தர்

C) மருதகாசி

D) வள்ளலார்

விளக்கம்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் – வள்ளலார் ஆவார்.

இவருடைய பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.

115) ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் – என்ற வரியில் ஒலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஆரவார விழா

B) திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா

C) எழுச்சி தரும் விழா

D) விழாக்கள் நிறைந்த

விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த

கலிவிழா – எழுச்சி தரும் விழா

பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா

ஒலிவிழா – ஆரவார விழா

116) பெருங்கடல் என்ற சொல்லிற்கு பொருத்தமான பண்புப்பெயர் விதி எது?

A) இடையுகரம் இய்யாதல்

B) அடியகரம் ஐ ஆதல்

C) முன்னின்ற மெய் திரிதல்

D) இனமிகல்

விளக்கம்: பெருங்கடல் – பெருமை + கடல்

விதி: ஈறுபோதல் – பெரு + கடல்

விதி: இனமிகல் – பெருங்கடல்.

117) மலரடி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?

A) உருவகம்

B) உவமைத்தொகை

C) எண்ணும்மை

D) வினைத்தொகை

விளக்கம்: மலரடி – உவமைத்தொகை.

மலர் போன்ற அடி (பாதம்). உவமை முன்னும் உவமிக்கப்படும் பொருள் பின்னும் வருவது உவமைத்தொகை எனப்படும்.

118) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார்.

2. சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.

119) கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் எது?

A) சென்னை இலக்கியச் சங்கம்

B) கன்னிமாரா நூலகம்

C) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம்: 1812இல் கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம், அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழமையான நூலகங்களின் ஒன்று ஆகும்.

120) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) சென்னைப் பல்கலைக்கழகம் – 1857

B) இராணிமேரி கல்லூரி – 1914

C) சேப்பாக்கம் அரண்மனை – 1768

D) தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் – 1854

விளக்கம்: சென்னைப் பல்கலைக்கழகம் – 1857

இராணிமேரி கல்லூரி – 1914

சேப்பாக்கம் அரண்மனை – 1768

தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் – 1856

121) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) சென்னை இலக்கியச் சங்கம் – 1869

B) கன்னிமாரா நூலகம் – 1860

C) கீழ்த்திசை; சுவடிகள் நூலகம் – 1832

D) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010

விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் -1869

கன்னிமாரா நூலகம் – 1860

கீழ்த்திசை; சுவடிகள் நூலகம் – 1812

அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010.

122) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் பாடிய திருவருட்பா ஐந்து திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

2. இவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர்

3. சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்

4. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்டவர்.

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவர் பாடிய திருவருட்பா ஆறாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

2. இவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர்

3. சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்

4. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்டவர்.

123) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) “தொண்டைமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” – 1647

B) சென்னையை உருவாக்க பிரான்சிஸ் டே நிலம் வாங்கியது – 22.08.1639

C) சென்னை நகரின் மக்கள் தொகை 1900ஆக இருந்த ஆண்டு – 1646

D) சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1668

விளக்கம்: “தொண்டைமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” – 1647

சென்னையை உருவாக்க பிரான்சிஸ் டே நிலம் வாங்கியது – 22.08.1639

சென்னை நகரின் மக்கள் தொகை 1900ஆக இருந்த ஆண்டு – 1646

சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1688

124) கோவைப்பழ மூக்கும்

பாசிமணிக் கண்கும்

சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

வேப்பிலை வாலும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) ந.பிச்சமூர்த்தி

B) வாணிதாசன்

C) சுத்தானந்த பாரதியார்

D) கல்யாண்ஜி

விளக்கம்: கோவைப்பழ மூக்கும்

பாசிமணிக் கண்கும்

சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

வேப்பிலை வாலும் – ந.பிச்சமூர்த்தி

125) தோப்பில் முகமது மீரான் எந்த தமிழில் இலக்கியம் படைத்தார்?

A) தஞ்சைத் தமிழ்

B) குமரித் தமிழ்

C) சென்னைத் தமிழ்

D) கோவைத்தமிழ்

விளக்கம்: தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழில் இலக்கியம் படைத்து புகழ்பெற்றார்.

126) கூற்றுகளை ஆராய்க.

1. படிமம் உவமையில் மட்டுமே அமையும்.

2. உவமை கருத்துத் தன்மையாலும் அமையும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: படிமம் உவமையிலும் அமையும். உவமையின்றிப் பிறவற்றாலும் அமையும். உவமை கருத்துத் தன்மையாலும் அமையும். ஆனால் படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும்.

127) உள்ளொன்று என்ற சொல்லிற்கு பொருத்தமான பண்புப்பெயர் புணர்ச்சி விதியை தேர்வு செய்க?

A) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்

B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

C) A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உள்ளொன்று – உள் + ஒன்று.

விதி: தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரண்டும் – உள்ள் + ஒன்று.

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உள்ளொன்று.

128) ஒரு பார்வையில் சென்னை நகரம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) தோப்பில் முகமது மீரான்

B) அசோகமித்திரன்

C) ராமச்சந்திர வைத்தியநாத்

D) ஊரன் அடிகள்

விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் -தோப்பில் முகமது மீரான்

ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

129) பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் யார் பாடியது?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.

இதில் முதல் மூன்று திருமுறைக் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

130) ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எந்த ஆண்டு சென்னையில் உருவாக்கபட்டது?

A) 1710

B) 1715

C) 1742

D) 1772

விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.

131) கூற்றுகளை ஆராய்க.

1. தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.

2. காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம்.

3. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.

4. படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.

2. காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம.

3. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.

4. படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.

132) மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும் – என்ற வரியில் மதி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நிலவு

B) ஒரு நபர்

C) அறிவு

D) அருள்

விளக்கம்: மதி என்றால் அறிவு என்று பொருள். மேற்காணும் வரிகளை எழுதியவர் வள்ளலார் ஆவார். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் திருவருட்பா ஆகும்.

133) தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலை எழுதியவர் யார்?

A) சோமசுந்தர பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) வாணிதாசன்

D) கவிமணி

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:

1. தசரதன் குறையும் கைகேயி நிறையும்

2. திருவள்ளுவர்

3. சேரர் தாயமுறை

4. தமிழும் தமிழரும்.

134) படிமம் என்பதன் பொருள்?

A) சொல்

B) செயல்

C) காட்சி

D) ஒலி

விளக்கம்: படிமம் என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.

135) சோமசுந்தர பாரதியார் எந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்?

A) பாரதியார் பல்கலைக்கழகம்

B) பாரதிதாசன் பல்லைக்கழகம்

C) அண்ணாமலை பல்லைக்கழகம்

D) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் எட்டையபுர அவையில் பாரதி என்னும் பட்டம் பெற்ற சோமசுந்தர பாரதியார் (1879-1959) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

136) தின்மை செய்பவரே – அண்டித்

தீண்ட ஒண்ணாதார் – என்று பாடியவர் யார்?

A) கல்யாண்ஜி

B) கவிமணி

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) சுப்புரத்தினதாசன்

விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா

நன்மை செய்பவரே – உலகம்

நாடும் மேற்குலத்தார்

தின்மை செய்பவரே – அண்டித்

தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.

137) பாரதிதாசன் எந்த கால்வாயில் தன் நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருப்பதாக கவிதை எழுதியுள்ளார்?

A) கூவம்

B) பக்கிங்காம் கால்வாய்

C) பாலாறு

D) புழல்

விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,

சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்

அன்னம் மிதப்பது போல

என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி – பின்பு

தீவிரப் பட்டது வேகம்

என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.

138) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) ஒரு குட்டித் தீவின் வரைபடம்

B) சாய்வு நாற்காலி

C) துறைமுகம்

D) கூனன் தோப்பு

விளக்கம்: பொருந்தாதது சாய்வு நாற்காலி ஆகும். மேற்காணும் அனைத்து நூல்களும் தோப்பில் முகமது மீரான் எழுதிய நூல்கள் ஆகும். இதில்,

சாய்வு நாற்காலி மட்டுமே சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

139) தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?

A) சென்ட்ரல்

B) இராயபுரம்

C) அரக்கோணம்

D) எழும்பூர்

விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.

140) கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது என்று கூறியவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) சோமசுந்தர பாரதியார்

D) கல்யாண்ஜி

விளக்கம்: “கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது” – சோமசுந்தர பாரதியார்.

141) வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடியவர் யார்?

A) சுப்பிரமணிய பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) சோமசுந்தர பாரதியார்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக சோமசுந்தர பாரதியார் வாதாடியது குறிப்பித்தகுந்தது.

142) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) Allegation – ஆணையுறுதி ஆணையம்

B) Conviction – தண்டனை

C) Jurisdiction – அதிகார எல்லை

D) Plaintiff – வாதி

விளக்கம்:Allegation – சாட்டுரை

Conviction – தண்டனை

Jurisdiction – அதிகார எல்லை

Plaintiff – வாதி.

143) எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் பேசும் நூல் எது?

A) பதிற்றுப்பத்து

B) புறநானூறு

C) பரிபாடல்

D) குறுந்தொகை

விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்

புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு

அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.

144) பத்துப்பாட்டு நூல்களில் அகம் பற்றி பேசாத நூல் எது?

A) முல்லைப்பாட்டு

B) நெடுநல்வாடை

C) பட்டினப்பாலை

D) திருமுருகாற்றுப்படை

விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை

புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.

145) இனியசெய்தல், இன்னாசெய்தல் என்ற பயன்களை எதனோடு ஒப்பிட்டு கூறுகிறது குறுந்தொகை?

A) நெருஞ்சி, முள்

B) முள், நெருஞ்சி

C) நெருஞ்சி, எருக்கம்

D) எருக்கம், நெருஞ்சி

விளக்கம்: இனியசெய்தல், இன்னா செய்தல் என்ற பயன்களை (இனிய) நெருஞ்சிப்பூ, (இன்னா) முள் என்ற காட்சிப்பொருள்களால் படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை.

146) பொருத்துக.

அ. புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1. 1840

ஆ. சென்னைக் கோட்டைக் கல்லூரி – 2. 1837

இ. கிறித்துவக் கல்லூரி – 3. 1812

ஈ. பிரசிடென்சி பள்ளி – 4. 1715

A) 1, 2, 3, 4

B) 2, 3, 4, 1

C) 3, 4, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715

சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812

கிறித்துவக் கல்லூரி – 1837.

பிரசிடென்சி பள்ளி – 1840

147) காலை இளம் வெயில்

நன்றாக மேய

தும்பறுத்துத்

துள்ளிவரும்

புதுவெயில் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) கல்யாண்ஜி

C) சுத்தானந்த பாரதியார்

D) கவிமணி

விளக்கம்: காலை இளம் வெயில்

நன்றாக மேய

தும்பறுத்துத்

துள்ளிவரும்

புதுவெயில் – கல்யாண்ஜி.

148) திருமுறைகளை தொகுத்தவர் யார்?

A) நம்பியாண்டார் நம்பி

B) சேக்கிழார்

C) ஐயூர் முடவனார்

D) மயிலைநாதர்

விளக்கம்: திருமுறைகளை தொகுத்தவர் நம்பியான்டார் நம்பி ஆவார். திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.

149) 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை எவ்வளவு?

A) 20000

B) 19000

C) 21000

D) 18000

விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

150) படிமம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.

2. எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றி; அடிப்படையில் தோன்றும் என்பர்.

2. எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.

151) மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.

A) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு…

B) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது……

C) பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்……

D) வெந்தாறு பொன்னின் அந்திப் பூப்ப……

விளக்கம்: நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு… – பயன்படிமம்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது… – வினைப்படிமம்

பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்… – மெய்ப்படிமம் (உருவம்)

வெந்தாறு பொன்னின் அந்திப் பூப்ப…… – உரு (நிறம்) படிவம்.

152) சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி – என்ற வரியில் எல்வளை என்ற சொல்லின் பொருள் என்ன??

A) எலிவளை

B) எள் என்ற தானியத்தின் வகை

C) ஒளிரும் வளையல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: எல்வளை – ஒளிரும் வளையல்.

உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.

153) தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். இதனை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 4

C) 6

D) 3

விளக்கம்: தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். காட்சித்தருகிற உவமைகள், காட்சித் தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம்.

154) சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் எவ்வகையான உவமைகளையே ஆண்டுள்ளன?

A) காட்சி தருகிற உவமைகள்

B) காட்சி தரா வெறும் உவமைகள்

C) A மற்றும் B

D) மெய் உவமை

விளக்கம்: சங்க இலக்கியப் பாடல்களில் பெரும்பாலும் உவமைகளின் வழியே சொல்லவந்த கருத்தை மேலும் அழகுபடக் கூறுவர். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.

155) யார் வ.உ.சியின் அழைப்பை ஏற்று சுதேசி கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்?

A) சுத்தானந்த பாரதியார்

B) சுப்பிரமணிய பாரதியார்

C) சோமசுந்தர பாரதியார்

D) இராஜகோபாலாச்சாரியார்

விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

156) பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்கவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) வள்ளலார்

D) ஆறுமுகநாவலர்

விளக்கம்: பெருமைபெரும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.

157) கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

காரணம்: சென்னையில் அமைந்துள்ள துறைமுகம்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.

158) இந்தோ-சாரசானிக் கட்டடக்கலை கீழ்க்காணும் எதனை கலந்து உருவாக்கப்பட்டது?

1. முகலாயக் கட்டடக்கலை

2. பிரித்தானிக் கட்டடக்கலை

3. இந்தியப் பாரம்பரிய பாணி

A) 1, 3

B) 2, 3

C) 1, 2

D) 1, 2, 3

விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.

159) Jurisdiction என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) ஆணையுறுதி ச்டம்

B) ஆணையுறுதி ஆவணம்

C) அதிகார எல்லை

D) தண்டணை

விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்

Conviction – தண்டனை

Jurisdiction – அதிகார எல்லை

160) “காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்” இக்கவிதையில்_________________பயின்று வந்துள்ளது?

A) பயன்படிமம்

B) வினைப்படிமம்

C) மெய்ப்படிமம்

D) உருமப்படிமம்

விளக்கம்: மேற்காணும் பாடலில் வந்துள்ள படிமம் வினைப்படிமமாகும். இணைத்துக்கட்டப்பட்ட தும்பிலிருந்து அறுத்துக்கொண்டு கன்று துள்ளிக் குதித்தல் என்பது எல்லோரும் அறிந்த ஒரு காட்சியாகும். இக்காட்சியைக் கொண்டு காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டுப் படிமப்படுத்துகிறது இக்கவிதை.

161) பாடலமைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் எது?

A) அகநானூறு

B) நற்றிணை

C) ஐங்குநுறூறு

D) குறுந்தொகை

விளக்கம்: பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு ஆகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.

162) பொருத்துக.

அ. சென்னை இலக்கியச் சங்கம் – 1. 1869

ஆ. கன்னிமாரா நூலகம் – 2. 1860

இ. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3. 1812

ஈ. அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4. 2010

A) 1, 2, 3, 4

B) 3, 2, 1, 4

C) 3, 1, 2, 4

D) 2, 3, 4, 1

விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் – 1812

கன்னிமாரா நூலகம் – 1860

கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 1869

அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010

163) யாருடைய ஆட்சிக்காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்?

A) தாமஸ் பிட்

B) எலியேல்

C) சர் தாமஸ் மன்ரோ

D) வில்லியம் பெண்டிங்

விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணத்தை உருவாக்கினர். ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.

164) கூற்று: படிமச்சிந்தனை நம்மிடம் இருந்த ஒன்றுதான்.

காரணம்: உவமைக்கோட்பாடு படிமத்திற்குத் தோற்றுவாயாக இருக்கிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது.. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உவமைக்கோட்பாடு, படிமத்திற்குத் தேவையாக இருக்கிறது. படிமச் சிந்தனை, இவ்வகையில் நம்மிடம் இருந்த ஒன்றுதான். புதியதாக மேலை நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதன்று.

165) சோமசுந்தர பாரதியார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டையபுர அரண்மணையில் பாரதி பட்டம் பெற்றார்.

2. பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இவர் சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டையபுர அரண்மணையில் பாரதி பட்டம் பெற்றார்.

2. பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

166) சோமசுந்தர பாரதியாருக்கு பொருந்தாதது எது?

A) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்

B) அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

C) தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்

D) சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார்.

விளக்கம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

167) காதழ்கோல் உமணர் காதல் மடமகள் – இதில் உமணர் என்ற சொல்லின் பொருள்?

A) பொன் வணிகர்

B) மீன் வணிகர்

C) கூல வணிகர்

D) உப்பு வணிகர்.

விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்.

மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.

168) கோவைப்பழ மூக்கும்

பாசிமணிக் கண்ணும்

சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

வேப்பிலை வாலும் – என்ற கவிதையில்_____________பயின்று வந்துள்ளது?

A) பயன்படிமம்

B) வினைப்படிமம்

C) மெய்ப்படிமம்

D) உருமப்படிமம்

விளக்கம்: மேற்காணும் கவிதை வரியை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். இதில் மெய்ப்படிமம் (வடிவம்) பயின்று வந்துள்ளது. இதில் கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாலும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது.

169) “இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார்” – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) சோமசுந்தர பாரதியார்

விளக்கம்: “இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார்” – சோமசுந்தர பாரதியார்.

170) சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் எந்த பகுதிக்கு உரை எழுதியுள்ளார்?

1. பொருளதிகார அகத்திணையியல்

2. பொருளதிகார புறத்திணையியல்

3. மெய்ப்பாட்டியல்

A) 1 மட்டும்

B) 1, 2 மட்டும்

C) 2, 3 மட்டும்

D) அனைத்தும்

விளக்கம்: தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார் சோமசுந்தர பாரதியார்.

171) வள்ளலார் எதனை பேய் என்று குறிப்பிடுகிறார்?

A) சாதி

B) மதம்

C) இனம்

D) மேற்காணும் அனைத்தும்

விளக்கம்: பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.

வள்ளலார் மதத்தை பேய் என்று குறிப்பிடுகிறார்.

172) பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா – என்று பாடியவர் யார்?

A) வாணிதாசன்

B) கவிமணி

C) பாரதிதாசன்

D) சுப்புரத்தினதாசன்

விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா

நன்மை செய்பவரே – உலகம்

நாடும் மேற்குலத்தார்

தின்மை செய்பவரே – அண்டித்

தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி

173) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ________________என்று அழைக்கப்பட்டது?

A) தமிழர் நகரம்

B) இந்தியர் நகரம்

C) வெள்ளையர் நகரம்

D) ஆங்கிலேயர் நகரம்

விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.

174) மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) ஆறுமுக நாவலர்

B) திருஞான சம்பந்தர்

C) மாணிக்கவாசகர்

D) வள்ளலார்

விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும் – வள்ளலார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!