12th Tamil Unit 1 Questions
131) கூற்றுகளை ஆராய்க.
1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும், க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. காக்கை, பச்சை, பத்து, உப்பு.
2. ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும், க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை.
132) அகன் ஐந்து எனப் பேசும் நூல் எது?
A) நன்னூல்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) மேற்காணும் எதுமில்லை
விளக்கம்: சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளது. அகன் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப்’ பொருள்களோடு இரண்டற இணைத்து விடுகின்றது.
133) எழுத்துப்பிழைக்கு முதன்மையான காரணம் எது?
A) எழுதுவது போலவே பேசுவது
B) பேசுவது போலவே எழுதுவது
C) சொற்களின் இடமாற்றம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துக்கள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.
134) ___________________வளம் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது?
A) இலக்கிய வளம்
B) பண்பாட்டு வளம்
C) இலக்கண வளம்
D) சொல்வளம்
விளக்கம்: இன்றைய இலக்கியத்தில், கி.ராஜநாராயணன், ‘கிடை’ எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார். சொல்வளம், ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது.
135) நீர்படு பசுங்காலம் – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) அகநானூறு
D) நற்றிணை
விளக்கம்: ‘நீர்படுகின்ற – அல்லது நீர்பட்ட – பசுமையான கலம்’ என்பது, எதுவும் தொகாமல் வருகிற தொடர் மொழி. அதுவே, ‘நீர்படு பசுங்கலம்’ – நற்றிணை(308) என்று ஆகும் போது, தொகைமொழி.
136) யார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆறுமுக நாவலர் உதவினார்?
A) ஜி.யூ.போப்
B) வீரமாமுனிவர்
C) கால்டுவெல்
D) பெர்சிவல் பாதிரியார்
விளக்கம்: பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆறுமுக நாவலர் உதவினார்.
137) தம்பி – மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன் – இதில் தம்பி என்று குறிப்பிடப்படுவர் யார்?
A) பாரதியார்
B) கலைஞர்
C) பாரதிதாசன்
D) ஸ்ரீநெல்லையப்பர்
விளக்கம்: தம்பி – மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்;ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன். இதில் தம்பி என்று குறிப்பிடப்படுபவர் ஸ்ரீநெல்லையப்பர் ஆவார்.
138) செம்மை + பரிதி என்னும் சொல் எந்த பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி செம்பரிதி என்று கிடைக்கும்?
A) ஈறுபோதல்
B) முன்னின்ற மெய் திரிதல்
C) தன்னொற்றிட்டல்
D) இனமிகல்
விளக்கம்: செம்பரிதி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை + பரிதி என்பதாகும். இதில் ஈறு போதல் என்னும் விதிப்படி மை விகுதி கெட்டு செம் + பரிதி என வரும். இவை இணைந்து செம்பரிதி என்ற சொல் கிடைக்கும்.
139) காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இலக்கண நூல் எது?
A) மாறனலங்காரம்
B) தண்டியலங்காரம்
C) குவலயானந்தம்
D) வீரசோழியம்
விளக்கம்: தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட தண்டியலங்காரத்தின ஆசிரியர் தண்டி ஆவார்.
140) உரைநடை வழக்கு, பேச்சுவழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது கீழ்க்காணும் எம்முறையில் அமையும்?
A) எழுவாய் + செய்ப்படுபொருள்
B) எழுவாய் + பயனிலை
C) செய்படுப்பொருள் + பயனிலை
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: உரைநடை வழக்கு, பேச்சுவழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப்பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்து வருகிறது. கவிதை மறுதலைத் தொடர் இது.