General Tamil

12th Tamil Unit 1 Questions

21) கூற்றுகளை ஆராய்க.

1. ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது.

2. மெல்லின எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக வராது.

3. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய் வரும்.

4. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின இன மெய் வராது.

A) 1, 2, 4 சரி

B) 1, 2 மட்டும் சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது. டமாரம், றப்பர்.

2. மெல்லின எழுத்துக்கள் சொல்லின் தொடக்கமாக வராது

3. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய் வரும். தக்கை, பச்சை, பட்டம், பத்து, தப்பு, கற்று

4. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின இன மெய் வரும். தங்கை, இஞ்சி, பண்டு, பந்து, பாம்பு, கன்று.

22) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.

2. வல்லின மெய்யோடு சொல் முடியாது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. அப்படி வரின் தமிழில்லை. க்ரீடம், ப்ரியா – வடமொழி. 2. க்ளிஷே – ஆங்கிலம்

2. வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று. பார்க், பன்ச், பட், போத், டப் போன்றவை தமிழில்லை.

23) சர்ப்பயாகம் என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்ரமணியம்

B) நா.காமராசன்

C) சுரதா

D) பாரதியார்

விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,

கவிதை நூல்கள்:

1. ஒளிப்பறவை

2. சர்ப்பயாகம்

3. சூரிய நிழல்

4. ஒரு கிராமத்து நதி

5. பூஜ்யங்களின் சங்கிலி

உரைநடை நூல்கள்:

1. மலையாளக் கவிதை

2. அலையும் சுவடும்

24) வானமெல்லாம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) வான + மெல்லாம்

B) வானம் + எல்லாம்

C) வான் + எல்லாம்

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: வானமெல்லாம் என்ற சொல்லை பிரித்து எழுதுக்கிடைப்பது வானம் + எல்லாம்.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வானமெல்லாம் எனக் கிடைக்கும்

25) ஆறுமுக நாவலருக்கு பொருந்தாதது எது?

A) தமிழ்நூல் பதிப்பு

B) உரைநடை ஆக்கம்

C) பாடசாலை நிறுவுதல்

D) நூல்கள் மொழிபெயர்ப்பு

விளக்கம்: ஆறுமுக நாவலர் தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

26) கவிதையெனும் மொழி என்ற நூலை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) தி.சு.நடராசன்

C) பாரதியார்

D) அய்யப்ப மகாதேவன்

விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:

1. கவிதையெனும் மொழி

2. தமிழ் அழகியல்

3. தமிழின் பண்பாட்டு வெளிகள்

4. திறனாய்வுக்கலை

27) சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) கவிஞர்

B) பதிப்பாசிரியர்

C) மொழிபெயர்ப்பாளர்

D) பேராசிரியர்

விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

28) கூற்றுகளை ஆராய்க

1. எந்தத் தொன்மையான மொழியும் சமிஞ்கையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.

2. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.

3. இதனையே அந்த பனுவலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. எந்தத் தொன்மையான மொழியும் சமிஞ்கையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.

2. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.

3. இதனையே அந்த பனுவலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

29) ஆசிரிய நடைத்தே______ ஏனை

வெண்பா நடைத்தே______ – விடுபட்ட இடத்தை பூர்த்தி செய்க.

A) காஞ்சி, கலி

B) வஞ்சி, கலி

C) ஆசிரிய, வெண்பா

D) மேற்காணும் எதுவுமில்லை

விளக்கம்: ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடைத்தே கலி(செய் 107) – தொல்காப்பியம்.

30) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் முதலில் துணையாசிரியராக இருந்து பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்?

A) சூரியோதயம்

B) கர்மயோகி

C) குயில்

D) தேசபக்தன்

விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin