12th Tamil Unit 1 Questions
121) கூற்று: இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு முதலாவை ந் என்பதைப் பெற்று வரும்.
காரணம்: இச்சொற்கள் வினைச்சொற்கள்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: இயக்குநர் என்பதே சரி. இயக்குனர் என்று எழுதுவது தவறு. இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு (இச்சொற்கள் வினைச்சொற்கள்) பெயரிடை நிலையான ந் என்பதைப் பெற்று(ந் + அர் – நர்), ஓட்டுநர், அனுப்புநர், பெறுநர் என்று பெயர்ச்சொற்களாகின்றன.
122) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்-பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை மாங்குளம் என்ற இடத்தில் உள்ளது. இவ்விடம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) மதுரை
B) திருநெல்வேலி
C) சிவகங்கை
D) இராமநாதபுரம்
விளக்கம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்-பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை மாங்குளம் என்ற இடத்தில் உள்ளது. இவ்விடம் மதுரை மாவட்ட்தில் உள்ளது
123) ஆறுமுக நாவலர் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
A) வசனநடை கைவந்த வல்லாளர் என்று அழைக்கப்படுகிறார்.
B) தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளை கற்றவர்
C) தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.
D) திருக்குறளின் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களை பதிப்பித்தார்.
விளக்கம்: தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிப் புலமை பெற்றவர்.
124) Manuscript என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) நூல் நிரல்
B) கையெழுத்துப் பிரதி
C) வாழ்க்கை வரலாறு
D) காப்பகம்
விளக்கம்: Biography – வாழ்க்கை வரலாறு
Archive – காப்பகம்
Manuscript – கையெழுத்துப் பிரதி
Biobliography – நூல் நிரல்
125) கிடை என்னும் குறுநாவலை எழுதியவர் யார்?
A) நா.காமராசன்
B) கி.ராஜநாராயணன்
C) ப.பரந்தாமன்
D) ராஜம் கிருஷ்ணன்
விளக்கம்: இன்றைய இலக்கியத்தில், கி.ராஜநாராயணன், ‘கிடை’ எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார். சொல்வளம், ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது.
126) ஆங்கு + அவற்றுள் என்னும் சொல்லை கீழ்க்காணும் எந்த விதியைப் பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
B) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
C) முன்னின்ற மெய்திரிதல்
D) A மற்றும் B
விளக்கம்: ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்.
விதி: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – ஆங்க் + அவற்றுள்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஆங்கவற்றுள்
127) பாரதியார் யாரை தம் தம்பி என்று அன்புடன் அழைத்தார்?
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
C) சுப்புரத்தினதாசன்
D) பரலி.சு.நெல்லையப்பர்
விளக்கம்: பாரதியாரைவிட 7 ஆண்டுகள் இளையவரான பரலி.சு.நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.
128) வெம்மை + கதிர் என்ற சொல்லை எந்த பண்புப்பெயர் விதியை பயன்படுத்தி சேர்த்து எழுதலாம்?
A) அடியகரம் ஐ ஆதல்
B) முன்னின்ற மெய் திரிதல்
C) தன்னொற்றிரட்டல்
D) இனமிகல்
விளக்கம்: வெங்கதிர் – வெம்மை + கதிர்
விதி: ஈறு போதல் – வெம் + கதிர்.
விதி: முன்னின்ற மெய் திரிதல் – வெங்கதிர்.
129) தண்டியலங்காரம் எத்தனை பிரிவுகளை உடையது?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளை உடையது. அவை,
1. பொதுவியல்
2. பொருளணியியல்
3. சொல்லணியியல்
130) பொருத்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) பூஜ்யங்களின் சங்கிலி
B) ஒளிப்பறவை
C) சர்ப்பயாகம்
D) அலையும் சுவடும்
விளக்கம்: மேற்காணும் அனைத்தும் சிற்பி பாலசுப்ரமணியம் எழுதியவை.
கவிதை நூல்கள்:
1. ஒளிப்பறவை
2. சர்ப்பயாகம்
3. சூரிய நிழல்
4. ஒரு கிராமத்து நதி
5. பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்:
1. மலையாளக் கவிதை
2. அலையும் சுவடும்