General Tamil

12th Tamil Unit 4 Questions

12th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1) ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட காரணமான முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1971

B) 1901

C) 1911

D) 1909

விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.

2) கூற்றுகளை ஆராய்க.

1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.

2. உபாத்தியாருடைய வீட்டை குருகுலம் என்பார்கள்

A) 1 மட்டும் சரி

B)2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.

2. உபாத்தியாருடைய வீட்டை குருகுலம் என்பார்கள்

3) வாயி லோயே வாயி லோயே

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……..என்ற வரிகளில் வள்ளியோர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) புலவர்கள்

B) வள்ளல்கள்

C) வலிமையுடையோர்கள்

D) பெண்கள்

விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.

வாயி லோயே – வாயிற்காவலனே

வயங்குமொழி – விளங்கும் சொற்கள்

வித்தி – விதைத்து.

4) ஒளவையார் புறம், புறப்பாட்டு என்று அழைக்கப்படும் புறநானூற்றல் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

A) 15

B) 4

C) 7

D) 33

விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:

1. அகநானூறு – 4

2. குறுந்தொகை – 15

3. நற்றிணை – 7

4. புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

5) விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு…… – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) கண்ணதாசன்

C) நா.காமராசன்

D) சுரதா

விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு

மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்

மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா

6) நேரிசை வெண்பா பற்றிய கூற்றுகளில் பொருந்தாததை தேர்வு செய்க.

A) நாற்சீர்-முச்சீர்-இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

B) முதல் இரண்டடியும் ஓரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன.

C) நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்

D) தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படும்.

விளக்கம்: நேரிசை வெண்பா:

நாற்சீர் – முச்சீர் – இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், இரண்டாவது அடியின் ஈற்றுச் சீரை ஒரு சிறுகோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.

முதல் இரண்டடியும் ஒரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.

தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா

7) என்றோ ஒருமுறை

வானுக்கு விளக்கடிக்கும்

வால் மீனாக

சொல்ல வந்தது சொல்லில்

வந்தாலும், கேட்பதிலும் சிக்கல் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) சி.மணி

C) நா.காமராசன்

D) கவிமணி

விளக்கம்: என்றோ ஒருமுறை

வானுக்கு விளக்கடிக்கும்

வால் மீனாக

சொல்ல வந்தது சொல்லில்

வந்தாலும், கேட்பதிலும் சிக்கல் – சி.மணி

8) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) சுவாமி வேதாச்சலம்

C) நாதமுனி

D) நம்பியாண்டார் நம்பி

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:

1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

2. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

3. சாகுந்தல நாடகம்

4. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

9) கவிஞராக என்ற நூலை எழுதியவர் யார்?

A) அ.கி.பரந்தாமனார்

B) சுரதா

C) கி.வா.ஜகந்நாதன்

D) மு.சுதந்திரமுத்து

விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்

நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து

துறைமுகம் – சுரதா

10) கூற்றுகளை ஆராய்க.

1. கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர்.

2. கணக்கு என்பது நூலின் பெயர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர்.

2. கணக்கு என்பது நூலின் பெயர்.

11) வெண்பா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேரசையாக இருக்க வேண்டும்.

2. முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரை என்பதாக இருக்க வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காயச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடிய வேண்டும்.

12) தெரியாது என்ற சொல் எந்த வகையான குற்றியலுகரச்சொல்?

A) வன்தொடர்க்குற்றியலுகரம்

B) மென்தொடர்க்குற்றியலுகரம்

C) இடைத்தொடர்க்குற்றியலுகரம்

D) உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்

விளக்கம்: தெரியாது என்பது உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலுகரம் – குறுமை + இயல் + உ கரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,

1. நெடில்தொடர்க்குற்றியலுகரம்

2.ஆய்ததொடர்குற்றியலுகரம்

3.உயிர்த்தொடர்குற்றியலுகரம்

4. வன்தொடர்குற்றியலுகரம்

5. மென்தொடர்குற்றியலுகரம்

6.இடைத்தொடர்குற்றியலுகரம்.

ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.

உயிர்த்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்தை பிரித்தால் உயிர் எழுத்து வர வேண்டும்.

இங்கு கடைசி எழுத்துக்கு முன் எழுத்து யா. ய் + ஆ. ஆ என்னும் உயிர் எழுத்து வந்துள்ளது.

13) இடையீடு கவிதை பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. இக்கவிதை இதுவரை என்ற கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது.

2. இக்கவிதையை இயற்றியவர் சி.மணி ஆவார்.

3. இக்கவிதை குறியீடுகளைக் கொண்டு அமைந்தது.

4. இக்கவிதை பன்முகப் பொருள் கொண்டது.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.

14) எலிக்குப் பொறிவைத்தால்

விரலும் விழுவதுண்டு

நீர்தேடி அலையும்போது

இளநீரும் கிடைக்கும் – என்று கவிதை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) நா.காமராசன்

C) சி.மணி

D) கண்ணதாசன்

விளக்கம்: எலிக்குப் பொறிவைத்தால்

விரலும் விடுவதுண்டு

நீர்தோ அலையும்போது

இளநீரும் கிடைக்கும் – சி.மணி

15) கூற்றுகளை ஆராய்க.

1. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர்.

2. மன்றமே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர்.

2. மன்றமே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

16) விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்ற வரியில் மதி, முகில் என்ற சொல்லின் பொருள் முறையே?

A) சூரியன், மழை

B) சூரியன், மேகம்

C) சந்திரன், மழை

D) சந்திரன், மேகம்

விளக்கம்: வெண்மதி – சந்திரன்

செங்கதிர் – சூரியன்

முகில் – மேகம்

விண் – வானம்.

17) கூற்றுகளை ஆராய்க.

1. நாள், மலர் என்பவை ஓரசைச்சீர்கள்

2. காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்.

3. ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் மலர் அல்லது பிறப்பு வரும்.

4. ஈற்று அயற்சீர் விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் அல்லது காசு என்னும் வாய்ப்பாடு வரும்.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடு ஒன்றில் முடிய வேண்டும். நாள், மலர் என்பவை ஓரசைச்சீர்கள். காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் மலர் அல்லது பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் அல்லது காசு என்னும் வாய்ப்பாடு வரும்.

18) கூற்றுகளை ஆராய்க

1. முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர், பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

2. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’ தென்று கூறுவார்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

2. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’தென்று கூறுவார்கள்

19) உ.வே.சா-க்கு எந்த பல்லைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?

A) சென்னை பல்லைக்கழகம்

B) அண்ணா பல்லைக்கழகம்

C) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

D) பாரதியார் பல்கலைக்கழகம்

விளக்கம்: 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா.

20) ப.சுப்பிரமணியனார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்

B) மௌனகுருவிடம்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம்

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

21) எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளி;வந்தன?

A) 1956

B) 1954

C) 1958

D) 1959

விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.

22) கூற்றுகளை ஆராய்க

1. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.

2. பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.

2. பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.

23) புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்…. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுரதா

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) வாணிதாசன்

விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்

கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்

கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா

24) தமிழ்தாத்தா என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) பாரதியார்

B) உ.வே.சா

C) பரிதிமாற்கலைஞர்

D) சி.வை.தாமோதரனார்

விளக்கம்: தமிழ் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா இணையற்ற ஆசிரியர், புலமைப்பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

25) பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா – என்று கூறியவர் யார்?

A) அ.கா.பெருமாள்

B) உ.வே.சா

C) வ.சுப. மாணிக்கம்

D) ப.சுப்பிரமணியனார்

விளக்கம்: பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா – உ.வே.சா

26) புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும் – இவ்வரிகளில் விழுப்புண் என்று குறிப்பிடப்படுவது எது?

A) போரில் ஏற்பட்ட புண்

B) பயிற்சியில் ஏற்பட்ட புண்

C) கீழே விழுவதனால் ஏற்பட்ட புண்

D) இயற்கையாக வரும் நோய்

விளக்கம்: இங்கு விழுப்புண் என்பது போரில் ஏற்பட்ட காயத்தை குறிக்கும்.

27) குழிமாற்று என்பது எதைக் குறிக்கும்?

A) பெருக்கல் வாய்ப்பாடு

B) தாழை மடல்

C) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

D) எழுத்துப்பயிற்சி

விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு

சீதாள பத்திரம் – தாழை மடல்

நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி

28) மறைமலைஅடிகளாரின் இயற்பெயர் என்ன?

A) சூரிய நாராயண சாஸ்திரி

B) சுவாமி வேதாச்சலம்

C) இராசகோபாலன்

D) முத்தையா

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்பது மறைமலைஅடிகளாரின் இயற்பெயர் ஆகும்.

29) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) காவியம்

B) ஊர்வலம்

C) இலக்கியம்

D) விண்மீன்

விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.

30) திராவிட வித்தியா பூஷணம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) பெரியார்

B) அண்ணா

C) பாரதிதாசன்

D) உ.வே.சா

விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:

1. மகாமகோபாத்தியாய

2. வித்தியா பூசணம்

3. தாஷிணாத்திய கலாநிதி

31) மா.இராசமாணிக்கனார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்

B) மௌனகுருவிடம்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம்

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

32) ஒளவையார் அகநானூற்றில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

A) 15

B) 4

C) 7

D) 33

விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:

1. அகநானூறு – 4

2. குறுந்தொகை – 15

3. நற்றிணை – 7

4. புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

33) குதிரை வரையக் குதிரையே

வராது கழுதையும் வரலாம்

இரண்டும் கலக்கலாம் – என்று கவிதை எழுதியவர் யார்?

A) சி.மணி

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) நா.காமராசன்

D) அய்யப்ப மகாதேவன்

விளக்கம்: குதிரை வரையக் குதிரையே

வராது கழுதையும் வரலாம்

இரண்டும் கலக்கலாம் – சி.மணி

34) கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்

கவிநடையும் உரைநடையும் வேறு வேறு.…. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுரதா

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) வாணிதாசன்

விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்

கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்

கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா

35) ஞானசாகரம் என்ற இதழை மறைமலையடிகள் எப்போது நடத்தினார்?

A) 1902

B) 1908

C) 1935

D) 1918

விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.

36) நீங்களும் கவிபாடலாம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அ.கி.பரந்தாமனார்

B) சுரதா

C) கி.வா.ஜகந்நாதன்

D) மு.சுதந்திரமுத்து

விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்

நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து

துறைமுகம் – சுரதா

37) ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்

ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்…..– என்று கூறியவர் யார்?

A) பாரதிதாசன்

B) கவிமணி

C) நா.காமராசன்

D) சுரதா

விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்

ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்

பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே

பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை…… – சுரதா

38) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) சுவாமி வேதாச்சலம்

C) நாமக்கல் கவிஞர்

D) நம்பியாண்டார் நம்பி

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:

1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

2. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

3. சாகுந்தல நாடகம்

4. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

39) தவறான கூற்றை தெரிவு செய்க

A) பலகை – பல + கை – பலருடைய கை

B) தாமரை – தா + மரை – தாவுகின்ற மான்

C) கோவில் – கோ + வில் – அரசனின் வில்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: பலகை – மரப்பலகை.

பல + கை – பலருடைய கைகள் .

தாமரை – ஒரு மலர்.

தா + மரை – தாவுகின்ற மான்.

கோவில் – ஆலயம்

கோ + வில் – அரசனின் வில்.

40) சுரதா நடத்திய இதழ்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க

A) காவியம்

B) நகர்வலம்

C) இலக்கியம்

D) விண்மீன்

விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.

41) கூற்றுகளை ஆராய்க.

1. சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 6 மணி நேரம் ஆகிறது.

2. மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.

பொதுவான உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

42) சரியான கூற்றை தெரிவு செய்க.

A) இன்று மாலை கபடி போட்டி நடைபெறும்

B) ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது

C) ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்

D) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன

விளக்கம்: இன்று மாலை கபடி போட்டி நடைபெறும்.

ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.

வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன

ரங்கன் வெண்கலப் பாத்திரககடை வைத்திருக்கிறார்.

43) அதியமானுக்காக தூது சென்றவர் யார்?

A) கபிலர்

B) ஒளவையார்

C) நப்பசலையார்

D) கோவூர் கிழார்

விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார். அதிமானுக்காக ஒளவையார் தூது சென்றார்.

44) எத்தனையோ மாற்றங்கள்

குறிதவறிய ஏமாற்றங்கள்

மனம்புழுங்கப் பலவுண்டு – என்று கூறியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) நா.காமராசன்

D) சி.மணி

விளக்கம்: எத்தனையோ மாற்றங்கள்

குறிதவறிய ஏமாற்றங்கள்

மனம்புழுங்கப் பலவுண்டு – சி.மணி

45) பின்னத்தூர் நாராயணசாமி கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்

B) மௌனகுருவிடம்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம்

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

46) கீழ்வாயிலக்கம் மற்றும் மேல்வாயிலக்கம் முறையே எதைக்குறிக்கிறது?

A) பின்ன எண்ணின் கீழ்த்தொகை, பின்ன எண்ணின் மேல்தொகை

B) பூஜ்ஜியத்திற்கு கீழ் உள்ள எண், பூஜ்ஜியத்திற்கு மேல் உள்ள எண்

C) குறை எண்கள், மிகை எண்கள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: கீழ்வாயிலக்கம் – பின்ன எண்களின் கீழ்த்தொகை

மேல்வாயிலக்கம் – பின்ன எண்களின் மேல்தொகை

47) சீதாள பத்திரம் என்பது எதைக் குறிக்கும்?

A) பெருக்கல் வாய்ப்பாடு

B) தாழை மடல்

C) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

D) எழுத்துப்பயிற்சி

விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு

சீதாள பத்திரம் – தாழை மடல்

நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி

48) மூன்றடி வெண்பாவுடன் தொடர்புடையது எது?

A) குறள் வெண்பா

B) நேரிசை, இன்னிசை வெண்பா

C) நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா

D) பஃறொடை வெண்பா

விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா

2. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

3. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பா

4. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

5. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

49) காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை – என்ற வரிகளில் கலப்பை என்ற சொல்லின் பொருள்?

A) யாழ்

B) கருவிகள் வைக்கும் பை

C) கோடாரி

D) ஓர் விவசாயக் கருவி

விளக்கம்: இவ்வரிகளில் கலப்பை என்றால் கருவிகள் வைக்கும் பை என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.

50) கூற்றுகளை ஆராய்க

1. மா முன்நிரை – இயற்சீர் வெண்டளை

2. காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

3. தளைத்தல் – கட்டுதல், பிணித்தல்

4. வெண்டளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தளைத்தல் – கட்டுதல், பிணித்தல்

மா முன் நிரை, விளம் முன் நேர் – இயற்சீர் வெண்டளை

காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும். வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

51) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

2. மரபுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.

3. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்

4. விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்

5. வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்

A) 1, 3, 4 சரி

B) 1, 3, 4, 5 சரி

C) 1, 2, 3, 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

2. புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.

3. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்

4. விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்

5. வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்

52) Visa என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) நுழைவுச்சீட்டு

B) கடவுச்சீட்டு

C) இசைவுச்சீட்டு

D) அனுமதிச்சீட்டு

விளக்கம்: Passport – கடவுச்சீட்டு

Visa – நுழைவு சீட்டு.

53) தாமரை என்ற சொல்லை பிரித்தால் தா + மரை என பிரியும். இதில் மரை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) திருகின் மரை

B) தாமரை மலரின் இதழ்கள்

C) மான்

D) தாமரையின் தண்டு

விளக்கம்: தாமரை – ஒரு மலர்.

தா + மரை. தா – தாவுகின்றன. மரை – மான்.

54) கூற்றுகளை ஆராய்க.

1. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இதழ்களை நடத்தியவர் சுரதா ஆவார்.

2. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இதழ்களை நடத்தியவர் சுரதா ஆவார்.

2. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

55) வெண்பா அடிவரையறை பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா

2. மூன்றடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

3. நான்கடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

4. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

5. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

A) 1, 3, 5 சரி

B) 2, 4 சரி

C) 1, 4, 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா

2. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

3. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

4. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

5. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

56) மகாமகோபாத்தியாய என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) சி.வை.தாமோதரம் பிள்ளை

B) பரிதிமாற்கலைஞர்

C) பாரதிதாசன்

D) உ.வே.சா

விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:

1. மகாமகோபாத்தியாய

2. வித்தியா பூசணம்

3. தாசஷிணாத்திய கலாநிதி

57) அசுராப்பியாசம் என்பது எதைக் குறிக்கும்?

A) கல்விப்பயிற்சி

B) கல்வித்தொடக்கம்

C) ஆசிரியர்

D) எழுத்துப்பயிற்சி

விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்

வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி

உபாத்தியாயர் – ஆசிரியர்

அசுராப்பியாசம் – எழுத்துப்பயிற்சி

58) சுரதா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இயற்பெயர் – இராசகோபாலன்

2. பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.

3. துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும், மங்கையர்க்கரசி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

4. முழுக்க முழுக்க உரைநடையை கொண்ட இதழான காவியம் என்ற இதழை நடத்தினார்.

A) 1, 3, 4 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இயற்பெயர் – இராசகோபாலன்

2. பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.

3. துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும், மங்கையர்க்கரசி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

4. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட இதழான காவியம் என்ற இதழை நடத்தினார்.

59) வ.சுப.மாணிக்கம் என்பர் கீழ்க்காணும் எந்த பல்லைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார்?

A) மதுரை

B) திருச்சி

C) பாரதியார்

D) திருவள்ளுவர்

விளக்கம்: மதுரைப் பல்லைகழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ.சுப.மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.

60) பாரதியின் நண்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்

B) மௌனகுருவிடம்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம்

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

61) அதியமான் நெடுமான் அஞ்சியால் ஆதாரிக்கப்பெற்ற புலவர் யார்?

A) ஒளவையார்

B) கம்பர்

C) கபிலர்

D) சேக்கிழார்

விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார்.

62) Ocean of Wisdom என்ற இதழோடு தொடர்புடையவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) நாமக்கல் கவிஞர்

C) மறைமலைஅடிகள்

D) கண்ணதாசன்

விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.

63) சுரதாவிற்கு இராசராசன் விருது எந்த பல்கலைகழகத்தினால் வழங்கப்பட்டது?

A) திருவள்ளுவர்ப் பல்கலைக் கழகம்

B) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்

C) பாரதியார் பல்கலைக் கழகம்

D) பாரதிதாசன் பல்கலைக் கழகம்

விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

64) முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட எந்த இதழை சுரதா நடத்தினார்?

A) விண்மீன்

B) இலக்கியம்

C) ஊர்வலம்

D) காவியம்

விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட ‘காவியம்’ என்ற இதழை நடத்தியோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.

65) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்

B) வித்தியாப்பியாசம் – கல்வி நிறைவு

C) உபாத்தியாயர் – ஆசிரியர்

D) நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்

வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி

உபாத்தியாயர் – ஆசிரியர்

நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

66) தாஷிணாத்திய கலாநிதி என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) சி.வை.தாமோதரம் பிள்ளை

B) பரிதிமாற்கலைஞர்

C) பாரதிதாசன்

D) உ.வே.சா

விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:

1. மகாமகோபாத்தியாய

2. வித்தியா பூசணம்

3. தாஷிணாத்திய கலாநிதி

67) அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்

அறிவினிலே புகழ்விளையும்…………. என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) மீரா

C) இராசகோபாலன்

D) கனகசபை

விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்

அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்

பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்

புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)

68) சாகுந்தல நாடகம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) சுவாமி வேதாச்சலம்

C) பம்மல் சம்பந்தனார்

D) நம்பியாண்டார் நம்பி

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:

1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

2. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

3. சாகுந்தல நாடகம்

4. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

69) ஒளவையார் நல் என்னும் அடைமொழி பெற்றுள்ள நூலில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

A) 15

B) 4

C) 7

D) 33

விளக்கம்: நல் என்னும் அடைமொழி பெற்றுள்ள நூல் – நற்றிணை. இது எட்டுத்தொகை நூல்களில் முதல் நூலாக வைத்துப் போற்றப்படுகிறது.

ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:

1. அகநானூறு – 4

2. குறுந்தொகை – 15

3. நற்றிணை – 7

4. புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

70) கீழ்க்காண்பவர்களில் யார் நற்றிணை உரையாசிரியர் ஆவார்?

A) பரிமேலழகர்

B) பின்னத்தூர் நாராயணசாமி

C) நாவலர் சோமசுந்தர பாரதியார்

D) வேங்கடசாமி

விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.

பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).

நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).

பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.

71) புறநானூறு பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. புறநானூறு பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

2. இது புறம், புறப்பாட்டு என வழங்கப்படுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

72) சி.மணி என்பவர் கீழ்க்காணும் எந்தப் புனைப்பெயரில் எழுதவில்லை?

A) வே.மாலி

B) செல்வம்

C) சி.பழனிச்சாமி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சி.மணி என்பவர் வே.மாலி மற்றும் செல்வம் என்ற புனைப்பெயர்கள் எழுதிவருகிறார்.

73) எதனால் ஆராய்ச்சி விளையும் என்று சுரதா தம் பாடல் மூலம் குறிப்பிடுகிறார்?

A) புத்தகம் படிப்பதனால்

B) கேள்வி கேட்பதனால்

C) அறிஞர் அறிவுரைகளை பின்பற்றுவதால்

D) அறிஞர்களின் சொற்பொழிவுகளை கேட்பதனால்

விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி

எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி

இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே

எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்.. – சுரதா

74) யார் மீது கொண்ட பற்றின் காரணமாக இராசகோபாலன் என்ற தம் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார்?

A) வாணிதாசன்

B) பாரதியார்

C) கண்ணதாசன்

D) பாரதிதாசன்

விளக்கம்: உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதா-வின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றினார். அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதையை எழுதினார்.

75) கல்வித் தொடக்கத்தை எவ்வாறு குறிப்பிடுவர்?

A) வித்யாப்பியாசம்

B) வித்யாரம்பம்

C) உபாத்தியாயர்

D) வித்யாஸ்ரமம்

விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்

வித்யாப்பியாசம் – கல்விப் பயிற்சி

உபாத்தியாயர் – ஆசிரியர்

76) நான்கடி வெண்பாவுடன் தொடர்புடையது எது?

A) நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

B) நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

C) பஃறொடை வெண்பா

D) கலிவெண்பா

விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

2. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

3. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

4. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

77) உ.வே.சா-க்கு பொருந்தாததை தேர்வு செய்க?

A) தமிழ் பெருங்காவலர்

B) மகாமகோபாத்தியாய

C) வித்தியா பூசணம்

D) தாஷிணாத்திய கலாநிதி

விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:

1. மகாமகோபாத்தியாய

2. வித்தியா பூசணம்

3. தாஷிணாத்திய கலாநிதி

78) இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலை எழுதியவர் யார்?

A) டாக்டர் மா.இராசமாணிக்கனார்

B) நாவலர் சோமசுந்தர பாரதியார்

C) வேங்கடசாமி

D) பேராசிரியர் இ.கா.பெருமாள்

விளக்கம்: இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலை எழுதியவர் – பேராசிரியர் அ.கா.பெருமாள் ஆவார். இந்நூல் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றியும், அதில் படித்து பிற்காலத்தில் அறிஞர் ஆனவர்கள் பற்றியும் கூறிகிறது.

79) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) வேங்கடசாமி – சிலப்பதிகார உரையாசிரியர்

B) வ.சுப.மாணிக்கம் – மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

C) ப.சுப்பிரமணியனார் – மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்

D) மா.இராசமாணிக்கனார் – உயிரின மருத்துவர்

விளக்கம்: வேங்கடசாமி – சிலப்பதிகார உரையாசிரியர்

வ.சுப.மாணிக்கம் – மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

ப.சுப்பிரமணியனார் – மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்

மா.இராசமாணிக்கனார் – வரலாற்று ஆய்வாளர்

80) உ.வே.சா தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரி எது?

A) கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி

B) சென்னை மாநிலக் கல்லூரி

C) A மற்றும் B

D) சென்னை பல்லைக்கழகம்

விளக்கம்: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் உ.வே.சா ஆவார். அவர் கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

81) உ.வே.சா நூலகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

A) திருவள்ளுர்

B) திருவான்மியூர்

C) திருத்துறைப்பூண்டி

D) கும்பகோணம்

விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.

82) இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே

எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கவிமணி

B) கண்ணதாசன்

C) பாரதிதாசன்

D) சுரதா

விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி

எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி

இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே

எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா

83) புறநானூறு என்பது கீழ்க்காணும் எந்த தொகுப்பில் இடம்பெற்ற நூல்களுள் ஒன்று ஆகும்?

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) பதினெண்கீழ்க்கணக்கு நூல்

D) சிற்றிலக்கியம்

விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

84) ஆசான் கவிதை விருதைப் பெற்றவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) சி.மணி

விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:

1. விளக்கு விருது

2. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது

3. ஆசான் கவிதை விருது

4. கவிஞர் சிற்பி விருது

85) உவமைக்கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் என்ன?

A) சு.ராதாரவி

B) சுப்பு ரத்தின தாசன்

C) இராசகோபாலன்

D) சு.ராஜரத்தினம்

விளக்கம்: உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார்.

86) உள்ளியது முடிக்கும் உரைனுடை உள்ளத்து – என்ற வரியில் உரன் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உரிமை

B) உள்ளம்

C) வலிமை

D) உரசுதல்

விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.

87) கூற்றுகளை ஆராய்க.

1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது – வாகைத் திணை

2. பரிசு வேண்டி வாயிலில் நிற்பது – பரிசில் துறை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது – பாடாண் திணை

2. பரிசு வேண்டி வாயிலில் நிற்பது – பரிசில் துறை.

88) தவறான ஒன்றை தெரிவு செய்க

A) Passport – கடவுச்சீட்டு

B) Take off – வானூர்தி கிளம்புதல்

C) Visa – இசைவுச்சீட்டு

D) Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

விளக்கம்: Passport – கடவுச்சீட்டு

Take off – வானூர்தி கிளம்புதல்

Visa – நுழைவுச்சீட்டு

Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

89) யாருடன் மறைமலைஅடிகள் கொண்ட நட்பு அவரை தனித்தமிழ் மீதான பற்றை மிகுதிப்படுத்த உதவியது?

A) பாரதியார்

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: பரிதிமாற்கலைஞருடான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.

90) எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி

எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கவிமணி

B) கண்ணதாசன்

C) பாரதிதாசன்

D) சுரதா

விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி

எழுப்புவதால் ஆராயச்சிவிளையும் அந்தி

இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே

எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா

91) தவறான ஒன்றை தெரிவு செய்க?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

B) மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – வேங்கடசாமி

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி.

92) வெண்பா எத்தனை வகைப்படும்?

A) 5

B) 7

C) 2

D) 6

விளக்கம்: வெண்பா ஏழு வகைப்படும்.

1. குறள் வெண்பா

2. நேரிசை வெண்பா

3. இன்னிசை வெண்பா

4. நேரிசைச் சிந்தியல் வெண்பா

5. இன்னிசை சிந்தியல் வெண்பா

6. பஃறொடை வெண்பா

7. கலிவெண்பா

93) சுரதாவிற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்

A) கலைமாமணி விருது

B) பாரதியார் விருது

C) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

94) Oriental Mysti Myna என்ற இதழை மறைமலையடிகள் எப்போது நடத்தினார்?

A) 1902

B) 1908

C) 1932

D) 1935

விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.

95) எப்போது உ.வே.சா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?

A) 1933

B) 1942

C) 1932

D) 1924

விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.

96) உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

B) சுப்புரத்தினதாசன்

C) பாரதியார்

D) மீரா

விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

97) எந்த பல்லைக்கழகம் சி.மணி-க்கு விருது வழங்கியது?

A) தஞ்சை

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) திருவள்ளுவர்

விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:

1. விளக்கு விருது

2. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது

3. ஆசான் கவிதை விருது

4. கவிஞர் சிற்பி விருது

98) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?

A) பரிதிமாற்கலைஞர்

B) சுவாமி வேதாச்சலம்

C) நாமக்கல் கவிஞர்

D) நம்பியாண்டார் நம்பி

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:

1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

2. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

3. சாகுந்தல நாடகம்

4. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

99) வாயி லோயே வாயி லோயே

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……..என்ற வரிகளில் வயங்குமொழி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வலிமையான சொற்கள்

B) விளங்கும் சொற்கள்

C) எளிமையான சொற்கள்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.

வாயி லோயே – வாயிற்காவலனே

வயங்குமொழி – விளங்கும் சொற்கள்

வித்தி – விதைத்து.

100) சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு சென்று பரிதிமாற்கலைஞரால் தேர்வு செய்யப்பட்டவர் யார்?

A) மறைமலைஅடிகள்

B) சிங்காலவேலர்

C) திரு.வி.கா

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணுக்குச் சென்றார். மறைமலையடிகள். அந்த கல்லூரியில் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு கேட்டபோது அஃது எனக்குத் தெரியாது என்று பதிலளித்து பரிதிமாற்கலைஞரை வியக்க வைத்தார்.

அஃது – ஆய்ததொடர்க்குற்றியலுகரம்

எனக்கு – வன்தொடக் குற்றியலுகரம்

தெரியாது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.

101) சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்

தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில்……..என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கண்ணதாசன்

B) தொல்காப்பியர்

C) சுரதா

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல

புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்

சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்

தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா

102) தவறான கூற்றை தெரிவு செய்க.

A) வயங்குமொழி – வினைத்தொகை

B) அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

C) அறிவும்புகழும் – உம்மைத்தொகை

D) சிறாஅர் – இசைநிறை அளபெடை

விளக்கம்: அறிவும் புகழும் – எண்ணும்மை

உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை. எ.கா. அறிவுபுகழ்

உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை. எ.கா அறிவும் புகழும்.

103) ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது_____________திணையாகும்.

A) வாகைத் திணை

B) தும்பைத்திணை

C) பாடாண் திணை

D) புகழ் திணை

விளக்கம்: பாடாண் திணை – பாடு + ஆண் + திணை – பாடப்படும் ஆண்மகன் பற்றிய திணை.

பாடாண் திணை – ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

104) தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்

சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும் ……என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுரதா

B) மீரா

C) பாரதியார்

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்

சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்

ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்

இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா

105) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) ப.சுப்பிரமணியனார் – உயிரின மருத்துவர்

B) மா.இராசமாணிக்கனார் – வரலாற்றாய்வாளர்

C) நாராயணசாமி – திருக்குறள் உரையாசிரியர்

D) நாவலர் சோமசுந்தர பாரதியார் – வழக்குரைஞர்

விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – உயிரின மருத்துவர்

மா.இராசமாணிக்கனார் – வரலாற்றாய்வாளர்

நாராயணசாமி – நற்றிணை உரையாசிரியர்

நாவலர் சோமசுந்தர பாரதியார் – வழக்குரைஞர்

106) எனக்கு என்ற சொல் எந்த வகையான குற்றியலுகரச்சொல்?

A) வன்தொடர்க்குற்றியலுகரம்

B) மென்தொடர்க்குற்றியலுகரம்

C) இடைத்தொடர்க்குற்றியலுகரம்

D) உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்

விளக்கம்: எனக்கு என்பது வன்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலுகரம் – குறுமை + இயல் + உகரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,

1. நெடில்தொடர்க்குற்றியலுகரம்

2. ஆய்ததொடர்குற்றியலுகரம்

3. உயிர்த்தொடர்குற்றியலுகரம்

4. வன்தொடர்குற்றியலுகரம்

5. மென்தொடர்குற்றியலுகரம்

6.இடைத்தொடர்குற்றியலுகரம்.

ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.

வன்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்று இருக்க வேண்டும்.

107) எங்கு உ.வே.சா-க்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது?

A) கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி

B) சென்னை மாநிலக் கல்லூரி

C) சென்னைப் பல்கலைக்கழகம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.

108) நான்கடி முதல் 12 அடி வரை உள்ள செய்யுள் கீழ்க்காணும் எந்த வெண்பாவுடன் தொடர்புடையது எது?

A) நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

B) நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பா

C) பஃறொடை வெண்பா

D) கலிவெண்பா

விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

2. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

3. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

4. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

109) துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) சுப்புரத்தினதாசன்

C) பாரதியார்

D) மீரா

விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

110) ஒளவையார் குறுந்தொகையில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?

A) 15

B) 4

C) 7

D) 33

விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:

1. அகநானூறு – 4

2. குறுந்தொகை – 15

3. நற்றிணை – 7

4. புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

111) சி.மணி (சி.பழனிச்சாமி) பெறாத விருது எது?

A) விளக்கு விருது

B) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது

C) ஆசான் கவிதை விருது

D) கலைமாமணி விருது

விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:

1. விளக்கு விருது

2. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது

3. ஆசான் கவிதை விருது

4. கவிஞர் சிற்பி விருது

112) உ.வே.சா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் உ.வே.சா ஆவார்.

2. மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தஷிணாத்திய கலாநிதி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.

3. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

4. 1933இல் சென்னைப் பல்லைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம்பெற்ற பெருமைக்குரியவர்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் உ.வே.சா ஆவார்.

2. மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தசஷிணாத்திய கலாநிதி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.

3. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

4. 1932இல் சென்னைப் பல்லைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம்பெற்ற பெருமைக்குரியவர்.

113) உள்ளியது முடிக்கும் உரைனுடை உள்ளத்து – என்ற வரியில் உள்ளியது முடிக்கும் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) செய்தததை முடிக்கும்

B) நினைத்ததை முடிக்கும்

C) பார்த்ததை முடிக்கும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.

114) மங்கையர்க்கரசி என்ற நூலை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) மீரா

C) சுரதா

D) வாணிதாசன்

விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.

115) பொருத்துக. (அறிஞர்கள் – அவர்கள் படித்த திண்ணைப் பள்ளிக்கூடம்)

அ. ப.சுப்பிரமணியனார் – 1. எட்டயபுரம்

ஆ. மா.இராசமாணிக்கனார் – 2. திருநெல்வேலி

இ. நாராயணசாமி – 3. கிருஷ்ணாபுரம்

ஈ. நாவலர் சோமசுந்தர பாரதியார் – 4. மௌனகுரு

A) 4, 2, 3, 1

B) 2, 3, 4, 1

C) 2, 4, 1, 3

D) 2, 4, 3, 1

விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – திருநெல்வேலி

மா.இராசமாணிக்கனார் – மௌனகுரு

நாராயணசாமி – கிருஷ்ணாபுரம்

நாவலர் சோமசுந்தர பாரதியார் – எட்டயபுரம்

116) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் மரபுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்

2. இவர் புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்திவயவர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சி.மணி (சி.பழனிச்சாமி) புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர். இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.

117) வறுந்தலை உலகமும் அன்றே அதனால் – என்ற வரிகளில் வறுந்தலை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வெறுமையான இடம்

B) வறுமை நிலை

C) வரும் தலைமை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வறுந்தலை என்றால் வெறுமையான இடம் என்று பொருள்.

118) வயங்குமொழி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?

A) வினையெச்சம்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) பெயரெச்சம்

விளக்கம்: வயங்குமொழி – வினைத்தொகை.

ஒரு சொல் மூன்று காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றி எழுத முடியுமானால் அது வினைத்தொகை எனப்படும்.

119) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – தளை என்பது எதைக் குறிக்கும்?

A) உடல் உறுப்பு

B) முதன்மைப் பகுதி

C) தாவரத்தின் உறுப்பு

D) யாப்பின் உறுப்பு

விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

6. தொடை

அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.

சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்

தளை – பிணித்தல், கட்டுதல்.

120) தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யில் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) சி.மணி

D) ந.காமராசன்

விளக்கம்: ஆங்கிலப் பேராசிரியரான சி.மணி தாவோ தே ஜிங் எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

121) யாப்பும் கவிதையும் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) சி.மணி

B) அய்யப்ப மகாதேவன்

C) தி.சு.நடராசன்

D) சிற்பி பாலசுப்பிரமணியம்

விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

122) ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்

இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த……என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சுரதா

B) மீரா

C) பாரதியார்

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்

சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்

ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்

இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா

123) அமுதும் தேனும் என்ற நூலை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) மீரா

C) சுரதா

D) வாணிதாசன்

விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.

124) வ.சுப.மாணிக்கம் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?

A) திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்

B) மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம்

C) கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம்

D) எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்

விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்

மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம் – வ.சுப.மாணிக்கம்

கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி

எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.

125) வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்

வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்……. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) எத்திராசலு என்ற அரங்கசாமி

B) இராசகோபாலன்

C) மீ.ராசேந்திரன்

D) முத்தையா

விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை

சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்

வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்

வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)

எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர் .

முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.

மீ.ராசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.

126) கூற்றுகளை ஆராய்க.

1. சிற்றரசனான அதிமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

2. ஒளவையார் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சிற்றரசனான அதிமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

2. ஒளவையாhர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

127) முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?

A) வாஷிங்டன்

B) பாரிஸ்

C) இலண்டன்

D) டெல்லி

விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.

128) காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை – என்ற வரிகளில் கலன் என்ற சொல்லின் பொருள்?

A) யாழ்

B) கலப்பை

C) கோடாரி

D) பாத்திரம்

விளக்கம்: இவ்வரிகளில் கலன் என்றால் யாழ் என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.

129) பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே

பூவென்றும் சொல்லுகின்றோம்…– என்று கூறியவர் யார்?

A) தி.சு.நடராஜன்

B) நாமக்கல் கவிஞர்

C) நா.காமராசன்

D) சுரதா

விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்

ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்

பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே

பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை – சுரதா

130) சாலைப் போக்குவரத்து உதவிக்கு நாம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் எது?

A) 108

B) 103

C) 102

D) 104

விளக்கம்: சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.

131) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் கவிதைகள் வெளிவந்த இதழ் – எழுத்து

2. இவர் நடத்திய சிற்றிதழ் – நடை

3. இவரின் இலக்கண நூல் – யாப்பும் கவிதையும்

4. இவரின் கவிதை நூல்கள் – இதுவரை, வரும்போகும், ஒளிச்சேர்க்கை

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவர் கவிதைகள் வெளிவந்த இதழ் – எழுத்து

2. இவர் நடத்திய சிற்றிதழ் – நடை

3. இவரின் இலக்கண நூல் – யாப்பும் கவிதையும்

4. இவரின் கவிதை நூல்கள் – இதுவரை, வரும்போகும், ஒளிச்சேர்க்கை

132) சிறாஅர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) இன்னிசை அளபெடை

B) இசைநிறை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சிறாஅர் – இசைநிறை அளபெடை.

செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைக்க வரும் அளபெடை இசைநிறை அளபெடை எனப்படும். இதன் மாத்திரை மூன்று ஆகும்.

133) பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்

பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) மருதகாசி

C) சுரதா

D) கவிமணி

விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்

பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே

எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே.. – சுரதா

134) கனியின் இனிமை

கனியில் மட்டுமில்லை

சுவைப்போன் பசியை

சுவைமுடிச்சைச் சார்ந்துதது – என்ற கவிதை எழுதியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) சுந்தரராமசாமி

C) வாணிதாசன்

D) சி.மணி

விளக்கம்: கனியின் இனிமை

கனியில் மட்டுமில்லை

சுவைப்போன் பசியை

சுவைமுடிச்சைச் சார்ந்தது – சி.மணி

135) உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து கொண்ட எத்தனையாவது பெரிய நாடு இந்தியா?

A) 1

B) 2

C) 4

D) 7

விளக்கம்: இந்தியா உலகிலேயே அதிக சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு ஆகும். ஏறக்குறைய 55இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டில் 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. அதனால் விபத்துக்கள் மிகுதியாக நடக்கின்றன.

136) இந்தியாவிலேயே சாலை விபத்துக்களின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

A) பீகார்

B) உத்திரப்பிரதேசம்

C) தமிழ்நாடு

D) மேற்கு வங்காளம்

விளக்கம்: தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துக்களில் 15 விழுக்காடு விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கிறது.

137) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – அசை என்பது எதைக் குறிக்கும்?

A) பல சொற்கள் சேர்ந்தது

B) பல எழுத்துக்கள் சேர்ந்தது

C) பல வரிகள் சேர்ந்தது

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

6. தொடை

அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.

சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்

138) அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்

அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்

பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்

புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) மீரா

C) இராசகோபாலன்

D) கனகசபை

விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்

அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்

பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்

புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)

139) தவறான கூற்றை தெரிவு செய்க

A) மா இரண்டு வகைப்படும் – 1. தேமா 2. புளிமா

B) விளம் இரண்டு வகைப்படும் – 1. கருவிளம் 2. கூவிளம்

C) காய் நான்கு வகைப்படும் – 1. தேமாங்காய் 2. புளிமாங்காய் 3. கூவிளங்காய் 4. கருவிளங்காய்

D) மற்ற பாக்களை வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது ஆசிரியப்பா.

விளக்கம்: ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.

140) அறிவும் புகழும் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) முற்றும்மை

B) எண்ணும்மை

C) உம்மைத்தொகை

D) உவமைத்தொகை

விளக்கம்: அறிவும் புகழும் – எண்ணும்மை.

உம் என்ற சொல் இரண்டு சொற்களில் வெளிப்படையாக வந்தால் – எண்ணும்மை

உம் என்ற சொல் இரண்டு சொற்களில் மறைந்து வந்தல் – உம்மைத் தொகை

141) ஒளிச்சேர்க்கை என்னும் நூலை எழுதியவர் யார்?

A) சி.மணி

B) அய்யப்ப மகாதேவன்

C) தி.சு.நடராசன்

D) சிற்பி பாலசுப்பிரமணியம்

விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

142) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) Arrival – வருகை

B) Depature – நுழைவு

C) Conveyor Belt – ஊர்திபடை

D) Take off – வானூர்தி கிளம்புதல்

விளக்கம்: Arrival – வருகை

Depature – புறப்பாடு

Conveyor Belt – ஊர்திபடை

Take off – வானூர்தி கிளம்புதல்

143) பொருத்துக.

அ. மழு – 1. வலிமை

ஆ. கலன் – 2. கோடாரி

இ. கலப்பை – 3. யாழ்

ஈ. உரன் – 4. கருவிகளை வைக்கும் பை

A) 1, 2, 4, 3

B) 3, 2, 4, 1

C) 3, 2, 1, 4

D) 2, 3, 4, 1

விளக்கம்: மழு – கோடாரி

கலன் – யாழ்

கலப்பை – கருவிகளை வைக்கும் பை

உரன் – வலிமை.

144) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) மருதகாசி

C) சுரதா

D) கவிமணி

விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்

பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே

எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்

இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – சுரதா

145) கூற்றுகளை ஆராய்க.

1. மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – ப.சுப்பிரமணியனார்.

2. பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.மில்டனின் சுவர்க் நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – ப.சுப்பிரமணியனார். இவர் உயிரின மருத்துவருமாவார்.

2. நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.

146) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்

மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு …… – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) கண்ணதாசன்

C) நா.காமராசன்

D) சுரதா

விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு

மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்

மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா

147) எண்ணம்

வெளியீடு

கேட்டல்

இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல

மூன்றான காலம்போல் ஒன்று – என்ற கவிதை வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) நாமக்கல் கவிஞர்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) சி.மணி

விளக்கம்: எண்ணம்

வெளியீடு

கேட்டல்

இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல

மூன்றான காலம்போல் ஒன்று – சி.மணி

148) அடையா என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?

A) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

B) எதிர்மறைப் பெயரெச்சம்

C) வினைத்தொகை

D) இசைநிறை அளபெடை

விளக்கம்: அடையா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அடையாத என்ற சொல்லின் கடைசி எழுத்தான ‘த’ என்னும் எழுத்து வராமல் இச்சொல் செயலை உணத்துகிறது. அதனால் ஈறு கெட்ட (கடைசி எழுத்து இல்லாத)

இது அடையும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ஆகும். அதனால் எதிர்மறை

அ என்னும் எழுத்தில் முடிந்தால் பெயரெச்சம்.

அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

149) எத்திசை என்ற சொல்லை பிரித்து எழுதுக.

A) எத் + திசை

B) ஏ + திசை

C) எட்டு + திசை

D) எ + திசை

விளக்கம்: எத்திசை – எ + திசை

விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

150) தேன்மழை என்ற நூலை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) மீரா

C) சுரதா

D) தி.சு.நடராசன்

விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.

151) ………………..தளைகள் சென்றே

அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின் கீழே

அடியிருந்தால் தொடைகள்வரும்…………. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) நாமக்கல் கவிஞர்

C) சுரதா

D) பாரதியார்

விளக்கம்: …………………….தளைகள் சென்றே

அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே

அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு

செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்

தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா

152) கூற்று: வெண்பா செப்பலோசை பெற்றது.

காரணம்: சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது.

A) கூற்று சரி, காரணம் தவறு.

B) கூற்று தவறு, காரணம் சரி.

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே, இது செப்பலோசை உடையதாயிற்கு. சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.

153) சொல்ல விரும்பிய தெல்லாம்

சொல்லில் வருவதில்லை – என்று கூறியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன்

D) சி.மணி

விளக்கம்: சொல்ல விரும்பிய தெல்லாம்

சொல்லில் வருவதில்லை – சி.மணி

154) நவத்வீபம் என்பது எங்கு உள்ள ஓர் ஊர் ஆகும்?

A) பீகார்

B) வங்காளம்

C) நோபளம்

D) பர்மா

விளக்கம்: நவத்வீபம் என்பது வங்காளத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும்.

155) பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல

புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்……..என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) கண்ணதாசன்

B) தொல்காப்பியர்

C) சுரதா

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல

புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்

சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்

தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா

156) வரும்போகும் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) சி.மணி

B) அய்யப்ப மகாதேவன்

C) தி.சு.நடராசன்

D) சிற்பி பாலசுப்பிரமணியம்

விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

157) மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே – என்ற வரிகளில் மழு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கலப்பை

B) கோடாரி

C) யாழ்

D) அரிவாள்

விளக்கம்: கலன் – யாழ்

கலப்பை – கருவிகளை வைக்கும் பை

மழு – கோடாரி.

158) Take off என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) வானூர்த்தி கிளம்புதல்

B) செல்லுதல்

C) எடுத்துச்செல்லுதல்

D) வருகை

விளக்கம்: Arrival – வருகை

Departure – புறப்பாடு

Take off – வானூர்தி கிளம்புதல்.

159) ……………….. தொடைகள் நன்கு

செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்

தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) நாமக்கல் கவிஞர்

C) சுரதா

D) பாரதியார்

விளக்கம்: …………………….தளைகள் சென்றே

அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே

அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு

செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்

தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா

160) கூற்று: வெண்பா ‘வன்பா’ என்று அழைக்கப்படுகிறது.

காரணம்: ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா.

A) கூற்று சரி, காரணம் தவறு.

B) கூற்று தவறு, காரணம் சரி.

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: வெண்பா எழுதுவதற்கெனப் பொதுவான சில இலக்கணங்கள் உண்டு. ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.

161) வெண்பா எழுதுவதற்குரிய தளை எது?

A) இயற்சீர் வெண்டளை

B) வெண்சீர் வெண்டளை

C) ஒன்றிய வஞ்சித்தளை

D) A மற்றும் B

விளக்கம்: வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்ற வேண்டும். வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

162) கீழ்க்காண்பவர்களில் யார் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார்?

A) பரிமேலழகர்

B) பின்னத்தூர் நாராயணசாமி

C) நாவலர் சோமசுந்தர பாரதியார்

D) வேங்கடசாமி

விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.

பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).

நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).

பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.

163) நிறைமொழி என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க

A) நிரைநிரை

B) நேர்நேர்

C) நிரைநேர்

D) நேர்நிரை

விளக்கம்: நிறைமொழி – நிரைநிரை

நிரைநிரை – கருவிளம்.

164) இதுவரை என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

A) சி.மணி

B) தி.சு.நடராசன்

C) சுந்தர ராமசாமி

D) அய்யப்ப மகாதேவன்

விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை; தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.

165) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ள செய்யுள் கீழ்க்காணும் எந்த வெண்பாவுடன் தொடர்புடையது எது?

A) நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

B) நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பா

C) பஃறொடை வெண்பா

D) கலிவெண்பா

விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

2. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

3. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

4. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

166) நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் எந்த பா வகையில் எழுதப்பட்டன?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.

167) Arrival என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) வருகை

B) புறப்பாடு

C) செல்லுதல்

D) நிற்றல்

விளக்கம்: Arrival – வருகை

Departure – புறப்பாடு.

168) படைப்புக்கலை என்ற நூலை எழுதியவர் யார்?

A) அ.கி.பரந்தாமனார்

B) சுரதா

C) கி.வா.ஜகந்நாதன்

D) மு.சுதந்திரமுத்து

விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்

நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து

துறைமுகம் – சுரதா

169) பொருத்துக.

முதல்சீர் (அ) நின்றசீர் வரும்சீர்

அ. மா – 1. கருவிளங்காய்

ஆ. விளம் – 2. கூவிளங்காய்

அ. காய் – 3. நாள்

A) 1, 2, 3

B) 2, 1, 3

C) 3, 1, 2

D) 3, 2, 1

விளக்கம்: மா – புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர், பிறப்பு

விளம், காய் – தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள், காசு

170) சி.மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தன?

A) மணிக்கொடி

B) நடை

C) எழுத்து

D) வாசகர்

விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.

171) மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் எப்போது இயற்றப்பட்டது?

A) 2015

B) 2017

C) 2018

D) 2021

விளக்கம்: மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

172) கூற்றுகளை ஆராய்க.

1. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்.

2. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களை, ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவர சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்.

2. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களை, ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவர சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

173) சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச்செல்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் கருவிக்கு______________என்று பெயர்?

A) சட்டம்

B) அசை

C) தூக்கு

D) B மற்றும் C

விளக்கம்: சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.

174) மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று கூறும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) பட்டினப்பாலை

C) நற்றிணை

D) மதுரைக்காஞ்சி

விளக்கம்: கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.

175) வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) தொல்காப்பியம்

C) நிகண்டுகள்

D) நன்னூல்

விளக்கம்: வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும் – நன்னூல்

ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

176) மறைமலைஅடிகள் எழுதிய நூல்களில் பொருந்தாததை தேர்வு செய்க.

A) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

B) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

C) சாகுந்தல நாடகம்

D) திருஞானசம்பந்தர் வரலாறும் காலமும்

விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:

1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

2. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

3. சாகுந்தல நாடகம்

4. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

177) முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள். மூன்றாவது வெண்பா ஒருவிகற்பா – இதற்குப் பொருத்தமான எது?

A) நேரிசை வெண்பா

B) இன்னிசை வெண்பா

C) நேரிசை சிந்தியல் வெண்பா

D) இன்னிசை சிந்தியல் வெண்பா

விளக்கம்: முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்பா நேரிசை வெண்பாக்கள். (முதலிரு அடிகளும் ஈற்றிரு அடிகளும் வேறு வேறான எதுகை) மூன்றாவது வெண்பா ஒருவிகற்ப (நான்கடிகளும் ஒரே எதுகை) – இன்னிசை வெண்பா.

178) கூற்றுகளை ஆராய்க.

1. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.

2. உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. எழுத்துக்களின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்து வந்தன. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும். பெரியோர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருஷங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை

2. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’ தென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு

179) கூற்று: நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெருகத் தொடங்கின.

காரணம்: அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.

180) கூற்று: தனித்தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக மறைமலைஅடிகள் விளங்கினார்.

காரணம்: பரிதிமாற்கலைஞருடனான அவரின் நட்பு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பரிதிமாற்கலைஞருடனான மறைமலை அடிகளாரின் நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழி கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.

181) சரியான கூற்றை தெரிவு செய்க

A) நம் மாநிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது

B) எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது

C) ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்

D) வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன

விளக்கம்: நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது

எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது

ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

வானம் பார்த்த பூமியில் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

182) கூற்றுகளை ஆராய்க.

1. சி.மணி நடை என்னும் இதழில் 1959-ஆம் ஆண்டு முதல் கவிதை எழுதினார்.

2. இவர் எழுத்து என்னும் சிற்றிதழையும் நடத்தினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.

183) சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை

சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்……. – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) எத்திராசலு என்ற அரங்கசாமி

B) இராசகோபாலன்

C) மீ.ராசேந்திரன்

D) முத்தையா

விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை

சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்

வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்

வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)

எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர்.

முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.

மீ. ராசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.

184) ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் என்ற வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?

A) தமிழ்விடுதூது

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை “மையாடல் விழா” என்று சொல்வார்கள். இதனை மேற்காணும் சிந்தாமணி வரிகள் குறிப்பிடுகிறது.

185) கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல்

அம்புகோல் கால்கள் அசையாமல் – தம்பி

எழுதினால் நன்மை யுண்டு – என்ற வரிகளும் மூலம் உணர்த்தப்படும் செய்தி என்ன?

A) ஆசிரியர்கள் முதலில் தரையில் எழுத அதன் மீது மாணவர்கள் எழுத விரும்புவார்கள்

B) பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்

C) பிள்ளைகளுக்கு பாடநூல்கள் மனனமாக இருக்கும்

D) எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள்

விளக்கம்: மேற்காணும் வெண்பா மூலம் எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள் என்ற செய்தி உணர்த்தப்படுகிறது. பழைய ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தால் இது விளங்கும்.

186) மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தமிழ்விடுதூது

B) சிலப்பதிகாரம்

C) திருக்குறள்

D) சீவக சிந்தாமணி

விளக்கம்: மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – தமிழ்விடுதூது

187) சி.மணி நடத்திய இதழ் எது?

A) நடை

B) முல்லை

C) குயில்

D) கடிதம்

விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.

188) கூற்றுகளை ஆராய்க

1. உலகிலேயே விபத்துக்களில் அடிப்படையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

2. இந்தியாவில் ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன

3. இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

4. தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1, 3 தவறு

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உலகிலேயே விபத்துக்களில் அடிப்படையில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.

2. இந்தியாவில் ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன

3. இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் இடம் வகிக்கிறது.

4. தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படுகிறது.

189) கூற்று: அஷாபியாசத்தை மையாடல் விழா என்று சொல்வார்கள்.

காரணம்: சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளிச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்காரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளிச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்காரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை மையாடல் விழா என்று சொல்வார்கள்.

190) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) உத்தரவுக் குறியீடுகள்

B) எச்சரிக்கை குறியீடுகள்

C) தகவல் குறியீடுகள்

D) திசைக் குறியீடுகள்

விளக்கம்: சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர்செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவற்றை

1. உத்தரவுக் குறியீடுகள்

2. எச்சரிக்கைக் குறியீடுகள்

3. தகவல் குறியீடுகள் என மூன்றாகப் பிரித்து அறியலாம்.

191) 2017 மோட்டார் வாகனச் சட்டம் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) 18 வது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்

B) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டனைத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

C) ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகை கட்ட நேரும்

D) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்திகளை இயக்கினால் ரூ.1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

விளக்கம்: 18 வது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டனைத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ.2000 தண்டத்தொகை கட்ட நேரும்

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்திகளை இயக்கினால் ரூ.1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

192) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது.

2. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது.

2. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

193) கூற்றுகளை ஆராய்க.

1. கதைப்பாடல்கள் மாணவர்களுக்கு கற்பித்த நூல்களை பட்டியலிடுகின்றன.

2. நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

3. கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய பிரபாவதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.

4. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கதைப்பாடல்கள் மாணவர்களுக்கு கற்பித்த நூல்களை பட்டியலிடுகின்றன.

2. நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

3. கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய பிரபாவதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.

4. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்

194) பொருத்துக.

அ. மூன்றடி வெண்பா – 1. நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

ஆ. நான்கடி வெண்பா – 2. நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

இ. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – 3. கலிவெண்பா

ஈ. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 4. பஃறொடை வெண்பா

A) 2, 1, 4, 3

B) 1, 2, 3, 4

C) 2, 1, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

2. நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா

3. நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா

4. பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா

195) வெண்பா பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?

A) இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்

B) ஈற்றடி நாற்சீராகவும் ஏனையவை முச்சீராகவும் அமைய வேண்டும்

C) ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் வரும்

D) மூவசைச்சிரில் காய்ச்சீர் வரும்

விளக்கம்: வெண்பாவிற்கான இலக்கணம்:

1. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்

2. ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்

3. ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.

4. ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக்கொண்டு முடியும்.

196) 2017 மோட்டார் வாகனச் சட்டம் பற்றிய கூற்றுகளில் தேர்வு செய்க

A) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ.5000 தண்டத்தொகை பெறப்படும்.

B) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ. 5000 தண்டத்தொகை கட்ட நேரும்

C) மிகு வேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகை கட்ட நேரும்.

D) இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

விளக்கம்: அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ.5000 தண்டத்தொகை பெறப்படும்.

மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10000 தண்டத்தொகை கட்ட நேரும்

மிகு வேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகை கட்ட நேரும்.

இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin