12th Tamil Unit 1 Questions
111) உன்னையல்லால் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
A) உன்னை + அல்லால்
B) உன் + ஐ + அல்லால்
C) உன்னை + ய் + அல்லால்
D) உன்னை + யல்லால்
விளக்கம்: உன்னையல்லால் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது உன்னை + அல்லால்.
112) தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) சிற்பி பாலசுப்ரமணியம்
C) நா.காமராசன்
D) அய்யப்ப மாதவன்
விளக்கம்: தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம் – சிற்பி பாலசுப்ரமணியம்.
113) உயர்ந்தோர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
A) வினைமுற்று
B) உருவகம்
C) விணையாலணையும் பெயர்
D) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: உயர்ந்தோர் – விணையாலணையும் பெயர். இங்கு உயர்வு என்ற பொருளை குறிக்காமல் அது சாந்தோரைக் குறிக்கிறது. இவ்வாறு ஒரு பொருள் தன்னை குறிக்காமல் அது சார்ந்துள்ளோரைக் குறிப்பது விணையாலணையும் பெயர் எனப்படும்.
114 திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A) சிற்பி பாலசுப்பிரமணியம்
B) வாணிதாசன்
C) தி.சு.நடராசன்
D) அய்யப்ப மகாதேவன்
விளக்கம்: தமிழ் அழகியல் என்ற நூலை எழுதியவர் தி.சு.நடராசன் ஆவார். திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
115) ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – இவ்வரிகளில் ஓங்கல் என்ற சொல் பின்வரும் எதற்குப் பொருத்தமானது?
A) மேருமலை
B) விந்தியமலை
C) பொதிகை மலை
D) இமயமலை
விளக்கம்: ஓங்கல் என்றால் மலை என்று பொருள். இவ்வரிகளில் ஓங்கல் என்றால் பொதிகை மலையைக் குறிக்கிறது. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் தண்டியலங்காரம் ஆகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.
116) தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்
B) இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
C) காட்டுவாத்து – ந.முத்துசாமி
D) நெல்லூர் அரிசி – அகிலன்
விளக்கம்: பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்
இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி
நெல்லூர் அரிசி – அகிலன்
117) Archive என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) புனைவு
B) காப்பகம்
C) படிவம்
D) நூல் நிரல்
விளக்கம்: Archive – காப்பகம்
Fiction – புனைவு
Bibliography – நூல் நிரல்.
118) சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இவர் சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒளிப்பறவை, ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
2. மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இவர் சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒளிப்பறவை, ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
2. மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
119) தமிழின் பண்பாட்டு வெளிகள் என்ற நூலை எழுதியவர் யார்?
A) அய்யப்ப மகாதேவன்
B) சிற்பி பாலசுப்பிரமணியம்
C) பாரதியார்
D) தி.சு.நடராசன்
விளக்கம்: தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்:
1. கவிதையெனும் மொழி
2. தமிழ் அழகியல்
3. தமிழின் பண்பாட்டு வெளிகள்
4. திறனாய்வுக்கலை
120) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது
3. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வராது
4. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
A) 4 மட்டும் தவறு
B) 1, 2 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை. வரின் தமிழில்லை. க்ரீடம், ப்ரியா – வடமொழி. க்ளிஷே – ஆங்கிலம்
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று. பார்க், பன்ச், பட், போத், டப் போன்றவை தமிழில்லை
3. வல்லின மெய்கள் ஈரொற்றாய் வராது.
4. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி.