12th Tamil Unit 1 Questions
91) பா வகை ஆசிரியம் முதற்கொண்டு நான்கு என்று கூறும் நூல் எது?
A) தொல்காப்பியம்
B) அகத்தியம்
C) நன்னூல்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: பாவகைகளோடு அறவியல் கருத்துகளையும் இணைத்துச் சொல்லிவிடுகிறது தொல்காப்பியம்
பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு என கூறும் நூல் தொல்காப்பியம் ஆகும். அவை, ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகும்.
92) கீழ்க்காண்பனவற்றுள் எந்த ஒற்றுகள் ஈரொற்றாய் வருவதில்லை?
A) ய
B) ர
C) ழ
D) க
விளக்கம்: ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளப்பெடுத்தால் மட்டுமே வரும். பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.
93) காட்டுவாத்து என்று நூலை எழுதியவர் யார்?
A) டாக்டர் பொற்கோ
B) அகிலன்
C) ந.பிச்சமூர்த்தி
D) ரா.அ.பத்மநாபன்
விளக்கம்: காட்டுவாத்து என்ற நூலை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி ஆவார்
94) இருந்தாய் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
A) இருந்து
B) இரு
C) இருந்த
D) இருந்தாய்
விளக்கம்: இருந்தாய் – இரு + த்(ந்) + த் + ஆய். இதில் இரு என்பது பகுதியாகும்;. வேர்ச்சொல்லை பகுதி என்றும் கூறலாம்.
95) பல் + முகம் என்ற சொல்லை சேர்த்து எழுதுக.
A) பலமுகம்
B) பல்முகம்
C) பன்முகம்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.
96) விளங்கிய என்ற சொல்லின் விகுதி என்ன?
A) கி
B) இ
C) உ
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: விளங்கி – விளங்கு + இ
விளங்கு – பகுதி. இ – வினையெச்ச விகுதி
97) விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) அய்யப்ப மாதவன்
C) நடராஜன்
D) சிற்பி பாலசுப்பிரமணியம்
விளக்கம்: விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட என்ற பாடல் வரிகளை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆவார். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் இளந்தமிழே என்னும் கவிதை நூல்.
98) புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவமாக மாற்றியவர் யார்?
A) குணங்குடி மஸ்தான் சாகிபு
B) மீனாட்சி சுந்தரனார்
C) மறைமலை அடிகள்
D) ஆறுமுக நாவலர்
விளக்கம்: புராண நூல்களை வசனமாக எழுத அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிமாக மாற்றியவர் ஆறுமுக நாவலர் ஆவார்.
99) கூற்றுகளை ஆராய்க.
1. பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
2. இவர் விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பரலி.சு.நெல்லையப்பர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
2. இவர் விடுதலைப்போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
100) யார் ஆறுமுகனாருக்கு நாவலர் என்னும் பட்டத்தை வழங்கினார்?
A) மதுரை ஆதினத்தார்
B) யாழ்ப்பாணம் ஆதினத்தார்
C) கடலூர் ஆதினத்தார்
D) திருவாவடுதுறை ஆதினத்தார்
விளக்கம்: திருவாவடுதுறை ஆதினத்தார் ஆறுமுகனாருக்கு நாவலர் என்னும் பட்டத்தை வழங்கினார்.