General Tamil

12th Tamil Unit 3 Questions

12th Tamil Unit 3 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.

1) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) அரசியல்

B) அமைச்சியல்

C) ஒழிபியல்

D) களவியல்

விளக்கம்: அறத்துப்பால்:

1. பாயிரவியல்

2. இல்லறவியல்

3. துறவறவியல்

4. ஊழியல்

பொருட்பால்:

1. அரசியல்

2. அமைச்சியல்

3. ஒழிபியல்

இன்பத்துப்பால்:

1. களவியல்

2. கற்பியல்

2) கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

A) 5

B) 6

C) 4

D) 2

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்தியா காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்

3) ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்தில்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டே? – என்று பாடியவர் யார்?

A) கண்ணதாசன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி

பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க

ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்தில்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டே? – நாமக்கல் கவிஞர்

4) உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

A) மாதவன்

B) பூமணி

C) ப.ரவி

D) நா.காமரசன்

விளக்கம்: உரிமைத்தாகம் என்னும் இச்சிறுகதை ‘பூமணி சிறுகதைகள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. பூமணி கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ.மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கி பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

5) ________________எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?

A) கிராமம்

B) தலைவன்

C) அரசன்

D) குடும்பம்

விளக்கம்: குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.

6) பரிதிமாற்கலைஞர் எப்.ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று யாரிடம் உதவித்தொகை பெற்றார்?

A) மகாவித்துவான் சபாபதி

B) பாஸ்கர சேதுபதி

C) மு.சி.பூர்ணலிங்கம்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: பரிதிமாற்கலைஞர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார். இவர் எப்.ஏ. (F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

7) கூற்றுகளை ஆராய்க.

1. குடும்பு எனும் சொல்லுடன் அம் விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக குடும்பம் எனும் சொல் அமைந்தது.

2. குடும்பு என்ற சொல் கூடிவாழுதல் என்று பொருள்படுகின்றது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குடும்பு எனும் சொல்லுடன் அம் விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக குடும்பம் எனும் சொல் அமைந்தது

2. குடும்பு என்ற சொல் கூடிவாழுதல் என்று பொருள்படுகின்றது.

8) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மனிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்தவர் யார்?

A) பக்தவத்சல பாரதி

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) நா.காமரசன்

D) ப.ரவி

விளக்கம்: பக்தவத்சல பாரதி தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார். பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.

9) திராவிட சாஸ்திரி என்று பரிதிமாற்கலைஞரைப் போற்றியவர் யார்?

A) சி.வை.தாமோதரனார்.

B) பரிதிமாற்கலைஞர்

C) மகாவித்துவான் சபாபதி

D) மறைமலையடிகள்

விளக்கம்: திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவரின் காலம் 1870-1903 ஆகும்.

10) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை – இக்குறளில் இயல்பினான் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அறத்தின் இயல்போடு வாழ்பவன்

B) முயற்சி சிறப்போடு வாழ்பவன்

C) இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன்

D) மேற்காணும் எதுமில்லை

விளக்கம்: இயல்பினான் – அறத்தின் இயல்போடு வாழ்பவன் என்று பொருள். அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமேம்பட்டவர் ஆவார்.

11) குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற

காலத்தின் கூட்டம் ஒத்தார் – என்ற வரிகளில் குவால் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) குறையாத

B) வேண்டாத

C) அனைத்து

D) உரிய காலம்

விளக்கம்: குவால் – அனைத்து.

குவால் அறம் – அறங்கள் அனைத்தும். அறங்கள் அனைத்தையும் நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம்போல் இராமனும் சுக்ரீவனும் ஒருங்கிணைந்தார்கள் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.

12) கூற்றுகளை ஆராய்க.

1. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – பாரதிதாசன்

2. வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே – பாரதியார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – பாரதியார்

2.வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே – பாரதிதாசன்

13) பூமணியின் முழுப்பெயர் என்ன?

A) பூ.மணிகண்டன்

B) பூ.மணிரத்தினம்

C) பூ.மாணிக்கவாசகர்

D) பூ.மணிராசன்

விளக்கம்: பூமணி கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ.மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கி பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

14) கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று

கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்……..என்று பாடியவர் யார?;

A) நாமக்கல் கவிஞர்

B) கண்ணதாசன்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

விளக்கம்: கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்

தெற்றெனநம் அகக் கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக் கவி பாரதி ஓர்ஆசான் திண்ணம் – நாமக்கல் கவிஞர்.

15) ஓர் ஆனந்தம்

சற்று மனச்சோர்வு

சிறிது அற்பத்தனம் ……என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) ஜலாலுத்தீன் ரூமி

B) பாரதியார்

C) பரலி.சு.நெல்லையப்பர்

D) தி.சு.நடராசன்

விளக்கம்: ஓர் ஆனந்தம்

சற்று மனச்சோர்வு

சிறிது அற்பத்தனம்

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு

எதிர்பாராத விருந்தாளிகளாக

அவ்வப்போது வந்து செல்லும் – ஜலாலுத்தீன் ரூமி

16) சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு இடம்பெற்ற சொற்களில் கூடி வாழுதல் என்று பொருள்தரும் சொல் எது?

A) குடும்பை

B) குடம்பை

C) குடும்பு

D) கடும்பு

விளக்கம்: சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. ‘குடும்பை’ என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழ்தல் என்று பொருள்படுகிறது.

17) திராவிட சாஸ்திரி என்று போற்றப்பட்டவர் யார்?

A) சி.வை.தாமோதரனார்.

B) பரிதிமாற்கலைஞர்

C) மகாவித்துவான் சபாபதி

D) மறைமலையடிகள்

விளக்கம்: திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவரின் காலம் 1870-1903 ஆகும்.

18) தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் உற்றார் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) உறவினர்

B) அயலவர்

C) நண்பர்

D) பகைவர்

விளக்கம்: உற்றார் – நண்பர். இதன் எதிர்ச்சொல் பகைவர் என்பதாகும். மேற்காணும் வரிகள் இராமன் சுக்ரீவனிடம் கூறிய வரிகள் ஆகும். தீயவராக இருந்தாலும் உனக்கு நண்பர்கள் ஆயின் எனக்கும் நண்பர்கள் என்று இராமர் சுக்ரீவனிடம் கூறினார்.

19) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது என்ற திருக்குறளின் அணி எது?

A) ஏகதேச உருவக அணி

B) நிரல் நிறை அணி

C) வேற்றுமை அணி

D) சொல்பின்வருநிலை அணி

விளக்கம்: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது – நிரல்நிறை அணி.

அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். இங்கு முதல் வரிசையில் உள்ள அன்பு, அறம் என்னும் சொல்(நிரையில்) உள்ள சொல் அதன் நிரலில் உள்ள சொல்லோடு (பண்பு, பயன்) சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நிரையில் உள்ள சொல்லோடு நிரலில் உள்ள சொல்லை சேர்த்து பொருள் கொள்வது நிரல் நிரை அணி எனப்படும்.

20) கூற்றுகளை ஆராய்க.

1. அது என்னும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு உரியது.

2. அருகில் என்பதற்கு எதிர்ச்சொல் அருகாமை என்பதாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அது என்னும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு உரியது. வரும் சொல் உயர்திணையாயின் அது என்னும் உருபினைப் பயன்படுத்துதல் கூடாது.

எனது வீடு, அரசரது மாளிகை – சரி

எனது மனைவி, அரசரது மகன் – தவறு

2. அருகில் என்பதற்கு எதிர்ச்சொல் அருகாமை என்பதாகும்.

21) பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது?

A) அய்யப்ப மகாதேவன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) பக்தவத்சலபாரதி

D) ரா.பத்மநாபன்

விளக்கம்: பக்தவத்சல பாரதி தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார். பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.

22) ஏழினோடு ஏழாய் நின்ற

உலகும் என் பெயரும் எந் நாள் – இவ்வரிகளில் ஏழினோடு ஏழாய் என்பது கீழக்காணும் எந்த எண்ணைக் குறிக்கும்?

A) 7

B) 77

C) 49

D) 14

விளக்கம்: ஏழினோடு ஏழாய் – ஏழேழாகிய 14 என்று பொருள்.

23) கீழ்க்காண்பவர்களில் யார் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றினார்?

A) நா.காமராசன்

B) பூ.மாணிக்கவாசகர்

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) நா.காமரசன்

விளக்கம்: பூமணி கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ.மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கி பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

24) குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் எந்த திருக்குறளில் இடம்பெற்றுள்ளது?

A) 1007

B) 1029

C) 1240

D) 127

விளக்கம்: குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளின்தான் (1029) பயின்று வருகிறது.

25) கூற்றுகளை ஆராய்க.

1. சுடுதண்ணீர் என்று எழுதுவதும் பிழையே.

2. நடுசென்டரில் நின்றான் என்று எழுதுவது பிழையே.

3. வினைத்தொகையில் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகும்.

4. திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன் என்று எழுதுவதே சரி

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சுடுதண்ணீர் என்று எழுதுவதும் பிழையே. தண்ணீர் – குளிர்ந்த நீர். சூடும் குளிருமாக நீர் எப்படி இருக்கமுடியும்?

2. நடுசென்டரில் நின்றான் என்று எழுதுவது பிழையே. நடு என்பது தமிழ். சென்டர் என்பது ஆங்கிலம். இரண்டிற்கும் ஒரே பொருள். நடுவில் நின்றான் என்று எழுதினாலே போதும்.

3. வினைத்தொகையில் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகாது.

4. திருவளர்செல்வன், திருநிறைசெல்வன் என்று எழுதுவதே சரி

26) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது – இக்குறட்பாவில் வையகம், வானகம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) விண்ணுலகம், மண்ணுலகம்

B) மண்ணுலகம், விண்ணுலகம்

C) மண்ணுலகம், கடல்

D) கடல், விண்ணுலகம்

விளக்கம்: வையகம் – மண்ணுலகம் வானகம் – விண்ணுலகம். தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது என்பது மேற்காணும் திருக்குறளின் பொருள் ஆகும்.

27) ……

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு

எதிர்பாராத விருந்தாளிகளாக

அவ்வப்போது வந்து செல்லும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) அய்யப்ப மகாதேவன்

B) தி.சு.நடராசன்

C) பாரதியார்

D) ஜலாலுத்தீன் ரூமி

விளக்கம்: ஓர் ஆனந்தம்

சற்று மனச்சோர்வு

சிறிது அற்பத்தனம்

நொடிப்பொழுதேயான விழப்புணர்வு

எதிர்பாராத விருந்தாளிகளாக

அவ்வப்போது வந்து செல்லும் – ஜலாலுத்தீன் ரூமி

28) பூமணி எப்போது சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

A) 2017

B) 2016

C) 2014

D) 2018

விளக்கம்: பூமணி அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். இவரின் முழுப்பெயர் பூ.மாணிக்கவாசகர் என்பதாகும்.

29) ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

A) என்.சத்தியமூர்த்தி

B) மஸ்னவி

C) கோல்மன் பார்க்ஸ்

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ் ஆவார்.

30) குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு எது அடிப்படை?

A) பெற்றோர்

B) திருமணம்

C) உறவினர்கள்

D) குழந்தைகள்

விளக்கம்: குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. ஆதலின், குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

31) பக்தவத்சலபாரதி எழுதிய நூல்களில் பொருந்தாது எது?

A) இலக்கிய மானிடவியல்

B) பண்பாட்டு மானிடவியல்

C) தமிழ்நாடு மானிடவியல்

D) தமிழர் மானிடவியல்

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

32) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் – இக்குறட்பாவில் வையம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வானுலகம்

B) உலகம்

C) கடல்

D) அறநெறி

விளக்கம்: வையம் – உலகம். உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர். வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.

33) ………அகக் கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக் கவி பாரதி ஓர்ஆசான் திண்ணம் – என்று பாடியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) கண்ணதாசன்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

விளக்கம்: கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்

தெற்றெனநம் அகக் கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக் கவி பாரதி ஓர்ஆசான் திண்ணம் – நாமக்கல் கவிஞர்.

34) குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் எது?

A) தொல்காப்பியம்

B) திருக்குறள்

C) புறநானூறு

D) நற்றிணை

விளக்கம்: குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளின்தான் (1029) பயின்று வருகிறது.

35) சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய எந்த சொல் இருபது இடங்களில் பயின்று வருகிறது?

A) குடம்பை

B) குடும்மை

C) குடும்பு

D) கடும்பு

விளக்கம்: சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’. ‘குடும்பு’. ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. ‘குடும்பை’ என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழ்தல் என்று பொருள்படுகிறது.

36) எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு

துக்கங்களின் கூட்டமாக அவை

இருந்து உனது வீட்டைத் துப்புரவாக… – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) ஜலாலுத்தீன் ரூமி

B) அய்யப்ப மகாதேவன்

C) பரலி சு.நெல்லையப்பர்

D) பாரதியார்

விளக்கம்: எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு

துக்கங்களின் கூட்டமாக அவை

இருந்து உனது வீட்டைத் துப்புரவாக – ஜலாலுத்தீன் ரூமி

37) இராமாயணத்தின் எத்தனையாவது காண்டத்தில் குகப் படலம் உள்ளது?

A) 2

B) 4

C) 3

D) 5

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்தியா காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்.

இதில் இரண்டாவது காண்டமான அயோத்தியா காண்டத்தில் குகப் படலம் உள்ளது.

38) ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு பரிதிமாற்கலைஞர் இயற்றியது எது?

A) நாடகவியல்

B) நாடககலை

C) நடிப்புக்கலையில் தேர்ச்சிப் பெறுவது எப்படி?

D) நாடகத்தமிழ்

விளக்கம்: ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார் பரிதிமாற்கலைஞர். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.

39) தமிழர் உணவு என்ற நூலை எழுதியவர் யார்?

A) பக்தவத்சலபாரதி

B) ந.பத்மநாபன்

C) ப.ரவி

D) சிற்பி பாலசுப்பிரமணியம்

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

40) பூமணிக்கு கீழ்க்காணும் எதற்காக சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?

A) கவிதை

B) சிறுகதை

C) புதினம்

D) உரைநடை

விளக்கம்: அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். இவரின் முழுப்பெயர் பூ.மாணிக்கவாசகர் என்பதாகும்.

41) திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பொருந்தாதவர் யார்?

A) தருமர்

B) மணக்குடவர்

C) தாமத்தர்

D) நாதமுனி

விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:

1. தருமர்

2. மணக்குடவர்

3. தாமத்தர்

4. நச்சர்

5. பரிதி

6. பரிமேலழகர்

7. திருமலையார்

8. மல்லர்

9. பரிப்பெருமாள்

10. காளிங்கர்

42) குடும்பம், திருமணம் ஆகிய இரண்டு சொற்களுமே கீழ்க்காணும் எதில் இடம்பெறவில்லை?

A) தொல்காப்பியம்

B) சங்க இலக்கியம்

C) A மற்றும் B

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளின்தான் (1029) பயின்று வருகிறது.

43) கூற்றுகளை ஆராய்க.

1. சங்க இலக்கியத்தில் “குடம்பை”, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.

2. ‘குடம்பை’ என்ற சொல், 25 இடங்களில் பயின்று வருகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சங்க இலக்கியத்தில் “குடம்பை”, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.

2. ‘குடம்பை’ என்ற சொல், 20 இடங்களில் பயின்று வருகிறது

44) அன்பு உள, இனி, நாம் ஓர்

ஐவர்கள் உளர் ஆனோம் – இதில் ஐவர் என்று குறிப்பிடபடுபவர்களில் பொருந்தாதவர் யார்?

A) இலக்குவன்

B) சத்ருகன்

C) குகன்

D) வீடணன்

விளக்கம்: 1. இராமன்

2. இலட்சுமணன்

3. பரதன்

4. சத்ருகணன் என்பவர் தசரதனின் மகன்களாவர்.

இராமனால் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்:

1. குகன்

2. சுக்ரீவன்

3. வீடணன்

இராமன் மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர். இவர்களுடன் ஐந்தாவதாக இணைபவர் குகன் ஆவார்.

45) திராவிட சாஸ்திரி என்று போற்றப்பட்ட பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழ் கற்றுக்கொண்டார்?

A) சி.வை.தாமோதரனார்.

B) பரிதிமாற்கலைஞர்

C) மகாவித்துவான் சபாபதி

D) மறைமலையடிகள்

விளக்கம்: திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவரின் காலம் 1870-1903 ஆகும். அவர் தனது தந்தையாரிடம் வடமொழியையும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.

46) இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மைஇல் காட்சி யவர் – இக்குறட்பாவில் புலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஊண்

B) இறைச்சி

C) ஐம்புலன்

D) வறுமை

விளக்கம்: புலம் – ஐம்புலம். ஐம்புலன்களையும் வென்ற தெளிவுடையோர், தாம் வறியர் என்ற காரணத்தைக் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்ய மாட்டார்.

47) கூற்றுகளை ஆராய்க.

1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.

2. குடும்பம் தொடங்கிக் குலம், பெருங்குழு, சமூகம், கூட்டம் என்ற அமைப்புவரை விரிவுபெறுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.

2. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவுபெறுகிறது.

48) திராவிட சாஸ்திரி என்று போற்றப்பட்டவரின் காலம் என்ன?

A) 1870-1901

B) 1870-1903

C) 1873-1900

D) 1873-1903

விளக்கம்: திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவரின் காலம் 1870-1903 ஆகும். அவர் தனது தந்தையாரிடம் வடமொழியையும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.

49) பாணர் இனவரைவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) பூமணி

B) வ.சுப.மாணிக்கம்

C) அனுராதா ரமணன்

D) பக்தவத்சலபாரதி

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

50) பூமணியின் எந்த நூலிற்காக அவருக்கு 2014-ல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

A) ரீதி

B) வயிறு

C) கொம்மை

D) அஞ்ஞாடி

விளக்கம்: பூமணி அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். இவரின் முழுப்பெயர் பூ.மாணிக்கவாசகர் என்பதாகும்.

51) அவா முதல் அறுத்த சிந்தை

அனகனும், அரியும் வேந்தும் – என்ற வரிகளில் அவா என்ற சொல்லின் பொருள்?

A) ஆசை

B) விருந்து

C) பகை

D) அரக்கர்

விளக்கம்: அவா – ஆசை. ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் போல் ஒத்து இருந்தார்கள்.

52) பின்வருவனவற்றில் எது வ.சுப.மாணிக்கம் எழுதிய நூல்?

A) வள்ளுவர் யார்?

B) பாரதியார் யார்?

C) கம்பர் யார்?

D) இளங்கோவடிகள் யார்?

விளக்கம்: கம்பர் யார்? என்னும் நூலை எழுதியவர் வ.சுப. மாணிக்கம் ஆவார்.

53) வக்கிரம்

அவமானம்

வஞ்சனை

இவற்றை வாயிலுக்கே சென்று

இன்முகத்துடன்

வரவேற்பாயாக – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) பாரதியார்

D) ஜலாலுத்தீன் ரூமி

விளக்கம்: வக்கிரம்

அவமானம்

வஞ்சனை

இவற்றை வாயிலுக்கே சென்று

இன்முகத்துடன்

வரவேற்பாயாக – ஜலாலுத்தீன் ரூமி.

54) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) அறுப்பு

B) வயிறுகள்

C) ரீதி

D) பிறகு

விளக்கம்: பூமணியின் சிறுகதைத் தொகுப்புகள்:

1. அறுப்பு

2. வயிறுகள்

3. ரீதி

4. நொறுங்கல்கள்

புதினங்கள்:

1. வெக்கை

2. பிறகு

3. அஞ்ஞாடி

4. கொம்மை

55) செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்? – என்ற குறட்பாவில் அல்இடத்து என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மெலியவரிடத்தில்

B) வலியவரிடத்தில்

C) தனக்கு நிகரானவரிடத்தில்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அல்இடத்து – வலியவரிடத்தில். தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர். செல்லுபடியாகாத வலியவரிடத்தில், காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

56) எம்முழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய – என்ற வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) குகன்

B) சுக்ரீவன்

C) வீடணன்

D) இராமன்

விளக்கம்: உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே (வீடணன்), உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம்.

57) திராவிட சாஸ்திரி என்று போற்றப்பட்ட பரிதிமாற்கலைஞர் யாரிடம் வடமொழி கற்றுக்கொண்டார்?

A) பாஸ்கர சேதுபதி

B) தந்தை

C) சி.வை.தாமோதரனார்

D) மகாவித்துவான் சபாபதி

விளக்கம்: திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவரின் காலம் 1870-1903 ஆகும். அவர் தனது தந்தையாரிடம் வடமொழியையும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.

58) பிள்ளைகள் விளையாட

பன்றிகள் மேய்ந்திருக்க

வானத்தில் மேகமுண்டு

சூரியனில் மழையுண்டு ……. என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

A) வ.சுப. மாணிக்கம்

B) அனுராதா ரமணன்

C) பூமணி

D) இளங்கோ கிருஷ்ணன்

விளக்கம்: எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க

ஓணான்கள் முட்டையிட

கள்ளிகள் பிழைத்திருக்க

பிள்ளைகள் விளையாட

பன்றிகள் மேய்ந்திருக்க

வானத்தில் மேகமுண்டு

சூரியனில் மழையுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

59) பரிதிமாற்கலைஞர் எங்கு பி.ஏ பட்டம் பெற்றார்?

A) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

B) சென்னை கிறித்துவக் கல்லூரி

C) மெட்ராஸ் பல்கலைக்கழகம்

D) ஜெயின்ட் மேரி கல்லூரி

விளக்கம்: சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

60) கூற்றுகளை ஆராய்க.

1. சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டுமே ஓரளவு இனம் காண முடிகிறது.

2. நற்றாய் என்பது பெற்ற தாயைக் குறிக்கும்

3. செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர்.

4. சமூகத் தாயாக விளங்கியவர் நற்றாய் ஆவார்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. சங்ககாலக் குடும்ப அமைப்பில் முதல்நிலை உறவினர்களை மட்டுமே ஓரளவு இனம் காண முடிகிறது.

2. நற்றாய் என்பது பெற்ற தாயைக் குறிக்கும்

3. செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெறுகின்றனர்.

4. சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.

61) கீழ்க்காணும் எந்த சொல்லுடன் அம் விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக குடும்பம் எனும் சொல் அமைந்தது?

A) குடும்பு

B) கடும்பு

C) குடம்பை

D) குடும்ப

விளக்கம்: குடும்பு எனும் சொல்லுடன் அம் விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக குடும்பம் எனும் சொல் அமைந்தது

62) தீமையான விளைவுகள் எதனால் தோன்றும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

A) நகைத்தல்

B) சினம் கொள்ளுதல்

C) உதவுதல்

D) பொறுத்தல்

விளக்கம்: மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிடவேண்டும்.

63) தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்?

A) வ.சுப.மாணிக்கம்

B) சுந்தர ராமசாமி

C) சிற்பி பாலசுப்பிரமணியம்

D) பக்தவத்சலபாரதி

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

64) முகமலர்ச்சியையும், அகமகிழ்ச்சியையும் கொல்லும் பகைவன் என திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?

A) வெகுளி

B) அவா

C) பொறாமை

D) பகை

விளக்கம்: வெகுளி –சினம்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற?.

முகமலர்ச்சியையும், அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

65) வருபவர் எவராயினும்

நன்றி செலுத்து

ஏனெனில் ஒவ்வொருவரும்

ஒரு வழிகாட்டியாக

அனுப்பப்படுகிறார்கள்

தொலைதூரத்திற்கு

அப்பாலிருந்து – என்ற கவிதை வரிகளை எழுதியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) சிற்பி பாலசுப்பிரமணியம்

C) பாரதியார்

D) ஜலாலுத்தீன் ரூமி

விளக்கம்: வருபவர் எவராயினும்

நன்றி செலுத்து

ஏனெனில் ஒவ்வொருவரும்

ஒரு வழிகாட்டியாக

அனுப்பப்படுகிறார்கள்

தொலைதூரத்திற்கு

அப்பாலிருந்து – ஜலாலுத்தீன் ரூமி

66) அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான்

என்உயிர் அனையாய் நீ

இளவல் உள் இளையான், இந்

நன்னுதலவள் நின் கேள் – இதில் என் உயிர் அனையாய் நீ என்று யார் யாரிடம் கூறினார்?

A) இராமன், இலக்குவனிடம்

B) இராமன், பரதனிடம்

C) தசரதன், இராமனிடம்

D) இராமன், குகனிடம்

விளக்கம்: இவ்வரிகளில் அன்னவன் – குகன், அமலன் – இராமன், இளவல் – தம்பி இலக்குவன் நன்னுதலவள் – சீதை.

குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் “என் உயிர் போன்றவனே, நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி” என்று கூறினார்.

67) “வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே” என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) பாரதியார்

D) சுப்புரத்தின தாசன்

விளக்கம்: “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்.

“வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே”- பாரதிதாசன்

68) ………அது அன்றிப்

பின்பு உளது? – இதில் கூறப்படும் செய்தி என்ன?

A) இன்பதிற்குப் பின் துன்பம்

B) துன்பத்திற்குப் பின் இன்பம்

C) துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: மேற்காணும் வரிகள் இராமன் குகனிடம் கூறியது. துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு.

69) எந்த ஆண்டு பரிதிமாற்கலைஞர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்?

A) 1891

B) 1893

C) 1901

D) 1882

விளக்கம்: 1893ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

70) ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) நா.காமராசன்

C) மசானா ஃபுகோகோ

D) என். சத்தியமூர்த்தி

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ் ஆவார். அதனைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற பெயரில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.

71) பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத் தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

A) வீரமாமுனிவர்

B) கால்டுவெல்

C) பெர்சிவெல் பாதிரியார்

D) ஜி.யு.போப்

விளக்கம்: பரிதிமாற்கலைஞர், ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும், களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர் ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கணத்தையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு.போப் என்பவர் பிரான்சு நாட்டின் எட்வர்ட் தீவில் பிறந்தவர்.

72) ஜலாலுத்தீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்?

A) 1210

B) 1209

C) 1207

D) 1211

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி(இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி(பொ.ஆ). 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.

73) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) வெக்கை

B) பிறகு

C) அஞ்ஞாடி

D) கொம்மை

விளக்கம்: பூமணியின் சிறுகதைத் தொகுப்புகள்:

1. அறுப்பு

2. வயிறுகள்

3. ரீதி

4. நொறுங்கல்கள்

புதினங்கள்:

1. வெக்கை

2. பிறகு

3. அஞ்ஞாடி

4. கொம்மை

வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை போன்ற அனைத்தும் பூமணியின் புதினங்களாகும். இதில் பொருந்தாதது அஞ்ஞாடி. இதற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

74) சரியான தொடரைக் கண்டுபிடி

A) கோவலன் மதுரைக்குச் சென்றது

B) பறவைகள் நெல்மணிகளை வேகமாகத் கொத்தித் தின்றது

C) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது

D) அவன் வெண்மதியிடம் பேசினான்

விளக்கம்: கோவலன் மதுரைக்குச் சென்றான்.

பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றன.

குதிரையும் யானையும் வேகமாக ஓடின.

அவன் வெண்மதியிடம் பேசினான்.

75) …………………….நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் – இவ்வரிகளில் செற்றவர் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) பகைவர்

B) நண்பர்

C) உறவினர்

D)அயலவர்

விளக்கம்: செற்றவர் என்றால் பகைவர் என்று பொருள். இதன் எதிர்ச்சொல் நண்பர் என்பதாகும்.

76) இலக்கிய மானிடவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) இராஜாஜி

B) பூமணி

C) நா.காமராசன்

D) பக்தவத்சலபாரதி

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

77) அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான்

என்உயிர் அனையாய் நீ

இளவல் உள் இளையான், இந்

நன்னுதலவள் நின் கேள் – இதில் இளவல் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) இராமன்

B) பரதன்

C) இலக்குவன்

D) குகன்

விளக்கம்: இவ்வரிகளில் அன்னவன் – குகன், அமலன் – இராமன், இளவல் – தம்பி இலக்குவன் நன்னுதலவள் – சீதை.

குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் “என் உயிர் போன்றவனே, நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி” என்று கூறினார்.

78) உற்றார்உறவினர் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?

A) எண்ணும்மை

B) உம்மைத்தொகை

C) முற்றும்மை

D) அடுக்குத்தொடர்

விளக்கம்: உற்றாருறவினர் – உம்மைத்தொகை. இரு சொற்களுக்கு இடையே உம் என்னும் சொல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும். உற்றாரும் உறவினரும் என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

79) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.” – என்று கூறியவர் யார்?

A) பரிதிமாற் கலைஞர்

B) சி.வை.தாமோரனார்

C) பம்மல் சம்பந்தனார்

D) வீரமாமுனிவர்

விளக்கம்: “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.” – பரிதிமாற்கலைஞர்.

80) முளரிமருங்கின் முதியோள் சிறுவன் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். முளிரிமருங்கின் முதியோள் சிறுவன் (புறநானூறு 278) என்ற தொடர் மூலம் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது.

81) ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு எத்தனை பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது?

A) 12600

B) 25600

C) 18600

D) 14600

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில் கி.பி(பொ.ஆ). 1207 ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ 25600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

82) திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பொருந்தாதவர் யார்?

A) நச்சர்

B) பரிதி

C) திருமலையார்

D) நம்பியாண்டார் நம்பி

விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:

1. தருமர்

2. மணக்குடவர்

3. தாமத்தர்

4. நச்சர்

5. பரிதி

6. பரிமேலழகர்

7. திருமலையார்

8. மல்லர்

9. பரிப்பெருமாள்

10. காளிங்கர்

83) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த தமிழ் இதழாகத் திகழ்ந்தது.

2. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் இவரே.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழந்தது.

2. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் இவரே.

84) கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக்காட்டி நம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக் கவி பாரதி என்று கூறியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) மருதகாசி

C) பாரதிதாசன்

D) வாணிதாசன்

விளக்கம்: கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்

தெற்றெனநம் அகக் கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக் கவி பாரதி ஓர்ஆசான் திண்ணம் – நாமக்கல் கவிஞர்

85) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) வெக்கை

B) பிறகு

C) கொம்மை

D) ரீதி

விளக்கம்: பூமணியின் சிறுகதைத் தொகுப்புகள்:

1. அறுப்பு

2. வயிறுகள்

3. ரீதி

4. நொறுங்கல்கள்

புதினங்கள்:

1. வெக்கை

2. பிறகு

3. அஞ்ஞாடி

4. கொம்மை

86) அவா முதல் அறுத்த சிந்தை

அனகனும், அரியும் வேந்தும் – என்ற வரிகளில் அரியும் வேந்தும் என்ற சொல்லின் பொருள்?

A) இராமன்

B) சுக்ரீவன்

C) குகன்

D) அனுமன்

விளக்கம்: அரியும் வேந்தும் – சுக்ரீவன். ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.

87) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

2. இவர் பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

2. இவர் பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார்.

88) தவறான கூற்றை கண்டுபிடி.

A) பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி – உயர்மொழி

B) தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது – தனிமொழி

C) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி – பொதுமொழி

D) எதுவுமில்லை

விளக்கம்: தமிழைச் செம்மொழியென்று நிறுவி, பரிதிமாற்கலைஞர் எழுதிய கட்டுரை,

“பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி, திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி, ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்”

89) எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க

ஓணான்கள் முட்டையிட

கள்ளிகள் பிழைத்திருக்க……. என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

A) வ.சுப. மாணிக்கம்

B) அனுராதா ரமணன்

C) பூமணி

D) இளங்கோ கிருஷ்ணன்

விளக்கம்: எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க

ஓணான்கள் முட்டையிட

கள்ளிகள் பிழைத்திருக்க

பிள்ளைகள் விளையாட

பன்றிகள் மேய்ந்திருக்க

வானத்தில் மேகமுண்டு

சூரியனில் மழையுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

90) தவா வலி அரக்கர் என்னும்

தகா இருள் பகையைத் தள்ளி – என்ற வரிகளில் தவா வலி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) குறையாத வலிமை

B) குறையாத வலி

C) வேண்டாத வலி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: தவா வலி – குறையாத வலிமை. குறையாத வலிமை உடையவர்களும் வேண்டாத இருள் போன்றவர்களுமாகிய பகைவர்களை அழித்தல் என்பது மேற்காணும் வரிகள் உணர்த்தும் பொருள் ஆகும்.

91) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமாப் புணையைச் சுடும் – இக்குறட்பாவில் கொல்லி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கொல்லுதல்

B) கொல்லாமை

C) பாதுகாப்பு

D) நெருப்பு

விளக்கம்: கொல்லி – நெருப்பு. சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

92) ஜலாலுத்தீன் ரூமியின் மஸ்னவி என்ற படைப்புக்கு பொருத்தமானது எது?

A) அழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு

B) அழமான வாழ்வியல் கருத்துக்ள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு

C) அழமான ஒழுக்க நடைமுறைக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ 25600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு.

93) கூற்றுகளை ஆராய்க (பூமணி)

1. உரிமைத்தாகம் என்ற சிறுகதையை எழுதியவர் பூமணி

2. இவரின் முழுப்பெயர் – பூ.மணிரத்தினம்

3. தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர்.

4. 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

A) 1, 4 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உரிமைத்தாகம் என்ற சிறுகதையை எழுதியவர் பூமணி

2. இவரின் முழுப்பெயர் – பூ.மாணிக்கவாசகர்

3. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

4. 2014-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

94) சரியான ஒன்றை தெரிவு செய்க.

A) திருவளர்ச்செல்வன்

B) திருநிறைசெல்வன்

C) சுடுதண்ணீர்

D) மேற்காணும் எதுவுமில்லை.

விளக்கம்: திருவளர்ச்செல்வன் அல்லது செல்வி மற்றும் திருநிறைச்செல்வன் அல்லது செல்வி என்பதே சரியாகும்.

சுடுதண்ணீர் என்று எழுதுவதும் பிழையே. தண்ணீர் – குளிர்ந்த நீர்.

95) அனயம் என்ற சொல்லின் சரியான பொருள்?

A) ஏழை எளியவன்

B) உரசுதல்

C) நிறைவானது

D) இணக்கமாக

விளக்கம்: அனயம் என்றால் நிறைவானது என்று பொருள்.

96) அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான் – இதில் அன்னவன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) பரதன்

B) குகன்

C) இராமன்

D) இலக்குவன்

விளக்கம்: அன்னவன் – குகன். அமலன் – இராமன். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் கம்பராமாயணம் ஆகும். இதன் ஆசிரியர் கம்பர். கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம் என்பதாகும்.

97) ரூபாவதி என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) மு.சி.பூர்ணலிங்கம்

B) தி.சு.நடராசன்

C) சி.வை.தாமோதரனார்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் பரிதிமாற்கலைஞர் இயற்றியுள்ளார்.

98) கூற்றுகளை ஆராய்க.

1. உம்மைத்தொகை சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

2. நேரிணைச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

3. எதிரிணைச் சொற்களை சேர்த்து எழுத கூடாது.

4. இரட்டைக் கிளவி சொற்களை சேர்த்தே எழுத வேண்டும்

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி.

விளக்கம்: 1. உம்மைத்தொகை சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

உற்றாருறவினர் – சரி

உற்றார் உறவினர் – தவறு

2. நேரிணைச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

சீரும்சிறப்பும் – சரி

சீரும் சிறப்பும் – தவறு

3. எதிரிணைச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

மேடுபள்ளம் – சரி

மேடு பள்ளம் – தவறு

4. இரட்டைக் கிளவி சொற்களை சேர்த்தே எழுத வேண்டும்.

படபடவெனச் சிறகை அடித்தது – சரி

பட பட எனச் சிறகை அடித்தது – தவறு

99) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற? – என்ற குறட்பாவில் நகை என்ற சொல்லின் பொருள்?

A) முகமலர்ச்சி

B) அகமகிழ்ச்சி

C) சினமின்மை

D) புன்னகை

விளக்கம்: நகை – முகமகிழ்ச்சி. முகமலர்ச்சியையும், அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

100) ஜலாலுத்தீன் ரூமியின் புகழ்ப்பெற்ற மற்றொரு நூல் எது?

A) மஸ்னவி

B) திவான்-ஈ-ஷம்ஸ்-தப்ரீஸ்

C) தாகங்கொண்ட மீனொன்று

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி(பொ.ஆ) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ 25600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘திவான்-ஈ-ஷம்ஸ்-தப்ரீஸி’ என்பதாகும்

101) வாள் எயிற்று அரக்கர் வைகும் – என்ற வரியில் வாள் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) வெட்டும் கருவி

B) வாழ்க்கை

C) ஒளிபொருந்திய

D) அரிவாள்

விளக்கம்: இங்கு வாள் என்பது ஒளிபொருந்திய என்ற பொருளைத் தருகிறது. ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழும் இடம் என்பது மேற்கணும் வரியின் பொருளாகும்.

102) மு.சி.பூர்ணலிங்கனாருடன் பரிதிமாற்கலைஞர் இணைந்து நடத்திய இதழின் பெயர் என்ன?

A) ஞானசுவடு

B) ஞானபோதினி

C) ஞானரதம்

D) ஞானவேதம்

விளக்கம்: மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து பரிதிமாற்கலைஞர் நடத்திய ஞானபோதினி என்னும் இதழ் அக்காலத்தில குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

103) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் (புறநானூறு 277) என்ற தொடர் மூலம் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது.

104) தமிழ்நாடு அரசால் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

A) சென்னை

B) மதுரை

C) கன்னியாகுமரி

D) வேலூர்

விளக்கம்: தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள (133 அதிகாரங்களை குறிக்கும் வகையில்) திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.

105) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

A) Lobby – ஒய்வறை

B) Check out – வெளியேறுதல்

C) Tips – சிற்றீகை

D) Mini Meals – காலை உணவு

விளக்கம்: Lobby – ஒய்வறை

Check out – வெளியேறுதல்

Tips – சிற்றீகை

Mini Meals – சிற்றுணவு

106) முன்பு உளெம் ஒரு நால்வேம் – இதில் குறிப்பிடப்படும் நால்வரில் பொருந்தாதவர் யார்?

A) இராமன்

B) பரதன்

C) சத்ருகன்

D) குகன்

விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்ற தொடர் இராமாயணம் ஆகும். இதில் நால்வர் என்பது இராமன் மற்றும் அவரின் சகோதரர்களை குறிக்கும்.

1. இராமன்

2. இலட்சுமணன்

3. பரதன்

4. சத்ருகணன் என்பவர் தசரதனின் மகன்களாவர்.

இராமனால் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்:

1. குகன்

2. சுக்ரீவன்

3. வீடணன்

107) கூற்றுகளை ஆராய்க.

1. சொற்புணர்ச்சியில் நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும்.

2. உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுத வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சொற்புணர்ச்சியில் நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும்.

சுடராழி – சுடர் + ஆழி

2. உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுத வேண்டும்.

கடிமணம் – சரி கடி மணம் – தவறு.

108) நுந்தை என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?

A) இடைக்குறை

B) வினையெச்சம்

C) விணையாலணையும் பெயர்

D) நும் தந்தை என்பதன் மரூஉ

விளக்கம்: நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

109) ரூபாவதி என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) மு.சி.பூர்ணலிங்கம்

B) தி.சு.நடராசன்

C) சி.வை.தாமோதரனார்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும், களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும பரிதிமாற்கலைஞர் இயற்றியுள்ளார்.

110) தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு என திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?

A) பொறாமை

B) ஆசை

C) உதவும் குணமின்மை

D) சினம்

விளக்கம்: சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமாப் புணையைச் சுடும்

சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்

111) தாழ்கடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) உரிச்சொற்றொடர்

D) விணையாலணையும் பெயர்

விளக்கம்: தாழ்கடல் – வினைத்தொகை.

வினைத்தொகை – முக்காலத்திற்கும் ஏற்றவாறு சொற்களை எழுத முடியும்.

தாழ்கடல், தாழும்கடல், தாழ்கின்றகடல்

112) Checkout என்பதன் தமிழாக்கம் என்ன?

A) வெளியேறுதல்

B) பரிசோதனை செய்தல்

C) சரிசெய்தல்

D) பரிசோதனை அறை

விளக்கம்: Checkout என்பதன் தமிழாக்கம் வெளியேறுதல் என்பதாகும்.

113) கூற்றுகளை ஆராய்க.

1. பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்

2. இரட்டைக்கிளவிச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்

ஈக்கள் மொய்த்தன – சரி ஈக் கள் மொய்த்தன – தவறு

குரங்குகள் உண்டன – சரி குரங்கு கள் உண்டன – தவறு

2. இரட்டைக்கிளவிச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்.

படபடவெனச் சிறகை அடித்தது – சரி

ப பட எனச் சிறகை அடித்தது – தவறு

114) செற்றவர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) உரிச்சொற்றொடர்

D) விணையாலணையும் பெயர்

விளக்கம்: செற்றவர் – வினையாலணையும் பெயர்.

செற்றம் என்றால் சினம் என்று பொருள். செற்றவர் – சினங்கொண்டவர்.

வினையாலணையும் பெயர் – செயலை குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.

115) செம்முது பெண்டின் காதலஞ்சிறா – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் கருத்து?

A) தாயை தலைமையாக கொண்ட சமூகம்

B) தந்தையை தலைமையாக கொண்ட சமூகம்

C) மூத்தோரை தலைமையாக கொண்ட சமூகம்

D) தாய் மற்றும் தந்தையை தலைமையாக கொண்ட சமூகம்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். செம்முது பெண்டின் காலஞ்சிறா அன் (புறநானூறு) என்ற தொடர் மூலம் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது.

116) ஞானபோதினி என்பது பரிதிமாற்கலைஞர் காலகட்டத்தில் எது சம்பந்தமான இதழாக திகழ்ந்தது?

A) சமத்துவம்

B) தமிழ்

C) செம்மொழி

D) அறிவியல்

விளக்கம்: மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து பரிதிமாற்கலைஞர் நடத்திய ஞானபோதினி என்னும் இதழ் அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

117) ஜலாலுத்தீன் ரூமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – கோல்மன் பார்க்ஸ்

2. இவரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் ரா.பத்மநாபன்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் என்.சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.

118) தற்காலிகமாக தங்குமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தம்மனை

B) நும்மனை

C) தன்மனை

D) புக்கில்

விளக்கம்: மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளின் ‘தம்மனை’இ ‘நும்மனை’(அகம். 346: 16-17) என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ (புறம் 221-6) எனுவும், திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்படுகின்றன.

119) ………………..என் காதல்

சுற்றம் உன் சுற்றம்……… – இவ்வரிகள் யார் யாரிடம் கூறியது?

A) இராமன், வீடணனிடம்

B) இராமன், குகனிடம்

C) இராமன், அனுமனிடம்

D) இராமன், சுக்ரீவனிடம்

விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் இராமவதாரம் ஆகும். இவ்வரிகள் இராமன் சுக்ரீவனிடம் கூறிய வரிகள் ஆகும். அன்பு மிகுந்த என் சுற்றத்தினர், உன் சுற்றத்தினர் என்று இராமர் சுக்ரீவனிடம் கூறினார்.

120) இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தௌ்ளியர் ஆதலும் வேறு – என்ற குறட்பாவில் தௌள்ளியர் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தெளிவற்றவர்

B) தெளிந்த அறிவற்றவர்

C) தெளிந்த அறிவுடையோர்

D) செல்வமுடையவர்

விளக்கம்: தௌ’ளியர் – தெளிந்த அறிவுடையோர். உலக இயல்பு இரு வேறு வகைப்படும். செல்வம் உடையவர் அறிவுடையவராக இருப்பதில்லை. தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

121) எந்த ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது?

A) 2009

B) 2010

C) 2004

D) 2005

விளக்கம்: தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் பரிதிமாற்கலைஞர் ஆவார். பின்னாளில் 2004-ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

122) பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் என்ன?

A) கான்ஸ்டான்டின் நோபள் பெஸ்கி

B) வேதாசலம்

C) சபாபதி

D) சூரியநாராயண சாஸ்திரி

விளக்கம்: பரிதிமாற்கலைஞர் தனக்கு பெற்றோர் இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்ம் செய்து கொண்டார்.

123) அருங்கானம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பண்புப்பெயர் புணர்ச்சி விதியை தேர்வு செய்க.

A) இனமிகல்

B) அடியகரம் ஐயாதல்

C) தன்னொற்றிரட்டல்

D) முன்னின்ற மெய்திரிதல்

விளக்கம்: அருங்கானம் – அருமை + கானம்

விதி – ஈறுபோதல் – அருகானம்

விதி – இனமிகல் – அருங்கானம்

124) ஜலாலுத்தீன் ரூமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவரின் மற்றொரு புகழ்பெற்ற நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்பதாகும்.

2. இவர் பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி(பொ.ஆ) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைபான ‘மஸ்னவி’ 25600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘திவான்-ஈ-ஷம்ஸ்-தப்ரீஸி’ என்பதாகும்.

125) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறுவர்தாயே பேரிற் பெண்டே (புறநானூறு) என்ற தொடர் மூலம் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது.

126) சரியான ஒன்றை தெரிவு செய்க.

A) எம் மொழி யார்க்கும் எளிது

B) அப் பாவின் நலங் காண்க

C) ஐந்துமாடி வீடு

D) அன்றுமுதல் பாடம் கற்றோம்

விளக்கம்: எம்மொழியார்க்கும் எளிது, அப்பாவின் நலங்காண்க, ஐந்துமாடி வீடு, அன்று முதல்பாடம் கற்றோம் என்று எழுதுவதே சரியாகும்.

127) சரியான தொடரைக் காண்க.

A) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்

B) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

C) காட்டில் இராமனுக்கும் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்

D) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்

விளக்கம்: இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான் என்பதே சரியான தொடராகும்.

128) கூற்றுகளை ஆராய்க.

1. பண்புத்தொகை வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.

2. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை சேர்த்து எழுத கூடாது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பண்புத்தொகை வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.

செங்கடல் – சரி செங் கடல் – தவறு

கத்துக்கடல் – சரி கத்து கடல் – தவறு

2. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை சேர்த்து எழுத கூடாது

அணங்குகொல் – சரி அணங்கு கொல் – தவறு.

129) சரியான தொடரைக் கண்டுபிடி

A) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்

B) சான்றோர்க்கு மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்

C) சான்றோர்க்கு மதிப்பு கொடுத்து வாழ்வில் உயரலாம்

D) சான்றோர்க்கு மதிப்பு கொடுத்தால் வாழ்வில் உயரலாம்

விளக்கம்: சான்றோர்க்கு மதிப்பு கொடுத்தால் வாழ்வில் உயரலாம் என்பது சரியான பொருள் தரும் தொடராகும்.

130) தனிக் குடும்பங்கள் பற்றிய செய்தியை கீழ்க்காணும் எந்த நூலின் மூலம் அறியலாம்?

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) தொல்காப்பியம்

D) சங்க இலக்கியங்கள்

விளக்கம்: தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள்பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குநுறூறு தெளிவுபடுத்துகிறது (408). “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். (ஐங்குநூறு 401).

131) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ரூபாவதி, கலாவதி முதலிய நாடக நூல்களை எழுதியுள்ளார்.

2. கார்நாற்பது என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு மானவிஜயம் என்னும் நூலை இயற்றினார்.

3. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.

4. இவர் இயற்றிய தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் கால்டுவெல் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

A) 1, 2 சரி

B) 2, 4 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ரூபாவதி, கலாவதி முதலிய நாடக நூல்களை எழுதியுள்ளார்.

2. களவழிநாற்பது என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு மானவிஜயம் என்னும் நூலை இயற்றினார்.

3. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.

4. இவர் இயற்றிய தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

132) கூற்றுகளை ஆராய்க.

1. இடைச்சொற்களை சேர்த்து எழுதக் கூடாது.

2. உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துதான் எழுத வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இடைச்சொற்களை சேர்த்து எழுத வேண்டும்.

பேசியபடி பணம் கொடுத்தான் (பேசியவாறு) பேசிய படி பணம் கொடுத்தான்(படியளவு)

2. உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துதான் எழுத வேண்டும்.

மணியடித்துச் சென்றான் (ஒலி எழுப்புதல்) மணி அடித்துச் சென்றான் (மணி என்பவன் யாரையோ அடித்துச் சென்றான்).

133) கூற்றுகளை ஆராய்க.

1. சுக்ரீவனை நண்பனாக இராமன் ஏற்றுக்கொள்ளுதல் – கிட்கிந்தா காண்டம்

2. குகனை நண்பனாக இராமன் ஏற்றுக்கொள்ளுதல் – அயோத்தியா காண்டம்

3. சவரி பிறப்பு நீங்கு படலம் – ஆரணிய காண்டம்

4. வீடணன் அடைக்கலப் படலம் – யுத்த காண்டம்

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. சுக்ரீவனை நண்பனாக இராமன் ஏற்றுக்கொள்ளுதல் – கிட்கிந்தா காண்டம்

2. குகனை நண்பனாக இராமன் ஏற்றுக்கொள்ளுதல் – அயோத்தியா காண்டம்

3. சவரி பிறப்பு நீங்கு படலம் – ஆரணிய காண்டம்

4. வீடணன் அடைக்கலப் படலம் – யுத்த காண்டம்

134) பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்தாள் என்பதை கீழ்க்காணும் எந்த நூலின் மூலம் அறியலாம்?

A) குறுந்தொகை

B) புறநானூறு

C) அகநானூறு

D) தொல்காப்பியம்

விளக்கம்: “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” குறுந்தொகை (135) என்ற பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது.

135) தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ என்பதை எந்த நூலின் வாயிலாக அறியலாம்?

A) புறநானூறு

B) தொல்காப்பியம்

C) நற்றிணை

D) அகநானூறு

விளக்கம்: மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளின் ‘தம்மனை’இ ‘நும்மனை’ (அகம். 346: 16-17) என மனைவியில் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ (புறம் 221-6) எனுவும், திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்படுகின்றன.

136) திரவியம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மருந்து

B) உயர்ந்த

C) பெருகுதல்

D) செல்வம்

விளக்கம்: திரவியம் என்றால் செல்வம் என்று பொருள்.

137) சரியான கூற்றை தெரிவு செய்க.

A) குமரன் வீடு பார்த்தேன்

B) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்

C) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுக்கள் குவிந்தன

D) காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்

விளக்கம்: குமரனை வீட்டில் பார்த்தேன்

மாறனது பேச்சுத்திறனை யாரால் வெல்ல முடியும்.

போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன

காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்

138) தந்தனன் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?

A) தா

B) தந்து

C) தந்த

D) த

விளக்கம்: தந்தனன் என்ற சொல்லின் வேர்ச்சொல் தா என்பதாகும்.

வேர்ச்சொல் – கட்டளைச்சொல்லாகவும், அச்சொல்லின் முழுதொழிலையையும் குறிப்பதாக இருக்க வேண்டும்.

தந்து – வினையெச்சம்.

தந்த – பெயரெச்சம்

139) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

2. இவரின் காலம் கி.பி. 1872-1903 ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

2. இவரின் காலம் கி.பி. 1870-1903 ஆகும்.

140) எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

ஆற்றுக்கோர் ஊருண்டு

வாழ்வைப்போல் ஒன்றுண்டு ……. என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

A) வ.சுப. மாணிக்கம்

B) அனுராதா ரமணன்

C) பூமணி

D) இளங்கோ கிருஷ்ணன்

விளக்கம்: காகமோ குருவியோ

நிழல் ஒதுங்க

ஆறெங்கும் முள்மரமுண்டு

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

ஆற்றுக்கோர் ஊருண்டு

வாழ்வைப்போல் ஒன்றுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

141) நவ மதி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) புதுமையான ஒளிமயமான அறிவு

B) ஒன்பது அறிவு

C) ஒன்பது நிலவு

D) புதுமையான ஒளிமயமான நிலவு

விளக்கம்: நவ மதி என்றால் புதுமையான ஒளிமயமான அறிவு என்பது பொருள்

142) சங்க காலத்தில் கண சமூகத்துக்கு யார் தலைமை ஏற்றிருந்தார்?

A) தாய்

B) தந்தை

C) தாய் அல்லது தந்தை

D) குடும்பத்தில் வயதில் மூத்தோர்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

143) மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க கட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மணந்தகம்

B) தாய்மனை

C) நுந்தைமனை

D) நன்மனை

விளக்கம்: உயிரிகளைப்போன்றே குடும்பமும் தோன்றுகிறது. வளர்கிறது. பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடுமபத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியுமே சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது.

144) மனைவியின் இல்லத்தையும், கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினை எந்த நூலின் வாயிலாக அறியலாம்?

A) புறநானூறு

B) தொல்காப்பியம்

C) நற்றிணை

D) அகநானூறு

விளக்கம்: மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளின் ‘தம்மனை’, ‘நும்மனை’ (அகம். 346: 16-17) என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது.

145) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. எம்.ஏ தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

2. பி.ஏ. தேர்வில் தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்லைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. எப்.ஏ தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

2. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. தேர்வில் தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்லைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

146) பொருத்துக

அ. வசி – 1. தலைவன்

ஆ. அடவி – 2. உயர்ந்த

இ. மகுடன் – 3. பெருகுதல்

ஈ. மத(ம்) தவிர – 4. முனைப்பு நீங்க

A) 1, 3, 2, 4

B) 3, 2, 1, 4

C) 1, 2, 3, 4

D) 2, 3, 1, 4

விளக்கம்: வசி – உயர்ந்த

அடவி – பெருகுதல்

மகுடன் – தலைவன்

மத(ம்) தவிர – முனைப்பு நீங்க

147) இளம்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் நூல் எது?

A) நற்றிணை

B) அகநானூறு

C) தொல்காப்பியம்

D) புறநானூறு

விளக்கம்: இளம்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் தொல்காப்பிய அடிகள் மூலம் (தொல். பொருள். 151) மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

148) கூற்றுகளை ஆராய்க.

1. தம்மனை, நும்மனை – அகநானூறு

2. புக்கில் – புறநானூறு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளின் ‘தம்மனை’, ‘நும்மனை’ (அகம். 346: 16-17) என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ (புறம் 221-6) எனுவும், திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்படுகின்றன.

149) பரிதிமாற்கலைஞர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. திராவிட சாஸ்திரி என்று மகாவித்துவான் சபாபதியால் போற்றப்பட்டவர் ஆவார்.

2. இவர் தந்தையாரிடம் வடமொழியையும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திராவிட சாஸ்திரி என்று சி.வை.தாமோதரனாரால் போற்றப்பட்டவர் ஆவார்.

2. இவர் தந்தையாரிடம் வடமொழியையும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்

150) “இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலை யான” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) நன்னூல்

B) சங்க இலக்கியம்

C) தொல்காப்பியம்

D) புறநானூறு

விளக்கம்: பண்டைத் தமிழர்கள் குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

“இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலை யான” – (பொருளியல் – 129) எனும் தொல்காப்பிய நூற்பா, ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடுகின்றது.

151) திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் எத்தனை பேர்?

A) 2

B) 5

C) 10

D) 7

விளக்கம்: தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிதி பரிமேலழகர் திருமலையார்

மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்.

திருக்குறளுக்கு பத்துபேர் உரை எழுதியுள்ளனர்.

152) இராமன் கங்கை கரையைக் கடக்க உதவியவர் யார்?

A) அனுமன்

B) சுக்ரீவன்

C) பரதன்

D) குகன்

விளக்கம்: வேட்டுவர் தலைவன் குகன். பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் அவன். காட்டிற்குச் செல்லும் இராமன், கங்கையைக் கடக்க அவன் உதவுகிறான்

153) “தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி”- என்று இலக்கணம் வகுத்தவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) மறைமலைஅடிகள்

C) பரிமாற்கலைஞர்

D) நீலாம்பிகை

விளக்கம்: “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.” – பரிதிமாற்கலைஞர்.

154) பொருந்தாதவரை தேர்வு செய்க.

A) இலக்குவன்

B) குகன்

C) சுக்ரீவன்

D) வீடணன்

விளக்கம்: 1. இராமன்

2. இலட்சுமணன்

3. பரதன்

4. சத்ருகணன் என்பவர் தசரதனின் மகன்களாவர்.

இராமனால் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்:

1. குகன்

2. சுக்ரீவன்

3. வீடணன்

155) சடாயு உயிர் நீத்த படலம் கம்பராமாயணத்தின் எத்தனையாவது காண்டத்தில் உள்ளது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. அவை,

1. பால காண்டம்

2. அயோத்தியா காண்டம்

3. ஆரண்யா காண்டம்

4. கிட்கிந்தா காண்டம்

5. சுந்தர காண்டம்

6. யுத்த காண்டம்.

இதில் இரண்டாவது காண்டமான அயோத்தியா காண்டத்தில் குகப் படலம் உள்ளது.

மூன்றாவது காண்டமான ஆரண்யா காண்டத்தில் சரயு உயிர் நீத்த படலம் உள்ளது.

156) மான விஜயம் என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) மு.சி.பூர்ணலிங்கம்

B) தி.சு.நடராசன்

C) சி.வை.தாமோதரனார்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார் பரிதிமாற்கலைஞர்.

157) தந்தனன் தாதை தன்னைத் தடக்

கையான் எடுத்துச் சார்வான் – இதில் தடக்கையான் என்று குறிப்பிடப்படுவர் யார்?

A) அனுமன்

B) சடாயு

C) இலக்குவன்

D) இராமன்

விளக்கம்: இவ்வரிகளில் தடக்கையான் என்று குறிப்பிடப்படுபவர் இராமன் ஆவார்.

தடக்கை என்றால் பெரிய கை என்று பொருள்.

158) கூற்றுகளை ஆராய்க.

1. திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் 10 பேர்.

2. ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1813

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் 10 பேர்.

2. ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.

159) கூற்றுகளை ஆராய்க.

1. இராமன் கங்கை கரையைக் கடக்க உதவியவர் குகன்

2. இராமன் குகனை நண்பராக ஏற்றுக்கொள்கிறார்.

3. பரதன் குகனை எனக்கு மூத்தோன் என்று ஏற்றுக்கொள்கிறார்.

4. குகப் படலம் உள்ள காண்டம் – அயோத்தியா காண்டம்

A) 1, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 4 சரி

D) 1, 3, 4 சரி

விளக்கம்: வேடுவர் தலைவர் குகன். இராமன் கங்கையைக் கடக்க அவர் உதவுகிறார். இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான். பின்னாளில் அவனைச் சந்திக்கும் பரதனும் “எனக்கும் மூத்தோன்” எனக் குகனை ஏற்கிறார். குகப்படலம் உள்ள காண்டம் அயோத்தியா காண்டமாகும்.

160) சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற சொற்களில் குடும்ப அமைப்போடு தொடர்பில்லாத சொல் எது?

A) குடும்பை

B) குடும்பு

C) கடும்பு

D) குடும்பி

விளக்கம்: குடும்பம் என்ற சொல் முதலில் இடம்பெற்ற நூல் திருக்குறள் (1029) ஆகும். சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.

161) கூற்றுகளை ஆராய்க.

1. திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது – அகநானூறு

2. தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன – குறுந்தொகை

3. பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்தாள் – குறுந்தொகை

4. மகனை நடுவனாக கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றர் (தனிக்குடும்பம்) – ஐங்குறுநூறு

A) 2, 4 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது – அகநானூறு

2. தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன – குறுந்தொகை

3. பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்தாள் – குறுந்தொகை

4. மகனை நடுவனாக கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றர் (தனிக்குடும்பம்) – ஐங்குறுநூறு

162) மாதவம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) விணையாலணையும் பெயர்

B) இடைச்சொற்றொடர்

C) உரிச்சொற்றொடர்

D) வினைத்தொகை

விளக்கம்: மாதவம் – உரிச்சொற்றொடர். மா என்பது உரிச்சொல். இச்சொல் பெற்றுவரும் சொல் உரிச்சொற்றொடர் ஆகும்.

சில உரிச்சொற்கள்: மா, சால, தவ, உறு, நனி, கூர், கழி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்று வந்தால் அது உரிச்சொற்றொடர் எனப்படும்.

163) பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி

பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க… – என்று பாடியவர் யார்?

A) கண்ணதாசன்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

விளக்கம்: பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி

பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க

ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்தில்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டே? – நாமக்கல் கவிஞர்

164 அவா முதல் அறுத்த சிந்தை

அனகனும், அரியும் வேந்தும் – என்ற வரிகளில் அனகன் என்ற சொல்லின் பொருள்?

A) சுக்ரீவன்

B) இலக்குவன்

C) குகன்

D) இராமன்

விளக்கம்: அனகன் – இராமன். ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் போல் ஒத்து இருந்தார்கள்.

165) கீழ்க்காணும் எதில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பரிதிமாற் கலைஞர் தங்கப்பதக்கம் பெற்றார்?

A) தமிழ்

B) எப்.ஏ

C) பி.ஏ

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

166) இராமன் சுக்ரீவனுடம் நட்பு கொள்ளச் செய்தவர் யார்?

A) அனுமன்

B) சடாயு

C) வாலி

D) சவரி

விளக்கம்: இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி. அவரே இராமனை சுக்ரீவனுடன் நட்பு கொள்ள செய்தார்.

167) நாமக்கல் கவிஞர் யாரை தெய்வக் கவி என்று கூறுகிறார்?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) மருதகாசி

D) பாரதியார்

விளக்கம்: கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்

தெற்றெனநம் அகக் கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக் கவி பாரதி ஓர்ஆசான் திண்ணம் – நாமக்கல் கவிஞர்

168) …………………உன்

கிளை எனது…… – என்ற வரிகளில் கிளை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நண்பர்

B) உறவினர்

C) பகைவர்

D) அயலவர்

விளக்கம்: கிளை – நண்பர். இவ்வரிகள் இடம்பெற்ற தொடர் இராமவதாரம் ஆகும். இவ்வரிகள் இராமர் சுக்ரீவனிடம் கூறிய வரிகள் ஆகும். உன் உறவினர் எனக்கும் உறவினர் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறினார்.

169) சரியான தொடரைக் கண்டுபிடி

A) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன

B) போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன

C) போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன

D) போட்டியில் வெற்றி பெற்றது கலைச்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன

விளக்கம்: போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்விக்கு பாராட்டுக்கள் குவிந்தன என்பதே பொருள் தரும் சரியான தொடராகும்.

170) இந்த மனித இருப்பு

ஒரு விருந்தினர் இல்லம் என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) பாரதியார்

C) ஜலாலுத்தீன் ரூமி

D) தி.சு.நடராசன்

விளக்கம்: இந்த மனித இருப்பு

ஒரு விருந்தினர் இல்லம்

ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு – ஜலாலுத்தீன் ரூமி.

171) Mini Meals என்பதன் தமிழாக்கம் என்ன?

A) காலை உணவு

B) சிற்றுணவு

C) மதிய உணவு

D) அளவு சாப்பாடு

விளக்கம்: Mini Meals என்பதன் சரியான தமிழாக்கம் சிற்றுணவு என்பதாகும்.

172) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அருள் – கருணை

B) உவகை – உவமை

C) ஏழினோடு ஏழாய் – 14

D) கூர – மிகுதி

விளக்கம்: அருள் – கருணை

உவகை – மகிழ்ச்சி

ஏழினோடு ஏழாய் – 14

கூர – மிகுதி

173) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தன்மனை

B) நும்மனை

C) புக்கில்

D) தன்மனை

விளக்கம்: மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளின் ‘தம்மனை’, ‘நும்மனை’ (அகம். 346: 16-17) என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ (புறம் 221-6) எனவும், திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்படுகின்றன.

174) யாருடன் பரிதிமாற்கலைஞர் இதழை நடத்தினார்?

A) சி.வை.தாமோதரனார்

B) மு.சி.பூர்ணலிங்கனார்

C) மகாவித்துவான் சபாபதி

D) மேற்காணும் யாருமில்லை

விளக்கம்: மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து பரிதிமாற்கலைஞர் நடத்திய ஞானபோதினி என்னும் இதழ் அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

175) தனிப்பாசுரத் தொகையை இயற்றியவர் யார்?

A) ஆறுமுக நாவலர்

B) பரிதிமாற்கலைஞர்

C) சி.வை.தாமோதரனார்

D) ஜி.யு.போப்

விளக்கம்: பரிதிமாற்கலைஞர், ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர் ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கணத்தையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு.போப் என்பவர் பிரான்சு நாட்டின் எட்வர்ட் தீவில் பிறந்தவர்.

176) அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான் – இதில் அமலன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) பரதன்

B) குகன்

C) இராமன்

D) இலக்குவன்

விளக்கம்: அன்னவன் – குகன்.

அமலன் – இராமன்.

இவ்வரிகள் இடம்பெற்ற நூல் கம்பராமாயணம் ஆகும். இதன் ஆசிரியர் கம்பர். கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் இராமவதாரம் என்பதாகும்.

177) சரியானதை தெரிவு செய்க.

1. அவன் அல்லன்

2. அவள் அல்லள்

3. அவர் அல்லர்

4. நாய் அல்ல

5. நாய்கள் அன்று

A) 1, 2 சரி

B) 4, 5 தவறு

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், நாய் அன்று, நாய்கள் அல்ல.

178) காகமோ குருவியோ

நிழல் ஒதுங்க

ஆறெங்கும் முள்மரமுண்டு ……. என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

A) வ.சுப. மாணிக்கம்

B) அனுராதா ரமணன்

C) பூமணி

D) இளங்கோ கிருஷ்ணன்

விளக்கம்: காகமோ குருவியோ

நிழல் ஒதுங்க

ஆறெங்கும முள்மரமுண்டு

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

ஆற்றுக்கோர் ஊருண்டு

வாழ்வைப்போல் ஒன்றுண்டு – இளங்கோ கிருஷ்ணன்

179) ஜலாலுத்தீன் ரூமி எந்த நாட்டில் பிறந்தார்?

A) பாகிஸ்தான்

B) ஆப்கானிஸ்தான்

C) இலங்கை

D) வங்கதேசம்

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி(பொ.ஆ). 1207ஆம் ஆண்டில் பிறந்தார்.

180) தாய்வழிச் சொத்துக்கள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை கூறும் நூல் எது?

A) குறுந்தொகை

B) புறநானூறு

C) அகநானூறு

D) தொல்காப்பியம்

விளக்கம்: தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. தாய்வழிச் சொத்துக்கள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந்தொகை. 295) தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.

181) கூற்றுகளை ஆராய்க.

1. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

2. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன.

3. குடும்பம், திருமணம் ஆகிய இரண்டு சொற்களும் முதலில் இடம் பெற்ற நூல் தொல்காப்பியம் ஆகும்.

4. குடும்பம், திருமணம் ஆகிய இரண்டு சொற்களும் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

2. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன.

3. குடும்பம், திருமணம் ஆகிய இரண்டு சொற்களும் முதலில் இடம் பெற்ற நூல் திருக்குறள் (1029) ஆகும்.

4. குடும்பம், திருமணம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும், சங்கஇலக்கியங்களிலும் இடம்பெறவில்லை.

182) இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை – இக்குறட்பாவில் தலை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஒரு உறுப்பு

B) மேன்மை

C) சிறந்த பண்பு

D) தலைமை

விளக்கம்: இக்குறட்பாவில் தலை – மேன்மை. அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமேம்பட்டவர் ஆவார்.

183) மானவிஜயம் என்ற நாடக நூல் கீழ்க்காணும் எந்த நூலை தழுவி பரிதிமாற்கலைஞரால் எழுதப்பட்டது?

A) கார் நாற்பது

B) இன்னா நாற்பது

C) இனியவை நாற்பது

D) களவழி நாற்பது

விளக்கம்: களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும், ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் பரிதிமாற்கலைஞர் இயற்றியுள்ளார்.

184) என்மகன் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) தொல்காப்பியம்

D) நன்னூல்

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் (புறநானூறு 8) என்ற தொடர் மூலம் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது.

185) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறட்பாவில் ஞாலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அறிவு

B) உலகம்

C) உதவி

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஞாலம் – உலகம். உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப்பெரியதாகும் என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்

186) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது – என்ற குறளில் பயன்தூக்கார் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பயன் கருதி

B) உதவி எதிர்பார்த்து

C) பயன்படுத்துதல்

D) பயன் கருதாது

விளக்கம்: பயன்தூக்கார் – பயன் கருதாது. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

187) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்

கொள்வர் பயன்தெரி வார் – என்ற குறளில் தினைத்துணை என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) சிறிய அளவு

B) சம அளவு

C) பெரிய அளவு

D) குறிப்பிட்ட அளவு

விளக்கம்: தினைத்துணை – ஒரு சிறிய அளவு. இதன் எதிர்ச்சொல் ஒரு பெரிய அளவு. ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதனை பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

188) நன்றி மறப்ப நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று – என்ற குறளில் நன்றல்லது என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) நன்மை

B) தீமை

C) நடுநிலைமை

D) எதுவுமில்லை

விளக்கம்: நன்றல்லது – தீமை. இதன் எதிர்ச்சொல் நன்மை என்பதாகும். ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று. அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது மேற்காணும் திருக்குறளின் பொருள் ஆகும்.

189) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந் நன்றி கொன்ற மகற்கு – இக்குறட்பாவில் நன்றி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) தீமை

B) நன்மை

C) உதவியின்மை

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நன்றி – உதவி.

எந்நன்றி – எந்த அறத்தையும்.

செய்ந்நன்றி – செய்த உதவியை. எந்த அறத்தையும் அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும். ஒருவன் செய்த உதவியை மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை என்பது மேற்காணும் குறட்பாவின் பொருள் ஆகும்.

190) மனித குலத்தின் அடிப்படை அலகு எது?

A) அரசன்

B) கிராமம்

C) ஆண்

D) குடும்பம்

விளக்கம்: குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. ஆதலின், குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.

191) பொலிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?

A) பொலிந்து

B) பொலிந்த

C) பொலி

D) போ

விளக்கம்: பொலிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் பொலி என்பதாகும்.

வேர்ச்சொல்: 1. கட்டளைச் சொல்லாக அமையவேண்டும்

2. தொழிலை சுருக்கமாக குறிக்க வேண்டும்.

பொலிந்த – பெயரெச்சம்

பொலிந்து – வினையெச்சம்

192) சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறை _________________________எனப்படும்?

A) மணந்தகம்

B) மனையோள்

C) தாய்மனை

D) தாயமுறை

விளக்கம்: சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே (பெண் தாய்வீடு) தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாயமுறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

193) ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இதில் நால் என்பது எதைக்குறிக்கிறது?

A) நான்மணிக்கடிகை

B) நானாநாற்பது

C) நாலடியார்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இதில் இரண்டு – இரண்டு அடிகளால் ஆன திருக்குறள்

நால் – நான்கடிகளால் ஆன நாலடியார்

194) இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மைஇல் காட்சி யவர் – இக்குறட்பாவில் வெஃகுதல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அஞ்சுதல்

B) விரும்புதல்

C) உதவுதல்

D) நாணம் கொள்ளுதல்

விளக்கம்: வெஃகுதல் – விரும்புதல்.

ஐம்புலன்களையும் வென்ற தெளிவுடையோர், தாம் வறியர் என்ற காரணத்தைக் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்ய மாட்டார்.

195) வெறுமைப்படுத்தும் போதும்,

ஒவ்வொரு விருந்தினரையும்

கௌரவமாக நடந்து

புதியதோர் உவகைக்கா…….என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

A) ஜலாலுத்தீன் ரூமி

B) அய்யப்ப மகாதேவன்

C) தி.சு.நடராசன்

D) பாரதியார்

விளக்கம்: எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு

துக்கங்களின் கூட்டமாக அவை

இருந்து உனது வீட்டைத் துப்புரவாக

வெறுமைப்படுத்தும் போதும்?

ஒவ்வொரு விருந்தினரையும்

கௌரவமாக நடத்து.

புதியதோர் உவகைக்காக – ஜலாலுத்தீன் ரூமி.

196) கூற்றுகளை ஆராய்க

1. திருக்குறள் – திரு + குறள் எனப் பிரிக்கலாம்

2. சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திருக்குறள் – திரு + குறள் எனப் பிரிக்கலாம்

2. சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது

197) தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் – இக்குறட்பாவில் தினல் என்பது எதை உண்ணுதலைக் குறிக்கிறது?

A) தன் செல்வம்

B) பிறர் பொருள்

C) பெற்றோர் செல்வம்

D) ஊண்

விளக்கம்: தினல் என்பது புலால் (இறைச்சி) என்னும் பொருளைத் தருகிறது. உலகத்தார் புலால் தின்னும்பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார் என்பது மேற்காணும் திருக்குறளின் பொருள் ஆகும்.

198) பூமணி இயக்கிய திரைப்படத்தின் பெயர் என்ன?

A) அஞ்ஞாடி

B) நொறுங்கல்கள்

C) கொம்மை

D) கருவேலம்பூக்கள்

விளக்கம்: கரும்வேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை பூமணி இயக்கியுள்ளார். அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

199) செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்? – என்ற குறட்பாவில் செல்இடத்து என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மெலியவரிடத்தில்

B) வலியவரிடத்தில்

C) தனக்கு நிகரானவரிடத்தில்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: செல்இடத்து – மெலியவரிடத்தில். தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர். செல்லுபடியாகாத வலியவரிடத்தில், காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

200) சிறை என்ற நூலை எழுதியவர் யார்?

A) அனுராதா ரமணன்

B) சுந்தரராமசாமி

C) பூமணி

D) வ.சுப.மாணிக்கம்

விளக்கம்: சிறை – அனுராதா ரமணன்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

வயிறுகள் – பூமணி (சிறுகதைத் தொகுப்பு)

கம்பர் யார்? – வ.சுப.மாணிக்கம்

201) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் – இக்குறட்பாவில் வெகுளி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அமைதி

B) மகிழ்ச்சி

C) சினம்

D) உதவி

விளக்கம்: வெகுளி – சினம்.

தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிடவேண்டும்.

202) எந்த தேர்வில் வெற்றி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார் பரிதிமாற் கலைஞர்?

A) பி.ஏ

B) எப்.ஏ

C) எம்.ஏ

D) முனைவர்

விளக்கம்: பரிதிமாற்கலைஞர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார். இவர் எப்.ஏ.(F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

203) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற? – என்ற குறட்பாவில் நகை என்ற சொல்லின் பொருள்?

A) முகமலர்ச்சி

B) அகமகிழ்ச்சி

C) சினமின்மை

D) புன்னகை

விளக்கம்: நகை – முகமலர்ச்சி.

முகமலர்ச்சியையும், அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

204) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இன்பத்துப்பால் – களவியல், கற்பியல்

B) பொருட்பால் – அரசியல், அமைச்சியல், ஒழிபியல்

C) அறத்துப்பால் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அறத்துப்பால்:

1. பாயிரவியல்

2. இல்லறவியல்

3. துறவறவியல்

4. ஊழியல்

பொருட்பால்:

1. அரசியல்

2. அமைச்சியல்

3. ஒழிபியல்

இன்பத்துப்பால்:

1. களவியல்

2. கற்பியல்

205) தவறான ஒன்றை தெரிவு செய்க (இயல்களின் பெயர்கள் – அதிகாரங்களின் எண்ணிக்கை)

A) அரசியல் – 25

B) அமைச்சியல் – 32

C) ஒழிபியல் – 12

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: அரசியல் – 25

அமைச்சியல் – 32

ஒழிபியல் – 13

206) ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் எனில் எதனை வராமல் காத்துக்கொள்ள வேண்டும் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

A) அழுக்காறு

B) வெகுளி

C) அவா

D) உவகை

விளக்கம்: தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்

ஒருவர் தன்னைக்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும். காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

வெகுளி – சினம்

அழுக்காறு – பொறாமை

அவா – ஆசை

உவகை – மகிழ்ச்சி

207) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமாப் புணையைச் சுடும் – இக்குறட்பாவில் ஏமாப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) ஏமாற்றம்

B) சினம் கொல்லாமை

C) பாதுகாப்பு

D) சுற்றம்

விளக்கம்: ஏமாப்பு – பாதுகாப்பு. சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

208) பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) அனுராதா ரமணன்

B) சுந்தர ராமசாமி

C) ஜலாலுத்தீன் ரூமி

D) பக்தவத்சலபாரதி

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

209) கூற்றுகளை ஆராய்க (ஜலாலுத்தீன் ரூமி)

1. இவர் இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டில் 1209ஆம் ஆண்டு பிறந்தார்.

2. பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.

3. இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ என்பது 25600 பாடல்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

4. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி(பொ.ஆ) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைபான ‘மஸ்னவி’ 25600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘திவான்-ஈ-ஷம்ஸ்-தப்ரீஸி’ என்பதாகும்.

210) இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தௌளியர் ஆதலும் வேறு – என்ற குறட்பாவில் திரு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) மரியாதை அடை

B) செல்வம்

C) இலட்சுமி

D) அறிவு

விளக்கம்: திரு – செல்வம். உலக இயல்பு இரு வேறு வகைப்படும்.

செல்வம் உடையவர் அறிவுடையவராக இருப்பதில்லை.

தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

211) தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தம் பேச்சின் மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் யார்?

A) சி.வை.தாமோதரனார்

B) பாரதிதாசன்

C) பரிதிமாற்கலைஞர்

D) மறைமலையடிகள்

விளக்கம்: தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தம் பேச்சின் மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் பரிதிமாற்கலைஞர் ஆவார். இவர் 1893-ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

212) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும் – இத்திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

A) ஏகதேச உருவக அணி

B) நிரல் நிறை அணி

C) வேற்றுமை அணி

D) சொல்பின்வருநிலை அணி

விளக்கம்: இத்திருக்குறளின் அணி ஏகதேச உருவக அணி ஆகும். சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும் என்பது மேற்காணும் திருக்குறளின் பொருள் ஆகும்.

213) சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் நட்புப் படலம் எந்த காண்டத்தில் உள்ளது?

A) சுந்தர காண்டம்

B) கிட்கிந்தா காண்டம்

C) ஆரண்யா காண்டம்

D) யுத்த காண்டம்

விளக்கம்: கிட்கிந்தா காண்டம் – நட்புக் கோட்படலம்: சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன். சுக்ரீவனை அழைத்து வந்தான். சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக்கொள்கிறார் இராமன்.

214) கூற்றுகளை ஆராய்க.

1. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று முப்பால்களைக் கொண்டது

2. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன

3. திருக்குறளுக்கு 10 பேர் உரை எழுதியுள்ளனர்

4. திருக்குறள் 107 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று முப்பால்களைக் கொண்டது

2. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன

3. திருக்குறளுக்கு 10 பேர் உரை எழுதியுள்ளனர்

4. திருக்குறள் 107 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

215) கூற்று: தாய்வழிக் குடும்பங்களில் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.

காரணம்: பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: 1. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருப்பதால் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.

2. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

216) கூற்றுகளை ஆராய்க.

1. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்று அழைக்கப்படுகிறது.

2. கம்பரின் காலம் கி.பி 10ஆம் நூற்றாண்டு.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்று அழைக்கப்படுகிறது.

2. கம்பரின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

217) உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார் – என்ற வரிகளில் உவா என்ற சொல்லின் பொருள்?

A) சந்திரன்

B) சூரியன்

C) அமாவாசை

D) பௌர்ணமி

விளக்கம்: உவா – அமாவாசை.

ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.

218 திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் எங்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது?

A) சென்னை

B) கன்னியாகுமரி

C) கோவை

D) வேலூர்

விளக்கம்: திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

219) தந்தை வழிச் சமூகத்தில் மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள் என்ற செய்தியை கூறும் நூல் எது?

A) அகநானூறு

B) குறுந்தொகை

C) புறநானூறு

D) ஐங்குறுநூறு

விளக்கம்: ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எம்மனை வதுவை நல்மணம் கழிக – ஐங்குறு. 399: 1-2.

220 வாள் எயிற்று அரக்கர் வைகும் – என்ற வரிகளில் எயிறு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பல்

B) வாய்

C) வயிறு

D) ஒளிமிகுந்த

விளக்கம்: எயிறு – பல்.

ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வது என்பது மேற்காணும் செய்யுள் வரியின் பொருளாகும்.

221) கம்பர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

A) 11

B) 12

C) 13

D) 14

விளக்கம்: கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்று அழைக்கப்படுகிறது. கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

222) சுக்ரீவன் யாருடைய மகன் ஆவார்?

A) இந்திரன்

B) சூரியன்

C) சந்திரன்

D) வாலி

விளக்கம்: மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன் சுக்ரீவன் என்பதை கம்பராமாயணம் மூலம் அறியலாம்.

பின் குன்று சூழ்வான்

மக னொடும் அறுவர் ஆனோம் – கம்பராமாயணம்.

223) உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார் – என்ற வரிகளில் உடுபதி என்ற சொல்லின் பொருள்?

A) சந்திரன்

B) சூரியன்

C) அமாவாசை

D) பௌர்ணமி

விளக்கம்: உடுபதி – சந்திரன்.

ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.

224) மாண்டது என் மாயப் பாசம்

வந்தது, வரம்பு இல் காலம் – என்று கூறியவர் யார்?

A) இலக்குவன்

B) குகன்

C) சவரி

D) இராவணன்

விளக்கம்: மேற்காண் வரிகளை கூறியவர் சவரி ஆவார். “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது” என்று சவரி இராமனிடம் கூறினாள்.

225) “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) குறுந்தொகை

B) புறநானூறு

C) அகநானூறு

D) தொல்காப்பியம்

விளக்கம்: “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” குறுந்தொகை (135) என்ற பாடல் மூலம் பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது.

226) கூற்றுகளை ஆராய்க.

1. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருப்பதால் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.

2. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருப்பதால் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.

2. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

227) கணவர், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை கீழ்க்காணும் எந்த நூல் வாயிலாக அறியலாம்?

A) அகநானூறு

B) தொல்காப்பியம்

C) பரிபாடல்

D) புறநானூறு

விளக்கம்: கணவர், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் (279) கூறுகிறது.

228) சங்ககாலத்தில் சமூகத்தாயாக விளங்கியவர் யார்?

A) நற்றாய்

B) செவிலித்தாய்

C) தோழி

D) மேற்காணும் அனைவரும்

விளக்கம்: சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.

229) உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார் – என்ற வரிகளில் இரவி என்ற சொல்லின் பொருள்?

A) சந்திரன்

B) சூரியன்

C) அமாவாசை

D) பௌர்ணமி

விளக்கம்: இரவி – சூரியன்.

ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும், வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.

230) புகல் அருங் கானம் தந்து

புதல்வரால் பொலிந்தான் நுந்தை – இதில் நுந்தை என்ற சொல்லால் குறிப்பிடப்படுபவர் யார்?

A) தயரதன்

B) இராமன்

C) இலக்குவன்

D) சுக்ரீவன்

விளக்கம்: புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறார்.

231) ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி

அழுது இழி அருவிக் கண்ணள் – இவ்வரிகளில் அவள் என்பது யாரைக் குறிக்கும்?

A) கைகேயி

B) மண்டோதரி

C) சீதை

D) சவரி

விளக்கம்: இவ்வரிகளில் அவள் என்பது சவரியைக் குறிக்கும். இராமனைப் புகழந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) என்பது இவ்வரிகள் உணர்த்தும் பொருள் ஆகும்.

232) கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் என்ன?

A) கம்பராமாயணம்

B) இராமவதாரம்

C) இராமகாதை

D) அயோத்தியகாதை

விளக்கம்: கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்று அழைக்கப்படுகிறது.

233) ……..பின் குன்று சூழ்வான்

மக னொடும் அறுவர் ஆனோம் – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) குகன்

B) சுக்ரீவன்

C) வீடணன்

D) இராமன்

விளக்கம்: மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம் என்பது மேற்காணும் செய்யுளின் பொருள் ஆகும்.

234) ‘பின்பு உளது, இடை மன்னும்

பிரிவு உளது என உன்னேல்’ – இவ்வரிகள் யார் யாரிடம் கூறியது?

A) குகன், இராமனிடம்

B) இராமன், குகனிடம்

C) இராமன் இலக்குவனிடம்

D) இலக்குவன், குகனிடம்

விளக்கம்: மேற்காணும் வரிகள் இராமன் குகனிடம் கூறியது. துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. என்பது மேற்காணும் பாடலின் பொருள் ஆகும்.

235) யாருடன் ஐவர் ஆனோம் என்று இராமர் கூறினார்?

A) சுக்ரீவன்

B) அனுமன்

C) வீடணன்

D) குகன்

விளக்கம்: குகனோடும் ஐவர் ஆனோம்

முன்பு……. – இராமவதாரம். குகனோடு ஐவர் ஆனோம் என்று இராமர் கூறுகிறார். இராமனின் மற்றும் 3 சகோதரர்கள் இவர்களுடன் குகன் இணைந்து ஐவர் ஆனோம் என்று இராமர் கூறுகிறார்.

236) முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது.

ஓர் மூலம் இல்லான் – இவ்வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) குகன்

B) வீடணன்

C) இலக்குவன்

D) இராமன்

விளக்கம்: இவ்வரிகளில் குறிப்பிடப்படுபவர் இராமன் ஆவார். சவரியிடம் நலம் விசாரிக்கும் வரிகள் இவை.

237) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) பாயிரவியல்

B) இல்லறவியல்

C) துறவறவியல்

D) களவியல்

விளக்கம்: அறத்துப்பால்:

1. பாயிரவியல்

2. இல்லறவியல்

3. துறவறவியல்

4. ஊழியல்

பொருட்பால்:

1. அரசியல்

2. அமைச்சியல்

3. ஒழிபியல்

இன்பத்துப்பால்:

1. களவியல்

2. கற்பியல்

238) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) அன்றுகாறும் – அன்றுமுதல்

B) வாள் – ஒளிபொருந்திய

C) எயிறு – பல்

D) ஆழி – நீர் நிலை

விளக்கம்: அன்றுகாறும் – அன்றுமுதல்

வாள் – ஒளிபொருந்திய

எயிறு – பல்

ஆழி – கடல்

239) மற்று இனி உரைப்பது என்னே?

வானிடை மண்ணில், நின்னை…… என்று யார் யாரிடம் கூறினார்?

A) இராமன், சுக்ரீவனிடம்

B) இராமன், சவரியிடம்

C) இராமன், குகனிடம்

D) இராமன் அனுமனிடம்

விளக்கம்: மேற்காணும் வரிகள் இராமன் சுக்ரீவனிடம் கூறிய வரிகள் ஆகும். இராமன் சுக்ரீவனிடம், “இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்” என்று கூறினார்.

240) ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இதில் இரண்டு என்பது எதைக்குறிக்கிறது?

A) நான்மணிக்கடிகை

B) நானாநாற்பது

C) நாலடியார்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இதில் இரண்டு – இரண்டு அடிகளால் ஆன திருக்குறள்

நால் – நான்கடிகளால் ஆன நாலடியார்

241) பொருத்துக.

அ. இரவி – 1. சந்திரன்

ஆ. அனகன் – 2. சுக்ரீவன்

இ. அரியும் வேந்தும் – 3. இராமன்

ஈ. உடுபதி – 4. சூரியன்

A) 1, 2, 3, 4

B) 4, 2, 3, 1

C) 1, 3, 2, 4

D) 4, 3, 2, 1

விளக்கம்: இரவி – சூரியன்

அனகன் – இராமன்

அரியும் வேந்தும் – சுக்ரீவன்

உடுபதி – சந்திரன்

242) சேர நாட்டு தாயமுறை பற்றி கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) பதிற்றுப்பத்து

C) தொல்காப்பியம்

D) நற்றிணை

விளக்கம்: சங்க காலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துகாட்டாகும். சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே (பெண் தாய்வீடு) தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாயமுறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

243) ‘துன்பு உளதுஎனின் அன்றோ

சுகம் உளது? அது அன்றிப்……..என்ற வரிகள் யார் யாரிடம் கூறியது?

A) குகன், இராமனிடம்

B) இராமன், குகனிடம்

C) இராமன் இலக்குவனிடம்

D) இலக்குவன், குகனிடம்

விளக்கம்: இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன், குகனே, துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும் என்று குகனிடம் கூறினார்.

244) நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது, நான் உன் தொழில்

உரிமையின் உள்ளேன் – இவ்வரிகளில் நளிர் கடல் என்பதன் பொருள் என்ன?

A) குளிந்த கடல்

B) இந்தியப் பெருங்கடல்

C) பெரிய கடல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: நளிர் கடல் என்றால் குளிந்த கடல் என்று பொருள். குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்ப பணிபுரிபவன் என்று இராமன் குகனிடம் கூறினார்.

245) அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான்

என்உயிர் அனையாய் நீ

இளவல் உன் இளையான், இந்

நன்னுதலவள் நின் கேள் – இதில் நன்னுதலவள் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

A) கைகேயி

B) கோசலை

C) சீதை

D) மண்டோதரி

விளக்கம்: அன்னவன் – குகன், அமலன் – இராமன், இளவல் – தம்பி இலக்குவன் நன்னுதலவள் – சீதை.

குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் “என் உயிர் போன்றவனே, நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி” என்று கூறினார்.

246) “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி” – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) பரிதிமாற்கலைஞர்

C) பாரதிதாசன்

D) மறைமலைஅடிகள்

விளக்கம்: “பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.” – பரிதிமாற்கலைஞர்.

247) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர் – இக்குறட்பாவில் படுபயன் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) பெரும்பயன்

B) சிறுபயன்

C) உதவி

D) பெரும் பொருள்

விளக்கம்: படுபயன் – பெரும் பயன்.

நடுவுநிலைமையை விட்டுவிட நாணம் கொள்ளும் பண்பாளர்கள் பெரும்பயன் கிடைப்பினும், பிறர் பொருளைக் கவரும் பழியான செய்களைச் செய்யார்.

248) கணவர், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை யாருடைய பாடல் வாயிலாக அறியலாம்?

A) ஒளவையார்

B) ஒக்கூர் மாசாத்தியார்

C) திருவள்ளுவர்

D) பாரதியார்

விளக்கம்: கணவர், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் (279) கூறுகிறது.

249) வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.

அ. பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

ஆ. பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்

இ. தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்

ஈ. தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்

A) 4, 1, 3, 2

B) 2, 3, 1, 4

C) 4, 3, 1, 2

D) 2, 4, 1, 3

விளக்கம்: பாலை பாடினான் – பாலைத் திணை பாடினான்

பாலைப் பாடினான் – பாலினைப் பாடினான்

தேரை பார்த்தான் – தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

தேரைப் பார்த்தான் – தேரினைப் பார்த்தான்

250) கூற்று: தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

காரணம்: பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: 1. தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருப்பதால் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.

2. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

251) பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்வு செய்க.

A) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்

B) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்

C) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

D) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விளக்கம்: நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதலே பொருள் குழப்பின்றி எழுதுவதற்குரிய காரணம் ஆகும்.

252) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.

2. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.

2. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

253) பின்பு உள, இடை மன்னும்

பிரிவு உளது என உன்னேல் – இதில் உன்னேல் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உண்ணுதல்

B) எண்ணுதல்

C) உண்ணாதிருத்தல்

D) எண்ணாதே

விளக்கம்: மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இராமாயணம் ஆகும். இவ்வரிகள் இராமன் குகனிடம் கூறியது. உன்னேல் – எண்ணாதே. துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையெ இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே என்று இராமன் குகனிடம் கூறினார்.

254) ஒரு புளிய மரத்தின் கதை என்ற நூலை எழுதியவர் யார்?

A) வ.சுப.மாணிக்கம்

B) பூமணி

C) அனுராதா ரமணன்

D) சுந்தர ராமசாமி

விளக்கம்: சிறை – அனுராதா ரமணன்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

வயிறுகள் – பூமணி (சிறுகதைத் தொகுப்பு)

கம்பர் யார் – வ.சுப.மாணிக்கம்

255) கலாவதி என்ற நாடக நூலை எழுதியவர் யார்?

A) மு.சி.பூர்ணலிங்கம்

B) தி.சு.நடராசன்

C) சி.வை.தாமோதரனார்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும நூலையும் பரிதிமாற்கலைஞர் இயற்றியுள்ளார்.

256) கூற்றுகளை ஆராய்க(பூமணி)

1. அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் – புதினங்கள்

2. வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை – சிறுகதைத் தொகுப்புகள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பூமணியின் சிறுகதைத் தொகுப்புகள்:

1. அறுப்பு

2. வயிறுகள்

3. ரீதி

4. நொறுங்கல்கள்

புதினங்கள்:

1. வெக்கை

2. பிறகு

3. அஞ்ஞாடி

4. கொம்மை

257) வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) பாரதியார்

D) சுப்புரத்தின தாசன்

விளக்கம்: “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”- பாரதியார்.

“வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே”- பாரதிதாசன்

258) திருக்குறள் எந்த ஆண்டு ஏட்டுச் சுவடிலிருந்து முதன்முதலில் அச்சிடப்பட்டது?

A) 1813

B) 1812

C) 1823

D) 1822

விளக்கம்: ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்படட ஆண்டு 1812.

259) திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பொருந்தாதவர் யார்?

A) பரிமேலழகர்

B) மல்லர்

C) பரிப்பெருமாள்

D) காளிங்கர்

விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:

1. தருமர்

2. மணக்குடவர்

3. தாமத்தர்

4. நச்சர்

5. பரிதி

6. பரிமேலழகர்

7. திருமலையார்

8. மல்லர்

9. பரிப்பெருமாள்

10. காளிங்கர்

இதில் பரிமேலழகர் உரையே சிறந்தது. எனவே பொருந்தாதவர் பரிமேலழகர் ஆவார்.

260) ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளை என்.சத்தியமூர்த்தி எந்த தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்?

A) தங்க மீன்னொன்று

B) தாகங்கொண்ட மீனனொன்று

C) தண்ணீர் மீன்னொன்று

D) ரூமியின் கவிதைகள்

விளக்கம்: ஜலாலுத்தீன் ரூமி கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ் ஆவார். அதனைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற பெயரில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.

261) கூற்றுகளை ஆராய்க.

1. சங்க காலத்தில் கண சமூகத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள்.

2. சமூகத் தாயாக விளங்கியவர் செவிலித்தாய் ஆவார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சங்ககாலத்தில் கண சமூகத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சான்றாகும்.

2. சமூகத் தாயாக விளங்கிய செவிலித்தாய் முறை பண்டைய இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சியாகச் சங்ககாலத்தில் வருவதை அறிய முடிகிறது. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.

262) பொருத்துக.

அ. அறத்துப்பால் – 1. 38 அதிகாரங்கள்

ஆ. பொருட்பால் – 2. 25 அதிகாரங்கள்

இ. இன்பத்துப்பால் – 3. 70 அதிகாரங்கள்

A) 1, 2, 3

B) 1, 3, 2

C) 3, 1, 2

D) 2, 1, 3

விளக்கம்: அறத்துப்பால் – 38 அதிகாரங்கள்

பொருட்பால் – 70 அதிகாரங்கள்

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள்

263) திருக்குறளுக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) தமிழர் திருமறை

B) அறவிலக்கியம்

C) உலகப்பொது மறை

D) வேளாண் வேதம்

விளக்கம்: திருக்குறள் – குறள், உலகப்பொது மறை, அறவிலக்கியம். தமிழர் திருமறை

வேளாண்வேதம் – நாலடியார்.

264) பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் பழமொழியில் நால், இரண்டு என்பது கீழ்க்காணும் எதைக்குறிக்கிறது?

A) நான்மணிக்கடிகை, திருக்குறள்

B) நாலடியார், திருக்குறள்

C) ரூபாயத், திருக்குறள்

D) நானாநாற்பது, திருக்குறள்

விளக்கம்: பழகுத்தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் இதில்,

நால் – நாலடியார்

இரண்டு – திருக்குறள்.

265) கூற்றுகளை ஆராய்க

1. குறள், உலகப்பொது மறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை, மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல் – திருக்குறள்

2. ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. குறள், உலகப்பொது மறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை, மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல் – திருக்குறள்

2. ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

266) உளது என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன?

A) இடைக்குறை

B) வினையெச்சம்

C) பெயரெச்சம்

D) மரூஉ

விளக்கம்: உளது – இடைக்குறை.

உள்ளது என்பதே இதன் பொருள். இதில் “ள்“ என்னும் எழுத்து இல்லை. எனவே உள்ளது என்ற சொல்லின் இடைக்குறை உளது ஆகும்.

267) தமிழர் மானிடவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) தி.சு.நடராசன்

B) பூமணி

C) பக்தவத்சலபாரதி

D) நா.காமராசன்

விளக்கம்: பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள்:

1. இலக்கிய மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தமிழர் மானிடவியல்

4. தமிழகப் பழங்குடிகள்

5. பாணர் இனவரைவியல்

6. தமிழர் உணவு.

268) திருக்குறள் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) மரியாதை அடை

B) இருபெயரொட்டு பண்புத்தொகை

C) அடையடுத்த கருவி ஆகுபெயர்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: திருக்குறள் – திருகுறள்.

குறள் – இரண்டடி வெண்பா

திரு – சிறப்பு அடைமொழி

திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.

269) திருக்குறள் என்பது கீழ்க்காணும் எதற்கு பொருத்தமானது?

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) பதினெண்கீழ்க் கணக்கு

D) ஐம்பெருங்காப்பியம்

விளக்கம்: சிறந்த வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் எனப் பெயர் பெற்றது. இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று.

270) அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள் – இக்குறட்பாவில் அஃகாமை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கைப்பொருள்

B) செல்வம்

C) குறையாமலிருக்க

D) விரும்பாதிருத்தல்

விளக்கம்: அஃகாமை – குறையாமலிருக்க.

ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தல் ஆகும்.

271) வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?

A) செய்யாமல் செய்த உதவி

B) பயன்தூக்கர் செய்த உதவி

C) திணைத்துணை நன்றி

D) காலத்தினால் செய்த நன்றி

விளக்கம்: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.

272) பொருத்துக.

அ. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1.சேர்ந்தாரைக் கொல்லி

ஆ. பயன்தூக்கர் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது

இ. சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்

ஈ. காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது

A) 3, 4, 1, 2

B) 3, 1, 4, 2

C) 2, 4, 3, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – தெய்வத்துள் வைக்கப்படும்

பயன்தூக்கர் செய்த உதவி – நன்மை கடலின் பெரிது

சினம் – சேர்ந்தாரைக் கொல்லி

காலத்தினாற் செய்த நன்றி – ஞாலத்தின் மாணப் பெரிது

273) தவறான ஒன்றை தெரிவு செய்க (இயல்களின் பெயர்கள் – அதிகாரங்களின் எண்ணிக்கை)

A) பாயிரவியல் – 04

B) இல்லறவியல் – 20

C) துறவறவியல் – 13

D) ஊழியல் – 2

விளக்கம்: பாயிரவியல் – 04

இல்லறவியல் – 20

துறவறவியல் – 13

ஊழியல் – 1

274) எந்தமொழி நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு பரிதிமாற்கலைஞர் நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலை இயற்றினார்?

A) சமஸ்கிருதம்

B) தெலுங்கு

C) வடமொழி

D) ஆங்கிலம்

விளக்கம்: ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக் கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கணத்தை பரிதிமாற்கலைஞர் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு.போப் என்பவர் பிரான்சு நாட்டின் எட்வர்ட் தீவில் பிறந்தவர்.

275) சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலை எழுதியவர் யார்?

A) பூமணி

B) கம்பர்

C) வ.சுப.மாணிக்கம்

D) இராஜாஜி

விளக்கம்: இராஜாஜி – சக்கரவர்த்தி திருமகன்

இராமவதாரம் அல்லது கம்பராமாயணம் – கம்பர்

வயிறுகள் – பூமணி (சிறுகதைத் தொகுப்பு)

கம்பர் யார்? – வ.சுப.மாணிக்கம்

276) பொருத்துக.

அ. தவா – 1. ஆசை

ஆ. குவால் – 2. அமாவாசை

இ. அவா – 3. குறையாத

ஈ. உவா – 4. அனைத்து

A) 3, 4, 1, 2

B) 3, 4, 2, 1

C) 1, 2, 3, 4,

D) 3, 1, 2, 4

விளக்கம்: தவா – குறையாத

குவால் – அனைத்து

அவா – ஆசை

உவா – அமாவாசை

277) பொருத்துக.

அ. அறத்துப்பால் – 1. 2 இயல்கள்

ஆ. பொருட்பால் – 2. 4 இயல்கள்

இ. இன்பத்துப்பால் – 3. 3 இயல்கள்

A) 2, 3, 1

B) 3, 2, 1

C) 1, 2, 3

D) 2, 1, 3

விளக்கம்: அறத்துப்பால் – 4 இயல்கள்

பொருட்பால் – 3 இயல்கள்

இன்பத்துப்பால் – 2 இயல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!