General Tamil

12th Tamil Unit 1 Questions

191) வியர்வைவெள்ளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

A) உவமைத்தொகை

B) உருவகம்

C) வினைமுற்று

D) பெயரெச்சம்

விளக்கம்: வியர்வைவெள்ளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு – உருவகம் ஆகும். இங்கு வியர்வை என்ற சொல் வெள்ளம் என்ற சொல்லுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. வியர்வை வெள்ளம் போல வந்தது என்பது பொருள். உவமை பின்னும் உவமிக்கப்படும் பொருள் முன்னும் வந்தால் அது உருவகம் எனப்படும்.

192) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு கிராமத்து நதி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

2. இவருடைய கவிதைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்படவில்லை

3. இவர் இயற்றிய ஒளிப்பறவை, சர்ப்பயாகம் போன்றவை கவிதை நூல்களாகும்.

4. இலக்கியச் சிந்தனை என்பது உரைநடை நூலாகும்

A) 1, 2 தவறு

B) 1, 3 தவறு

C) 2, 4 தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. ஒரு கிராமத்து நதி என்னும் கவிதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

2. இவருடைய கவிதைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.

3. இவர் இயற்றிய ஒளிப்பறவை, சர்ப்பயாகம் போன்றவை கவிதை நூல்களாகும்.

4. இலக்கியச் சிந்தனை என்பது உரைநடை நூலாகும்

193) கூற்றுகளை ஆராய்க.

1. உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.

2. உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.

2. உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்

194) தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக – என்று எழுதியவர் யார்?

A) கண்ணதாசன்

B) அண்ணா

C) பாரதியார்

D) திரு.வி.க

விளக்கம்: தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக – பாரதியார்

195) வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் ____________திரியும்.

A) ளகரமாக

B) றகரமாக

C) ழகரமாக

D) னகரமாக

விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.

196) இலக்கியச் சிந்தனை என்னும் உரைநடை நூலை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) நா.காமராசன்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

விளக்கம்: இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதைகள், அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார்.

197) வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ____________திரியும்.

A) ளகரமாக

B) றகரமாக

C) ணகரமாக

D) டகரமாக

விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. நாள் + மீன் – நாண்மீன்.

198) முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) ந.காமராசன்

D) கண்ணதாசன்

விளக்கம்: முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே

அளப்பரிய பொருள் கூட்டி

சொற்சங்க மாகச்

சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம்

அமைத்த பெருமாட்டி – கண்ணதாசன்

199) வேற்றுமைப்புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம்_________________ஆக மாறும்?

A) ளகரமாக

B) றகரமாக

C) ணகரமாக

D) னகரமாக

விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு, நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் – பன்னூல்.

200) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்வு செய்க.

A) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

B) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

C) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

D) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

விளக்கம்: அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin