12th Tamil Unit 1 Questions
161) இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் எந்த நூலில் இருந்து தரப்பட்டுள்ளது?
A) மலையாளக் கவிதை
B) அலையும் சுவடும்
C) நிலவுப்பூ
D) ஒரு கிராமத்து நதி
விளக்கம்: இளந்தமிழே என்ற கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
162) திறனாய்வுக்கலை என்னும் நூலை எழுதியவர் யார்?
A) தி.சு.நடராசன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
163) வந்து என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) வந்த
B) வா
C) வந்த்
D) வந்து
விளக்கம்: வந்து என்ற சொல்லின் வேர்ச்சொல்(பகுதி) – வா என்பது ஆகும்.
164) செம்பரிதி என்ற சொல்லைப் பிரித்து எழுதுக?
A) செம் + பரிதி
B) செ + பரிதி
C) செம்மை + பரிதி
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்:செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.
165) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் துணையாசிரியராகப் பணியாற்றவில்லை?
A) சூரியோதயம்
B) கர்மயோகி
C) லோகோபகாரி
D) குயில்
விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
166) எந்த தொன்மையான மொழியும் எதிலிருந்து தோன்றுகின்றன?
A) ஒலி
B) சமிக்கை
C) படம்
D) A மற்றும் B
விளக்கம்: எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும், இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
167) தி.சு.நடராசன் எழுதாத நூல் எது?
A) கவிதையெனும் மொழி
B) திறானய்வுக்கலை
C) மொழி அழகியல்
D) தமிழின் பண்பாட்டு வெளிகள்
விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
168) சிற்பி பாலசுப்ரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்?
A) பாரதிதாசன்
B) அண்ணாமலை
C) அண்ணா
D) பாரதியார்
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
169) அஃறிணை என்ற சொல்லை பிரித்து எழுதுக.
A) அள் + திணை
B) அல் + திணை
C) அ + திணை
D) அஃ + திணை
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
170) Biography என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) உயிரியியல் வரலாறு
B) அறிவியல் வரலாறு
C) தாவரவியல் வரலாறு
D) வாழ்க்கை வரலாறு
விளக்கம்: Biography என்ற சொல்லின் தமிழாக்கம் வாழ்க்கை வரலாறு என்பதாகும்.