12th Tamil Unit 1 Questions
201) தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) செம்பரிதி – பண்புத்தொகை
B) சிவந்து – வினையெச்சம்
C) வியர்வைவெள்ளம் – உவமை
D) முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
விளக்கம்: செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
சிவந்து – வினையெச்சம்
வியர்வைவெள்ளம் – உருவகம்
முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
202) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் கீழ்க்காணும் எம்மொழியில் புலமை பெறவில்லை?
A) தமிழ்
B) வடமொழி
C) ஆங்கிலம்
D) சிங்களம்
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
203) தம்பி – நான் ஏது செய்வேனடா
தம்பி – உள்ளமே உலகம்
ஏறு ஏறு ஏறு மேலே மேலே மேலே – என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) சிற்பி பாலசுப்பிரமணியம்
விளக்கம்: தம்பி – நான் ஏது செய்வேனடா
தம்பி – உள்ளமே உலகம்
ஏறு ஏறு ஏறு மேலே மேலே மேலே – பாரதியார்
204) பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது – என்று பெண்ணியம் பற்றி எழுதியவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) பாரதியார்
D) மருதகாசி
விளக்கம்: பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது – பாரதியார்.
205) கூற்றுகளை ஆராய்க.
1. உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் – 70
2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் – 146
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் – 90
2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் – 126
206) அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) சிற்பி பாலசுப்பிரமணியம்
D) வாணிதாசன்
விளக்கம்: அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்
207) தவறான ஒன்றை தெரிவு செய்க
A) கல் + சிலை – கற்சிலை
B) கடல் + கரை – கடற்கரை
C) பல் + முகம் – பன்முகம்
D) மக்கள் + பேறு – மக்கள்பேறு
விளக்கம்: மக்கள் + பேறு – மக்கட்பேறு
208) பின்வருவனவற்றில் எது தமிழ்ச் சொல்?
A) க்ரீடம்
B) ப்ரியா
C) க்ளீஷே
D) காட்சி
விளக்கம்: மேற்காண்பனவற்றில் காட்சி என்பதே தமிழ்ச் சொல் ஆகும். க்ரீடம், ப்ரியா – வடமொழிச் சொல். க்ளீஷே – ஆங்கிலம்.
தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை.
209) சரியான ஒன்றை தெரிவு செய்க.
A) கன்டு
B) மண்றம்
C) கர்மம்
D) நிருவாகம்
விளக்கம்: மேற்காண்பனவற்றில் நிருவாகம் என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
210) பிழையான தொடரைக் கண்டுபிடி.
A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விளக்கம்: காலையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.