General Tamil

12th Tamil Unit 1 Questions

81) பாரதியின் கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

A) டாக்டர் பொற்கோ

B) பாரதிதாசன்

C) ந.பிச்சமூர்த்தி

D) ரா.அ.பத்மநாபன்

விளக்கம்: பாரதியின் கடிதங்கள் என்ற நூலை எழுதியவர் ரா.அ.பத்மநாபன் ஆவார்.

82) Subscripition என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) புதிப்பித்தல்

B) அங்கீகரித்தல்

C) உறுப்பினராதல்

D) உறுப்பினர் கட்டணம்

விளக்கம்: Subscripition என்பதன் தமிழாக்கம் உறுப்பினர் கட்டணம் என்பதாகும்.

83) வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம்_________________ஆக மாறும்?

A) ளகரமாக

B) றகரமாக

C) ணகரமாக

D) டகரமாக

விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு, தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை – சொற்றுணை.

84) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

2. இவர் இயற்றிய இளந்தமிழே என்னும் கவிதை இவரின் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

3. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

4. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

A) 1, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

2. இவர் இயற்றிய இளந்தமிழே என்னும் கவிதை இவரின் நிலவுப்பூ என்னும் கவிதை நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

3. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

4. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

85) பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது – என்று பெண்ணியம் போற்றியவர் யார்?

A) பெரியார்

B) அண்ணா

C) பாரதியார்

D) மருதகாசி

விளக்கம்: பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது – பாரதியார்.

86) சூரிய நிழல் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

A) வாணிதாசன்

B) பாரதியார்

C) நடராஜன்

D) சிற்பி பாலசுப்ரமணியம்

விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,

கவிதை நூல்கள்:

1. ஒளிப்பறவை

2. சர்ப்பயாகம்

3. சூரிய நிழல்

4. ஒரு கிராமத்து நதி

5. பூஜ்யங்களின் சங்கிலி

உரைநடை நூல்கள்:

1. மலையாளக் கவிதை

2. அலையும் சுவடும்

87) கூற்றுகளை ஆராய்க.

1. ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துக்களுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று அல்லது கள் விகுதி அல்லது வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்பதில்லை.

2. ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வரும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துக்களுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று அல்லது கள் விகுதி அல்லது வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும். நாய்கள், தேய்க, தாய்சேய், ஊர்க, ஊர்கள், ஊர்சூழல், செல்க, கால்கள், செல்கணம், வாழ்க, வாழ்தல், தோள்கள்.

2. ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. கண்டு என்று வரும். கன்டு என்று வருவதில்லை. மன்றம் என்று வரும் மண்றம் என்று வருவதில்லை.

88) உய்யும் வழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) வள்ளலார்

B) விவேகானந்தர்

C) இராமகிருஷ்ணர்

D) பரலி.சு.நெல்லையப்பர்

விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்

89) பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தொல்காப்பியம்

B) திருக்குறள்

C) நன்னூல்

D) அகத்தியம்

விளக்கம்: பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே – நன்னூல்(பவணந்தி அடிகள்).

90) Fiction என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

A) புனைவு

B) காப்பகம்

C) இணைத்தல்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: Fiction என்ற சொல்லின் தமிழாக்கம் புனைவு என்பதாகும்.

காப்பகம் – Archive

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin