12th Tamil Unit 2 Questions
12th Tamil Unit 2 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 12th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.
1) நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்?
A) நக்கீரர்
B) முடத்தாம கண்ணியார்
C) உருத்திரங்கண்ணனார்
D) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
விளக்கம்: நெடுநல்வாடை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ஆகும். இதன் ஆசிரியர் நக்கீரர் ஆவார். இவர் பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூலான திருமுருகாற்றுப்படை என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
2) பிறகொரு நாள் கோடை என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
A) உத்தமசோழன்
B) அய்யப்ப மாதவன்
C) தி.சு.நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியன்
விளக்கம்: பிறகொருநாள் கோடை என்ற நூலை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது.
3) நெடுநல்வாடை கீழக்காணும் யாரை பாட்டுடைத் தலைவராக கொண்டு எழுதப்பட்டது?
A) சேரமான் கணக்கால் இரும்பொறை
B) பாண்டியன் நெடுஞ்செழியன்
C) முடத்தாம கண்ணியார்
D) நக்கீரர்
விளக்கம்: பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை ஆகும்.
4) நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?
A) 188
B) 401
C) 101
D) 150
விளக்கம்: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டது. இந்நூலை எழுதியவர் நக்கீரர் ஆவார்.
5) கூற்றுகளை ஆராய்க.
1. நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.
2. 2010ஆம் ஆண்டில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்தது.
3. 2005ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி.மீ வரை மழை பதிவானது.
4. உலக புவிநாள் ஏப்ரல் 21 அன்று கொண்டாடப்படுகிறது
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) 1 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.
2. 2005ஆம் ஆண்டில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்தது.
3. 2010ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி.மீ வரை மழை பதிவானது.
4. உலக புவிநாள் ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்படுகிறது
6) “புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல்” என்று கூறிய டேவிட் கிங் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A) இங்கிலாந்து
B) அமெரிக்கா
C) இத்தாலி
D) ரஷ்யா
விளக்கம்: புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல்” என்று கூறிய டேவிட் கிங் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்
7) காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப்பேரவையில் ஆரம்பத்தில் எத்தனை நாடுகள் இருந்தன?
A) 150
B) 50
C) 193
D) 173
விளக்கம்: ஐக்கிய நாடுகள் அவை 1992ல் ரியோ டி ஜெனிராவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது. இதில் ஆரம்பத்தில் 50 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது.
8) கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85 சதவீதம் கீழக்காணும் எதனால் ஏற்பட்டவை?
A) வெள்ளப்பெருக்கு
B) காட்டுத்தீ
C) மணல்சரிவு
D) நிலநடுக்கம்
விளக்கம்: கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85 சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவையே. இதற்கு மணல் அள்ளுவதும் ஒரு காரணம் ஆகும்.
9) காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை ஐக்கிய நாடுகள் அவை எந்த ஆண்டு உருவாக்கியது?
A) 1990
B) 1991
C) 1992
D) 1994
விளக்கம்: ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
10) அய்யப்ப மாதவன் எந்த ஊரைச் சார்ந்தவர்?
A) நாட்டரசன் கோட்டை
B) ஸ்ரீவைகுண்டம்
C) ஆழ்வார் திருநகரி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: அய்யப்ப மாதவன் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து பிறகொருநாள் கோடை என்ற கவிதை தரப்பட்டுள்ளது. இக்கவிதை எழுதிய அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர் ஆவார்.
11) அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை சர்வதேச வானிலை ஆய்வு மையம் உருவாக்கியது. இதில் எத்தனை நாடுகள் இடம்பெற்றுள்ளன?
A) 7
B) 8
C) 9
D) 10
விளக்கம்: சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதன்படி வங்ககடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
12) அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை சர்வதேச வானிலை ஆய்வு மையம் உருவாக்கியது. இதில் இடம்பெறாத நாடு எது?
A) வங்கதேசம்
B) மாலத்தீவு
C) ஓமன்
D) சிங்கப்பூர்
விளக்கம்: சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதன்படி வங்ககடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
13) அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை சர்வதேச வானிலை ஆய்வு மையம் உருவாக்கியது. இதில் இடம்பெற்ற நாடுகள் தலா எத்தனை பெயர்களை பரிந்துரை செய்திருக்கின்றன?
A) 4
B) 10
C) 5
D) 8
விளக்கம்: சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதன்படி வங்ககடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஒவ்வொன்றும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கின்றன.
14) இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?
A) 2000
B) 1988
C) 2009
D) 2001
விளக்கம்: இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் 2009 ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்.
15) நெடுநல்வாடை என்பது கீழ்க்காணும் எதனுடன் பொருத்தமானது?
A) பத்துப்பாட்டு
B) எட்டுத்தொகை
C) ஐஞ்சிறுங்காப்பியம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை ஆகும். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
16) ஒவ்வொரு ஆண்டும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்ட நாடுகளைக் கணக்கெடுத்தால் கீழ்க்காணும் எந்த நாடுகள் முன்னணியில் உள்ளன?
A) இந்தியா
B) இங்கிலாந்து
C) பிரான்ஸ்
D) ஜப்பான்
விளக்கம்: ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கணக்கெடுத்தால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
17) சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியம்
B) சுரதா
C) பாரதியார்
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததாட தம்பி வீரா – பாரதியார்
18) அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை குறும்படம் எது?
A) மழைக்குப்பிறகும் மழை
B) நானென்பது வேறொருவன்
C) நீர்வெளி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வரும் அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும், மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
19) நெடுநல்வாடை என்பது கீழ்க்காணும் எந்த பாவகையால் இயற்றப்பட்டது?
A) ஆசிரியப்பா
B) வெண்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா
விளக்கம்: பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை ஆகும். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
20) “புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல்” என்று கூறியவர் யார்?
A) ஜான் மார்ஷல்
B) டேவிட் வில்லியம்
C) அலெக்சாண்டர்
D) டேவிட் கிங்
விளக்கம்: புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல்” என்று கூறியவர் டேவிட் கிங் ஆவார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்.
21) கீழ்க்கண்டவற்றில் எது பசுமை இல்ல வாயு அல்ல?
A) கார்பன்-டை-ஆக்ஸைடு
B) மீத்தேன்
C) நைட்ரஸ் ஆக்ஸைடு
D) பெரஸ் ஆக்ஸைடு
விளக்கம்: கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவற்றைத் தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறார்கள்.
22) 2001ஆம் ஆண்டு முதல் புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்த எத்தனை ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் 200 கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்?
A) 40
B) 100
C) 50
D) 70
விளக்கம்: 2001ஆம் ஆண்டு முதல் புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் 200 கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23) உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப்பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?
A) 50
B) 20
C) 30
D) 40
விளக்கம்: உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் 40 விழுக்காடு மக்கள் தண்ணீர்ப்பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்
24) கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எத்தனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை?
A) 90
B) 75
C) 50
D) 85
விளக்கம்: கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85 சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவையே. இதற்கு மணல் அள்ளுவதும் ஒரு காரணம் ஆகும்.
25) மாமேயல் மறப்ப மந்தி கூரப்……. என்ற வரியில் இடம்பெற்ற மா என்ற சொல்லின் பொருள் என்ன?
A) பெரிய
B) மரம்
C) விலங்கு
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: இவ்வரிகள் இடம் பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின என்பது இப்பாடலின் பொருள் ஆகும். இங்கு மா என்ற சொல் விலங்கு என்ற பொருளை குறிக்கும்.
26) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ 50000 நீர்நிலைகள் இருந்தன.
2. இன்றைக்கு அவை, வெறும் 25000-ஆக குறைநது போயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ 50000 நீர்நிலைகள் இருந்தன.
2. இன்றைக்கு அவை, வெறும் 20000-ஆக குறைநது போயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
27) எங்கு ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது?
A) பாரிஸ்
B) வாஷிங்டன்
C) ரியோ டி ஜெனிரோ
D) வாட்டிகன்
விளக்கம்: ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
28) எந்த ஆண்டு மும்பையில் ஒரேநாளில் 994மி.மீ மழை பெய்தது?
A) 2010
B) 2005
C) 2000
D) 2015
விளக்கம்: 2015ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்தது.
29) அய்யப்ப மாதவன் பற்றிய கூற்றுகளில் மூன்றில் ஒன்று பொருத்தமற்று உள்ளது. அது என்ன?
A) மழைக்குப்பிறகும் மழை
B) நானென்பது வேறொருவன்
C) நீர்வெளி
D) இன்று
விளக்கம்: இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வரும் அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும், மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
30) எந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பதிவானது.
A) 2009
B) 2010
C) 2011
D) 2012
விளக்கம்: 2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பதிவானது.
31) அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை சர்வதேச வானிலை ஆய்வு மையம் உருவாக்கியது. இதில் இடம்பெற்ற நாடுகள் பரிந்துரைப்படி மொத்தம் எத்தனை புயல் பெயர்கள் கொண்ட பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது?
A) 100
B) 50
C) 64
D) 40
விளக்கம்: சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. அதன்படி வங்ககடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஒவ்வொன்றும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள 64 பெயர்களின் வரிசைப்படிதான் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது.
32) கீழ்க்காணும் எந்த இரு நகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள் மற்றும் குளங்கள் காணாமல் போய்விட்டன?
A) சென்னை, காஞ்சிபுரம்
B) காஞ்சிபுரம், கடலூர்
C) சென்னை, மதுரை
D) மதுரை, இராமநாதபுரம்
விளக்கம்: இந்தியா விடுதலைபெறுவதற்கு முன் தமிழக நிலப்பரப்பில் ஏறத்தாழ 50000 நீர்நிலைகள் இருந்தன. தற்போது 20000- ஆக குறைந்துபோயிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன.
33) நடுவண் அரசு எப்போது பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?
A) 2005 டிசம்பர் 25
B) 2005 டிசம்பர் 23
C) 2004 டிசம்பர் 23
D) 2004 டிசம்பர் 25
விளக்கம்: நடுவண் அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ, விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது.
34) எந்த ஆண்டு முதல் புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது?
A) 1988
B) 2000
C) 2001
D) 2010
விளக்கம்: இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் 2009 ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர். 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது.
35) காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப்பேரவையில் ஆரம்பத்தில் 50 நாடுகள் இருந்தன. பின்னர் இந்த எண்ணிக்கை எத்தனை நாடுகளாக உயர்ந்தன?
A) 150
B) 50
C) 193
D) 173
விளக்கம்: ஐக்கிய நாடுகள் அவை 1992ல் ரியோ டி ஜெனிராவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது. இதில் ஆரம்பத்தில் 50 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது.
36) ஆர்டிக் பகுதி கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது?
A) 2
B) 4
C) 6
D) 10
விளக்கம்: ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் நான்கு இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது. இதற்குப் புவி வெப்பமாதலே காரணமாகும்.
37) கூற்றுகளை ஆராய்க.
1. தலைவனுடன் தலைவி சேர்ந்த இன்பமிகுதியால் நெடுவாடையாக பெயர் பெற்றது.
2. போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும், போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.
38) கூதிர்ப்பாசறை என்பது எதைக்குறிக்கும்?
A) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
B) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் பாடிவீடு
C) போர்மேற் சென்ற அரசன் பனிக்காலத்தில் தங்கும் படைவீடு
D) போர்மேற் சென் அரசன் பனிக்காலத்தில் தங்கும் பாடிவீடு
விளக்கம்: கூதிர்ப்பாசறை என்பது போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு ஆகும்.
39) கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியம்
B) சுரதா
C) பாரதியார்
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததாட தம்பி வீரா – பாரதியார்
40) நிலத்தடி நீர் மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் எதன் பங்கு இன்றியமையாதது?
A) செம்மண்
B) கரிசல்மண்
C) மணல்
D) சரளை மண்
விளக்கம்: நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் மணலின் பங்கு இன்றியமையாதது ஆகும்.
41) மழைக்குப் பிறகும் மழை என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) உத்தமசோழன்
B) அய்யப்ப மாதவன்
C) தி.சு.நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியன்
விளக்கம்: இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வரும் அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும், மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
42) மாயூரம் வேதநாயகம் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) பெண்கல்விக்கு குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுபவர்
B) மொழிபெயர்ப்பாளர்
C) நாவலாசியரியர்
D) பதிப்பாசிரியர்
விளக்கம்: மாயூரம் வேதநாயகம்: மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், பெண் கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுபவர்.
43) வையம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் புதுப்பெயல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) புதுப்புயல்
B) புதுமழை
C) சூறைக்காற்று
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். இங்கு புதுப்பெயல் என்றால் புதுமழையை குறிக்கும். தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது என்பது இவ்வரிகள் உணர்த்தும் பொருளாகும்.
44) ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை என்ன பருவமாக அழைத்தனர்?
A) கார்காலம்
B) முன்பனிக்காலம்
C) கூதிர்காலம்
D) பின்பனிக்காலம்
விளக்கம்: ஐப்பசி அடை மழை, கார்த்திகை கனமழை என்பது சொலடையாகும். ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
45) கூற்றுகளை ஆராய்க.
1. இக்காலத் தமிழில் அஃறிணைப் பன்மைக்கெனத் தனி வினைமுற்றுகள் உண்டு.
2. ஒருமை, பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இக்காலத் தமிழில் அஃறிணைப் பன்மைக்கெனத் தனி வினைமுற்றுகள் இல்லை
2. ஒருமை, பன்மை வேறுபாடு எழுவாயிலேயே வெளிப்படுகிறது.
46) வளைஇ என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) செய்யுளிசை அளபெடை
B) இன்னிசை அளபெடை
C) சொல்லிசை அளபெடை
D) இசைநிறை அளபெடை
விளக்கம்: வளைஇ என்ற சொல்லின் பொருள் சொல்லிசை அளபெடையாகும். இ என்னும் எழுத்தில் முடிந்தால் சொல்லிசை அளபெடையாகும்.
47) கூற்றுகளை ஆராய்க.
1. ஐக்கிய நாடுகள் அவை 1992-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
2. இதில் ஆரம்பத்தில் 150 நாடுகள் மட்டுமே இருந்தன.
3. இந்த எண்ணிக்கை பிறகு 193 ஆக மாறியது.
4. பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை
A) 1, 2 சரி
B) 1, 2, 3 சரி
C) 1, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. ஐக்கிய நாடுகள் அவை 1992-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது.
2. இதில் ஆரம்பத்தில் 50 நாடுகள் மட்டுமே இருந்தன.
3. இந்த எண்ணிக்கை பிறகு 193 ஆக மாறியது.
4. பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
48) எந்த மாநிலத்தில் ஒரே நாளில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி.மீ வரை மழை பதிவானது?
A) அசாம்
B) மேகாலயா
C) ஜம்மு-காஷ்மீர்
D) கேரளா
விளக்கம்: 2010-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பதிவானது.
49) நம்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 5 முறை வறட்சி ஏற்பட்டுள்ளது.
50) உலகப்புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) ஏப்ரல் 21
B) ஏப்ரல் 22
C) மார்ச் 21
D) மார்ச் 23
விளக்கம்: உலக புவி நாள் ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்படுகிறது.
51) வாகை என்னும் திணை கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) ஆநிரை மீட்டல்
B) போரிடல்
C) வெற்றியின் அடையாளமாக சூட்டுவது
D) வெற்றி பெற்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது
விளக்கம்: வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.
52) தாது வருடப் பஞ்சம் எந்த ஆண்டில் ஏற்ப்பட்டது?
A) 1870-1880
B) 1876-1878
C) 1874-876
D) 1880-1882
விளக்கம்: 19-ம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தை தாது வருட பஞ்சம் (1876-1878) என்று இன்றும் நினைவு கூறுவர். இதை கண்டு மனம் பொறுக்காத மாயூரம் வேதநாயகம் தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார்.
53) ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
A) மத்தியப்பிரதேசம்
B) குஜராத்
C) மகாரஷ்டிரா
D) கர்நாடகா
விளக்கம்: குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றும், செம்மை நிற மேகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் மழையைக் கணிக்கின்றனர்.
54) நகரம் பட்டை தீட்டி யவெள்ளை வைரமாகிறது
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) கல்கி
B) அய்யப்ப மாதவன்
C) சிற்பி பாலசுப்ரமணியன்
D) ந.காமராசன்
விளக்கம்: நகரம் பட்டை தீட்டி யவெள்ளை வைரமாகிறது
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்.
55) மாயூரம் வேதநாயகம் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க.
A) மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக இருந்தார்
B) இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்
C) ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்
D) வடமொழி, பிரரெஞ்சு, இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளை கற்றிந்திருக்கிறார்.
விளக்கம்: மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக இருந்தார்
இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்
வடமொழி, பிரரெஞ்சு, இலத்தீன் முதலிய மொழிகளை கற்றிந்திருக்கிறார்.
56) கூற்றுகளை ஆராய்க.
1. பெயர்ச் சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது.
2. இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பெயர்ச் சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது.
2. இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
57) நெடுநல்வாடை பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இயற்றப்பட்டது.
2. இந்நூல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரால் இயற்றப்பட்டது.
3. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
4. இது 188 அடிகளைக் கொண்டது.
A) 1, 2 சரி
B) 1, 4 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இயற்றப்பட்டது.
2. இந்நூல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரால் இயற்றப்பட்டது.
3. இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
4. இது 188 அடிகளைக் கொண்டது.
58) பொருத்துக.
அ. புதுப்பெயல் – 1. புதுமழை
ஆ. ஆர்கலி – 2. தனிமை
இ. கொடுங்கோல் – 3. வளைந்த கோல்
ஈ. புலம்பு – 4. வெள்ளம்
A) 1, 4, 3, 2
B) 1, 2, 3, 4
C) 2, 1, 3, 4
D) 1, 4, 3, 2
விளக்கம்: புதுப்பெயல் – புதுமழை
ஆர்கலி – வெள்ளம்
கொடுங்கோல் – வளைந்த கோல்
புலம்பு – தனிமை
59) இனநிரை என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) இன + நிரை
B) இனம் + நிரை
C) இனிமை + நிரை
D) இன் + நிரை
விளக்கம்: இனநிரை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது இனம் + நிரை ஆகும். இது மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் என்ற விதிப்படி இனநிரை என்றானது.
60) 1977-ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார். இதன் மூலம் கீழ்க்காணும் எது நிறைவு செய்யப்பட்டது?
A) உணவுத் தேவை
B) எரிபொருள் தேவை
C) மண் அரிப்பு தடுத்தல்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: 1977 ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார். இதன் மூலம் பல ஆப்பிரிக்க பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர்.
61) பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன – இதில் பெயல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) வானம்
B) மழை
C) பனி
D) வெயில்
விளக்கம்: பெயல் என்றால் மழையை குறிக்கும். புதுப்பெயல் என்றால் புதுமழையை என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள் நூல் நெடுநல்வாடை ஆகும். இதன் ஆசிரியர் நக்கீரர்.
62) உத்தம சோழன் எழுதிய நூல்களில் பொருந்தாதது எது?
A) மனிதத்தீவுகள்
B) தொலைதூர வெளிச்சம்
C) கசக்கும் இனிமை
D) கனல்பூக்கள்
விளக்கம்: மனிதத் தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
63) கீழ்க்காணும் எந்த இடத்தில் ஒரே நாளில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பதிவானது?
A) ஜெய்சல்மார்
B) சிரபுஞ்சி
C) மௌசின்ராம்
D) லே
விளக்கம்: 2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பதிவானது.
64) கொடுங்கொல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) அன்மொழித்தொகை
D) பெயரெச்சம்
விளக்கம்: கொடுங்கோல் என்னும் சொல்லை பிரித்தால் கொடுமை + கோல் என்று வரும். இங்கு மை என்னும் விகுதி வந்துள்ளது. மை என்னும் எழுத்தும், பண்புப்பெயர் விகுதியான ஆன, ஆகிய என்பனவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால்அது பண்புப்பெயர் எனப்படும்.
65) கலங்கி என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) கலங் + இ
B) கலங்கு + இ
C) கல + இ
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்:கலங்கி=கலங்கு + இ. எனப்பிரிக்கலாம். கலங்கு – பகுதி. இ- வினையெச்ச விகுதி
66) ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்…. இதில் கொடுங்கோல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) செங்கோல்
B) வளைந்தகோல்
C) பகைவரை அழிக்கும் கோல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: கொடுங்கோல் என்பது இங்கு வளைந்த கோல் என்ற பொருள் தரும். அதாவது கால்நடை மேய்ப்பவர் வைத்திருக்கும் கோல். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும்.
67) சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள்
அழிந்த மாயத்தில் வருத்தம் தோய்கிறது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்ரமணியன்
C) சுரதா
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள்
அழிந்த மாயத்தில் வருத்தம்தோய்கிறது – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்
68) உத்தமசோழன் நடத்திய இதழின் பெயர் என்ன?
A) கனல் பூக்கள்
B) தொலைதூர வெளிச்சம்
C) குருவி மறந்த வீடு
D) கிழக்கு வாசல் உதயம்
விளக்கம்: உத்தம சோழன் (செல்வராஜ்) முதல்கல் என்ற கதையை எழுதினார். இது தஞ்சைச் சிறுகதைகள் என்னும் கதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சாரந்தவர். இவர் கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
69) நீர்வெளி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) உத்தமசோழன்
B) அய்யப்ப மாதவன்
C) தி.சு.நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியன்
விளக்கம்: இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வரும் அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும், மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
70) பழந்தமிழர்கள் ஒரு ஆண்டை எத்தனை பருவங்களாகப் பிரித்தனர்?
A) 4
B) 6
C) 2
D) 5
விளக்கம்: பழந்தமிழர்கள் ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்தனர். அவை,
1. கார்காலம் – ஆவணி, புரட்டாசி
2. கூதிர் அல்லது குளிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக்காலம் – மார்கழி, தை
4. பின்பனிக்காலம் – மாசி, பங்குனி
5. இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி
6. முதுவேனில் காலம் – ஆனி, ஆடி
71) இயற்கைக்கு திரும்பும் பாதை என்று நூலை எழுதியவர் யார்
A) மா.இராசமாணிக்கனார்
B) மாசானா ஃபுகோகோ
C) ப.ரவி
D) பிரபஞ்சன்
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானா ஃபுகோகா
சுற்றுச்சூழல் கல்வி – ப.ரவி
கருப்பு மலர்கள் – நா.காமராசன்
72) மாயூரம் வேதநாயகத்தின் காலம் என்ன?
A) 1820-1889
B) 1826-1889
C) 1828-1885
D) 1824-1889
விளக்கம்: மாயூரம் வேதநாயகத்தின் காலம் 1820 முதல் 1889 வரை ஆகும். இவர் 1805 முதல் 1861ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டார்.
73) முதல் கல் என்ற கதையை எழுதியவர் யார்?
A) செல்வராஜ்
B) சுரதா
C) அய்யப்ப மாதவன்
D) சிற்பி பாலசுப்ரமணியன்
விளக்கம்: உத்தம சோழன்(செல்வராஜ்) முதல்கல் என்ற கதையை எழுதினார். இது தஞ்சைச் சிறுகதைகள் என்னும் கதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சாரந்தவர்.
74) கீழ்க்காண்பனவற்றில் எது மொழியின் அடிப்படை பண்பு அல்ல?
A) எண்
B) இடம்
C) காலம்
D) திணை
விளக்கம்: திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படை பண்புகள் ஆகும். இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துபவதற்கும் உதவும்.
75) தமிழ்மொழியில் எவை திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன?
A) பெயர்ச்சொற்கள்
B) வினைச்சொற்கள்
C) மேற்காணும் எதுவுமில்லை
D) A மற்றும் B
விளக்கம்: திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படை பண்புகள் ஆகும். இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துபவதற்கும் உதவும். தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன.
76) கூற்றுகளை ஆராய்க.
1. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது.
2. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது.
2. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
77) நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ – இவ்வரிகளில் இடம்பெற்ற கண்ணி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) இளம்பெண்கள்
B) தலையில் சூடும் மாலை
C) இரண்டடி பாடல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர் நெடுநல்வாடை ஆகும். இதனை இயற்றியவர் நக்கீரர் ஆவார். இங்கு கண்ணி என்ற சொல்லின் பொருள் தலையில் சூடும் மாலை என்று பொருள்.
78) கூற்றுகளை ஆராய்க.
1. உலகமொழிகள் அனைத்திலும் வினைச்சொற்களே மிகுதி.
2. பெயர்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உலகமொழிகள் அனைத்திலும் பெயர்சொற்களே மிகுதி.
2. பெயர்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர்.
79) தலையசைத்து உதறுகிறது
மீதமான சொட்டுக்களை ஈரமான மரங்கள்
வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன – என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை நூல் எது?
A) குயில் பாட்டு
B) கோடையும் வசந்தமும்
C) பள்ளிப்பறவைகள்
D) அய்யப்ப மாதவன் கவிதைகள்
விளக்கம்: தலையசைத்து உதறுகிறது
மீதமான சொட்டுக்களை ஈரமான மரங்கள்
வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட
சங்கீதம் இசைக்கின்றன – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்.
80) பொருத்துக.
அ. குரங்குள் – 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ. விலங்குகள் – 2. மேய்ச்சலை மறந்தன
இ. பறவைகள் – 3. குளிரால் நடுங்கின
ஈ. பசுக்கள் – 4. மரங்களிலிருந்து வீழ்ந்தன
A) 1, 3, 4, 2
B) 3, 1, 4, 2
C) 3, 2, 1, 4
D) 2, 1, 3, 4
விளக்கம்: குரங்குகள் – குளிரால் நடுங்கின
விலங்குகள் – மேய்ச்சலை தவிர்த்தன
பறவைகள் – மரங்களிலிருந்து வீழ்ந்தன
பசுக்கள் – கன்றுகளைத தவிர்த்தன
81) கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க – இவ்வரிகளில் இடம்பெற்ற கவுள் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) பல்
B) கன்னம்
C) வாய்
D) குளிர்
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். இந்நூல் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர் இயற்றிய நூல். இங்கு கவுள் என்ற சொல்லின் பொருள் கன்னம் ஆகும்.
82) “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நன்னூல்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – தொல்காப்பியம். இதன் பொருள்: மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை, அவரல்லாத பிற அஃறிணை என்று கூறுகிறது.
83) எந்த ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார்?
A) 1970
B) 1977
C) 1981
D) 1984
விளக்கம்: 1977 ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார்.
84) 19-ம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தை கண்டு மனம் பொறுக்காத யார் தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார்?
A) பரிதிமாற்கலைஞர்
B) மறைமலைஅடிகளார்
C) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
D) பாரதியார்
விளக்கம்: 19-ம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தை தாது வருட பஞ்சம் என்று இன்றும் நினைவு கூறுவர். இதை கண்டு மனம் பொறுக்காத மாயூரம் வேதநாயகம் தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார்.
85) அய்யப்ப மாதவன் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் தொகுப்பை எழுதியுள்ளார்.
2. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர்
3. இதழியல், திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்.
4. இன்று என்ற கவிதைக் குறும்படத்தை வெளியிட்டுள்ளார்
A) 1, 2 சரி
B) 1, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் தொகுப்பை எழுதியுள்ளார்.
2. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர்
3. இதழியல், திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்.
4. இன்று என்ற கவிதைக் குறும்படத்தை வெளியிட்டுள்ளார்
86) ‘நீயே புருஷ மேரு……’ என்ற பாடலை இயற்றியவர் யார்?
A) சுப்ரமணிய பாரதியார்
B) சுத்தானந்த பாரதியார்
C) கோபாலகிருஷ்ண பாரதியார்
D) பாரதிதாசன்
விளக்கம்: 19-ம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சத்தை தாது வருட பஞ்சம் என்று இன்றும் நினைவு கூறுவர். இதை கண்டு மனம் பொறுக்காத மாயூரம் வேதநாயகம் தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், ‘நீயே புருஷ மேரு…….’ என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார்.
87) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை, பன்மை பாகுபாடு இல்லை.
2. தன்மையிலும், முன்னிலையிலும் ஆண்பால், பெண்பால் பாகுபாடு உண்டு.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை, பன்மை பாகுபாடு உண்டு
2. தன்மையிலும், முன்னிலையிலும் ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை.
88) முதல் கல் என்ற கதையை எழுதிய உத்தமசோழன் பிறந்த இடம் எது?
A) தீபங்குடி
B) தீவம்மாள் புரம்
C) நாட்டரசன் கோட்டை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: உத்தம சோழன்(செல்வராஜ்) முதல்கல் என்ற கதையை எழுதினார். இது தஞ்சைச் சிறுகதைகள் என்னும் கதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சாரந்தவர்.
89) மாமேயல் மறப்ப மந்தி கூரப்……. என்ற வரியில் இடம்பெற்ற மந்தி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) புலி
B) அறிவின்மை
C) குரங்கு
D) அறிவுடைமை
விளக்கம்: இவ்வரிகள் இடம் பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின என்பது இப்பாடலின் பொருள் ஆகும். இங்கு மந்தி என்பது குரங்குகளை குறிக்கும்.
90) கென்யாவில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் யார்?
A) நெல்சன் மண்டேலா
B) ஜாதுநாத் பயோங்
C) வாங்காரி மத்தாய்
D) ஜிநாத் கலிட்டா
விளக்கம்: வாங்காரி மத்தாய் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
91) மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர்
இன்னும் நான் வீட்டுச்சுவரில்
செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள்
வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன் – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணின்
B) பாரதியார்
C) சுரதா
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர்
இன்னும் நான் வீட்டுச்சுவரில்
செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள்
வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன் – இதில் நான் என்று குறிப்பிடப்படுபவர் அய்யப்ப மாதவன் ஆவார்.
92) உத்தமசோழன் என்பவர் கிழக்கு வாசல் உதயம் என்ற இதழை எத்தனை வருடங்களாக நடத்தி வருகிறார்?
A) 10
B) 7
C) 12
D) 15
விளக்கம்: உத்தம சோழன் (செல்வராஜ்) முதல்கல் என்ற கதையை எழுதினார். இது தஞ்சைச் சிறுகதைகள் என்னும் கதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சாரந்தவர். இவர் கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
93) பெரும்பாலான தொடர்களில் எதனை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்?
A) எழுவாய்
B) செய்படுபொருள்
C) பயனிலை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: 1. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது.
2. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
94) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது?
A) சூரிய ஒளிக்கதிர்
B) மழை மேகங்கள்
C) மழைத்துளிகள்
D) நீர்நிலைகள்
விளக்கம்: நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது மழைத்துளிகள் ஆகும்
95) சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை வெளியிட்டவர் யார்?
A) உ.வே.சா
B) மாயூரம் வேதநாயம்
C) மறைமலைஅடிகள்
D) கோபாலகிருஷ்ண பாரதியார்
விளக்கம்: 1805 முதல் 1861 ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரதம்’ என்ற நூலாக வெளியிட்டவர் – நீதிபதி மாயூரம் வேதநாயகம் ஆவார்.
96) நா.காமராசன் என்பவர் எழுதிய நூல் எது?
A) பத்துப்பாட்டு ஆராய்ச்சி
B) இயற்கைக்கு திரும்பும் பாதை
C) சுற்றுச்சூழல் கல்வி
D) கருப்பு மலர்கள்
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானா ஃபுகோகா
சுற்றுச்சூழல் கல்வி – ப.ரவி
கருப்பு மலர்கள் – நா.காமராசன்
97) நானென்பது வேறொருவன் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) உத்தமசோழன்
B) அய்யப்ப மாதவன்
C) தி.சு.நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியன்
விளக்கம்: இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வரும் அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர். இவர் இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும், மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
98) உத்தம சோழன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவரின் இயற்பெயர் செல்வராஜ்
2. இவரின் தஞ்சைச் சிறுகதைகள் என்ற கதைத் தொகுப்பில் முதல் கல் என்ற கதை இடம்பெற்றுள்ளது.
3. இவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர்.
4. கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்
A) 1, 2 சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவரின் இயற்பெயர் செல்வராஜ்
2. இவரின் தஞ்சைச் சிறுகதைகள் என்ற கதைத் தொகுப்பில் முதல் கல் என்ற கதை இடம்பெற்றுள்ளது.
3. இவர் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்.
4. கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர் – அய்யப்ப மாதவன் ஆவார்
99) மாமேயல் மறப்ப மந்தி கூரப்……. இவ்வரியில் கூர என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மிகுதி
B) கூர்மை
C) நடுங்கின
D) ஓடின
விளக்கம்: மா – விலங்கு, மேயல் – மேய்ச்சல், மந்தி – குரங்கு, கூர – நடுங்கின. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இதனை இயற்றியவர் நக்கீரர்.
100) கீழ்க்காணும் எது பால்பகுப்பைக் காட்டும் விகுதி அல்ல?
A) ஆள்
B) ஆன்
C) அர்
D) அது
விளக்கம்: பயனிலை விகுதிகளான ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியவை பால்பகுப்பைக் காட்டுகின்றன.
101) வங்காரி மத்தாய் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A) ஈரான்
B) ஈராக்
C) ஆப்பிரிக்கா
D) கென்யா
விளக்கம்: வங்காரி மத்தாய் கென்ய நாட்டைச் சார்ந்தவர் ஆவார். 1977ஆம் ஆண்டு தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
102) ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் அமைப்புகளையும் தெரிந்திருப்பதே என்று மொழியின் இலக்கணம் வகுத்தது எது?
A) தமிழ் நடைக் கையேடு
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) நன்னூல்
விளக்கம்: ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் – தமிழ்நடைக் கையேடு.
103) வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார். இது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) அமில மழை
B) பசுமை இல்ல வாயு
C) காடுகள் அழிப்பு
D) உலக வெப்பமயமாதல்
விளக்கம்: 1977 ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார்.
104) கை ஏந்தி வாங்கிய துளிகள்
நரம்புகளுக்குள் வீணை
மீட்டிக் கொண்டிருக்கிறது
போன மழை திரும்பவும் வருமென்று – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அய்யப்ப மாதவன்
B) பாரதிதாசன்
C) பாவலரேறு பெருஞ்சித்தனார்
D) சிற்பி பாலசுப்ரமணியன்
விளக்கம்: கை ஏந்தி வாங்கிய துளிகள்
நரம்புகளுக்குள் வீணை
மீட்டிக் கொண்டிருக்கிறது
போன மழை திரும்பவும் வருமென்று – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்
105) இலக்கண முறைப்படி இடம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: இலக்கண முறைப்படி இடம் மூன்று வகைப்படும். அவை,
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை.
பெயர்ச்சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது. இடப்பாகுபாடு அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிடு பெயர்களிலும் வினைமுற்றுகளிலுமே வெளிப்படும்.
106) ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்…. இதில் ஆர்கலி என்ற சொல்லின் பொருள் என்ன?
A) உலகம்
B) மேகம்
C) வெள்ளம்
D) மழை
விளக்கம்: இதில் ஆர்கலி என்ற சொல்லின் பொருள் வெள்ளம் ஆகும்.
107) வங்காரி மத்தாய்க்கு 2004ஆம் ஆண்டு கீழ்க்காணும் எந்த காரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?
A) கென்யப் பெண்களின் வழிகாட்டி
B) மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்ததால்
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவமில்லை
விளக்கம்: கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004 ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
108) தமிழின் முதல் நாவல் எது?
A) நந்தனார் சரித்திரம்
B) பாஞ்சாலி சரித்திரம்
C) கண்ணகி சரித்திரம்
D) பிரதாப முதலியார் சரித்திரம்
விளக்கம்: தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும். அதனை எழுதியவர் நீதிபதி மாயூரம் வேதநாயகம் ஆவார். இவர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.
109) ப.ரவி என்பவர் எழுதிய நூல் எது?
A) பத்துப்பாட்டு ஆராய்ச்சி
B) இயற்கைக்கு திரும்பும் பாதை
C) சுற்றுச்சூழல் கல்வி
D) கருப்பு மலர்கள்
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானா ஃபுகோகா
சுற்றுச்சூழல் கல்வி – ப.ரவி
கருப்பு மலர்கள் – நா.காமராசன்.
110) கென்யாவில் வாங்காரி மத்தாய் எதன் மூலம் மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார்?
A) வெள்ளத் தடுப்பு இயக்கம்
B) சுற்றுத்சூழல் இயக்கம்
C) காடுகள் அழிப்பு இயக்கம்
D) பசுமை வளாக இயக்கம்
விளக்கம்: பசுமை வளாக இயக்கத்தின் மூலம் வாங்காரி மத்தாய் மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல்முறையாக தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்தலில் வாங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார்.
111) பொய்யா என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) பெயரெச்சம்
B) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C) வினையெச்சம்
D) ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
விளக்கம்: பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இச்சொல் முற்று பெறாமல் உள்ளது. கடைசி எழுத்து யா-ய் + ஆ. அ என்னும் எழுத்தில் முடிகிறது. இதனுடன் ஒரு பெயர்ச்சொல்லை சேர்ப்போம். பொய்யா விளக்கு. இப்போது பொருள் தருகிறது. எனவே முற்றுபெறாமல் இருக்கும் ஒரு சொல்லுடன் ஒரு பெயர் சொல்லை சேர்க்கும் போது பொருள் தந்தால் அது பெயரெச்சம் எனப்படும். அ(ஆ) என்னும் எழுத்தில் முடிந்தாலும் அது பெயரெச்சமாகும். இது எதிர்மறை பொருளைத் தருவதால் எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
112) ஐப்பசி _____________ கார்த்திகை________________ என்பது சொலவடை ஆகும்.
A) கனமழை, அடமழை
B) அடமழை, கனமழை
C) அடமழை, பனிமழை
D) கனமழை, பனிமழை
விளக்கம்: ஐப்பசி அடை மழை, கார்த்திகை கனமழை என்பது சொலவடையாகும். ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பதி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
113) எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து மாயூரம் வேதநாயகம் வெளியிட்டார்?
A) 1826-1889
B) 1805-1861
C) 1834-1884
D) 1810-1846
விளக்கம்: 1805 முதல் 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற பெயரில் நூலாக மாயூரம் வேதநாயகம் வெளியிட்டார்.
114) நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? என்று கூறியவர் யார்?
A) திருவள்ளுவர்
B) பாரதிதாசன்
C) பரிதிமாற்கலைஞர்
D) மாயூரம் வேதநாயகம்
விளக்கம்: கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம் என்று கூறியவர் – மாயூரம் வேதநாயகம்.
115) புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் புலம்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
A) புதுமழை
B) வெள்ளம்
C) தனிமை
D) வருத்தம்
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். இந்நூலை இயற்றியவர் நக்கீரர் ஆவார். இங்கு புலம்பு என்ற சொல்லின் பொருள் தனிமை ஆகும்.
116) தவறான பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) Platform – நடைமேடை
B) Train Track – இருப்புப்பாதை
C) Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
D) Metro Train – தலைநகரத் தொடர்வண்டி
விளக்கம்:Metro Train – மாநகரத் தொடர்வண்டி
117) வாங்காரி மத்தாய்க்கு எப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டது?
A) 2001
B) 2004
C) 2006
D) 2010
விளக்கம்: கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004 ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
118) மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்
பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியன்
B) பாரதிதாசன்
C) சுரதா
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்
பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்.
119) வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியம்
B) சுரதா
C) பாரதியார்
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் – கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய – மழை
எங்ஙனம் வந்ததாட தம்பி வீரா – பாரதியார்
120) புதுப்பெயல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) அன்மொழித்தொகை
D) பெயரெச்சம்
விளக்கம்: புதுப்பெயல் என்னும் சொல்லை பிரித்தால் புதுமை + பெயல் என்று வரும். இங்கு மை என்னும் விகுதி வந்துள்ளது. புது – புதுமை பெயல் – மழை. புதுமையான மழை என்று பொருள். மை என்னும் எழுத்தும், பண்புப்பெயர் விகுதியான ஆன, ஆகிய என்பனவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால்அது பண்புத்தொகை எனப்படும். இங்கு மை என்னும் விகுதியும், ஆன என்னும் பண்புபெயர் விகுதி மறைந்து வந்துள்ளது. எனவே இது பண்புத்தொகை ஆகும்.
121) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலே அமைந்துள்ளது.
2. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்கை இடத்தில் வரும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலே அமைந்துள்ளது.
2. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்கை இடத்தில் வரும்
122) ஒரு மொழியில் அடிப்படை அறிவு பற்றி தமிழ்நடைக் கையேடு இலக்கணம் வகுத்துள்ளது. இதில் கீழ்க்காணும் எது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
A) எழுத்து
B) பொருள்
C) வாக்கிய அமைப்பு
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் – தமிழ்நடைக் கையேடு
123) ஒவ்வொரு ஆண்டும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்ட நாடுகளைக் கணக்கெடுத்தால் கீழ்க்காணும் எந்த நாடு அந்த பட்டியலில் முன்னணியில் இல்லை?
A) இந்தியா
B) அமெரிக்கா
C) சீனா
D) ஜப்பான்
விளக்கம்: ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த உரையாடல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கணக்கெடுத்தால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
124) வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்?
A) பருவநிலை மாற்றம்
B) மணல் அள்ளுதல்
C) பாறைகள் இல்லாமை
D) நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்
விளக்கம்: வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதே ஆகும்.
125) தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ எத்தனை ஏரிகள் இருந்தன?
A) 25000
B) 50000
C) 75000
D) 100000
விளக்கம்: கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85 சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவையே. இதற்கு மணல் அள்ளுவதும் ஒரு காரணம் ஆகும். தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன.
126) 1977-ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி யார் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார்?
A) நெல்சன் மண்டேலா
B) வங்காரி மத்தாய்
C) ஜிதுநாத்
D) நாதுநாத் ஜிட்டா
விளக்கம்: 1977-ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தார்
127) உத்தம சோழன் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியன்
B) அய்யப்ப மாதவன்
C) செல்வராஜ்
D) மேற்காணும் யாவருமில்லை
விளக்கம்: உத்தம சோழன் என்று அழைக்கப்படுபவர் செல்வராஜ் ஆவார். இவர் முதல்கல் என்ற கதையை எழுதியவர். இது தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
128) மாயூரம் வேதநாயகம் இயற்றிய நூல்களில் பொருந்தாது எது?
A) சித்தாந்த மாலை
B) சர்வ சமய சமரசக் கீர்த்தனை
C) சுகுண சுந்தரி
D) திருவருள் அந்தாதி
விளக்கம்: 1805 முதல் 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற பெயரில் நூலாக மாயூரம் வேதநாயகம் வெளியிட்டார்.
இயற்றிய நூல்கள்: பெண்மதிமாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலியன.
129) ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் – என்ற வரியில் கோவலர் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) கடவுள்
B) இந்திரன்
C) ஆயர்
D) மக்கள்
விளக்கம்: ஆர்கலி – வெள்ளம் கொடுங்கோல் – வளைந்த கோல் கோவலர் – ஆயர். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். இதனை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.
130) வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்ய வானம் புதுப்பெயல் பொழிந்தென – இவ்வரிகளில் வையகம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மேகம்
B) புதுமழை
C) உலகம்
D) மலை
விளக்கம்: வையம், வையகம் என்றால் உலகம் என்பதை குறிக்கும். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை ஆகும். இந்நூலை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.
131) தன்மை பன்மையில் எத்தனை வகை உண்டு?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இருவகை உண்டு.
1. பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.
2. பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.
132) பேசப்படுபவன் அல்லது பேசப்படும் பொருள் – இதற்குப் பொருத்தமானது எது?
A) முன்னிலை
B) படர்க்கை
C) தன்மை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பேசுபவன் – தன்மை
முன்னிருந்து கேட்பவன் – முன்னிலை
பேசப்படுபவன் அல்லது பேசப்படும் பொருள் – படர்க்கை
133) கூற்றுகளை ஆராய்க
1. இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
2. அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
2. அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை.
134) வங்காரி மத்தாய் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவர் 1977 ஆம் ஆண்டு பசுமை வளாக இயக்கத்தை தோற்றவித்தார்.
2. இவர் கென்யா நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.
3. இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்க பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாக தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டினர்.
4. இவ்வியக்கம் ஆப்பிரிக்காவில் மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்த உதவியது.
A) 1, 2, 3 சரி
B) 1, 2 சரி
C) 2, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் 1977 ஆம் ஆண்டு பசுமை வளாக இயக்கத்தை தோற்றவித்தார்.
2. இவர் கென்யா நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.
3. இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்க பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாக தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டினர்.
4. இவ்வியக்கம் ஆப்பிரிக்காவில் மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்த உதவியது.
135) Platform என்பதன் தமிழாக்கம் என்ன?
A) நடைபாதை
B) இரயில் மேடை
C) நடைமேடை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: Platform – நடைமேடை
136) மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப்பயணம்
காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியன்
B) சுரதா
C) அய்யப்ப மாதவன்
D) பாரதிதாசன்
விளக்கம்: மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப்பயணம்
காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம் – என்ற வரிகள் இடம்பெற்ற கவிதை பிறகொரு நாள் கோடை என்பதாகும். இக்கவிதை அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் கவிதை தொகுப்பிலிருந்து தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அய்யப்ப மாதவன் ஆவார்
137) Level Crossing என்பது எதைக் குறிக்கும்?
A) நடைமேடை
B) தொடர்வண்டி வழிக்குறி
C) இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
138) பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
A) ப.ரவி
B) நா.காமராசன்
C) பிரபஞ்சன்
D) மா.இராசமாணிக்கனார்
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் மா.இராசமாணிக்கனார் ஆவார்
139) மாமேயல் மறப்ப மந்தி கூரப்……. இவ்வரியில் மேயல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மேடு
B) மேய்ச்சல்
C) நடுங்கின
D) ஓடின
விளக்கம்: மா – விலங்கு, மேயல் – மேய்ச்சல், மந்தி – குரங்கு, கூர – நடுங்கின. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் நெடுநல்வாடை. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இதனை இயற்றியவர் நக்கீரர்.
140) சுகுண சுந்தரி என்ற நூலை எழுதியவர் யார்?
A) உ.வே.சா
B) மாயூரம் வேதநாயகம்
C) மறைமலைஅடிகள்
D) கோபாலகிருஷ்ண பாரதியார்
விளக்கம்: பெண்மதி மலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களை எழுதியவர் நீதிபதி மாயூரம் வேதநாயகம் ஆவார்.
141) பொருத்துக.
அ. மா – 1. தலையில் சூடும் மாலை
ஆ. கவுள் – 2. தனிமை
இ. கண்ணி – 3. கன்னம்
ஈ. புலம்பு – 4. விலங்கு
A) 4, 3, 2, 1
B) 4, 2, 1, 3
C) 4, 3, 1, 2
D)1, 4, 3, 2
விளக்கம்: மா – விலங்கு
கவுள் – கன்னம்
கண்ணி – தலையில் சூடும் மாலை
புலம்பு – தனிமை
142) கீழ்க்காணும் நூல்களில் பிரபஞ்சனால் எழுதப்பட்ட நூல் எது?
A) பத்துப்பாட்டு ஆராய்ச்சி
B) இயற்கை;கு திரும்பும் பாதை
C) கருப்பு மலர்கள்
D) வானம் வசப்படும்
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானா ஃபுகோகோ
கருப்பு மலர்கள் – நா.காமராசன்
வானம் வசப்படும் – பிரபஞ்சன்