12th Tamil Unit 1 Questions
41) ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்களில் பொருந்தாதது எது?
A) திருக்குறள் பரிமேலழகர் உரை
B) சூடமணி நிகண்டு
C) நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை
D) வள்ளலாரின் திருவருட்பா
விளக்கம்: ஆறுமுக நாவலர் பதிப்பித்த நூல்கள்:
1. திருக்குறள் பரிமேலழகர் உரை
2. சூடாமணி நிகண்டு
3. நன்னூல் – சங்கர நமச்சிவாயவர் விருத்தியுரை
42) நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி – என்று கூறியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) ந.காமராசன்
D) கவிமணி
விளக்கம்: நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி – பாரதியார்.
43) ஆறுமுக நாவலர் எங்கு பிறந்தார்?
A) யாழ்ப்பாணம்
B) திருநெல்வேலி
C) கொழும்பு
D) திருச்சி
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்
44) சிற்பி பாலசுப்ரமணியன் எந்த நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
A) ஒளிப்பறவை
B) நிலவுப்பூ
C) ஒரு கிராமத்து நதி
D) பூஜ்யங்களின் சங்கிலி
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியன் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார். இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
45) ஆறுமுக நாவலர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
2. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினர்
3. தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
4. திருவாவடுதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தினை வழங்கினார்.
5. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்
A) 1, 4, 5 சரி
B) 1, 2, 3 சரி
C) 1, 2, 5 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
2. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினர்
3. தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
4. திருவாவடுதுறை ஆதினத்தார் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தினை வழங்கினார்.
5. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்
46) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஓங்கல் என்று குறிப்பிடப்படுவது எது?
A) உயர்ந்த
B) மலை
C) அலை
D) கடல்
விளக்கம்: ஓங்கல் என்றால் மலை. ஓங்கலிடை என்றால் மலைகளுக்கு இடையே தோன்றி என்று பொருள்.
47) சொல் + துணை என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) சொல்துணை
B) சொற்றுணை
C) சொற்றுனை
D) சொல்லுணை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு, தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை – சொற்றுணை
48) ஆணும் பெண்ணும் ஓருபயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது – என்று குறிப்பிட்டவர் யார்?
A) பாரதியார்
B) ஸ்ரீ நெல்லையப்பர்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: ஆணும் பெண்ணும் ஓருபயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது என்று பாரதியார் ஸ்ரீநெல்லையப்பருக்கு தமது கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கிறார்.
49) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
A) உன்னையல்லால் – உன்னை + அல்லால்
B) செந்தமிழே – செம்மை + தமிழே
C) வானமெல்லாம் – வான + மெல்லாம்
D) செம்பரிதி – செம்மை + பரிதி
விளக்கம்: உன்னையல்லால் – உன்னை + அல்லால்
செந்தமிழே – செம்மை + தமிழே
வானமெல்லாம் – வானம் + எல்லாம்
செம்பரிதி – செம்மை + பரிதி
50) எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) ஒரு கிராமத்து நதி
B) ஒளிப்பறவை
C) சர்ப்பயாகம்
D) நிலவுப்பூ
விளக்கம்: எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பாகும். இதனை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்.