12th Tamil Unit 1 Questions
171) செந்தமிழே என்ற சொல்லுடன் தொடர்புடைய பண்புப் பெயர் புணர்ச்சி விதி எது?
A) முன்னின்ற மெய் திரிதல்
B) தன்னொற்றிரட்டல்
C) இனமிகல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: செந்தமிழே – செம்மை + தமிழே.
விதி: ஈறு போதல் – செம் + தமிழே
விதி: முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே.
172) பரலி.சு.நெல்லையப்பர் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இவர் பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
2. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றியவர்.
3. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர்
4. நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
C) 1, 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இவர் பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
2. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றியவர்.
3. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர்
4. நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
173) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) நன்னூல்
B) தண்டியலங்காரம்
C) சிலப்பதிகாரம்
D) தொல்காப்பியம்
விளக்கம்: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் – தண்டியலங்காரம். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
174) பரலி.சு.நெல்லையப்பருக்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க.
A) விடுதலைப்போராட்ட வீரர்
B) உரையாசிரியர்
C) பதிப்பாளர்
D) மொழிபெயர்ப்பாளர்
விளக்கம்: விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
175) பாரதியார் எத்தனை வயதில் எட்டயபுரம் அரசருக்கு கல்விகற்க உதவி வேண்டி கடிதம் எழுதினார்?
A) 14
B) 17
C) 15
D) 18
விளக்கம்: பாரதியார், 15 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு கடிதம் எழுதினார்
176) பாரதியார் மறைவிற்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்?
A) எட்டயபுர மன்னர்
B) குத்திகேசவர்
C) பாரதிதாசன்
D) தமிழக மக்கள்
விளக்கம்: பாரதியார் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு கடிதம் எழுதினார்.
177) கீழ்க்காண்பனவற்றுள் எது அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் அல்ல?
A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) முத்துவீரியம்
விளக்கம்: அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்:
1. தண்டியலங்காரம்
2. மாறனலங்காரம்
3. குவலயானந்தம்
178) தனியாழி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
A) தனி + யாழி
B) தனி + ஆழி
C) தனியாள் + ழி
D) தனி + ஆழி
விளக்கம்: தனியாழி – தனி + ஆழி.
விதி: இ ஈ ஐ வழி யவ்வும் – தனி + ய் + ஆழி
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – தனியாழி
179) பொருத்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) ஒளிப்பறவை
B) சர்ப்பயாகம்
C) சூரிய நிழல்
D) ஒரு கிராமத்து நதி
விளக்கம்: மேற்காணும் அனைத்தும் நூல்களும் சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய நூல்கள் ஆகும். இதில் பொருந்தாதது ஒரு கிராமத்து நதி ஆகும். ஒரு கிராமத்து நதி சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
180) கூற்றுகளை ஆராய்க.
1. தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
2. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
3. தண்டி கி.பி (பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
4. இந்நூல் அறம், பொருள், இன்பம் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது
A) 1, 2 சரி
B) 1, 3 சரி
C) 4 மட்டும் தவறு
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.
2. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
3. தண்டி கி.பி (பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
4. இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.