12th Tamil Unit 1 Questions
31) சிற்பி பாலசுப்ரமணியம் கீழ்க்காணும் எதற்குப் பொருத்தமானவர்?
A) சாகித்திய அகாதெமியின் தலைவர்
B) சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்
C) உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
D) உலக தமிழ்ச்ச்சங்த்தின் செயற்குழு உறுப்பினர்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் சாகித்ய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
32) புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் – என்று கூறியவர் யார்?
A) பாரதிதாசன்
B) சுப்புரத்தின தாசன்
C) வாணிதாசன்
D) பாரதியார்
விளக்கம்: தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் – பாரதியார்.
33) இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது________அணி?
A) வேற்றுமை
B) பொருள் வேற்றுமை
C) வேற்றுமை வைப்பணி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
34) தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) பாரதியார்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்பமகாதேவன்
விளக்கம்: தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் தி.சு.நடராசன் ஆவார். திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
35) தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன
கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது – என்று எழுதியவர் யார்?
A) கண்ணதாசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) கவிமணி
D) பாரதியார்
விளக்கம்: தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன
கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது – பாரதியார்
36) கூற்றுகளை ஆராய்க.
1. உயிரெழுத்துகள் 12. அவை குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
2. மெய்யெழுத்துக்கள் 18. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
3. உயிர்மெய் எழுத்துக்கள் 216 (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126).
4. ஆய்தம் 1
A) 1, 2, 4 சரி
B) 2, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. உயிரெழுத்துகள் 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
2. மெய்யெழுத்துக்கள் 18. வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
3. உயிர்மெய் எழுத்துக்கள் 216(உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126).
4. ஆய்தம் 1
37) இலாத என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
A) பெயரெச்சம்
B) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
C) வினையெச்சம்
D) இடைக்குறை
விளக்கம்: இலாத – இடைக்குறை. இலாத என்பது இல்லாத என்ற பொருளை தருகிறது. இங்கு ல் என்ற எழுத்து வரவில்லை. எனவே இல்லாத என்பதன் இடைக்குறை ஆகும்
38) வானம + எல்லாம் என்ற சொல் கீழ்க்காணும் எந்த விதிப்படி வானமெல்லாம் என்று கிடைக்கும்?
A) உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) மகரஈற்றுப் புணர்ச்சி
D) A மற்றும் B
விளக்கம்: வானமெல்லாம் என்ற சொல்லை பிரித்து எழுதுக்கிடைப்பது வானம் + எல்லாம்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வானமெல்லாம் எனக் கிடைக்கும்.
39) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
A) தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
B) நெல்லூர் அரிசி – டாக்டர் பொற்கோ
C) சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
D) காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
விளக்கம்: தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
நெல்லூர் அரிசி – அகிலன்
சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
40) சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ந.காமராசன்
D) கண்ணதாசன்
விளக்கம்: முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்