12th Tamil Unit 1 Questions
61) மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள் – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) இளந்தமிழே
B) மலையாளக் கவிதை
C) அலையும் சுவடும்
D) சூரிய நிழல்
விளக்கம்: மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே நீயுள்ளாய் முன்னம் ஓர்நாள் – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூலாகும். இக்கவிதை நூலை இயற்றியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்
62) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்பதற்கு பொருத்தமானது எது?
A) உலகத்தின் புற இருளை அகற்றுவது
B) மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவது
C) A மற்றும் B
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் தண்டியலங்காரம் ஆகும். இதில் ஏங்கொலிநீர் என்றால் இருபொருள் தருமாறு பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏங்கொலிநீர் – கடலால் சூழப்பட்ட
ஏங்கொலிநீர் – மக்களின் அறியாமை.
63) உயர்ந்தோர் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) உயர்ந்து
B) உயர்
C) உயர்வு
D) உயர்ந்த
விளக்கம்: உயர்ந்தோர் என்ற சொல்லின் வேர்ச்சொல்(பகுதி) – உயர்.
வேர்ச்சொல் பகுதி என்றும் அழைக்கப்படும்.
வேர்ச்சொல் என்பது அந்த சொல்லின் பொருளை உணர்த்த வேண்டும்.
கட்டளைச் சொல்லாக இருக்க வேண்டும்.
இங்கு உயர் என்பது உயர்வு என்ற பொருளை குறிப்பதோடு, கட்டளைச் சொல்லாகவும் அமைகிறது.
64) கூற்றுகளை ஆராய்க.
1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. காக்கை, பச்சை, உப்பு.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை.
65) பூஜ்யங்களின் சங்கிலி என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) ந.காமராசன்
C) சுரதா
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
66) தி.சு.நடராசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்
2. இவர் தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியுள்ளார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்
2. இவர் தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியுள்ளார்
67) தமது இல்லத்தில் அச்சுச்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டவர் யார்?
A) உ.வே.சா
B) பரிதிமாற்கலைஞர்
C) ஆறுமுக நாவலர்
D) வள்ளலார்
விளக்கம்: ஆறுமுக நாவலர் தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். இவர் புராண நூல்களை வசனமான எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
68) நடைபெற்றியலும் என்றும் நடைநவின்றொழுகும் என்றும் சில சொற்றொடர்களை எந்த நூல் கையாண்டிருக்கிறது?
A) அகத்தியம்
B) நன்னூல்
C) திருக்குறள்
D) தொல்காப்பியம்
விளக்கம்: ‘நடைபெற்றியலும்’(கிளவியாக்கம், 26) என்றும், ‘நடைநவின்றொழுகும்’(செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
69) ஆங்கவற்றுள் என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) ஆங்க + அவற்றுள்
B) ஆ + அவற்றுள்
C) ஆங்கு + அவற்றுள்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்.
விதி: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – ஆங்க் + அவற்றுள்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஆங்கவற்றுள்
70) பல் + நூல் என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பல்நூல்
B) பலநூல்
C) பன்னூல்
D) மேற்காணும் எதுமில்லை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு, நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் – பன்னூல்.