Science Questions

12th Std Science Lesson Wise Questions in Tamil – Part 3

12th Science Lesson 14 Questions in Tamil

14] மனித நலன் மற்றும் நோய்கள்

1.“உடல்நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று. உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நல்வாழ்வுக்கான நிலையே உடல்நலம் என்பது ____________ வரையறையாகும்.

A) UNICEF

B) UNO

C) WHO

D) UNFAO

விளக்கம்: உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வரையறையின்படி “உடல்நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று. உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நல்வாழ்வுக்கான நிலையே உடல்நலம் என்பதாகும்”.

2. கீழ்க்கண்டவற்றுள் பாக்டீரியா நோய்கள் அல்லாதது எது?

A) சீதபேதி

B) பிளேக்

C) டிப்தீரியா

D) சாதாரண சளி

விளக்கம்: பாக்டீரியா நோய்கள்: சீதபேதி, பிளேக், டிப்தீரியா, காலரா, டைபாய்டு, நிமோனியா.

3. கீழ்க்கண்டவற்றுள் வைரஸ் நோய்கள் அல்லாதது எது?

A) தட்டம்மை

B) கல்லீரல் அழற்சி

C) டெங்கு காய்ச்சல்

D) மலேரியா

விளக்கம்: வைரஸ் நோய்கள்: சிக்கன்குனியா, தட்டம்மை, கல்லீரல் அழற்சி, டெங்கு காய்ச்சல்.

4. கீழ்க்கண்டவற்றுள் புரோட்டோசோவா நோய்கள் அல்லாதது எது?

A) மலேரியா

B) அமீபியாசிஸ்

C) ஆப்ரிக்க தூக்க வியாதி

D) அஸ்கரியாஸிஸ்

விளக்கம்: புரோட்டோசோவா நோய்கள்: காலா- அசார், மலேரியா, அமீபியாசிஸ், ஆப்ரிக்க தூக்க வியாதி.

5. பைலேரியாசிஸ் என்பது ____________

A) பாதப்படை

B) இளம்பிள்ளை வாதம்

C) யானைக்கால் நோய்

D) சின்னம்மை

விளக்கம்: பைலேரியாசிஸ் என்பது யானைக்கால் நோய் ஆகும்.

6. போலியோ மைலிடிஸ் என்பது ____________

A) பாதப்படை

B) இளம்பிள்ளை வாதம்

C) யானைக்கால் நோய்

D) சின்னம்மை

விளக்கம்: போலியோ மைலிடிஸ் என்பது இளம்பிள்ளை வாதம் ஆகும்.

7. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கேண்டிடியாசிஸ் என்பது வைரஸ் நோய் ஆகும்.

2] பாதப்படை என்பது பூஞ்சை நோய் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கேண்டிடியாசிஸ் என்பது பூஞ்சை நோய் ஆகும். பாதப்படை என்பது பூஞ்சை நோய் ஆகும்.

8. கூற்று(A): ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்கள் பரவுகிறது.

காரணம்(R): இந்நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்கள் தொற்று நோய்கள் அல்லது பரவும் நோய்கள் (Communicable diseases) எனப்படுகிறது.

9. கூற்று(A): நோய்த்தொற்றிய நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு எந்த நிலையிலும் நோய்கள் பரவாது.

காரணம்(R): இந்நோய்கள் தொற்றா நோய்கள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நோய்த்தொற்றிய நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு எந்த நிலையிலும் பரவாதவை தொற்றாநோய்கள் ஆகும்.

10. தொற்று நோய்கள்____________ நோய்கள் எனப்படுகிறது.

A) பரவாத நோய்கள்

B) பரவும் நோய்கள்

C) நோயூக்கிகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொற்று நோய்கள் பரவும் நோய்கள் (Communicable diseases) எனப்படுகிறது.

11. தொற்று நோய்கள் உண்டாக்கும் உயிரிகள்____________ ஆகும்.

A) பரவாத நோய்கள்

B) பரவும் நோய்கள்

C) நோயூக்கிகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொற்று நோய்கள் உண்டாக்கும் உயிரிகள் நோயூக்கிகள் (Pathogens) ஆகும்.

12. கீழ்க்கண்டவற்றுள் நோயூக்கிகள் எவை?

A) காற்று

B) உணவு

C) வைரஸ்

D) இவை அனைத்தும்

விளக்கம்: காற்று, நீர், உணவு, உடல் தொடர்பு மற்றும் நோய்க்கடத்திகள் மூலம் பரவுகின்றன. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஒட்டுண்ணிகள் மற்றும் புழுவின ஒட்டுண்ணிகள் போன்றவை நோயூக்கிகள் ஆகும்.

13. ____________ நோய்கள் குணப்படுத்தப்பட கூடியவை.

A) வைரஸ்

B) பூஞ்சை

C) பாக்டீரியா

D) புரோட்டோசோவா

விளக்கம்: பாக்டீரிய நோய்கள் குணப்படுத்தப்பட கூடியவை.

14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தொற்று நோய்கள் பொதுவானவை.

2] வைரஸ் நோய்கள் அனைத்தும் குணப்படுத்த கூடியவை அல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தொற்று நோய்கள் பொதுவானவை. வைரஸ் நோய்கள் அனைத்தும் குணப்படுத்த கூடியவை அல்ல.

15. தொற்றா நோய்களில்____________ இறப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

A) மாரடைப்பு

B) பக்கவாதம்

C) மூட்டுவலி

D) புற்றுநோய்

விளக்கம்: தொற்றா நோய்களில் புற்றுநோய் இறப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

16. ____________ போன்ற வைரஸ் தொற்றினை குணப்படுத்த உயிர் எதிர்ப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

A) சாதாரண சளி

B) தலைவலி

C) வாய்புண்

D) மூட்டு வலி

விளக்கம்: சாதாரண சளி அல்லது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றினை குணப்படுத்த உயிர் எதிர்ப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

17. ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான நோய்காரணி____________

A) கிளாஸ்ட்ரிடியம்டெட்டனி

B) எர்சினியா பெஸ்டிஸ்

C) ஷிஜெல்லா சிற்றினம்

D) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

விளக்கம்: ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான நோய்காரணி: ஷிஜெல்லா சிற்றினம்.

18. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புபோனிக் பிளேக் நோய்க்கான நோய்காரணி: கோரினிபாக்டீரியம் டீப்தீரியே

2] டிப்தீரியா நோய்க்கான நோய்காரணி: எர்சினியா பெஸ்டிஸ்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புபோனிக் பிளேக் நோய்க்கான நோய்காரணி: எர்சினியா பெஸ்டிஸ் ஆகும். டிப்தீரியா நோய்க்கான நோய்காரணி: கோரினிபாக்டீரியம் டீப்தீரியே ஆகும்.

19. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காலரா நோய்க்கான நோய்காரணி: கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி

2] டெட்டனஸ் நோய்க்கான நோய்காரணி: விப்ரியோ காலரே

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காலரா நோய்க்கான நோய்காரணி: விப்ரியோ காலரே ஆகும். டெட்டனஸ் நோய்க்கான நோய்காரணி: கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி ஆகும்.

20. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டைஃபாய்டு நோய்க்கான நோய்காரணி: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே

2] நிமோனியா நோய்க்கான நோய்காரணி: சால்மோனெல்லா டைஃபி

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டைஃபாய்டு நோய்க்கான நோய்காரணி: சால்மோனெல்லா டைஃபி ஆகும். நிமோனியா நோய்க்கான நோய்காரணி: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ஆகும்.

21. காசநோய் நோய்க்கான நோய்காரணி____________

A) எர்சினியா பெஸ்டிஸ்

B) கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி

C) சால்மோனெல்லா டைஃபி

D) மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

விளக்கம்: காசநோய் நோய்க்கான நோய்காரணி: மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் ஆகும்.

22. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நிணநீர் முடிச்சுகள்

2] புபோனிக் பிளேக் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல் ஆகும். புபோனிக் பிளேக் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நிணநீர் முடிச்சுகள் ஆகும்.

23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டிப்தீரியா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல்

2] காலரா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குரல்வளை

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டிப்தீரியா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குரல்வளை, தோல், சுவாச மற்றும் இனப்பெருக்கப் பாதை ஆகும். காலரா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல் ஆகும்.

24. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டெட்டனஸ் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல்

2] டைஃபாய்டு நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி இழுப்பு

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டெட்டனஸ் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி இழுப்பு ஆகும். டைஃபாய்டு நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி குடல் ஆகும்.

25. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நிமோனியா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நுரையீரல்

2] காசநோய் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நுரையீரல்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிமோனியா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நுரையீரல் ஆகும். காசநோய் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி நுரையீரல் ஆகும்.

26. கீழ்க்கண்டவற்றுள் ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) வயிற்று வலி

B) மலக்கழிவில் இரத்தம்

C) கோழை காணப்படுதல்

D) காய்ச்சல்

விளக்கம்: ஷிஜெல்லோசிஸ் நோய்க்கான அறிகுறிகள்: வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம், கோழை காணப்படுதல்.

27. கீழ்க்கண்டவற்றுள் புபோனிக் பிளேக் நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) காய்ச்சல்

B) தலைவலி

C) வீங்கிய நிணநீர் முடிச்சுகள்

D) தொண்டை வலி

விளக்கம்: புபோனிக் பிளேக் நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, வீங்கிய நிணநீர் முடிச்சுகள்.

28. கீழ்க்கண்டவற்றுள் டிப்தீரியா நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) காய்ச்சல்

B) தொண்டை வலி

C) கரகரப்பான தொண்டை

D) வயிற்றுப்போக்கு

விளக்கம்: டிப்தீரியா நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பான தொண்டை மற்றும் சுவாசித்தலில் இடர்பாடு.

29. கீழ்க்கண்டவற்றுள் டெட்டனஸ் நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) தாடை தசைகள் விறைத்தல்

B) மிகை இதயத்துடிப்பு

C) முகம் மற்றும் தாடை தசைஇழுப்பு

D) தலைவலி

விளக்கம்: டெட்டனஸ் நோய்க்கான அறிகுறிகள்: தாடை தசைகள் விறைத்தல், மிகை இதயத்துடிப்பு, முகம் மற்றும் தாடை தசைஇழுப்பு.

30. கீழ்க்கண்டவற்றுள் டைஃபாய்டு நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) தலைவலி

B) அசௌகரியமான வயிறு

C) காய்ச்சல்

D) தொண்டை வலி

விளக்கம்: டைஃபாய்டு நோய்க்கான அறிகுறிகள்: தலைவலி, அசௌகரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.

31. கீழ்க்கண்டவற்றுள் நிமோனியா நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) காய்ச்சல்

B) இருமல்

C) வலியுடன் கூடிய சுவாசம்

D) நீரிழப்பு

விளக்கம்: நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், இருமல், வலியுடன் கூடிய சுவாசம், மற்றும் பழுப்பு நிற சளி.

32. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காலரா நோய்க்கான அறிகுறிகள்: மூக்கின் வழியாக அடர் கோழை வெளியேற்றம்.

2] காசநோய்க்கான அறிகுறிகள்: கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காலரா நோய்க்கான அறிகுறிகள்: கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு. காசநோய்க்கான அறிகுறிகள்: மூக்கின் வழியாக அடர் கோழை வெளியேற்றம்.

33. சாதாரண சளி நோய்க்கான நோய்க்காரணி____________

A) மம்ப்ஸ் வைரஸ்

B) ரைனோ வைரஸ்கள்

C) ருபல்லா வைரஸ்

D) ஹெப்பாடைட்டிஸ்–B

விளக்கம்: சாதாரண சளி நோய்க்கான நோய்க்காரணி: ரைனோ வைரஸ்கள்.

34. புட்டாளம்மை நோய்க்கான நோய்க்காரணி____________

A) மம்ப்ஸ் வைரஸ்

B) ரைனோ வைரஸ்கள்

C) ருபல்லா வைரஸ்

D) ஹெப்பாடைட்டிஸ்–B

விளக்கம்: புட்டாளம்மை நோய்க்கான நோய்க்காரணி: மம்ப்ஸ் வைரஸ்.

35. தட்டம்மை நோய்க்கான நோய்க்காரணி____________

A) மம்ப்ஸ் வைரஸ்

B) ரைனோ வைரஸ்கள்

C) ருபல்லா வைரஸ்

D) ஹெப்பாடைட்டிஸ்–B

விளக்கம்: தட்டம்மை நோய்க்கான நோய்க்காரணி: ருபல்லா வைரஸ்.

36. கல்லீரல் அழற்சி நோய்க்கான நோய்க்காரணி____________

A) மம்ப்ஸ் வைரஸ்

B) ரைனோ வைரஸ்கள்

C) ருபல்லா வைரஸ்

D) ஹெப்பாடைட்டிஸ்–B

விளக்கம்: கல்லீரல் அழற்சி நோய்க்கான நோய்க்காரணி: ஹெப்பாடைட்டிஸ்–B

37. சின்னம்மை நோய்க்கான நோய்க்காரணி____________

A) வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்

B) போலியோ வைரஸ்

C) டெங்கு வைரஸ்

D) ஆல்ஃபா வைரஸ்

விளக்கம்: சின்னம்மை நோய்க்கான நோய்க்காரணி: வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்.

38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இளம்பிள்ளை வாதம் நோய்க்கான நோய்க்காரணி: டெங்கு வைரஸ்.

2] டெங்கு காய்ச்சல் நோய்க்கான நோய்க்காரணி: போலியோ வைரஸ்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இளம்பிள்ளை வாதம் நோய்க்கான நோய்க்காரணி: போலியோ வைரஸ். டெங்கு காய்ச்சல் நோய்க்கான நோய்க்காரணி: டெங்கு வைரஸ்.

39. சிக்குன்குன்யா நோய்க்கான நோய்க்காரணி____________

A) வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்

B) போலியோ வைரஸ்

C) டெங்கு வைரஸ்

D) ஆல்ஃபா வைரஸ்

விளக்கம்: சிக்குன்குன்யா நோய்க்கான நோய்க்காரணி: ஆல்ஃபா வைரஸ்.

40. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சாதாரண சளி நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: உமிழ்நீர்ச் சுரப்பி.

2] புட்டாளம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: சுவாசப் பாதை.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சாதாரண சளி நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: சுவாசப் பாதை. புட்டாளம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: உமிழ்நீர்ச் சுரப்பி.

41. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தட்டம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: கல்லீரல்.

2] கல்லீரல் அழற்சி நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: தோல் மற்றும் சுவாசப்பாதை.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தட்டம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: தோல் மற்றும் சுவாசப்பாதை. கல்லீரல் அழற்சி நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: கல்லீரல்.

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சின்னம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: குடல்.

2] இளம்பிள்ளை வாதம் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: நரம்பு மண்டலம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சின்னம்மை நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: சுவாசப்பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம். இளம்பிள்ளை வாதம் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: குடல், மூளை, தண்டுவடம்.

43. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டெங்கு காய்ச்சல் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: நரம்பு மண்டலம்.

2] சிக்குன்குன்யா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: இரத்தம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டெங்கு காய்ச்சல் நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: தோல் மற்றும் இரத்தம். சிக்குன்குன்யா நோய்க்கான நோய்த் தொற்றும் பகுதி: நரம்பு மண்டலம்.

44. டோகா வைரஸ் எனப்படுவது____________

A) வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்

B) போலியோ வைரஸ்

C) டெங்கு வைரஸ்

D) ஆல்ஃபா வைரஸ்

விளக்கம்: சிக்குன்குன்யா நோய்க்கான நோய்க்காரணி: ஆல்ஃபா வைரஸ் (டோகா வைரஸ்).

45. போலியோ வைரஸ் எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ வைரஸ்

B) டி.என்.ஏ வைரஸ்

C) பாராமிக்சோ வைரஸ்

D) ஃபிளேவி வைரஸ்

விளக்கம்: இளம்பிள்ளை வாதம் நோய்க்கான நோய்க்காரணி: போலியோ வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்).

46. DENV வைரஸ் எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ வைரஸ்

B) டி.என்.ஏ வைரஸ்

C) பாராமிக்சோ வைரஸ்

D) ஃபிளேவி வைரஸ்

விளக்கம்: டெங்கு காய்ச்சல் நோய்க்கான நோய்க்காரணி: டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் (DENV அல்லது 1-4 வைரஸ்).

47. வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ வைரஸ்

B) டி.என்.ஏ வைரஸ்

C) பாராமிக்சோ வைரஸ்

D) ஃபிளேவி வைரஸ்

விளக்கம்: சின்னம்மை (Chicken pox) நோய்க்கான நோய்க்காரணி: வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (Varicella- Zoster virus ) (டி.என்.ஏ வைரஸ்).

48. ருபல்லா வைரஸ் எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ வைரஸ்

B) டி.என்.ஏ வைரஸ்

C) பாராமிக்சோ வைரஸ்

D) A மற்றும் C

விளக்கம்: தட்டம்மை நோய்க்கான நோய்க்காரணி: ருபல்லா வைரஸ்(Rubella virus) (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus).

49. மம்ப்ஸ் வைரஸ் எனப்படுவது____________

A) ஆர்.என்.ஏ வைரஸ்

B) டி.என்.ஏ வைரஸ்

C) பாராமிக்சோ வைரஸ்

D) A மற்றும் C

விளக்கம்: புட்டாளம்மை நோய்க்கான நோய்க்காரணி: மம்ப்ஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus)

50. கீழ்க்கண்டவற்றுள் சாதாரண சளி நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) மூக்கடைப்பு

B) தொண்டை வலி

C) இருமல்

D) மூக்கு ஒழுகல்

விளக்கம்: சாதாரண சளி நோய்க்கான அறிகுறிகள்: மூக்கடைப்பு மற்றும் கோழை வெளியேற்றம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி.

51. கீழ்க்கண்டவற்றுள் தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) கரகரப்பான தொண்டை

B) மூக்கு ஒழுகல்

C) காய்ச்சல்

D) தொண்டை வலி

விளக்கம்: தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள்: கரகரப்பான தொண்டை, மூக்கு ஒழுகல், இருமல், காய்ச்சல், மற்றும் தோல், கழுத்து, காதுகளில் ஏற்படும் சிவப்பு நிறத் தடிப்புகள்.

52. கீழ்க்கண்டவற்றுள் கல்லீரல் அழற்சி நோய்க்கான அறிகுறிகள் அல்லாதது எது?

A) கல்லீரல் சிதைவு

B) மஞ்சள் காமாலை

C) மஞ்சள் நிற கண்கள்

D) தசை மற்றும் மூட்டுவலி

விளக்கம்: கல்லீரல் அழற்சி நோய்க்கான அறிகுறிகள்: கல்லீரல் சிதைவு, மஞ்சள் காமாலை, குமட்டல், மஞ்சள் நிற கண்கள், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி.

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள்: திடீரென தோன்றும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி.

2] சிக்குன்குன்யா நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள்: திடீரென தோன்றும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி. சிக்குன்குன்யா நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம்.

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இளம்பிள்ளை வாதம் நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், தசை விறைப்பு மற்றும் வலுவிழத்தல், பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறு.

2] சின்னம்மை நோய்க்கான அறிகுறிகள்: லேசான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் கொப்புளம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இளம்பிள்ளை வாதம் நோய்க்கான அறிகுறிகள்: காய்ச்சல், தசை விறைப்பு மற்றும் வலுவிழத்தல், பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறு. சின்னம்மை நோய்க்கான அறிகுறிகள்: லேசான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் கொப்புளம்.

55. மேலண்ண சுரப்பியில் (Parotid) வீக்கம் ஏற்படுதல் எந்நோய்க்கான அறிகுறி ஆகும்?

A) புட்டாளம்மை

B) தட்டம்மை

C) சின்னம்மை

D) சிக்குன்குன்யா

விளக்கம்: புட்டாளம்மை நோய்க்கான அறிகுறிகள்: மேலண்ண சுரப்பியில்(Parotid) வீக்கம் ஏற்படுதல்.

56. ____________ மூலம் டைபாய்டு காய்ச்சல்இருப்பதை உறுதி செய்யலாம்.

A) எலைசா சோதனை

B) லின்டால் சோதனை

C) வலைசா சோதனை

D) வைடால் சோதனை

விளக்கம்: ‘வைடால் சோதனை’ (Widal test) மூலம் டைபாய்டு காய்ச்சல்இருப்பதை உறுதி செய்யலாம்.

57. ____________ உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற, மிகச்சிறிய அகச்செல் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும்.

A) பாக்டீரியா

B) புரோட்டோசோவா

C) வைரஸ்

D) பூஞ்சை

விளக்கம்: வைரஸ்கள் என்பவை உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற, மிகச்சிறிய அகச்செல் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும்.

58. பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் ____________ ஆம் ஆண்டுதொற்று நோயாக அங்கீகரிக்கப்பட்டது.

A) 1920

B) 1919

C) 1918

D) 1917

விளக்கம்: பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் 1919 ஆம் ஆண்டு தொற்று நோயாக அங்கீகரிக்கப்பட்டு, இன்றளவு ம் பருவக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலாக அறியப்படுகிறது.

59. ____________ வைரஸ் மூலம் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

A) H2N2

B) H2N1

C) H1N2

D) H1N1

விளக்கம்: H1N1 வைரஸ் மூலம் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

60. பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் யாவை?

A) காய்ச்சல்

B) இருமல்

C) தொண்டை வலி

D) இவை அனைத்தும்

விளக்கம்: காய்ச்சல், இருமல், தொண்டை வலி, குளிர், வலுவிழத்தல் மற்றும் உடல்வலி போன்றவை பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகளாகும்.

61. ____________ வைரஸ் என்பது ஒரு சூனோடிக் (zoonotic) வைரஸ் ஆகும்.

A) ரைனோ

B) நிபா

C) சூனோ

D) ரைபா

விளக்கம்: நிபா வைரஸ் (Nipah virus) என்பது ஒரு சூனோடிக் (zoonotic) வைரஸ் ஆகும்.

62. வைரஸ் நோய்களின் வகைகள் யாவை?

A) சுவாச நோய்கள்

B) தோல் நோய்கள்

C) உள்ளுறுப்பு நோய்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: உடல் உறுப்புகளில் தோன்றும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு வைரஸ் நோய்கள் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுவாச நோய்கள், தோல் நோய்கள், உள்ளுறுப்பு நோய்கள், நரம்பு நோய்கள்.

63. பொருத்துக

a) சுவாச நோய்கள் – 1] சின்னம்மை மற்றும் தட்டம்மை

b) தோல் நோய்கள் – 2] இன்புளூயன்சா தொற்றிய சுவாசப் பாதை

c) உள்ளுறுப்பு நோய்கள் – 3] ரேபிஸ் மற்றும் இளம்பிள்ளை வாதம்

d) நரம்பு நோய்கள் – 4] மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல்

a b c d

A) 3 1 2 4

B) 2 1 3 4

C) 2 4 3 1

D) 2 1 4 3

64. சாதாரண சளியானது ____________ க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ரைனோ வைரசுகளால் ஏற்படுகிறது.

A) 160

B) 170

C) 150

D) 140

விளக்கம்: சாதாரண சளியானது 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ரைனோ வைரசுகளால் ஏற்படுகிறது.

65. கூற்று(A): ரைனோ வைரசுக ளின் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றங்களால் மாறிக்கொண்டே இருக்கும்.

காரணம்(R): சாதாரண சளிக்கு ஒரு பொதுவான தடுப்பூசி உருவாக்குவதில் மிகுந்த சிக்கல் ஏற்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சாதாரண சளியானது 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ரைனோ வைரசுகளால் ஏற்படுகிறது. மேலும் அவைகளின் RNA ஜீனோம் தொடர்ந்து திடீர் மாற்றங்களால் மாறிக்கொண்டே இருக்கும் காரணத்தினால், சாதாரண சளிக்கு ஒரு பொதுவான தடுப்பூசி உருவாக்குவதில் மிகுந்த சிக்கல் ஏற்படுகிறது.

66. மனித உடலில் ____________ புரோட்டோசோவா இனங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை ஏற்படுத்துகின்றன.

A) 14

B) 15

C) 16

D) 17

விளக்கம்: மனித உடலில் ஏறத்தாழ 15 புரோட்டோசோவா இனங்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை ஏற்படுத்துகின்றன.

67. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய வைரஸ்____________

A) ரைனோ

B) நிபா

C) சூனோ

D) ரைபா

விளக்கம்: நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது.

68. அமீபியாசிஸ் என்பது____________ எனும் புரோட்டோசோவாவினால் ஏற்படுத்தப்படும்,

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா டோனோவானி

D) எண்டமீபா ஹிஸ்டோலைடிகா

விளக்கம்: அமீபியாசிஸ் ( Amoebiasis) என்பது எண்டமீபா ஹிஸ்டோலைடிகா (Entamoeba histolytica) எனும் புரோட்டோசோவாவினால் ஏற்படுத்தப்படும்,

69. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அமீபிக் சீதபேதி அல்லது அமீபிக் பெருங்குடல் அழற்சி நோயாகும்.

2] இவை மனித பெருங்குடலில் உள்ள தோழமை செல்கள்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அமீபிக் சீதபேதி அல்லது அமீபிக் பெருங்குடல் அழற்சி நோயாகும். இவை மனித பெருங்குடலில் உள்ள கோழை செல்கள், பாக்டீரியாக்களையும் உட்கொண்டு வாழ்கின்றன.

70. எண்டமீபா ஹிஸ்டோலைடிகா ஒட்டுண்ணியின் நோயுண்டாக்கும் நிலை____________

A) மோர்சிடன்ஸ்

B) டோனோவானி

C) மெஜிஸ்டா

D) டிரோபோசோய்ட்

விளக்கம்: எண்டமீபா ஹிஸ்டோலைடிகா ஒட்டுண்ணியின் நோயுண்டாக்கும் நிலை டிரோபோசோய்ட் (Trophozoite) ஆகும்.

71. அமீபிக் சீதபேதி நோயின் ஒட்டுண்ணியை கடத்தும் கடத்தியாக____________ செயலாற்றுகின்றன.

A) வீட்டு ஈ

B) செட்சி ஈ

C) மணல் பூச்சி

D) மணல் செட்சி

விளக்கம்: மலக்கழிவு கலந்த கெட்டுப்போன உணவு மற்றும் நீரில் இருந்து அமீபிக் சீதபேதி நோயின் ஒட்டுண்ணியை கடத்தும் கடத்தியாக வீட்டு ஈக்கள் (Musca domestica) செயலாற்றுகின்றன.

72. ஆப்பிரிக்க தூக்க வியாதி என்பது____________ சிற்றினங்களால் ஏற்படுத்தப்படுவதாகும்.

A) கிளாசினா

B) டிரையடோமா

C) லீஷ்மேனியா

D) டிரிப்பனோசோமா

விளக்கம்: ஆப்பிரிக்க தூக்க வியாதி என்பது டிரிப்பனோசோமா சிற்றினங்களால் ஏற்படுத்தப்படுவதாகும்.

73. ____________ என்ற இரத்த உறிஞ்சி ஈக்களால் டிரிப்பனோசோமா கடத்தப்படுகிறது.

A) வீட்டு ஈ

B) செட்சி ஈ

C) மணல் பூச்சி

D) மணல் செட்சி

விளக்கம்: பொதுவாக செட்சி (Tsetse) என்ற இரத்த உறிஞ்சி ஈக்களால் டிரிப்பனோசோமா கடத்தப்படுகிறது.

74. டி. கேம்பியன்ஸ்____________ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா டோனோவானி

D) கிளாசினா பல்பாலிஸ்

விளக்கம்: டி. கேம்பியன்ஸ் (T. gambiense), கிளாசினா பல்பாலிஸ் (Glossina palpalis) என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.

75. மத்திய ஆப்பிரிக்க தூக்க வியாதியை ____________ ஏற்படுத்துகிறது.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா டோனோவானி

D) கிளாசினா பல்பாலிஸ்

விளக்கம்: கிளாசினா பல்பாலிஸ் கேம்பியன் காய்ச்சல் (Gambian fever) அல்லது மத்திய ஆப்பிரிக்க தூக்க வியாதியை ஏற்படுத்துகிறது.

76. டி.ரோடீசியன்ஸ்____________ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா டோனோவானி

D) கிளாசினா பல்பாலிஸ்

விளக்கம்: டி.ரோடீசியன்ஸ் (T. rhodesiense) கிளாசினா மோர்சிடன்ஸ் (G. morsitans) என்ற வகை செட்சி ஈக்களால் பரவுகிறது.

77. ____________ கிழக்கு ஆப்பிரிக்க தூக்க வியாதியை ஏற்படுத்துகிறது.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா டோனோவானி

D) கிளாசினா பல்பாலிஸ்

விளக்கம்: கிளாசினா மோர்சிடன்ஸ் ரோடீசியன் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க தூக்க வியாதியை ஏற்படுத்துகிறது.

78. கூற்று(A): டி. குரூசி (T. cruzi), டிரையடோமா மெஜிஸ்டா (Triatoma magista) என்ற பூச்சிகளால் பரவுகிறது.

காரணம்(R): இது காலா-அசார் என்ற நோயை ஏற்படுத்துகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: டி. குரூசி (T. cruzi), டிரையடோமா மெஜிஸ்டா (Triatoma magista) என்ற பூச்சிகளால் பரவுகிறது. இது சாகாஸ் நோய் அல்லது அமெரிக்க தூக்க வியாதி (American trypanosomiasis) என்ற நோயை ஏற்படுத்துகிறது.

79. காலா-அசார் ____________ என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா மெஜிஸ்டா

D) லீஷ்மேனியா டோனோவானி

விளக்கம்: காலா-அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் என்ற நோய் லீஷ்மேனியா டோனோவானி (Leishmania donovani) என்னும் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.

80. காலா-அசார் நோயை____________ நோய்க்கடத்திகள் பரப்புகின்றன.

A) வீட்டு ஈ

B) செட்சி

C) மணல் பூச்சி

D) மணல் செட்சி

விளக்கம்: காலா-அசார் நோயை மணல்பூச்சி (Phlebotomus) என்ற நோய்க்கடத்திகள் பரப்புகின்றன.

81. கீழ்க்கண்டவற்றுள் காலா-அசார் நோயால்தொற்று ஏற்படும் இடங்கள் அல்லாதவை எவை?

A) எலும்பு மஜ்ஜை

B) கல்லீரல்

C) மண்ணீரல்

D) நுரையீரல்

விளக்கம்: காலா-அசார் நோயால் எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலின் இரத்தக் குழாய்கள் ஆகியவற்றில் தொற்று ஏற்படுகிறது.

82. கீழ்க்கண்டவற்றுள் காலா-அசார் நோயின் அறிகுறிகள் அல்லாதவை யாவை?

A) எடை குறைதல்

B) இரத்த சோகை

C) காய்ச்சல்

D) தலைவலி

விளக்கம்: எடை குறைதல், இரத்த சோகை, காய்ச்சல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஆகியவை காலா-அசார் நோயின் அறிகுறிகளாகும்.

83. மலேரியாவானது எந்தெந்த பிளாஸ்மோடிய இனங்களால் ஏற்படுகிறது?

A) பி. வைவாக்ஸ்

B) பி.ஓவேல்

C) பி.மலேரியே

D) இவை அனைத்தும்

விளக்கம்: மலேரியாவானது பல்வேறு வகையான பிளாஸ்மோடிய இனங்களான பி. வைவாக்ஸ் (P. vivax), பி.ஓவேல் (P. ovale), பி.மலேரியே (P. malariae) மற்றும் பி. பால்சிபாரம் (P. falciparum) ஆகியவற்றால் ஏற்படுகிறது.

84. பிளாஸ்மோடியம், டிரோபோசோயிட்டுகள் (Trophozoites) என்ற முதிர்நிலையில் மனிதனின் ____________ வாழ்கின்றன.

A) இரத்தச் வெள்ளையணுக்கள்

B) இரத்தச் தட்டைகள்

C) இரத்தச் மஜ்ஜைகள்

D) இரத்தச் சிவப்பணுக்கள்

விளக்கம்: பிளாஸ்மோடியம், டிரோபோசோயிட்டுகள் (Trophozoites) என்ற முதிர்நிலையில் மனிதனின் இரத்தச் சிவப்பணுக்களில் வாழ்கின்றன.

85. ____________ இருவிருந்தோம்பிகளைக் கொண்ட உயிரி ஆகும்.

A) பி. வைவாக்ஸ்

B) பி.ஓவேல்

C) பி.மலேரியே

D) பி. பால்சிபாரம்

விளக்கம்: பி. வைவாக்ஸ், இருவிருந்தோம்பிகளைக் (Digenic) கொண்ட உயிரி ஆகும்.

86. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் பி. வைவாக்ஸ் எந்த நிலைகளில் காணப்படுகின்றன?

A) ஸ்போரோகோனி

B) சைஷோகோனி

C) கேமோகோனி

D) இவை அனைத்தும்

விளக்கம்: பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில், சைஷோகோனி, (Schizogony) கேமோகோனி (Gamogony) மற்றும் ஸ்போரோகோனி (Sporogony) என்ற மூன்று நிலைகள் பி. வைவாக்ஸ் காணப்படுகின்றன.

87. நோய்த்தொற்று கொண்ட ____________ ஒரு மனிதனைக் கடிக்கும் போது மலேரியா ஒட்டுண்ணிகள், மனிதனின் இரத்த ஓட்டத்தினுள் நுழைகின்றன.

A) ஆண் அனாபிஸ்

B) பெண் அனாபிஸ்

C) ஆண் அனாபிலஸ்

D) பெண் அனாபிலஸ்

விளக்கம்: நோய்த்தொற்று கொண்ட பெண் அனாபிலஸ் கொசு ஒரு மனிதனைக் கடிக்கும் போது மலேரியா ஒட்டுண்ணிகள், மனிதனின் இரத்த ஓட்டத்தினுள் நுழைகின்றன.

88. கல்லீரல் செல்களில்____________ முறையில் பெருக்கமடைந்து மீரோசோயிட்டுகளை (Merozoites) உற்பத்தி செய்கின்றன.

A) ஸ்போரோகோனி

B) சைஷோகோனி

C) கேமோகோனி

D) ஸ்மோகோனி

விளக்கம்: கல்லீரல் செல்களில், பாலிலா பலபிளவு (சைஷோகோனி) முறையில் பெருக்கமடைந்து மீரோசோயிட்டுகளை (Merozoites) உற்பத்தி செய்கின்றன.

89. கூற்று(A): இரத்தச் சிவப்பணுகளுக்குள் நுழைந்த, மீரோசோயிட்டுகள் ஒரு செல்லுடைய டிரோபோசோயிட்டுகளாக (Trophozoites) வளர்ந்து அளவில் பெரிதாகின்றன. அதன் மையத்தில் உருவான நுண்குமிழ், பெரிதாகி சைட்டோபிளாசத்தின் ஒருபுறமாக தள்ளப்படுகிறது.

காரணம்(R): இதனால் முத்திரை மோதிர நிலை உருவாகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இரத்தச் சிவப்பணுகளுக்குள் நுழைந்த, மீரோசோயிட்டுகள் ஒரு செல்லுடைய டிரோபோசோயிட்டுகளாக (Trophozoites) வளர்ந்து அளவில் பெரிதாகின்றன. அதன் மையத்தில் உருவான நுண்குமிழ், பெரிதாகி சைட்டோபிளாசத்தின் ஒருபுறமாக தள்ளப்படுவதால் முத்திரை மோதிர நிலை (Signet ring) உருவாகின்றது.

90. பெரிய சைஷாண்டுகளில் மஞ்சள் நிறத்துடன் கூடிய பழுப்பு நிறமியான____________ காணப்படுகின்றன.

A) சைஷாண்டு துகள்கள்

B) சைஷானரின் துகள்கள்

C) ஷஃப்னரின் துகள்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பெரிய சைஷாண்டுகளில் மஞ்சள் நிறத்துடன் கூடிய பழுப்பு நிறமியான ‘ஷஃப்னரின் துகள்கள்’ (Schuffners granules) காணப்படுகின்றன.

91. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டெர்ஷியன், தீங்கற்ற டெர்ஷியன் மலேரியா வகையின் நோய்காரணி பி. மலேரியே

2] குவார்டன் மலேரியா வகையின் நோய்காரணி பி. வைவாக்ஸ்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டெர்ஷியன், தீங்கற்ற டெர்ஷியன் (அ) வைவாக்ஸ் மலேரியா வகையின் நோய்காரணி பி. வைவாக்ஸ் ஆகும். குவார்டன் மலேரியா வகையின் நோய்காரணி பி. மலேரியே ஆகும்.

92. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மிதமான டெர்ஷியன் மலேரியா வகையின் நோய்காரணி பி. ஃபால்சிபாரம்.

2] வீரிய மிக்க டெர்ஷியன் (அ) குவாடிடியன் மலேரியா வகையின் நோய்காரணி பி. ஒவேல்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மிதமான டெர்ஷியன் மலேரியா வகையின் நோய்காரணி பி. ஒவேல் ஆகும். வீரிய மிக்க டெர்ஷியன் (அ) குவாடிடியன் மலேரியா வகையின் நோய்காரணி பி. ஃபால்சிபாரம் ஆகும்.

93. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டெர்ஷியன், தீங்கற்ற டெர்ஷியன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 46 மணி நேரம் ஆகும்.

2] குவார்டன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 71 மணி நேரம் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டெர்ஷியன், தீங்கற்ற டெர்ஷியன் (அ) வைவாக்ஸ் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 48 மணி நேரம் ஆகும். குவார்டன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 72 மணி நேரம் ஆகும்.

94. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மிதமான டெர்ஷியன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 72 மணி நேரம் ஆகும்.

2] வீரியமிக்க டெர்ஷியன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 48 மணி நேரம் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மிதமான டெர்ஷியன் மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 48 மணி நேரம் ஆகும். வீரியமிக்க டெர்ஷியன் (அ) மலேரியா வகையின் சிவப்பணு சுழற்சியின் காலம் 36-48 மணி நேரம் ஆகும்.

95. ____________என்பது இரட்டைமய கருமுட்டை ஆகும்.

A) ஊசிஸ்ட்

B) ஊகைனெட்

C) ஹீமோசோயின்

D) மீரோசோயிட்டுகள்

விளக்கம்: ஊகைனெட் இரட்டைமய கருமுட்டை ஆகும்.

96. கூற்று(A): ஊசிஸ்ட்டுகள் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று ஸ்போரோசோயிட்டுகளை உருவாக்குகின்றன.

காரணம்(R): இந்நிகழ்விற்கு ஸ்போரோகோனி (Sporogony) என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஊசிஸ்ட்டுகள் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று ஸ்போரோசோயிட்டுகளை உருவாக்குகின்றன. இந்நிகழ்விற்கு ஸ்போரோகோனி (Sporogony) என்று பெயர்.

97. மலேரியாவின் அடைகாப்புக்காலம்____________

A) 11 நாட்கள்

B) 13 நாட்கள்

C) 14 நாட்கள்

D) 12 நாட்கள்

விளக்கம்: மலேரியாவின் அடைகாப்புக்காலம் 12 நாட்கள் ஆகும்.

98. மீரோசோயிட்டுகள், ____________ நச்சு இரத்த ஓட்டத்திற்குள் வெளியேறுவதனால் மலேரியா நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

A) ஊசிஸ்ட்

B) ஊகைனெட்

C) ஹீமோசோயின்

D) மீரோசோயிட்டுகள்

விளக்கம்: மீரோசோயிட்டுகள், ஹீமோசோயின் (Haemozoin) நச்சு மற்றும் சிவப்பணு சிதைபொருள்கள் ஆகியவை ஒத்திசைந்து இரத்த ஓட்டத்திற்குள் வெளியேறுவதனால் மலேரியா நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.

99. ____________ எனும் பாக்டீரியாக்களைத் தெளிப்பதன் மூலம் கொசுக்களின் இளவுயிரிகளை கொல்ல முடியும்.

A) கிளாசினா மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா மெஜிஸ்டா

C) லீஷ்மேனியா மெஜிஸ்டா

D) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

விளக்கம்: பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis) எனும் பாக்டீரியாக்களைத் தெளிப்பதன் மூலம் கொசுக்களின் இளவுயிரிகளை கொல்ல முடியும்.

100. ____________ ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) மலேரியா ஒழிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

A) 1951

B) 1952

C) 1953

D) 1950

விளக்கம்: 1950 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) மலேரியா ஒழிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

101. மலேரியாவிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி____________

A) RTS, M

B) RTS, T

C) RTS, S

D) RTS, F

விளக்கம்: 2015 வரை மலேரியாவிற்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி RTS, S (மஸ்குரிக்ஸ்) என்பதாகும்.

102. ____________ என்பது டிரைகோபைட்டான் மற்றும் எபிடெர் மோஃபைட்டா ன் ஆகிய பூஞ்சை பேரினங்களால் ஏற்படும் தோல் தொற்றாகும்.

A) மோர்சிடன்ஸ்

B) டிரையடோமா

C) லீஷ்மேனியா

D) டெர்மட்டோமைகோசிஸ்

விளக்கம்: டெர்மட்டோமைகோசிஸ் (Dermatomycosis) என்பது டிரைகோபைட்டான் (Trichophyton), மைக்ரோஸ்போரம் (Microsporum) மற்றும் எபிடெர்மோஃபைட்டான் (Epidermophyton) ஆகிய பூஞ்சை பேரினங்களால் ஏற்படும் தோல் தொற்றாகும்.

103. பாதங்களில் ஏற்படும் படர் தாமரை____________ எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

A) டிரைகோபைட்டான்

B) மைக்ரோஸ்போரம்

C) எபிடெர்மோஃபைட்டான்

D) டினியா பெடிஸ்

விளக்கம்: பாதங்களில் ஏற்படும் படர் தாமரையான சேற்றுப்புண் (Athlete’s foot) டினியா பெடிஸ் (Tinea pedis) எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

104. ____________ என்பது ஒற்றை விருந்தோம்பியை (monogenic) கொண்ட ஒட்டுண்ணி ஆகும்.

A) அமீபியாசிஸ்

B) உருளைப்புழு

C) அஸ்காரிஸ்

D) பெடிஸ்

விளக்கம்: அஸ்காரிஸ் என்பது ஒற்றை விருந்தோம்பியை (monogenic) கொண்ட ஒட்டுண்ணி ஆகும்.

105. உருளைப்புழு நோய்____________ புழுக்களால் உண்டாகிறது.

A) அஸ்காரிஸ்லும்பிரிகாய்ட்ஸ்

B) மைக்ரோஸ்போரம்

C) எபிடெர்மோஃபைட்டான்

D) டினியா பெடிஸ்

விளக்கம்: குடலில் அக ஒட்டுண்ணிகளாக வாழும் அஸ்காரிஸ்லும்பிரிகாய்ட்ஸ் (Ascaris lumbricoides) புழுக்களால் உருளைப்புழு நோய் உண்டாகிறது. இவை பொதுவாக உருளைப்புழுக்கள் (Round worm) என்றழைக்கப்படுகின்றன.

106. உருளைப்புழு நோயின் அறிகுறிகள் யாவை?

A) வயிற்று வலி

B) வாந்தி

C) இரத்த சோகை

D) இவை அனைத்தும்

விளக்கம்: வயிற்று வலி, வாந்தி, தலைவலி, இரத்த சோகை, எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை உருளைப்புழு நோயின் அறிகுறிகளாகும்.

107. யானைக்கால்நோய்____________ ஒட்டுண்ணியால் உண்டாகிறது.

A) அஸ்காரிஸ்லும்பிரிகாய்ட்ஸ்

B) மைக்ரோஸ்போரம்

C) உச்சரீரியா பான்கிராஃப்டி

D) டினியா பெடிஸ்

விளக்கம்: யானைக்கால் புழு (Filarial worm) என்று பொதுவாக அழைக்கப்படும் உச்சரீரியா பான்கிராஃப்டி (Wuchereria bancrofti) எனும் ஒட்டுண்ணியால் யானைக்கால்நோய் உண்டாகிறது.

108. யானைக்கால் புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, மனிதன் மற்றும்____________ கொசு என்ற இரு விருந்தோம்பிகளைக் கொண்டு நிறைவடைகிறது.

A) ஆண் கியுலக்ஸ்

B) பெண் கியுலக்ஸ்

C) ஆண் அனாபிலஸ்

D) பெண் அனாபிலஸ்

விளக்கம்: யானைக்கால் புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, மனிதன் மற்றும் பெண் கியுலக்ஸ் கொசு என்ற இரு விருந்தோம்பிகளைக் கொண்டு நிறைவடைகிறது.

109. பெண்யானைக்கால்புழுவால்____________ லார்வாக்கள் எனப்படும் இளம் உயிரிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

A) மைக்ரோபைலேரியே

B) மைக்ரோஸ்போரம்

C) உச்சரீரியா பான்கிராஃப்டி

D) டினியா பெடிஸ்

விளக்கம்: பெண்யானைக்கால்புழுவால் மைக்ரோபைலேரியே லார்வாக்கள் எனப்படும் இளம் உயிரிகள் (Juvenile) தோற்றுவிக்கப்படுகின்றன.

110. தொற்றுள்ள உணவு மற்றும் நீரின் மூலம் பரவும் நோய்கள் யாவை?

A) டைஃபாய்டு

B) அமீபியாசிஸ்

C) உருளைப்புழு நோய்

D) இவை அனைத்தும்

விளக்கம்: டைஃபாய்டு, அமீபியாசிஸ் மற்றும் உருளைப்புழு நோய் போன்ற பல்வேறு தொற்று நோய்கள், தொற்றுள்ள உணவு மற்றும் நீரின் மூலம் பரவுகின்றன.

111. ____________ என்பது நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பாகும்.

A) தடைகாப்பியல்

B) நோய்த்தடையியல்

C) நோய்த்தடைகாப்பியல்

D) நோய்யியல்

விளக்கம்: நோய்த்தடைகாப்பியல் என்பது நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பாகும்.

112. கூற்று(A): உடலுக்குள் அயல்பொருளாக நுழையும் சூழ்நிலை முகவர்களிடமிருந்து, உடலை பாதுகாக்க உடல் பயன்படுத்தும் அனைத்து செயல்முறைகளையும் குறிக்கிறது.

காரணம்(R): இம்மண்டலம் நோய்த்தடைக்காப்பு மண்டலம் எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உடலுக்குள் அயல்பொருளாக நுழையும் சூழ்நிலை முகவர்களிடமிருந்து, உடலை பாதுகாக்க உடல் பயன்படுத்தும் அனைத்து செயல்முறைகளையும் நோய்த்தடைக்காப்பு மண்டலம் குறிக்கிறது.

113. ____________ என்பது நல்ல உடல்நலத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும்.

A) ஆரோக்கியம்

B) பராமரிப்பு

C) சுகாதாரம்

D) பாதுகாப்பு

விளக்கம்: சுகாதாரம் என்பது நல்ல உடல்நலத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும்.

114. சுகாதாரம் என்பது “உடல்நலத்தைப்பராமரிக்கவும் நோய்கள் பரவுவதை தடுக்கவும் உதவும் சூழ்நிலைகள் மற்றும் நடவடிக்கைகள்” என்பது யாரின் கூற்றாகும்?

A) UNICEF

B) UNFAO

C) WHO

D) FAAO

விளக்கம்: உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) படி சுகாதாரம் என்பது “உடல்நலத்தைப்பராமரிக்கவும் நோய்கள் பரவுவதை தடுக்கவும் உதவும் சூழ்நிலைகள் மற்றும் நடவடிக்கைகள்” ஆகும்.

115. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல்திறனேயே நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது.

2] நோய்த்தடுப்பு என்பது அதிக இலக்கு திறன் கொண்டதாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல்திறனேயே நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு என்றும் பெயருண்டு. இத்தன்மை குறைவிற்கு, எளிதில் இலக்காகும் தன்மை என்று பெயர். நோய்த்தடுப்பு என்பது அதிக இலக்கு திறன் கொண்டதாகும்.

116. தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும், ____________ என அழைக்கப்படுகிறது

A) நேர் பொருள் தூண்டி

B) எதிர்ப்பொருள் தூண்டி

C) ஆன்டிபாடி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும், எதிர்ப்பொருள் தூண்டி (Antigen) என அழைக்கப்படுகிறது.

117. ஆன்டிஜென் என்பதில் ஆன்டி-உடல் ஜென் என்பது ____________

A) தடை

B) பாதுகாப்பு

C) பெருக்கிகள்

D) தூண்டிகள்

விளக்கம்: ஆன்டிஜென் என்பதில் (ஆன்டி-உடல் ஜென்- தூண்டிகள்).

118. உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரான நோய்த்தடுக்கும் ஆற்றல்____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செல்வழி நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: இயல்பு நோய்த்தடைகாப்பு உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரான நோய்த்தடுக்கும் ஆற்றலாகும்.

119. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும்.

2] இயல்பு நோய்த்தடைக்காப்பு பரந்தஅளவிலான திறன் கொண்ட நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகின்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும். இது பரந்தஅளவிலான திறன் கொண்ட நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகின்றது.

120. இலக்கு தன்மையற்ற நோய்த்தடைக்காப்பு என்பது ____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செல்வழி நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: இயல்பு நோய்த்தடைக்காப்பை இலக்கு தன்மையற்ற நோய்த்தடைக்காப்பு அல்லது இயற்கையான நோய்த்தடைகாப்பு எனக் கூறலாம்.

121. ____________ பாக்டீரியாவின் செல்சுவரைத் தகர்க்கின்றன.

A) ரைசோசைம்

B) லைசோசைம்

C) இன்டர்ஃபெரான்கள்

D) டையபீடெசிஸ்

விளக்கம்: லைசோசைம் பாக்டீரியாவின் எதிர்ப்புக் காரணியாக செயல்பட்டு பாக்டீரியாவின் செல்சுவரைத் தகர்க்கின்றன.

122. ____________ தொற்றில்லா செல்களில் வைரஸ் எதிர்ப்பை தூண்டுகின்றன.

A) ரைசோசைம்

B) லைசோசைம்

C) இன்டர்ஃபெரான்கள்

D) டையபீடெசிஸ்

விளக்கம்: இன்டர்ஃபெரான்கள் தொற்றில்லா செல்களில் வைரஸ் எதிர்ப்பை தூண்டுகின்றன.

123. வெள்ளையணுக்களால் உருவாக்கப்படும்____________ நோயூக்கி நுண்கிருமிகளை சிதைக்கின்றன.

A) நிரப்புப் பொருட்கள்

B) லைசோசைம்

C) இன்டர்ஃபெரான்கள்

D) டையபீடெசிஸ்

விளக்கம்: வெள்ளையணுக்களால் உருவாக்கப்படும் நிரப்புப் பொருட்கள் நோயூக்கி நுண்கிருமிகளை சிதைக்கின்றன அல்லது செல்விழுங்குதலை எளிதாக்குகின்றன.

124. கூற்று(A): காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது, அப்பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது.

காரணம்(R): இந்நிகழ்வு இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் வெளியேறுதல் என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது, அப்பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது. இப்பொருட்கள் விழுங்கு செல்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உட்செலுத்துகின்றன. இந்நிகழ்வு இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் வெளியேறுதல் என்று பெயர்.

125. இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் வெளியேறுதல்____________எனவும் அழைக்கப்படுகின்றன.

A) நிரப்புப் பொருட்கள்

B) லைசோசைம்

C) இன்டர்ஃபெரான்கள்

D) டையபீடெசிஸ்

விளக்கம்: இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் வெளியேறுதல் அல்லது டையபீடெசிஸ் (Diapedesis) என்று பெயர்.

126. வயிற்று சுரப்பிகள் சுரக்கும் அமிலம்____________

A) Nacl

B) HCl

C) HClO

D) HBr

விளக்கம்: வயிற்று சுரப்பிகள் சுரக்கும் அமிலம் (HCl) நாம் உட்கொள்ளும் உணவோடு சேர்ந்து வரும் நுண்ணுயிரிகளை கொல்கிறது.

127. தோலின் அமிலச்சூழல்____________ நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை குறைக்கிறது.

A) pH 2-5

B) pH 3-5

C) pH 4-5

D) pH 3-4

விளக்கம்: உடலின் உள்ளே நுழையும் நுண்ணுயிரிகளை தடுக்கிறது – தோலின் அமிலச்சூழல் (pH 3-5) நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை குறைக்கிறது.

128. ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைகாப்பு என்பது ____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செல்வழி நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைகாப்பே பெறப்பட்ட நோய்த் தடைகாப்பு எனப்படும். மேலும் இது, ஒரு குறிப்பிட்ட நுண்கிருமிக்கு எதிரான உடல் எதிர்ப்புத் திறன் ஆகும்.

129. பெறப்பட்ட நோய்த்தடைகாப்பின் சிறப்புப் பண்புகள் யாவை?

A) பல்வகைமைத் தன்மை

B) சுய மற்றும் அயல் மூலக்கூறுகளைக் கண்டறிதல்

C) நோய்த்தடைகாப்பு சார்ந்த நினைவாற்றல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டி குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் தன்மை, பல்வகைமைத் தன்மை, சுய மற்றும் அயல் மூலக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் நோய்த்தடைகாப்பு சார்ந்த நினைவாற்றல் ஆகியவை பெறப்பட்ட நோய்த்தடைகாப்பின் சிறப்புப் பண்புகளாகும்.

130. எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செல்வழி நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது செல்வழி நோய்த் தடைகாப்பு எனப்படும்.

131. செல்வழி நோய்த்தடைகாப்பிற்க்கு____________ உதவிபுரிகின்றன.

A) இயற்கைக் கொல்லி செல்கள்

B) T- செல்கள்

C) மேக்ரோஃபேஜ்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: செல்வழி நோய்த்தடைகாப்பிற்க்கு T- செல்கள் மேக்ரோஃபேஜ்கள் மற்றும் இயற்கைக் கொல்லி செல்கள் ஆகியவை உதவிபுரிகின்றன.

132. எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறை____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செல்வழி நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறைக்கு எதிர்ப்பொருள்வழி நோய்த்தடைகாப்பு அல்லது திரவவழி நோய்த்தடைகாப்பு என்று பெயர்.

133. எதிர்ப்பொருள் தூண்டிகளை முன்னிலைபடுத்தும் செல்கள் மற்றும் T-உதவி செல்கள் ஆகியவற்றின் துணையோடு____________ திரவவழி நோய்த்தடைகாப்பை செயலாக்குகின்றன.

A) S-செல்கள்

B) P-செல்கள்

C) B-செல்கள்

D) b-செல்கள்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிகளை முன்னிலைபடுத்தும் செல்கள் (Antigen presenting cells) மற்றும் T-உதவி செல்கள் ஆகியவற்றின் துணையோடு B-செல்கள் திரவவழி நோய்த்தடைகாப்பை செயலாக்குகின்றன.

134. எதிர்ப்பொருள் உற்பத்தி, ____________ சிறப்புப் பண்பாகும்.

A) ஊர்வன

B) பாலூட்டிகள்

C) முதுகெலும்பற்றவை

D) முதுகெலும்பிகள்

விளக்கம்: எதிர்ப்பொருள் உற்பத்தி, முதுகெலும்பிகளின் சிறப்புப் பண்பாகும்.

135. உடலில், எதிர்பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய்த்தடைகாப்பு____________

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: உடலில், எதிர்பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய்த்தடைகாப்பு சார்ந்த எதிர்ப்புத் திறனே செயலாக்க நோய்த் தடைகாப்பாகும்.

136. ____________ ஒரு நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி போடுவதன் விளைவாக உருவாகிறது.

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: செயலாக்க நோய்த்தடைகாப்பு ஒரு நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி போடுவதன் விளைவாக உருவாகிறது.

137. ____________ நினைவாற்றல் செல்களின் தோற்றத்திற்கு வழி வகுக்கிறது.

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: செயலாக்க நோய்த்தடைகாப்பு நினைவாற்றல் செல்களின் தோற்றத்திற்கு வழி வகுக்கிறது.

138. கூற்று(A): புறச்சூழலிலிருந்து எதிர்பொருட்கள் உயிரிக்குள் செலுத்தப்படுகின்றன.

காரணம்(R): இத்தடைக்காப்பு மந்தமான நோய்த்தடைகாப்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக எதிர்ப்பொருள் உற்பத்தி அவசியமில்லை. புறச்சூழலிலிருந்து எதிர்பொருட்கள் உயிரிக்குள் செலுத்தப்படுகின்றன. இத்தடைக்காப்பு மந்தமான நோய்த்தடைகாப்பு எனப்படும்.

139. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு என கண்டறிக?

1] தடை காப்பு பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுகின்றன.

2] நுண்கிருமி அல்லது எதிர்பொருள் தூண்டிகளின் தூண்டுதலால் இவை உருவாக்கப்படுகின்றது.

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: செயலாக்க நோய்த்தடைக்காப்பில் தடை காப்பு பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுகின்றன. நுண்கிருமி அல்லது எதிர்பொருள் தூண்டிகளின் தூண்டுதலால் இவை உருவாக்கப்படுகின்றது.

140. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு என கண்டறிக?

1] தடைகாப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது.

2] நோய்த்தடைக்காப்பு சிறிது காலத்திற்கு பிறகு தான் செயல்திறன் உடையதாக மாறும்.

A) பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: செயலாக்க நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது. நோய்த்தடைக்காப்பு சிறிது காலத்திற்கு பிறகு தான் செயல்திறன் உடையதாக மாறும்.

141. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு என கண்டறிக?

1] டைகாப்பு பொருட்கள் விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுவதில்லை.

2] வெளியில் இருந்து பெற்ற எதிர்ப்பொருட்களால் உற்பத்தியாகின்றன.

A) மந்தமான நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: மந்தமான நோய்த்தடைக்காப்பில் தடைகாப்பு பொருட்கள் (எதிர்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுவதில்லை. மாறாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் விருந்தோம்பியின் பங்களிப்பு கிடையாது. வெளியில் இருந்து பெற்ற எதிர்ப்பொருட்களால் உற்பத்தியாகின்றன.

142. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு என கண்டறிக?

1] நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றல் இல்லை.

2] நோய்த்தடைக்காப்பில், உடனே நோய்த்தடைகாப்பு உருவாகிறது.

A) மந்தமான நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: மந்தமான நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றல் இல்லை. இவ்வகை நோய்த்தடைக்காப்பில், உடனே நோய்த்தடைகாப்பு உருவாகிறது.

143. ____________ நிலையற்ற மற்றும் குறைந்த பாதுகாப்பை அளிக்கிறது.

A) மந்தமான நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: மந்தமான நோய்த்தடைகாப்பியல் நிலையற்ற மற்றும் குறைந்த பாதுகாப்பை அளிக்கிறது.

144. ____________ நீடித்த மற்றும் சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன.

A) மந்தமான நோய்த்தடைகாப்பு

B) இயல்பு நோய்த்தடைகாப்பு

C) செயலாக்க நோய்த்தடைகாப்பு

D) திரவவழி நோய்த்தடைகாப்பு

விளக்கம்: செயலாக்க நோய்த்தடைகாப்பியல் நீடித்த மற்றும் சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன.

145. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு துலங்கல்கள் என கண்டறிக?

1] ஒரு எதிர்ப்பொருள் தூண்டி முதன் முதலாக நோய்தடைக்காப்பு அமைப்புடன் தொடர்புக் கொள்வதால் இவை உருவாகின்றன.

2] இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: முதல்நிலை தடைக்காப்பு துலங்கலில் ஒரு எதிர்ப்பொருள் தூண்டி முதன் முதலாக நோய்தடைக்காப்பு அமைப்புடன் தொடர்புக் கொள்வதால் இவை உருவாகின்றன. இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

146. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு துலங்கல்கள் என கண்டறிக?

1] எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது.

2] நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: முதல்நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

147. முதல்நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருளின் செறிவு____________ முதல்____________ நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

A) 8 முதல் 11

B) 9 முதல் 10

C) 7 முதல் 10

D) 8 முதல் 12

விளக்கம்: முதல்நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருளின் செறிவு 7 முதல் 10 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

148. இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருளின் செறிவு____________ முதல்____________ நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

A) 3 முதல் 7

B) 3 முதல் 10

C) 3 முதல் 5

D) 3 முதல் 12

விளக்கம்: இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருளின் செறிவு 3 முதல் 5 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

149. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு துலங்கல்கள் என கண்டறிக?

1] முதல் நிலையில் சந்தித்த அதே எதிர்ப்பொருள் தூண்டியை இரண்டா வது அல்லது அடுத்தடுத்து எதிர்கொள்ளும் போது உருவாகிறது.

2] இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக குறைவான நேரமே போதுமானது.

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: முதல் நிலையில் சந்தித்த அதே எதிர்ப்பொருள் தூண்டியை இரண்டா வது அல்லது அடுத்தடுத்து எதிர்கொள்ளும் போது இரண்டாம் நிலை தடைக்காப்பு உருவாகிறது. இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக குறைவான நேரமே போதுமானது.

150. கீழ்க்கண்டவை எவ்வகையான தடைக்காப்பு துலங்கல்கள் என கண்டறிக?

1] எதிர்ப்பொருளின் அளவு நீண்ட காலம் உயர் நிலையில் உள்ளது.

2] எலும்புமஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கலில் எதிர்ப்பொருளின் அளவு நீண்ட காலம் உயர் நிலையில் உள்ளது. எலும்புமஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

151. எதிர்பொருள் தூண்டியை இனம் காணுதல் எந்த துலங்கலில் காணப்படுகின்றது?

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டியை இனம் காணுதல், அதற்கு எதிரான எதிர்ப்பொருளை உற்பத்தி செய்தல் மற்றும் இறுதியாக நினைவாற்றல் லிம்போசைட்டுகளை உருவாக்குதல் ஆகியவற்றை முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள் அறிந்து கொள்கிறது.

152. ஊக்கி துலங்கல் என அழைக்கப்படுவது____________

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: முதல்நிலைத் துலங்கலை விட அதிக அளவை அடைகிறது. எனவே இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கலை ஊக்கி துலங்கல் (Booster response) எனவும் அழைக்கலாம்.

153. எலும்பு மஜ்ஜையில் இரத்த செல்கள் உருவாகும் செயல்முறைகள்____________ என அழைக்கப்படுகிறது.

A) ரைசோசைம்

B) லைசோசைம்

C) ஹீமாட்டோபாயசிஸ்

D) டையபீடெசிஸ்

விளக்கம்: எலும்பு மஜ்ஜையில் இரத்த செல்கள் உருவாகும் செயல்முறைகள் ஹீமாட்டோபாயசிஸ் (Haematopoiesis) என அழைக்கப்படுகிறது.

154. லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள்____________

A) இனப்பெருக்க உறுப்புகள்

B) உடல பெருக்க உறுப்புகள்

C) இரத்தநாள உறுப்புகள்

D) நிணநீரிய உறுப்புகள்

விளக்கம்: லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள் நிணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

155. லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குவது____________

A) முதல்நிலை நீணநீரிய உறுப்புகள்

B) இரண்டாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

C) மூன்றாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

D) நான்காம் நிலை நீணநீரிய உறுப்புகள்

விளக்கம்: முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்குகிறது.

156. எதிர்ப்பொருள் தூண்டிகளை பிடித்து அவற்றை முதிர்ந்த லிம்போசைட்டுகளுடன் சேர்ப்பது____________

A) முதல்நிலை நீணநீரிய உறுப்புகள்

B) இரண்டாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

C) மூன்றாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

D) நான்காம் நிலை நீணநீரிய உறுப்புகள்

விளக்கம்: இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகள் எதிர்ப்பொருள் தூண்டிகளை பிடித்து அவற்றை முதிர்ந்த லிம்போசைட்டுகளுடன் சேர்க்கின்றன.

157. கீழ்க்கண்டவற்றுள் முதல்நிலை நிணநீரிய உறுப்புள் யாவை?

A) பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை

B) பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை

C) தைமஸ் சுரப்பி

D) இவை அனைத்தும்

விளக்கம்: பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை, பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பி போன்றவை முதல்நிலை நிணநீரிய உறுப்புகளாகும்.

158. B லிம்போசைட்டுகள் ____________ ல் முதிர்ச்சியடைந்து திரவழி நோய்தடைக்காப்பில் ஈடுபடுகின்றன.

A) பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை

B) பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை

C) தைமஸ் சுரப்பி

விளக்கம்: B லிம்போசைட்டுகள் பேப்ரீசியஸ் பையில் முதிர்ச்சியடைந்து திரவழி நோய்தடைக்காப்பில் ஈடுபடுகின்றன.

159. ____________ உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன

A) முதல்நிலை நீணநீரிய உறுப்புகள்

B) இரண்டாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

C) மூன்றாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

D) நான்காம் நிலை நீணநீரிய உறுப்புகள்

விளக்கம்: முதல்நிலை நிணநீரிய உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன.

160. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பாலூட்டிகளில் B- செல்களின் முதிர்ச்சி தைமஸில் நடைபெறுகின்றன.

2] பாலூட்டிகளில் T- செல்களின் முதிர்ச்சிஎலும்பு மஜ்ஜையி ல் நடைபெறுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பாலூட்டிகளில் B- செல்களின் முதிர்ச்சி எலும்பு மஜ்ஜையிலும் மற்றும் T- செல்களின் முதிர்ச்சி தைமஸிலும் நடைபெறுகின்றன.

161. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தைமஸின் ஒவ்வொரு நுண்கதுப்பும் மெடுல்லா என்னும் புற அடுக்கை கொண்டுள்ளன.

2] தைமஸின் ஒவ்வொரு நுண்கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் அக அடுக்கையும் கொண்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தைமஸின் ஒவ்வொரு நுண்கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் புற அடுக்கையும் மெடுல்லா என்னும் அக அடுக்கையும் கொண்டுள்ளன.

162. ____________ பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடையாத T செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

A) மெடுல்லா

B) கார்டெக்ஸ்

C) தைமோசின்

D) கார்டுல்லா

விளக்கம்: கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடையாத T செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

163. ____________ குறைந்த அளவிலான முதிர்ச்சியடைந்த தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.

A) மெடுல்லா

B) கார்டெக்ஸ்

C) தைமோசின்

D) கார்டுல்லா

விளக்கம்: மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடைந்த தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.

164. தைமஸிலிருந்து____________ என்னும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது.

A) மெடுல்லா

B) கார்டெக்ஸ்

C) தைமோசின்

D) கார்டுல்லா

விளக்கம்: தைமஸிலிருந்து தைமோசின் என்னும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது.

165. எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள்____________ என அழைக்கப்படுகின்றன.

A) மஜ்ஜை செல்கள்

B) எலும்பு செல்கள்

C) இரத்த செல்கள்

D) குருதியாக்க செல்கள்

விளக்கம்: எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள் (Stem cells), குருதியாக்க செல்கள் (Haematopoietic cells) என அழைக்கப்படுகின்றன.

166. ____________ ஒரு நிணநீரிய திசுவாகும்.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: எலும்பு மஜ்ஜை ஒரு நிணநீரிய திசுவாகும்.

167. வேறுபாடு அடைந்து பல்வேறு இரத்த செல்களாக மாறுகின்ற திறன் கொண்டவை____________

A) மஜ்ஜை செல்கள்

B) எலும்பு செல்கள்

C) இரத்த செல்கள்

D) குருதியாக்க செல்கள்

விளக்கம்: எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள் (Stem cells), குருதியாக்க செல்கள் (Haematopoietic cells) என அழைக்கப்படுகின்றன. இச்செல்கள் செல்பிரிதல் மூலம் பல்கி பெருகும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும் இவை தண்டுச் செல்களாகவே நீடிக்கின்றன அல்லது வேறுபாடு அடைந்து பல்வேறு இரத்த செல்களாக மாறுகின்ற திறன் கொண்டவையாக உள்ளன.

168. மைய நிணநீரிய உறுப்புகள்____________

A) முதல்நிலை நீணநீரிய உறுப்புகள்

B) இரண்டாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

C) மூன்றாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

D) நான்காம் நிலை நீணநீரிய உறுப்புகள்

விளக்கம்: முதல்நிலை அல்லது மைய நிணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

169. புற அமைப்பு நீணநீரிய உறுப்புகள்____________

A) முதல்நிலை நீணநீரிய உறுப்புகள்

B) இரண்டாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

C) மூன்றாம் நிலை நீணநீரிய உறுப்புகள்

D) நான்காம் நிலை நீணநீரிய உறுப்புகள்

விளக்கம்: இரண்டாம் நிலை அல்லது புற அமைப்பு நீணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

170. இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுக்கு எடுத்துகாட்டுகள் அல்லாதவை யாவை?

A) மண்ணீரல்

B) நிணநீர் முடிச்சுகள்

C) குடல்வால்

D) கல்லீரல்

விளக்கம்: மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள், குடல்வால், வயிற்றுக்குடல் பாதையில் உள்ள பேயர் திட்டுகள், டான்சில்கள், அடினாய்டுகள், MALT (கோழை படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்) GALT (குடல் சார்ந்த நிணநீரிய திசுக்கள்) BALT (மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரிய திசுக்கள்) போன்றவை இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுக்கு எடுத்துகாட்டுகளாகும்.

171. ____________ திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

A) மண்ணீரல்

B) நிணநீர் முடிச்சுகள்

C) குடல்வால்

D) அடினாய்டுகள்

விளக்கம்: நிணநீர் முடிச்சு திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

172. ____________ மற்றும் லிம்போசைட்டுகள் போன்ற வெள்ளையனுக்களால் நிணநீர் முடிச்சு நிரம்பியுள்ளது.

A) டென்டிரைட்டிக் செல்கள்

B) B செல்கள்

C) T செல்கள்

D) மாக்ரோஃபேஜ்கள்

விளக்கம்: மாக்ரோஃபேஜ்கள் மற்றும் லிம்போசைட்டுகள் போன்ற வெள்ளையனுக்களால் நிணநீர் முடிச்சு நிரம்பியுள்ளது.

173. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நிணநீர் முடிச்சு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி அல்ல.

2] நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற, ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிணநீர் முடிச்சு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற, ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.

174. பேயர் திட்டுகளில் காணப்படும் நோய்த்தடைக்காப்பு செல்கள் அல்லாதவை யாவை?

A) மேக்ரோஃபேஜ்கள்

B) டென்ரைட்டிக் செல்கள்

C) T செல்கள்

D) லிம்போசைட்டுகள்

விளக்கம்: பேயர் திட்டுகள் மேக்ரோஃபேஜ்கள், டென்ரைட்டிக் செல்கள், T செல்கள் மற்றும் B செல்கள் போன்ற பல்வேறு வகையான நோய்தடைக்காப்பு செல்களைக் கொண்டுள்ளன.

175. கீழ்க்கண்டவை எந்த திசு/ உறுப்பு என கண்டறிக?

1] இவை நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

2] இவை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் உதவுகின்றன.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: டான்சில்கள் நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இவை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் உதவுகின்றன. மேலும் இவை உள்நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.

176. ____________ ஒரு இணையான மென் திசுவாகும்.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: டான்சில்கள் (Tonsils) (அண்ண டான்சில்கள்) ஒரு இணையான மென் திசுவாகும்.

177. ____________ ஒரு இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பாகும்.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: மண்ணீரல் (Spleen) ஒரு இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பாகும்.

178. செல்வழி மற்றும் திரவவழி நோய்தடைகாப்பில் ஈடுபடுபவை____________

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: T மற்றும் B செல்களை கொண்டுள்ள மண்ணீரல் செல்வழி மற்றும் திரவவழி நோய்தடைகாப்பில் ஈடுபடுகின்றன.

179. கீழ்க்கண்டவை எந்த திசு/ உறுப்பு என கணடறிக?

1] நீள்வட்ட வடிவத்தில் தடித்து காணப்படும் ஒரு திசுவாகும்.

2] இவை மனிதன் மற்றும் முதுகெலும்பு உயிரிகளின் சிறுகுடலில் உள்ள கோழையை சுரக்கும் படலத்தில் புதைந்துள்ளன.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: பேயர் திட்டுகள் (Peyers’s patches) நீள்வட்ட வடிவத்தில் தடித்து காணப்படும் ஒரு திசுவாகும். இவை மனிதன் மற்றும் முதுகெலும்பு உயிரிகளின் சிறுகுடலில் உள்ள கோழையை சுரக்கும் படலத்தில் புதைந்துள்ளன.

180. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] டான்சில்கள் தொண்டையின் பின்புறம் அமைந்துள்ளன.

2] பேயர் திட்டுகள் மண்ணீரல் இது வயிற்றுக்குழிக்கு மேலே உதரவிதானத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: டான்சில்கள் தொண்டையின் பின்புறம் அமைந்துள்ளன. மண்ணீரல் இது வயிற்றுக்குழிக்கு மேலே உதரவிதானத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.

181. விடலை பருவத்தின் (Adolescence) போது சுருங்க தொடங்கி முதிர்காலத்தில் (Adulthood) மறைந்து விடுவது____________

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) மண்ணீரல்

D) அடினாய்டுகள்

விளக்கம்: பொதுவாக அடினாய்டுகள் விடலை பருவத்தின் (Adolescence) போது சுருங்க தொடங்கி முதிர்காலத்தில் (Adulthood) மறைந்து விடுகின்றன.

182. கீழ்க்கண்டவை எந்த திசு/ சுரப்பி என கண்டறிக?

1] வாயினுடைய கூரை பகுதியில் மென் அண்ணத்துக்கு பின்னால், நுகர்ச்சி உறுப்பு தொண்டையுடன் சேருமிடத்தில் அமைந்துள்ள சுரப்பியாகும்.

2] எதிர்பொருட்களை உற்பத்தி செய்து தொற்றுக்கு எதிரான செயலுக்கு உதவிபுரிகின்றன.

A) பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) அடினாய்டுகள்

D) மேக்ரோஃபேஜ்கள்

விளக்கம்: அடினாய்டுகள் என்பது வாயினுடைய கூரை பகுதியில் (Roof of mouth) மென் அண்ணத்துக்கு பின்னால், நுகர்ச்சி உறுப்பு தொண்டையுடன் சேருமிடத்தில் அமைந்துள்ள சுரப்பியாகும். அடினாய்டுகள், எதிர்பொருட்களை உற்பத்தி செய்து தொற்றுக்கு எதிரான செயலுக்கு உதவிபுரிகின்றன.

183. கீழ்க்கண்டவற்றுள் கார்டெக்ஸில் அல்லாதவை எவை?

A) B-லிம்போசைட்டுகள்

B) B- செல்கள்

C) மேக்ரோபேஜ்கள்

D) நுண்பை டென்டிரைட்டிக் செல்கள்

விளக்கம்: வெளி அடுக்கான கார்டெக்ஸில் B-லிம்போசைட்டுகள், மேக்ரோபேஜ்கள், நுண்பை டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.

184. கார்டெக்ஸுக்கு கீழே உள்ள பகுதி____________

A) மெகாகார்டெக்ஸ்

B) மைக்ரோகார்டெக்ஸ்

C) நானோகார்டெக்ஸ்

D) பாராகார்டெக்ஸ்

விளக்கம்: கார்டெக்ஸுக்கு கீழே உள்ள பகுதி பாராகார்டெக்ஸ் ஆகும்.

185. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பாராகார்டெக்ஸில் ஏராளமான T-லிம்போசைட்டுகள் மற்றும் விரலமைப்பு கொண்ட டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.

2] மெடுல்லாவின் உள்பகுதியில் குறைந்த அளவிலான B-லிம்போசைட்டுகள் உள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பாராகார்டெக்ஸில் ஏராளமான T-லிம்போசைட்டுகள் மற்றும் விரலமைப்பு கொண்ட டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன. மெடுல்லாவின் உள்பகுதியில் குறைந்த அளவிலான B-லிம்போசைட்டுகள் உள்ளன. ஆனால் அதில் பெரும்பாலானவை எதிர்பொருள் மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் பிளாஸ்மா செல்களாகும்.

186. MALT எனப்படுவது____________

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: MALT எனப்படுவது கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களாகும்.

187.GALT எனப்படுவது____________

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: GALT எனப்படுவது குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்களாகும்.

188. BALT எனப்படுவது____________

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: BALT எனப்படுவது மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்களாகும்.

189. இம்யுனோகுளோபுலின் A எதிர்ப்பு பொருளையும் கொண்டுள்ளது____________

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் இம்யுனோகுளோபுலின் A எதிர்ப்பு பொருளையும் கொண்டுள்ளது.

190. கீழ்க்கண்டவற்றுள் MALTல் அல்லாதவை எவை?

A) மேக்ரோஃபேஜ்கள்

B) பிளாஸ்மா செல்கள்

C) B செல்கள்

D) டென்டிரைட்டிக் செல்கள்

விளக்கம்: MALTல் ஏராளமான எண்ணிக்கையில் லிம்போசைட்டுகளின் வகையான T மற்றும் B செல்கள், பிளாஸ்மா செல்கள் மற்றும் மேக்ரோஃபேஜ்கள் ஆகியவை உள்ளன.

191. நிணநீரிய திசுக்களால் ஆக்கப்பட்டுள்ளவை ____________

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் நிணநீரிய திசுக்களால் (டான்சில்கள், நிணநீர் முடிச்சுகள், நிணநீர் நுண்பைகள்) ஆக்கப்பட்டுள்ளன.

192. கீழ்க்கண்டவை எவை என கண்டறிக?

1] இவை கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும்.

2] இவை நுகர்ச்சி குழிகளில் இருந்து நுரையீரல் வரையுள்ள சுவாசப் பதையின் கோழைப் படலத்தில் காணப்படுகின்றன.

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (BALT) கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும். நிணநீர் நுண்பைகள்) ஆக்கப்பட்டுள்ளன. இவை நுகர்ச்சி குழிகளில் இருந்து நுரையீரல் வரையுள்ள சுவாசப் பதையின் கோழைப் படலத்தில் காணப்படுகின்றன.

193. கீழ்க்கண்டவை எவை என கண்டறிக?

1] இவை கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும்.

2] வை குடலில் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளில் இருந்து உடலை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது.

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (GALT) கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும். இவை குடலில் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளில் (எதிர்பொருள் தூண்டிகள்) இருந்து உடலை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது.

194. கீழ்க்கண்டவை எவை என கண்டறிக?

1] உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுசீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன.

2] இவை கோழை எபிதீலிய படலத்தின் வழியாக வரும் எதிர்ப்பொருள் தூண்டிகளை அழிக்கின்றன.

A) குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

B) கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

D) எலும்பு சார்ந்த நிணநீரியத் திசுக்கள்

விளக்கம்: கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (MALT) உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுசீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன. இவை கோழை எபிதீலிய படலத்தின் வழியாக வரும் எதிர்ப்பொருள் தூண்டிகளை அழிக்கின்றன.

195. பொருத்துக

a) இரத்தசிவப்பணுக்கள் – 1] 4200,000–6500,000

b) லிம்போசைட்டுகள் – 2] 1500 – 4000

c) மோனோசைட்டுகள் – 3] 200-950

d) நியூட்ரோபில்கள் – 4] 2000-7000

e) பேசோபில்கள் – 5] 50-100

a b c d e

A) 3 1 2 4 5

B) 2 1 3 4 5

C) 2 1 4 3 5

D) 1 2 3 4 5

196. பொருத்துக

a) இயோசினோபில்கள் – 1] 2-5

b) லிம்போசைட்டுகள் – 2] 20-30

c) மோனோசைட்டுகள் – 3] 2-7

d) நியூட்ரோபில்கள் – 4] 50-70

e) பேசோபில்கள் – 5] <1

a b c d e

A) 3 1 2 4 5

B) 2 1 3 4 5

C) 2 1 4 3 5

D) 1 2 3 4 5

197. நீண்ட, மெல்லிய சவ்வின் நீட்சிகாலால் சூழப்பட்டு, நரம்பு செல்லின் டென்ரைட்டுகள் போலத் தோன்றுவது ____________

A) T செல்கள்

B) பிளாஸ்மா செல்கள்

C) B செல்கள்

D) டென்டிரைட்டிக் செல்கள்

விளக்கம்: டென்ரைடிக் செல்கள் நீண்ட, மெல்லிய சவ்வின் நீட்சிகாலால் சூழப்பட்டு, நரம்பு செல்லின் டென்ரைட்டுகள் போலத் தோன்றுவதால் அவை அவ்விதம் அழைக்கப்படுகிறது.

198. டென்டிரைட்டிக் செல்கள் எதிர் பொருள் தூண்டிகளை____________ செல்களிடம் வழங்குகிறது.

A) T செல்கள்

B) பிளாஸ்மா செல்கள்

C) B செல்கள்

D) T-ஹெல்பர்

விளக்கம்: டென்டிரைட்டிக் செல்கள் எதிர் பொருள் தூண்டிகளை T-ஹெல்பர் செல்களிடம் வழங்குகிறது. நான்கு வகையான டென்ரைட்டு செல்கள் அறியப்பட்டுள்ளன.

199. நான்கு வகையான டென்ரைட்டு செல்கள் அல்லாதவை யாவை?

A) லாங்கர்ஹான்கள்

B) இடையீட்டுச் செல்கள்

C) மைலாய்டு

D) டென்ட்ராய்ட்டு

விளக்கம்: நான்கு வகையான டென்ரைட்டு செல்கள் அறியப்பட்டுள்ளன. அவையாவன லாங்கர்ஹான்கள், இடையீட்டுச் செல்கள், மைலாய்டு மற்றும் லிம்ப்பாய்டு செல்களாகும்.

200. இரத்தத்திலுள்ள வெள்ளையணுக்களில் ஏறத்தாழ____________ லிம்போசைட்டுகள் ஆகும்.

A) 20-40%

B) 20-50%

C) 25-30%

D) 20-30%

விளக்கம்: இரத்தத்திலுள்ள வெள்ளையணுக்களில் ஏறத்தாழ 20-30% லிம்போசைட்டுகள் ஆகும்.

201. ____________ புறப்பரப்பில் உணர்வேற்பிகள் காணப்படுகின்றன.

A) T செல்கள்

B) பிளாஸ்மா செல்கள்

C) B செல்கள்

D) T-ஹெல்பர்

விளக்கம்: B- செல்களின் புறப்பரப்பில் காணப்படுகின்ற உணர்வேற்பிகள் (Receptors) எதிர்ப்பொருள் தூண்டிகளுடன் இணைந்தவுடன் B- செல்கள் தூண்டப்பட்டு, விரைவாக பெருக்கமடைந்து பிளாஸ்மா செல்களை உற்பத்தி செய்கின்றன.

202. ‘B’ செல்களின் நினைவாற்றல் செல்கள்____________ துலங்கல்களில் ஈடுபடுகின்றன.

A) முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

B) செயலாக்க தடைக்காப்பு துலங்கல்கள்

C) இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள்

D) இயல்பு தடைக்காப்பு துலங்கல்கள்

விளக்கம்: ‘B’ செல்கள் எதிர்ப்பொருளை உற்பத்தி செய்யாமல் நினைவாற்றல் செல்களாகின்றன. நினைவாற்றல் செல்கள் இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல்களில் (Secondary Immune Responses) ஈடுபடுகின்றன.

203. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] T – லிம்போசைட்டுகள் எதிர்ப்பொருள்களைஉற்பத்தி செய்வதில்லை.

2] லிம்போசைட்டுகள் எதிர்ப்பொருள் தூண்டி முன்னிலைப்படுத்தும் நோயூக்கி செல்களை அடையாளம் கண்டு அழிக்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: T – லிம்போசைட்டுகள் எதிர்ப்பொருள்களைஉற்பத்தி செய்வதில்லை. மாறாக, எதிர்ப்பொருள் தூண்டி முன்னிலைப்படுத்தும் நோயூக்கி செல்களை அடையாளம் கண்டு அழிக்கின்றன. T-செல்களில் உதவி T-செல்கள், கொல்லி T-செல்கள் என இரு பெரும் வகைகள் காணப்படுகின்றன.

204. ____________ சைட்டோகைன் எனும் வேதிப்பொருளை வெளியேற்றுகின்றன.

A) உதவி T-செல்கள்

B) கொல்லி T-செல்கள்

C) நியுட்ரோஃபில்கள்

D) மேக்ரோஃபேஜ்கள்

விளக்கம்: உதவி T-செல்கள், சைட்டோகைன் எனும் வேதிப்பொருளை வெளியேற்றுகின்றன.

205. மோனோசைட்டுகள் பெரிய செல்களாக, முதிர்ச்சியடைந்ததும் ____________ என்று அழைக்கப்படுகின்றன.

A) உதவி T-செல்கள்

B) கொல்லி T-செல்கள்

C) நியுட்ரோஃபில்கள்

D) மேக்ரோஃபேஜ்கள்

விளக்கம்: மோனோசைட்டுகள் பெரிய செல்களாக, முதிர்ச்சியடைந்ததும் மேக்ரோஃபேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

206. ____________ புற ஏற்பியுடன் வினைபுரியும் ஒரு பொருளே எதிர்ப்பொருள் தூண்டி எனப்படும்.

A) T செல்கள்

B) பிளாஸ்மா செல்கள்

C) B செல்கள்

D) T-ஹெல்பர்

விளக்கம்: T-செல் புற ஏற்பியுடன் வினைபுரியும் ஒரு பொருளே எதிர்ப்பொருள் தூண்டி எனப்படும்.

207. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] முதன்மை திசுபொருத்த எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பவை செல்களின் புறபரப்பில் காணப்படும் எதிர்பொருள் தூண்டிகளாகும்.

2] இவை தடைக்காப்பு துலங்கல்களை தூண்டுவதன் விளைவாக ஒரே இன உயிரிகளுக்கிடையே மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: முதன்மை திசுபொருத்த எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பவை செல்களின் புறபரப்பில் காணப்படும் எதிர்பொருள் தூண்டிகளாகும். இவை தடைக்காப்பு துலங்கல்களை தூண்டுவதன் விளைவாக ஒரே இன உயிரிகளுக்கிடையே மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுகிறது.

208. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] எதிர்பொருள் தூண்டிகள் என்பவை தடைக்காப்பு துலங்கலை உண்டாக்கும். மூலக்கூறுகளை விளக்குகிறது.

2] எதிர்பொருள் தூண்டிகள் என்பவை முன்னர் உருவாகிய எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் மூலக்கூறுகளைக் குறிக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எதிர்பொருள் தூண்டிகள் எனும் சொல்லுக்கு இருவிதமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று இவை தடைக்காப்பு துலங்கலை உண்டாக்கும். மூலக்கூறுகளை விளக்குகிறது. மற்றொன்று முன்னர் உருவாகிய எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் மூலக்கூறுகளைக் குறிக்கிறது.

209. கூற்று(A): தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியது.

காரணம்(R): இவை ஹாப்டென்கள் எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஹாப்டென்கள் (Haptens) என்பவை தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியதாகும்.

210. ____________ என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும்.

A) ஹாப்டென்கள்

B) எபிடோப்

C) பாராடோப்

D) துணையூக்கிகள்

விளக்கம்: எபிடோப் (Epitope) என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும்.

211. ____________ என்பது எதிர்ப்பொருள் தூண்டி பிணையும் பகுதியாகும்.

A) ஹாப்டென்கள்

B) எபிடோப்

C) பாராடோப்

D) துணையூக்கிகள்

விளக்கம்: பாராடோப் (Paratope) என்பது எதிர்ப்பொருள் தூண்டி பிணையும் பகுதியாகும்.

212. எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள்____________

A) ஹாப்டென்கள்

B) எபிடோப்

C) பாராடோப்

D) துணையூக்கிகள்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள் துணையூக்கிகள் (Adjuvants) எனப்படும்.

213. ____________ திர்ப்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும்.

A) ஹாப்டென்கள்

B) எபிடோப்

C) பாராடோப்

D) துணையூக்கிகள்

விளக்கம்: எபிடோப் எதிர்ப்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும்.

214. தடைக்காப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு____________

A) தடைக்காப்பு மூலக்கூறு

B) தடைக்காப்பு தூண்டி

C) தடைக்காப்பு துணையூக்கிகள்

D) தடைக்காப்புதுலங்கல்

விளக்கம்: தடைக்காப்பு தூண்டி (Immunogen) என்பவை தடைக்காப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு ஆகும்.

215. கூற்று(A): ஒரு எதிர்ப்பொருள் தூண்டி ஒரு குறிப்பிட்ட தடைக்காப்பு துலங்கலால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிக்கிறது.

காரணம்(R): இது எதிர்ப்பொருள் உருவாக்கும் திறன் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: எதிர்ப்பொருள் உருவாக்கும் திறன் (Antigenicity) என்பது ஒரு எதிர்ப்பொருள் தூண்டி ஒரு குறிப்பிட்ட தடைக்காப்பு துலங்கலால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிக்கும் பண்பாகும்.

216. கீழ்க்கண்டவற்றுள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் அல்லாதவை எவை?

A) நுண்ணுயிரிகள்

B) மகரந்த துகள்கள்

C) மருந்துபொருட்கள்

D) மனித இரத்தவகை

விளக்கம்: நுண்ணுயிரிகள், மகரந்த துகள்கள், மருந்துபொருட்கள் மற்றும் மாசுபடுத்திகள் வெளிச்சூழலில் இருந்து விருந்தோம்பியின் உடலில் நுழைவதால் அவைகள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் என அழைக்கப்படுகின்றன.

217. கூற்று(A): தனி உயிரியின் உடலுக்குள்ளே உருவாகும் எதிர்ப்பொருள் தூண்டிகள் உருவாகின்றன.

காரணம்(R): இது அகந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தனி உயிரியின் உடலுக்குள்ளே உருவாகும் எதிர்ப்பொருள் தூண்டிகள் அகந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகளாகும்.

218. கூற்று(A): எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக புரத மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

காரணம்(R): இது இம்யுனோகுளோபுலின் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகளே எதிர்பொருட்கள் அல்லது இம்யுனோகுளோபுலின் (Ig) எனப்படும்.

219. எதிர்பொருள் தூண்டிகளுக்கு எதிராக B-செல்கள் உற்பத்தி செய்யும் செல்கள்____________

A) B செல்கள்

B) T செல்கள்

C) பிளாஸ்மா செல்கள்

D) B-லிம்போசைட்டுகள்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டிகளுக்கு எதிராக B-செல்கள் உற்பத்தி செய்யும் செல்கள் பிளாஸ்மா செல்கள் எனப்படும்.

220. கீழ்க்கண்டவற்றுள் எதிர்ப்பொருட்களின் வகைகள் அல்லாதவை எவை?

A) IgG

B) IgB

C) IgM

D) IgD

விளக்கம்: உடற்செயலிய மற்றும் உயிர்வேதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பொருட்கள் IgG (காமா), IgM (மியு), IgA (ஆல்ஃபா), IgD (டெல்டா) மற்றும் IgE (எப்சிலான்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

221. இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு யாரால் கண்டுபுடிக்கப்பட்டது?

A) டெர்மென்

B) ஈடெல்மென்

C) போர்டெல்

D) போர்டெர் மற்றும் ஈடெல்மென்

விளக்கம்: 1950 களில் போர்டெர் (Porter) மற்றும் ஈடெல்மென் (Edelmen) ஆகியோர், செய்த சோதனைகளின் முடிவில், இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

222. இம்யுனோகுளோபினின் எதிர்ப்பொருள் Y-வடிவ அமைப்புடன்____________ பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.

A) மூன்று

B) இரண்டு

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: இம்யுனோகுளோபினின் எதிர்ப்பொருள் Y-வடிவ அமைப்புடன் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.

223. இம்யுனோகுளோபின் பணிகள் யாவை?

A) வீழ்படிவாக்குதல்

B) எதிர்பொருள் தூண்டிகளை திரிபடைய செய்தல்

C) எதிர்பொருள் தூண்டிகளின் மீது மேல் பூச்சு செய்தல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டிகளை திரிபடைய செய்தல் (Agglutination), வீழ்படிவாக்குதல் (Precipitation), அவற்றின் நச்சை சமநிலைபடுத்தல் (Neutralization) மற்றும் எதிர்பொருள் தூண்டிகளின் மீது மேல் பூச்சு செய்தல் (Opsonisation) போன்ற பணிகளை இம்யுனோகுளோபின் செய்கின்றன.

224. தூண்டிபிணைப்பு இடங்கள் காணப்படுகின்றன. எதிர்ப்பொருள் ஒற்றைப் படியின் தண்டாக இருக்கக்கூடிய____________ எதிர்ப்பொருளின் வகையை நிர்ணயிக்கிறது.

A) B பகுதி

B) C பகுதி

C) T பகுதி

D) S பகுதி

விளக்கம்: தூண்டிபிணைப்பு இடங்கள் காணப்படுகின்றன. எதிர்ப்பொருள் ஒற்றைப் படியின் தண்டாக இருக்கக்கூடிய ‘C’ பகுதி, எதிர்ப்பொருளின் வகையை நிர்ணயிக்கிறது.

225. எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள்களுக்கிடையான வினை நடைபெறும் நிலை யாவை?

A) எதிர்பொருள் தூண்டி- எதிர்ப்பொருள் கூட்டமைப்பு உருவாகிறது.

B) திரிபடைய செய்தல்

C) வீழ்படிவாதல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள்களுக்கிடையான வினை மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. முதல்நிலையில் எதிர்பொருள் தூண்டி- எதிர்ப்பொருள் கூட்டமைப்பு உருவாகிறது. இரண்டாவது நிலையில் திரிபடைய செய்தல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.

226. கூற்று(A): ஒரு நோயூக்கியை ஒரு விழுங்கி செல் சிதைத்தோ அல்லது விழுங்கியோ அழிக்க அடையாலமிடுதலைக் குறிக்கிறது.

காரணம்(R): இது மேல்ப்பூச்சாக்கம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு நோயூக்கியை ஒரு விழுங்கி செல் சிதைத்தோ அல்லது விழுங்கியோ அழிக்க அடையாலமிடுதலைக் குறிக்கிறது. இது மேல்ப்பூச்சாக்கம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல் எனப்படும்.

227. மேல்பூச்சாக்க முறையில் ____________ எனப்படும் எதிர்ப்பொருள், நோயூக்கியின் செல்சவ்வில்உள்ள உணர் வேற்பியுடன் (Receptor) பிணைகின்றன.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) எதிர்ப்பொருள் ஈர்ப்பு

விளக்கம்: மேல்பூச்சாக்க முறையில் மேல்பூச்சாக்கி (Opsonin) எனப்படும் எதிர்ப்பொருள், நோயூக்கியின்செல்சவ்வில்உள்ள உணர் வேற்பியுடன் (Receptor) பிணைகின்றன.

228. நடுநிலையாக்கத்தில் எதிர்பொருட்கள்____________ என அழைக்கப்படுகின்றன.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) நச்சு எதிர்பொருட்கள்

விளக்கம்: நடுநிலையாக்கத்தில் எதிர்பொருட்கள் நச்சு எதிர்பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.

229. நச்சு எதிர்ப்பொருட்கள் பாக்டீரிய புறநச்சு அல்லது____________ எதிராக விருந்தோம்பியின் செல்களால் உருவாக்கப்படுகின்றன.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) நச்சு எதிர்பொருட்கள்

விளக்கம்: நச்சு எதிர்ப்பொருட்கள் பாக்டீரிய புறநச்சு அல்லது முறித்த நச்சு (டாக்சாய்டு) விற்கு எதிராக விருந்தோம்பியின் செல்களால் உருவாக்கப்படுகின்றன.

230. கூற்று(A): ஒரு துகள் தன்மை கொண்ட எதிர்ப்பொருள் தூண்டி எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் போது அத்துகள் எதிர்ப்பொருள் தூண்டிகள் திரிபடைகின்றன அல்லது திரட்சி அடைகின்றன.

காரணம்(R): இது திரட்சி வினை அல்லது திரிபடைதல் வினை என்று அழைக்கப்படுகின்றது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: திரட்சி அடைதல் (Agglutination): ஒரு துகள் தன்மை கொண்ட எதிர்ப்பொருள் தூண்டி எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் போது அத்துகள் எதிர்ப்பொருள் தூண்டிகள் திரிபடைகின்றன அல்லது திரட்சி அடைகின்றன. இது திரட்சி வினை அல்லது திரிபடைதல் வினை என்று அழைக்கப்படுகின்றது.

231. திரிபடைதலை உருவாக்கும் எதிர்ப்பொருள்____________ எனப்படுகிறது.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) நச்சு எதிர்பொருட்கள்

விளக்கம்: திரிபடைதலை உருவாக்கும் எதிர்ப்பொருள் திரளி (அக்ளூட்டினின்) எனப்படுகிறது.

232. கூற்று(A): கரையக்கூடிய எதிர்ப்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள் ஆகியவற்றுக்கிடையேயான வினைகள் மூலம் காணக்கூடிய வீழ்படிவு உருவாகிறது.

காரணம்(R): இது வீழ்படிவாக்க வினை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வீழ்படிவாக்க வினை (Precipitin reaction) : கரையக்கூடிய எதிர்ப்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள் ஆகியவற்றுக்கிடையேயான வினைகள் மூலம் காணக்கூடிய வீழ்படிவு உருவாகிறது. இது வீழ்படிவாக்க வினை (Precipitin reaction) எனப்படும்.

233. எதிர்பொருள் தூண்டியுடன் வினைபுரிந்து வீழ்படிவுகளை உருவாக்கும் எதிர்ப்பொருட்கள்____________ என அழைக்கப்படுகின்றன.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) வீழ்படிவாக்கிகள்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டியுடன் வினைபுரிந்து வீழ்படிவுகளை உருவாக்கும் எதிர்ப்பொருட்கள் வீழ்படிவாக்கிகள் (Precipitins) என அழைக்கப்படுகின்றன.

234. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] எதிர்ப்பொருள்தூண்டி – எதிர்ப்பொருள் வினைகள் இரத்த பரிமாற்றத்தின் போது இரத்த வகைகளை நிர்ணயித்தலில் பயன்படுகிறது.

2] தொற்றுகிருமிகளை கண்டறிவதற்கான சீரம் சார்ந்த உறுதிபடுத்தும் சோதனையிலும் எதிர்ப்பொருள்தூண்டி – எதிர்ப்பொருள் வினைகள் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எதிர்ப்பொருள்தூண்டி – எதிர்ப்பொருள் வினைகளின் பயன்பாடுகளாவன: இரத்த பரிமாற்றத்தின் போது இரத்த வகைகளை நிர்ணயித்தலில் பயன்படுகிறது. தொற்றுகிருமிகளை கண்டறிவதற்கான சீரம் சார்ந்த உறுதிபடுத்தும் சோதனையிலும் பயன்படுகிறது.

235. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] எதிர்ப்பொருள்தூண்டி – எதிர்ப்பொருள் வினைகள் அயல்பொருட்களை கண்டறிவதற்கான தடைக்காப்பு மதிப்பீட்டிலான சோதனையில் பயன்படுகிறது.

2] சீரத்தில் புரதம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் சோதனை சோதனையிலும் எதிர்ப்பொருள்தூண்டி – எதிர்ப்பொருள் வினைகள் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அயல்பொருட்களை கண்டறிவதற்கான தடைக்காப்பு மதிப்பீட்டிலான சோதனை, சீரத்தில் புரதம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் சோதனை மற்றும் சில தடைக்காப்பு குறைவு நோய்களின் பண்புகளை கண்டறியும் சோதனை போன்றவற்றில் தூண்டி-எதிர்ப்பொருள் வினை பெரிதும் பயன்படுகிறது.

236. எதிர்பொருள் தூண்டியையும் எதிர்ப்பொருளையும் பிணைக்ககூடிய பிணைப்பு____________ பண்பு கொண்டதாகும்.

A) சமமற்ற பிணை பண்பு

B) எதிர்ப்பொருள் ஈர்ப்பு

C) இணை பிணை பண்பு

D) சக பிணைப்பில்லாத பண்பு

விளக்கம்: எதிர்பொருள் தூண்டியையும் எதிர்ப்பொருளையும் பிணைக்ககூடிய பிணைப்பு சக பிணைப்பில்லாத பண்பு கொண்டதாகும்.

237. கீழ்க்கண்டவற்றுள் சகபிணைப்பற்ற பிணைப்புகள் அல்லாதவை யாவை?

A) மின்நிலை விசை பிணைப்புகள்

B) ஹைட்ரஜன் பிணைப்பு

C) வான்டர்வால் ஆற்றல்

D) கார்பன் பிணைப்பு

விளக்கம்: மின்நிலை விசை பிணைப்புகள், ஹைட்ரஜன் பிணைப்பு, வான்டர்வால் ஆற்றல் மற்றும் நீர்விலக்கு பிணைப்பு ஆகியன சகபிணைப்பற்ற பிணைப்புகளாகும்.

238. ஒரு எதிர்ப்பொருள் தூண்டியின் நிர்ணயக்கூறுகளுக்கும் ஒரு எதிர்ப்பொருளின் பிணைப்பிடத்திற்கும் இடையேயான வினைகளின் வலிமையே____________ எனப்படும்.

A) டாக்சாய்டு

B) மேல்பூச்சாக்கி

C) அக்ளூட்டினின்

D) எதிர்ப்பொருள் ஈர்ப்பு

விளக்கம்: ஒரு எதிர்ப்பொருள் தூண்டியின் நிர்ணயக்கூறுகளுக்கும் ஒரு எதிர்ப்பொருளின் பிணைப்பிடத்திற்கும் இடையேயான வினைகளின் வலிமையே எதிர்ப்பொருள் ஈர்ப்பு எனப்படும்.

239. எதிர்ப்பொருள் தூண்டி- எதிர்ப்பொருள் வினையின் இணைப்பு விசை 3 காரணிகள் யாவை?

A) எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொ ருள் இடையேயான நெருக்கம்

B) சகபிணைப்பு அல்லாத மூலக்கூறுகளிடையேயான விசை

C) எதிர்ப்பொருள் ஈர்ப்பு

D) இவை அனைத்தும்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டி- எதிர்ப்பொருள் வினையின் இணைப்பு விசை 3 காரணிகளால் அமைகின்றன. இவை எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொ ருள் இடையேயான நெருக்கம், சகபிணைப்பு அல்லாத (Non covalent) அல்லது மூலக்கூறுகளிடையேயான விசை மற்றும் எதிர்ப்பொருள் ஈர்ப்பு ஆகியவையாகும்.

240. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இம்யுனோகுளோபின்ஒன்று C-முனையாகும் (அமினோ முனை)

2] மற்றொன்று N-முனை அல்லது கார்பாக்ஸைல்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இம்யுனோகுளோபின் ஒவ்வொரு சங்கிலியும் (L மற்றும் H) இரண்டு முனைகளைக் கொண்டுள்ளது. ஒன்று C-முனையாகும் (கார்பாக்ஸைல்) மற்றொன்று N-முனை அல்லது அமினோ முனையாகும்.

241. ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக செயல்திறனுள்ள பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத் தயாரிப்பே____________ எனப்படும்.

A) டாக்சாய்டு

B) ஆன்டிஜன்

C) ஆன்டிபாடி

D) தடுப்பு மருந்து

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக செயல்திறனுள்ள பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத் தயாரிப்பே தடுப்பு மருந்து எனப்படும்.

242. ____________ வயதான, குறைவான வீரியம் கொண்ட வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்தில் வயதான, குறைவான வீரியம் கொண்ட வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

243. கீழ்க்கண்டவற்றுள் வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்துகள் அல்லாதவை யாவை?

A) தட்டம்மை

B) புட்டாளம்மை

C) ரூபெல்லா

D) போலியோ

விளக்கம்: வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்துக்கு எ.கா. தட்டம்மை, புட்டாளம்மை மற்றும் ரூபெல்லா (MMR) மற்றும் சின்னம்மை (வேரிசெல்லா) தடுப்பு மருந்து.

244. வெப்பம் மற்றும் பிறமுறைகளால் கொல்லப்பட்டவை அல்லது செயலிழக்கம் செய்யப்பட்டவை____________

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: கொல்லப்பட்ட (செயலிழக்க செய்த) தடுப்பு மருந்துகள் என்பவை வெப்பம் மற்றும் பிறமுறைகளால் கொல்லப்பட்டவை அல்லது செயலிழக்கம் செய்யப்பட்டவையாகும்.

245. சாலக் போலியோ தடுப்பு மருந்து ____________

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: கொல்லப்பட்ட (செயலிழக்க செய்த) தடுப்பு மருந்துக்கு எ.கா. சாலக் போலியோ தடுப்பு மருந்து.

246. ____________ பாக்டீரியா அல்லது வைரஸ்களால் சுரக்கப்பட்ட நச்சு அல்லது வேதிப்பொருள்கள் உள்ளன.

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) முறிந்த நச்சு தடுப்பு மருந்து

விளக்கம்: முறிந்த நச்சு தடுப்பு மருந்தில், பாக்டீரியா அல்லது வைரஸ்களால் சுரக்கப்பட்ட நச்சு அல்லது வேதிப்பொருள்கள் உள்ளன. இவை நோய் தொற்றின் தீய விளைவுகளுக்கு எதிரான நோய்தடைகாப்பை நமக்கு அளிக்கின்றன.

247. முத்தடுப்பு மருந்து____________

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) முறிந்த நச்சு தடுப்பு மருந்து

விளக்கம்: முறிந்த நச்சு தடுப்பு மருந்துக்கு எ.கா. முத்தடுப்பு மருந்து (DPT) (தொண்டை அடைப்பான், கக்குவான் – இருமல் மற்றும் இரணஜன்னி).

248. ____________ நோயூக்கிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும்.

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் என்பவை நோயூக்கிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும்.

249. கல்லீரல் அழற்சி B தடுப்பு மருந்து____________

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துக்கு எ.கா. கல்லீரல் அழற்சி B தடுப்பு மருந்து.

250. கூற்று(A): தடுப்பு மருந்துகளை நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

காரணம்(R): இது தடுப்பு மருந்து சிகிச்சை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தடுப்பு மருந்துகளை நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தும் முறை தடுப்பு மருந்து சிகிச்சை எனப்படும்.

251. ____________ பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை முதன் முதலில் தயாரித்தார்.

A) டாக்டர்ஜோனந் சால்க்

B) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

C) லூயிஸ் பாஸ்டர்

D) டாக்டர் எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: டாக்டர் எட்வர்ட் ஜென்னர் 1796 ல் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை முதன் முதலில் தயாரித்தார்.

252. போலியோ தடுப்பு மருந்தை____________ தயாரித்தார்.

A) டாக்டர்ஜோனந் சால்க்

B) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

C) லூயிஸ் பாஸ்டர்

D) டாக்டர் எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: போலியோ தடுப்பு மருந்தை (கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளை கொண்ட தடுப்பு மருந்து) டாக்டர் ஜோனந் சால்க் என்பவர் தயாரித்தார்.

253. வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை____________ தயாரித்தார்.

A) டாக்டர்ஜோனந் சால்க்

B) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

C) லூயிஸ் பாஸ்டர்

D) டாக்டர் எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் சாபின் என்பவர் தயாரித்தார்.

254. ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை____________கண்டுபுடித்தார்.

A) டாக்டர்ஜோனந் சால்க்

B) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

C) லூயிஸ் பாஸ்டர்

D) டாக்டர் எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தார்.

255. லூயிஸ் பாஸ்டர் வெறிநாய்கடிக்கு தடுப்பு மருந்து கண்டுபுடித்த ஆண்/டு____________

A) 1884*

B) 1885

C) 1886

D) 1887

விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் வெறிநாய்கடிக்கு தடுப்பு மருந்து கண்டுபுடித்த ஆண்டு: 1885.

256. BCG தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட ஆண்டு____________

A) 1907

B) 1908

C) 1909

D) 1910

விளக்கம்: BCG தடுப்பு மருந்து கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக 1908 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது.

257. ____________ செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும்.

A) முதல் தலைமுறை தடுப்பு மருந்து

B) வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து

C) மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

D) இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள்

விளக்கம்: மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும்.

258. தடுப்பு மருந்தின் சமீபத்திய புரட்சி____________

A) ஆர். என். ஏ தடுப்பு மருந்து

B) இணைவு தடுப்பு மருந்து

D) மறுசேர்க்கை இணைவு தடுப்பு மருந்து

D) டி.என்.ஏ தடுப்பு மருந்து

விளக்கம்: தடுப்பு மருந்தின் சமீபத்திய புரட்சி டி.என்.ஏ தடுப்பு மருந்து அல்லது மறுசேர்க்கை தடுப்பு மருந்து ஆகும்.

259. ____________ ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்த்தடைக்காப்பை நமது உடல் உருவாக்குவதாகும்.

A) தடுப்பு மருந்தேற்றம்

B) மிகைஉணர்மை

C) அனாபைலாக்சிஸ்

D) நோய்த்தடுப்பாக்கம்

விளக்கம்: நோய்த்தடுப்பாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்த்தடைக்காப்பை நமது உடல் உருவாக்குவதாகும்.

260. ____________ குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்தடைக்காப்பை ஏற்படுத்துவதற்காக நமது உடலில் தடுப்பு மருந்தை செலுத்துவதாகும்.

A) தடுப்பு மருந்தேற்றம்

B) மிகைஉணர்மை

C) அனாபைலாக்சிஸ்

D) நோய்த்தடுப்பாக்கம்

விளக்கம்: தடுப்பு மருந்தேற்றம் என்பது குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்தடைக்காப்பை ஏற்படுத்துவதற்காக நமது உடலில் தடுப்பு மருந்தை செலுத்துவதாகும்.

261. சுற்றுபுறத்தில் காணப்படும் சில நோய் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது____________

A) ஒவ்வாமை

B) மிகைஉணர்மை

C) அனாபைலாக்சிஸ்

D) நோய்த்தடுப்பாக்கம்

விளக்கம்: சுற்றுபுறத்தில் காணப்படும் சில நோய் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது ஒவ்வாமை எனப்படும்.

262. வரம்புமீரிய தடைகாப்பு துலங்கலுக்குக் காரணமான பொருட்கள்____________

A) ஒவ்வாமை வினை

B) ஒவ்வாமை

C) ஒவ்வாமை தூண்டிகள்

D) அனாபைலாக்சிஸ்

விளக்கம்: வரம்புமீரிய தடைகாப்பு துலங்கலுக்குக் காரணமான பொருட்கள் ஒவ்வாமை தூண்டிகள் (Allergens) என அழைக்கப்படுகின்றன.

263. ஒவ்வாமை தூண்டிகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

A) மகரந்த துகள்கள்

B) தூசுகளில் உள்ள சிற்றுண்ணிகள்

C) பூச்சிகளில் காணப்படும் சிலவகை நச்சு புரதங்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மகரந்த துகள்கள், தூசுகளில் உள்ள சிற்றுண்ணிகள் (Mites) மற்றும் பூச்சிகளில் காணப்படும் சிலவகை நச்சு புரதங்கள் ஆகியவை பொதுவான ஒவ்வாமை தூண்டிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

264. வைக்கோல் காய்ச்சல்___________

A) ஒவ்வாமை வினை

B) ஒவ்வாமை

C) ஒவ்வாமை தூண்டிகள்

D) அனாபைலாக்சிஸ்

விளக்கம்: வைக்கோல் காய்ச்சல் (Hay fever) மற்றும் ஆஸ்துமா ஆகியவை ஒவ்வாமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

265. ஒவ்வாமை வினையின் அறிகுறிள் யாவை?

A) தும்மல்

B) கண்களில் நீர்க்கோத்தல்

C) , மூக்கு ஒழுகுதல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: தும்மல், கண்களில் நீர்க்கோத்தல், மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஒவ்வாமை வினையின் அறிகுறிகளாகும்.

266. ___________ மாஸ்ட்செல்களால் செயல்படுத்தப்படும் மிகை தடைக்காப் பு துலங்கல்களின் ஒரு வகையே ஒவ்வாமை எனப்படும்.

A) IgA

B) IgE

C) IgM

D) IgB

விளக்கம்: IgE மற்றும் மாஸ்ட்செல்களால் செயல்படுத்தப்படும் மிகை தடைக்காப் பு துலங்கல்களின் ஒரு வகையே ஒவ்வாமை எனப்படும்.

267. மாஸ்ட் செல்களால் வெளியேற்றப்படும்___________ மற்றும் செரட்டோனின் போன்ற வேதிப்பொருட்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

A) ஹிஸ்டோனின்

B) செரஹிஸ்

C) மின்டோனின்

D) ஹிஸ்டமின்

விளக்கம்: மாஸ்ட் செல்களால் வெளியேற்றப்படும ஹிஸ்டமின் மற்றும் செரட்டோனின் போன்ற வேதிப்பொருட்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

268. ___________ என்பது உடனடியாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.

A) தடுப்பு மருந்தேற்றம்

B) மிகைஉணர்மை

C) அனாபைலாக்சிஸ்

D) நோய்த்தடுப்பாக்கம்

விளக்கம்: அனாபைலாக்சிஸ் என்பது உடனடியாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.

269. திடீர் என முறையாக, தீவிரமாக மற்றும் உடனடியாக தோன்றும் அதிதீவிர ஒவ்வாமை வினை___________

A) தடுப்பு மருந்தேற்றம்

B) மிகைஉணர்மை

C) அனாபைலாக்சிஸ்

D) நோய்த்தடுப்பாக்கம்

விளக்கம்: அனாபைலாக்சிஸ் திடீர் என முறையாக, தீவிரமாக மற்றும் உடனடியாக தோன்றும் அதிதீவிர ஒவ்வாமை வினையாகும்.

270. ___________ மரபியல் குறைபாட்டு காரணங்களால் ஏற்படுகிறது.

A) இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

B) மூன்றாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

C) நான்காம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

D) முதல்நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

விளக்கம்: முதல்நிலை தடைக்காப்பு குறைபாடுகள் மரபியல் குறைபாட்டு காரணங்களால் ஏற்படுகிறது.

271. நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படுவது___________

A) இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

B) மூன்றாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

C) நான்காம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

D) முதல்நிலை தடைக்காப்பு குறைபாடுகள்

விளக்கம்: இரண்டாம் நிலை தடைக்காப் பு குறைபாடுகள் நோய் தொற்றுகள், கதிர் வீச்சு, செல்சிதைக்கும் மற்றும் நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

272. ___________ பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு குறைவு சிண்ட்ரோம்’ எனப்படும்.

A) கேன்சர்

B) மூளை காய்ச்சல்

C) பால்வினை நோய்கள்

D) எய்ட்ஸ்

விளக்கம்: எய்ட்ஸ் என்பது ‘பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு குறைவு சிண்ட்ரோம்’ (Acquired Immuno Deficiency Syndrome) எனப்படும்.

273. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எய்ட்ஸ் பிறவி நோய்.

2] எய்ட்ஸ் நோய் (HIV) மனித நோய்த்தடைகாப்பு குறைவு வைரஸ் தொற்றால் ஏற்படுவதாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எய்ட்ஸ் பிறவி நோயல்ல. எய்ட்ஸ் நோய் (HIV) மனித நோய்த்தடைகாப்பு குறைவு வைரஸ் தொற்றால் ஏற்படுவதாகும்.

274. HIV வைரஸ், ___________ தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.

A) உதவி T-செல்

B) உதவி b-செல்

C) உதவி t-செல்

D) உதவி B-செல்

விளக்கம்: HIV வைரஸ், உதவி T-செல்களை தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.

275. மனிதனின் நோய்த்தடைக்காப்பு குறைவு வைரஸ்___________ பேரினத்தை சார்ந்தது.

A) லென்டிவைரஸ்

B) மென்டிவைரஸ்

C) பென்டிவைரஸ்

D) லெடிவைரஸ்

விளக்கம்: மனிதனின் நோய்த்தடைக்காப்பு குறைவு வைரஸ் ‘லென்டிவைரஸ்’ பேரினத்தை சார்ந்தது.

276. லென்டிவைரஸின் விட்டம்___________

A) 100-110 nm

B) 105-120 nm

C) 110-120 nm

D) 100-120 nm

விளக்கம்: லென்டிவைரஸை மின்னணு நுண்ணோக்கி வழியே உற்றுநோக்கும் போது 100-120 nm விட்டமும், அடர்ந்த மையம் மற்றும் லிப்போபுரத உறையையும் கொண்ட கோளவடிவில் காணப்படுகிறது.

277. லென்டிவைரஸின் மேல்உறையில்___________ மற்றும் gp120 புரத நுண்முட்கள் காணப்படுகின்றன.

A) gp45

B) gp41

C) gp40

D) gp42

விளக்கம்: லென்டிவைரஸின் மேல்உறையில் gp41 மற்றும் gp120 என்றழைக்கப்படும் கிளைக்கோ புரத நுண்முட்கள் (Spikes) காணப்படுகின்றன.

278. HIV கடத்தப்படும் வழிமுறைகள் யாவை?

A) பாதுகாப்பற்ற உடல் உறவு

B) பாதிக்கப்பட்ட நபரின் இரத்த தொடர்பு கொண்ட ஊசிகள்

C) உறுப்பு மாற்றம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: பாதுகாப்பற்ற உடல் உறவு, பாதிக்கப்பட்ட நபரின் இரத்த தொடர்பு கொண்ட ஊசிகள், உறுப்பு மாற்றம், இரத்த ஏற்றம் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாயின் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நேரடி கடத்தல் என பலவழிகளின் மூலம் எச்.ஐ.வி கடத்தப்படுகின்றது.

279. ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை___________ நொதியின் உதவியால் வைரஸின் டி.என்.ஏவாக மாற்றிக் கொள்கிறது.

A) புரோட்டியேஸ்

B) ரிபோ நீயூக்ளியேஸ்

C) மாலிக்னன்ட்

D) ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்

விளக்கம்: ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்து தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டி.என்.ஏவாக மாற்றிக் கொள்கிறது.

280. லென்டிவைரஸில்___________ நொதிகளும் காணப்படுகின்றன.

A) புரோட்டியேஸ்

B) ரிபோ நீயூக்ளியேஸ்

C) மாலிக்னன்ட்

D) A மற்றும் B

விளக்கம்: லென்டிவைரஸில் புரோட்டியேஸ் மற்றும் ரிபோ நீயூக்ளியேஸ் நொதிகளும் காணப்படுகின்றன.

281. எதிர்ப்பொருட்கள் உள்ளனவா என கண்டறியும் சோதனை___________

A) வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை

B) எலிசா சோதனை

C) சாட்டர்ன் பிளாட் சோதனை

D) எலிட்டர்ன் சோதனை

விளக்கம்: எலிசா சோதனை (ELISA- Enzyme Linked Immuno orbent Assay) எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் உள்ளனவா என கண்டறியும் சோதனையாகும்.

282. மிகவும் நம்பகதன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனை___________

A) வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை

B) எலிசா சோதனை

C) சாட்டர்ன் பிளாட் சோதனை

D) எலிட்டர்ன் சோதனை

விளக்கம்: வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை மிகவும் நம்பகதன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனையாகும். இது வைரஸின் மைய புரதங்களை கண்டறிகிறது. இவ்விரண்டு சோதனைகளிலும் எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் இரத்தத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நபர் எச்.ஐ.விபாதிப்புக்கு உள்ளானவராக கருதப்படுகிறார்.

283. உடலின் செல்களே அதே உடலில் எதிர்ப்பொருள் தூண்டிகளாக செயல்படுவது ___________

A) எதிர்ப்பொருள் தூண்டி

B) சுய எதிர்ப்பொருள்

C) சுய எதிர்ப்பொருள் தூண்டிகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: உடலின் செல்களே அதே உடலில் எதிர்ப்பொருள் தூண்டிகளாக செயல்படுவது சுய எதிர்ப்பொருள் தூண்டிகள் (Auto antigens) என அழைக்கப்படுகின்றன.

284. ___________ கோளாறுகளில் சுயதடைக்காப்பு நிகழ்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றன.

A) உறுப்பு சார்ந்த

B) கட்டி நோய்த்தடைக்காப்பியல்

C) மெட்டாஸ்டாசிஸ்

D) உறுப்புச்சாரா

விளக்கம்: உறுப்புச்சாரா மண்டலக் கோளாறுகளில் சுயதடைக்காப்பு நிகழ்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றன.

285. ரூமாட்டிக் மூட்டுவலி___________

A) உறுப்பு சார்ந்த சுயதடைக்காப்பு நோய்

B) கட்டி நோய்த்தடைக்காப்பியல்

C) மெட்டாஸ்டாசிஸ்

D) உறுப்புச்சாரா சுயதடைக்காப்பு நோய்

விளக்கம்: உறுப்பு சாரா சுயதடைக்காப்பு நோய்களுக்கு எடுத்துக்காட்டு: ரூமாட்டிக் மூட்டுவலி மற்றும் தண்டு வட மரப்பு நோய்கள்.

286. உறுப்பு சார்ந்த சுயதடைக்காப்பு நோய்கள் அல்லாதவை எவை?

A) அடிசன் நோய்

B) ஹசிமோட்டோ தைராய்டு வீக்க நோய்

C) கிரேவின் நோய்

D) தண்டு வட மரப்பு நோய்கள்

விளக்கம்: உறுப்பு சார்ந்த சுயதடைக்காப்பு நோய்களுக்கு எடுத்துக்காட்டு: ஹசிமோட்டோ தைராய்டு வீக்க நோய், கிரேவின் நோய் (தைராய்டு சுரப்பி) மற்றும் அடிசன் நோய் (அட்ரினல் சுரப்பி).

287. சுய எதிர்ப்பொருட்கள் அந்த உறுப்பின் பணிகளை தடைச்செய்வது___________

A) உறுப்பு சார்ந்த சுயதடைக்காப்பு நோய்

B) கட்டி நோய்த்தடைக்காப்பியல்

C) மெட்டாஸ்டாசிஸ்

D) உறுப்புச்சாரா சுயதடைக்காப்பு நோய்

விளக்கம்: உறுப்பு சார்ந்த நோயில்சுயதடைக்காப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உறுப்புக்கு எதிராகவே அமைகின்றன. இதில் சுய எதிர்ப்பொருட்கள் அந்த உறுப்பின் பணிகளை தடைச்செய்கின்றன.

288. கட்டி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பா ன திசுக்களையும் ஆக்கிரமிப்பது

A) புற்றுநோய்

B) மூளை காய்ச்சல்

C) பால்வினை நோய்கள்

D) எய்ட்ஸ்

விளக்கம்: கட்டி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பா ன திசுக்களையும் ஆக்கிரமிப்பது புற்றுநோய் எனப்படும்.

289. கட்டியில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி இரண்டாம் நிலை கட்டிகளை ஏற்படுத்துவது___________

A) மாலிக்னன்ட்

B) பெனைன்

C) பரவல்

D) மெட்டாஸ்டாசிஸ்

விளக்கம்: கட்டியில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி இரண்டாம் நிலை கட்டிகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலைக்கு வேற்றிட பரவல் அல்லது மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று பெயர்.

290. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பண்புகளின் அடிப்படையில் கட்டிகளை பெனைன் என்பது சாதாரண கட்டிகள் ஆகும்.

2] மாலிக்னன்ட் என்பது புற்றுநோய் கட்டிகள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பண்புகளின் அடிப்படையில் கட்டிகளை பெனைன் (Benign) அல்லது சாதாரண கட்டிகள் மற்றும் மாலிக்னன்ட் (Malignant) அல்லது புற்றுநோய் கட்டிகள் என பிரிக்கலாம்.

291. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சாதரான கட்டி என்பது கட்டுப்படுத்த முடியாத அபரிதமான வளர்ச்சியுடையது.

2] உடலின் மற்ற திசுக்களை ஆக்கிரமிக்காத தன்மையுடைவையாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சாதரான கட்டி என்பது கட்டுப்படுத்த முடியாத அபரிதமான வளர்ச்சியுடையது. ஆனால் உடலின் மற்ற திசுக்களை ஆக்கிரமிக்காத தன்மையுடைவையாகும்.

292. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புற்றுநோய் கட்டியின் செல்கள் கட்டுப்படுத்த முடியாத அபரிதமான வளர்ச்சியுடையவை.

2] கட்டியின் செல்கள் பிரிந்து உடலின் மற்ற ஆரோக்கியமான திசுக்களுக்கும் பரவக்கூடியதாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புற்றுநோய் கட்டியின் செல்கள் கட்டுப்படுத்த முடியாத அபரிதமான வளர்ச்சியுடையவை. ஆனால் கட்டியின் செல்கள் பிரிந்து உடலின் மற்ற ஆரோக்கியமான திசுக்களுக்கும் பரவக்கூடியதாகும்.

293. இயல்பான செல்களில் ___________ மூலம் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

A) இயல்பான தடை

B) தொடர்ச்சியான தடை

C) பெறப்பட்ட தடை

D) தொடர்பு தடை

விளக்கம்: இயல்பான செல்களில், ‘தொடர்பு தடை’ மூலம் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

294. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இயல்பான செல்கள் சிறியதாகவும் ஒரே மாதிரியான வடிவத்தையும் குறைந்த சைட்டோபிளாச அளவையும் கொண்டவை.

2] செல்லின் அளவு மற்றும் அவற்றின் வடிவம் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயல்பான செல்கள் சிறியதாகவும் ஒரே மாதிரியான வடிவத்தையும் அதிக சைட்டோபிளாச அளவையும் கொண்டவை. செல்லின் அளவு மற்றும் அவற்றின் வடிவம் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன. செல்கள், தெளிவான திசுக்களாக வரிசையமைக்கப்பட்டுள்ளன.

295. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இயல்பான செல்கள் வேறுபட்ட செல் அமைப்புகளை உடையன.

2] இயல்பான செல் புறத்தோற்ற சுட்டிகளை (Surface marker) வெளிப்படுத்துகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயல்பான செல்கள் வேறுபட்ட செல் அமைப்புகளை உடையன. இயல்பான செல் புறத்தோற்ற சுட்டிகளை (Surface marker) வெளிப்படுத்துகின்றன.

296. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இயல்பான செல்களில் பிளவுறும் செல்களின் அளவு அதிகம்.

2] இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இயல்பான செல்கள் பிளவுறும் செல்களின் அளவு குறைவு. மேலும் இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.

297. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புற்றுநோய் செல்கள் பெரிய மாறுபட்ட வடிவிலான உட்கருவையும் குறைவான சைட்டோபிளாச அளவையும் கொண்டவை.

2] செல்லின் அளவு வடிவங்களில் மாறுபாடுடையன. செல்கள் வரிசையமப்பு ஒழுங்கற்று காணப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புற்றுநோய் செல்கள் பெரிய மாறுபட்ட வடிவிலான உட்கருவையும் குறைவான சைட்டோபிளாச அளவையும் கொண்டவை. செல்லின் அளவு வடிவங்களில் மாறுபாடுடையன. செல்கள் வரிசையமப்பு ஒழுங்கற்று காணப்படும்.

298. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புற்றுநோய் செல்கள் இயல்பான பல சிறப்பு வாய்ந்த பண்புகளை இழக்கின்றன.

2] சில செல் புறத்தோற்ற சுட்டிகளை (Surface marker) அதிகமாக வெளிப்படுத்துகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புற்றுநோய் செல்கள் இயல்பான பல சிறப்பு வாய்ந்த பண்புகளை இழக்கின்றன. சில செல் புறத்தோற்ற சுட்டிகளை (Surface marker) அதிகமாக வெளிப்படுத்துகின்றன.

299. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புற்றுநோய் செல்களில் பிளவுறும் செல்களின் எண்ணிக்கை குறைவு .

2] இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புற்றுநோய் செல்கள் பிளவுறும் செல்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.

300. தடைக்காப்பு சிகிச்சையை___________ எனவும் அழைக்கலாம்.

A) எதிர்ப்பு சிகிச்சை

B) நோய் சிகிச்சை

C) தடைக்காப்பியல்சிகிச்சை

D) உயிரியல் சிகிச்சை

விளக்கம்: தடைக்காப்பு சிகிச்சையை உயிரியல் சிகிச்சை எனவும் அழைக்கலாம்.

301. தடைக்காப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடல் அல்லது ஆய்வகத்தில்___________ உருவாக்கப்படுகின்றன.

A) ஈரின எதிர்ப்பொருள்

B) மூவின எதிர்ப்பொருள்

C) பல்லின எதிர்ப்பொருள்

D) ஓரின எதிர்ப்பொருள்

விளக்கம்: தடைக்காப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடல் அல்லது ஆய்வகத்தில் (ஓரின எதிர்ப்பொருள் – monoclonal antibodies) உருவாக்கப்படுகின்றன.

302. விடலைப்பருவம்___________

A) 11- 18 வயது

B) 12- 17 வயது

C) 13- 18 வயது

D) 12-19 வயது

விளக்கம்: பூப்பெய்துதலில் தொடங்கி முதிர்ச்சியடைதல் நிறைவடையும் காலகட்டமான 12-19 வயது வரையிலான உடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் தீவிர வளர்ச்சிக் காலமே விடலைப்பருவம் எனப்படும்.

303. ___________ என்பது மனத்தின் மீது செயல்படும் (Psychoactive) மருந்தாகும்.

A) போதை மருந்துகள்

B) மது

C) புகைப்பழக்கம்

D) போதை ஊசிகள்

விளக்கம்: மது என்பது மனத்தின் மீது செயல்படும் (Psychoactive) மருந்தாகும்.

304. கூற்று(A): சில மருந்துகளை அதனுடைய இயல்பான மருத்துவ பயன்பாட்டின் நோக்கத்தை தவிர்த்து, அதிக அளவிலும் மற்றும் குறுகிய கால இடைவெளியிலும் ஒருவரின் உடல், உடற்செயலியல் மற்றும் உளவியல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துகின்றனர். இதுவே

காரணம்(R): இதுவே போதை மருந்துப் பழக்கம் (Drug abuse) எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில மருந்துகளை அதனுடைய இயல்பான மருத்துவ பயன்பாட்டின் நோக்கத்தை தவிர்த்து, அதிக அளவிலும் மற்றும் குறுகிய கால இடைவெளியிலும் ஒருவரின் உடல், உடற்செயலியல் மற்றும் உளவியல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவதே, போதை மருந்துப் பழக்கம் (Drug abuse) எனப்படும்.

305. வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் யாவை?

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஒஃபியாய்டுகள் (Ophioids), கேனபினாய்டுகள் (Cannabinoids), கோகா-அல்கலாய்டுகள் (Coca- alkaloids), பார்பிசுரேட் டுகள் (Barbiturates), ஆம்ஃபிடமைன்கள் (Amphetamines) மற்றும் எல்.எஸ்.டி ( LSD- Lysergic acid diethylamide) ஆகியவை பொதுவாக வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகளாகும்.

306. ___________ என்பது மைய நரம்பு மண்டலம் மற்றும் குடல் பாதைகளில் காணப்படும்.

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட்டுகள்

D) எல்.எஸ்.டி

விளக்கம்: ஒஃபியாய்டு என்பது மைய நரம்பு மண்டலம் மற்றும் குடல் பாதைகளில் காணப்படும் குறிப்பிட்ட ஒஃபியாய்டு உணர்வேற்பிகளுடன் இணையும் போதை மருந்தாகும்.

307. ___________ என்பது டைஅசிட்டைல் மார்ஃபின் என்ற வெள்ளை நிற மணமற்ற மற்றும் கசப்பான படிக நிலையிலுள்ள கூட்டுப்பொருளாகும்.

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட்டுகள்

D) ஹெராய்ன்

விளக்கம்: ஹெராய்ன் (Heroin) என்பது டைஅசிட்டைல் மார்ஃபின் என்ற வெள்ளை நிற மணமற்ற மற்றும் கசப்பான படிக நிலையிலுள்ள கூட்டுப்பொருளாகும்.

308. ___________ கசகசா செடியின் பூக்களிலிருந்து பெறப்படுகின்றது.

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) ஹெராய்ன்

விளக்கம்: ஹெராய்ன் கசகசா செடியின் (poppy plant) பூக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற மார்ஃபினை அசிட்டைலேற்றம் (acetylation) செய்வதன் மூலம் பெறப்படுகின்றது.

309. ___________ என்பது அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தப்படும் வலிமையான வலி நீக்கி மருந்தாகும்.

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: மார்ஃபின் என்பது அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தப்படும் வலிமையான வலி நீக்கி மருந்தாகும்.

310. உடலின் செயல்பாடுகளை குறைக்கும் மனஅழுத்தவூக்கியாக செயல்புரிவது___________

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: மார்ஃபின் உடலின் செயல்பாடுகளை குறைக்கும் மனஅழுத்தவூக்கியாக செயல்புரிகின்றது.

311. இந்திய சணல் (Hemp plant) செடியிலிருந்து பெறப்படுகின்ற கூட்டு வேதிப்பொருட்கள்___________

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: கேனபினாய்டுகள் என்பவை கேனாபிஸ் சடைவா ( Cannabis sativa) என்ற இந்திய சணல் (Hemp plant) செடியிலிருந்து பெறப்படுகின்ற கூட்டு வேதிப்பொருட்களாகும்.

312. இயற்கையான கேனபினாய்டுகள் மூலாதாரமாக விளங்குபவை அல்லாதவை எவை?

A) மரிஜூவானா

B) கஞ்சா

C) ஹசிஷ்

D) டோபமைன்

விளக்கம்: மரிஜூவானா (Marijuana), கஞ்சா (Ganja), ஹசிஷ் (Hashish) மற்றும் சாரஸ் (Charas) போன்றவற்றின் முக்கிய மூலாதாரமாக விளங்குபவை இயற்கையான கேனபினாய்டுகள் ஆகும்.

313. ___________ நரம்புணர்வு கடத்தியான டோபமைன் (Dopamine) கடத்தப்படுதலில் குறுக்கிடுகிறது.

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: கேனபினாய்டுகள் நரம்புணர்வு கடத்தியான டோபமைன் (Dopamine) கடத்தப்படுதலில் குறுக்கிடுகிறது.

314. மைய நரம்பு மண்டலத்தின் (CNS) செயல்பாட்டைத் தூண்டும் திறனைப் பெற்றுள்ளது___________

A) ஒஃபியாய்டுகள்

B) கேனபினாய்டுகள்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: கேனபினாய்டுகள் மைய நரம்பு மண்டலத்தின் (CNS) செயல்பாட்டைத் தூண்டும் திறனைப் பெற்றுள்ளதால் அதிக ஆற்றல் மற்றும் மகிழ்ச்சி (Euphoria) உணர்வையும் ஏற்படுத்துகிறது.

315. எரித்ரோசைலம் கோகா (Erythroxylum coca) எனும் தாவரப் பெயர் கொண்டது___________

A) ஒஃபியாய்டுகள்

B) கோகைன்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: கோகைன் என்பது, எரித்ரோசைலம் கோகா (Erythroxylum coca) எனும் தாவரப் பெயர் கொண்ட கோகா தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படுகின்ற வெள்ளை நிற பொடியாகும்.

316. பிரமைஉள்ளிட்ட தீவிர உடல் மற்றும் உளவியல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்துவது__________

A) ஒஃபியாய்டுகள்

B) கோகைன்

C) பார்பிசுரேட் டுகள்

D) மார்ஃபின்

விளக்கம்: கோகைன் மனமருட்சி (Hallucination) மற்றும் பிரமை (Paranoia) உள்ளிட்ட தீவிர உடல் மற்றும் உளவியல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

317. மருட்சியை ஏற்படுத்தும் பண்பைக் கொண்டதாவரங்கள் யாவை?

A) அட்ரோபா பெல்லாடோன்னா

B) டாட்டுரா

C) எரித்ரோசைலம் கோகா

D) A மற்றும் B

விளக்கம்: அட்ரோபா பெல்லாடோன்னா (Atropa belladonna) மற்றும் டாட்டுரா(Datura) ஆகியவைமன மருட்சியை ஏற்படுத்தும் பண்பைக் கொண்ட மற்ற தாவரங்களாகும்.

318. கிளர்வூட்டிகள் தொகுதியை சேர்ந்த போதைமருந்துகள் அல்லாதவை எவை?

A) ஆம்ஃபிடமைன்கள்

B) கோகைன்

C) நிக்கோட்டின்

D) அபின்

விளக்கம்: கிளர்வூட்டிகள் தொகுதி: ஆம்ஃபிடமைன்கள், கோகைன், நிக்கோட்டின் மற்றும் புகையிலை (Tobacco)

319. மன அழுத்தவூக்கிகள் தொகுதியை சேர்ந்த போதைமருந்துகள் எவை?

A) மது

B) பார்பிட்டுரேட்டுகள்

C) அமைதியூக்கிகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மன அழுத்தவூக்கிகள் தொகுதியை சேர்ந்த போதைமருந்துகள்: பார்பிட்டுரேட்டுகள், அமைதியூக்கிகள், மது.

320. அபின் என்பது __________

A) மன மருட்சி மருந்துகள்

B) போதை மருந்து

C) கிளர்வூட்டிகள்

D) மன அழுத்தவூக்கிகள்

விளக்கம்: போதை மருந்து /வலி நிவாரணிகள்: அபின், மார்ஃபின்.

321. லைசர்ஜிக் அமில டைஎத்தில் அமைடு(LSD) என்பது __________

A) மன மருட்சி மருந்துகள்

B) போதை மருந்து

C) கிளர்வூட்டிகள்

D) மன அழுத்தவூக்கிகள்

விளக்கம்: மன மருட்சி மருந்துகள்: லைசர்ஜிக் அமில டைஎத்தில் அமைடு, ஃபென்சைக்ளிடைன்.

322. மரிஜூவானா என்பது __________

A) மன மருட்சி மருந்துகள்

B) கிளர்வூட்டிகள்

C) மன அழுத்தவூக்கிகள்

D) A மற்றும் B மற்றும் C

விளக்கம்: மன மருட்சி மருந்துகள், கிளர்வூட்டிகள், மன அழுத்தவூக்கிகள்: மரிஜூவானா, கஞ்சா, சாரஸ்.

323. மன நோயாளிகளை குணப்படுத்த பயன்படும் மருந்துகள் யாவை?

A) மெத்தாம்ஃபிட்டமின்கள்

B) ஆம்ஃபிட்டமின்கள்

C) பார்பிசுரேட்டுகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற மன நோயாளிகளை குணப்படுத்த பயன்படும் மருந்துகளான மெத்தாம்ஃபிட்டமின்கள் (Methamphetamines) ஆம்ஃபிட்டமின்கள் (Amphetamines), பார்பிசுரேட்டுகள், (Barbiturates) அமைதியூக்கிகள் (Tranquilizers) மற்றும் எல்.எஸ்.டி போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

324. புகையிலையில்அடங்கியுள்ள கோளாறுகளை ஏற்படுத்தும் பொருள்கள் யாவை?

A) நிகோடின்

B) கார்பன் மோனாக்சைடு

C) தார்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இதயம் , நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்ட நிகோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் ஆகியவை புகையிலையில் அடங்கியுள்ளன.

325. அட்ரினல் சுரப்பிகளைத் தூண்டுவது__________

A) நிகோடின்

B) கார்பன் மோனாக்சைடு

C) தார்

D) மரிஜூவானா

விளக்கம்: நிகோட்டின், அட்ரினல் சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் வெளியேறும் அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் ஹார்மோன்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

326. மன அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?

A) தன்னம்பிக்கை இழத்தல்

B) கவலை

C) சுய மரியாதையை இழத்தல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மன அழுத்தத்தின் அறிகுறிகள்1. தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை இழத்தல் 2. கவலை 3. பொதுவாக மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது ஆர்வமிக்கவற்றை அனுபவிக்க இயலாத நிலை.

327. உடற்பயிற்சியானது உடலைத் தூண்டி__________ மற்றும் எண்டார்ஃபின்களை (Endorphins) சுரக்கச் செய்கிறது.

A) எண்டார்னின்

B) செரபின்

C) டார்ஃபின்

D) செரடோனின்

விளக்கம்: உடற்பயிற்சியானது உடலைத் தூண்டி செரடோனின் (Serotonin) மற்றும் எண்டார்ஃபின்களை (Endorphins) சுரக்கச் செய்கிறது.

328. உடலில் அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெறும் உறுப்பு__________

A) இதயம்

B) தலை

C) நுரையீரல்

D) மூளை

விளக்கம்: உடலில் அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெறும் உறுப்பு மூளை ஆகும்.

329. அனாமதேய குடிகாரர்கள் என்ற அமைப்பை__________ ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

A) 1937

B) 1935

C) 1934

D) 1936

விளக்கம்: அனாமதேய குடிகாரர்கள் என்ற அமைப்பை பல ஆண்டுகளாக வாழ்வில் நம்பிக்கை இழந்து, குடியில் மூழ்கியிருந்த ஒரு தொழில் அதிபரும் ஒரு மருத்துவரும் சேர்ந்து 1935ஆம் ஆண்டு தொடங்கினர்.

330. __________ கடுமையான நினைவு குறைபாட்டு நோய் மதுவை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.

A) எண்டார்னின் நோய்

B) செரபின் நோய்

C) டார்ஃபின் நோய்

D) கொர்சகாஃப் நோய்

விளக்கம்: “கொர்சகாஃப் நோய்” (Korsakoff syndrome) என்ற கடுமையான நினைவு குறைபாட்டு நோய் மதுவை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.

331. அதிகப்படியான அமில உற்பத்தியால்__________ சுவரின் படலம் மதுவினால் சிதைக்கப்பட்டு குடற்புண் ஏற்பட வழிவகுக்கும்.

A) கல்லீரல்

B) மண்ணீரல்

C) நுரையீரல்

D) இரைப்பை

விளக்கம்: அதிகப்படியான அமில உற்பத்தியால் இரைப்பைச் சுவரின் படலம் மதுவினால் சிதைக்கப்பட்டு குடற்புண் ஏற்பட வழிவகுக்கும்.

332. உறையவைத்தல் (Freezing) முறையில்__________ கொல்ல இயலாது.

A) வைரஸ்

B) பூஞ்சை

C) புரொட்டசோவா

D) பாக்டீரியா

விளக்கம்: உறையவைத்தல் (Freezing) முறையில் பாக்டீரியாக்களை கொல்ல இயலாது. இதன் மூலம் அதனுடைய வளர்ச்சியை மட்டுமே நிறுத்த முடியும்.

333. உலக மலேரியா தினம்__________

A) மே 26

B) மே 25

C) ஏப்ரல் 25

D) ஏப்ரல் 26

விளக்கம்: உலக மலேரியா தினம் ஏப்ரல் 25 ஆகும்.

334. __________ மற்றும் ஃபரோ தீவுகள் (Faroe islands) மட்டுமே உலகில் ‘கொசு இல்லாத’ நாடுகள் ஆகும்.

A) நியூஸிலாந்து

B) நெதர்லாந்து

C) ஸ்விட்சர்லாந்து

D) ஐஸ்லாந்து

விளக்கம்: ஐஸ்லாந்து (Iceland) மற்றும் ஃபரோ தீவுகள் (Faroe islands) மட்டுமே உலகில் ‘கொசு இல்லாத’ நாடுகள் ஆகும்.

335. நோய்கடத்தி தடுப்பு ஆராய்ச்சி மையம் எங்குள்ளது__________

A) சென்னை

B) டெல்லி

C) பெங்களூரு

D) புதுச்சேரி

விளக்கம்: நோய்கடத்தி தடுப்பு ஆராய்ச்சி மையம் (VCRC) புதுச்சேரியில் உள்ளது. இம்மையத்துடன் யானைக்கால் நோய் மற்றும் ஒருங்கிணைந்த நோய்கடத்தி கட்டுப்பாடு முறைகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

336. பூச்சிகளை மலடாக்கும் தொழில் நுட்பம் மூலம் ஒரு நிலப்பரப்பிலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்ட தீங்குயிரி__________

A) திருகு ஈ

B) செட்சி ஈ

C) திருகுப்புழு

D) செட்சிப்புழு

விளக்கம்: பூச்சிகளை மலடாக்கும் தொழில் நுட்பம் (SIT): இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நிலப்பரப்பிலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்ட தீங்குயிரி, திருகுப்புழு (Screw – worm fly) எனும் பூச்சியினமாகும்.

337. __________ மூளை புற்று நோய்க்கு எதிரான அறுவை சிகிச்சை ஆயுதமாக பயன்படுத்த முடியும்.

A) மிகா வைரஸ்

B) பிகா வைரஸ்

C) விகா வைரஸ்

D) ஸிகா வைரஸ்

விளக்கம்: ஸிகா வைரஸ் (Zika virus) மூளை புற்று நோய்க்கு எதிரான அறுவை சிகிச்சை ஆயுதமாக பயன்படுத்த முடியும்.

338. __________ என்பது சாதாரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 150 மில்லியன் மக்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்றாகும்.

A) கல்லீரல் பாதை தொற்று

B) மண்ணீரல் பாதை தொற்று

C) இரைப்பை பாதை தொற்று

D) சிறுநீர் பாதை தொற்று

விளக்கம்: சிறுநீர் பாதை தொற்று (UTI- Urinary Tract infection) என்பது சாதாரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 150 மில்லியன் மக்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்றாகும்.

339. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது__________

A) ஒற்றை இழை ஆர்.என்.ஏ

B) இரட்டை இழை ஆர்.என்.ஏ

C) ஒற்றை இழை டி.என்.ஏ

D) இரட்டை இழை டி.என்.ஏ

விளக்கம்: எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது: ஒற்றை இழை ஆர்.என்.ஏ

340. ___________ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

A) அபின்

B) மது

C) புகையிலை

D) கோகெய்ன்

விளக்கம்: மது அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

341. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ___________ ஆகும்.

A) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி

B) மன மருட்சி ஏற்படுத்துபவை

C) அ மற்றும்ஆ இரண்டும்

D) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி

விளக்கம்: ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் மைய நரம்பு மண்டல சோர்வூட்டி ஆகும்.

342. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?

A) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்

B) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்

C) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே

D) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்

343. புற்றுநோய்க் ஏதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது?

A) கதிர்வீச்சு சிகிச்சை

B) வேதிச்சிகிச்சை

C) கூட்டு அறுவை சிகிச்சை

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஒருங்கிணைந்த சிகிச்சைகளான கதிர்வீச்சு சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கூட்டு அறுவை சிகிச்சை,ஆகிய ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் புற்றுநோய்க் கட்டுப்படுத்தப்படுகிறது.

344. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?

A) நினைவாற்றல் செல்கள்

B) பேசா பில்கள்

C) பிளாஸ்மா செல்கள்

D) கொல்லி செல்கள்

விளக்கம்: பிளாஸ்மா செல்கள் எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை ஆகும்.

345. பி. வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள்___________ ல் உருவாக்கப்பட்டது.

A) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்)

B) ஸ்போரோபிளாஸ்டுகள்

C) ஊசிஸ்டுகள்

D) ஸ்போர்கள்

விளக்கம்: பி. வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ஊசிஸ்டுகளில் உருவாக்கப்பட்டது.

12th Science Lesson 15 Questions in Tamil

15] உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு

1. IUCN சிவப்பு பட்டியலில் உள்ள விலங்கு ____________

A) காட்டுப்பூனை

B) மலையாடு

C) முயல்

D) நீலகிரி வரையாடு

விளக்கம்: நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ள விலங்காகும். அத்து மீறி நுழைந்து திருடுவதாலும் மற்றும் அதிகமாக வேட்டையாடப்படுவதாலும் அழியும் நிலையில் உள்ள விலங்கு என்று சிவப்பு பட்டியலில் IUCN வெளியிட்டுள்ளது.

2. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] 1991 ல் ஐ.நா.வில் புவி உச்சிமாநாடு நடைபெற்றது.

2] இம்மாநாட்டில் நிலம், கடல், பிற நீர் சூழ்நிலை மண்டலங்கள் மற்றும் தாங்கள் பங்கு கொள்கின்ற சூழலியல் கூட்டுத்தொகுதி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்தும் வருகின்ற உயிரினங்களிடையே காணப்படும் வேறுபாடுகளே உயிரியப் பல்வகைத்தன்மை என வரையறுக்கப்பட்டது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1992ல் ஐ.நா.வில் புவி உச்சி மாநாட்டில் நிலம், கடல், பிற நீர் சூழ்நிலை மண்டலங்கள் மற்றும் தாங்கள் பங்கு கொள்கின்ற சூழலியல் கூட்டுத்தொகுதி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்தும் வருகின்ற உயிரினங்களிடையே காணப்படும்வேறுபாடுகளே உயிரியப் பல்வகைத்தன்மை என வரையறுக்கப்பட்டது.

3. உயிரிய பல்வகைத்தன்மை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ____________

A) ஸ்டீபன் ரோசன்

B) கார்லின் வால்டர்

C) ஸ்டீபன் ரோசல்

D) வால்டர் ரோசன்

விளக்கம்: உயிரிய பல்வகைத்தன்மை என்ற சொல்லை வால்டர் ரோசன் என்பவர் 1986ல் அறிமுகப்படுத்தினார்.

4. பலதரப்பட்ட உயிரினங்களின் தொகுப்பே ____________

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) பேரின பல்வகைத்தன்மை

D) உயிரிய பல்வகைத்தன்மை

விளக்கம்: பலதரப்பட்ட உயிரினங்களின் தொகுப்பே உயிரிய பல்வகைத்தன்மை ஆகும்.

5. வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு அலகு பரப்பிலுள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை____________

A) அதிகரிக்கிறது

B) குறைகிறது

C) மிக குறைவு

D) மிக அதிகம்

விளக்கம்: வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு அலகு பரப்பிலுள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை குறைகிறது.

6. உயிரிய பல்வகைத்தன்மை என்ற சொல்லை பிரபலப்படுத்தியவர் ____________

A) ஸ்டீபன் ரோசன்

B) எட்வர்ட் வில்சன்

C) ஸ்டீபன் ரோசல்

D) வால்டர் ரோசன்

விளக்கம்: இனக்கூட்டம் (Population) முதல் உயிர்த்தொகை (Biome) வரையிலான அனைத்து அடுக்குகளில் உள்ள உயரிய அமைப்புகளின் வேறுபாட்டை விளக்குவதற்காக, உயிரிய பல்வகைத்தன்மை என்ற சொல்லை எட்வர்ட் வில்சன் என்பவர் பிரபலப்படுத்தினார்.

7. உயிரியப் பல்வகைமைத்தன்மையில் மூன்று அடுக்குகள் அல்லாதது யாவை?

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) பேரின பல்வகைத்தன்மை

விளக்கம்: உயிரியப் பல்வகைமைத்தன்மையில் மூன்று அடுக்குகள் உள்ளன. அவை மரபியல் பல்வகைத்தன்மை, சிற்றின பல்வகைத்தன்மை, சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை.

8. கூற்று(A): ஒரே சிற்றினத்தின் வெவ்வேறு இனக்கூட்டத்துக்கிடையிலான மரபியல் வேறுபாடுகள் ஆகியவற்றைக் பல்வகைத்தன்மை குறிக்கிறது.

காரணம்(R): இந்த பல்வகைத்தன்மை மரபியல் பல்வகைத்தன்மை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வேறுபட்ட சிற்றினங்களுக்கிடையே மரபியலமைப்பு ரீதியான வேறுபாடு (எண்ணிக்கை மற்றும் மரபணுக்களின் வகைகள்), ஒரு சிற்றினத்துக்குள்ளே காணப்படும் மரபியல் அமைப்பில் உள்ள வேறுபாடுகள், ஒரே சிற்றினத்தின் வெவ்வேறு இனக்கூட்டத் துக்கிடையிலான மரபியல் வேறுபாடுகள் ஆகியவற்றைக் குறிப்பது மரபியல் பல்வகைத்தன்மை எனப்படும்.

9. ஒரு சிற்றினத்தின் மரபணு வேறுபாடுகள், ____________ மற்றும் வாழிடங்களை பொறுத்து அதிகரிக்கிறது.

A) பல்வகைத்தன்மையின் வேறுபாடு

B) பல்வகைத்தன்மையின் இனம்

C) பல்வகைத்தன்மையின் மரபணு

D) பல்வகைத்தன்மையின் அளவு

விளக்கம்: ஒரு சிற்றினத்தின் மரபணு வேறுபாடுகள், பல்வகைத்தன்மையின் அளவு மற்றும் வாழிடங்களை பொறுத்து அதிகரிக்கிறது.

10. ராவோல்ஃபியா வோமிட்டேரியா என்னும் மூலிகைத் தாவரத்தில் ____________என்னும் செயல்திறனுள்ள உட்பொருள் காணப்படுகின்றன.

A) ராவோல்பைன்

B) டேரியாரிசர்

C) ரிசர்ஃபியா

D) ரிசர்பைன்

விளக்கம்: இமய மலையின் பல்வேறு பகுதிகளில் வளரும் ராவோல்ஃபியா வோமிட்டேரியா என்னும் மூலிகைத் தாவரத்திலுள்ள ரிசர்பைன் என்னும் செயல்திறனுள்ள உட்பொருளின் அடர்த்தியிலும் ஆற்றலிலும் மரபியல் பல்வகைத்தன்மையின் காரணமாக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

11. ஒரு வாழிடத்தில் உள்ள சிற்றின வகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செழுமை ஆகியவை ____________ எனப்படும்.

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) பேரின பல்வகைத்தன்மை

விளக்கம்: ஒரு வாழிடத்தில் உள்ள சிற்றின வகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செழுமை ஆகியவை சிற்றின பல்வகைத்தன்மை எனப்படும்.

12. ஒரு அலகு பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை ____________

A) மரபியல் செழுமை

B) சிற்றினச்செழுமை

C) சமூக/சூழ்நிலை மண்டல செழுமை

D) பேரின செழுமை

விளக்கம்: ஒரு அலகு பரப்பளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை சிற்றினச்செழுமை எனப்படும்.

13. கிழக்குத் தொடர்ச்சி மலைகளை விட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ____________ சிற்றினங்களின் எண்ணிக்கை அதிகம்.

A) ஊர்வன

B) முதுகெலும்பி

C) பாலூட்டிகள்

D) இருவாழ்வி

விளக்கம்: கிழக்குத் தொடர்ச்சி மலைகளை விட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருவாழ்வி சிற்றினங்களின் எண்ணிக்கை அதிகம்.

14. சிற்றின மண்டல பல்வகைத்தன்மை மூன்று பிரிவுகள் அல்லாதவை எவை?

A) ஆல்பா பல்வகைத்தன்மை

B) பீட்டா பல்வகைத்தன்மை

C) காமா பல்வகைத்தன்மை

D) டெல்டா பல்வகைத்தன்மை

விளக்கம்: சிற்றின மண்டல பல்வகைத்தன்மை மூன்று பிரிவுகளாவன i. ஆல்பா பல்வகைத்தன்மை, ii. பீட்டா பல்வகைத்தன்மை மற்றும் iii. காமா பல்வகைத்தன்மை ஆகும்.

15. கூற்று(A): ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைபாட்டுத் தொகுதிகளின் (பெரும்பாலும் சிற்றினங்களின்) எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகிறது.

காரணம்(R): இது பீட்டா பல்வகைத்தன்மை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஆல்பா பல்வகைத்தன்மை ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைபாட்டுத் தொகுதிகளின் (பெரும்பாலும் சிற்றினங்களின்) எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகிறது.

16. புவியில் உள்ள அனைத்து வாழிடங்களுக்கிடையேயான வேறுபாடுகளை குறிப்பது ____________

A) ஆல்பா பல்வகைத்தன்மை

B) பீட்டா பல்வகைத்தன்மை

C) காமா பல்வகைத்தன்மை

D) டெல்டா பல்வகைத்தன்மை

விளக்கம்: காமா பல்வகைத்தன்மை மொத்த நிலப்பரப்பு அல்லது புவியில் உள்ள அனைத்து வாழிடங்களுக்கிடையேயான வேறுபாடுகளை குறிக்கிறது.

17. அருகருகே உள்ள இரண்டு சூழ்நிலை மண்டலங்களுக்கிடையே யான சிற்றின பல்வகைத்தன்மை ____________

A) ஆல்பா பல்வகைத்தன்மை

B) பீட்டா பல்வகைத்தன்மை

C) காமா பல்வகைத்தன்மை

D) டெல்டா பல்வகைத்தன்மை

விளக்கம்: பீட்டா பல்வகைத்தன்மை அருகருகே உள்ள இரண்டு சூழ்நிலை மண்டலங்களுக்கிடையே யான சிற்றின பல்வகைத்தன்மையாகும்.

18. சூழ்நிலை மண்டலங்களிலுள்ள தனித்தன்மை வாய்ந்த சிற்றினங்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்வதன் மூலம் பெறப்படுவது____________

A) ஆல்பா பல்வகைத்தன்மை

B) பீட்டா பல்வகைத்தன்மை

C) காமா பல்வகைத்தன்மை

D) டெல்டா பல்வகைத்தன்மை

விளக்கம்: பீட்டா பல்வகைத்தன்மை அச்சூழ்நிலை மண்டலங்களிலுள்ள தனித்தன்மை வாய்ந்த சிற்றினங்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்வதன் மூலம் பெறப்படுகிறது.

19. உயிரிய சமுதாயங்கள் மற்றும் உயிர்கோளத்தின் சுற்றுச்சூழல் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பது____________

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) பேரின பல்வகைத்தன்மை

விளக்கம்: சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை உயிரிய சமுதாயங்கள் மற்றும் உயிர்கோளத்தின் சுற்றுச்சூழல் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கும்.

20. உணவூட்ட சுழற்சி, உணவு வலை, ஊட்டமட்டங்கள் காணப்படுவது ____________

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) பேரின பல்வகைத்தன்மை

விளக்கம்: உணவூட்ட சுழற்சி, உணவு வலை, ஆற்றல் ஓட்டம் மற்றும் பல உயிரியல் உள்வினைகள் போன்ற சூழ்நிலைக் கூறுகள், ஊட்டமட்டங்கள் (trophic levels) மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறைகளின் பல்வகைத்தன்மையால் சூழ்நிலை மண்டல அளவில் காணப்படும் பல்வகைத்தன்மை சூழ்நிலை மண்டலம் பல்வகைத்தன்மை எனப்படும்.

21. அல்பைன் புல்வெளிகள் காணப்படுவது ____________

A) பாகிஸ்தான்

B) வங்காளதேசம்

C) இலங்கை

D) இந்தியா

விளக்கம்: அல்பைன் புல்வெளிகள், மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைக் கொண்ட உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பல்வகைத்தன்மையை கொண்ட ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது.

22. கூற்று(A): ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட நேரத்தில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையை கொண்டு உயிரிய பல்வகைத்தன்மையை அளவிடலாம்.

காரணம்(R): இந்த பல்வகைத்தன்மையைஉயிரிய பல்வகைத்தன்மை எனலாம்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட நேரத்தில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையை கொண்டு உயிரிய பல்வகைத்தன்மையை அளவிடலாம்.

23. பூமியில், காணப்படும் பல்வேறு சிற்றினங்களின் தற்போதைய மதிப்பீடு சுமார் ____________ ஆகும்.

A) 7-9 மில்லியன்

B) 8-10 மில்லியன்

C) 8-11 மில்லியன்

D) 8-9 மில்லியன்

விளக்கம்: பூமியில், காணப்படும் பல்வேறு சிற்றினங்களின் தற்போதைய மதிப்பீடு சுமார் 8-9 மில்லியன் ஆகும்.

24. கூற்று(A): நம் இயற்கை செல்வத்தின் சரியான பரிமாணம், நமக்குத் துல்லியமாக, தெரியாது.

காரணம்(R): இதுவே “வகைபாட்டியலின் இடையூறு” எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நம் இயற்கை செல்வத்தின் சரியான பரிமாணம், நமக்குத் துல்லியமாக, தெரியாது. இதுவே “வகைபாட்டியலின் இடையூறு” எனப்படும்.

25. பொலியார்டிக் மற்றும் இந்தோ-மலேயன் ஆகிய இரண்டு முக்கிய ஆட்சியெல்லைப் (realms) பகுதிகள் மற்றும் மூன்று உயிரினத் தொகையின் பிரநிதியாகவும் உள்ள நாடு ____________

A) பாகிஸ்தான்

B) வங்காளதேசம்

C) இலங்கை

D) இந்தியா

விளக்கம்: உலக உயிரிய புவியமைப்பு வகைபாட்டின் படி பொலியார்டிக் மற்றும் இந்தோ-மலேயன் ஆகிய இரண்டு முக்கிய ஆட்சியெல்லைப் (realms) பகுதிகள் மற்றும் வெப்ப மண்டல சதுப்புநிலக்காடுகள், வெப்ப மண்டல வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் வெப்பப் பாலைவனங்கள் / அரைப் பாலைவனம் என மூன்று உயிரினத் தொகையின் பிரநிதியாகவும் இந்தியா உள்ளது.

26. உலகின் மொத்த நிலப்பரப்பில்____________ மட்டுமே இந்தியா கொண்டுள்ளது.

A) 2.2%

B) 2.4%

C) 2.3%

D) 2.5%

விளக்கம்: உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4% மட்டுமே இந்தியா கொண்டுள்ளது.

27. உலகின்____________ க்கும் மேலாக விலங்கின சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன.

A) 6%

B) 8%

C) 7%

D) 9%

விளக்கம்: உலகின் 8% க்கும் மேலாக விலங்கின சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. இவ்விழுக்காட்டில் உலகம் அறிந்த 92,000 சிற்றினங்கள் அடங்கும்.

28. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின்____________ வது பெரிய நாடாகும்.

A) 6

B) 5

C) 7

D) 8

விளக்கம்: நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகும். .

29. ____________ உயிரிய மிகைப் பல்வகைத்தன்மை கொண்ட உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

A) 16

B) 15

C) 18

D) 17

விளக்கம்: உயிரிய மிகைப் பல்வகைத்தன்மை கொண்ட உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

30. தனித்தன்மைமிக்க வாழிடங்கள் மற்றும் உயிரினங்களைக் கொண்ட____________ உயிர் புவி மண்டலங்கள் இந்தியாவில் உள்ளன.

A) 11

B) 12

C) 10

D) 13

விளக்கம்: தனித்தன்மைமிக்க வாழிடங்கள் மற்றும் உயிரினங்களைக் கொண்ட பத்து உயிர் புவி மண்டலங்கள் இந்தியாவில் உள்ளன.

31. “உலகின் தற்போதைய உயிரியப் பல்வகைத்தன்மை மிக வேகமாக அழிந்து வருகிறது. இது இதற்கு முன்னால் பூமியின் வரலாற்றில் நடந்த ஐந்து அல்லது ஆறு பேரழிவோடு ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது” என கூறியது ____________

A) உலக வனவிலங்கு வாரியம்

B) உலக வனவிலங்கு அமைப்பு

C) உலக வனவிலங்கு கழகம்

D) உலக வனவிலங்கு நிதியம்

விளக்கம்: “உலகின் தற்போதைய உயிரியப் பல்வகைத்தன்மை மிக வேகமாக அழிந்து வருகிறது. இது இதற்கு முன்னால் பூமியின் வரலாற்றில் நடந்த ஐந்து அல்லது ஆறு பேரழிவோடு ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது”. -உலக வனவிலங்கு நிதியம்.

32. வாழிடங்களின் தன்மைகளை நிலங்களின் பரப்பு____________ ஆகியவை தீர்மானிக்கின்றன.

A) கடலின் பரப்பு

B) நிலத்தின் வெப்பநிலை

C) கடல் மட்டத்திலிருந்து அவற்றின் வெப்பநிலை

D) கடல் மட்டத்திலிருந்து அவற்றின் உயரம்

விளக்கம்: வாழிடங்களின் தன்மைகளை நிலங்களின் பரப்பு மற்றும் கடல் மட்டத்திலிருந்து அவற்றின் உயரம் ஆகியவை தீர்மானிக்கின்றன.

33. பல்வகைத்தன்மை பரவலின் பாங்கினை நிர்ணயிக்கும் காரணிகள் அல்லாதது எது?

A) வெப்பநிலை

B) மழைப்பொழிவு

C) நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்

D) கடல் மட்டத்திலிருந்து அதன் வெப்பநிலை

விளக்கம்: வெப்பநிலை, மழைப்பொழிவு, நிலநடுக்கோட்டிலிருந்து தூரம் (பரப்பு சரிவு வாட்டம்) கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் (உயரடுக்கு சரிவு வாட்டம் ) ஆகியவை பல்வகைத்தன்மை பரவலின் பாங்கினை நிர்ணயிக்கும் சில காரணிகளாகும்.

34. ____________ பல்வகைத்தன்மையில் மிக முக்கியமானது பரவல் பரப்பு சார்ந்த பல்வகைத்தன்மையாகும்.

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) உயிரிய பல்வகைத்தன்மை

விளக்கம்: உயிரிய பல்வகைத்தன்மையில் மிக முக்கியமானது பரவல் பரப்பு சார்ந்த பல்வகைத்தன்மையாகும்.

35. வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பாக ____________ மற்றும்____________ ஆகிய அட்சகோடுகளுக்கு இடையிலான பகுதிகள் பல்வகைத்தன்மையின்புகலிடமாகத்திகழ்கின்றன.

A) 23. 5° S மற்றும் 23. 5° N

B) 23. 5° N மற்றும் 23. 5° N

C) 23. 5° S மற்றும் 23. 5° S

D) 23. 5° N மற்றும் 23. 5° S

விளக்கம்: துருவ மற்றும் மித வெப்ப மண்டலங்களை விட வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பாக 23.5o N மற்றும் 23.5o S ஆகிய அட்சகோடுகளுக்கு இடையிலான (கடக ரேகை மற்றும் மகர ரேகை – Tropic of cancer and Tropic of capricon) பகுதிகள் பல்வகைத்தன்மையின்புகலிடமாகத்திகழ்கின்றன.

36. நிலநடுக்கோட்டுக்கு (0°) அருகில் உள்ள நாடு____________

A) அமெரிக்கா

B) கிரீன்லாந்து

C) நியூஸிலாந்து

D) கொலம்பியா

விளக்கம்: நிலநடுக்கோட்டுக்கு (0°) அருகில் உள்ள கொலம்பியாவில் ஏறத்தாழ 1400 பறவை இனங்கள் உள்ளன.

37. 41° N ல் உள்ள பகுதி____________

A) நியூயார்க்

B) கிரீன்லாந்து

C) நியூஸிலாந்து

D) கொலம்பியா

விளக்கம்: 41° N ல் உள்ள நியூயார்க் பகுதியில் 105 இனங்கள் உள்ளன.

38. 71° N ல் உள்ள நாடு ____________

A) நியூயார்க்

B) கிரீன்லாந்து

C) நியூஸிலாந்து

D) கொலம்பியா

விளக்கம்: கிரீன்லாந்தில் 71° N ல் 56 இனங்கள் உள்ளன.

39. பரப்பு பரவல் ____________ அதிகரிக்கிறது.

A) மரபியல் பல்வகைத்தன்மை

B) சிற்றின பல்வகைத்தன்மை

C) சமூக/சூழ்நிலை மண்டல பல்வகைத்தன்மை

D) உயிரிய பல்வகைத்தன்மை

விளக்கம்: பரப்பு பரவல் சிற்றின பல்வகைத்தன்மையை அதிகரிக்கிறது என்பது தெளிவாகிறது.

40. கடல் மட்டத்திற்கு மேல் ஒவ்வொரு கி. மீ க்கும்____________ வீதம் வெப்பம் குறைகின்றது.

A) 6.4° C

B) 7.5° C

C) 7.6° C

D) 6.5° C

விளக்கம்: சராசரியாக கடல் மட்டத்திற்கு மேல் ஒவ்வொரு கி. மீ க்கும் 6.5° C வீதம் வெப்பம் குறைகின்றது.

41. பூமியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெருங்கடல்களின் மேற்பரப்பின் சராசரி நிலை____________

A) சராசரி கடல் உயரம்

B) சராசரி கடல் பரவல்

C) சராசரி கடல் நீளம்

D) சராசரி கடல் மட்டம்

விளக்கம்: சராசரி கடல் மட்டம் (Mean Sea level-MSL) என்பது பூமியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெருங்கடல்களின் மேற்பரப்பின் சராசரி நிலையாகும்.

42. ஈரோடு சந்திப்பு சராசரி கடல் மட்டத்திற்கு மேலே____________ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

A) 171.90

B) 173.91

C) 172.91

D) 171.91

விளக்கம்: ஈரோடு சந்திப்பு சராசரி கடல் மட்டத்திற்கு மேலே 171.91 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

43. வெப்பமண்டல பகுதிகளில் ____________ முதல்____________ வரை வெப்பநிலை நிலவுகிறது.

A) 22° C முதல் 33° C

B) 25° C முதல் 35° C

C) 23° C முதல் 33° C

D) 24° C முதல் 36° C

விளக்கம்: வெப்பமண்டல பகுதிகளில் 25° C முதல் 35° C வரை வெப்பநிலை நிலவுகிறது. இந்த வெப்ப நிலை, உயிரினங்களின் பெரும்பாலான வளர்ச்சிதை மாற்றங்கள் எளிதாகவும் மற்றும் அதிதிறனுடனும் செயல்பட உதவுகின்றது.

44. வெப்பமண்டல பகுதிகளில் ஆண்டுக்கு____________ மி.மீக்கும் அதிகமாக மழை பெய்கிறது.

A) 100 மி.மீ

B) 200 மி.மீ

C) 300 மி.மீ

D) 250 மி.மீ

விளக்கம்: வெப்பமண்டல பகுதிகளில் பெரும்பாலும், ஆண்டுக்கு 200 மி.மீக்கும் அதிகமாக மழை பெய்கிறது.

45. வெப்பமண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத்தன்மையின் செழுமைக்கான காரணங்கள் யாவை?

1] நிலநடுக்கோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உயிரினங்கள் வாழ இணக்கமான வாழிடங்கள் உள்ளன.

2] ஊட்டச்சத் து மற்றும் அதிக வளங்கள் கிடைக்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெப்பமண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத்தன்மையின் செழுமைக்கான காரணங்கள்: நிலநடுக்கோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உயிரினங்கள் வாழ இணக்கமான வாழிடங்கள் உள்ளன. ஊட்டச்சத் து மற்றும் அதிக வளங்கள் கிடைக்கின்றன.

46. வெப்பமண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத்தன்மையின் செழுமைக்கான காரணங்கள் யாவை?

1] காலநிலை, பருவங்கள், வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஆகியவை ஏறக்குறைய நிலை யாக இருப்பதால் உயிரினங்களில் வேற்றுமைத் தன்மையையும் எண்ணிக்கையையும் உயர்த்த உதவுகின்றன.

2] வெப்ப மண்டலங்களில் உள்ள சூழ்நிலைக் கூறுகள் சிற்றினமாக்கலுக்கு மட்டுமல்லாமல் உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் வேற்றுமைத் தன்மையை அதிகரிக்கவும் ஏதுவாக உள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெப்பமண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத்தன்மையின் செழுமைக்கான காரணங்கள்: காலநிலை, பருவங்கள், வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஆகியவை ஏறக்குறைய நிலை யாக இருப்பதால் உயிரினங்களில் வேற்றுமைத் தன்மையையும் எண்ணிக்கையையும் உயர்த்த உதவுகின்றன. வெப்ப மண்டலங்களில் உள்ள சூழ்நிலைக் கூறுகள் சிற்றினமாக்கலுக்கு மட்டுமல்லாமல் உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் வேற்றுமைத் தன்மையை அதிகரிக்கவும் ஏதுவாக உள்ளன.

47. ” ரிவட் பாப்பர்” கருதுகோளை” வெளியிட்டவர்____________

A) பால் லிச்

B) லிச்எர்

C) எர்லிச்

D) பால் எர்லிச்

விளக்கம்: ஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படும் சிற்றினங்களின் இழப்பால் ஏற்படும் விளைவை புரிந்துகொள்ள சூழியல் வல்லுநர் பால் எர்லிச்” ரிவட் பாப்பர்” கருதுகோளை” (Rivet Popper Hypothesis) வெளியிட்டார்.

48. சிற்றினங்களுக்கும் நில பரப்புக்குமான தொடர்பு வெளியிட்டவர்____________

A) பால் லிச் ஃபோன்

B) லிச்எர் ஹம்போல்ட்

C) அலெக்சாண்டர் ஃபோன் ஹம்போல்ட்

D) அலெக்சாண்டர் பால் ஹம்போல்ட்

விளக்கம்: ஜெர்மனியை சேர்ந்த இயற்கையியலாளர் மற்றும் புவியியல் ஆர்வலருமான அலெக்சாண்டர் ஃபோன் ஹம்போல்ட்சிற்றினங்களுக்கும் நில பரப்புக்குமான தொடர்பை வெளியிட்டார்.

49. சிற்றினத்திற்கும் மற்றும் நிலப்பரப்பிற்கும் உள்ள தொடர்பின் மடக்கை அளவுகோல்____________

A) logZ = log C+ S log A

B) logS = log C+ Z log A

C) logS = log C+ S log A

D) logS = log B+ Z log A

விளக்கம்: சிற்றினத்திற்கும் மற்றும் நிலப்பரப்பிற்கும் உள்ள தொடர்பின் மடக்கை அளவுகோல் logS = log C+ Z log A

50. Z ன் மதிப்பு____________

A) 0.2 – 0.1

B) 0.2 – 0.4

C) 0.2 – 0.3

D) 0.1 – 0.2

விளக்கம்: வகைப்பாட்டியல் குழு அல்லது மண்டலங்களுக்கு அப்பாற்பட்டு தொடர்பு போக்குக் கெழு எண் Z, பொதுவாக 0.2 – 0.1 வரையிலான மதிப்பை கொண்டிருக்கும்.

51. பல்வேறு கண்டங்களில் உள்ள வெப்ப மண்டல காடுகளின் பழம் உண்ணும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் குத்து சாய்வுக் கோட்டின் Z-மதிப்பு____________

A) 1.05

B) 1.16

C) 1.15

D) 1.20

விளக்கம்: பல்வேறு கண்டங்களில் உள்ள வெப்ப மண்டல காடுகளின் பழம் உண்ணும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் குத்து சாய்வுக் கோட்டின் Z-மதிப்பு 1.15 ஆகும்.

52. உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவத்தை அளவீடு செய்வது____________

A) சூழ்நிலை மண்டல சேவைகள்

B) உயிரிய வளங்கள்

C) உயிரிய பல்வகைத்தன்மையின் சமூகப்பயன்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவத்தை கீழ்க்கண்ட கோணத்தில் நோக்கி அதனை அளவீடு செய்யலாம்.i) சூழ்நிலை மண்டல சேவைகள் ii) உயிரிய வளங்கள் மற்றும் iii) உயிரிய பல்வகைத்தன்மையின் சமூகப்பயன்கள்

53. ஒரு சிங்கத்தின் தனிப்பட்ட வாழிட பரப்பின் தேவை____________

A) 1500 சதுர.கி.மீ

B) 100 சதுர.கி.மீ

C) 90 சதுர.கி.மீ

D) 110 சதுர.கி.மீ

விளக்கம்: ஒரு சிங்கத்தின் தனிப்பட்ட வாழிட பரப்பின் தேவை 100 சதுர.கி.மீ ஆகும்.

54. உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

1] வாழிட இழப்பு, காடுகள் துண்டாடப்படுதல் மற்றும் அழித்தல்

2] சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் மாசுபடுத்திகள்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: 1. வாழிட இழப்பு, காடுகள் துண்டாடப்படுதல் மற்றும் அழித்தல் (ஏறத்தாழ 73% அனைத்துசிற்றினங்களையும் பாதிக்கிறது) 2. சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் மாசுபடுத்திகள் (புகைபனி, தீங்குயிர்க்கொல்லிகள், களைக்கொல்லிகள், எண்ணெய் கசிவுகள், பசுமைஇல்லவாயுக்கள்)

55. உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

1] தட்பவெப்பநிலை மாற்றம்

2] வெளிநாட்டு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: 1. தட்பவெப்பநிலை மாற்றம் 2. வெளிநாட்டு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல்.

56. உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

1] வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல்

2] தீவிர வேளாண்மை, நீருயிரி வளர்ப்பு நடைமுறைகள்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: 1. வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல் (ஆக்கிரமிப்பு, மரங்களை வரையறையின்றி வெட்டுதல், மிகை மீன்பிடிப்பு, வேட்டையாடல், சுரங்கங்கள்) 2. தீவிர வேளாண்மை, நீருயிரி வளர்ப்பு நடைமுறைகள்.

57. உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

1] உள்ளூர் இனங்களுடன் வெளிஇனங்களை இணைத்து கலப்பினம் உருவாக்குவதால் உள்ளூர் இனங்கள் அழிதல்.

2] இயற்கை பேரழிவுகள்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிரியப் பல்வகைத்தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: 1. உள்ளூர் இனங்களுடன் வெளிஇனங்களை இணைத் து கலப்பினம் உருவாக்குவதால் உள்ளூர் இனங்கள் அழிதல். 2. இயற்கை பேரழிவுகள்.

58. பழந்திண்ணி வௌவால்களின் எண்ணிக்கைகுறைவாக காணப்படும் தென்கிழக்கு ஆசியபகுதி____________

A) சவாமி

B) நவாமி

C) மிவாமி

D) குவாமி

விளக்கம்: தென்கிழக்கு ஆசிய பகுதியான குவாமி (Gaum) யின் பழந்திண்ணி வௌவால்களின் எண்ணிக்கைக் குறைவினால், உள்ளூர் பழ உற்பத்தி வெகுவாக குறைந்திருப்பது தான் வியப்பாகும். எனவே இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டுமெனில், பல்வகைத்தன்மை பெருந்தேவையாய் இருக்கிறது.

59. ____________ வாழிட அழிவிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.

A) வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

B) வெப்ப மண்டல வறண்ட காடுகள்

C) வெப்ப மண்டல முட்புதர் காடுகள்

D) வெப்ப மண்டல மழைக்காடுகள்

விளக்கம்: வெப்ப மண்டல மழைக்காடுகள் இத்தகைய வாழிட அழிவிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.

60. பூமியின் நிலப்பரப்பில்____________ வெப்பமண்டல காடுகளின் பரப்பு ஆகும்.

A) 15%

B) 16%

C) 14%

D) 17%

விளக்கம்: பூமியின் நிலப்பரப்பில் 14% கொண்டிருந்த வெப்பமண்டல காடுகளின் பரப்பு தற்போது 6% கூட இல்லை.

61. “புவிக்கோளின் நுரையீரல்” ____________

A) வெப்ப மண்டல மழைக்காடுகள்

B) அமேசான் மழைக்காடுகள்

C) அல்பைன் மழைக்காடுகள்

D) சதுப்புநில மழைக்காடுகள்

விளக்கம்: “புவிக்கோளின் நுரையீரல்” (Lungs of the planet) என அழைக்கப்ப ட்ட பரந்து விரிந்த அமேசான் மழைக்காடுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களின் அடைக்கலமாக திகழ்ந்தது. ஆனால், தற்போது வேளாண்மை மற்றும் மனித குடியிருப்புகளுக்காக பல பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.

62. கூற்று(A): உயிரினங்கள் வாழும்ஒரு பெரிய தொடர்ச்சியான நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

காரணம்(R): இதற்கு மிகை பயன்பாடு என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிரினங்கள் வாழும்ஒரு பெரிய தொடர்ச்சியான நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் “வாழிடம் துண்டாடப்படுதல்” எனப்படும்.

63. வாழிடங்கள் எவற்றால் துண்டாக்கப்படுகின்றன?

A) பழத்தோட்டங்கள்

B) மலைத்தோட்டங்கள்

C) நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: காட்டு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், பழத்தோட்டங்கள், மலைத்தோட்டங்கள், நகர்ப்புற குடியிருப்புகள் அமைத்தல், தொழிற்பேட்டைகள்,விளைபொருட்களைஎடுத்து செல்லவழித்தடங்கள் அமைத்தல் ஆகிய நிகழ்வுகளால் வாழிடங்கள் துண்டாடப்படுகின்றன.

64. மனிதனின்அதீத பயன்பாட்டால் மரபற்றுப்போன இனங்கள் யாவை?

A) டோடோ

B) பயணிகள் புறா

C) ஸ்டெல்லரின் கடல்பசு

D) இவை அனைத்தும்

விளக்கம்: டோடோ, பயணிகள் புறா, ஸ்டெல்லரின் கடல்பசு ஆகியவை கடந்த 200-300 ஆண்டுகளின் மனிதனின் அதீத பயன்பாட்டால் மரபற்றுப்போன இனங்களில் சிலவாகும்.

65. உயிரினங்களின் அழிவிற்கு இரண்டா வது முக்கிய காரணி ____________

A) மிகை பயன்பாடு

B) உலகளாவிய தட்பவெப்பநிலை மாற்றம்

C) வாழிடங்க ள் துண்டாடப்படுதல்

D) அயல்நாட்டு இனங்களின் உள்ளேற்றம்

விளக்கம்: உயிரினங்களின் அழிவிற்கு இரண்டாவது முக்கிய காரணியாக அந்நிய இனங்கள் கருதப்படுகிறது.

66. 1952 இல் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிக உற்பத்தித்திறனுடைய மீன்கள் ____________

A) பன்கிஸ் டூபியஸ்

B) லேபியோ கோண்டியஸ்

C) நைல்பெர்ச்

D) திலேப்பியா

விளக்கம்: 1952 இல் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிக உற்பத்தித்திறனுடைய மீன்கள் திலேப்பியா (ஜிலேபி கெண்டை – ஒரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ்)

67. கேரளாவின் உள்ளூர்இன மீன்கள்____________

A) நைல்பெர்ச்

B) பன்கிஸ் டூபியஸ்

C) லேபியோ கோண்டியஸ்

D) B மற்றும் C

விளக்கம்: கேரளாவின் உள்ளூர் நீர்நிலைகளை திலேப்பியா மீன்கள் ஆக்கிரமித்ததின் விளைவாக உள்ளூர் இனங்களான பன்கிஸ் டூபியஸ் (Punkius dubius) மற்றும் லேபியோ கோண்டியஸ் (Labeo kontius) போன்ற மீன்கள், அப்பகுதியில் விரைவில் அழியும் நிலையில் உள்ளன.

68. நைல்பெர்ச் என்ற கொண்றுன்னி மீனை தெற்கு ஆப்பிரிக்காவில் விக்டோரியா ஏரியில் அறிமுகப்படுத்தியதன் விளைவாக அழிந்துவிட்ட மீன் இனம்____________

A) மார்ஜினேட்டஸ்

B) பாராகாக்கஸ்

C) சிச்லிட்

D) டூபியஸ்

விளக்கம்: நைல்பெர்ச் (Nile perch) என்ற கொண்றுன்னி மீனை தெற்கு ஆப்பிரிக்காவில் விக்டோரியா ஏரியில் அறிமுகப்படுத்தியதன் விளைவாக சுற்றுசூழல் தனித்துவம் வாய்ந்த இயற்கையான 200க்கும் மேற்பட்ட சில சிச்லிட் மீன் இனம் அழிந்துவிட்டது.

69. மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை வாழிடமாக கொண்ட பப்பாளி மாவுப்பூச்சி____________

A) பாராகாடூபியஸ்

B) பன்கிஸ் கோண்டியஸ்

C) நைல்பெர்ச் கோண்டியஸ்

D) பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்

விளக்கம்: மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை வாழிடமாக கொண்ட பப்பாளி மாவுப்பூச்சியான பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (Paracoccus marginators), இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் பப்பாளி பயிர்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

70. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணி____________

A) மிகை பயன்பாடு

B) உலகளாவிய தட்பவெப்பநிலை மாற்றம்

C) வாழிடங்க ள் துண்டாடப்படுதல்

D) தொழில்மயமாக்கம்

விளக்கம்: தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணியான தொழில்மயமாக்கம் உயிரியப் பல்வகைத்தன்மைக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குகிறது.

71. கூற்று(A): தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நிலம் மற்றும் கடலின் வெப்ப நிலை உயர்ந்து மழைப்பொழிவின் முறைகளை மாற்றுகின்றன.

காரணம்(R): இதனால் பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளப்பெருக்கு வானிலை நிலவரத்தை கணிக்க இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக நிலம் மற்றும் கடலின் வெப்ப நிலை உயர்ந்து மழைப்பொழிவின் முறைகளை மாற்றுகின்றன. இதனால் பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளப்பெருக்கு வானிலை நிலவரத்தை கணிக்க இயலாமை, மிக அதிக வெப்பம் மற்றும் குடல் நோய்கள் பரவுதல், விலங்குகளின் இடப்பெயர்வு மற்றும் வனங்களில் மரங்கள் இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

72. இடம் மாறும் வேளாண்மை ____________ பகுதியில் நடைமுறையில் உள்ளது.

A) வடகிழக்கு இந்திய

B) வடமேற்கு இந்திய

C) தென்கிழக்கு இந்திய

D) தென்மேற்கு இந்திய

விளக்கம்: இடம் மாறும் வேளாண்மை வடகிழக்கு இந்தியப் பகுதியில் நடைமுறையில் உள்ளது.

73. கூற்று(A): இயற்கையான மரங்களை கொண்ட வனங்களை எரித்து சுத்தம் செய்து 2-3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின் மண் வளம் குறைந்து இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வந்தவுடன் அந்த நிலங்களை கைவிட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு புதிய இடத்தை தேர்வு செய்து மீண்டும் பயிர் உற்பத்திக்கு மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார் படுத்துவர்.

காரணம்(R): இதுவே இடம் மாறும் வேளாண்மை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இயற்கையான மரங்களை கொண்ட வனங்களை எரித்து சுத்தம் செய்து 2-3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின் மண் வளம் குறைந்து இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வந்தவுடன் அந்த நிலங்களை கைவிட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு புதிய இடத்தை தேர்வு செய்து மீண்டும் பயிர் உற்பத்திக்கு மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார்படுத்துவர். இதுவே இடம் மாறும் வேளாண்மை எனப்படும்.

74. கூற்று(A): ஒரு இனம் மரபற்று போவதனால் அதைச் சார்ந்த மற்றொரு இனமும் மரபற்றுப் போகும்.

காரணம்(R): இதனை இணை மரபற்றுபோதல் என்கிறோம்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இணை மரபற்றுபோதல் என்பது ஒரு இனம் மரபற்று போவதனால் அதைச் சார்ந்த மற்றொரு இனமும் மரபற்றுப் போதலாகும்.

75. ஆர்க்கிட் தேனீக்கள் எவற்றிற்கு எடுத்துக்காட்டு____________

A) மிகை பயன்பாடு

B) உலகளாவிய தட்பவெப்பநிலை மாற்றம்

C) வாழிடங்க ள் துண்டாடப்படுதல்

D) இணை மரபற்றுபோதல்

விளக்கம்: இணை மரபற்றுபோதலுக்கு எடுத்துக்காட்டு ஆர்க்கிட் தேனீக்கள் மற்றும் வனத்தின் மரங்கள்.

76. கல்வாரியா மரம் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய____________ பறவையை சார்ந்துள்ளது.

A) டோடோ

B) பயணிகள் புறா

C) ஸ்டெல்லரின் கடல்பசு

D) ஸ்டெல்லரின் புறா

விளக்கம்: கல்வாரியா மரம் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய டோடோ பறவையை சார்ந்துள்ளது.

77. கூற்று(A): அசாதாரணமான மற்றும் துரிதமான வாழிட மாறுபாட்டு இழப்புகளைச் சந்திக்கும் உள்ளூர் சிற்றினங்களை அதிகமாகக் கொண்ட நிலப்பரப்பு காணப்படுகிறது.

காரணம்(R): இவை அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அசாதாரணமான மற்றும் துரிதமான வாழிட மாறுபாட்டு இழப்புகளைச் சந்திக்கும் உள்ளூர் சிற்றினங்களை அதிகமாகக் கொண்ட நிலப்பரப்பு அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி (Hotspot) எனப்படும்.

78. அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி மனித செயல்பாடுகளால் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதிக்கப்பட் டு மாற்றியமைக்கப்பட்ட பகுதி என்று வரையறுத்தவர் ____________

A) ஸ்டீபன் மையர்ஸ்

B) நார்மன் கார்லின்

C) நார்மன் மையர்ஸ்

D) நீல்ஸ் கார்லின்

விளக்கம்: நார்மன் மையர்ஸ் (Norman myers) என்பவர் அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி தனித்தன்மையுடைய உள்ளூர் உயிரினங்களின் பல்வகைத்தன்மையை அதிகமாகக் கொண்ட, அதே நேரத்தில் மனித செயல்பாடுகளால் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதிக்கப்பட் டு மாற்றியமைக்கப்பட்ட பகுதி என்று வரையறுத்தார்.

79. உலகில்____________ உயிரியப் பல்வகைத்தன்மை அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

A) 36

B) 37

C) 35

D) 38

விளக்கம்: உலகில் 35 உயிரியப் பல்வகைத்தன்மை அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

80. ____________ என்பது மரபணு பொருட்களை பாதுகாக்கும் ஒரு உயிர் களஞ்சியமாகும்.

A) மரபணு கழகம்

B) மரபணு நிதியம்

C) மரபணு அமைப்பு

D) மரபணுவங்கி

விளக்கம்: மரபணுவங்கிகள் என்பது மரபணு பொருட்களை பாதுகாக்கும் ஒரு உயிர் களஞ்சியமாகும்.

81. கூற்று(A): தாவர அல்லது விலங்கினங்களை அவற்றுக்குரிய தளங்களிலேயே பாதுகாக்கப்படுதல்

காரணம்(R): இவை சூழல்உள் பாதுகாப்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சூழல்உள் பாதுகாப்பு: தாவர அல்லது விலங்கினங்களை அவற்றுக்குரிய தளங்களிலேயே பாதுகாக்கப்படுதல் அல்லது தாவர விலங்கின மரபணு வளங்களை இயற்கை சூழலில் பாதுகாத்தல்.

82. சூழல் உள்ள பாதுகாப்பு யுக்திகள் அல்லாதவை எவை?

A) தேசிய பூங்காக்கள்

B) உயிர்கோள காப்பிடங்கள்

C) வனவிலங்கு புகலிடங்கள்

D) விலங்கியல் பூங்காக்கள்

விளக்கம்: தேசிய பூங்காக்கள், உயிர்கோள காப்பிடங்கள், வனவிலங்கு புகலிடங்கள் ஆகியவை சூழல் உள்ள பாதுகாப்பு யுக்திகளாகும்.

83. கூற்று(A): அழியும் நிலையிலுள்ள விலங்கு அல்லது தாவர இனங்களை தனிப்பட்ட இடங்களில் வைத்து சிறப்பாக பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறை

காரணம்(R): இவை சூழல்வெளி பாதுகாப்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சூழல்வெளி பாதுகாப்பு: அழியும் நிலையிலுள்ள விலங்கு அல்லது தாவர இனங்களை தனிப்பட்ட இடங்களில் வைத்து சிறப்பாக பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகும்.

84. சூழல் வெளி பாதுகாப்புக்கான திட்டங்கள் எவை?

A) விலங்கியல் பூங்காக்கள்

B) தாவரவியல் தோட்டங்கள்

C) வனவிலங்கு புகலிடங்கள்

D) A மற்றும் B

விளக்கம்: விலங்கியல் பூங்காக்கள், தாவரவியல் தோட்டங்கள் ஆகியவை பொதுவான சூழல் வெளி பாதுகாப்புக்கான திட்டங்களாகும்.

85. கீழ்க்கண்டவை எவ்வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] இனத் தொகையை மீட்டெடுக்க உதவுதல்

2] இயற்கையான வாழிடங்களைப் நெருக்கமாக ஒத்திருக்கும் அமைப்புகளைக் கொண்டு மரபற்றுப் போவதிலிருந்து பாதுகாத்தல்.

A) சூழல் உள் பாதுகாப்பு

B) சூழல் வெளி பாதுகாப்பு

C) சூழல் மேல் பாதுகாப்பு

D) சூழல் கீழ் பாதுகாப்பு

விளக்கம்: சூழல் வெளி பாதுகாப்பு: இனத் தொகையை மீட்டெடுக்க உதவுதல் அல்லது இயற்கையான வாழிடங்களைப் நெருக்கமாக ஒத்திருக்கும் அமைப்புகளைக் கொண்டு மரபற்றுப் போவதிலிருந்து பாதுகாத்தல்.

86. கீழ்க்கண்டவை எவ்வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] அழியும் நிலையில் உள்ள தாவர அல்லது விலங்கினங்களை அவற்றின் இயற்கை வாழிடங்களில் பாதுகாத்தல்

2] கொன்றுண்ணி விலங்குகளிடமிருந்து சிற்றினங்களை பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

A) சூழல் உள் பாதுகாப்பு

B) சூழல் வெளி பாதுகாப்பு

C) சூழல் மேல் பாதுகாப்பு

D) சூழல் கீழ் பாதுகாப்பு

விளக்கம்: அழியும் நிலையில் உள்ள தாவர அல்லது விலங்கினங்களை அவற்றின் இயற்கை வாழிடங்களில் பாதுகாத்தல் இம்முறையில் இயற்கை வாழிடங்களையே மீட்பது அல்லது கொன்றுண்ணி விலங்குகளிடமிருந்து சிற்றினங்களை பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

87. கூற்று(A): தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வனவிலங்கு சுற்றுலா பூங்கா, ஆர்போரிட்டா (மரங்கள் மற்றும் புதர்களை கொண்ட காடுகள்) ஆகியவற்றில் வன உயிரினங்கள் மற்றும் வளர்க்கப்ப டும் உயிரினங்களைச் சேகரிக்கப்படுகிறது.

காரணம்(R): இது வெளிப்புற சேகரிப்பு எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வனவிலங்கு சுற்றுலா பூங்கா, ஆர்போரிட்டா (மரங்கள் மற்றும் புதர்களை கொண்ட காடுகள்) ஆகியவற்றில் வன உயிரினங்கள் மற்றும் வளர்க்கப்ப டும் உயிரினங்களைச் சேகரித்தல் வெளிப்புற சேகரிப்பு எனப்படும்.

88. இந்திய முதலை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட து எம்முறையில்?

A) சூழல் உள் பாதுகாப்பு

B) சூழல் வெளி பாதுகாப்பு

C) சூழல் மேல் பாதுகாப்பு

D) வெளிப்புற சேகரிப்பு

விளக்கம்: வெளிப்புற சேகரிப்பு முறையில் இந்திய முதலை மற்றும் கங்கை டால்பின் ஆகிய இனங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன.

89. பரப்பளவு அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்று ____________

A) முதுமலை வனவிலங்கு புகலிடம்

B) இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம்

C) முண்டந்துறை வனவிலங்கு புகலிடம்

D) அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

விளக்கம்: அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா பரப்பளவு அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும்.

90. “விலங்கியல் பூங்கா தூதுவர்” நிகழ்ச்சிஎங்கு பள்ளி குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது____________

A) முதுமலை வனவிலங்கு புகலிடம்

B) இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம்

C) முண்டந்துறை வனவிலங்கு புகலிடம்

D) அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

விளக்கம்: அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா முக்கிய நிகழ்வான “விலங்கியல் பூங்கா தூதுவர்” என்ற நிகழ்ச்சி பள்ளி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் 400க்கு அதிகமான பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு “விலங்கியல் பூங்கா தூதுவர்” என பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

91. ஹெர்ப்பெட்டலாஜி என்பன ____________

A) பறவை இனங்களை பற்றிய அறிவியல் பிரிவு

B) பாலூட்டிகள் பற்றிய அறிவியல் பிரிவு

C) முதுகெலும்பிகள் பற்றிய அறிவியல் பிரிவு

D) ஊர்வன இனங்களை பற்றிய அறிவியல் பிரிவு

விளக்கம்: ஹெர்ப்பெட்டலாஜி: ஊர்வன இனங்களை பற்றிய அறிவியல் பிரிவு.

92. சென்னைமுதலை பண்ணைஅறக்கட்டளை மற்றும் ஹெர்ப்பெட்டலாஜி மையம் யாரால் அமைக்கப்பட்டது?

A) ஸ்டீபன் மையர்ஸ்

B) நார்மன் கார்லின்

C) நார்மன் மையர்ஸ்

D) ரோமூலஸ் விட்டேக்கர்

விளக்கம்: சென்னைமுதலை பண்ணைஅறக்கட்டளை மற்றும் ஹெர்ப்பெட்டலாஜி மையம் (ஊர்வன இனங்களை பற்றிய அறிவியல் பிரிவு) என்பது புகழ்பெற்ற ரோமூலஸ் விட்டேக்கர் மற்றும் அவருடன் ஒத்த மனநிலைக் கொண்டவர்களின் மூளையிருந்து உதித்த குழந்தையாகும்.

93. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் மத ரீதியான சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை____________

A) புனித தோட்டம்

B) புனித மலர்கள்

C) புனித விலங்கு

D) புனித மரங்கள்

விளக்கம்: புனித தோப்புகள் அல்லது புனித மரங்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் மத ரீதியான சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களுக்கு புனித தோப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

94. உயிர்கோள காப்பிடங்கள் திட்டத்தை யூனெஸ்கோவின்____________ வழிநடத்துகிறது.

A) உயிர்கோள பெட்டக பாதுகாப்பு

B) சூழ்நிலையியல் பாதுகாப்பு

C) சுற்றுசூழல் மண்டல பாதுகாப்பு

D) மனிதன் மற்றும் உயிர்கோளத் திட்டம்

விளக்கம்: உயிர்கோள காப்பிடங்கள் திட்டத்தை யூனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்கோளத் திட்டம் (Man and Biosphere Reserve; MAB) வழிநடத்துகிறது.

95. மனிதன் மற்றும் உயிர்கோள திட்டத்தின் அணுகுமுறையை ஆதரித்து இந்திய அரசு____________ ல் கையொப்பமிட்டு செயல்படுத்தியது.

A) 1987

B) 1988

C) 1986

D) 1985

விளக்கம்: மனிதன் மற்றும் உயிர்கோள திட்டத்தின் அணுகுமுறையை ஆதரித்து இந்திய அரசு 1986 ல் கையொப்பமிட்டு செயல்படுத்தியது.

96. நாட்டில்____________ உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன.

A) 17

B) 16

C) 18

D) 19

விளக்கம்: நாட்டில் 18 உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன.

97. தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோள காப்பிடங்கள் அல்லாதவை எவை?

A) அகத்தியர் மலை

B) நீலகிரி

C) மன்னார் வளைகுடா

D) பிச்சாவரம்

விளக்கம்: அகத்தியர் மலை (கர்நாடகா-தமிழ்நாடு-கேரளா), நீலகிரி (தமிழ்நாடு-கேரளா) மற்றும் மன்னார் வளைகுடா (தமிழ்நாடு) ஆகிய உயிர்கோள காப்பிடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

98. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1942

2] முதுமலை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1942

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு:1936. 2] முதுமலை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1942.

99. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1967

2] இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் (ஆனை மலை) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1976

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1967. 2] இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் (ஆனை மலை) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1976.

100. முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு____________

A) 1989

B) 1987

C) 1988

D) 1985

விளக்கம்: முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1988.

101. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் உள்ள மாவட்டம்: நீலகிரி

2] முதுமலை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்: காஞ்சிபுரம்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] வேடந்தாங்கல் ஏரி பறவைகள் புகலிடம் உள்ள மாவட்டம்: காஞ்சிபுரம். 2] முதுமலை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்: நீலகிரி.

102. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்: கோயம்புத்தூர்

2] இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் (ஆனை மலை) உள்ள மாவட்டம்: கோயம்புத்தூர்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்: நாகப்பட்டினம். 2] இந்திராகாந்தி வனவிலங்கு புகலிடம் (ஆனை மலை) உள்ள மாவட்டம்: கோயம்புத்தூர்.

103. முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்____________

A) காஞ்சிபுரம்

B) நீலகிரி

C) நாகப்பட் டினம்

D) திருநெல்வேலி

விளக்கம்: முண்டந்துறை வனவிலங்கு புகலிடம் உள்ள மாவட்டம்: திருநெல்வேலி.

104. அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்பு____________நோக்கம்.

A) வனவிலங்கு சரணாலயம்

B) வனவிலங்கு பாதுகாப்பு

C) வனவிலங்கு பூங்கா

D) வனவிலங்கு புகலிடம்

விளக்கம்: அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்பு வனவிலங்கு புகலிடங்களின் நோக்கமாகும்.

105. வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ____________

A) 1971

B) 1973

C) 1974

D) 1972

விளக்கம்: வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் , 1972.

106. தற்போது இந்தியாவில் ____________ புகலிடங்கள் உள்ளன.

A) 545

B) 544

C) 546

D) 547

விளக்கம்: தற்போது இந்தியாவில் உள்ள 544 புகலிடங்கள் சுமார் 1,18,918 ச.கி.மீ அளவிற்கு பரந்துள்ளன.

107. வனவிலங்கு புகலிடம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார்____________ ஆகும்.

A) 3.64 %

B) 3.65 %

C) 3.61 %

D) 3.62 %

விளக்கம்: வனவிலங்கு புகலிடம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 3.62% ஆகும்.

108. கூற்று(A): காட்டுவிலங்குகளும் தாவரங்களும் வேட்டையாடப்படவும் திருடப்படவும் இன்றி அடைக்கலம் பெறுகிறது.

காரணம்(R): இந்நிலப்பகுதியே வனவிலங்குப் புகலிடம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காட்டுவிலங்குகளும் தாவரங்களும் வேட்டையாடப்படவும் திருடப்படவும் இன்றி அடைக்கலம் பெறும் நிலப்பகுதியே வனவிலங்குப் புகலிடம் எனப்படும்.

109. ஆசிய யானை மற்றும்இந்திய புலிகளுக்கு புகழ்பெற்றது ____________

A) கேரளாவில் உள்ள வைக்கம் வனவிலங்கு புகலிடம்

B) கேரளாவில் உள்ள மூணார் வனவிலங்கு புகலிடம்

C) கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் வனவிலங்கு புகலிடம்

D) கேரளாவில் உள்ள பெரியார் வனவிலங்கு புகலிடம்

விளக்கம்: கேரளாவில் உள்ள பெரியார் வனவிலங்கு புகலிடம் ஆசிய யானை மற்றும்இந்திய புலிகளுக்கு புகழ்பெற்றதாகும்.

110. இந்தியாவில்____________ தேசிய பூங்காக்கள் அமைந்துள்ளன.

A) 105

B) 106

C) 104

D) 107

விளக்கம்: இந்தியாவில் 40,501 ச.கி.மீ பரப்பில் 104 தேசிய பூங்காக்கள் அமைந்துள்ளன.

111. தேசிய பூங்காக்கள் நாட்டின் நிலப்பரப்பில்____________ ஆகும்.

A) 1.24 %

B) 1.25 %

C) 1.22 %

D) 1.23 %

விளக்கம்: தேசிய பூங்காக்கள் நாட்டின் நிலப்பரப்பில் 1.23% ஆகும்.

112. ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதி____________

A) கிர் தேசிய பூங்கா

B) பந்திப்பூர் தேசிய பூங்கா

C) இரவிகுளம் தேசிய பூங்கா

D) காசிரங்கா தேசிய பூங்கா

விளக்கம்: அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா, ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

113. தேசிய பூங்காக்கள்____________ அறிவிக்கப்பட்ட இயற்கை வாழிடப் பகுதியாகும்.

A) மத்திய அரசு

B) மாநில அரசு

C) மத்திய அரசு மற்றும் மாநிலரசு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இது சுற்றுசூழல், தாவர, விலங்கு, புவி அமைப்பியல் (அல்லது) விலங்கின கூட்டமைப்பு போன்றவற்றிற்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று தேசிய பூங்காக்கள் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை வாழிடப் பகுதியாகும்.

114. மாநிலத்தின் முதன்மை வன உயிரி பாதுகாவலர் அனுமதித்த நபர்களை தவிர மற்ற மனித செயல்பாடுகளுக்கு தேசிய பூங்காக்களில் அனுமதில்லை என கூறும் பகுதி____________

A) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, பகுதி II

B) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, பகுதி IV

C) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, பகுதி V

D) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, பகுதி III

விளக்கம்: வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act – WPA) 1972, பகுதி IVல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் படி மாநிலத்தின் முதன்மை வன உயிரி பாதுகாவலர் அனுமதித்த நபர்களை தவிர மற்ற மனித செயல்பாடுகளுக்கு தேசிய பூங்காக்களில் அனுமதில்லை.

115. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கிண்டி தேசிய உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1977

2] மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1986

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] கிண்டி தேசிய உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1977. 2] மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1986.

116. முக்குர்த்தி தேசிய உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு____________

A) 2000

B) 2001

C) 2002

D) 2003

விளக்கம்: முக்குர்த்தி தேசிய உயிரியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 2001.

117. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கிண்டி தேசிய உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்: சென்னை

2] மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: 1] கிண்டி தேசிய உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்: சென்னை. 2] மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி.

118. முக்குர்த்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்____________

A) நீலகிரி

B) ராமநாதபுரம்

C) தூத்துக்குடி

D) சென்னை

விளக்கம்: முக்குர்த்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ள மாவட்டம்: நீலகிரி.

119. கீழ்க்கண்டவற்றுள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அல்லாதவை யாவை?

A) தேசியப் பூங்காக்கள்

B) வன உயிரி புகலிடங்கள்

C) சமூக காப்பிடங்கள்

D) வனவிலங்கு சரணாலயம்

விளக்கம்: தேசியப் பூங்காக்கள், வன உயிரி புகலிடங்கள், சமூக காப்பிடங்கள் மற்றும் உயிர்க்கோள காப்பிடங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.

120. இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள்____________

A) 772

B) 773

C) 774

D) 771

விளக்கம்: இந்தியாவில் 16,2,099 ச.கி.மீ பரப்பளவில் 771 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

121. கூற்று(A): உயிரினங்களின் மரபியல் வளத்தை இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.

காரணம்(R): இவை சூழல்உள் பாதுகாத்தல் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிரினங்களின் மரபியல் வளத்தை இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலங்களில் வைத்துப் பாதுகாத்தல் சூழல்உள் பாதுகாத்தல் ஆகும்.

122. ஸ்டாக்ஹோம் பிரகடனம் ____________

A) 1973

B) 1972

C) 1974

D) 1971

விளக்கம்: ஸ்டாக்ஹோம் பிரகடனம் 1972ன் படி இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக இயற்கை வளங்களான காற்று, நீர், நிலம், தாவரங்கள் மற்றும்விலங்குகள் ஆகியவற்றை கவனத்துடன் திட்டமிட்டு மேலாண்மை செய்து இயற்கை சூழ்நிலைமண்டலங்களைப் பாதுகாக்கவேண்டும்.

123. இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை தொடர்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிறுவனம்____________

A) சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகம்

B) சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிதியம்

C) சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்

D) சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு

விளக்கம்: இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை தொடர்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிறுவனமே, சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகும்.

124. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு____________

A) 1949

B) 1947

C) 1948

D) 1945

விளக்கம்: சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு 1948 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள கிளாண்ட் VDயில் (Gland VD) நிறுவப்பட்டது.

125. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்____________

A) பச்சை பட்டியல்

B) மஞ்சள் பட்டியல்

C) கருப்பு பட்டியல்

D) சிவப்பு பட்டியல்

விளக்கம்: செந்தரவுப் புத்தகம் (அ) சிவப்பு தகவல் புத்தகம் அல்லது சிவப்பு பட்டியல் என்பது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகும்.

126. இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பு, ____________ என பெயர் மாற்றப்பட்டது.

A) உலக பாதுகாப்பு கழகம்

B) உலக பாதுகாப்பு நிதியம்

C) உலக பாதுகாப்பு சங்கம்

D) உலக பாதுகாப்பு கூட்டமைப்பு

விளக்கம்: இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பு, உலக பாதுகாப்பு கூட்டமைப்பு (World conservation union -WCU) (மோர்கஸ் சுவிட்சர்லாந்து) என பெயர் மாற்றப்பட்டு செந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.

127. சிவப்பு பட்டியல் என்ற கருத்து____________ ஆம் ஆண்டு உருவானது.

A) 1964

B) 1965

C) 1966

D) 1963

விளக்கம்: சிவப்பு பட்டியல் என்ற கருத்து 1963 ஆம் ஆண்டு உருவானது.

128. இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கிய ஆண்டு____________

A) 1974

B) 1975

C) 1976

D) 1973

விளக்கம்: நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1973ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது.

129. 1973 ஆம் ஆண்டு____________ தேசிய பூங்காவில் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

A) கிர் தேசிய பூங்கா

B) பந்திப்பூர் தேசிய பூங்கா

C) இரவிகுளம் தேசிய பூங்கா

D) ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

விளக்கம்: 1973 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

130. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பு____________

A) தேசிய புலிகள் காப்பக கழகம்

B) தேசிய புலிகள் காப்பக சங்கம்

C) தேசிய புலிகள் காப்பக கூட்டமைப்பு

D) தேசிய புலிகள் காப்பக ஆணையம்

விளக்கம்: தேசிய புலிகள் காப்பக ஆணையம் (NTCA) என்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பாகும்.

131. இந்தியாவில் தற்போதைய புலிகளின் எண்ணிக்கை____________

A) 2222

B) 2214

C) 2215

D) 2212

விளக்கம்: தேசிய புலிகள் காப்பக ஆணையம், ஜனவரி 20, 2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய புலிகளின் எண்ணிக்கை 2,212 என குறிப்பிட்டுள்ளது.

132. பல்வகைத்தன்மையின் இழப்பிற்கு மிக முக்கிய காரணம்____________

A) உயிரினங்கள் இடம்பெயர்வு

B) உயிரினங்கள் அழிவு

C) வாழிடமாதல்

D) உயிரினங்கள் மரபற்று போதல்

விளக்கம்: பல்வகைத்தன்மையின் இழப்பிற்கு மிக முக்கிய காரணம் உயிரினங்கள் மரபற்று போவதாகும்.

133. கூற்று(A): சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள் மற்றும் நோய்கள் போன்ற காரணங்களால் தற்போதுள்ள ஒரு சிற்றினம் மேம்பட்ட தகவமைப்புகளைக் கொண்ட மற்றொரு சிற்றினத்தால் மாற்றம் செய்யப்படுகிறது.

காரணம்(R): இது இயற்கை வழி மரபற்றுப்போதல் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள் மற்றும் நோய்கள் போன்ற காரணங்களால் தற்போதுள்ள ஒரு சிற்றினம் மேம்பட்ட தகவமைப்புகளைக் கொண்ட மற்றொரு சிற்றினத்தால் மாற்றம் செய்யப்படுதல் இயற்கை வழி மரபற்றுப்போதல் எனப்படும்.

134. மரபற்றுபோதலின் வகைகள் யாவை?

A) இயற்கை வழி மரபற்றுபோதல்

B) பெருந்திரள் மரபற்றுப்போதல்

C) மானுடசெயல்பாடுகளால் மரபற்றுப் போதல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மரபற்றுபோதல் மூன்று வகைப்படும். 1] இயற்கை வழி மரபற்றுபோதல் 2] பெருந்திரள் மரபற்றுப்போதல் 3] மானுடசெயல்பாடுகளால் மரபற்றுப் போதல்

135. ஹவாய் வாழ் மெல்லுடலிகள் இழப்பிற்கான அடையாளம்____________

A) ஜார்ஜ் என்ற மர நத்தை

B) ஜார்ஜ் என்ற நில நத்தை

C) ஜார்ஜ் என்ற காட்டு நத்தை

D) ஜார்ஜ் என்ற நத்தை

விளக்கம்: ஜார்ஜ் என்ற மர நத்தை (Achatinella apexfulva) ஜனவரி 1, 2019 அன்று தனது 14 வது வயதில் இறந்தது. அந்த நத்தை தான் அந்த இனத்தின் கடைசி நத்தையாகும். இது ஹவாய் வாழ் மெல்லுடலிகள் இழப்பிற்கான அடையாளமாகும்.

136. அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிகள் யாவை?

A) இமயமலை

B) மேற்கு தொடர்ச்சி மலைகள்

C) இந்தோ-பர்மா, அசாம் மற்றும் அந்தமான் தொகுதி தீவுகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிகள்: இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தோ-பர்மா, அசாம் மற்றும் அந்தமான் தொகுதி தீவுகள், சுந்தாலேன்ட்.

137. பொருத்துக

உயிர்ப்புவி மண்டலங்கள் பரப்பளவு சதவீதம்

a) இமய மலைக்கு அப்பாலுள்ள மண்டலம்/ – 1] 57 %

b) இமயமலை – 2] 72%

c) இந்திய பாலைவனம் – 3] 6.9 %

d) குறை – வறட்சி மண்டலம் – 4] 15.6 %

e) மேற்கு தொடர்ச்சி மலை – 5] 4 %

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 3 4 5

D) 3 4 5 1 2

138. பொருத்துக

உயிர்ப்புவி மண்டலங்கள் பரப்பளவு சதவீதம்

a) டெக்கான் தீபகற்பம் – 1] 43 %

b) கங்கை சமவெளி – 2] 11%

c) வடகிழக்கு இந்தியா – 3] 5.2 %

d) கடற்கரையோர மண்டலம் – 4] 2.5 %

e) அந்தமான்மற்றும் நிக்கோபர் தீவுகள் – 5] 0.3 %

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 3 4 5

D) 3 4 5 1 2

139. கூற்று(A): வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன.

காரணம்(R): பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன. பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

140. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

A) WWF

B) IUCN

C) ZSI

D) UNEP

விளக்கம்: உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்: IUCN.

141. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ____________

A) யானை

B) மான்

C) ஆடு

D) நீலகிரி வரையாடு

விளக்கம்: தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு ஆகும்.

12th Science Lesson 16 Questions in Tamil

16] சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

1.சுற்றுச்சூழலே என்னுடைய முதன்மையான ஆசிரியர் ____________

A) மசனபுஃபுகுயோகா

B) குயோபுஃபு

C) மசனகுயோ

D) புஃபுமசனகுயோகா

விளக்கம்: சுற்றுச்சூழலே என்னுடைய முதன்மையான ஆசிரியர்- மசனபுஃபுகுயோகா.

2. கூற்று(A): இயற்கை காரணங்கள் மற்றும் மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலின் இயற்பிய, வேதிய மற்றும் உயிரிய பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம் ஏற்படுகிறது.

காரணம்(R): இம்மாற்றமே மாசுபாடு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மாசுபாடு என்பது இயற்கை காரணங்கள் மற்றும் மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலின் இயற்பிய, வேதிய மற்றும் உயிரிய பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமாகும்.

3. மாசுபாட்டினை ஏற்படுத்தும் காரணிகள்____________

A) மாசுபாடு காரணிகள்

B) மாசுபாடு பொருள்கள்

C) மாசுக்கள்

D) மாசுபடுத்திகள்

விளக்கம்: மாசுபாட்டினை ஏற்படுத்தும் காரணிகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.

4. விரைவாக சிதையக்கூடியவை ____________என்றும் அழைக்கலாம்.

A) நிலையற்றவை

B) நிலைத்திருப்பவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சிதையக்கூடிய மாசுபடுத்திகள், அவற்றினுடைய உட்கூறுகளாக சிதைய எடுத்துக்கொள்ளும் கால அளவின் அடிப்படையில் விரைவாக சிதையக்கூடியவை (நிலையற்றவை) என்றும் அழைக்கலாம்.

5. மெதுவாக சிதையக்கூடியவை ____________என்றும் அழைக்கலாம்.

A) நிலையற்றவை

B) நிலைத்திருப்பவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மெதுவாக சிதையக்கூடியவை (நிலைத்திருப்பவை) என்றும் அழைக்கலாம்.

6. இயற்கையான செயல்முறைகள் மூலம் சிதைக்ககூடியவை ____________

A) நிலையற்றவை

B) நிலைத்திருப்பவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இயற்கையான செயல்முறைகள் மூலம் சிதைக்ககூடியவை விரைவாக சிதையக்கூடியவை (நிலையற்றவை) ஆகும்.

7. வீட்டுக்கழிவு நீர் எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) விரைவாக சிதையக்கூடியவை

B) நிலைத்திருப்பவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வீட்டுக்கழிவு நீர் மற்றும் காய்கறி கழிவுகள் போன்றவை, விரைவாக சிதையக்கூடியவை (நிலையற்றவை) மாசுபடுத்திகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

8. பல ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் அடையாமல் சுற்றுச்சூழலில் அப்படியே இருப்பவை____________

A) நிலையற்றவை

B) மெதுவாக சிதையக்கூடியவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மெதுவாக சிதையக்கூடிய அல்லது தொடர்ந்திருக்கும் மாசுபடுத்திகள் இவை பல ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் அடையாமல் சுற்றுச்சூழலில் அப்படியே இருக்கும் மாசுபடுத்திகளாகும்.

9. DDT எவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்?

A) விரைவாக சிதையக்கூடியவை

B) மெதுவாக சிதையக்கூடியவை

C) மாசற்றவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மெதுவாக சிதையக்கூடிய அல்லது தொடர்ந்திருக்கும் மாசுபடுத்திகள்: DDT யைப் போல இவை சிதைவடைய பல பத்தாண்டுகள் அல்லது அதற்கு அதிகமான கால அளவினை எடுத்துக் கொள்கின்றன.

10. கீழ்க்கண்டவற்றுள் சிதைவடையா மாசுபடுத்திகள் அல்லாதவை எவை?

A) காரீயம்

B) பாதரசம்,

C) காட்மியம்

D) இரும்பு

விளக்கம்: காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் மற்றும் நிக்கல் போன்ற நச்சுப் பொருட்கள் சிதைவடையா மாசுபடுத்திகளாகும்.

11. கீழ்க்கண்டவை எவ்வகையான மாசுபடுதிகள் என கண்டறிக?

1] இயற்கையான செயல் முறைகளினால் சிதைக்க இயலாது.

2] இவை ஒருமுறை சுற்றுச்சூழலில் விடுவிக்கப்பட்டு விட்டால் வெளியேற்றுவது கடினமாகும்.

A) விரைவாக சிதையக்கூடியவை

B) மெதுவாக சிதையக்கூடியவை

C) சிதைவடையா மாசுபடுத்திகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சிதைவடையா மாசுபடுத்திகள்: இயற்கையான செயல் முறைகளினால் சிதைக்க இயலாது. இவை ஒருமுறை சுற்றுச்சூழலில் விடுவிக்கப்பட்டு விட்டால் வெளியேற்றுவது கடினமாகும் மற்றும் இவை தொடர்ந்து அதிகரிக்கும்.

12. புவியைச் சுற்றியுள்ள காற்று அடுக்கு ____________ எனப்படுகிறது.

A) மேகம்

B) வானம்

C) அடுக்கு மண்டலம்

D) வளிமண்டலம்

விளக்கம்: புவியைச் சுற்றியுள்ள காற்று அடுக்கு வளிமண்டலம் எனப்படுகிறது.

13. ஓசோன் படலச் சிதைவு ____________ மூலம் ஏற்படுகிறது.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) குளோரோ புளூரோகார்பன்கள்

விளக்கம்: குளிரூட்டியாக பயன்படும் குளோரோ புளூரோகார்பன்கள் (CFCs) மூலம் ஓசோன் படலச் சிதைவு ஏற்படுகிறது.

14. கூற்று(A): இயற்கையான அல்லது மனித நடவடிக்கைகளினால் (மனித ஆக்க காரணிகள்) புவியின் வளிமண்டலக் கூறுகளில் ஏற்படும் மாற்றம் ஏற்படுகிறது.

காரணம்(R): இவை காற்று மாசுபாடு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: இயற்கையான அல்லது மனித நடவடிக்கைகளினால் (மனித ஆக்க காரணிகள்) புவியின் வளிமண்டலக் கூறுகளில் ஏற்படும் மாற்றம் காற்று மாசுபாடு எனப்படும்.

15. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காற்று மாசுபடுத்திகள் என்பவை, வெளியேற்றப்பட்ட தூசிகள் அல்லது துகள் பொருட்கள் (PM: 2.5,10)

2] காற்று மாசுபடுத்திகள் என்பவை, வாயுக்க ள் வெளியேற்றப்படுதல் (SO2, NO2, CO, CO2)

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காற்று மாசுபடுத்திகள் என்பவை 1] வெளியேற்றப்பட்ட தூசிகள் அல்லது துகள் பொருட்கள் (PM: 2.5,10). 2] காற்று மாசுபடுத்திகள் என்பவை, வாயுக்க ள் வெளியேற்றப்படுதல் (SO2, NO2, CO, CO2).

16. புதைபடிவ எரிபொருட்கள் முழுமையாக எரிக்கப்படாததன் காரணமாக_ ___________ உற்பத்தியாகிறது.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: புதைபடிவ எரிபொருட்கள் முழுமையாக எரிக்கப்படாததன் காரணமாக கார்பன் மோனாக்சைடு (CO) உற்பத்தியாகிறது.

17. பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில்___________ மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் வாகனங்களே ஆகும்.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில் கார்பன் மோனாக்சைடு மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் வாகனங்களே ஆகும்.

18. தீவிர நகரமயமாதலின் விளைவாக அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடு மற்றும் ___________ வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: தீவிர நகரமயமாதலின் விளைவாக அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) ஆகிய வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன.

19. உலகம் வெப்பமாதலுக்கு காரணமான முக்கிய மாசுபடுத்தி___________

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: வாகனங்கள், வானூர்திகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை (நிலக்கரி, எண்ணெய், மற்றும் பிற) எரிக்கும் மனித செயல்பாடுகள் போன்றவற்றால் வெளியேறும் CO2, உலகம் வெப்பமாதலுக்கு காரணமான முக்கிய மாசுபடுத்தியாகும்.

20. புதைபடிவ எரிபொருள் எரிதல்__________ வெளியேறுவதற்கான மூலாதாரங்களாகும்.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: புதைபடிவ எரிபொருள் எரிதல் மற்றும் வாகன புகை வெளியேற்றம் ஆகியவை நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறுவதற்கான மூலாதாரங்களாகும்.

21. சல்பர் டை ஆக்சைடு மற்றும்__________ ஆகியவை அமிலமழைக்கு முக்கிய காரணமாகும்.

A) நைட்ரஜன் ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவை அமிலமழைக்கு முக்கிய காரணமாகும்.

22. கூற்று(A): வாயு அல்லது திரவத்தில் சிறிய அளவிலான திட பொருட்கள் பொதிந்துள்ளன.

காரணம்(R): இவை துகள் பொருட்கள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: துகள் பொருட்கள் என்பது வாயு அல்லது திரவத்தில் பொதிந்துள்ள சிறிய அளவிலான திட பொருட்கள் ஆகும்.

23. கீழ்க்கண்டவற்றுள் துகள் பொருள் மாசுபாட்டின் முக்கிய மூலாதாரங்கள் யாவை?

A) கல்நார்

B) சுரங்க அலகுகள்

C) காட்டுத் தீ

D) இவை அனைத்தும்

விளக்கம்: புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுதல், அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் சாம்பல், காட்டுத் தீ, கல்நார் (asbestos), சுரங்க அலகுகள், சிமெண்ட் தொழிற்சாலைகள் போன்றவை துகள் பொருள் மாசுபாட்டின் முக்கிய மூலாதாரங்கள் ஆகும்.

24. கீழ்க்கண்டவற்றுள் காற்று மாசுபாட்டின் முக்கிய மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) போக்குவரத்து மூலாதாரங்கள்

B) நிலையற்ற மூலாதாரங்கள்

C) நிலையான மூலாதாரங்கள்

D) பரப்பு மூலாதாரங்கள்

விளக்கம்: காற்று மாசுபாட்டின் முக்கிய மூலாதாரங்களாவன: போக்குவரத்து மூலாதாரங்கள், நிலையான மூலாதாரங்கள், பரப்பு மூலாதாரங்கள், இயற்கை மூலாதாரங்கள்.

25. கீழ்க்கண்டவற்றுள் நிலையான மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) மின் நிலையங்கள்

B) எரியூட்டிகள்

C) தொழிற்சாலைகள்

D) காட்டுத்தீ

விளக்கம்: நிலையான மூலாதாரங்கள் – மின் நிலையங்கள், எரியூட்டிகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை.

26. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) காற்றில் வரும் தூசிகள்

B) காட்டுத்தீ

C) எரிமலைகள்

D) அமிலமழை

விளக்கம்: இயற்கை மூலாதாரங்கள் – காற்றில் வரும் தூசிகள், காட்டுத்தீ, எரிமலைகள்.

27. கீழ்க்கண்டவற்றுள் பரப்பு மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) விவசாய மூலாதாரங்கள்

B) மரக்கட்டை எரித்தல்

C) அறுவடை செய்த தாள்களை எரித்தல்

D) பேருந்துகள்

விளக்கம்: பரப்பு மூலாதாரங்கள் – விவசாய மூலாதாரங்கள் – மரக்கட்டை / அறுவடை செய்த தாள்களை எரித்தல்.

28. இதய இலயமின்மை என்பது____________

A) எம்பைசீமா

B) தமனிகள் தடிமனாதல்

C) மாரடைப்பு

D) கார்டியாக் அரித்மியா

விளக்கம்: சிறிய துகள் பொருட்கள் நிறைந்த காற்றினை சுவாசிப்பதால் தமனிகள் தடிமனாதல், கார்டியாக் அரித்மியா (இதய இலயமின்மை) அல்லது மாரடைப்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது.

29. கூற்று(A): வளிமண்டலத்தில் உள்ள CO ஆக்சிஜன் கடத்தப்படுதலில் குறுக்கிடுகின்றது.

காரணம்(R): ஹீமோகுளோபின், கார்பன் மோனாக்சைடுடன் அதிக ஈர்ப்பினை கொண்டுள்ளது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வளிமண்டலத் தில் உள்ள CO ஆக்சிஜன் கடத்தப்படுதலில் குறுக்கிடுகின்றது. ஏனெனில், ஹீமோகுளோபின், கார்பன் மோனாக்சைடுடன் அதிக ஈர்ப்பினை கொண்டுள்ளது.

30. ____________ செயலி தேசிய அளவில் ஒவ்வொரு மணிக்கும் காற்றின் பண்புக் குறியீட்டை வெளியிடுகிறது.

A) அமீர்

B) ரமீர்

C) கமீர்

D) சமீர்

விளக்கம்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வெளியீடு ஆகிய சமீர் (SAMEER) எனும் செயலி தேசிய அளவில் ஒவ்வொரு மணிக்கும் காற்றின் பண்புக் குறியீட்டை வெளியிடுகிறது.

31. காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும் ஒரு வகையான காற்று மாசுபாடு ____________

A) புகை

B) மூடுபனி

C) மூடுபனி புகை

D) பனிப்புகை

விளக்கம்: பனிப்புகை (Smog) என்பது காற்றில் காணப்படும் சிறிய துகள்களினால் ஏற்படும் ஒரு வகையான காற்று மாசுபாடு ஆகும்.

32. ____________ என்பது பொதுவாக ஒளிவேதிமாசு மூட்டத்தைக் குறிக்கிறது.

A) புகை

B) மூடுபனி

C) மூடுபனி புகை

D) பனிப்புகை

விளக்கம்: பனிப்புகை என்பது பொதுவாக ஒளிவேதிமாசு மூட்டத்தைக் குறிக்கிறது.

33. பனிப்புகை சொல்லானது____________ மற்றும்____________ என்ற இரு சொற்களின் கலவையாகும்.

A) புகை மற்றும் பனி

B) பனி மற்றும் மூடுபனி

C) மூடுபனி மற்றும் காற்று

D) புகை மற்றும் மூடுபனி

விளக்கம்: பனிப்புகை சொல்லானது புகை மற்றும் மூடுபனி என்ற இரு சொற்களின் கலவையாகும்.

34. ____________ ஆஸ்துமா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது.

A) புகை

B) மூடுபனி

C) மூடுபனி புகை

D) பனிப்புகை

விளக்கம்: பனிப்புகை யானது ஆஸ்துமா நோயுடைய மக்களின் சுவாசத்தை கடினமாக்குகிறது.

35. ____________ என்பது ஒளிவேதி மாசுகூட்டத்தில் காணப்படும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.

A) உலக வெப்பமயமாதல்

B) ஓசோன் படலச் சிதைவு

C) பனிப்புகை

D) பெராக்சி அசிட்டைல் நைட்ரேட்

விளக்கம்: பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் (PAN) என்பது ஒளிவேதி மாசுகூட்டத்தில் காணப்படும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.

36. பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் வெப்பத்தினால் சிதைந்து கண் எரிச்சலைத் தரும் பெராக்சி எத்தனால் அடிப்படைக் கூறுகள் மற்றும் ____________ வாயுக்களை வெளியிடுகிறது.

A) நைட்ரஜன் டை ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) சல்பர் டை ஆக்சைடு

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் வெப்பத்தினால் எளிதில் சிதைந்து கண் எரிச்சலைத் தரும் பெராக்சி எத்தனால் அடிப்படைக் கூறுகள் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயுக்களை வெளியிடுகிறது.

37. கூற்று(A): கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, CFCs மற்றும் ஓசோன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அடர்வு அதிகரிப்பால் பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமடைதல் ஆகியவை ஏற்படுகிறது.

காரணம்(R): இதன் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, தீவுகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரை கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, CFCs மற்றும் ஓசோன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அடர்வு அதிகரிப்பால் பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமடைதல் ஆகியவை ஏற்படுகிறது. இதன் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, தீவுகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரை கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது.

38. ____________ ல் உள்ள ஓசோன் அடுக்கு மெலிந்து போதலே ஓசோன் படலச் சிதைவு எனப்படும்.

A) ட்ரோபோஸ்பியர்

B) அயனோஸ்பியர்

C) மீஸோஸ்பியர்

D) ஸ்ட்ரேட்டோஸ்பியர்

விளக்கம்: ஸ்ட்ரேட்டோஸ்பியரில் உள்ள ஓசோன் அடுக்கு மெலிந்து போதலே ஓசோன் படலச் சிதைவு எனப்படும்.

39. அமில மழை என்பது கந்தக அமிலம்____________ போன்ற அமிலப் பொருட்களைக் கொண்ட மழைப்பொழிவு ஆகும்.

A) சல்பியூரிக் அமிலம்

B) கார்போனிக் அமிலம்

C) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

D) நைட்ரிக் அமிலம்

விளக்கம்: அமில மழை என்பது கந்தக அமிலம் அல்லது நைட்ரிக் அமிலம் போன்ற அமிலப் பொருட்களைக் கொண்ட மழைப்பொழிவு ஆகும்.

40. நகரங்களில் உருவாகும் துகள்கள் மற்றும் காற்று மாசுபாட்டிற்கான சிறந்த தீர்வு____________

A) காடுகள்

B) தாவரங்கள்

C) மரங்கள்

D) வினைவேகமாற்றிகள்

விளக்கம்: நகரங்களில் உருவாகும் துகள்கள் மற்றும் காற்று மாசுபாட்டிற்கான சிறந்த தீர்வு மரங்களாகும்.

41. ____________ கரிமப்பொருட்களை சேகரிக்கும் இடமாகவும் மற்றும் புவிக்கோளின் நுரையீரலாகவும் செயல்புரிகின்றன.

A) காடுகள்

B) தாவரங்கள்

C) மரங்கள்

D) வினைவேகமாற்றிகள்

விளக்கம்: காடுகள் கரிமப்பொருட்களை சேகரிக்கும் இடமாகவும் மற்றும் புவிக்கோளின் நுரையீரலாகவும் செயல்புரிகின்றன.

42. வாகனங்களின்____________ மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.

A) காடுகள்

B) தாவரங்கள்

C) மரங்கள்

D) வினைவேகமாற்றிகள்

விளக்கம்: வாகனங்களின் வினைவேகமாற்றிகள் மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.

43. இந்தியாவில் காற்று சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு____________

A) 1982

B) 1983

C) 1984

D) 1981

விளக்கம்: காற்று சட்டம் (மாசுபாட்டினை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) இந்தியாவில் காற்று மாசுபாட்டினை தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் குறைக்க 1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

44. இந்தியாவில் காற்று சட்டம் திருத்தியமைக்கப்பட்ட ஆண்டு ____________

A) 1985

B) 1986

C) 1984

D) 1987

விளக்கம்: காற்று சட்டம் (மாசுபாட்டினை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) இந்தியாவில் காற்று மாசுபாட்டினை தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் குறைக்க 1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1987 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

45. போக்குவரத்து உமிழ்வின் தரம்: 2020ஆம் ஆண்டிலிருந்து____________ விதிமுறைகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

A) பாரத் நிலை VII

B) பாரத் நிலை V

C) பாரத் நிலை VIII

D) பாரத் நிலை VI

விளக்கம்: போக்குவரத்து உமிழ்வின் தரம்: 2020ஆம் ஆண்டிலிருந்து பாரத் நிலை VI (BS VI – Bharat Stage VI) விதிமுறைகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

46. ____________ மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.

A) பசுமை ஆணையம்

B) பசுமை கழகம்

C) பசுமை சங்கம்

D) பசுமை அமர்வு

விளக்கம்: பசுமை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நீதிமன்ற பாதுகாப்பினை அளிக்கின்றன.

47. தூய்மை இந்தியா____________என அழைக்கப்படுகிறது.

A) ஸ்வச் பாரத் யோஜனா

B) ஸ்வச் பாரத் போஷன்

C) ஸ்வச் பாரத் சமக்கியா

D) ஸ்வச் பாரத் அபியான்

விளக்கம்: தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் அபியான்) திட்டம்.

48. ஒரு நாளைக்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் சராசரி அளவு____________

A) 540 லி

B) 530 லி

C) 550 லி

D) 560 லி

விளக்கம்: ஒரு நாளைக்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் சராசரி அளவு = 550 லி.

49. 275 லி ஆக்சிஜன் உருளையின் விலை____________

A) ₹6400

B) ₹6500

C) ₹6600

D) ₹6700

விளக்கம்: 275 லி ஆக்சிஜன் உருளையின் விலை = ₹6500

50. மரங்கள் வெளியிடும் 550 லி ஆக்சிஜன் விலை____________

A) ₹15,00,000

B) ₹14,00,000

C) ₹13,00,000.

D) ₹12,00,000.

விளக்கம்: மரங்கள் வெளியிடும் 550 லி ஆக்சிஜன் விலை = ₹13,00,000.

51. ஒரு ஆரோக்கியமான மரம் ஓராண்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு____________

A) 1,00,365 லி

B) 1,00,375 லி

C) 1,00,355 லி

D) 1,00,345 லி

விளக்கம்: ஒரு ஆரோக்கியமான மரம் ஓராண்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு = 1,00,375 லி

52. ஓராண்டில்ஒரு மரம் உற்பத் தி செய்யும் 1,00,375 லி ஆக்சிஜனின் விலை ____________

A) 23,71,50,00

B) 23,73,50,00

C) 23,74,50,00

D) 23,72,50,00

விளக்கம்: ஓராண்டில்ஒரு மரம் உற்பத் தி செய்யும் 1,00,375 லி ஆக்சிஜனின் விலை = ₹23,72,50,00

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காற்று தரக் குறியீட்டு எண் 0 – 50 என்பது மிதமானது.

2] காற்று தரக் குறியீட்டு எண் 51 – 100 என்பது ஆரோக்கியமற்றது

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காற்று தரக் குறியீட்டு எண் 0 – 50 என்பது சிறந்தது. காற்று தரக் குறியீட்டு எண் 51 – 100 என்பது மிதமானது.

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காற்று தரக் குறியீட்டு எண் 101 – 150 என்பது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

2] காற்று தரக் குறியீட்டு எண் 151 – 200 என்பது ஆரோக்கியமற்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காற்று தரக் குறியீட்டு எண் 101 – 150 என்பது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது. காற்று தரக் குறியீட்டு எண் 151 – 200 என்பது ஆரோக்கியமற்றது.

55. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] காற்று தரக் குறியீட்டு எண் 201 – 300 என்பது மிகவும் ஆரோக்கியமற்றது.

2] காற்று தரக் குறியீட்டு எண் 301 + என்பது கேடு தரக்கூடியது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காற்று தரக் குறியீட்டு எண் 201 – 300 என்பது மிகவும் ஆரோக்கியமற்றது. காற்று தரக் குறியீட்டு எண் 301 + என்பது கேடு தரக்கூடியது.

56. கூற்று(A): குறிப்பிட்ட கால அளவில் காற்று எவ்வாறு மாசடைகிறது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அரசு முகமைகள் எண்ணை பயன்படுத்துகின்றனர்.

காரணம்(R): இதுவே காற்று தரக் குறியீட்டு எண் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: குறிப்பிட்ட கால அளவில் காற்று எவ்வாறு மாசடைகிறது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அரசு முகமைகள் பயன்படுத்தும் எண்ணே, காற்று தரக் குறியீட்டு எண் (Air Quality Index) எனப்படும்.

57. நீர் எவற்றை எல்லாம் உள்ளடக்கியது?

A) கடல் நீர்

B) கழிமுக நீர்

C) நன்னீர்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மதிப்புமிக்க இயற்கை வளமான நீர், கடல் நீர், கழிமுக நீர், நன்னீர் (ஆறுகள் மற்றும் ஏரிகள்) மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

58. நீரின் தரம் ____________ பண்புகளால் வரையறுக்கப்படுகிறது.

A) இயற்பிய பண்புகள்

B) வேதிய பண்புகள்

C) உயிரிய பண்புகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: நீரின் தரம் பொதுவாக அதனுடைய இயற்பிய, வேதிய, உயிரிய மற்றும் அழகியல் (தோற்றம் மற்றும் வாசனை) பண்புகளால் வரையறுக்க ப்படுகிறது.

59. கூற்று(A): நீரின் வேதிய, இயற்பிய மற்றும் உயிரிய தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் அந்நீரில் வாழும் மற்றும் அந்நீரைப் பயன்படுத்தும் உயிரினங்களுக்கு தீமையை விளைவிக்கிறது.

காரணம்(R): இதுவே நீர் மாசுபாடு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீரின் வேதிய, இயற்பிய மற்றும் உயிரிய தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் அந்நீரில் வாழும் மற்றும் அந்நீரைப் பயன்படுத்தும் உயிரினங்களுக்கு தீமையை விளைவித்தல் நீர் மாசுபாடு எனப்படும்.

60. நீர் மாசுபாட்டிற்கான மூலாதாரங்கள் யாவை?

A) மைய மூலாதாரங்கள்

B) மையமற்ற மூலாதாரங்கள்

C) கசிவுகள் மற்றும் சிந்துதல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: நீர் மாசுபாட்டிற்கான மூலாதாரங்கள் மூன்று வகையானவை. அவை, மைய மூலாதாரங்கள், மையமற்ற மூலாதாரங்கள், கசிவுகள் மற்றும் சிந்துதல்.

61. கூற்று(A): நீர்நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய்கள் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுகிறது.

காரணம்(R): இது மைய மூலாதாரம் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மைய மூலாதாரங்கள் (Point sources): நீர்நிலைகளில் குறிப்பிட்ட இடத்தில் குழாய்கள் அல்லது கழிவுநீர்க் குழாய்கள் மூலம் மாசுபடுத்திகளை வெளியிடுதல் மைய மூலாதாரம் ஆகும்.

62. கீழ்க்கண்டவற்றுள் மைய மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) தொழிற்சாலை நீர்மக்கழிவுகள்

B) சாக்கடை நீர்

C) எண்ணெய்க்கிணறுகள்

D) எண்ணெய்க் கசிவுகள்

விளக்கம்: தொழிற்சாலை நீர்மக்க ழிவுகள், சாக்கடை நீர், நிலத்தடிச் சுரங்கம், எண்ணெய்க்கிணறுகள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் வேளாண்மை போன்றவை பொதுவான மைய மூலாதாரங்களாகும்.

63. ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது____________

A) மைய மூலாதாரங்கள்

B) மையமற்ற மூலாதாரங்கள்

C) கசிவுகள் மற்றும் சிந்துதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மையமற்ற மூலாதாரங்கள் (Non – Point sources): ஒரு இடத்தில் வெளியேற்றப்படும் மாசின் மூலாதாரங்கள் கண்டறிய இயலாது.

64. கீழ்க்கண்டவற்றுள் மையமற்ற மூலாதாரங்கள் அல்லாதவை எவை?

A) அமில மழை

B) நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள்

C) நிலத்தடிச் சுரங்கம்

D) வழிந்தோடி வரும் வேளாண்மை வேதிப்பொருட்கள்

விளக்கம்: அமில மழை, நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழிப்பொருட்கள், வழிந்தோடி வரும் வேளாண்மை வேதிப்பொருட்கள் போன்றவை பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.

65. கப்பல் விபத்து, கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுதல் ஆகியவற்றால் நடைபெறுவது____________

A) மைய மூலாதாரங்கள்

B) மையமற்ற மூலாதாரங்கள்

C) கசிவுகள் மற்றும் சிந்துதல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கசிவுகள் மற்றும் சிந்துதல் (Leaks and Spills) : கப்பல் விபத்து, கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுதல், எண்ணெய்க் கசிவுகள் மற்றும் கடலினுள் எண்ணெய் வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் இது நடைபெறுகிறது.

66. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுவது____________

A) நகராட்சிக் கழிவுகள்

B) தொழிற்சாலைக் கழிவுகள்

C) வேளாண்மைக் கழிவுகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படுவது நகராட்சி கழிவு நீர் ஆகும்.

67. கூற்று(A): நஞ்சாகக் கூடிய அடர்த்தியில் காட்மியம், குரோமியம், காரீயம் போன்ற கன உலோகங்கள் மற்றும் கனிம, கரிமப் பொருட்களை கழிவுநீர் உள்ளடக்கியுள்ளது.

காரணம்(R): இவை தொழிற்சாலைக் கழிவுகள் எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நஞ்சாகக் கூடிய அடர்த்தியில் காட்மியம், குரோமியம், காரீயம் போன்ற கன உலோகங்கள் மற்றும் கனிம, கரிமப் பொருட்களை உள்ளடக்கிய கழிவுநீர், ஆகியவை தொழிற்சாலைக் கழிவுகள் ஆகும்.

68. ____________ கழிவுகள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவையும் பாதிக்கின்றன.

A) நகராட்சிக் கழிவுகள்

B) தொழிற்சாலைக் கழிவுகள்

C) வேளாண்மைக் கழிவுகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளின் வெப்பநிலையையும், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவையும் பாதிக்கின்றன.

69. கீழ்க்கண்டவற்றுள்வேளாண்மைக் கழிவுகள் அல்லாதவை எவை?

A) தீங்குயிர்கொல்லிகள் கலந்த நீர்

B) உணவு பதப்படுத்துதலினால் ஏற்படும் கழிவுகள்

C) கால்நடை செயல்பாடுகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள்

D) கரிமப் பொருட்களை உள்ளடக்கிய கழிவுநீர்

விளக்கம்: வேளாண்மை செய்யப்பட்டுளல்ல நிலங்களிலிருந்து வழிந்தோடும் உரங்கள் மற்றும் தீங்குயிர்கொல்லிகள் கலந்த நீர் உணவு பதப்படுத்துதலினால் ஏற்படும் கழிவுகள், தச்சு செயல்பாடுகளிலிருந்து வரும் மரம் மற்றும் மரத்தூள் மற்றும் கழிவு நீர் அல்லது கால்நடை செயல்பாடுகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் போன்றவை வேளாண்மைக் கழிவுகளில் அடங்கும்.

70. கூற்று(A): நீரின் மேற்பரப்பில் பரவும் எண்ணெயினால் ஒளி மற்றும் ஆக்சிஜன் நீரினுள் செல்வது தடுக்கப்படுகிறது.

காரணம்(R): இது உயிரிய ஆக்சிஜன் தேவை மற்றும் வேதிய ஆக்சிஜன் தேவை ஆகியவற்றை அதிகரிக்கின்றது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீரின் மேற்பரப்பில் பரவும் எண்ணெயினால் ஒளி மற்றும் ஆக்சிஜன் நீரினுள் செல்வது தடுக்கப்படுகிறது. இது உயிரிய ஆக்சிஜன் தேவை (BOD) மற்றும் வேதிய ஆக்சிஜன் தேவை (COD) ஆகியவற்றை அதிகரிக்கின்றது.

71. குடிநீரில் காணப்படும் அதிகப்படியான____________ புளூரோசிஸ் என்ற நோயினை ஏற்படுத்துகிறது.

A) குளோரைடு

B) புரோமைடு

C) அயோடைடு

D) புளூரைடு

விளக்கம்: குடிநீரில் காணப்படும் அதிகப்படியான புளூரைடு, புளூரோசிஸ் என்ற நோயினை ஏற்படுத்துகிறது.

72. கூற்று(A): நீர் மாசுபாட்டினால் விளையும் ஊட்டச் செறிவு விளைகிறது.

காரணம்(R): இது மிகை உணவூட்டத்திற்குக் காரணமாகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீர் மாசுபாட்டினால் விளையும் ஊட்டச் செறிவு, மிகை உணவூட்டத்திற்குக் (Eutrophication) காரணமாகிறது.

73. ____________ அலைகள் காணப்படுமேயானால் நீர் வாழ் விலங்குகளில் இறப்பினை ஏற்படுத்தும்.

A) நீலம்

B) பச்சை

C) சிவப்பு

D) அடர் கருமை

விளக்கம்: சிவப்பு அலைகள் காணப்படுமேயானால் நீர் வாழ் விலங்குகளில் இறப்பினை ஏற்படுத்தும்.

74. தூய்மையான நீருக்கான உரிமை____________

A) பிரிவு 22

B) பிரிவு 23

C) பிரிவு 21

D) பிரிவு 24

விளக்கம்: தூய்மையான நீருக்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் கீழுள்ள அடிப்படை உரிமையாகும் (பிரிவு 21).

75. நீர் (மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம்____________

A) 1975

B) 1976

C) 1974

D) 1973

விளக்கம்: நீர் (மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1974.

76. நீர் (மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1974, பிரிவுகள்____________ முதல்____________, மாசுபடுத்திகளை ஓடை அல்லது கிணறுகளில் விடுவித்து மாசுபடுத்துவதைத் தடை செய்கிறது

A) 18 முதல் 40

B) 17 முதல் 40

C) 16 முதல் 40

D) 19 முதல் 40

விளக்கம்: நீர் (மாசுபாட்டினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1974, பிரிவுகள் 17 முதல் 40, மாசுபடுத்திகளை ஓடை அல்லது கிணறுகளில் விடுவித்து மாசுபடுத்துவதைத் தடை செய்கிறது.

77. தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் செயலாக்கம் பெற்ற ஆண்டு____________

A) 1994

B) 1993

C) 1995

D) 1996

விளக்கம்: தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் (NRCP) என்ற அமைப்பு நாட்டின் பெரும் வளம் என கருதப்படும் நன்னீர் வளங்களைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த 1995-ஆம் ஆண்டு செயலாக்கம் பெற்றது.

78. இந்தியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை 302 (2006 ல்) லிருந்து____________ ஆக உயர்ந்திருக்கிறது.

A) 361

B) 351

C) 371

D) 381

விளக்கம்: இந்தியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை 302 (2006 ல்) லிருந்து 351 ஆக உயர்ந்திருக்கிறது.

79. நீரின் தரங்காட்டிகள் மிகக் குறைவாகக் காணப்படும் அதிக மாசடைந்த இடங்கள் 35 லிருந்து____________ ஆக உயர்ந்துள்ளது.

A) 46

B) 47

C) 45

D) 48

விளக்கம்: நீரின் தரங்காட்டிகள் மிகக் குறைவாகக் காணப்படும் அதிக மாசடைந்த இடங்கள் 35 லிருந்து 45 ஆக உயர்ந்துள்ளது.

80. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதை மேற்பார்வையிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது____________

A) சுற்றுச்சூழல் வானிலை மாற்ற அமைச்சகம்

B) காடுகள் வானிலை மாற்ற அமைச்சகம்

C) சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

D) சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் வானிலை மாற்ற அமைச்சகம்

விளக்கம்: சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) என்பது நடுவண் அரசின் கிளை அமைப்பாகும். இது திட்டமிடல், முன்னேற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதை மேற்பார்வையிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

81. நமமி கங்கா திட்டம் என்பது அரசின்___________ அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டமாகும்.

A) மீச்சிறிய திட்டத்தால்

B) மீப்பெரிய திட்டத்தால்

C) மீச்சிறப்பு திட்டத்தால்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நமமி கங்கா திட்டம் (கங்கையை தூய்மைபடுத்துவதற்கான தேசிய குறிக்கோள்) என்பது அரசின் ‘மீச்சிறப்பு திட்டத்தால்’ அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டமாகும்.

82. நமமி கங்கா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு____________

A) ஜுன் 2015

B) ஜுன் 2013

C) ஜுன் 2014

D) ஜுன் 2016

விளக்கம்: நமமி கங்கா திட்டம் ஜுன் 2014 –ல் 20,000 கோடி ரூபாய்மதிப்பீட்டில் கங்கைநதியின் மாசுபாட்டினை தீவிரமாக குறைக்கவும், பாதுகாக்கவும் மற்றும் புத்துயிரூட்டும் நோக்கங்களை நிறைவேற்றவும் தொடங்கப்பட்டதாகும்.

83. தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத அல்லது ஒன்றின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் ஒலி, ____________ எனப்படும்.

A) ஒலி மாசுபாடு

B) ஒளி மாசுபாடு

C) இரைச்சல் மாசுபாடு

D) இரைச்சல்

விளக்கம்: தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத அல்லது ஒன்றின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் ஒலி, இரைச்சல் எனப்படும்.

84. சுற்றுச்சூழலில் அதிக இரைச்சல் இருக்குமேயானால் அது____________ எனப்படும்.

A) ஒலி மாசுபாடு

B) ஒளி மாசுபாடு

C) இரைச்சல் மாசுபாடு

D) இரைச்சல்

விளக்கம்: சுற்றுச்சூழலில் அதிக இரைச்சல் இருக்குமேயானால் அது ‘ஒலி மாசுபாடு’ எனப்படும்.

85. ஒலியின் செறிவு____________ எனும் அலகு கொண்டு அளக்கப்படுகிறது.

A) ஹெர்ட்ஸ்

B) சோன்

C) போன்

D) டெசிபல்

விளக்கம்: ஒலியின் செறிவு டெசிபல் (dB) எனும் அலகு கொண்டு அளக்கப்படுகிறது.

86. ஒலி மாசுபாட்டின் தொடக்க நிலை அளவு____________ ஆகும்.

A) 121 டெசிபல்

B) 130 டெசிபல்

C) 125 டெசிபல்

D) 120 டெசிபல்

விளக்கம்: ஒலி மாசுபாட்டின் தொடக்க நிலை அளவு 120 டெசிபல் ஆகும்.

87. ஒலி மாசுபாடு தொடர்பான பிரச்சினைகள் யாவை?

A) இதய நோய்

B) உயர் இரத்த அழுத்தம்

C) மன அழுத்தம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் (stress) தொடர்பான நோய்கள் , தூக்க இடையூறுகள், காது கேளாமை மற்றும் ஆக்கத்திறன் குறைதல் போன்றவை ஒலி மாசுபாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகும்.

88. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு பகல் நேரங்களில்____________

A) 75 டெசிபல்

B) 70 டெசிபல்

C) 65 டெசிபல்

D) 60 டெசிபல்

விளக்கம்: அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு பகல் நேரங்களில் 65 டெசிபல் (dB) எனவும், வரையறுக்கப்பட்டுள்ளது.

89. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு இரவு நேரங்களில்____________

A) 50 டெசிபல்

B) 55 டெசிபல்

C) 60 டெசிபல்

D) 65 டெசிபல்

விளக்கம்: அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு இரவு நேரங்களில் 55 டெசிபல் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

90. கூற்று(A): தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துவதற்கும் வேளாண் தொழிலில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

காரணம்(R): இவை வேளாண் வேதிப்பொருட்கள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துவதற்கும் வேளாண் தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் வேளாண் வேதிப்பொருட்கள் எனப்படும்.

91. கொசுவிரட்டிச் சுருள்களில்____________ மற்றும் அல்லத்ரின் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

A) DFTD

B) DFFT

C) DEET

D) DCFT

விளக்கம்: DEET (n – n – டை எதில் நீட்டாடொ லுவமைடு) மற்றும் அல்லத்ரின் போன்றவை கொசுவிரட்டிச் சுருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

92. கூற்று(A): தீங்குயிர் கொல்லிகள் / தாவரக்கொல்லிகள் தேன் கூட்டினை அழிக்கின்றன மற்றும் வேளாண் உற்பத்தியைக் குறைக்கிறது.

காரணம்(R): இதன் காரணமாக தேனீக்களில் கூட்டச் சிதைவு நோய் ஏற்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தீங்குயிர் கொல்லிகள் / தாவரக்கொல்லிகள் தேன் கூட்டினை அழிக்கின்றன மற்றும் வேளாண் உற்பத்தியைக் குறைக்கிறது. இதன் காரணமாக தேனீக்களில் கூட்டச் சிதைவு நோய் ஏற்படுகிறது.

93. ____________ இயற்கையின் சிறந்த மகரந்தபரப்பிகள் ஆகும்.

A) பட்டுப்பூச்சி

B) ஈக்கள்

C) தேனீக்கள்

D) வண்ணத்துப்பூச்சி

விளக்கம்: தேனீக்கள் இயற்கையின் சிறந்த மகரந்தபரப்பிகள் ஆகும்.

94. ஒரு இந்திய குடிமகன் ஒரு நாளைக்கு சராசரியாக____________ கழிவு நீரைஉருவாக்குகிறான்.

A) 160 லிட்டர்

B) 170 லிட்டர்

C) 150 லிட்டர்

D) 140 லிட்டர்

விளக்கம்: ஒரு இந்திய குடிமகன் ஒரு நாளைக்கு சராசரியாக 150 லிட்டர் கழிவு நீரை உருவாக்குகிறான்.

95. ____________ என்பது உலர் மட்குக் கழிவறைகளை பயன்படுத்தி மனித கழிவை கையாளும் அமைப்பாகும்.

A) சுற்றுப்புற சுகாதாரம்

B) சூழ்நிலை சுகாதாரம்

C) சூழல் சுகாதாரம்

D) கழிவறை சுகாதாரம்

விளக்கம்: சூழல் சுகாதாரம் என்பது உலர் மட்குக் கழிவறைகளை பயன்படுத்தி மனித கழிவை கையாளும் அமைப்பாகும்.

96. சூழல் சுகாதார கழிவறைகள் இந்தியா மற்றும்____________ பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

A) பாகிஸ்தான்

B) வங்காள தேசம்

C) சீனா

D) இலங்கை

விளக்கம்: சூழல் சுகாதார கழிவறைகள் இந்தியா மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

97. நெகிழி கழிவு மாசுபாட்டிற்கான சிறந்த தீர்வுகள் அல்லாதது எது?

A) உபயோகித்தல்

B) மறுத்தல்

C) குறைத்தல்

D) மறுசுழற்சி செய்தல்

விளக்கம்: ‘4R’ (Refuse, Reduce, Reuse and Recycle) – மறுத்தல், குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவை நெகிழி கழிவு மாசுபாட்டிற்கான சிறந்த தீர்வாகும்.

98. தமிழ்நாடு மாநில அரசு, ____________ முதல் ஒரு முறை பயன்படும் நெகிழிகள் மீதான தடையினை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியுள்ளது.

A) ஜனவரி, 1, 2018

B) ஜனவரி, 1, 2017

C) ஜனவரி, 1, 2019

D) ஜனவரி, 1, 2020

விளக்கம்: தமிழ்நாடு மாநில அரசு, ஜனவரி, 1, 2019 முதல் ஒரு முறை பயன்படும் நெகிழிகள் மீதான தடையினை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியுள்ளது.

99. ____________ பெரும்பகுதி நெகிழி கழிவுகள் ஆகும்.

A) நகராட்சிக் திடக் கழிவுகள்

B) தொழிற்சாலைக் கழிவுகள்

C) வேளாண்மைக் கழிவுகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நகராட்சி திடக் கழிவுகளில் பெரும்பகுதி நெகிழி கழிவுகள் ஆகும்.

100. ____________ குறைந்த மூலக்கூறு எடையுள்ள, இயற்கை சூழ்நிலையில் சிதைவடையாத கரிம பாலிமர்களாகும்.

A) பாலிஸ்டர்

B) நைலான்

C) பாலி எத்திலீன்

D) நெகிழி

விளக்கம்: நெகிழிகள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள, இயற்கை சூழ்நிலையில் சிதைவடையாத கரிம பாலிமர்களாகும்.

101. நிராகரிக்கப்பட்ட மின்சார மின்னணு கருவிகளைக் குறிப்பது ____________

A) மின்சார கழிவுகள்

B) இயந்திர கழிவுகள்

C) உதிரிபாக கழிவுகள்

D) மின்னணு கழிவுகள்

விளக்கம்: மின்னணு கழிவுகள் என்பது நிராகரிக்கப்பட்ட மின்சார மின்னணு கருவிகளைக் குறிக்கிறது.

102. கூற்று(A): மின்னணுக் கருவிகளின் பாகங்கள் மற்றும் அவற்றினை உற்பத்தி செய்யும் போது அல்லது பயன்படுத்தும் போது பயனற்றப் பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

காரணம்(R): இந்த பயனற்றப் பொருட்களே மின்னணு கழிவுகள் ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்னணுக் கருவிகளின் பாகங்கள் மற்றும் அவற்றினை உற்பத்தி செய்யும் போது அல்லது பயன்படுத்தும் போது உருவாக்கப்படும் பயனற்றப் பொருட்கள் ஆகியவை மின்னணு கழிவுகள் ஆகும்.

103. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்னணு கழிவுகள் PCPயை அடிப்படையாகக் கொண்டவை.

2] இவை சிதைவடையக்கூடிய கழிவுப் பொருட்களாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னணு கழிவுகள் PCBயை (Polychlorinated biphenyl) அடிப்படையாகக் கொண்டவை. இவை சிதைவடையாத கழிவுப் பொருட்களாகும்.

104. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தனியார்க் கணினிகளில் காரீயம் என்ற நச்சு பொருள்கள் காணப்படுகின்றன.

2] சூட்டிணைப்பு கூட்டுப் பொருட்களில் எதிர்மின் முனை கதிர் குழாய் என்ற நச்சு பொருள்கள் காணப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தனியார்க் கணினிகளில் எதிர்மின் முனை கதிர் குழாய் (CRT) மற்றும் சூட்டிணைப்பு கூட்டுப் பொருட்களில் காரீயமும் மற்றும் இதற்கு இணையான பிற நச்சுப் பொருட்களும் காணப்படலாம்.

105. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நிலைமாற்றிகளில் கோபால்ட் என்ற நச்சு பொருள்கள் காணப்படுகின்றன.

2] எஃகு பொருட்களில் பாதரசம் என்ற நச்சு பொருள்கள் காணப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிலைமாற்றிகளில் பாதரசமும் (Hg) எஃகு பொருட்களில் கோபால்ட்டும் (Co), மற்றும் இதற்கு இணையான பிற நச்சுப் பொருட்களும் காணப்படலாம்.

106. கூற்று(A): மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் உருவாக்கப்பட்ட தொற்றுப் பொருட்களைக் கொண்ட கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.

காரணம்(R): இக்கழிவுகள் அனைத்தும் மருத்துவக் கழிவுகள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் உருவாக்கப்பட்ட தொற்றுப் பொருட்களைக் கொண்ட கழிவுகள் அனைத்தும் மருத்துவக் கழிவுகள் எனப்படும்.

107. கீழ்க்கண்டவற்றுள் மருத்துவக் கழிவுகள் யாவை?

A) சிறுநீர்

B) வளர்ப்புத் தட்டுகள்

C) கத்திகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: சிறுநீர், இரத்தம் போன்ற உடல் திரவங்கள், உடல் பாகங்கள் மற்றும் பிற மாசுபடுத்திகள், வளர்ப்புத் தட்டுகள், கண்ணாடிப் பொருட்கள், துணிப்பட்டைகள், கையுறைகள், தூக்கியெறியப்பட்ட ஊசிகள், கத்திகள், ஒற்றுத்துணிகள் மற்றும் திசுக்கள் ஆகியவை மருத்துவக் கழிவுகளாகும்.

108. கீழ்க்கண்டவற்றுள் கழிவகற்றும் முறைகள் யாவை?

A) எரித்தல்

B) வேதியத் தொற்று நீக்கம்

C) ஆவி முறை தொற்று நீக்கம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: எரித்தல், வேதியத் தொற்று நீக்கம், ஆவி முறை தொற்று நீக்கம், உறைப் பொதியாக்கம் (Encapsulation), நுண்ணலை கதிர்வீச்சுக்குள்ளாக்குதல் ஆகியவை கழிவகற்றும் முறைகளாகும்.

109. நிலையான புவியிய சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் ஆழமாகத் தோண்டி அணுக் கழிவுகளை சேமிக்குமிடம்____________

A) உலர் கற்களாக மாற்றும் முறை

B) பூமியுள் சேமிப்புக் கிடங்கு

C) பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுத் தொட்டி

D) நீர்த்துப் பரவுதல்

விளக்கம்: பூமியுள் சேமிப்புக் கிடங்கு: நிலையான புவியிய சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் ஆழமாகத் தோண்டி அணுக் கழிவுகளை சேமிக்குமிடமாகும்.

110. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பயன்படுத்தப்பட்ட எரிபொருளை, ஈர வசதி கொண்ட கழிவுத் தொட்டியின் மூலம் சேமிப்பது.

2] இம்முறை இந்தியாவின் தாராப்பூர் மற்றும் கூடங்குளத்தில் செய்யப்படும் முக்கிய சேமிப்பு முறையாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பயன்படுத்தப்பட்ட எரிபொருளை, ஈர வசதி கொண்ட கழிவுத் தொட்டியின் மூலம் சேமிப்பதே இந்தியாவின் தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் செய்யப்படும் முக்கிய சேமிப்பு முறையாகும்.

111. எதிர்காலப் பராமரிப்பு தேவைப்படாத, உயர்மட்ட அளவிலான, நீண்ட கால தனிமைப்படுத்துதலுக்கும் மற்றும் உள்ளடக்கி வைத்தலுக்குப் பொருத்தமான முறை____________

A) உலர் கற்களாக மாற்றும் முறை

B) பூமியுள் சேமிப்புக் கிடங்கு

C) பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுத் தொட்டி

D) நீர்த்துப் பரவுதல்

விளக்கம்: பூமியுள் சேமிப்புக் கிடங்கு: எதிர்காலப் பராமரிப்பு தேவைப்படாத, உயர்மட்ட அளவிலான, நீண்ட கால தனிமைப்படுத்துதலுக்கும் மற்றும் உள்ளடக்கி வைத்தலுக்குப் பொருத்தமான முறையாகும்.

112. கூற்று(A): அணுக்கரு கழிவுகளை உலர்ந்த காரை (சிமெண்ட்) பெட்டகங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மூடி வைப்பதன் மூலம், அவை வினை புரிதலையும் அல்லது சிதைவதையும் தடுக்கிறது

காரணம்(R): இம்முறை உலர் கற்களாக மாற்றும் முறை எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உலர் கற்களாக மாற்றும் முறை: அணுக்கரு கழிவுகளை உலர்ந்த காரை (சிமெண்ட்) பெட்டகங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மூடி வைப்பதன் மூலம், அவை வினை புரிதலையும் அல்லது சிதைவதையும் தடுக்கிறது.

113. கதிரியக்கக் கழிவுகளை அகற்றும் முறைகள் யாவை?

A) வரையறுக்கப்பட்ட உற்பத்தி

B) நீர்த்துப் பரவுதல்

C) தாமதம் மற்றும் சிதைவு

D) இவை அனைத்தும்

விளக்கம்: கதிரியக்கக் கழிவுகளை அகற்றும் முறைகள்: வரையறுக்கப்பட்ட உற்பத்தி, நீர்த்துப் பரவுதல், தாமதம் மற்றும் சிதைவு, செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்.

114. அதிக வாழ்நாள் அளவுள்ள கதிரியக்கத்தினை சுத்திகரிக்கப் பயன்படும் முறை____________

A) வரையறுக்கப்பட்ட உற்பத்தி

B) நீர்த்துப் பரவுதல்

C) தாமதம் மற்றும் சிதைவு

D) செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்

விளக்கம்: செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்: அதிக வாழ்நாள் அளவுள்ள கதிரியக்கத்தினை சுத்திகரிக்கப் பயன்படும் முறையாகும்.

115. அணுக்கரு உலை மற்றும் துரிதப்படுத்திகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கங்களை அகற்றும் முறை____________

A) வரையறுக்கப்பட்ட உற்பத்தி

B) நீர்த்துப் பரவுதல்

C) தாமதம் மற்றும் சிதைவு

D) செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்

விளக்கம்: தாமதம் மற்றும் சிதைவு: அணுக்கரு உலை மற்றும் துரிதப்படுத்திகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கங்கள் குறைவான வாழ்நாள் கொண்டவையாதலால், இக்கழிவுகளைக் கையாள இவை நல்ல உத்தியாகும்.

116. குறைந்த அளவு கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளை அகற்றும் முறை____________

A) வரையறுக்கப்பட்ட உற்பத்தி

B) நீர்த்துப் பரவுதல்

C) தாமதம் மற்றும் சிதைவு

D) செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்

விளக்கம்: நீர்த்துப் பரவுதல்– குறைந்த அளவு கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளுக்கு நீர்த்தல் மற்றும் பரவுதல் முறை பயன்படுத்தப்படுகின்றன.

117. கழிவுப்பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்____________

A) வரையறுக்கப்பட்ட உற்பத்தி

B) நீர்த்துப் பரவுதல்

C) தாமதம் மற்றும் சிதைவு

D) செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்

விளக்கம்: வரையறுக்கப்பட்ட உற்பத்தி– கழிவுப்பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதலே கதிரியக்கக் கழிவுகளை கையாளுவதில் முதன்மையானதும், முக்கியமானதுமாகும்.

118. மூன்று மைல் தீவு அணு உலைப் பேரழிவு நடந்த இடம் ____________

A) ஜப்பான்

B) ரஷ்யா

C) அமெரிக்கா

D) உக்ரைன்

விளக்கம்: மூன்று மைல் தீவு அணு உலைப் பேரழிவு நடந்த இடம்: பென்சில்வேனியா, அமெரிக்கா.

119. செர்னோபில் அணு உலைப் பேரழிவு நடந்த இடம் ____________

A) ஜப்பான்

B) ரஷ்யா

C) அமெரிக்கா

D) உக்ரைன்

விளக்கம்: செர்னோபில் அணு உலைப் பேரழிவு நடந்த இடம்: பிரிப்யாட், உக்ரைன்.

120. புகுஷிமா அணு உலைப் பேரழிவு நடந்த இடம் ____________

A) ஜப்பான்

B) ரஷ்யா

C) அமெரிக்கா

D) உக்ரைன்

விளக்கம்: புகுஷிமா அணு உலைப் பேரழிவு நடந்த இடம்: ஜப்பான்.

121. கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கக் கழிவு மேலாண்மையில் அடங்குபவை யாவை?

A) சுத்திகரித்தல்

B) சேமித்தல்

C) அணுக்கரு தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: கதிரியக்கக் கழிவு மேலாண்மையில் சுத்திகரித்தல், சேமித்தல் மற்றும் அணுக்கரு தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகள், காற்றில் பரவும் கழிவுகள் மற்றும் திட கழிவுகள் ஆகியவற்றை சுத்திகரித்து, சேமித்து, பின் வெளியேற்றுதல் ஆகியவை அடங்கும்.

122. கதிரியக்கத்தின் அளவு மற்றும் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட கழிவுகள் யாவை?

A) விடுவிக்கப்பட்ட கழிவு

B) கீழ்மட்ட கழிவு

C) இடைமட்ட அளவுக் கழிவு

D) இவை அனைத்தும்

விளக்கம்: கதிரியக்கத்தின் அளவு மற்றும் தன்மையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட கழிவு, கீழ்மட்ட மற்றும் இடைமட்ட அளவுக் கழிவு மற்றும் உயர்மட்ட அளவுக் கழிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

123. கழிவு மேலாண்மை நடைமுறைகள் யாவை?

A) மூலங்களைப் பிரித்தல்

B) எருவாக்கல்

C) மண்புழு உரமாக்கல்

D) இவை அனைத்தும்

விளக்கம்: கழிவு மேலாண்மை நடைமுறைகள்: அ) மூலங்களைப் பிரித்தல் ஆ) எருவாக்கல் 1. காற்றுள்ள நிலை 2. காற்றற்ற நிலை இ) மண்புழு உரமாக்கல் ஈ) உயிர்வாயு உற்பத்தி உ) எரித்தல்

124. சென்னையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தலை____________ கவனிக்கிறது.

A) தமிழ்நாடு அரசாங்கம்

B) தன்னார்வ நிறுவனம்

C) தொண்டு நிறுவனம்

D) சென்னை மாநகராட்சி

விளக்கம்: சென்னையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தலை சென்னை மாநகராட்சி கவனிக்கிறது.

125. மின்னணுக் கழிவுகள் மற்றும் நெகிழிகள் போன்ற தீங்கு தரும் கழிவுகளை காகிதம் மற்றும் பிற பொருட்களுடன் சேர்த்து எரிக்கும்போது அவை, ____________ வாயுக்களை உற்பத்தி செய்கின்றன.

A) நைட்ரஜன் டை ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) டையாக்சின்கள்

D) கார்பன் மோனாக்சைடு

விளக்கம்: தீங்குயிர்கொல்லிகள், காரீயம் கொண்ட மின்கலங்கள், காட்மியம், பாதரசம் அல்லது துத்தநாகம், சுத்தம் செய்ய பயன்படும் திரவங்கள், கதிர்வீச்சுபொருட்கள், மின்னணுக் கழிவுகள் மற்றும் நெகிழிகள் போன்ற தீங்கு தரும் கழிவுகளை காகிதம் மற்றும் பிற பொருட்களுடன் சேர்த்து எரிக்கும்போது அவை, டையாக்சின்கள் போன்ற வாயுக்களை உற்பத்தி செய்கின்றன.

126. கரூரில் ‘வானகம்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பினை நிறுவியவர்____________

A) பெரியாழ்வார்

B) மதுரகவி ஆழ்வார்

C) நம்மாழ்வார்

D) சுல்தான் அஹமது இஸ்மாயில்

விளக்கம்: வேளாண் ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்பு குழுமத்திற்காக தமிழ்நாட்டின், கரூரில் ‘வானகம்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பினை நம்மாழ்வார் நிறுவினார்.

127. புதுக்கோட்டையில் கொளுஞ்சி சூழ்நிலை பண்ணையை நிறுவியவர்____________

A) பெரியாழ்வார்

B) மதுரகவி ஆழ்வார்

C) நம்மாழ்வார்

D) சுல்தான் அஹமது இஸ்மாயில்

விளக்கம்: நம்மாழ்வார் அம்மன்கூரையில் சமூக காட்டினையும் மற்றும் புதுக்கோட்டையில் கொளுஞ்சி சூழ்நிலை பண்ணையையும் உருவாக்கினார்.

128. ____________ அமைப்பு, நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நூற்றுக்கணக்கான உள்நாட்டு தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கிறது மற்றும் மறுஉற்பத்தி செய்கின்றது.

A) வீடு

B) சுற்றுசூழல்

C) குடும்பம்

D) பண்ணை

விளக்கம்: நம்மாழ்வாரின் ‘குடும்பம்’ என்ற அமைப்பு, நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நூற்றுக்கணக்கான உள்நாட்டு தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கிறது மற்றும் மறுஉற்பத்தி செய்கின்றது.

129. மண்புழு உரமாக்கலை சுற்றுச்சூழலுக்கு நிலைத்த பயன்தரும் தொழில்நுட்பமாக ஆக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருபவர்____________

A) பெரியாழ்வார்

B) மதுரகவி ஆழ்வார்

C) நம்மாழ்வார்

D) DR சுல்தான் அஹமது இஸ்மாயில்

விளக்கம்: DR. சுல்தான் அஹமது இஸ்மாயில் மண்புழு உரமாக்கலை சுற்றுச்சூழலுக்கு நிலைத்த பயன்தரும் தொழில்நுட்பமாக ஆக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

130. கூற்று(A): கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் அல்லது இயற்கையான நீர் நிலைகளில் கலப்பதற்கும் முன்பாகச் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

காரணம்(R): இவை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் அல்லது இயற்கையான நீர் நிலைகளில் கலப்பதற்கும் முன்பாகச் செய்யப்படும் இறுதி சுத்திகரிப்பே மூன்றாம் நிலை சுத்திகரிப்பு எனப்படும்.

131. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மீதமுள்ள கனிமச் கூட்டுப் பொருட்களும் நீக்கப்படுவது____________

A) இரண்டா ம் நிலை சுத்திகரிப்பு

B) முதல் நிலை சுத்திகரிப்பு

C) உயிரிய சுத்திகரிப்பு

D) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

விளக்கம்: மூன்றாம் நிலை சுத்திகரிப்பு: இம்முறையினால் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மீதமுள்ள கனிமச் கூட்டுப் பொருட்களும் நீக்கப்படுகின்றன.

132. ____________ நீரின் தரத்தை பாதிக்காமல் அதில் உள்ள நுண்ணுயிரிகளை மட்டும் செயலிழக்கச் செய்வதால் அவை சிறந்த தொற்று நீக்கியாக செயல்படுகின்றன.

A) அக ஊதாக்கதிர்கள்

B) ரேடியோ கதிர்கள்

C) சிவப்பு கதிர்கள்

D) புற ஊதாக்கதிர்கள்

விளக்கம்: புற ஊதாக்கதிர்கள் நீரின் தரத்தை பாதிக்காமல் அதில் உள்ள நுண்ணுயிரிகளை மட்டும் செயலிழக்கச் செய்வதால் அவை சிறந்த தொற்று நீக்கியாக செயல்படுகின்றன.

133. ____________ குளோரினேற்றம் செயல்முறைக்கு சிறந்த மாற்றாக அமையும்.

A) அக ஊதாக்கதிர்கள்

B) ரேடியோ கதிர்கள்

C) சிவப்பு கதிர்கள்

D) புற ஊதாக்கதிர்கள்

விளக்கம்: புறஊதாக்கதிர்களில் வேதிப்பொருட்கள் இல்லாததால் அது தற்போதைய குளோரினேற்றம் செயல்முறைக்கு சிறந்த மாற்றாக அமையும்.

134. குளோரினுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள நுண்ணுயிர்களான கிரிப்டோஸ்போரிடியம் மற்றும்____________ ஆகியவற்றையும் புற ஊதாக்கதிர்கள் செயலிழக்கச் செய்கின்றன.

A) கிரிப்டோஸ்ஜியா

B) ஜியாபோரிடியம்

C) டோஸ்போரிடியம்

D) ஜியார்டியா

விளக்கம்: குளோரினுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள நுண்ணுயிர்களான கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா ஆகியவற்றையும் புற ஊதாக்கதிர்கள் செயலிழக்கச் செய்கின்றன.

135. சோதனை முறையில் இயற்கையான கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு அமைக்கப்பட்டிருப்பது ____________

A) சென்னை

B) ஆந்திரா

C) கர்நாடகா

D) புதுச்சேரி

விளக்கம்: தென்னிந்தியாவின், புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள ஆரோவில்லில் சோதனை முறையில் இயற்கையான கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது (பரவலாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு போன்றவை உள்ளடங்கும்.

136. ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு____________

A) உயிரிய தேவை

B) ஆக்சிஜன் தேவை

C) உயிரிய ஆக்சிஜன் தேவை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவே, “உயிரிய ஆக்சிஜன் தேவை” எனப்படும்.

137. உயிரிய வாயு (Biogas) வை உருவாக்கும் வாயுக்கலவை எவை?

A) மீத்தேன்

B) ஹைட்ரஜன் சல்பைடு

C) கார்பன் டைஆக்ஸைடு

D) இவை அனைத்தும்

விளக்கம்: மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டைஆக்ஸைடு வாயுக்கலவையை உற்பத்தி செய்கின்றன. இவ்வாயுக்களே உயிரிய வாயு (Biogas) வை உருவாக்குகின்றன. மேலும் இந்த உயிரிய வாயு ஆற்றல் மூலாதாரமாகவும்பயன்படுகின்றது.

138. வடிகட்டுதல் மற்றும் படியவைத்தல் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது____________

A) இரண்டா ம் நிலை சுத்திகரிப்பு

B) முதல் நிலை சுத்திகரிப்பு

C) உயிரிய சுத்திகரிப்பு

D) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

விளக்கம்: வடிகட்டுதல் மற்றும் படியவைத்தல் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல் நிலை சுத்திகரிப்பில் அடங்கும்.

139. மிதக்கும் குப்பைகள்____________ முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன.

A) வடிகட்டல்

B) படியவைத்தல்

C) தொடர் வடிகட்டல்

D) தொடர் படியவைத்தல்

விளக்கம்: மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன.

140. மண் மற்றும் சிறுகற்கள்____________ முறை மூலம் நீக்கப்படுகிறது.

A) வடிகட்டல்

B) படியவைத்தல்

C) தொடர் வடிகட்டல்

D) தொடர் படியவைத்தல்

விளக்கம்: மண் மற்றும் சிறுகற்கள் படியவைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது.

141. கூற்று(A): ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர், நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை சென்றடையும் பொழுது, அடர்ந்த தாவர வளர்ச்சியினை உண்டாக்குகிறது.

காரணம்(R): இந்நிகழ்வு மிகை உணவூட்டம் எனப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர், நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை சென்றடையும் பொழுது, அடர்ந்த தாவர வளர்ச்சியினை உண்டாக்குகிறது. இந்நிகழ்வு மிகை உணவூட்டம் எனப்படுகிறது.

142. கூற்று(A): தொழிற்சாலை மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மக்கழிவுகள் போன்ற மனித செயல்பாடுகளினால் உருவாக்கப்படும் மாசுபடுத்திகள் முதிர்வடைதலை துரிதப்படுத்துகின்றன.

காரணம்(R): இந்நிகழ்வு பெருக்க அல்லது துரித மிகை உணவூட்டம் எனப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தொழிற்சாலை மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மக்கழிவுகள் போன்ற மனித செயல்பாடுகளினால் உருவாக்கப்படும் மாசுபடுத்திகள் முதிர்வடைதலை துரிதப்படுத்துகின்றன. இந்நிகழ்வு பெருக்க அல்லது துரித மிகை உணவூட்டம் எனப்படுகிறது.

143. ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது ______.

A) ஸீவர்ட்ஸ் அலகு (SU)

B) டாப்சன் அலகு (DU)

C) மெல்சன் அலகு

D) பீஃபோர்ட் அளவுகோல்

விளக்கம்: ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது டாப்சன் அலகு (DU) ஆகும்.

144. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டை ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?

A) அமெரிக்கா

B) சீனா

C) கத்தார்

D) சவுதி அரேபியா

விளக்கம்: 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன் டை ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு சீனா ஆகும்.

145. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை

A) உயிரிய உருப்பெருக்கம்

B) உயிரியத் தீர்வு

C) உயிரிய மீத்தேனாக்கம்

D) உயிரிய சுருக்கம்

விளக்கம்: நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை உயிரியத் தீர்வு ஆகும்.

146. பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?

A) எண்ணிக்கை

B) வேதிப்பொருள்

C) ஆற்றல்

D) விசை

விளக்கம்: உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது ஆற்றல் எப்போதும் குறைகின்றது.

147. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?

A) தாமிரம்

B) வெள்ளி

C) பலேடியம்

D) தங்கம்

148. உயிரிய சுத்திகரிப்பு______

A) இரண்டாம் நிலை சுத்திகரிப்பு

B) முதல் நிலை சுத்திகரிப்பு

C) உயிரிய சுத்திகரிப்பு

D) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

விளக்கம்: இரண்டாம் நிலை சுத்திகரிப்பு உயிரிய சுத்திகரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

12th Science Lesson 17 Questions in Tamil

17] உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

1. சுற்றுச்சூழலியல் என்ற சொல் ____________ மொழியில், இருந்து உருவானது.

A) லத்தீன்

B) கிரேக்கம்

C) ஜெர்மன்

D) பிரெஞ்சு

விளக்கம்: சுற்றுச்சூழலியல் (Ecology) என்ற சொல் கிரேக்க மொழியில், இருந்து உருவானது.

2. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ‘oikos’ என்றால் ‘உயிரினங்கள்’ என்றும் மற்றும் ’logos’ என்றால் ‘படித்தல்’ என்றும் பொருள்.

2] சுற்றுச்சூழல் ‘வீடு’ குறித்த படிப்பில், அதில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் அவ்வீட்டினை வாழத் தகுதியுள்ளதாக்கும் செயற்பாட்டு நிகழ்வுகள் ஆகியவை அடங்கியுள்ளன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ‘oikos’ என்றால் ‘வீட்டில் உள்ள’ என்றும் மற்றும் ’logos’ என்றால் ‘படித்தல்’ என்றும் பொருள். எனவே, சுற்றுச்சூழல் ‘வீடு’ குறித்த படிப்பில், அதில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் அவ்வீட்டினை வாழத் தகுதியுள்ளதாக்கும் செயற்பாட்டு நிகழ்வுகள் ஆகியவை அடங்கியுள்ளன.

3. சுற்றுச்சூழலியலில், ____________ என்ற சொல் தொடக்கத்தில் ‘மனிதர்களின் தொகுப்பு’ என்பதைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

A) உயிரினங்கள் தொகுப்பு

B) உயிரினங்கள் வகைகள்

C) உயிரினங்கள் கூட்டம்

D) உயிரினக்கூட்டம்

விளக்கம்: சுற்றுச்சூழலியலில், ‘உயிரினக்கூட்டம்’ என்ற சொல் தொடக்கத்தில் ‘மனிதர்களின் தொகுப்பு’ என்பதைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

4. தற்போது உயிரினக்கூட்டம் என்ற சொல் எந்தவொரு உயிரினத்தையும் சார்ந்த ____________ என்ற சொல்லாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

A) உயிரினங்கள் தொகுப்பு

B) உயிரினங்கள் வகைகள்

C) உயிரினங்கள் கூட்டம்

D) உயிரினங்கள் பெருக்கம்

விளக்கம்: தற்போது உயிரினக்கூட்டம் என்ற சொல் எந்தவொரு உயிரினத்தையும் சார்ந்த ‘உயிரினங்களின் தொகுப்பு’ என்ற சொல்லாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

5. கூற்று(A): சூழலியல் நோக்கில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டங்களையும் குறிக்கிறது.

காரணம்(R): இதுவே உயிரினங்களின் தொகுப்பு எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சூழலியல் நோக்கில் ‘சமுதாயம்’ என்பது (உயிரியச் சமுதாயம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டங்களையும் குறிக்கிறது.

6. உயிரியச் சமுதாயமும், உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஒருங்கே இணைந்து____________ ஆக செயலாற்றுகிறது.

A) சூழ்நிலை தொகுப்பு

B) சூழ்நிலை கூட்டம்

C) சூழ்நிலை பெருக்கம்

D) சூழ்நிலை மண்டலம்

விளக்கம்: உயிரியச் சமுதாயமும், உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஒருங்கே இணைந்து சூழ்நிலை மண்டலமாகச் (Ecosystem) செயலாற்றுகிறது.

7. கூற்று(A): முக்கிய தாவர வகைகளைக் கொண்ட பெரிய பகுதி அல்லது துணைக் கண்ட அளவிலான பகுதியைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படும்.

காரணம்(R): இதுவே ‘சுற்றுச்சூழல் கோளம்’ எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிர்த் தொகை (Biome) என்ற சொல், முக்கிய தாவர வகைகளைக் கொண்ட பெரிய பகுதி அல்லது துணைக் கண்ட அளவிலான பகுதியைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படும்.

8. மிகப் பெரிய, ஓரளவிற்கு தன்னிறைவு பெற்ற உயிரியல் மண்டலத்தை____________ என்றும் குறிப்பிடலாம்.

A) உயிர்த் தொகை

B) உயிர் கோளம்

C) சுற்றுச்சூழல் மண்டலம்

D) சுற்றுச்சூழல் கோளம்

விளக்கம்: மிகப் பெரிய, ஓரளவிற்கு தன்னிறைவு பெற்ற உயிரியல் மண்டலத்தை ‘சுற்றுச்சூழல் கோளம்’ (Ecosphere) என்றும் குறிப்பிடலாம்.

9. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சுற்றுச்சூழல் கோளத்தில் பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும் அடங்கும்.

2] இவை இயற்பியல் காரணிகளுடன் இணைந்து செயலாற்றி அவற்றின் பரவல், செறிவு, உற்பத்தி மற்றும் பரிணாமத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சுற்றுச்சூழல் கோளத்தில் பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும் அடங்கும். இவை இயற்பியல் காரணிகளுடன் இணைந்து செயலாற்றி அவற்றின் பரவல், செறிவு, உற்பத்தி மற்றும் பரிணாமத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

10. கூற்று(A): உயிரினங்கள் வாழ அல்லது இருக்கத் தேவையான பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய கூட்டுச் சொல்.

காரணம்(R): இதுவே ‘சுற்றுச்சூழல்’ எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சுற்றுச்சூழல் என்பது உயிரினங்கள் வாழ அல்லது இருக்கத் தேவையான பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய கூட்டுச் சொல் ஆகும்.

11. எந்த சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் யாவை

A) ஒளி

B) வெப்பநிலை

C) அழுத்தம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஒளி, வெப்பநிலை, அழுத்தம், நீர் மற்றும் உப்புத் தன்மை ஆகியவை எந்த சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாகும்.

12. கூற்று(A): ஒளி, வெப்பநிலை, அழுத்தம், நீர் மற்றும் உப்புத் தன்மை ஆகியவை எந்த சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாகும்.

காரணம்(R): இவை உயிருள்ள ஆக்கக்கூறுகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒளி, வெப்பநிலை, அழுத்தம், நீர் மற்றும் உப்புத் தன்மை ஆகியவை எந்த சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாகும். இவை உயிரற்ற ஆக்கக்கூறுகள் (Abiotic components) என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

13. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] சுற்றுச்சூழல் என்பது தொடர்ந்து மாறுபடக் கூடியதும், இயங்கக் கூடியதும் ஆகும்.

2] இதில் வெப்பநிலை மாற்றங்கள்மற்றும் ஒளி மாற்றங்கள் ஆகியவை பகலிரவு மற்றும் காலநிலை மாற்றங்களாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சுற்றுச்சூழல் என்பது தொடர்ந்து மாறுபடக் கூடியதும், இயங்கக் கூடியதும் ஆகும். இதில் வெப்பநிலை மாற்றங்கள்மற்றும் ஒளி மாற்றங்கள் ஆகியவை பகலிரவு மற்றும் காலநிலை மாற்றங்களாகும்.

14. ஒரு உயிரியின் ____________ ஆகியவை சுற்றுச்சூழலின் பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.

A) வளர்ச்சி

B) பரவல்

C) எண்ணிக்கை

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஒரு உயிரியின் வளர்ச்சி, பரவல், எண்ணிக்கை, நடத்தை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவை சுற்றுச்சூழலின் பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.

15. கூற்று(A): ஒரு உயிரினம் அல்லது உயிரினச் சமுதாயம் வாழும் இடத்தையும், அவற்றை சுற்றியுள்ள சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளையும் குறிப்பிடுகிறது.

காரணம்(R): இவை வாழிடம் என்று அழைக்கப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வாழிடம் என்பது ஒரு உயிரினம் அல்லது உயிரினச் சமுதாயம் வாழும் இடத்தையும், அவற்றை சுற்றியுள்ள சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளையும் குறிப்பிடுகிறது.

16. ஒரு சிற்றினத்தின் அனைத்து வாழிடங்களின் தொகுப்பு____________

A) பரவல் வீச்சு

B) வாழிட வீச்சு

C) புவிப்பரவல் வீச்சு

D) சுற்றுச்சூழல் வீச்சு

விளக்கம்: ஒரு சிற்றினத்தின் அனைத்து வாழிடங்களின் தொகுப்பு ‘புவிப்பரவல் வீச்சு’ (Geographical range) எனப்படும்.

17. கூற்று(A): உயிரினம் வாழும் சிறு இடத்தைச் சார்ந்தது மட்டுமல்லாமல் அதன் சுற்றுச்சூழல் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியது.

காரணம்(R): இவை சிறுவாழிடம் என்று அழைக்கப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு உயிரினத்தின் சுற்றுச்சூழல் சிறுவாழிடம் என்பது அவ்வுயிரினம் வாழும் சிறு இடத்தைச் சார்ந்தது மட்டுமல்லாமல் அதன் சுற்றுச்சூழல் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதுமாகும்.

18. சிறுவாழிடம்’ என்ற சொல்லை ____________ என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.

A) ஸ்டீபன் எல்டன்

B) கார்லின் சார்லஸ்

C) நீல்ஸ் எல்டன்

D) சார்லஸ் எல்டன்

விளக்கம்: ஒரு சமுதாயத்தில் வாழும் உயிரினங்களின் செயல்பாட்டு நிலையை உணர்த்தும் வகையில் ‘சிறுவாழிடம்’ என்ற சொல்லை சார்லஸ் எல்டன் (1927) என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.

19. சுற்றுச்சூழலில் ஒப்பிடத்தக்க செயல்களைச் செய்யும் சிற்றினக்குழு மற்றும் ஒரு சமுதாயத்திற்குள் அக்குழுவிற்கான சிறுவாழிட பரப்பு ____________ என்று அழைக்கப்படுகிறது.

A) சுற்றுச்சூழல் சங்கமம்

B) உயிரினச் சங்கமம்

C) சூழல் சங்கமம்

D) வாழிட சங்கமம்

விளக்கம்: சுற்றுச்சூழலில் ஒப்பிடத்தக்க செயல்களைச் செய்யும் சிற்றினக்குழு மற்றும் ஒரு சமுதாயத்திற்குள் அக்குழுவிற்கான சிறுவாழிட பரப்பு ஆகியவை ‘உயிரினச் சங்கமம்’ (Guilds) என்று அழைக்கப்படுகிறது.

20. கூற்று(A): வெவ்வேறு புவியியல் மண்டலங்களில் உள்ள, ஒரே வகையான சிறுவாழிடங்களில் சிற்றினங்கள் வாழ்கின்றன.

காரணம்(R): இவை சுற்றுச்சூழல் ஒத்த உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெவ்வேறு புவியியல் மண்டலங்களில் உள்ள, ஒரே வகையான சிறுவாழிடங்களில் வாழும் சிற்றினங்கள் ‘சுற்றுச்சூழல் ஒத்த உயிரினங்கள்’ (Ecological equivalents) என்று அழைக்கப்படும்.

21. ஒரு வாழிடத்தில், ஒரு தனிப்பட்ட இனக்கூட்டத்தின் வாழ்க்கை முறை அதன் ____________ எனப்படும்.

A) வாழிடம்

B) சிறு வாழிடம்

C) புவிபரவல்

D) ஒதுக்கிடம்

விளக்கம்: ஒரு வாழிடத்தில், ஒரு தனிப்பட்ட இனக்கூட்டத்தின் வாழ்க்கை முறை அதன் ஒதுக்கிடம் எனப்படும்.

22. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெட்டுக்கிளி பகல் நேரத்தில் செயல்படுபவை.

2] இவை தாவரங்கள் மீது வாழ்ந்து தாவரப் பகுதிகளை உண்டு வாழும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெட்டுக்கிளி பகல் நேரத்தில் செயல்படுபவை. இவை தாவரங்கள் மீது வாழ்ந்து தாவரப் பகுதிகளை உண்டு வாழும்.

23. கூற்று(A): உயிரினங்களிலும் அவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளை உள்ளடக்கியது.

காரணம்(R): இவை உயிரற்ற காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிரற்ற காரணிகள் என்பவை உயிரினங்களிலும் அவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இயற்பியல் மற்றும் வேதியியல் காரணிகளை உள்ளடக்கியது ஆகும்.

24. கூற்று(A): வெப்பநிலை அல்லது வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் அளவு, ஒரு சுற்றுச் சூழலில் மிகவும் அவசியமான மற்றும் மாறுபடும் காரணி ஆகும்.

காரணம்(R): இவை உயிர்க்கோளத் தில் வாழும் அனைத்து உயிரினங்களின் முக்கிய செயல்களான வளர்சிதை மாற்றம், நடத்தை , இனப்பெருக்கம், கருவளர்ச்சி மற்றும் மரணம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெப்பநிலை அல்லது வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் அளவு, ஒரு சுற்றுச் சூழலில் மிகவும் அவசியமான மற்றும் மாறுபடும் காரணி ஆகும். இது உயிர்க்கோளத் தில் வாழும் அனைத்து உயிரினங்களின் முக்கிய செயல்களான வளர்சிதை மாற்றம், நடத்தை , இனப்பெருக்கம், கருவளர்ச்சி மற்றும் மரணம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

25. உயிரினத்தின் வளர்சிதை மாற்றங்களை____________ நெறிப்படுத்துகின்றன.

A) ஹார்மோன்கள்

B) நொதிகள்

C) செல்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: உயிரினத்தின் வளர்சிதை மாற்றங்களை நொதிகள் நெறிப்படுத்துகின்றன.

26. வெப்பநிலையானது உயிரினங்களில் ____________ ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) பால் நிர்ணயம்

B) இன உறுப்புகள் முதிர்ச்சி அடைதல்

C) இனச்செல்லாக்கம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: வெப்பநிலையானது பெரும்பாலான உயிரினங்களில் பால் நிர்ணயம், பாலின விகிதம், இன உறுப்புகள் முதிர்ச்சி அடைதல், இனச்செல்லாக்கம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

27. கூற்று(A): குளிரான பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதியில் வசிக்கும் உயிரினங்களை விட அதிகமான உடல் எடையை எட்டுகின்றன.

காரணம்(R): இது ஆலென் விதி எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: குளிரான பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதியில் வசிக்கும் உயிரினங்களை விட அதிகமான உடல் எடையை எட்டுகின்றன (பெர்க்மானின் விதி) (Bergmann’s rule).

28. கூற்று(A): குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள், காதுகள் மற்றும் பிற இணை உறுப்புகள், வெப்பமான பருவ நிலையில் வாழும் அதே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களை விடச் சிறியதாக உள்ளன.

காரணம்(R): இது பெர்க்மானின் விதி எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள், காதுகள் மற்றும் பிற இணை உறுப்புகள், வெப்பமான பருவ நிலையில் வாழும் அதே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களை விடச் சிறியதாக உள்ளன (ஆலென் விதி) (Allen’s rule).

29. கூற்று(A): சில நீர்வாழ் சூழலில், நீரின் வெப்பநிலைக்கும் மீன்களின் உடல் அமைப்பு மற்றும் எண்ணிக்கைக்கும் எதிர்மறைத் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

காரணம்(R): இது ஜோர்டானின் விதி எனப்படும்

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில நீர்வாழ் சூழலில், நீரின் வெப்பநிலைக்கும் மீன்களின் உடல் அமைப்பு மற்றும் எண்ணிக்கைக்கும் எதிர்மறைத் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (ஜோர்டானின் விதி) (Jordon’s rule).

30. குறைவான வெப்பநிலையில் அதிக எண்ணிக்கையில்____________ உருவாக்கப்படுகின்றன.

A) ஊர்வன

B) பாலூட்டிகள்

C) மீன்கள்

D) முதுகெலும்புகள்

விளக்கம்: குறைவான வெப்பநிலையில் அதிக எண்ணிக்கையில் முதுகெலும்புகள் உருவாக்கப்படுகின்றன.

31. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உயிரினங்களின் பரவலிலும் வெப்பநிலை தாக்கத்தை எற்படுத்துகிறது.

2] வெப்ப மண்டலப் பகுதிகளில் உயிரினக் கூட்டத்தின் பல்வகைதன்மை, உயிரி மற்றும் செறிவு ஆகியவை மித வெப்பமண்டலம் மற்றும் துருவப் பகுதிகளை விட குறைவாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிரினங்களின் பரவலிலும் வெப்பநிலை தாக்கத்தை எற்படுத்துகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில் உயிரினக் கூட்டத்தின் பல்வகைதன்மை, உயிரி மற்றும் செறிவு ஆகியவை மித வெப்பமண்டலம் மற்றும் துருவப் பகுதிகளை விட அதிகமாகும்.

32. கூற்று(A): அதிக வெப்பநிலை மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்கினங்கள் வாழ்கின்றன.

காரணம்(R): இவை மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அதிக வெப்பநிலை மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்கினங்கள் மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (Eurytherms) எனப்படும்.

33. மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் அல்லாதவை எவை?

A) பூனை

B) நாய்

C) சிங்கம்

D) மனிதன்

விளக்கம்: மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள்: பூனை, நாய், புலி மற்றும் மனிதன்.

34. மிகை வெப்ப வேறுபாடு____________ சாதகமானது ஆகும்.

A) இனப்பெருக்கம்

B) தகவமைப்பு

C) இடப்பெயர்ச்சி

D) பரிணாமம்

விளக்கம்: மிகை வெப்ப வேறுபாடு பரிணாமத்திற்கு சாதகமானது ஆகும்.

35. பனியுகத்தில் உயிரினங்கள் வாழ குறைந்த வெப்பநிலைக்கான தகவமைப்புகள்____________ வாழத் தேவையாக இருந்தன.

A) குறைந்த வெப்ப வேறுபாடு

B) குறைந்த குளிர் வெப்ப வேறுபாடு

C) மிகை வெப்ப வேறுபாடு

D) மிகைகுளிர் வெப்ப வேறுபாடு

விளக்கம்: பனியுகத்தில் உயிரினங்கள் வாழ குறைந்த வெப்பநிலைக்கான தகவமைப்புகள் (மிகைகுளிர் வெப்ப வேறுபாடு) (Cold-Euryhermy) வாழத் தேவையாக இருந்தன.

36. உயிரினங்களில்____________ ஒரு வகையான வெப்பநிலை ஒழுங்குபாட்டு முறை ஆகும்.

A) குறைந்த வெப்ப வேறுபாடு

B) குறைந்த குளிர் வெப்ப வேறுபாடு

C) மிகை வெப்ப வேறுபாடு

D) மிகைகுளிர் வெப்ப வேறுபாடு

விளக்கம்: உயிரினங்களில் மிகை வெப்ப வேறுபாடு (Eurthermy) ஒரு வகையான வெப்பநிலை ஒழுங்குபாட்டு முறை ஆகும்.

37. கூற்று(A): உயிரினங்களில் குறைவான அளவு வெப்பநிலை வேறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றவை

காரணம்(R): இவை குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிரினங்களில் குறைவான அளவு வெப்பநிலை வேறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றவை குறை வெப்ப வேறுபாடுடைய (Stenotherms) உயிரினங்கள் எனப்படும்.

38. குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் அல்லாதவை எவை?

A) மீன்கள்

B) தவளைகள்

C) பல்லிகள்

D) பூச்சிகள்

விளக்கம்: குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள்: மீன்கள், தவளைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள்.

39. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அதீதமான வெப்பநிலை உள்ள சூழலில், உயிரினங்கள் வெப்பம் தாங்கும் ஸ்போர்கள் மற்றும் கூடுகள் (எண்டமீபா), உறை எதிர் புரதங்கள் (ஆர்ட்டிக் மீன்கள்) ஆகியவற்றை உருவாக்குகின்றன.

2] குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் போன்ற தகவமைப்புகளை மேற்கொண்டு கடுமையான குளிர் மற்றும் கோடைகாலங்களைக் கடக்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அதீதமான வெப்பநிலை உள்ள சூழலில், உயிரினங்கள் வெப்பம் தாங்கும் ஸ்போர்கள் மற்றும் கூடுகள் (எண்டமீபா), உறை எதிர் புரதங்கள் (ஆர்ட்டிக் மீன்கள்) ஆகியவற்றை உருவாக்குகின்றன. குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் போன்ற தகவமைப்புகளை மேற்கொண்டு கடுமையான குளிர் மற்றும் கோடைகாலங்களைக் கடக்கின்றன.

40. கீழ்கண்ட காரணிகள் எவை என கண்டறிக?

1] இது ஒரு முக்கியமான உயிரற்ற காரணி ஆகும்.

2] சூழலியல் நோக்கில், கால அளவு, கிராம் கலோரி அளவிலான ஆற்றல் ஆகியவை உயிரினங்களுக்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

A) வெப்பம்

B) ஒலி

C) ஒளி

D) காலநிலை

விளக்கம்: ஒளி முக்கியமான உயிரற்ற காரணி ஆகும். சூழலியல் நோக்கில், ஒளியின் தரம் (அலைநீளம் அல்லது நிறம்), ஒளியின் செறிவு (கிராம் கலோரி அளவிலான ஆற்றல்) மற்றும் கால அளவு (பகல் பொழுதின் நீளம்) ஆகியவை உயிரினங்களுக்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

41. ____________ நிகழ்வுகளில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) விலங்கினங்களின் வளர்ச்சி

B) விலங்கினங்களின் நிறமியாக்கம்

C) விலங்கினங்களின் இடப்பெயர்ச்சி

D) இவை அனைத்தும்

விளக்கம்: விலங்கினங்களின் வளர்ச்சி, நிறமியாக்கம், இடப்பெயர்ச்சி மற்றும் இனப்பெருக்க நிகழ்வுகளில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

42. ____________ஆகியவை வளர் சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) ஒளியின் தரம் மற்றும் அலைவெண்

B) ஒளியின் அலைநீளம் மற்றும் ஒளியின் செறிவு

C) ஒளியின் ஆற்றல் மற்றும் அலைவெண்

D) ஒளியின் செறிவு மற்றும் அலைவெண்

விளக்கம்: ஒளியின் செறிவு மற்றும் அலைவெண் ஆகியவை வளர் சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மரபணுக்களில் திடீர் மாற்றத்தைத் தூண்டுகின்றன (புற ஊதாக்கதிர்கள் மற்றும் X-கதிர்கள்).

43. விலங்குகளின்____________ நிகழ்வில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) வளர்ச்சி

B) நிறமியாக்கம்

C) ஊடுவளர்ச்சித் தடை

D) இடப்பெயர்ச்சி

விளக்கம்: விலங்குகளின் ஊடுவளர்ச்சித் தடை (Diapause) நிகழ்வில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

44. கோடைக்காலங்களில் அதிக ____________ போது பறவைகளின் இன உறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது.

A) ஒளியின் அலைநீளம்

B) ஒளியின் அலைவெண்

C) ஒளியின் ஆற்றல்

D) ஒளிச் செறிவு

விளக்கம்: கோடைக்காலங்களில் அதிக ஒளிச் செறிவின் போது பறவைகளின் இன உறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது.

45. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கண்பார்வைக்கு ஒளி மிகவும் அவசியம்.

2] எளிய விலங்குகளில் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கண்பார்வைக்கு ஒளி மிகவும் அவசியம். குகையில் வாழும் உயிரினங்களில் சரியாக வளர் ச்சிடையாத அல்லது முழுமையாகக் கண்கள் இல்லாத நிலை ஆகியவற்றால் இது நிரூபிக்கப்படுகிறது. எளிய விலங்குகளில் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஒளி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

46. பூமியில் உள்ள உயிரினங்கள் முதன்முதலில்____________ தான் தோன்றின.

A) மலைகள்

B) காடுகள்

C) நிலம்

D) கடல்

விளக்கம்: பூமியில் உள்ள உயிரினங்கள் முதன்முதலில் கடலில் தான் தோன்றின.

47. பூமியின் மேற்பரப்பில், சுமார்____________ பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

A) மூன்றில் இரண்டு

B) நான்கில் இரண்டு

C) மூன்றில் ஒன்று

D) நான்கில் மூன்று

விளக்கம்: பூமியின் மேற்பரப்பில், சுமார் நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

48. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கடினநீரில் கால்சியம்சல்பேட் மற்றும் மக்னீசியத்தின் சல்பேட்டுகள் அல்லது நைட்ரேட்டுகள் கரைந்துள்ளது.

2] மென்னீர் என்பது உப்புக்களற்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நீரில் கரைந்துள்ள உப்புக்களின் அடிப்படையில், கடினநீர் (கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் சல்பேட்டுகள் அல்லது நைட்ரேட்டுகள் கரைந்துள்ளது) மற்றும் மென்னீர் (உப்புக்களற்றது) என இரு வகைகள் உள்ளன.

49. கூற்று(A): கொதிக்க வைத்தல் முறையில் நீரின் கடினத் தன்மையை நீக்கலாம்.

காரணம்(R): இது நிரந்தரக் கடினத் தன்மை ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கொதிக்க வைத்தல் முறையில் நீரின் கடினத் தன்மையை நீக்க முடிந்தால் அது தற்காலிக கடினத் தன்மை ஆகும்.

50. கூற்று(A): கொதிக்க வைத்தல் முறையில் நீரின் கடினத் தன்மையை நீக்க முடியாது.

காரணம்(R): இது தற்காலிக கடினத் தன்மை ஆகும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கொதிக்க வைத்தல் முறையில் நீரின் கடினத் தன்மையை நீக்க முடியாது. அது நிரந்தரக் கடினத் தன்மை ஆகும்.

51. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மண் உருவாக்கத்தில் நீர் ஒரு முக்கியக் காரணி ஆகும்.

2] பல்வேறு சூழ்நிலை மண்டலங்களுக்கான ஊடகமாகத் நீர் திகழ்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மண் உருவாக்கத்தில் (Pedogenesis) நீர் ஒரு முக்கியக் காரணி ஆகும். பல்வேறு சூழ்நிலை மண்டலங்களுக்கான ஊடகமாகத் நீர் திகழ்கிறது.

52. கூற்று (A): நீர் காற்றை விடக் கனமானது, மேலும் நீர்ச்சூழலில் அது மிதவைத் தன்மையை அளிக்கிறது.

காரணம் (R): இப்பண்பு, நீர்வாழ் உயிரிகள் நீர்நிலையின் வெவ்வேறு மட்டங்களில் மிதக்க உதவி செய்கிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீர் காற்றை விடக் கனமானது, மேலும் நீர்ச்சூழலில் அது மிதவைத் தன்மையை அளிக்கிறது. இப்பண்பு, நீர்வாழ் உயிரிகள் நீர்நிலையின் வெவ்வேறு மட்டங்களில் மிதக்க உதவி செய்கிறது.

53. கூற்று(A): நீரின் அதிக வெப்பத் திறன் மற்றும் உள்ளுறை வெப்பம் காரணமாக, அதிக அளவு வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனுடையது.

காரணம்(R): பெருங்கடல் மற்றும் ஏரிகளில் சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீரின் அதிக வெப்பத் திறன் மற்றும் உள்ளுறை வெப்பம் காரணமாக, அதிக அளவு வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனுடையது. அதனால் பெருங்கடல் மற்றும் ஏரிகளில் சீரான வெப்பநிலை பாரமரிக்கப்படுகிறது. மற்றும் உயிர்க்கோளத்தில் நிலைத்த வெப்பநிலை காணப்படுகிறது.

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நீரின் இயற்பியல் தன்மை தனித்துவமானது.

2] திடநிலையில் (பனிக்கட்டி) உள்ள நீர் திரவநிலையில் உள்ளதை விட அடர்த்தி அதிகமானது ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நீரின் இயற்பியல் தன்மை தனித்துவமானது. திடநிலையில் (பனிக்கட்டி) உள்ள நீர் திரவநிலையில் உள்ளதை விட அடர்த்தி குறைவானது ஆகும்.

55. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நீர், வளிமண்டலத்திலும், பாறைக்கோளத்தின் வெளிஉறையிலும் ஈரநிலையில் உள்ளது.

2] பூமியில் நீர் சமமான நிலையில் பரவியுள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நீர், வளிமண்டலத்திலும், பாறைக்கோளத்தின் வெளிஉறையிலும் ஈரநிலையில் உள்ளது. பூமியில் நீர் சமமற்ற நிலையில் பரவியுள்ளது.

56. ____________ வெப்பநிலையில் திரவ நீரின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது.

A) 3° C

B) 6° C

C) 5° C

D) 4° C

விளக்கம்: 4° C வெப்பநிலையில் திரவ நீரின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது.

57. கூற்று(A): நீர் அதிகப் பரப்பு இழுவிசை கொண்டதாகும்.

காரணம்(R): மகரந்தத் தூள், தூசி மற்றும் நீர் மேல் நடக்கும் பூச்சிகள் ஆகியவை நீரை விட அதிக அடர்த்தி கொண்டிருந்தாலும், நீரின் புறப்பரப்பில் மிதக்கின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நீர் அதிகப் பரப்பு இழுவிசை கொண்டதாகும். நீரின் இப்பண்பினால், மகரந்தத் தூள், தூசி மற்றும் நீர் மேல் நடக்கும் பூச்சிகள் ஆகியவை நீரை விட அதிக அடர்த்தி கொண்டிருந்தாலும், நீரின் புறப்பரப்பில் மிதக்கின்றன.

58. ____________பொதுக்கரைப்பானாகக் கருதப்படுகிறது.

A) ஈதர்

B) பென்சின்

C) டொலுவின்

D) நீர்

விளக்கம்: நீர்பொதுக்கரைப்பானாகக்கருதப்படுகிறது.

59. மண் என்பது, ____________ கலவை ஆகும்.

A) கரிமப்பொருட்கள்

B) தாது உப்புகள்

C) வாயுக்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மண் என்பது, கரிமப்பொருட்கள், தாது உப்புகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவை ஆகும்.

60. புவிப்பரப்பிலுள்ள மண் நிறைந்த பகுதி____________ எனப்படும்.

A) பாறைக்கோளம்

B) புவிக்கோளம்

C) நிலக்கோளம்

D) மண் கோளம்

விளக்கம்: புவிப்பரப்பிலுள்ள மண் நிறைந்த பகுதி மண் கோளம் (Pedosphere) எனப்படும்.

61. கூற்று(A): மண் பலகிடைமட்ட அடுக்குகளாகக் கட்டமைந்து காணப்படும்.

காரணம்(R): இது மண் விபரம் என அழைக்கப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மண் பலகிடைமட்ட அடுக்குகளாகக் கட்டமைந்து காணப்படும். இது மண் விபரம் (Soil profile) என அழைக்கப்படும்.

62. மண்ணின் பணிகள் யாவை?

1] தாவரங்கள் வளர்வதற்கான ஊடகம்.

2] நீரைச் சேமிக்கவும், சுத்தப்படுத்துவதற்குமான வழிமுறையாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தாவரங்கள் வளர்வதற்கான ஊடகம். நீரைச் சேமிக்கவும், சுத்தப்படுத்துவதற்குமான வழிமுறையாகும்.

63. மண்ணின் பணிகள் யாவை?

1] புவியின் வளிமண்டலத்தை மாற்றியமைப்பவை.

2] மண்ணின் தன்மையைமாற்றியமைக்கக்கூடிய பல உயிரினங்களின் வாழிடம்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புவியின் வளிமண்டலத்தை மாற்றியமைப்பவை. மண்ணின் தன்மையைமாற்றியமைக்கக்கூடிய பல உயிரினங்களின் வாழிடம்.

64. கீழ்க்கண்டவற்றுள் மண்ணின் பண்புகளை கண்டறிக

1] மண்ணில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்தது மண்ணின் நயம் அமைகிறது.

2] மண் துகள்களின் அளவின் அடிப்படை யில் மணல், வண்டல் மற்றும் களிமண் என பல மண் வகைகள் காணப்படுகிறது.

A) மண் புரைமை

B) மண்வெப்பநிலை

C) மண் நீர்

D) மண்ணின் நயம்

விளக்கம்: மண்ணின் நயம்: மண்ணில் உள்ள துகள்களின் அளவை ப் பொறுத்தது மண்ணின் நயம் அமைகிறது. மண் துகள்களின் அளவின் அடிப்படை யில் மணல், வண்டல் மற்றும் களிமண் என பல மண் வகைகள் காணப்படுகிறது.

65. கூற்று(A): ஒரு குறிப்பிட்ட கனஅளவு உள்ள மண்ணின், துகள்களுக்கு இடையே இடைவெளி உள்ளது.

காரணம்(R): இது இடைவெளி புரைவெளி (Pore space) எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மண் புரைமை (Porosity) – ஒரு குறிப்பிட்ட கனஅளவு உள்ள மண்ணின், துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி புரைவெளி (Pore space) எனப்படும்.

66. புரை வெளிகளால் நிரம்பியுள்ள மண்ணினுடைய கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதமே____________ ஆகும்.

A) மண் புரைமை

B) மண்வெப்பநிலை

C) மண் நீர்

D) மண்ணின் நயம்

விளக்கம்: புரை வெளிகளால் நிரம்பியுள்ள மண்ணினுடைய கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதமே மண் புரைமை ஆகும்.

67. கூற்று(A): புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை மண்ணின் தன்மை தீர்மானிக்கிறது.

காரணம்(R): இது மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை (Permeability) – புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும்.

68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது.

2] மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு நேர் விகிதத்தில் உள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது. மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

69. கீழ்க்கண்டவற்றுள் மண்ணின் பண்புகளை கண்டறிக

1] மண் சூரியனிடமிருந்தும், சிதையும் கரிமப்பொருட்களிலிருந்தும் மற்றும் புவியின் உட்புறத்திலிருந்தும் வெப்ப ஆற்றலைப் பெறுகிறது.

2] மண்ணின் வெப்பநிலை, விதைகள் முளைப்பதையும், வேர்கள் வளர்வதையும் மற்றும் மண்ணில் வாழும் நுண்ணிய மற்றும் பெரிய உயிரினங்களின் உயிரியல் செயல்களையும் பாதிக்கிறது.

A) மண் புரைமை

B) மண் வெப்பநிலை

C) மண் நீர்

D) மண்ணின் நயம்

விளக்கம்: மண் வெப்பநிலை – மண் சூரியனிடமிருந்தும், சிதையும் கரிமப்பொருட்களிலிருந்தும் மற்றும் புவியின் உட்புறத்திலிருந்தும் வெப்ப ஆற்றலைப் பெறுகிறது. மண்ணின் வெப்பநிலை, விதைகள் முளைப்பதையும், வேர்கள் வளர்வதையும் மற்றும் மண்ணில் வாழும் நுண்ணிய மற்றும் பெரிய உயிரினங்களின் உயிரியல் செயல்களையும் பாதிக்கிறது.

70. குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட வேகத்தில், இயற்கையான நகரும் வளி, ____________ என அழைக்கப்படுகிறது.

A) புயல்

B) சூறாவளி

C) காற்றோட்டம்

D) காற்று

விளக்கம்: குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட வேகத்தில், இயற்கையான நகரும் வளி, காற்று என அழைக்கப்படுகிறது.

71. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] நிலநடுக்கோடு மற்றும் துருவப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி ஆகிய இரு காரணங்களால் காற்று உருவாகிறது.

2] மகரந்தத் துகள்கள் மற்றும் விதைகள் கடத்தப்படவும், பறவைகள்பறக்கவும் காற்று உதவுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நிலநடுக்கோடு மற்றும் துருவப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பூமியின் சுழற்சி (கோரியோலிஸ் விளைவு) ஆகிய இரு காரணங்களால் காற்று உருவாகிறது. மகரந்தத் துகள்கள் மற்றும் விதைகள் கடத்தப்படவும், பறவைகள்பறக்கவும் காற்று உதவுகிறது.

72. ____________ என்ற கருவியின் உதவியால் காற்றின் வேகம் அளவிடப்படுகிறது.

A) ஹைட்ரோமீட்டர்

B) அனிராய்ட் மீட்டர்

C) அனிமோ மீட்டர்

D) ட்ரிப்டோமீட்டர்

விளக்கம்: அனிமோமீட்டர் என்ற கருவியின் உதவியால் காற்றின் வேகம் அளவிடப்படுகிறது.

73. கூற்று(A): வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஈரம் ஏற்படுகிறது.

காரணம்(R): இதுவே ஈரப்பதம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நீராவியினால் ஏற்படும் ஈரம், ஈரப்பதம் எனப்படும்.

74. குறிப்பிட்ட கொள்ளளவு, காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை____________

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: குறிப்பிட்ட கொள்ளளவு (அல்லது) பொருண்மை, அளவுள்ள காற்றில் உள்ள ஒட்டு மொத்த நீராவியின் பொருண்மை முழுமையான ஈரப்பதம் எனப்படும்.

75. ____________ வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: முழுமையான ஈரப்பதத்தில் வெப்பநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

76. காற்றில் உள்ள நீராவியின் அளவு____________

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: காற்றில் உள்ள நீராவியின் அளவு ஒப்புமை ஈரப்பதம் எனப்படும்.

77. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பது____________

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றில் உள்ள ஈரப்பதம் தெவிட்டு நிலையை அடைய தேவைப்படும் நீராவியின் அளவை விழுக்காட்டில் குறிப்பதே ஒப்புமை ஈரப்பதம் எனப்படும்.

78. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில்____________ விழுக்காடு அதிகமாக இருந்தால் காற்று-நீர் கலவை அதிக ஈரத்தன்மையுடன் உள்ளது எனக் கொள்ளலாம்.

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒப்புமை ஈரப்பதத்தின் விழுக்காடு அதிகமாக இருந்தால் காற்று-நீர் கலவை அதிக ஈரத்தன்மையுடன் உள்ளது எனக் கொள்ளலாம்.

79. ஈரப்பதத்தை____________ எனும் கருவியால் அளக்கலாம்.

A) ஹைக்ரோமீட்டர்

B) அனிராய்ட் மீட்டர்

C) அனிமோ மீட்டர்

D) ட்ரிப்டோமீட்டர்

விளக்கம்: ஈரப்பதத்தை ஹைக்ரோமீட்டர் எனும் கருவியால் அளக்கலாம்.

80. குறித்த ஈரப்பதம் என்பது____________

A) முழுமையான ஈரப்பதம்

B) ஒப்புமை ஈரப்பதம்

C) சுய ஈரப்பதம் ஈரப்பதம்

D) பொருண்மை

விளக்கம்: குறித்த ஈரப்பதம் என்பது ஒப்புமை ஈரப்பதம் ஆகும்.

81. கூற்று(A): விலங்குகள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கேற்ப, தங்கள் எதிர்வினையை குறுகிய காலத்திற்குள் மாற்றிமைத்துக் கொள்கின்றன.

காரணம்(R): இதற்கு இணக்கமாதல் என்று பெயர்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: விலங்குகள் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கேற்ப, தங்கள் எதிர்வினையை குறுகிய காலத்திற்குள் மாற்றிமைத்துக் கொள்கின்றன. இதற்கு இணக்கமாதல் (Acclimatization) என்று பெயர்.

82. கூற்று(A): தரைப்பகுதியில் வாழ்பவர்கள் உயரமான பகுதிக்குச் செல்லும்போது, புதிய சூழலுக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

காரணம்(R): இது அவர்களுக்கு, வளிமண்டல ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஏற்படும் அதிக அளவு ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்க உதவும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தரைப்பகுதியில் வாழ்பவர்கள் உயரமான பகுதிக்குச் செல்லும்போது, புதிய சூழலுக்கு உட்பட்ட சில நாட்களுக்குள் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது அவர்களுக்கு, வளிமண்டல ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஏற்படும் அதிக அளவு ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்க உதவும்.

83. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலை மற்றும் ஆக்சிஜனின் அடர்த்தி அதிகரிக்கிறது.

2] அதிக உயரத்தில் வெப்பநிலை குறைவு காரணமாக மழைக்குப் பதிலாக பனிப்பொழிவு ஏற்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலை மற்றும் ஆக்சிஜனின் அடர்த்தி குறைகிறது. அதிக உயரத்தில் வெப்பநிலை குறைவு காரணமாக மழைக்குப் பதிலாக பனிப்பொழிவு ஏற்படுகிறது.

84. கூற்று(A): ஒரே மாதிரியான அல்லது பொதுவான தாவரங்கள் மற்றும் காலநிலையைக் கொண்ட புவியின் பெரும் பரப்பு உள்ளது.

காரணம்(R): இது உயிர்த் தொகை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: உயிர்த் தொகை என்பது, ஒரே மாதிரியான அல்லது பொதுவான தாவரங்கள் மற்றும் காலநிலையைக் கொண்ட புவியின் பெரும் பரப்பு ஆகும்.

85. ஒரு உயிர்த்தொகையில் வாழும் உயிரினங்களின் வகைகள் மற்றும் அதன் தகவமைப்புக்ளைத் தீர்மானிப்பது____________

A) வெப்பநிலை

B) ஒளி

C) நீர் வளம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஒரு உயிர்த்தொகையில் வாழும் உயிரினங்களின் வகைகள் மற்றும் அதன் தகவமைப்புக்ளைத் தீர்மானிப்பது வெப்பநிலை, ஒளி மற்றும் நீர் வளம் ஆகிய காரணிகள் ஆகும்.

86. உயிர்க்கோளத்தில்____________ நீர் உயிர்த்தொகையே காணப்படுகிறது.

A) 81%

B) 91%

C) 61%

D) 71%

விளக்கம்: உயிர்க்கோளத்தில் 71% நீர் உயிர்த்தொகையே காணப்படுகிறது.

87. கடலோர மண்டலங்களின் காலநிலைகளில்____________ தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன.

A) ஏரிகள்

B) குளங்கள்

C) கடல்கள்

D) நீர்நிலைகள்

விளக்கம்: கடலோர மண்டலங்களின் காலநிலைகளில் நீர்நிலைகள் தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன.

88. கூற்று(A): பூமியின் தனிப்பட்ட நிலப்பகுதியில் வெவ்வேறு மண்டலங்களில் வாழும் பெருமளவிலான விலங்குகள் மற்றும் தாவர சமுதாயங்கள் உள்ளன.

காரணம்(R): இது நிலம் சார்ந்த உயிர்த்தொகை எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நிலம் சார்ந்த உயிர்த்தொகை: இவை பூமியின் தனிப்பட்ட நிலப்பகுதியில் வெவ்வேறு மண்டலங்களில் வாழும் பெருமளவிலான விலங்குகள் மற்றும் தாவர சமுதாயங்கள் ஆகும்.

89. நிலவாழ் உயிர்த்தொகையில் அதிக அளவு____________ காணப்படுகின்றன.

A) புல்வெளிகள்

B) பனிச்சமவெளிப் பகுதிகள்

C) பாலைவனம்

D) தாவரங்கள்

விளக்கம்: நிலவாழ் உயிர்த்தொகையில் அதிக அளவு தாவரங்கள் காணப்படுகின்றன.

90. நிலவாழ் உயிர்த்தொகையில் அடங்குபவை____________

A) புல்வெளிகள்

B) பனிச்சமவெளிப் பகுதிகள்

C) பாலைவனம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: நிலவாழ் உயிர்த்தொகையில் புல்வெளிகள், பனிச்சமவெளிப் பகுதிகள், பாலைவனம், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் இலையுதிர் ஊசியிலைக் காடுகள் ஆகியவை அடங்கும்.

91. பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் யாவை?

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) இவை அனைத்தும்

விளக்கம்: பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள்: பனிச்சமவெளி உயிர்த்தொகை, பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை , புல்வெளி உயிர்த்தொகை, உயர்மலைச்சாரல், வன உயிர்த்தொகை மற்றும் பாலை வன உயிர்த்தொகை.

92. ஆசியாவின் வடக்குப்பகுதி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மரங்களற்ற சமவெளி____________

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வன உயிர்த்தொகை

விளக்கம்: பனிச்சமவெளி உயிர்த்தொகை: ஆசியாவின் வடக்குப்பகுதி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மரங்களற்ற சமவெளி ஆகும்.

93. பனிச்சமவெளியில் வாழும் தாவர உண்ணிகள் அல்லாதது எவை?

A) கலைமான்கள்

B) ஆர்ட்டிக் முயல்கள்

C) கஸ்தூரி எருது

D) கஸ்தூரிமான்

விளக்கம்: கலைமான்கள், ஆர்ட்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை பனிச்சமவெளியில் வாழும் தாவர உண்ணிகள் ஆகும்.

94. பனிச்சமவெளியில் வாழும் முக்கிய விலங்குண்ணிகள் அல்லாதது எவை?

A) ஆர்ட்டிக் நரி

B) ஆர்ட்டிக் ஓநாய்

C) ஆர்ட்டிக் கரடி

D) சிவிங்கி பூனை

விளக்கம்: ஆர்ட்டிக் நரி, ஆர்ட்டிக் ஓநாய், சிவிங்கி பூனை (Bobcat) மற்றும் பனி ஆந்தை ஆகியவை பனிச்சமவெளியில் வாழும் முக்கிய விலங்குண்ணிகள் ஆகும்.

95. பனிச்சமவெளியில் காணப்படும் தாவர இனங்கள் அல்லாதது எவை?

A) குட்டையான வில்லோ மரங்கள்

B) பூச்ச மரங்கள்

C) பாசிகள்

D) குட்டையான அகில் மரங்கள்

விளக்கம்: குட்டையான வில்லோ மரங்கள், பூச்ச மரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகிய தாவர இனங்கள் பனிச்சமவெளியில் காணப்படுகின்றன.

96. பனிச்சமவெளியில் மழையளவு ஆண்டுக்கு ____________மிமீக்கும் குறைவாக உள்ளது.

A) 200

B) 250

C) 100

D) 150

விளக்கம்: பனிச்சமவெளி: மழையளவு ஆண்டுக்கு 250 மிமீக்கும் குறைவாக உள்ளது. இப்பகுதி நிலைத்த உறைபனி மண்டலமாகும்.

97. டைகா உயிர்த்தொகை என்பது____________

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வன உயிர்த்தொகை

விளக்கம்: டைகா உயிர்த்தொகை என்பது பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை ஆகும்.

98. பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் கோடைகால வெப்பநிலை____________ முதல் வரை இருக்கும்.

A) 10° C முதல் 25° C

B) 11° C முதல் 21° C

C) 10° C முதல் 22° C

D) 10° C முதல் 21° C

விளக்கம்: பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் கோடைகால வெப்பநிலை 10° C முதல் 21° C வரை இருக்கும்.

99. பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் ஆண்டு மழையளவு____________

A) 390-1000 மி.மீ

B) 400-1000 மி.மீ

C) 350-1000 மி.மீ

D) 380-1000 மி.மீ

விளக்கம்: பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் ஆண்டு மழையளவு 380-1000 மி.மீ ஆகும்.

100. ____________ மரத் தொழிற்சாலைகளுக்கான மூல வளங்களாகும்.

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வன உயிர்த்தொகை

விளக்கம்: பசுமைமாறா ஊசியிலைக்காடு மரத் தொழிற்சாலைகளுக்கான மூல வளங்களாகும்.

101. பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் முக்கிய விலங்குகள் யாவை?

A) மூக்கு மான்

B) கடம்பை மான்

C) கலைமான்கள்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மூக்கு மான், கடம்பை மான் மற்றும் கலைமான்கள் போன்ற வலசைபோகும் தாவர உண்ணிகள் பசுமைமாறா ஊசியிலைக்காட்டின் முக்கிய விலங்குகள் ஆகும்.

102. ____________ பாலைவனம். ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது.

A) தார்

B) அடோக்யமா

C) கோபி

D) சஹாரா

விளக்கம்: சஹாரா பாலைவனம். ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது.

103. மித வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில்____________ காணப்படுகிறது.

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வன உயிர்த்தொகை

விளக்கம்: மித வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் புல்வெளி உயிர்த்தொகை காணப்படுகிறது.

104. அதிகமான காற்று வீசுவது____________ யின் தனிப்பட்ட பண்பு ஆகும்.

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வன உயிர்த்தொகை

விளக்கம்: அதிகமான காற்று வீசுவது புல்வெளி உயிர்த்தொகையின் தனிப்பட்ட பண்பு ஆகும்.

105. புல்வெளி உயிர்த்தொகையில் அதிகமாகக் காணப்படும் தாவர உண்ணிகள் அல்லாதவை எவை?

A) மறிமான்

B) காட்டெருமை

C) ஜாக் முயல்

D) முயல்

விளக்கம்: மறிமான் , காட்டெருமை, ஜாக் முயல், தரை வாழ் அணில் மற்றும் பிரைரி நாய்கள் போன்ற தாவர உண்ணிகள் புல்வெளி உயிர்த்தொகையில் அதிகமாகக் காணப்படுகின்றன.

106. புல்வெளி உயிர்த்தொகையில் முக்கிய வேட்டையாடும் உயிரிகள் அல்லாதவை எவை?

A) கோயோட்

B) ஓநாய்கள்

C) கழுகு

D) பருந்துகள்

விளக்கம்: கோயோட், ஓநாய்கள், பருந்துகள் மற்றும் பாம்புகள் ஆகியன புல்வெளி உயிர்த்தொகையில் முக்கிய வேட்டையாடும் உயிரிகள் ஆகும்.

107. இந்தியாவில் புல்வெளியில் வாழ்பவை எவை?

A) யானைகள்

B) இந்தியக் காட்டெருமை

C) காண்டாமிருகம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இந்தியாவில் யானைகள் , இந்தியக் காட்டெருமை, காண்டாமிருகம் மற்றும் மறிமான்கள் ஆகியவை புல்வெளியில் வாழ்கின்றன.

108. புல்வெளி உயிர்த்தொகையில் உள்ள தாவர இனங்கள் அல்லாதவை எவை?

A) ஊதாநிற ஊசிப்புல்

B) காட்டு ஓட்ஸ்

C) தினை

D) கம்பு

விளக்கம்: புல்வெளி உயிர்த்தொகையில் உள்ள தாவர இனங்கள், ஊதாநிற ஊசிப்புல், காட்டு ஓட்ஸ், தினை, ரை புல் மற்றும் எருமை புற்கள் ஆகும்.

109. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இமயமலைப் பகுதியில் உள்ள பனி சூழ் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5200 மீ உயரத்தில் உள்ளது.

2] உயர்மலைச் சாரல் பகுதி கடல் மட்டத்திலிருந்து 3800 மீ உயரத்திலும் உள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இமயமலைப் பகுதியில் உள்ள பனி சூழ் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5100 மீ உயரத்திலும் உயர்மலைச் சாரல் பகுதி கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்திலும் உள்ளது.

110. உயர் மலைச்சாரல் பகுதியில் உள்ள தாவர வகைகள் அல்லாதவை எவை?

A) பாசிலியா

B) கரடிப்புற்கள்

C) முள்கூம்பு பைன்

D) காட்டு ஓட்ஸ்

விளக்கம்: உயர் மலைச்சாரல் பகுதியில் உள்ள தாவர வகைகள், உயர்மலைச்சார ல் பாசிலியா, கரடிப்புற்கள், முள்கூம்பு பைன், பாசி காம்பியன், பாலிலெபிஸ் காடு, குள்ள கசப்பு வேர் மற்றும் காட்டு உருளை ஆகியவை ஆகும்.

111. அடர்த்தியான மரங்கள் கொண்ட பகுதி____________

A) காட்டுப்பகுதி

B) மரப்பகுதி

C) வனப்பகுதி

D) தாவரப்பகுதி

விளக்கம்: அடர்த்தியான மரங்கள் கொண்ட பகுதி வனப்பகுதி எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது.

112. வெப்பமண்டலக் காடுகள் நிலநடுக்கோட்டிற்கு அருகே23.5° C வடக்கு மற்றும்____________ தெற்கு அட்சக்கோடுகளுக்கு இடையில் உள்ளன.

A) 22.5° C

B) 24.5° C

C) 23.5° C

D) 23.6° C

விளக்கம்: வெப்பமண்டலக் காடுகள் நிலநடுக்கோட்டிற்கு அருகே (23.5° C வடக்கு மற்றும் 23.5° C தெற்கு அட்சக்கோடுகளுக்கு இடையில் உள்ளன.

113. வெப்பமண்டலக் காடுகளின் ஆண்டிற்கான சராசரி வெப்பநிலை அளவு 20° C முதல்____________ ஆகும்.

A) 29° C

B) 24° C

C) 25° C

D) 26° C

விளக்கம்: வெப்பமண்டலக் காடுகளின் ஆண்டிற்கான சராசரி வெப்பநிலை அளவு 20° C முதல் 25° C ஆகும்.

114. வெப்பமண்டலக் காடுகளின் ஆண்டு மழைப்பொழிவு ____________ மி.மீக்கும் அதிகமாக உள்ளது.

A) 1000 மி.மீ

B) 2000 மி.மீ

C) 3000 மி.மீ

D) 2500 மி.மீ

விளக்கம்: வெப்பமண்டலக் காடுகள்: ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு காணப்படும். ஆண்டு மழைப்பொழிவு 2000 மி.மீக்கும் அதிகமாக உள்ளது.

115. மழைக்காலம் மற்றும் வறண்ட காலம் ஆகிய இரண்டு காலநிலைகள் மட்டும் காணப்படும் காடுகள்____________

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வெப்பமண்டலக் காடுகள்

விளக்கம்: வெப்பமண்டலக் காடுகள்: மழைக்காலம் மற்றும் வறண்ட காலம் ஆகிய இரண்டு காலநிலைகள் மட்டும் உள்ளன. குளிர்காலம் காணப்படுவதில்லை.

116. வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தாவரங்கள் அல்லாதவை எவை?

A) ஆர்க்கிடுகள்

B) திராட்சை

C) பெரணிகள்

D) பாசிலியா

விளக்கம்: வெப்பமண்டலக் காடுகள்: இப்பகுதியில் ஆர்க்கிடுகள், நீள் நாரிழைச் செடி வகைகள், திராட்சை , பெரணிகள், பாசிகள் மற்றும் பனை வகைத் தாவரங்கள் ஆகிய காணப்படுகின்றன.

117. பூமியில் பாதிக்கும் மேற்பட்ட____________ காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன.

A) பனிச்சமவெளி உயிர்த்தொகை

B) பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை

C) புல்வெளி உயிர்த்தொகை

D) வெப்பமண்டலக் காடுகள்

விளக்கம்: பூமியில் பாதிக்கும் மேற்பட்ட வெப்ப மண்டலக் காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன.

118. மித வெப்ப மண்டலக் காடுகளின் ஆண்டு வெப்பநிலை____________ முதல் வரை வேறுபடுகிறது.

A) -30° C முதல் 40° C

B) 30° C முதல் 40° C

C) -30° C முதல் 30° C

D) -30° C முதல் 50° C

விளக்கம்: மித வெப்ப மண்டலக் காடுகள்: ஆண்டு வெப்பநிலை -30° C முதல் 30° C வரை வேறுபடுகிறது.

119. மித வெப்ப மண்டலக் காடுகளின் ஆண்டு மழைப்பொழிவு ____________

A) 700-1500 மி.மீ

B) 750-1800 மி.மீ

C) 750-1500 மி.மீ

D) 750-1600 மி.மீ

விளக்கம்: மித வெப்ப மண்டலக் காடுகள்: ஆண்டு முழுவதும் சீராக (750-1500மி.மீ), மழை பொழிகிறது.

120. மித வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தாவரங்கள் அல்லாதவை எவை?

A) ஹிக்கரி

B) ஹெம்லாக்

C) மேப்பிள்

D) பெரணிகள்

விளக்கம்: மித வெப்ப மண்டலக் காடுகள்: இங்குள்ள தாவர வகைகள், ஓக், ஹிக்கரி, பீச், ஹெம்லாக், மேப்பிள், பால் மரக்கட்டை, பருத்தி, எல்ம், வில்லோ மற்றும் வசந்த காலத்தில் மலரும் சிறுசெடிகள் ஆகியனவாகும்.

121. மித வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் விலங்கினங்கள் அல்லாதவை எவை?

A) அணில்கள்

B) முயல்கள்

C) கரடிகள்

D) சிங்கம்

விளக்கம்: மித வெப்ப மண்டலக் காடுகள்: விலங்கினங்களில் அணில்கள், முயல்கள், முடைவளி மான் (ஸ்கங்க் ), பறவைகள், கரடிகள், மலைச்சிங்கம், சிவிங்கி பூனை, மரஓநாய்கள், நரி மற்றும் கருப்பு மான்கள் ஆகியவை அடங்கும்.

122. பூமியில்____________ ல் ஒரு பகுதி பாலைவனமாக உள்ளது.

A) நான்கில்

B) மூன்றில்

C) இரண்டில்

D) ஐந்தில்

விளக்கம்: பூமியில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனமாக உள்ளது.

123. பாலைவன உயிர்த் தொகுதிகளின் ஆண்டு மழைப்பொழிவு ____________க்கும் குறைவாக காணப்படுகின்றன.

A) 600 மிமீ

B) 700 மிமீ

C) 400 மிமீ

D) 500 மிமீ

விளக்கம்: பாலைவன உயிர்த் தொகுதிகள்: ஆண்டு மழையளவு 500 மிமீக்கும் குறைவாக உள்ள பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

124. பாலைவன உயிர்த் தொகுதிகளின் ஆண்டின் சராசரி வெப்பநிலை____________

A) 25°C முதல் 28° C

B) 30°C முதல் 35° C

C) 20°C முதல் 25° C

D) 30°C முதல் 40° C

விளக்கம்: பாலைவன உயிர்த் தொகுதிகள்: ஆண்டின் சராசரி வெப்பநிலை 20°C முதல் 25° C ஆகும்.

125. பாலைவன உயிர்த் தொகுதிகளின் உச்ச அளவு வெப்பநிலை____________

A) 43.5°C முதல் 46°C

B) 43.5°C முதல் 48°C

C) 43.5°C முதல் 49°C

D) 43.5°C முதல் 50°C

விளக்கம்: பாலைவன உயிர்த் தொகுதிகள்: உச்ச அளவு வெப்பநிலை 43.5°C முதல் 49°C வரையும் காணப்படுகின்றன.

126. பாலைவன உயிர்த் தொகுதிகளின் குறைந்த அளவு வெப்பநிலை____________

A) -17°C

B) -20°C

C) -18°C

D) -19°C

விளக்கம்: பாலைவன உயிர்த் தொகுதிகள்: குறைந்த அளவு வெப்பநிலை சில நேரங்களில் -18°C வரையும் இருக்கும்.

127. கீழ்க்கண்டவற்றுள் வெப்பப்பாலைவனங்கள் அல்லாதவை எவை?

A) சஹாரா பாலைவனம்

B) தார் பாலைவனம்

D) கோபி பாலைவனம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வட ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம், தென்மேற்கு அமெரிக்கா மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் உள்ள பாலைவனங்கள் (தார் பாலை வனம்) ஆகியவை அட்சக்கோட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வெப்பப் பாலைவனங்கள் ஆகும்.

128. வெப்பப்பாலைவனங்களில் காணப்படும் தாவரங்கள் அல்லாதவை எவை?

A) கற்றாழை

B) பாசிகள்

C) யுஃபோர்பியா ராய்ளியானா

D) போர்பியாகள்

விளக்கம்: வெப்பப்பாலைவனங்களில் சிறப்பு வகைத் தாவரங்களான (வறண்ட நில தாவரங்கள்) கற்றாழை, பாசிகள், சப்பாத்திக்கள்ளி சிற்றினம் மற்றும் யுஃபோர்பியா ராய்ளியானா ஆகியவை காணப்படும். சிறப்பு வகை முதுகுநாணுடைய மற்றும் முதுகுநாணற்ற விலங்குகளும் காணப்படுகின்றன.

129. வெப்பப்பாலைவனங்களில் காணப்படும் விலங்குகள் அல்லாதவை எவை?

A) முள்வால் பல்லிகள்

B) கருப்பு மான்

C) வெள்ளைக் கால் நரி

D) கருப்புக் கால் நரி

விளக்கம்: வெப்பமான பாலைவனங்களில் ஊர்வன மற்றும் சிறிய விலங்குகள் காணப்படும். இந்திய முள்வால் பல்லிகள், கருப்பு மான், வெள்ளைக் கால் நரி, ஆகியவை தார் பாலைவனத்தில் காணப்படும் பொதுவான விலங்குகள் ஆகும். இவை தவிர பூச்சிகள், அரக்னிடுகள் மற்றும் பறவைகளும் காணப்படுகின்றன.

130. குளிர் பாலைவனங்களில் காணப்படும் விலங்குகள் அல்லாதவை எவை?

A) கங்காரு எலி

B) கங்காரு சுண்டெலி

C) கங்காரு முயல்

D) பை சுண்டெலி

விளக்கம்: குளிர் பாலைவனம்: இப்பகுதியில் அதிகமாகப் பரவுயுள்ள விலங்குகள் ஜாக் முயல், கங்காரு எலி, கங்காரு சுண்டெலி, பை சுண்டெலி, வெட்டுக்கிளி எலி, மறிமான்கள் மற்றும் தரை அணில்கள் ஆகியவையாகும்.

131. அடகாமா பாலைவனத்தில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு____________ மிமீக்கும் குறைவாகும்.

A) 20

B) 25

C) 18

D) 15

விளக்கம்: அடகாமா பாலைவனத்தில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 15 மிமீக்கும் குறைவாகும்.

132. அடகாமா பாலைவனம் எங்குள்ளது?

A) அமெரிக்கா

B) ஆப்பிரிக்கா

C) சீனா

D) சிலி

விளக்கம்: சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் மிகக் குறைந்த மழைப்பொழிவு காணப்படுகிறது.

133. சஹாரா பாலைவனத்தின் உட்பகுதியிலும் மழைப்பொழிவு ஆண்டிற்கு____________ மிமீக்கும் குறைவாக உள்ளது.

A) 16

B) 17

C) 15

D) 18

விளக்கம்: சஹாரா பாலைவனத்தின் உட்பகுதியிலும் மழைப்பொழிவு ஆண்டிற்கு 15 மிமீக்கும் குறைவாக உள்ளது.

134. அமெரிக்கப் பாலைவனங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாகக் ஆண்டுக்கு____________ மிமீக்கும் காணப்படுகிறது.

A) 250

B) 260

C) 300

D) 280

விளக்கம்: அமெரிக்கப் பாலைவனங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாகக் (ஆண்டுக்கு 280மி.மீ) காணப்படுகிறது.

135. சிற்றினங்களுக்குள்ளே உள்ள சார்பு____________ காரணங்களுக்காக ஏற்படுகின்றன.

A) உணவு

B) எல்லை உணர்வு

C) இனப்பெருக்கம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: சிற்றினங்களுக்குள்ளே உள்ள சார்பு உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு, எல்லை உணர்வு, இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக ஏற்படுகின்றன.

136. கூற்று(A): வெவ்வேறு சிற்றினங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அவை ஒன்றையொன்று பாதிக்காது.

காரணம்(R): இவை நடுநிலை சார்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நடுநிலை சார்பு: வெவ்வேறு சிற்றினங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அவை ஒன்றையொன்று பாதிப்பதில்லை.

137. கீழ்க்கண்டவை எவ்வகை சார்பு என கண்டறிக?

1] இத்தகைய இணை வாழ்வில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த உயிரும் பாதிக்கப்படுவதில்லை.

2] பகிர்ந்து வாழும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை என இச்சார்பு வாழ்க்கை இரு வகைப்படும்.

A) நடுநிலை சார்பு

B) நேர்மறை சார்பு

C) எதிர்மறைச் சார்பு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நேர்மறை சார்பு: இத்தகைய இணை வாழ்வில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த உயிரும் பாதிக்கப்படுவதில்லை, மற்றும் அவ்வாழ்க்கை யால், ஒன்றோஅல்லது இரண்டுமோ நன்மையடைகின்றன. பகிர்ந்து வாழும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை என இச்சார்பு வாழ்க்கை இரு வகைப்படும்.

138. கூற்று(A): தொடர்புடைய ஒரு உயிரினம் அல்லது இரு உயிரினங்களும் பாதிப்படையும்.

காரணம்(R): இவை எதிர்மறைச் சார்பு எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: எதிர்மறைச் சார்பு: தொடர்புடைய ஒரு உயிரினம் அல்லது இரு உயிரினங்களும் பாதிப்படையும்.

139. ஒட்டுண்ணி வாழ்க்கை எவ்வகை சார்பிற்கு எடுத்துக்காட்டு____________

A) நடுநிலை சார்பு

B) நேர்மறை சார்பு

C) எதிர்மறைச் சார்பு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: எதிர்மறைச் சார்பு: எடுத்துக்காட்டு போட்டி, கொன்றுண்ணுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை.

140. கீழ்க்கண்டவற்றுள் புறக் காரணிகள் அல்லாதது எவை?

A) இடப்பரப்பு

B) வசிப்பிடம்

C) தட்பவெப்பம்

D) கொன்றுண்ணுதல்

விளக்கம்: உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும்.

141. கீழ்க்கண்டவற்றுள் அகக் காரணிகள் அல்லாதது எவை?

A) போட்டி

B) கொன்றுண்ணுதல்

C) வெளியேற்றம்

D) தட்பவெப்பம்

விளக்கம்: போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.

142. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அடர்த்தி சாராதது- அகக் காரணிகள்

2] அடர்த்தி சார்ந்தது- புறக் காரணிகள்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அடர்த்தி சாராதது – புறக் காரணிகள். அடர்த்தி சார்ந்தது – அகக் காரணிகள்.

143. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] கேடு செய்யும் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு உறிஞ்சு மீன் மற்றும் சுறாமீன் ஆகும்.

2] பகிர்ந்து வாழுதலுக்கு முதலைக்கும் பறவைகளுக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கேடு செய்யும் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு யானையின் கால்களில் அழிக்கப்படும் சிறிய விலங்குகள் ஆகும். பகிர்ந்து வாழுதலுக்கு முதலைக்கும் பறவைகளுக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

144. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உதவிபெறும் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு உறிஞ்சு மீன் மற்றும் சுறாமீன் ஆகும்.

2] போட்டிக்கு எடுத்துக்காட்டுபறவைகள் உணவுக்காக அணில்களுடன் போட்டியிடுதல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உதவிபெறும் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு உறிஞ்சு மீன் மற்றும் சுறாமீன் ஆகும். போட்டிக்கு எடுத்துக்காட்டுபறவைகள் உணவுக்காக அணில்களுடன் போட்டியிடுதல் ஆகும்.

145. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு மனிதனின் உணவு மண்டலத்தில் உள்ள அஸ்காரிஸ் மற்றும் நாடாப்புழு ஆகும்.

2] கொன்று தின்னுதலுக்கு எடுத்துக்காட்டு சிங்கம் மானை வேட்டையாடுதல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு மனிதனின் உணவு மண்டலத்தில் உள்ள அஸ்காரிஸ் மற்றும் நாடாப்புழு ஆகும். கொன்று தின்னுதலுக்கு எடுத்துக்காட்டு சிங்கம் மானை வேட்டையாடுதல் ஆகும்.

146. கூற்று(A): ஒரு இனக்கூட்டத் தின் அளவு விரைந்து பெருகிக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத்தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.

காரணம்(R): இவை J வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு இனக்கூட்டத் தின் அளவு விரைந்து பெருகிக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத்தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. இவை J வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

147. சாதகமான சுற்றுச் சூழலில் ஒரு உயிரினத்தின் அதிகபட்ச இனப்பெருக்கத் திறன்____________

A) தாங்கும் திறன்

B) சுற்றுச்சூழல் தடைகள்

C) உயிரினத் திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: உயிரினத் திறன் அல்லது இனப்பெருக்கத் திறன் (r): சாதகமான சுற்றுச் சூழலில் ஒரு உயிரினத்தின் அதிகபட்ச இனப்பெருக்கத்திறன் உயிரினத் திறன் எனப்படும்.

148. ஒரு நிலப்பகுதியில் வாழக்கூடிய சிற்றினத்தின் அதிகபட்ச எண்ணிக்கையே____________

A) தாங்கும் திறன்

B) சுற்றுச்சூழல் தடைகள்

C) உயிரினத் திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தாங்கும் திறன் (k) (Carrying capacity) : சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரு நிலப்பகுதியில் வாழக்கூடிய சிற்றினத்தின் அதிகபட்ச எண்ணிக்கையே தாங்குதிறன் எனப்படும்.

149. ஒரு உயிரியின் உயிரினத் திறன் கைவரப் பெறுதலைத் தடுக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளின் மொத்த தொகுப்பு____________

A) தாங்கும் திறன்

B) சுற்றுச்சூழல் தடைகள்

C) உயிரினத் திறன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சுற்றுச்சூழல் தடைகள் (Environmental resistance): ஒரு உயிரியின் உயிரினத் திறன் கைவரப் பெறுதலைத் தடுக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளின் மொத்த தொகுப்பு சுற்றுச் சூழல் தடைகள் எனப்படும்.

150. கூற்று(A): சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை மிக மெதுவாகவும், பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

காரணம்(R): இவை S வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை மிக மெதுவாகவும், பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இவ்வகை வளர்ச்சி S வடிவத்தைக் கொடுக்கின்றது.

151. கூற்று(A): தங்களுக்குள் அகக்கலப்பு செய்து கொள்ளக்கூடிய, ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற மற்றும் ஒரு உயிரின சமுதாயத்தின் பகுதியாகச் செயல்படும் உயிரினங்களின் தொகுப்பு உள்ளது.

காரணம்(R): இவை இனக்கூட்டம் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: தங்களுக்குள் அகக்கலப்பு செய்து கொள்ளக்கூடிய, ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கின்ற மற்றும் ஒரு உயிரின சமுதாயத்தின் பகுதியாகச் செயல்படும் உயிரினங்களின் தொகுப்பே இனக்கூட்டம் எனப்படும்.

152. இனக்கூட்டத்தின் பல்வேறு பண்புகள் யாவை?

A) அடர்த்தி

B) பிறப்பு வீதம்

C) இறப்பு வீதம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: இனக்கூட்டத்தின் அடர்த்தி, பிறப்பு வீதம், இறப்பு வீதம், வயது பகிர்வு, உயிரியல் திறன், பரவல் மற்றும் r மற்றும் K ஆல் தேர்வு செய்யப்பட்ட வளர்ச்சி வடிவங்கள் ஆகியவை இனக்கூட்டத்தின் பல்வேறு பண்புகளாகும்.

153. ஒரு அலகுப் பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் இனக்கூட்டத்தின் அளவு____________

A) பிறப்பு வீதம்

B) இறப்பு வீதம்

C) இனக்கூட்டப் பரவல்

D) இனக்கூட்ட அடர்த்தி

விளக்கம்: ஒரு அலகுப் பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் இனக்கூட்டத்தின் அளவு இனக்கூட்ட அடர்த்தி எனப்படும்.

154. இயற்கையான வாழிடத்தில் வாழும் ஒரு சிற்றினத்தின் மொத்த எண்ணிக்கை அதன்____________ எனப்படும்.

A) பிறப்பு வீதம்

B) இறப்பு வீதம்

C) இனக்கூட்டப் பரவல்

D) இனக்கூட்ட அடர்த்தி

விளக்கம்: இயற்கையான வாழிடத்தில் வாழும் ஒரு சிற்றினத்தின் மொத்த எண்ணிக்கை அதன் இனக்கூட்ட அடர்த்தி எனப்படும்.

155. இனப்பெருக்கத்தின் இரண்டு முக்கிய காரணிகள் கருவுறும் திறன் (Fertility) மற்றும்____________ ஆகியவை ஆகும்.

A) இனப்பெருக்க அடர்த்தி

B) இனப்பெருக்க நலன்

C) இனப்பெருக்க உற்பத்தி

D) இனப்பெருக்கத் திறன்

விளக்கம்: இனப் பெருக்கத்தின் இரண்டு முக்கிய காரணிகள் கருவுறும் திறன் (Fertility) மற்றும் இனப்பெருக்கத் திறன் (Fecundity) ஆகியவை ஆகும்.

156. கூற்று(A): முதுகெலும்பிகளின் தோலில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புகளுடன் பல செல் அடுக்குகளும் உள்ளன.

காரணம்(R): இவை நீரிழிப்பைத் தடுக்க உதவுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: முதுகெலும்பிகளின் தோலில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புகளுடன் பல செல் அடுக்குகளும் உள்ளன. இவை நீரிழிப்பைத் தடுக்க உதவுகின்றன.

157. குளிர்கால உறக்கம் மற்றும்____________ ஆகியவை விலங்குகளின் இரண்டு மிகச் சிறந்த உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள் ஆகும்.

A) இரவுநேர

B) பகல்நேர

C) மாலைநேர

D) கோடைகால

விளக்கம்: குளிர்கால உறக்கம் மற்றும் கோடைகால உறக்கம் ஆகியவை விலங்குகளின் இரண்டு மிகச் சிறந்த உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள் ஆகும்.

158. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்

A) ஒத்தமைவான்கள்

B) ஒழுங்கமைவான்கள்

C) வலசைபோகின்றன

D) செயலற்ற நிலையில் உள்ளன

விளக்கம்: சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள் ஒழுங்கமைவான்கள் ஆகும்.

159. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A) ஸ்டீனோதெர்மல்

B) யூரிதெர்மல்

C) கட்டாட்ராமஸ்

D) அனாட்ராமஸ்

விளக்கம்: நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் கட்டாட்ராமஸ் என்றழைக்கப்டுகின்றன.

160. கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்

A) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்

B) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

C) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்

D) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

161. கீழ்க்கண்டவற்றுள் r–சிற்றினத்துக்கு உதாரணம்

A) மனிதன்

B) பூச்சிகள்

C) காண்டாமிருகம்

D) திமிங்கலம்

162. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இனக்கூட்டம் – வயது பரவல் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையைக் நிர்ணயிக்கிறது.

2] இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இனக்கூட்டம் – வயது பரவல்ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையைக் நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.

163. ____________ காரணமாக இனக்கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

A) குடிப்பெயர்ச்சி

B) இனக்கூட்டப் பரவல்

C) வலசை போதல்

D) குடியேற்றம்

விளக்கம்: குடியேற்றம் காரணமாக இனக்கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

164. சைபீரியாவில் வாழும் சைபீரியக் கொக்குகள், கடுமையான பனிக்காலக் குளிரைத் தவிர்க்கும் பொருட்டு சைபீரியாவிலிருந்து____________ வருகை தந்து பின்பு வசந்த காலத்தின்போது திரும்பச் செல்கின்றன.

A) பழவேற்காடு சரணாலயம்

B) கரைவெட்டி சரணாலயம்

C) வடுவூர் சரணாலயம்

D) வேடந்தாங்கல் சரணாலயம்

விளக்கம்: சைபீரியாவில் வாழும் சைபீரியக் கொக்குகள், கடுமையான பனிக்காலக் குளிரைத் தவிர்க்கும் பொருட்டு சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கலுக்கு வருகை தந்து பின்பு வசந்த காலத்தின்போது திரும்பச் செல்கின்றன.

165. இயற்கையான சூழலில் விலங்கினங்களின் நடத்தை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவு____________

A) குணவியல்

B) வாழ்வியல்

C) சூழியல்

D) நடத்தையியல்

விளக்கம்: நடத்தையியல் என்பது, இயற்கையான சூழலில் விலங்கினங்களின் நடத்தை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.

166. கூற்று(A): சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன.

காரணம்(R): இது ‘வளர்ச்சித் தடை நிலை’ (diapause) எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது ‘வளர்ச்சித் தடை நிலை’ (diapause) எனப்படும்.

167. கூற்று(A): மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.

காரணம்(R): இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும்.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச் சூழல் வெப்பநிலைக் கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது. இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும்.

168. ____________ மற்றும் ஒப்புமைப் போலி (Mimicry) போன்றவை இயற்கையின் மிகச் சிறந்த தகவமைப்பு முறைகள் ஆகும்.

A) செயலற்ற நிலை

B) வளர்ச்சித் தடை நிலை

C) நிறமாற்றம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நிறமாற்றம் (Camouflage) மற்றும் ஒப்புமைப் போலி (Mimicry) போன்றவை இயற்கையின் மிகச் சிறந்த தகவமைப்பு முறைகள் ஆகும்.

169. மீன்களின் உடலில் உள்ள தசைகள் ____________ இருப்பதால் அவை இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

A) பையோடோம்கள்

B) கையோடோம்கள்

C) டையோடோம்கள்

D) மையோடோம்கள்

விளக்கம்: மீன்களின் உடலில் உள்ள தசைகள் தொகுப்புகளாக (மையோடோம்கள்) இருப்பதால் அவை இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

170. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பிறப்பு வீதம் மற்றும் உள்ளேற்றம் போன்ற காரணிகளால் இனக்கூட்ட அளவு அதிகரிக்கிறது.

2] இறப்பு மற்றும் வெளியேற்றம் போன்ற காரணிகளால் குறைகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பிறப்பு வீதம் மற்றும் உள்ளேற்றம் போன்ற காரணிகளால் இனக்கூட்ட அளவு அதிகரிக்கிறது. இறப்பு மற்றும் வெளியேற்றம் போன்ற காரணிகளால் குறைகிறது.

12th Science Lesson 18 Questions in Tamil

18] நோய்த்தடைக்காப்பியல்

1. நம்முள் உறைந்துள்ள இயற்கை ஆற்றலே உண்மையான நோய் குணப்படுத்தியாகும் என்று கூறியவர்?

A) சாமுவேல் ஹானிமேன்

B) ஹிப்போகிரேட்டஸ்

C) பதஞ்சலி

D) மேற்கண்ட எவருமில்லை

2. நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பிற்கு____________என்று பெயராகும்.

A) நோய்த்தடைக்காப்பியல்

B) இம்மியூனாலஜி

C) ஹாராலஜி

D) A B இரண்டும்

விளக்கம்: நோய்த்தடைக்காப்பியல் என்பது நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பாகும். இம்மண்டலம் பல்வேறு நோய்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. உடலுக்குள் அயல்பொருளாக நுழையும் சூழ்நிலை முகவர்களிடமிருந்து, உடலை பாதுகாக்க உடல் பயன்படுத்தும் அனைத்து செயல்முறைகளையும்ம இது குறிக்கிறது.

3. கூற்று 1: நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல்திறன் நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு என்று பெயர்.

கூற்று 2: இத்தன்மை குறைவிற்கு எளிதில் இலக்காகும் தன்மை என்று பெயர் ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

4. தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும்____________என்று அழைக்கப்படுகிறது.

A) எதிர்பொருட்கள்

B) ஆன்டிபாடிகள்

C) ஆன்டிஜென்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: புரதங்கள், பாலிசாக்கரைடுகள், நியூக்ளிக் அமிலங்கள் போன்ற பெரும்பான்மையானவை ஏற்பு உயிரிகளில் அயல்பொருட்களாக இருக்கும் போது தடைகாப்பு துலங்கலை தூண்டுகின்றன. தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும், எதிர்ப்பொருள் தூண்டி(Antigen) என அழைக்கப்படுகிறது.

5. இயல்பு நோய்த்தடைகாப்புப் பற்றியக் கூற்றுகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

1. இது உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரான நோய்த்தடுக்கும் ஆற்றலாகும்.

2. ஒவ்வொரு உயிரியும் பிறவிலிருந்தே இந்த ஆற்றலை பெற்றிருக்கின்றன.

3. இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு உடையதாகும்.

4. இது பரந்த அளவிலான திறன் கொண்ட நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.

A) 1 2 மட்டும் தவறு

B) 3 மட்டும் தவறு

C) 1 3 4 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும்.

6. நமது உடலில் உள்ளே நுழையும் நுண்ணுயிரிகளை தடுத்து நிறுத்தும் தடுப்பானாக செயல்படும் உறுப்பு____________ஆகும்.

A) தோல்

B) வியர்வை சுரப்பி

C) கல்லீரல்

D) உதரவிதானம்

7. மனித உடலின் தோலின் ph மதிப்பு__________ஆகும்.

A) 2-4

B) 3-5

C) 6-8

D) 4-8

8. பொருத்துக:

A) ஆன்டிஜன் – 1. பாக்டீரியா எதிர்ப்பு

B) ஆன்டிபாடி – 2. வைரஸ் எதிர்ப்பு

C) லைசோசோம் – 3. எதிர்ப்பொருட்கள்

D) இன்டர்பெரான்கள் – 4. எதிர்ப்பொருட்கள் தூண்டி

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 4 3 1 2

D) 4 1 2 3

விளக்கம்:

A) ஆன்டிஜன் – 1. எதிர்ப்பொருட்கள் தூண்டி

B) ஆன்டிபாடி – 2. எதிர்ப்பொருட்கள்

C) லைசோசோம் – 3. பாக்டீரியா எதிர்ப்பு

D) இன்டர்பெரான்கள் – 4. வைரஸ் எதிர்ப்பு

9. கீழ்க்கண்டவற்றுள் உடலில் காணப்படும் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கும் தன்மையுடைய சிறப்பு வாய்ந்த செல்_________ஆகும்.

A) மோனோசைட்டுகள்

B) நியூட்ரோபில்கள்

C) மேக்ரோஃபேஜ்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சிறப்பு வாய்ந்த செல்கள் (மோனோசைட்டுகள், நியூட்ரோபில்கள் திசுவில் உள்ள மேக்ரோஃபேஜ்கள் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.

10. நமது உடலில் காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது____________வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது.

A) செரோட்டோனின்

B) ஹிஸ்டமைன்

C) புரோஸ்டோகிளான்டின்

D) மேற்கண்ட அனைத்தும்

11. டையபீடெசிஸ் என்பது__________ஆகும்.

A) இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் உட்செல்தலாகும்.

B) இரத்தகுழாய்சுவர்கள் சேதமடைதலாகும்.

C) இத்தகுழாய்சுவர் வீக்கமடைதல் நிகழ்வாகும்.

D) இரத்தகுழாய்சுவர் வழி இரத்தபொருள் வெளியேறுதலாகும்.

விளக்கம்: காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது, அப்பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது. இப்பொருட்கள் விழுங்கு செல்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உட்செலுத்துகின்றன. இந்நிகழ்வு இரத்தகுழாய்கள் வழி இரத்தபொருள் வெளியேறுதல் அல்லது டையபீடெசிஸ் என்று பெயர்.

12. ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைக்காப்பு___________நோய்த்தடைக்காப்பு எனப்படுகிறது.

A) இலக்கு தன்மையற்ற நோய்த்தடைக்காப்பு

B) இயல்பு நோய்த்தடைக்காப்பு

C) பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைகாப்பே பெறப்பட்ட நோய்த் தடைகாப்பு எனப்படும். மேலும் இது, ஒரு குறிப்பிட்ட நுண்கிருமிக்கு எதிரான உடல் எதிர்ப்புத் திறன் ஆகும்.

13. செயலாக்க நோய்த்தடைக்காப்பு என்பது___________மூலம் உருவாகிறது.

A) நோய்த்தொற்று

B) தடுப்பூசி

C) விபத்துக்கள்

D) A B இரண்டும்

விளக்கம்: உடலில், எதிர்பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய்த்தடைக்காப்பு சார்ந்த எதிர்ப்புத் திறனே செயலாக்க நோய்த் தடைக்காப்பாகும். இது தனி நபரின் நோயெதிர்ப்புத் துலங்கல்களை பயன்படுத்தி பெறப்படுகிறது. செயலாக்க நோய்த்தடைக்காப்பு ஒரு நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி போடுவதன் விளைவாக உருவாகிறது.

14. பெறப்பட்ட நோய்த்தடைகாப்பானது____________பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டி குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் தன்மை, பல்வகைமைத் தன்மை, சுய மற்றும் அயல் மூலக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் நோய்த்தடைகாப்பு சார்ந்த நினைவாற்றல் ஆகியவை இவ்வகை நோய்த்தடைக்காப்பின் சிறப்புப் பண்புகளாகும். பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பு, செயலாக்க நோய்த்தடைகாப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு என, இருபெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

15. செயலாக்க நொய்த்தடைகாப்புப் பற்றிய செயல்பாடுகளுல் பொருந்தாததைத் சரியாகத் தேர்ந்தெடு.

A) செயலாக்க நோய்த்தடைக்காப்பில் தடைகாப்பு பொருட்கள் விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுகின்றன.

B) நுண்கிருமி அல்லது எதிர்பொருள் தூண்டிகளின் தூண்டுதலால் இவை உருவாக்கப்படுகின்றது.

C) இது நீடித்த மற்றும் சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன.

D) நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றல் இல்லை.

விளக்கம்: நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது.

16. மந்தமான நொய்த்தடைகாப்புப் பற்றிய செயல்பாடுகளுல் பொருந்தாததைத் சரியாகத் தேர்ந்தெடு.

A) மந்தமான நோய்த்தடைக்காப்பில் தடைகாப்பு பொருட்கள் விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படுவதில்லை. மாறாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் விருந்தோம்பியின் பங்களிப்பு கிடையாது.

B) வெளியில் இருந்து பெற்ற எதிர்ப்பொருட்களால் உற்பத்தியாகின்றன.

C) இவ்வகை நோய்த்தடைக்காப்பு சிறிது காலத்திற்கு பிறகு தான் செயல்திறன் உடையதாக மாறும்.

D) இவ்வகை நோய்த்தடைகாப்பியளில் நினைவாற்றல் இல்லை.

விளக்கம்: இவ்வகை நோய்த்தடைக்காப்பில், உடனே நோய்த்தடைகாப்பு உருவாகிறது.

17. எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது______________வழி நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது.

A) செல்வழி நோய்த்தடைகாப்பு

B) திரவ வழி நோய்த்தடைகாப்பு

C) எதிர்ப்பொருள் நோய்த்தடைகாப்பு

D) இலக்கு தன்மையற்ற நோய்த்தடைகாப்பு

விளக்கம்: எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது செல்வழி நோய்தடைக்காப்பு எனப்படுகிறது. இதற்கு T-செல்கள் மேக்ரோபேஜ்கள் மற்றும் இயற்கைக் கொல்லி செல்கள் ஆகியவை உதவிபுரிகின்றன.

18. செல்வழி நோய்த்தடைகாப்பு முறைக்கு உதவிபுரிவது___________ஆகும்.

A) T- செல்கள்

B) மேக்ரோபேஜ்கள்

C) இயற்கைக் கொல்லி

D) மேற்கண்ட அனைத்தும்

19. எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறைக்கு___________வழி நோய்த்தடைக்காப்பு முறை என்று பெயர்.

A) எதிர்ப்பொருள்வழி நோய்த்தடைகாப்பு

B) செல்வழி நோய்த்தடைகாப்பு

C) திரவவழி நோய்த்தடைகாப்பு

D) A B இரண்டும்

விளக்கம்: எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கம் முறைக்கு எதிர்ப்பொருள்வழி நோய்த்தடைகாப்பு அல்லது திரவவழி நோய்த்தடைகாப்பு என்று பெயர். எதிர்ப்பொருள் தூண்டிகளை முன்னிலைபடுத்தும் செல்கள் மற்றும் T-உதவி செல்கள் ஆகியவற்றின் துணையோடு B-செல்கள் இத்தடைகாப்பை செயலாக்குகின்றன.

20. ஹீமட்டோபாயசிஸ் என்று அழைக்கப்படுவது_________நிகழ்வாகும்.

A) எலும்புமஜ்ஜையில் இரத்த செல்கள் உருவாதல் நிகழ்வு

B) காயம் ஏற்படுவதினால் இரத்த கசிவு ஏற்படும் நிகழ்வு

C) மண்ணீரலில் இரத்த செல்கள் அழிக்கப்படுதல் நிகழ்வு

D) இரத்தக் கட்டிகள் உருவாதல் நிகழ்வு

21. முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.

1) எதிர்ப்பொருளின் செறிவு 7 முதல் 10 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

2) இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

3) எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது.

4) நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

A) 1 2 3 மட்டும் சரி

B) 1 2 4 மட்டும் சரி

C) 1 3 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

22. இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கள் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி:

A) எதிர்ப்பொருளின் செறிவு 3 முதல் 5 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.

B) இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக குறைவான நேரமே போதுமானது.

C) எதிர்ப்பொருளின் அளவு நீண்ட காலம் உயர் நிலையில் உள்ளது.

D) எலும்புமஜ்;ஜை அதனை தொடர்ந்து கல்லீரலில் வெளிப்படுத்தப்படுகிறது.

விளக்கம்: எலும்புமஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.

23. __________ன் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகளின் நிணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

A) கல்லீரல்

B) மண்ணீரல்

C) லிம்போசைட்

D) எலும்பு மஜ்ஜை

விளக்கம்: லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள் நிணநீர்ய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

24. லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்கும் நிணநீரிய உறுப்புகள்_________நிலையை சார்ந்ததாகும்.

A) முதல் நிலை

B) இரண்டாம் நிலை

C) நான்காம் நிலை

D) ஐந்தாம் நிலை

25. எதிர்ப்பொருள் தூண்டிகளை பிடித்து அவற்றை முதிர்ந்த லிம்போசைட்டுகளுடன் சேர்க்கும் நிணநீரிய உறுப்புகள்___________நிலையைச் சார்ந்ததாகும்.

A) முதல் நிலை

B) இரண்டாம் நிலை

C) நான்காம் நிலை

D) ஐந்தாம் நிலை

26. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று முதல்நிலை நிணநீரிய உறுப்புகளை சாராதது என்பதைக் கண்டறி.

A) பறவைகளின் ஃபேப்ரீசியஸ்

B) பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை

C) தைமஸ் சுரப்பி

D) நிணநீர் சுரப்பி

விளக்கம்: பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை, பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பி போன்றவை முதல்நிலை நிணநீரிய உறுப்புகளாகும். இவை லிம்போசைட்டுகளின் உற்பத்தி மற்றும் தொடக்க நிலைத் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்;கின்றன. இவ்வகை லிம்போசைட்டுகள் ஒவ்வொன்றும் எதிர்ப்பொருள் தூண்டியின் மீது குறிப்பு தன்மை கொண்டவை.

27. முதல்நிலை நிணநீரிய உறுப்புகளில்__________மட்டுமே நோய்த்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகும்.

A) ஃபேப்ரீசியஸ்

B) எலும்பு மஜ்ஜை

C) தைமஸ் சுரப்பி

D) லிம்போசைட்

விளக்கம்: முதல்நிலை நிணநீரிய உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன. பாலூட்டிகளில் B-செல்களின் முதிர்ச்சி எலும்பு மஜ்ஜையிலும் மற்றும் T-செல்களின் முதிர்ச்சி தைமஸிலும் நடைபெறுகின்றன.

28. தைமஸ் சுரப்புப் பற்றிய சரியான கருத்துகளில் பொருந்தாததைக் கண்டறி:

1. தட்டையான இரண்டு கதுப்புகளை கொண்ட தைமஸ், மார்பெலும்புக்குப் பின்புறமும் இதயத்திற்கு மேலாகவும் அமைந்துள்ளன.

2. தைமசின் ஒவ்வொரு கதுப்பும் பல எண்ணற்ற நுண் கதுப்புகளால் ஆக்கப்பட்டுள்ளது.

3. நுண்கதுப்புகளை இணைப்புத் திசுவால் ஆன தடுப்புச் சுவர் பிரிக்கிறது.

4. ஒவ்வொரு நுண் கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் அக அடுக்கையும் மெடுல்லா எனும் புற அடுக்கையும் கொண்டுள்ளன.

A) 1 2 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 4 மட்டும் தவறு

D) 1 2 3 மட்டும் தவறு

விளக்கம்: தைமஸின் ஒவ்வொரு கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் புற அடுக்கையும் மெடுல்லா என்னும் அக அடுக்கையும் கொண்டுள்ளன.

29. கூற்று 1: தைமஸின் கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடையாத T செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

கூற்று 2: மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடைந்த தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.

A) கூற்று 1 சரி 2 தவறு

B) கூற்று 2 சரி 1 தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தைமஸின் கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடைந்த T.செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடையாத தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.

30. தைமஸிலிருந்து___________என்னும் முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது.

A) தைராக்சின்

B) தைமோசின்

C) தைராடின்

D) ஆக்சிடோசின்

விளக்கம்: தைமஸிலிருந்து தைமோசின் என்னும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது. அது ‘T’ செல்களைத் தூண்டி அவற்றை முதிர்ச்சியடையச் செய்கிறது மற்றும் தடைகாப்பு திறன் பெற்ற செல்களாக மாற்றுகின்றன.

31. பிறந்த குழந்தைகளிலும் விடலைப்பருவத்தினரிடத்திலும்__________சுரப்பி அதிக செயல்திறனுடன் செயல்புரிகிறது.

A) தைமஸ்

B) தைராய்டு

C) கல்லீரல்

D) மண்ணீரல்

விளக்;கம்: பதின்பருவத்தின் தொடக்கத்தில் இச்சுரப்பி செயல்நலிவுறுகிறது. அவ்விடத்தில் அடிபோஸ் திசு பதிலீடாக வளர்கிறது. பிறந்த குழந்தைகளிலும் விடலைப்பருவத்தினரிடத்திலும் தைமஸ் அதிக செயல்திறனுடன் செயல்புரிகிறது.

32. எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள்__________செல்கள் என அழைக்கப்படுகின்றன.

A) நரம்பு செல்கள்

B) தசை செல்கள்

C) குருதியாக்க செல்கள்

D) நார் செல்கள்

விளக்கம்: எலும்பு மஜ்ஜை ஒரு நிணநீரிய திசுவாகம். இது எலும்பின் பஞ்சு போன்ற பகுதியினுள் வைக்கப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள் குருதியாக்க செல்கள் என அழைக்கப்படுகின்றன. இச்செல்கள் செல்பிரிதல் மூலம் பல்கி பெருகும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

33. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுல் அல்லாதது எது.

A) மண்ணீரல்

B) நணநீர் முடிச்சுகள்

C) தைமஸ்

D) குடல்வால்

34. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுல் அல்லாதது எது.

A) வயிற்றுக்குடல் பாதையில் உள்ள பேயர் திட்டுகள்

B) டான்சில்கள்

C) அடினாய்டுகள்

D) எலும்பு மஜ்ஜை

35. நிணநீர் முடிச்சு பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:

1. நிணநீர் முடிச்சு சிறிய பாதாம் போன்ற வடிவத்தை உடையது.

2. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஒரு பகுதியாகும். இவை திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நிணநீர் முடிச்சு சிறிய அவரைவிதை போன்ற வடிவத்தை உடையது. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஒரு பகுதியாகும். இவை திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

36. நிணநீர் முடிச்சுகள் கீழ்க்கண்ட எவற்றால் நிரம்பியுள்ளது.

A) மாக்ரோஃபேஜ்கள்

B) லிம்போசைட்டுகள்

C) த்ரம்போசைட்டுகள்

D) A B இரண்டும்

விளக்கம்: நிணநீர் முடிச்சுகள் நிணநீர் திரவத்துடன் வருகின்ற பொருட்களை வடிகட்டி பிடிக்கின்றன. மாக்ரோஃபேஜ்கள் மற்றும் லிம்போசைட்டுகள் போன்ற வெள்ளையணுக்களால் நிணநீர் முடிச்சு நிரம்பியுள்ளது. உடல் முழுக்க நூற்றுக்கணக்கான நிணநீர் முடிச்சுகள் பரவியுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று நிணநீர் நாளங்களால் இணைக்கப்பட்டுள்ளன.

37. கூற்று 1: நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவ இயலாக, நிறமுடிய ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.

கூற்று 2: நிணநீர் முடிச்சுகளின் வழியாக நிணநீர் பாய்ந்து வரும் போது எதிர்ப்பொருள் தூண்டி பொருட்களை வடிகட்டி பிடித்து விழுங்கு செல்கள், நுண்பை செல்கள் மற்றும் விரலமைப்புடைய டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவற்றால் அழிக்கப்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.

38. ___________என்பது வாயினுடைய கூரைப்பகுதியில் மென் அண்ணத்துக்கு பின்னால் அமைந்துள்ள சுரப்பியாகும்.

A) கணையம்

B) தைமஸ்

C) அடினாய்டுகள்

D) அட்ரினல்

விளக்கம்: அடினாய்டுகள் என்பது வாயினுடைய கூரைபகுதியில் மென் அண்ணத்துக்கு பின்னால், நுகர்ச்சி உறுப்பு தொண்டையுடன் சேருமிடத்தில் அமைந்துள்ள சுரப்பியாகும். இவை பொதுவாக விடலை பருவத்தின் போது சுரங்க தொடங்கி முதிர்காலத்தில் மறைந்து விடுகின்றன.

39. நிணநீர் முடிச்சுகளில் காணப்படும் அடுக்குகளுடன் பொருந்தாதது எது.

A) கார்டெக்ஸ்

B) பாராகார்டெக்ஸ்

C) மெடுல்லா

D) மேற்கண்ட எதுவுமில்லை

40. நிணநீர் முடிச்சுப்பற்றிய சரியான கூற்றினைக் கண்டறி:

1. வெளி அடுக்கான கார்டெக்ஸில் B லிம்போசைட்டுகள் மேக்ரோ பேஜ்கள், நுண்பை டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.

2. கார்டெக்ஸீக்கு கீழே உள்ள பகுதி பாராகார்டெக்ஸ் ஆகும். இதில் ஏராளமான லிம்போசைட்டுகள் மற்றும் விரலமைப்பு கொண்ட டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.

3. மெடுல்லாவின் உள்பகுதியில் குறைந்த அளவிலான டி-லிம்போசைட்டுகள் உள்ன.

A) 1 2 மட்டும் சரி

B) 1 3 மட்டும் சரி

C) 2 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

41. கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் கீழ்க்கண்ட எந்த உறுப்பு மண்டலத்தில் பரவியுள்ளது.

A) உணவு மண்டலம்

B) சுவாச மண்டலம்

C) சிறுநீரக இனப்பெருக்க பாதை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுநீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன.

42. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள் கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும்.

கூற்று 2: இவை குடலில் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளில் இருந்து உடலை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

43. மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் குறித்த கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) இது கோழைப்படலம் சார்ந்த நிணநீர்த் திசுக்களின் ஒரு பகுதியாகும்.

2) இவை நிணநீரிய திசுக்களால் ஆக்கப்பட்டுள்ளன.

3) இவை நுகர்ச்சி குழிகளில் இருந்து நுரையீரல் வரையுள்ள சுவாசப் பாதையின் கோழைப் படலத்தில் காணப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

44. இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரத்த செல்களின் எண்ணிக்கை____________.

A) 4200,000 முதல் 6500,000

B) 4200 முதல் 6500,000

C) 4200,0 முதல் 6500,000

D) 4200,000 முதல் 6500,

45. கீழ்க்கண்டவற்றுள் துகள் உள்ள வெள்ளையணுக்களுடன் பொருந்தாதது எது.

A) நியூட்ரோபில்கள்

B) பேசோபில்கள்

C) இயோசினோபில்கள்

D) லிம்போசைட்டுகள்

46. கீழ்க்கண்டவற்றுள் துகள்களற்ற வெள்ளையணு__________ஆகும்.

A) மோனோசைட்டுகள்

B) நியூட்ரோபில்கள்

C) பேசோபில்கள்

D) இயோசினோபில்கள்

47. பொருத்துக:

செல்வகை – செல்களின் எண்ணிக்கை

A) நியூட்ரோபில்கள் – 1. 2000 – 7000

B) பேசோபில்கள் – 2. 40 – 500

C) இயோசினோபில்கள் – 3. 50 – 100

D) பிளேட்லெட்டுகள் – 4. 150,000 – 500,000

A) 1 3 2 4

B) 2 1 4 3

C) 4 3 1 2

D) 4 1 2 3

விளக்கம்:

செல்வகை – செல்களின் எண்ணிக்கை

A) நியூட்ரோபில்கள் – 1. 2000 – 7000

B) பேசோபில்கள் – 2. 50 – 100

C) இயோசினோபில்கள் – 3. 40 – 500

D) பிளேட்லெட்டுகள் – 4. 150,000 – 500,000

48. பொருத்துக:

செல்வகை – விழுக்காடு

A) நியூட்ரோபில்கள் – 1. 2 – 7

B) பேசோபில்கள் – 2. < 1

C) இயோசினோபில்கள் – 3. 2 – 5

D) மோனோசைட்டுகள் – 4. 50 – 70

A) 2 1 4 3

B) 4 3 1 2

C) 4 1 2 3

D) 4 3 2 1

விளக்கம்:

செல்வகை – விழுக்காடு

A) நியூட்ரோபில்கள் – 1. 50 – 70

B) பேசோபில்கள் – 2. < 1

C) இயோசினோபில்கள் – 3. 2 – 5

D) மோனோசைட்டுகள் – 4. 2 – 7

49. இரத்த வெள்ளையணுக்களில் லிம்போசைட்டுகள்___________விழுக்காடு உள்ளது.

A) 10 – 20

B) 10 – 40

C) 20 – 30

D) 20 – 50

50. உயிரினங்களின் உடலில் எதிர்ப்பொருள் தூண்டிகளை குறிப்பாக இனம்கண்டு அவற்றுக்கெதிரான தடைக்காப்பு துலங்கலை வெளிப்படுத்தபவை____________ஆகும்.

A) மோனோசைட்டுகள்

B) நியூட்ரோபில்கள்

C) பேசோபில்கள்

D) லிம்போசைட்டுகள்

51. லிம்போசைட்டுகள் குறித்தக் கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியல்லாததைக் கண்டறி:

A) இரத்தித்திலுள்ள வெள்ளையணுக்களில் ஏறத்தாழ 20 – 30 விழுக்காடு லிம்போசைட்டுகள் ஆகும்.

B) இச்செல்லின் பெரும்பகுதியை உட்கரு நிரப்பியுள்ள நிலையில் சிறிய அளவிலான சைட்டோபிளாசம் மட்டும் காணப்படுகிறது.

C) மேலும் B மற்றும் T என இரண்டு வகை லிம்போசைட்டுகள் உள்ளன.

D) இந்த இருவகை செல்களும் இரத்த செல்களில் தோன்றுகின்றன.

விளக்கம்: இந்த இருவகை செல்களும் எலும்பு மஜ்ஜையில் தோன்றுகின்றன.

52. சைட்டோகைன் எனும் வேதிப்பொருளை வெளியேற்றும் செல்__________ஆகும்.

A) T செல்கள்

B) B செல்கள்

C) பிளாஸ்மா

D) மேற்கண்ட எதுவுமில்லை

53. இரத்த வெள்ளையணுக்களில் உள்ள மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சியடைந்ததும்___________என்று அழைக்கப்படுகின்றன.

A) மைக்ரோஃபேஜ்கள்

B) மேக்ரோஃபேஜ்கள்

C) அடினாய்டுகள்

D) எப்டோப்

விளக்கம்: மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சியடைந்ததும் மேக்ரோஃபேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையும் அயல் உயிரிகளை, செல்விழுங்கல் முறையில் அழிப்பனவாகும்.

54. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றியைத் தேர்ந்தெடு:

கூற்று 1: தடைகாப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு இம்யூனோஜன் என்று அழைக்கப்படுகிறது.

கூற்று 2: தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியது ஹாப்டென்கள் என்று அழைக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

55. இரத்தத்தில் உள்ள எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதி___________என்று அழைக்கப்படுகிறது.

A) எபிடோப்

B) பாரோடோப்

C) ஐசோடோப்

D) கேரியோடைப்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள் துணையூக்கிகள் எனப்படும். எபிடோப் என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும். மேலும் இது எதிர்ப்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும்.

56. கீழ்க்கண்ட இணைகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: எபிடோப் – என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும்.

கூற்று 2: பாராடோப் – பாராடோப் என்பது எதிர்ப்பொருள் தூண்டி பிணையம் பகுதியாகும்.

57. கீழ்க்கண்டவற்றுள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகளுடன் பொருந்தாதது எது.

A) நுண்ணுயிரிகள்

B) மகரந்த துகள்கள்

C) மருந்துப்பொருள்கள்

D) மனித இரத்தவகை எதிர்பொருள்

விளக்கம்: நுண்ணுயிரிகள், மகரந்த துகள்கள் மருந்துபொருட்கள் மற்றும் மாசுபடுத்திகள் வெளிச்சூழலில் இருந்து விருந்தோம்பியின் உடலின் நுழைவதால் அவைகள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் என அழைக்கப்படுகின்றன.

58. எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகள்____________என்று அழைக்கப்படுகிறது.

A) எதிர்ப்பொருட்கள்

B) இம்யுனோகுளோபுலின்

C) இன்டர்பெரான்

D) A B இரண்டும்

விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகளே எதிர்பொருட்கள் அல்லது இம்யுனோகுளோபுலின் எனப்படும். இவை எதனால் உருவாக்கப்பட்டதோ அந்த எதிர்ப்பொருள் தூண்டியோடு மட்டுமே வினைபுரியக்கூடியதாகும்.

59. நமது உடலுக்குள் நோயூக்கிகள் உள்நுழைந்தவுடன் அவற்றுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் லிம்போசைட்டுகள்___________ஆகும்.

A) T லிம்போசைட்டுகள்

B) B லிம்போசைட்டுகள்

C) பிளாஸ்மா

D) மேற்கண்ட அனைத்தும்

60. போர்டர் மற்றும் ஈடெல்மென் என்பவர்களால் இம்யுனோகுளோபின் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு_________ஆகும்.

A) 1950

B) 1960

C) 1970

D) 1980

விளக்கம்: 1950 களில் போர்டர் மற்றும் ஈடெல்மென் ஆகியோர், செய்த சோதனைகளின் முடிவில், இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பொருள் Y வடிவ அமைப்புடன் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.

61. எதிர்பொருள் தூண்டியின் மீது இம்யூனோகுளோபுலினின் பணி____________ஆகும்.

A) எதிர்பொருள் தூண்டிகளை திரிபுடைய செய்தல்

B) வீழ்படிவாக்குதல்

C) நச்சை சமநிலைபடுத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: எதிர்பொருள் தூண்டிகளை திரிபடைய செய்தல் வீழ்படிவாக்குதல் அவற்றின் நச்சை சமநிலைபடுத்தல் மற்றும் எதிர்பொருள் தூண்டுகளின் மீது மேல் பூச்சு செய்தல் போன்ற பணிகளை இம்யூனோகுளோபின் செய்கின்றன.

62. கூற்று A: ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக செயல்திறனுள்ள பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத் தயாரிப்பு தடுப்பு மருந்து எனப்படுகிறது

காரணம் R: இது அந்த நோய்க்கிருமிகளை ஒத்த, பலவீனமாக்கப்பட்ட அல்லது செயலாக்கமிழந்த அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது அவற்றின் நச்சுப்பொருள்களாகவோ அல்லது அதன் புறப்பரப்பு புரதமாகவோ இருக்கலாம்.

A) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி காரணம் R தவறு

D) கூற்று A தவறு காரணம் R சரி

63. முதல் தலைமுறை தடுப்பு மருந்தானது கீழ்க்கண்ட எந்த குறைபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

A) தட்டம்மை

B) புட்டாளம்மை

C) ரூபெல்லா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முதல் தலைமுறை தடுப்பு மருந்து மேலும் வீரியமிழந்த உயிருள்ள தடுப்புமருந்து, கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து மற்றும் முறிந்த நச்சு என வகைப்படுத்தப்படுகின்றன. வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்தில் வயதான, குறைவான வீரியம் கொண்ட வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

64. இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்து கீழ்க்கண்ட எந்த குறைபாட்டிற்கு பயன்படுத்தப்படகிறது.

A) சின்னம்மை

B) வேரிசெல்லா

C) கல்லீரல் அழற்சி

D) புட்டாளம்மை

விளக்கம்: இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் என்பவை நோயூக்கிகளின் புறப்பறப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும். உதாரணம்: கல்லீரல் அழற்சி B தடுப்பு மருந்து.

65. டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவரால் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு_________ஆகும்.

A) 1896

B) 1796

C) 1986

D) 1786

விளக்கம்: தடுப்புமருந்துகளை நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தும் முறை தடுப்பு மருந்து சிகிச்சை எனப்படும். டாக்டர் எட்வர்ட் ஜென்னர் 1796 ல் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை முதன் முதலில் தயாரித்தார்.

66. போலியோ தடுப்பு மருந்தை தயாரித்த மருத்துவர்___________ஆவார்.

A) எட்வர்ட் ஜென்னர்

B) சாமுவேல் ஹானிமேன்

C) டாக்டர் ஜோனந்சால்

D) பதஞ்சலி

விளக்கம்: இது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தாகும்.

67. வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை தயாரித்த மருத்துவர்____________ஆவார்

A) எட்வர்ட் ஜென்னர்

B) சாமுவேல் ஹானிமேன்

C) டாக்டர் ஜோனந்சால்

D) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

விளக்கம்: வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் சாபின் என்பவர் தயாரித்தர்.

68. வெளிநாய்க்கடி, ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த மருத்துவர்____________ஆவார்.

A) எட்வர்ட் ஜென்னர்

B) லூயிஸ் பாஸ்டர்

C) டாக்டர் ஜோனந்சால்

D) டாக்டர் ஆல்பர்ட் சாபின்

விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் (1885) வெறிநாய்க்கடி, ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தார்.

69. கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக BCG தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட ஆண்டு_____________ஆகும்.

A) 1908

B) 1918

C) 1928

D) 1938

விளக்கம்: BCG தடுப்பு மருந்து கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக 1908 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது.

70. மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்தின் சமீபத்திய புறட்சி___________ஆகும்.

A) டி.என்.ஏ தடுப்பு மருந்து

B) மறுச்சேர்க்கை தடுப்பு மருந்து

C) ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து

D) A B இரண்டும்

விளக்கம்: மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும். தடுப்பு மருந்தின் சமீபத்திய புரட்சி டி.என்.ஏ தடுப்பு மருந்து அல்லது மறுசேர்க்கை தடுப்பு மருந்து ஆகும்.

71. கூற்று 1: தடுப்பு மருந்தேற்றம் என்பது குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்தடைக்காப்பை ஏற்படுத்துவதற்காக நமது உடலில் தடுப்பு மருந்தை செலுத்துவதாகும்.

கூற்று 2: நோய்த்தடுப்பாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான நோய்த்தடைக்காப்பை நமது உடல் உருவாக்குவதாகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

72. கூற்று 1: சுற்றுபுறத்தில் காணப்படும் சில நோய் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது ஒவ்வாமை எனப்படும்.

கூற்று 2: தும்மல் காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா ஆகியவை ஒவ்வாமைக்குறிய எடுத்துக்காட்டுகளாகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

73. கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமைக்குறிய அறிகுறி__________ஆகும்.

A) தும்மல்

B) கண்களில் நீர்க்கோத்தல்

C) மூக்கு ஒழுகுதல்

D) மேற்கண்ட அனைத்தும்

74. கூற்று 1: அனாபைலாக்சிஸ் என்பது மெதுவாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.

கூற்று 2: மாஸ்ட் செல்களால் வெளியேற்றப்படும் ஹிஸ்டமின் மற்றும் செரட்டோனின் போன்ற வேதிப்பொருள்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அனாபைலாக்சிஸ் என்பது உடனடியாக ஏற்படும் மிசை உணர்வாக்க வினையாகும்.

75. தடைக்காப்பு குறைவு நோய் பற்றியக் கருத்துகளுல் சரியாக பொருந்தாததைக் கண்டறி:

1. முதல்நிலை தடைகாப்பு குறைபாடுகள் மரபியல் குறைபாட்டு காரணங்களால் ஏற்படுகிறது.

2. இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள் நோய் தொற்றுகள், கதிர் வீச்சு, செல்சிதைக்கும் மற்றும் நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

76. கீழ்க்கண்டகூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

A) எய்ட்ஸ் என்பது பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு குறைவு சிண்ட்ரோம் எனப்படும்.

B) இந்நோய் ஒருவரது வாழ்நாளில் தாமாகவே பெற்றுக் கொண்ட தடைக்காப்பு மண்டல குறைபாட்டு நோயாகும்.

C) எய்ட்ஸ் நோய் மனித நோய்த்தடைகாப்பு குறைவு வைரஸ் தொற்றால் ஏற்படுவதாகும்.

D) இந்த வைரஸ் உதவு B – செல்களை தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.

விளக்கம்:

இந்த வைரஸ் உதவு T – செல்களை தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.

77. எச்.ஐ.வி யின் அமைப்பு பற்றிய கருத்துகளில் பொருந்தாததைக் கண்டறி:

A) மனிதனின் நோய்த்தடைக்காப்பு குறைவு வைரஸ் லென்டிவைரஸ் பேரினத்தை சார்ந்தது.

B) இவ்வைரஸை மின்னணு நுண்ணோக்கி வழியே உற்றுநோக்கும் போது 100 – 120 nm விட்டமும் அடர்ந்த மையம் மற்றும் லிப்போபுரத உறையையும் கொண்ட கோளவடிவில் காணப்படுகிறது.

C) இதன் மையத்தில் 2 பெரிய ஒற்றை இழை டின்.என்.ஏக்கள் உள்ளன.

D) மேலும் இதனுடன் புரோட்டியேஸ் மற்றும் ரிபோ நியூக்ளியேஸ் நொதிகளும் காணப்படுகின்றன.

விளக்கம்: இதன் மையத்தில் 2 பெரிய ஒற்றை இழை ஆர்.என்.ஏக்கள் உள்ளன.

78. எச்.ஐ.வி யின் மையம்____________என்ற உறையால் சூழப்பட்டுள்ளது.

A) கேப்சிட்

B) கைட்டின்

C) பெப்டைடு

D) ஹைபாக்கள்

விளக்கம்: எச்.ஐ.வின் மையம் கேப்சிட் என்ற உறையால் சூழப்பட்டுள்ளது. மேலும் கேப்சிட் என்ற உறையை தொடர்ந்து மேட்ரிக்ஸ் புரத உறை என்றும் உள்ளது.

79. கூற்று 1: பெரும்பாலும் மைக்ரோபேஜ் செல்களுக்குள் எச்.ஐ.வி வைரஸ் அதிகம் காணப்படுகிறது.

கூற்று 2: இது செல்லுக்கு வெளியே 1.5 மணி நேரம் மட்டுமே உயிர்வாழும் இந்த வைரஸ், செல்லுக்குள் 6 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பெரும்பாலும் மேக்ரோபேஜ் செல்களுக்குள் எச்.ஐ.வி வைரஸ் அதிகம் காணப்படுகிறது. இது செல்லுக்கு வெளியே 6 மணி நேரம் மட்டுமே உயிர்வாழும் இந்த வைரஸ், செல்லுக்குள் 1.5 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன.

80. எச்.ஐ.வி கீழ்க்கண்ட எந்த முறையில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை.

A) பாதுகாப்பற்ற உடல் உறவு

B) பாதிக்கப்பட்ட நபரின் இரத்த தொடர்பு

C) பாதிக்கப்பட்டவரை தொடுதல்

D) உறுப்பு மாற்றம்

81. எச்.ஐ.வி கீழ்க்கண்ட எந்த முறையில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

A) இரத்த ஏற்றம்

B) எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாயின் மூலம் குழந்தைக்கு

C) எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பயன்படுத்திய ஊசிகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: எச்.ஐ.வி யானது பாதுகாப்பற்ற உடல் உறவு, பாதிக்கப்பட்ட நபரின் இரத்த தொடர்பு கொண்ட ஊசிகள், உறுப்பு மாற்றம் இரத்த ஏற்றம் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாயின் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நேரடி கடத்தல் என பல வழிகளின் மூலம் எச்.ஐ.வி கடத்தப்படுகின்றது.

82. கூற்று 1: ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்து தன்னுடைய டின்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் ஆர்.என்.ஏ வாக மாற்றிக் கொள்கிறது.

கூற்று 2: இந்த வைரஸ் டி.என்.ஏ விருந்தோம்பி செல்களின் டி.என்.ஏ வுடன் இணைந்து தொற்று ஏற்பட்ட செல்களை வைரஸ் துகள்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்து தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டின்.என்.ஏ வாக மாற்றிக் கொள்கிறது.

83. எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுவது_________ஆகும்.

A) மைக்ரோபேஜ்

B) மேக்ரோபேஜ்

C) T – லிம்போசைட்

D) B – லிம்போசைட்

விளக்கம்: மேக்ரோபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவை எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் உதவி T லிம்போசைட்டுக்களினுள் நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.

84. எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறை___________ஆகும்.

A) விட்ரியால் சோதனை

B) வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை

C) எலிசா சோதனை

D) மேற்கண்ட எதுவுமில்லை

85. எச்.ஐ.விக்கான மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனை____________ஆகும்.

A) விட்ரியால் சோதனை

B) வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை

C) எலிசா சோதனை

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய எளிய இரத்த பரிசோதனை முறைகள் உள்ளன. எலிசா சோதனை எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் உள்ளனவா என கண்டறியும் சோதனையாகும். இது முதல்நிலை சோதனையாகும். வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனையாகும்.

86. புற்றுக்கட்டியானது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பான திசுக்களையும் ஆக்கிரமிப்பது___________எனப்படுகிறது.

A) புற்றுநோய்

B) வேற்றிட பரவல்

C) காசநோய்

D) மெட்டாஸ்டாசிஸ்

87. மெட்டாஸ்டாசிஸ் என்றழைக்கப்படுவது____________எனப்படுகிறது.

A) பெனைன்

B) மாலிக்னன்ட்

C) வேற்றிட பரவல்

D) சாதாரண கட்டிகள்

88. பண்புகளின் அடிப்படையில் கட்டிகளை____________ஆக வகைப்படுத்தப்படுகிறது.

A) பெனைன்

B) சாதாரண கட்டிகள்

C) மாலிக்னன்ட்

D) மேற்கண்ட அனைத்தும்

89. இயல்பான செல்கள் பற்றிய கருத்துகளில் சரியற்றதைக் கண்டறி:

A) இச்செல்கள் சிறியதாகவும் ஒரே மாதிரியான வடிவத்தையும் அதிக சைட்டோபிளாச அளவையும் கொண்டவை.

B) செல்லின் அளவு மற்றும் அவற்றின் வடிவம் ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன. செல்கள், தெளிவான திசுக்களாக வரிசையமைக்கப்பட்டுள்ளன.

C) வேறுபட்ட செல் அமைப்புகளை உடையன, இயல்பான செல் புறத்தோற்ற கட்டிகளை வெளிப்படுத்துகின்றன.

D) பிளவுறும் செல்களின் அளவு அதிகம். மேலும் இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.

விளக்கம்: பிளவுறும் செல்களின் அளவு குறைவு. மேலும் இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.

90. புற்றுநோய் செல்கள் பற்றிய கருத்துகளுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பெரிய மாறுபட்ட வடிவிலான உட்கருவையும் குறைவான சைட்டோபிளாச அளவையும் கொண்டவை.

B) செல்லின் அளவு வடிவங்களில் மாறுபாடுடையன, செல்கள் வரிசையமப்பு ஒழுங்கற்று காணப்படும்.

C) இயல்பான பல சிறப்பு வாய்ந்த பண்புகளை இழக்கின்றன. சில செல் புறத்தோற்ற கட்டிகளை அதிகமாக வெளிப்படுத்துகின்றன.

D) பிளவுறும் செல்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.

விளக்கம்: பிளவுறும் செல்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.

91. சீம்பால் வழங்குவது

A) இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு

B) இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு

C) செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு

D) செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு

92. பாரடோப் என்பது

A) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி

B) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி

C) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டின் இணையும் பகுதி

D) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டின் இணையும் பகுதி

93. ஒவ்வாமையில் தொடர்புடையது

A) IgE

B) IgG

C) Ig

D) IgM

94. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது

A) ஒவ்வாமை எதிர்வினை

B) நச்சுகளின் சுரப்பு

C) ஹிஸ்டமைன்களின் சுரப்பு

D) மேற்கூறிய அனைத்தும்

95. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் என அழைக்கப்படுகிறது.

A) வேற்றிடப்பரவல்

B) ஆன்கோஜீன்கள்

C) புரோட்டோ – ஆன்கோஜீன்கள்

D) மாலிக்னன்ட் நியோப்ளாசம்

96. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது

A) ஒற்றை இழை ஆர்.என்.ஏ

B) இரட்டை இழை ஆர்.என்.ஏ

C) ஒற்றை இழை டி.என.ஏ

D) இரட்டை இழை டி.என.ஏ

97. கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.

A) நிணநீர் முடிச்சுகள்

B) மண்ணீரல்

C) கோழைச்சவ்வு சார்ந்த நிணநீர் திசுக்கள்

D) தைமஸ்

98. கீழ்க்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை?

A) மோனோசைட்டுகள்

B) மைக்ரோகிளியா

C) குப்ஃபர் செல்

D) லிம்போசைட்டுகள்

99. இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?

A) செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள்

B) வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது.

C) இது ஒரு குறிப்பிட்ட வைரஸீக்கானது.

D) இது தொற்றுகளை ஏற்படுத்தும்

100. செல் வழி நோய்த்தடைகாப்பில்_____________மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில்__________பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.

A) B செல்கள் / T செல்கள்

B) எபிடோப் / எதிர்பொருள் தூண்டி

C) T செல்கள் / B செல்கள்

D) எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி

101. B செல்களை தூண்டுவது

A) நிரப்புக் கூறுகள்

B) எதிர்பொருள்

C) இன்டர்பெரான்

D) எதிர்பொருள் தூண்டி

102. திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு___________மற்றும்___________ஆகும்.

A) முழுசெல் / கரையும் மூலக்கூறு

B) கரையும் மூலக்கூறு / முழுசெல்

C) பாக்டீரியா / வைரஸ்

D) புரதம் / எதிர்பொருள்

103. எதிர்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?

A) நினைவாற்றல் செல்கள்

B) பேசோ பில்கள்

C) பிளாஸ்மா செல்கள்

D) கொல்லி செல்கள்

104. ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம்____________க்கு எடுத்துக்காட்டாகும்.

A) இயந்திர தடைகாப்பு

B) உடற்செயல் சார்ந்த தடைகாப்பு

C) பேகோசைட்டோசிஸ்

D) வீக்கம்

12th Science Lesson 19 Questions in Tamil

19] மனித நலனில் நுண்ணுயிரிகள்

1. அடுமனை மற்றும் பான தயாரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட்________ஆகும்.

A) சாக்ரோமைசஸ் செரிவிசியே

B) பெனிசிலியம் கிரைசோஜீனம்

C) பெனிசிலியம் நொட்டேட்டம்

D) கிளாவிசெப்ஸ் பர்பூரியா

2. நாம் வாழும் பூமியின் உயிரியல் மண்டலத்தின் முக்கிய கூறுகளாக கருதப்படுவது___________ஆகும்.

A) பாக்டீரியாக்கள்

B) பூஞ்சைகள்

C) புரோட்டோசோவா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பாக்டிரியாக்கள், பூஞ்சைகள், புரோட்டோசோவா, சில பாசி, வைரஸ்கள், வைரஸ் மூலகம் மற்றும் பிரையான்கள் போன்றவை, பூமியின் உயிரியல் மண்டலத்தின் முக்கிய கூறுகள் ஆகும். பயன்தரக்கூடிய பலவகையான நுண்ணுயிரிகள் மனிதர்களின் நல்வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன.

3. கீழ்க்கண்டவற்றுள் வளர் ஊடகத்தில் வளர்ந்து கூட்டமாக வாழும் நுண்ணுயிரிகள்___________ஆகும்.

A) புரோட்டோசோவா, பூஞ்சை

B) பூஞ்சை, பிரையான்கள்

C) பாக்டீரியா, பூஞ்சை

D) வைரஸ், பாக்டீரியா

விளக்கம்: பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வளர் ஊடகத்தில் வளர்ந்து கூட்டமாக வாழ்பவை. இக்கூட்டங்களை வெறும் கண்களாலேயே பார்க்க இயலும்.

4. அன்றாட வாழ்வில் லாக்டிக் அமில் பாக்டீரியா__________ல் பயன்படுத்தப்படுகிறது.

A) பாலாடைக்கட்டி

B) யோகர்ட்

C) பிசைந்த மாவு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அன்றாட வாழ்வில், நாம் தயாரிக்கும் இட்லி, தோசை, பாலாடைக்கட்டி, தயிர், யோகர்ட், பிசைந்த மாவு, ரொட்டி, வினிகர் போன்ற பல உணவுப் பொருட்களில் நுண்ணுயிரிகள் மற்றும் அதன் விளைபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

5. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று புரோபயோடிக் வகையைச் சார்ந்த பாக்டீரியாவாகும்.

A) லேக்டோபேசில்லஸ் ஆசிடோஃபிலஸ்

B) லேக்டோபேசில்லஸ் லேக்டிஸ்

C) ஸ்ட்ரேப்டோகாக்கஸ் லேக்டிஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: லேக்டிக் அமில பாக்டீரியா என்று பொதுவாக அழைக்கப்படும் லேக்டோபேசில்லஸ் ஆசிடோஃபிலஸ், லேக்டோபேசில்லஸ் லேக்டிஸ், ஸ்ட்ரேப்டோகாக்கஸ் லேக்டிஸ் போன்றவை பயன்தரும் நுண்ணுயிரிகள் வகையைச் சார்ந்தவை ஆகும்.

6. இரைப்பை மற்றும் உணவுப்பாதையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பாக்டீரியா பொதுவாக___________வகையைச் சார்ந்தது ஆகும்.

A) புரோலாக்டிக்

B) புரோபயோடிக்

C) புரோட்டானிக்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: சில நுண்ணுயிரிகள் புரோபயோட்டிக் வகையைச் சார்ந்ததாகும். இவை இரைப்பை மற்றும் உணவுப்பாதையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

7. பாலில் உள்ள பால் பரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றும் பாக்டீரியா___________ஆகும்.

A) அசட்டோபாக்டிர்

B) நைட்ரசோமோனஸ்

C) லாக்டிக் அமில பாக்டீரியா

D) அஸ்பர்ஜில்லஸ்

விளக்கம்: பாலில் வளரும் லேக்டிக் அமில பாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து கேசின் எனும் தயிராக மாற்றுகிறது. தூய பாலில் உறை (அ) மூல நுண்ணுயிரிகள் சேர்க்கப்படும் சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லேக்டோபேசில்லை இன பாக்டீரியாக்கள் உள்ளன.

8. லாக்டிக் அமில் பாக்டீரியா பாலை தயிராக மாற்றத் தேவைப்படும் வெப்பநிலை____________ஆகும்.

A) <400C

B) <200C

C) <300C

D) <500C

விளக்கம்: அனுகூலமான வெப்பநிலையில் (<400C ) இவை எண்ணிக்கையில் பெருகி, பாலை தயிராக மாற்றுகிறது. பாலை விட தயிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

9. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: நார்ச்சத்துள்ள உணவில் உள்ள கூட்டுப்பொருட்கள் பிரிபையோடிக் என்றழைக்கப்படுகிறது.

கூற்று 2: இவை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும், செயல்திறனையும் கட்டுப்படுத்துகின்றது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இவை நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும், செயல்திறனையும் தூண்டுகின்றன.

10. கீழ்க்கண்டக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:

கூற்று 1: புரோபையோட்டிக் என்பது ஒரு உடலுக்கு பயன் தரக்கூடிய நுண்ணுயிரி ஆகும்.

கூற்று 2: இவற்றை உண்ணும்போது குடல்வாழ் நுண்ணுயிர்கள் விருத்தியடைவதால் அல்லது புதுப்பிக்கப்படுவதால் பல உடல்நலன் சார்ந்த தீமைகள் ஏற்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் தவறு

B) கூற்று 2 மட்டும் தவறு

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இவற்றை உண்ணும்போது குடல்வாழ் நுண்ணுயிர்கள் விருத்தியடைவதால் அல்லது புதுப்பிக்கப்படுவதால் பல உடல்நலன் சார்ந்த நன்மைகள் ஏற்படுகின்றன.

11. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி பாலை நொதிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் மற்றும் அதன் துணை பொருளான லாக்டிக் அமிலம் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

கூற்று 2: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோஃபைலஸ் மற்றும் லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் ஆகியவை, பால் புரதத்தை உறையச் செய்வதுடன் பாலில் உள்ள லாக்டோசை, லாக்டிக் அமிலமாகவும் மாற்றுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

12. யோகர்டின் என்னும் சுவைக்கு அதிலுள்ள____________யே காரணமாகும்.

A) கேசின்

B) ரென்னட்

C) அசிட்டால்டிஹைடு

D) பார்மால்டிஹைடு

13. பால் புரதமான கேசினை திரிய வைப்பதன் மூலம் உருவாக்கப்படுவது____________ஆகும்.

A) வெண்ணெய்

B) நெய்

C) பாலாடைக்கட்டி

D) தயிர்

விளக்கம்: பல வகையான சுவைகள் மற்றும் அமைப்புகளில் உருவாக்கப்படும் பால்பொருளான பாலாடைக்கட்டி, பால் புரதமான கேசினை திரிய வைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

14. பாலாடைக்கட்டி உற்பத்தியின் பொழுது, அமில நிலைக்கு மாற்றப்பட்ட பால் திரிவதற்காக__________என்னும் நொதி சேர்க்கப்படுகிறது.

A) கைட்டின்

B) அமைலேஸ்

C) ரென்னட்

D) யோகர்ட்

விளக்கம்: பாலாடைக்கட்டி உற்பத்தியின் பொழுது, அமில நிலைக்கு மாற்றப்பட்ட பால் திரிவதற்காக ரென்னட் என்னும் நொதி சேர்க்கப்படுகிறது. இறுதியாக, உறைந்த திடப்பொருளைப் பிரித்து எடுத்து அழுத்துவதன் மூலம் பாலாடைக்கட்டி பெறப்படுகிறது. லாக்டோகாக்கஸ், லாக்டோபேசில்லஸ் (அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற வினைத்தொடக்க பாக்டீரியாக்களின் உதவியோடு பல வகையான பாலாடைக்கட்டிகள் உருவாக்கப்படுகின்றன.

15. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் பொதுவாக பனீர் எனப்படும் புதிய பாலாடைக்கட்டி பயன்படுத்தப்படுகிறது.

கூற்று 2: கொதிக்க வைத்த பாலில் எலுமிச்சை சாறு, வினிகர் (அ) உண்ணத் தகுந்த அமிலங்கள் சேர்த்து பாலை திரியச் செய்து பனீர் தயாரிக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

16. ஸ்விஸ் பாலாடைக்கட்டிகளில் காணப்படும் பெருந்துளைகளுக்கு காரணமான வாயு___________ஆகும்.

A) கார்பன் மோனாக்ஸைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) நைட்ரஸ் ஆக்சைடு

D) அசிட்டால்ஸைடு

விளக்கம்: புரோபியோனிபாக்டீரியம் ஷெர்மானியை என்ற பாக்டீரியா உற்பத்தி செய்யும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு தான் ஸ்விஸ் பாலாடைக்கட்டிகளில் காணப்படும் பெருத்துளைகளுக்கு காரணமாகும்.

17. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

1) லியூகோ நாஸ்டாக் மீசென்டிராய்ட்ஸ் – ரொட்டி தயாரிக்க பயன்படுகிறது.

2) சக்ரோமைசஸ் செரிவிசியே – இட்லி மற்றும் தோசை மாவை நொதிக்கச் செய்வதற்கு பயன்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

1) லியூகோ நாஸ்டாக் மீசென்டிராய்ட்ஸ் – இட்லி மற்றும் தோசை மாவை நொதிக்கச் செய்வதற்கு பயன்படுகிறது.

2) சக்ரோமைசஸ் செரிவிசியே – ரொட்டி தயாரிக்க பயன்படுகிறது.

18. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: குளுக்கோஸ் நொதித்தலின் போது உருவாகும் எதில் ஆல்கஹால் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை மாவு புளிப்பதற்கான காரணிகளாகும்.

கூற்று 2: நொதித்த மாவிலிருந்து ரொட்டி தயாரிக்கும் போது கார்பன் டை ஆக்சைடும் எதில் ஆல்கஹாலும் வெளியேறுவதால் ரொட்டி கடினமாகவும் துளைகள் அற்றதாகவும் கிடைக்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நொதித்த மாவிலிருந்து ரொட்டி தயாரிக்கும் போது கார்பன் டை ஆக்சைடும் எதில் ஆல்கஹாலும் வெளியேறுவதால் ரொட்டி மென்மையாகவும் துளைகள் நிரம்பியதாகவும் கிடைக்கிறது.

19. ஸ்பைருலினா என்பது ஒரு__________வகை உயிரியாகும்.

A) ஒரு செல் உயிரி

B) பல செல் உயிரி

C) புரோகேரியேட்டிக் வகை

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒற்றை செல் புரதம் என்பவை உண்ணத்தகுந்த ஒரு செல் நுண்ணுயிரியான ஸ்பைருலினா போன்றவற்றைக் குறிக்கிறது. பாசிகள், ஈஸ்ட், பூஞ்சை (அ) பாக்டீரியா போன்றவற்றை தனியாகவோ (அ) கலந்தோ (அ) சேர்த்தோ வளர்ந்து அதிலிருந்து கிடைக்கும் புரதத்தை உணவின் உட்பொருளாகவோ (அ) புரதத்திற்கு மாற்று உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். இவை மனிதர்கள் உண்பதற்கு ஏற்றவை. கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

20. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய_________தேவைப்படுகிறது.

A) நொதிகலன்

B) பாத்திரங்கள்

C) மைக்கா

D) நெகிழிபொருள்

விளக்கம்: தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய பெரிய நொதிகலன்கள் தேவைப்படுகின்றன. தேவையான அளவு காற்றை உட்செலுத்தும் வசதி, வெப்பம் மற்றும் அமில காரத்தன்மை அளவுகளை நிர்வகிக்கும் அமைப்பு மேலும், அளவுக்க அதிகமாக நிரம்பி வழியும் நுண்ணுயிர் கழிவுப்பொருளை வெளியேற்றும் வசதி ஆகியவற்றை உடைய மூடிய உயிர்வினைக்கலன் கலனே இந்நொதிகலனாகும்.

21. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: உயிர் எதிர்ப்பொருள் என்பது “உயிரிக்கு எதிரானவை” என பொருள்படும்.

கூற்று 2: இவை, பிளேக், மூளைப்படல அழற்சி, தொண்டை அடைப்பான், சிபிலிஸ், தொழு நோய், காச நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

22. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப்பொருளை கண்டறிந்தவர்_________ஆவார்.

A) அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

B) ஹெரோடோட்டஸ்

C) செல்மேன் வேக்ஸ்மேன்

D) மேற்கண்ட எவருமில்லை

23. செல்மேன் வேக்ஸ்மேன் என்பவர் உயிர் எதிர்பொருள் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய ஆண்டு__________ஆகும்.

A) 1933

B) 1943

C) 1953

D) 1923

விளக்கம்: ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர்எதிர்ப்பொருளை செல்மேன் வேக்ஸ்மேன் என்பவர் கண்டறிந்தார். அது மட்டுமின்றி 1943 ஆம் ஆண்டில் உயிர் எதிர்பொருள் என்ற சொல்லையும் முதலில் அவர் பயன்படுத்தினார்.

24. பெனிசிலின் மருந்தை பயன்படுத்துவது குறித்த தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) பெனிசிலின் மருந்தை பயன்படுத்துவதில் உள்ள பெரிய இடர் மீஉணர்மை ஆகும்.

B) இதனால் குமட்டல், வாந்தி, அரிப்புகள், மூச்சுத்திணரல் மற்றும் இறுதியில் இரத்த நாள அழிவுகள் போன்றவை ஏற்படுகின்றன.

C) ஒவ்வாமையை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் நோயாளியின் முன் கையில் சிறிய ஊசியால் சிறிதளவு வீரியம் மிகுந்த மருந்தை செலுத்துவார்.

D) நோயாளிக்கு மருந்து ஒத்துக்கொள்ளவில்லையெனில் மருந்து செலுத்திய இடத்தில் சிவந்து அரிப்பு ஏற்படும்.

விளக்கம்: ஒவ்வாமையை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் நோயாளியின் முன் கையில் சிறிய ஊசியால் சிறிதளவு வீரியம் குறைந்த மருந்தை செலுத்துவார்.

25. அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் தான் கண்டு பிடித்த முதல் உயிர் எதிர்பொருளுக்கு பெனிசிலின் என்று பெயரிட்ட ஆண்டு___________

A) 1926

B) 1936

C) 1929

D) 1932

விளக்கம்: அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் ஸ்டெபைலோகாக்கை பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த போது சரியாக சுத்தம் செய்யப்படாத கண்ணாடி தட்டு ஒன்றில் பச்சை பூஞ்சை வளர்ந்திருப்பதையும் அதனைச் சுற்றி ஸ்டெபைலோகாக்கை வளரமுடியவில்லை என்பதையும் கண்டார். அதற்கு காரணம் அந்த பூஞ்சையிலிருந்து உற்பத்தியான வேதிப்பொருள் என்பதையும் கண்டறிந்தார். 1926 அந்த வேதிப்பொருளுக்கு பெனிசிலின் என்று அவர் பெயரிட்டார். இதுவே அவர் கண்டுபிடித்த முதல் உயிர் பொருளாகும்.

26. பெனிசிலினை உற்பத்தி செய்யும் பூஞ்சை___________ஆகும்.

A) பெனிசிலியம் கிரைசோஜீனம்

B) பெனிசிலியம் நொட்டேட்டம்

C) கிளாவிசெப்ஸ்பர்பூரியா

D) A B இரண்டும்

விளக்கம்: பெனிசிலியம் கிரைசோஜீனம் மற்றும் பெனிசிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சைகள் பெனிசிலினை உற்பத்தி செய்கின்றன. இது பாக்டீரியாக்கொல்லியாக செயல்பட்டு பாக்டீரியாவின் செல்சுவர் உற்பத்தியைத் தடுக்கிறது.

27. கீழ்க்கண்டவர்களுல் பென்சிலின் மருந்தை மேம்படுத்தி, அதை மேலும் வீரியமுடைய உயிர் எதிர்ப்பொருளாக மாற்றியவர்களுல் பொருந்தாதவர் யார்.

A) எர்னஸ்ட் செயின்

B) ஹோவார்டு ப்ளோரி

C) அலெக்சாண்டர் ஃப்ளமிங்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு எர்னஸ்ட் செயின் மற்றும் ஹோவார்டு ப்ளோரி ஆகியோர் பெனிசிலின் மருந்தை மேம்படுத்தி, அதை மேலும் வீரியமுடைய உயிர் எதிர்ப்பொருளாக மாற்றினர்.

28. மருந்துகளின் ராணி என்றழைக்கப்படுவது_________ஆகும்.

A) ஆஸ்பிரின்

B) பெனிசிலின்

C) குயினைன்

D) மேற்கண்ட அனைத்தும்

29. மருந்துகளின் ராணி என்றழைக்கப்படும் மருந்தானது கீழ்க்கண்ட எந்தப் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

A) முதல் உலகப்போர்

B) இரண்டாம் உலகப்போர்

C) கார்கில் போர்

D) கர்நாடகப் போர்

30. பெனிசிலின் மருந்து கண்டுபிடிப்பிற்காக 1945 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களுல் பொருந்தாதவர்_____________ஆவார்.

A) ஃபிளமிங்

B) செயின்

C) ப்ளோரி

D) ஹெரோடோட்டஸ்

விளக்கம்: பெனிசிலின் மருந்து கண்டுபிடிப்பிற்காக ஃபிளமிங், செயின் மற்றும் ப்ளோரி ஆகிய மூவருக்கும் 1945 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

31. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பரந்த செயலாற்றலுள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுபடுத்தும் உயிர் எதிர்ப்பொருளாக செயல்படுகிறது.

A) பெனிசிலின்

B) ஆஸ்பிரின்

C) வலிநீக்கி மருந்து

D) டெட்ராசைக்கிளின்

விளக்கம்: டெட்ராசைக்கிளின் என்பது பரந்த செயலாற்றலுக்கான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மட்டுபடுத்தும் உயிர் எதிர்ப்பொருள் ஆகும். இது நுண்ணுயிரிகளில் புரத உற்பத்தியை தடுக்கிறது.

32. டெட்ராசைக்ளின் வகையைச் சேர்ந்த முதல் உயிர் எதிர்பொருள் மருந்து__________ஆகும்.

A) பெனிசிலின்

B) குளோர்டெட்ராசைக்ளின்

C) வலிநீக்கி மருந்து

D) கோப்ராக்சின்

விளக்கம்: ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட குளோர்டெட்ராசைக்ளின் என்பது தான் டெட்ரா சைக்ளின் வகையைச் சேர்ந்த முதல் உயிர் எதிர்ப்பொருள் மருந்தாகும்.

33. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற பரந்த செயலாற்றலுக்கான உயிர் எதிர்ப்பொருள் மருந்து____________லிருந்து தயாரிக்கப்படுகிறது.

A) ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ்

B) ஸ்ரெப்டோமைசிஸ் கிரைஸ்ஸியஸ்

C) ஆக்டினோமைசெட்ஸ்

D) மைக்கோபேக்டீரியம் டியூபர்குளோசிஸ்

விளக்கம்: ஆக்டினோமைசெட்ஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவில் இருந்து ஸ்ட்ரெப்டோமைசின் என்ற பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து பொதுவாக கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் பாக்டீரியாக்களை குறிப்பாக மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ்ஸை அழிக்கின்றது.

34. கீழ்க்கண்டவற்றுள் நுண்ணுயிரியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிர் எதிர்ப்பொருள்__________ஆகும்.

A) எரித்ரோமைசின்

B) குளோரோமைசிடின்

C) கிரைஸ்ஸியோஃபல்வின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: எரித்ரோமைசின், குளோரோமைசிடின், கிரைஸ்ஸியோஃபல்வின், நியோமைசின், கெனாமைசின், பாசிட்ராசின் மற்றும் இது போன்ற பல உயிர்எதிர்ப்பொருட்கள் நுண்ணுயிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

35. சூப்பர் பக் என்ற சொல்___________யை குறிக்கிறது.

A) உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பாக்டீரிய திரிபுகளை குறிக்கிறது.

B) உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற வைரஸ் திரிபுகளை குறிக்கிறது.

C) உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற ஆர்.என்.ஏ திரிபுகளை குறிக்கிறது.

D) உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற டின்.என்.ஏ திரிபுகளை குறிக்கிறது.

36. பழங்காலந்தொட்டே நுண்ணுயிரிகள்________யை தயாரிக்க பயன்பட்டு வருகிறது.

A) ஈஸ்ட்டுகள்

B) மதுபானங்கள்

C) ஒயின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பழங்காலந்தொட்டே நுண்ணுயிரிகள், முக்கியமாக ஈஸ்ட்டுகள், மதுபானங்களான ஒயின், பீர், விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் உற்பத்தியில் பயன்பாட்டில் உள்ளது.

37. மதுபான வகைகளில் மிகவும் பழமையானது____________ஆகும்.

A) விஸ்கி

B) பிராந்தி

C) ஒயின்

D) பீர்

விளக்கம்: ஒயின்கள் என்பவை பழமையான ஆல்கஹால் மதுபான வகையாகும். ஈஸ்ட்டுகளை பயன்படுத்தி பழச்சாற்றினை நொதிக்க வைப்பதன் மூலம் இப்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

38. நொதித்தலின் உயிர் வேதியியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும் பன்முறை அறிவியல்____________எனப்படுகிறது.

A) சைக்காலஜி

B) சைமாலஜி

C) பைக்காலஜி

D) மைக்காலஜி

39. நொதித்தல் நிகழ்வின் மீது ஆக்சிஜன் ஏற்படுத்தும் தடையின் விளைவு____________ஆகும்.

A) பாஸ்டியர் விளைவு

B) ராமன் விளைவு

C) ராலே விளைவு

D) மேற்கண்ட எதுவுமில்லை

40. புரூயரின் ஈஸ்ட் என்றழைக்கப்படுவது_________ஆகும்.

A) பெனிசிலியம் கிரைசோஜீனம்

B) பெனிசிலியம் நொடேட்டம்

C) சக்காரோமைசெஸ் செரிவிசியே

D) ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ்

விளக்கம்: சக்காரோமைசெஸ் செரிவிசியே பொதுவாக புரூயரின் ஈஸ்ட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி மால்ட் அல்லது மாவு நிறைந்த தானியங்கள் மற்றும் பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல்வேறு மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

41. கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: ஒயின் மற்றும் பீர் ஆகியன நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது.

கூற்று 2: விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் ஆகியன காய்ச்சி வடித்தல் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:

கூற்று 1: ஒயின் மற்றும் பீர் ஆகியன காய்ச்சி வடித்தல் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.

கூற்று 2: விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் ஆகியன நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன.

42. திராட்சை ரசத்தை நொதிக்கச் செய்வதன் மூலம்____________உற்பத்தி செய்யப்படுகிறது.

A) விஸ்கி

B) பீர்

C) ஒயின்

D) ரம்

43. ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளை பற்றிய அறிவியலுக்கு___________என்று பெயர்.

A) ஈனாலஜி

B) சைமாலஜி

C) சைட்டாலஜி

D) சைக்காலஜி

விளக்கம்: திராட்சை ரசத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒயின் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் முறைகளை பற்றிய அறிவியலுக்கு ஈனாலஜி என்று பெயர். திராட்சை ரசம் பல்வேறு வகையான சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்படுகிறது.

44. சிவப்பு ஒயின் தயாரிக்கப் பயன்படுவது_________ஆகும்.

A) சிவப்பு திராட்சை

B) கருந்திராட்சை

C) பச்சைத் திராட்சை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் என இரண்டு வகை ஒயின்கள் உள்ளன. சிவப்பு ஒயின்களுக்கு கருந்திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் அதன் தோல் மற்றும் தண்டுகளும் சேர்த்து ஒயின் தயாரிக்கப்படுகிறது.

45. வெள்ளை ஒயின் தயாரிக்கப் பயன்படுவது____________ஆகும்.

A) சிவப்ப திராட்சை

B) கருந்திராட்சை

C) வெள்ளை திராட்சை

D) B C இரண்டும்

விளக்கம்: சிவப்பு ஒயின் மற்றும் வெள்ளை ஒயின் என இரண்டு வகை ஒயின்கள் உள்ளன. வெள்ளை ஒயின்கள் வெள்ளை (அ) கருந்திராட்சையின் பழச்சாற்றிலிருந்து மட்டும் தயாரிக்கப்படுகிறது. தோல் மற்றும் தண்டுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை.

46. முளைக்கட்டிய பார்லி மால்ட் தானியங்களை பீராக மாற்றுவது___________ஆகும்.

A) சக்காரோமைசெஸ் கார்ல்பெர்ஜென்சிஸ்

B) சக்காரோமைசஸ் செரிவிசியே

C) A B இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

47. ரம் உற்பத்தி செய்ய____________பயன்படுகிறது.

A) பெனிசிலியம் கிரைசோஜீனம்

B) பெனிசிலியம் நொடேட்டம்

C) சக்காரோமைசெஸ் செரிவிசியே

D) ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ்

48. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: விஸ்கி என்பது ஒரு வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும்.

கூற்று 2: இது சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம் உருவாக்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

49. பனை மற்றும் தென்னம் பாளையின் சாற்றிலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் பானம்_________ஆகும்.

A) பதநீர்

B) பிராந்தி

C) பீர்

D) ரம்

விளக்கம்: பதநீர் என்பது தென்னிந்தியாவின் ஒரு சில பகுதிகளில் பாரம்பரியமாக பனை மற்றும் தென்னம் பாளையின் சாற்றிலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் பானம் ஆகும். பொதுவாக, இப்பானமானது தென்னை மரத்தின் வெடிக்காத பாளையைத் தட்டுவதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும்.

50. பனைமர பதநீரை காய்ச்சி_____________தயாரிக்கப்படுகிறது.

A) பனைவெல்லம்

B) சர்க்கரை

C) பனங்கருப்பட்டி

D) A C இரண்டும்

விளக்கம்: இது ஒரு(பதநீர்) புத்துணர்ச்சி தரும் பானமாகும். பனைமர பதநீரை காய்ச்சி பனங்கருப்பட்டி அல்லது பனைவெல்லம் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பதநீர் அசைவற்ற சூழலில் சில மணி நேரங்கள் இருக்கும் பொழுது அதில் இயற்கையாக உள்ள ஈஸ்டானது நொதித்தல் வினையில் ஈடுபடுவதால் கள் என்ற மதுபானம் உருவாகிறது.

51. கீழ்க்ணடக் கூற்றுகளை ஆராய்ந்து தவறானவற்றைத் தேர்ந்தெடு:

1) ஈஸ்டானது நொதித்தல் வினையில் ஈடுபடுவதால் கள் என்ற மதுபானம் உருவாகிறது.

2) இதில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

3) 24 மணி நேரத்திற்கு பிறகுதான் தள் அருந்துவதற்கான தன்மையைப் பெறுகிறது.

4) ஆனால் வினிகர் உற்பத்திக்கு பயன்படுகிறது.

A) 1 2 3 மட்டும் சரி

B) 1 2 4 மட்டும் சரி

C) 1 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 24 மணிநேரத்திற்கு பிறகு கள், அருந்தக்கூடிய தன்மையை இழக்கிறது.

52. எத்தனால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது____________ஆகும்.

A) பெனிசிலியம் கிரைசோஜீனம்

B) பெனிசிலியம் நொடேட்டம்

C) சக்காரோமைசெஸ் செரிவிசியே

D) ஸ்ட்ரெப்டோமைசஸ் ஆரியோபேசியன்ஸ்

விளக்கம்: எத்தனால் (C2H5OH) உற்பத்தியில் சக்காரோமைசெஸ் செரிவிசியே பெரும்பங்கு வகிக்கிறது. எதில் ஆல்கஹால் தொழிற்சாலை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுவதோடு, எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

53. தொழில்துறை ஆல்கஹால் என்றழைக்கப்படுவது____________ஆகும்.

A) எத்தனால்

B) ஈஸ்ட்

C) சர்க்கரை

D) பூஞ்சை

விளக்கம்: எத்தனால் “தொழில்துறை ஆல்கஹால்” என குறிப்பிடப்படுகிறது. சைமோமோனாஸ் மோபிலிஸ் மற்றும் சர்சினா வென்ட்ரிகுலி போன்ற பாக்டீரியாக்களும் எத்தனால் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.

54. எத்தனால் உற்பத்திக் குறித்த தகவல்களில் பொருந்தாததைக் கண்டறி:

1) எத்தனால் உற்பத்தியில் முதலில் தளப்பொருள் அரைக்கப்படுகிறது.

2) பிறகு ஆஸ்பர்ஜில்லஸிடமிருந்து பெற்ற நீர்த்த அமைலேஸ் நொதி சேர்க்கப்படுகிறது.

3) இது ஸ்டார்ச்சை சிதைத்து நொதிக்கக்கூடிய சர்க்கரையாக மாற்றுகிறது.

4) இதனுடன் ஈஸ்ட் சேர்க்கப்பட்டு சர்க்கரையானது எத்தனாலாக மாற்றப்படுகிறது. பின் இது 96 சதவீதம் அடர்வு கொண்ட எத்தனாலாக காய்ச்சி வடிக்கப்படுகிறது.

A) 1 2 3 மட்டும் தவறு

B) 1 3 4 மட்டும் தவறு

C) 1 2 மட்டும் தவறு

D) மேற்கண்ட எதுவுமில்லை

55. இன்று பொதுவாக பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள்__________ஆகும்.

A) எத்தனால்

B) பயோ டீசல்

C) A B இரண்டும்

D) பெட்ரோல்

56. பொருத்துக:

A) எத்தனால் – 1. எத்தனால்

B) குளுக்கோஸ் – 2. பெனிசிலின்

C) மருந்துகளின் ராணி – 3. C6H12O6

D) தொழில்துறை ஆல்கஹால் – 4. C2H5OH

A) 1 2 3 4

B) 4 3 2 1

C) 4 3 1 2

D) 1 3 2 4

விளக்கம்:

A) எத்தனால் – 1. C2H5OH

B) குளுக்கோஸ் – 2. C6H12O6

C) மருந்துகளின் ராணி – 3. பெனிசிலின்

D) தொழில்துறை ஆல்கஹால் – 4. எத்தனால்

57. ஒவ்வொரு ஆண்டும் உலக உயிரிய எரிபொருள் தினமாகக் கடைபிடிக்கப்படும் தினம்_____________ஆகும்.

A) ஆகஸ்டு 7

B) ஆகஸ்டு 8

C) ஆகஸ்டு 9

D) ஆகஸ்டு 10

விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10 ஆம் நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மரபு சார்ந்த புதுப்பிக்க இயலாத புதை படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கக்கூடிய உயிரிய எரிபொருளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

58. பயோடீசல்___________என்ற எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

A) தாவர எண்ணெய்

B) கொழுப்ப

C) உயவுக்களிம்பு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தாவர எண்ணெய் கொழுப்பு (அ) உயவு களிம்புகளில் இருந்து பயோடீசல் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. டீசல் எஞ்சின்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயோடீசலைப் பயன்படுத்தலாம். பெட்ரோலியம் சார்ந்த டீசல் எரிபொருளை ஒப்பிடும் போது தூய பயோடீசல் ஒரு நச்சற்ற, உயிரிய சிதைவிற்கு உள்ளாகக் கூடிய குறைந்த அளவு காற்று மாசுபடுத்திகளைக் கொண்ட எரிபொருளாகும்.

59. இந்திய அரசாங்கம் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்த ஆண்டு____________ஆகும்.

A) டிசம்பர், 2009

B) செப்டம்பர், 2009

C) ஜனவரி, 2009

D) ஏப்ரல், 2009

விளக்கம்: இந்திய அரசாங்கம் டிசம்பர் 2009-ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது காட்டாமணக்கு என்ற எண்ணெய் வித்து பயோடீசல் உற்பத்திக்கு மிக சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. புங்கன் என்னும் சிற்றினமும் பயோடீசல் உற்பத்திக்கு ஏற்றது எனக் கருதப்படுகிறது.

60. பொருத்துக:

A) ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் – 1. பியூட்ரிக் அமிலம்

B) அசிட்டோபாக்டர் அசிட்டை – 2. ஃபியுமரிக் அமிலம்

C) ரைசோபஸ் ஒரைசே – 3. அசிடிக் அமிலம்

D) கிளாஸ்டிரிடியம் பியூட்டைரிக்கம் – 4. சிட்ரிக் அமிலம்

A) 1 2 3 4

B) 4 3 1 2

C) 4 3 2 1

D) 1 3 2 4

விளக்கம்:

A) ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர் – 1. சிட்ரிக் அமிலம்

B) அசிட்டோபாக்டர் அசிட்டை – 2. அசிடிக் அமிலம்

C) ரைசோபஸ் ஒரைசே – 3. ஃபியுமரிக் அமிலம்

D) கிளாஸ்டிரிடியம் பியூட்டைரிக்கம் – 4. பியூட்ரிக் அமிலம்

61. லாக்டிக் அமிலம் தயாரிக்க____________எனும் பாக்டீரியா பயன்படுகிறது.

A) ஆஸ்பர்ஜில்லஸ் நைஜர்

B) அசிட்டோபாக்டர் அசிட்டை

C) ரைசோபஸ் ஒரைசே

D) லாக்டோபேசில்லஸ்

62. கீழ்க்கண்டக்கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:

கூற்று 1: வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் மற்றும் பாக்டீரியங்கள் பயன்படுகின்றன.

கூற்று 2: துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்க ரென்னட் எனும் நொதி சலவைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் தவறு

B) கூற்று 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: துணிகளில் படிந்த எண்ணெய் கறைகளை நீக்க லைபேஸ் நொதி எனும் நொதி சலவைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

63. புட்டியில் அடைக்கப்பட்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயன்படுத்தப்படும் நொதி__________ஆகும்.

A) பெக்டினேஸ்

B) புரோட்டியேஸ்

C) செல்லுலேஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

64. பாலாடைக்கட்டி தயாரிப்பில் பாலை கெட்டியான தயிராக மாற்றுவதற்கு பயன்படும் நொதி___________ஆகும்

A) பெக்டினேஸ்

B) புரோட்டியேஸ்

C) செல்லுலேஸ்

D) ரென்னட்

65. இதயத்தசை நலிவுறல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக்குழாய்களிலுள்ள இரத்தக்கட்டிகளைக் கரைக்கும் ‘கட்டி கரைப்பானாக’ செயல்படுவது___________ஆகும்.

A) ஸ்ட்ரெப்டோகைனேஸ்

B) ஸ்ட்ரெப்டோகாக்கை

C) ரென்னட்

D) A B இரண்டும்

விளக்கம்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியங்கள் உற்பத்தி செய்யும் ஸ்ட்ரெப்டோகைனேஸ் என்னும் நொதியும் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியங்களும் இதயத்தசை நலிவுறல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக்குழாய்களிலுள்ள இரத்தக்கட்டிகளைக் கரைக்கும் ‘கட்டி கரைப்பானாக’ செயல்படுகின்றன.

66. டிரைக்கோடெர்மா பாலிஸ்போரம் என்ற பூஞ்சையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கி__________ஆகும்.

A) சைக்ளோஸ்போரின் – A

B) ஸ்டேட்டின்கள்

C) இன்சுலின்

D) சைக்ளோஸ்போரின் – B

விளக்கம்: டிரைக்கோடெர்மா பாலிஸ்போரம் என்ற பூஞ்சையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நோய் தடுப்பாற்றல் ஒடுக்கியான சைக்ளோஸ்போரின் – A உறுப்பு மாற்றம் செய்யப்பயன்படுகிறது. மேலும் இது அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.

67. இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுத்தப்படுவது______________ஆகும்.

A) சைக்ளோஸ்போரின் – A

B) ஸ்டேட்டின்கள்

C) இன்சுலின்

D) சைக்ளோஸ்போரின் – B

விளக்கம்: மோனாஸ்கஸ் பர்பூரியஸ் என்ற ஈஸ்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்டேட்டின்கள், இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் நொதியை போட்டி வினைமூலம் தடை செய்கிறது.

68. வடிகட்டுதல் மற்றும் படியவைத்தல் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது___________நிலை சுத்திகரிப்பில் அடங்கும்.

A) முதல்நிலை

B) இரண்டாம் நிலை

C) மூன்றாம் நிலை

D) நான்காம் நிலை

விளக்கம்: வடிகட்டுதல் மற்றும் படியவைத்தல் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல் நிலை சுத்திகரிப்பில் அடங்கும். மிதக்கும் குப்பைகள் தொடர் படிகட்டல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. மண் மற்றும் சிறுகற்கள் படியவைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது.

69. உயிரிய ஆக்சிஜன் தேவை எனப்படுவது_________ஆகும்.

A) ஒரு லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு.

B) ஒரு லிட்டர் பாலிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு.

C) ஒரு லிட்டர் ஆல்கஹாலிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு.

D) ஐந்து லிட்டர் நீரிலுள்ள அனைத்து கரிம பொருட்களையும் ஆக்சிஜனேற்றம் செய்வதற்கு பாக்டீரியாவால் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு.

70. கீழ்க்கண்டக்கூற்றுகளில் சரியற்றதைக் கண்டறி:

கூற்று 1: கழிவு நீரில் உள்ள உயிரிய ஆக்சிஜன் தேவை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தவுடன் அந்த நீர் கீழ்படிவாதல் தொட்டிக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதனால் பாக்டீரியா திரள் கீழே படிகிறது.

கூற்று 2: இந்தப் படிவு செறிவூட்டப்படாத கசடு எனப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் தவறு

B) கூற்று 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: இந்தப் படிவு செறிவூட்டப்பட்ட கசடு எனப்படுகிறது.

71. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு கீழ்க்கண்ட எந்த நிகழ்வுக்கு முன்பு நடைபெறுகிறது.

A) கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துதல்

B) மறு சுழற்சி செய்தல்

C) இயற்கையான நீர் நிலைகளில் கலத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் அல்லது இயற்கையான நீர் நிலைகளில் கலப்பதற்கும் முன்பாகச் செய்யப்படும் இறுதி சுத்திகரிப்பே மூன்றாம் நிலை சுத்திகரிப்பு எனப்படும். இதனால் கழிவு நீரின் தரம் மேம்படுத்தப்படுகிறது. இம்முறையினால் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மீதமுள்ள கனிமக் கூட்டுப்பொருட்களும் நீக்கப்படுகின்றன.

72. நீரின் தரத்தை பாதிக்காமல் அதில் உள்ள நுண்ணுயிரிகளை மட்டும் செயலிழக்கச் செய்யும் கதிர்_____________ஆகும்.

A) அகச்சிவப்புக் கதிர்

B) X – கதிர்

C) புற ஊதாக்கதிர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: புற ஊதாக்கதிர்கள் நீரின் தரத்தை பாதிக்காமல் அதில் உள்ள நுண்ணுயிரிகளை மட்டும் செயலிழக்கச் செய்வதால் அவை சிறந்த தொற்று நீக்கியாக செயல்படுகின்றன.

73. கீழ்க்கண்டக்கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: புற ஊதாக்கதிர்களில் வேதிப்பொருட்கள் இல்லாததால் அது தற்போதைய குளோரினேற்றம் செயல்முறைக்கு சிறந்த மாற்றாக அமையும்.

கூற்று 2: மேலும் குளோரினுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றுள்ள நுண்ணுயிர்களான கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா ஆகியவற்றையும் புற ஊதாக்கதிர்கள் செயலிழக்கச் செய்கின்றன.

A) கூற்று 1 மட்டும் தவறு

B) கூற்று 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

74. தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு___________ஆகும்.

A) 1985

B) 1995

C) 1975

D) 1986

விளக்கம்: தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் என்ற அமைப்பு நாட்டின் பெரும் வளம் என கருதப்படும் நன்னீர் வளங்களைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த 1995-ம் ஆண்டு செயலாக்கம் பெற்றது.

75. கங்கை நதி செயல்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் நாள்___________ஆகும்.

A) ஜனவரி 14, 1996

B) ஜனவரி 14, 1986

C) ஜனவரி 14, 2006

D) ஜனவரி 14, 2016

விளக்கம்: கங்கை நதி செயல்திட்டம் ஜனவரி 14, 1986-ல் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் கங்கை நதியில் கலக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை தடுத்து, மடைமாற்றி சுத்திகரித்து அதிகமாக மாசுபடுத்தும் அமைப்பகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்து கங்கை ஆற்று நீரின் தரத்தை மேம்படுத்துவதாகும்.

76. யமுனை நதி செயல் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் மாதம்___________ஆகும்.

A) ஏப்ரல், 1993

B) ஏப்ரல், 1973

C) ஏப்ரல், 1983

D) ஏப்ரல், 2003

விளக்கம்: யமுனை நதி செயல் திட்டம் ஏப்ரல், 1993-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி, கழிவு நீரை சுத்தப்படுத்தி, ஆற்றுக்குள் அனுமதிப்பதே இதன் நோக்கமாகும்.

77. கூற்று A: ஆக்சிஜனற்ற சூழலில் கரிம பொருட்களை சிதைவடையச் செய்வதன் மூலம் பெறப்படும் பல வகையான வாயுக்களின் கலவையே உயிரியவாயு எனப்படுகிறது.

காரணம் R: விவசாய கழிவுகள், நகராட்சி கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவுநீர், உணவு கழிவுகள் மற்றும் இன்னும் பல பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு உயிரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.

A) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

78. உயிர்வாயுவில் அதிகமாக காணப்படுவது__________ஆகும்.

A) கார்பன் டை ஆக்சைடு

B) மீத்தேன்

C) ஆக்சிஜன்

D) ஹைட்ரஜன்

79. மெத்தனோஜென்ஸ் எனும் பாக்டீரியாக்கள்__________யை உற்பத்தி செய்கின்றன.

A) கார்பன் டை ஆக்சைடு

B) மீத்தேன்

C) ஆக்சிஜன்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் மெத்தனோஜென்ஸ் எனப்படும். அதில் மெத்தனோபாக்டீரியம் என்பது சாதாரணமாகக் காணப்படும் மணமற்ற உயிரிவாயு, புகையற்ற, நீலநிறச்சுடரை தரவல்லது.

80. கோபர் எனப்படுவது பொதுவாக__________கழிவு ஆகும்.

A) சாணம்

B) காய்கறி

C) நெகிழி

D) மருத்துவ

விளக்கம்: சாணம் என அழைக்கப்படும் கால்நடைக்கழிவு பொதுவாக கோபர் என அழைக்கப்படுகிறது. கால்நடை சாணத்தை காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.

81. செரித்தல் நிகழ்வானது காற்றற்ற சூழ்நிலையில் கீழ்க்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

A) கரைத்தல்

B) அசிடோஜெனிசிஸ்

C) மீத்தேன் உருவாக்கம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கரைத்தல், அசிடோஜெனிசிஸ் மற்றும் மீத்தேன் உருவாக்கம் என்ற மூன்று நிலைகளில் காற்றற்ற முறையில் செரித்தல் நிகழ்கிறது.

82. கூற்று A: நுண்ணுயிரிகளையோ அல்லது வேறு உயிரியல் முகவர்களைக் கொண்டோ ஒரு குறிப்பிட்ட தீங்குயிரி கட்டுப்படுத்தப்பட்டால் அதனை உயிரிய தீங்குயிர் கொல்லி என அழைக்கலாம்.

காரணம் R: தீங்கு தரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரிய தீங்குயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

A) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

83. அசுவினி மற்றும் கொசுவின் இளம் உயிரிகளைக் கட்டுபடுத்த உதவுபவை___________ஆகும்.

A) தம்பல பூச்சி

B) தட்டான்கள்

C) தட்டைப்புழுக்கள்

D) A B இரண்டும்

84. கூற்று A: பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்பது மண்ணில் வாழும் பாக்டீரியம் ஆகும்.

காரணம் R: இது கிரைடாக்சின் என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று A மற்றும் காரணம் R சரி, மேலும் காரணம் R கூற்றிற்க்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று A சரி, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

85. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: ஸ்போர்கள் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை, பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உருவாக்குகிறது.

கூற்று 2: இது கிரை ஜீன் மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

86. _____________வரிசைகளை சேர்ந்த பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினை புரிய வல்லது.

A) லெபிடாப்டீரா

B) டிப்டிரா

C) கோலியாப்டிரா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: லெபிடாப்டீரா, டிப்டிரா, கோலியாப்டிரா மற்றும் ஹைமனாப்டீரா போன்ற வரிசைகளைச் சேர்ந்த பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினை புரிய வல்லது.

87. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: பயன்தரும் தாவரங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தீங்கு தரும் களைகளை மட்டும் அழிக்கும் பொருட்களே களைக்கொல்லிகளாகும்.

கூற்று 2: உயிரிய களைக்கொல்லி என்பது நுண்ணுயிரிகளான பூஞ்சை, பாக்டீரியா அல்லது புரோட்டோசோவாக்களிலிருந்து பெறப்பட்ட நான்காம் நிலை வளர்ச்சிதை மாற்ற கூட்டுப்பொருட்களாகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: உயிரிய களைக்கொல்லி என்பது நுண்ணுயிரிகளான பூஞ்சை, பாக்டீரியா அல்லது புரோட்டோசோவாக்களிலிருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற கூட்டுப்பொருட்களாகும்.

88. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: பைட்டோப்த்தோரா பால்மிவோரா எனும் பூஞ்சையிலிருந்து பெறப்பட்ட பூஞ்சை களைக் கொல்லி என்பதே முதல் உயிரிய களைக்கொல்லி ஆகும்.

கூற்று 2: இது 1991 – ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இது 1981 – ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

89. தனித்து வாழக்கூடிய பூஞ்சைக்கு உதாரணம்___________ஆகும்.

A) ட்ரைக்கோடெர்மா

B) பைட்டோப்த்தோரா

C) பக்குலோவைரஸ்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வேர்ச்சூழல் மண்டலத்தில் மிக சாதாரணமாக காணப்படும் ட்ரைக்கோடெர்மா பூஞ்சை இனங்கள் தனித்து வாழக்கூடியவை. இவை, பல தாவர நோயூக்கிகளை கட்டுப்படுத்துகின்ற வல்லமை பெற்ற உயிரிய கட்டுப்பாட்டு முகவர்கள் ஆகும்.

90. கீழ்க்கண்டவற்றுள் உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களுல் அல்லாதது எது.

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) சயனோபாக்டீரியா

D) வைரஸ்

91. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாவிற்கு இணைந்து வாழக்கூடிய ரைசோபியம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கூற்று 2: இந்த பாக்டீரியா, பயறு வகைத் தாவரங்களின் தண்டுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்த பாக்டீரியா, பயறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.

92. வளிமண்டல நைட்ரஜனை நிலைபடுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை மிகைப்படுத்தும் பாக்டீரியா____________

A) ரைசோபியம்

B) அசோஸ்பைரில்லம்

C) அசோட்டோபாக்டர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைபடுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.

93. பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு_____________எனப்படுகிறது.

A) லைக்கன்கள்

B) மைக்கோரைசா

C) ஆல்காக்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு மைகோரைசா எனப்படும். இதில் இணைவாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரசை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது.

94. கீழ்க்கண்டவற்றுள் தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியோட்டிக் உயிரிகள்____________ஆகும்.

A) சயனோபாக்டீரியா

B) நீலப் பசும் பாசி

C) A B இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

95. கீழ்க்கண்டவற்றுள் நன்கு அறியப்பட்ட நைட்ரஜனை நிலைபடுத்தும் சயனோபாக்டீரிய வகை பாக்டீரியா_______________

A) ஆசில்லடோரியா

B) நாஸ்டாக்

C) அனபீனா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஆசில்லட்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிகஸ் ஆகியவை நன்கு அறியப்பட்ட நைட்ரஜனை நிலைபடுத்தும் சயனோபாக்டீரியாக்கள் ஆகும்.

96. இயற்கை வேளாண்மையின் முக்கிய கூறுகளில் பொருந்தாதது எது.

A) கனிம பொருட்களைப் பயன்படுத்தி மண்ணின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

B) மண் வாழ் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை மறைமுகமாக அளித்தல்

C) பயறு வகை தாவரங்களைப் பயன்படுத்தி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்.

D) பயிர் சுழற்சி, உயிரியப் பல்வகைத் தன்மை, இயற்கையான கொன்றுண்ணிகள், இயற்கை உரங்கள் மற்றும் பொருத்தமான வேதிய, வெப்ப மற்றம் உயிரிய தலையீடுகள் போன்ற முறைகளால், களை மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துதல்.

விளக்கம்: கரிம பொருட்களைப் பயன்படுத்தி மண்ணின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் உயிரிய செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

97. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: இயற்கையாக உள்ள அல்லது மரபியல் மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்டு, மாசுபடுத்திகளை குறைப்பதும் அழிப்பதும் உயிரியத் தீர்வு எனப்படும்.

கூற்று 2: மற்ற தீர்வு வழிமுறைகளை விட, உயிரியத்தீர்வு, செலவு அதிகமானது மற்றும் குறைந்த நிலைப்பு தன்மை கொண்டது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மற்ற தீர்வு வழிமுறைகளை விட, உயிரியத்தீர்வு, செலவு குறைவானது மற்றும் அதிக நிலைப்பு தன்மை கொண்டது.

98. PET நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நுண்ணுயிரி__________ஆகும்.

A) நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியா

B) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்

C) சூடோமோனாஸ் புட்டிடா

D) டோலிபோத்ரிக்ஸ்

99. கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:

கூற்று 1: காற்றற்ற நிலையில் வாழும் நுண்ணுயிரிகள் ஆக்சிஜனற்ற சூழலில் மாசுக்களை சிதைக்கின்றன.

கூற்று 2: டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா என்பது காற்றற்ற சூழலில் பென்சீனை சிதைக்கவும், டொலுவின் மற்றும் சைலீனை ஆக்ஸிகரணமடையச் செய்யும் திறமையும் பெற்றுள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

100. தாவரத்தின் உடலினுள் உள்ள பாலியூரித்தேனை சிதைக்கும் பூஞ்சை_____________ஆகும்.

A) பெஸ்டலோடியோப்சிஸ் மைக்ரோஸ்போரா

B) சாக்ரோமைசஸ் செரிவிசியே

C) நைட்ரோசோமோனாஸ் யூரோப்பியா

D) சூடோமோனாஸ் புட்டிடா

101. கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?

A) லாக்டோபேசில்லஸ் பல்காரிகஸ்

B) பெனிசிலியம் சிற்றினம்

C) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்

D) ரைசோபஸ் நைக்ரிகன்ஸ்

102. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?

A) அசட்டோபாக்டர் அசெட்டி – உயிர் எதிர்ப்பொருள்

B) மெத்தனோபாக்டீரியம் நொடேட்டம் – லாக்டிக் அமிலம்

C) பெனிசிலியம் நொடேட்டம் – அசிட்டிக் அமிலம்

D) சக்காரோமைசெஸ் செரிவிசியே – எத்தனால்

103. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்

A) சோயா மாவு

B) நிலக்கடலை

C) கரும்பாலைக் கழிவுகள்

D) சோள உணவு

104. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் கிரைடாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?

A) கொசுக்கள்

B) ஈக்கள்

C) நெமட்டோடுகள் (நாற்புழுக்கள்)

D) காய்ப் புழுக்கள்

105. சைக்ளோஸ்போரின் – A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

A) அஸ்பர்ஜில்லஸ் பர்பூரியஸ்

B) மனாஸ்கஸ் பர்பூரியஸ்

C) பெனிசிலியம் நொடேட்டம்

D) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்

106. கீழ்க்கண்டவற்றுள் எந்த பாக்டீரியா பெருமளவில் உயிரிய-தீங்குயிர் கொல்லியாக பயன்படுகின்றது?

A) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

B) பேசில்லஸ் சப்டிலிஸ்

C) லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்

D) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ்

107. கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் பங்கேற்பதில்லை?

A) சூடோமோனாஸ்

B) அசோட்டோபாக்டர்

C) அனபீனா

D) நாஸ்டாக்

108. கார்பன் டை ஆக்சைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு

A) விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

B) தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

C) லாக்டேட் நொதித்தல்

D) ஆல்கஹாலிக் நொதித்தல்

109. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்

A) உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல்

B) படிவாதலை குறைத்தல்

C) படிவாதலை அதிகரித்தல்

D) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்

110. காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்

A) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு

B) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு

C) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்

D) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!