12th Tamil Unit 1 Questions
141) பரலி.சு.நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்?
A) பாரதி
B) வ.உ.சி
C) பாரதிதாசன்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
142) கூற்றுகளை ஆராய்க.
1. மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
2. பாரதி, தம் 18 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு ஆகும்.
3. பாரதியாரைவிட 10 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
4. பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
விளக்கம்: 1. மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
2. பாரதி, தம் 15 வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு ஆகும்.
3. பாரதியாரைவிட 7 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
4. பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
143) தண்டியலங்காரத்தின் ஆசிரியரான தண்டி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்?
A) 11
B) 12
C) 13
D) 17
விளக்கம்: தண்டியலங்காரத்தின் ஆசிரியர் தண்டி ஆவார். இவர் கி.பி(பொ.ஆ) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.
144) நெஞ்சம் இளவி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: நெஞ்சம் இளகி விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை – பாரதியார்.
145) மலையாளக் கவிதை என்பது ஒரு?
A) கவிதை நூல்
B) உரைநடை நூல்
C) புதினம்
D) கதை
விளக்கம்: சிற்பி பாலசுப்ரமணியத்தின்,
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்
146) பல் + துளி என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பலதுளி
B) பல்துளி
C) பஃறுளி
D) பல்லதுளி
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்து லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை – அஃறிணை. பல் + துளி – பஃறுளி
147) பரலி.சு.நெல்லையப்பர் கீழ்க்காணும் எந்த இதழில் முதலில் துணையாசிரியராக இருந்து பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்?
A) சூரியோதயம்
B) கர்மயோகி
C) குயில்
D) லோகோபகாரி
விளக்கம்: பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும், லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் பரலி.சு.நெல்லையப்பர் ஆவார்.
148) வசனநடை கைவந்த வல்லாளர் என்று புகழப்படுபவர் யார்?
A) பரிதிமாற்கலைஞர்
B) ஆறுமுக நாவலர்
C) குணங்குடி மஸ்தான் சாகிபு
D) மறைமலை அடிகள்
விளக்கம்: வசனநடை கைவந்த வல்லாளர் எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.
149) தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது – என்று பாடியவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) கலைஞர்
C) பாரதியார்
D) கவிமணி
விளக்கம்: தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது – பாரதியார்.
150) ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் எந்த இடத்தில் வராது?
A) முதல்
B) இடை
C) கடை
D) இடை, கடை
விளக்கம்: ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. டமாரம், றப்பர் இச்சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை.