12th Tamil Unit 1 Questions
151) பின்வருவனவற்றில் ந.முத்துசாமி எழுதிய நூல் எது?
A) தமிழ் அழகியல்
B) நெல்லூர் அரிசி
C) சுவரொட்டிகள்
D) காட்டுவாத்து
விளக்கம்: தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்
நெல்லூர் அரிசி – அகிலன்
சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
152) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இதில் ஞாலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) அறிவு
B) உலகம்
C) கடல்
D) பெரிய
விளக்கம்: ஞாலம் என்றால் உலகம் என்று பொருள். மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று என்பது இப்பாடலடியின் விளக்கம் ஆகும்.
153) எந்த மொழியிலிருந்து கவிதைகளையும் புதினங்களையும சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்?
A) ஆங்கிலம்
B) பிரெஞ்சு
C) தெலுங்கு
D) மலையாளம்
விளக்கம்: மலையாளத்திலிருந்து கவிதைகளையும், புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சிற்பி பாலசுப்ரமணியம். இவர் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
154) பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய் – என்று பாடியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய் என்று பாடியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இவர் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலுக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆவார்.
155) இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலை எழுதியவர் யார்?
A) டாக்டர் பொற்கோ
B) தி.சு.நடராசன்
C) ந.பிச்சமூர்த்தி
D) ரா.அ.பத்மநாபன்
விளக்கம்: இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலை எழுதியவர் டாக்டர் பொற்கோ ஆவார்.
156) வேற்றுமை புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது________________ஆக மாறும்?
A) நகரமாக
B) றகரமாக
C) ணகரமாக
D) ஆய்தமாக
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
157) பாரதியார் கீழக்காண்பனவற்றில் எதை ஓங்குக என்று கூறுகிறார்?
A) முயற்சிகள்
B) சிற்பம்
C) வானநூல்
D) இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள்
விளக்கம்: முயற்சி ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டில் மலிந்திடுக என்று முழங்கு – பாரதியார்.
158) எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை எந்த ஆண்டு வெளியிட்டார்?
A) 1889
B) 1879
C) 1894
D) 1900
விளக்கம்: எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879ஆம் ஆண்டு வெளியிட்டார்.
159) வம்சமணிதீபிகை என்ற நூலின் மூல வடிவம் எப்போது இளசை மணி என்பவரால் வெளியிடப்பட்டது?
A) 2007
B) 2010
C) 2008
D) 2005
விளக்கம்: வம்சமணிதீபிகை என்ற நூலின் மூல வடிவம் 2008-இல் அப்படியே இளசை மணி என்பவரால் வெளியிடப்பட்டது
160) வம்சமணி தீபிகை என்னும் நூலை திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி எப்போது வெங்கடேசுர எட்டப்பருக்கு கடிதம் எழுதினார்?
A) 6.8.1909
B) 6.8.1919
C) 8.6.1909
D) 8.6.1919
விளக்கம்: வம்சமணி தீபிகை என்பது எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு ஆகும். இதனை கவிகேசரி சாமிதீட்சிதர் 1879-இல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சி செய்த வெங்டேசுர எட்டப்பருக்கு 6.8.1919-இல் கடிதம் எழுதினார்.