12th Tamil Unit 1 Questions
11) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
A) அகத்தியர்
B) பாரதியார்
C) பாரதிதாசன்
D) தண்டி
விளக்கம்: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – தண்டியலங்காரம்.
இதனை இயற்றியவர் தண்டி ஆவார்
12) கூற்று: ப்ரியா, க்ரீடம் என்பது வடமொழி சொற்கள்
காரணம்: தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. அப்படி வரின் அது தமிழில்லை.
A) கூற்று தவறு, காரணம் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துக்கள் வருவதில்லை. வரின் தமிழில்லை.
க்ரீடம், ப்ரியா – வடமொழி
க்ளிஷே – ஆங்கிலம்
13) வம்சமணி தீபிகை என்னும் நூல் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) பாரதியார் வரலாறு
B) கவிகேசரி சாமி தீட்சிதர் வரலாறு
C) எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
D) இளசை மணி என்பவரின் வரலாறு
விளக்கம்: வம்சமணி தீபிகை என்பது எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு ஆகும். இதனை கவிகேசரி சாமி தீட்சிதர் 1879ல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சி செய்த வெங்டேசுர எட்டப்பருக்கு 6.8.1919-இல் கடிதம் எழுதினார்.
14) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) Archive – புனைவு
B) Biography – வாழ்க்கை வரலாறு
C) Manuscript – கையெழுத்துப் பிரதி
D) Bibliography – நூல் நிரல்
விளக்கம்: Bibliography – வாழ்க்கை வரலாறு
Archive – காப்பகம்
Manuscript – கையெழுத்துப் பிரதி
Bibliography – நூல் நிரல்
15) தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது – என்று கூறியவர் யார்?
A) காமராசர்
B) பாரதியார்
C) அண்ணா
D) பாரதிதாசன்
விளக்கம்: தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது – பாரதியார்
16) மொழி சார்ந்த கவிதை கீழ்க்காணும் எதனோடு பிறக்கிறது?
A) இசை
B) இசைக்கருவி
C) சமிக்ஞை மற்றும் இசை
D) A மற்றும் B
விளக்கம்: எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
17) பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்களை ஆக்கியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) மாயூரம் வேதநாயகம்
D) ஆறுமுக நாவலர்
விளக்கம்: திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாடல் நூல்கள் ஆறுமுக நாவலரால் ஆக்கப்பட்டன.
18) தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக் கொள்க – என்று கூறியவர் யார்?
A) வாணிதாசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) பாரதிதாசன்
விளக்கம்: உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் – தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும். தமிழ், தமிழ், தமிழ் – என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க – பாரதியார்
19) அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலேட்டப் புக்குழி – என்று கூறியவர் யார்?
A) ஆறுமுக நாவலர்
B) பரிதிமாற்கலைஞர்
C) பாரதியார்
D) மறைமலைஅடிகள்
விளக்கம்: அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலேட்டப் புக்குழி – ஆறுமுக நாவலர்.
வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குச் சென்ற ஆறுமுக நாவலர் ஆங்கிலத்தில் சாட்சி சென்னார். ஆனால் நீதிபதி மொழிப்பெயர்ப்பாளர் தனக்கு இருப்பதால் தமிழிழேயே சாட்சி கூறுங்கள் என்று கூறியதால், செந்தமிழில் பேசினார் ஆறுமுகநாவலர். இதன் பொருள் ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்ட போது’என்பது ஆகும். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.
20) விம்முகின்ற என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) வீ
B) விம்
C) விம்மு
D) விம்முதல்
விளக்கம்: விம்முகின்ற – விம்மு + கின்று + அ. இதில் விம்மு என்பது பகுதி ஆகும்.