12th Tamil Unit 1 Questions
71) சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதைகள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை?
A) ஆங்கிலம்
B) கன்னடம்
C) தெலுங்கு
D) மராத்தி
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
72) நாம் வலிமை பெறுவதற்கு வழி என்று பாரதியார் எதை கூறுகிறார்?
A) நம்மிலும் மெலியாருக்கு இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதல்
B) நம்மிலும் வலியாருக்கு இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதல்
C) நமக்கு சமமானவர்களோடு நாம் மோதி வெற்றி பெறுதல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: நெஞ்சம் இளகி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை – பாரதியார்
73) கூற்றுகளை ஆராய்க.
1. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வரும்.
2. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா.
2. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி என்றெழுதுவது பிழை.
74) அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று எது?
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
விளக்கம்: தண்டியலங்காரம் என்பது அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் தண்டி ஆவார்.
75) தி.சு.நடராசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
2. கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
2. கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
76) அலையும் சுவடும் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) வாணிதாசன்
C) ந.காமராசன்
D) சிற்பி பாலசுப்ரமணியம்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
77) தனி + ஆழி என்னும் சொல்லை கீழக்காணும் எந்த விதியைப் பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) தனிகுறில் முன் ஒற்றுவரின் இரட்டும்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: தனியாழி – தனி + ஆழி.
விதி: இ ஈ ஐ வழி யவ்வும் – தனி + ய் + ஆழி
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – தனியாழி.
78) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) திருச்சி
C) கன்னியாகுமரி
D) சென்னை
விளக்கம்: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலியில் உள்ளது. இங்கு தி.சு.நடராசன் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
79) தனிச்சொல்லில் ஆய்த எழுத்து வரும்போது அது எத்தனை எழுத்து கொண்டதாக அமையும்?
A) 2
B) 4
C) 3
D) 5
விளக்கம்: ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும். அஃது, எஃகு, கஃசு.
80) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் என்ற வரிகளில் தமிழ் கீழ்க்காணும் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?
A) சந்திரன்
B) பெண்
C) சூரியன்
D) மலை
விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தண்டியலங்காரம் ஆகும். இவ்வரிகளில் சூரியன் மலைகளுக்கு இடையில் தோன்றி உலகத்தின் புற இருளை அகற்றுகிறது என்றும், தமிழ் பொதிகை மலையில் தோன்றி மக்களின் அக இருளை அகற்றுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வரிகளில் தமிழ் சூரியனோடு ஒப்பிடப்பட்டுள்ளது.