12th Tamil Unit 1 Questions
51) முரசுப்பாட்டு என்ற நூலை பதிப்பித்தவர் யார்?
A) பாரதியார்
B) உ.வே.சா
C) பரலி.சு.நெல்லையப்பர்
D) பாரதிதாசன்
விளக்கம்: பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்
52) சிற்பி பாலசுப்ரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
2. பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர்.
3. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.
4. அலையும் சுவடும் என்ற நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெறவில்லை
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) 1, 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
2. பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர்.
3. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.
4. அலையும் சுவடும் என்ற நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெறவில்லை
ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
53) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஏங்கொலிநீர் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நிலத்தால் சூழப்பட்ட
B) மக்களால் சூழப்பட்ட
C) கடலால் சூழப்பட்ட
D) நீரால் சூழப்பட்ட
விளக்கம்: ஏங்கொலிநீர் என்றால் கடலால் சூழப்பட்ட என்று பொருள். மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று என்பது இப்பாடலடியின் பொருள் ஆகும்.
54) ஆறுமுக நாவலருக்கு பொருந்தாதது எது?
A) அச்சுக்கூடம் நிறுவுதல்
B) கண்டன நூல்கள் படைத்தல்
C) சைவ சமயச் சொற்பொழிவு
D) ஆங்கிலநூல் தமிழாக்கம்
விளக்கம்: ஆறுமுக நாவலர் தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
55) ஆய்த எழுத்து பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாக வரும்.
3. தனிக்குறிலை அடுத்தும் வரும்
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாக வரும்.
3. தனிக்குறிலை அடுத்தும் வரும்
56) காமராசர் பல்லைகழகம் எங்கு உள்ளது?
A) திருநெல்வேலி
B) விருதுநகர்
C) கோயம்புத்தூர்
D) மதுரை
விளக்கம்: காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் உள்ளது. இங்கு தி.சு.நடராசன் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
57) ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்களில் எது சொல்லின் தொடக்கமாக வரும்?
A) ர
B) ற
C) ந
D) ல
விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
58) வெங்கதிர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) வினைத்தொகை
B) அன்மொழித்தொகை
C) பண்புத்தொகை
D) வினையெச்சம்
விளக்கம்: வெங்கதிர் என்ற சொல்லை வெம்மை + கதிர் என்று பிரிக்கலாம். வெம்மை ஆன கதிர் என்று பொருள் தருகிறது. ஒரு சொல்லை பிரிக்கும்போது மை என்னும் விகுதி வருவதும், ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதி மறைந்து வந்தால் அது பண்புத்தொகை எனப்படும்.
59) நாட்டுப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர் யார்?
A) பாரதியார்
B) பரலி.சு.நெல்லையப்பர்
C) பாரதிதாசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு – பாரதியார். மேற்காணும் நூலை பதிப்பித்தவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
60) கூற்றுகளை ஆராய்க.(சிற்பி பாலசுப்ரமணியம்)
1. இவர் ஒரு கிராமத்து நதி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவர் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
2. இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.