Tnpsc

12th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘சாபஹர் நாளை’ இந்தியா எந்தத் தேதியில் நினைவுகூர்ந்தது?

அ)  2021 மார்ச் 2

ஆ) 2021 மார்ச் 4

இ) 2021 மார்ச் 6

ஈ) 2021 மார்ச் 8

  • மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை தில்லியில் நடைபெற்ற இந்தியா கடல்சார் உச்சிமாநாடு – 2021’இன்படி, 2021 மார்ச்.4 அன்று, இந்தியா, ‘சாபஹர் நாளை’ நினைவுகூர்ந்தது என்று வெளிவிவகார அமைச்சகம் கூறியது. மெய்நிகராக நடந்த இந்நிகழ்வில் ஆப்கானிஸ்தான், ஈரான், ஆர்மீனியா, இரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

2. பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்காக அண்மையில் இந் -தியாவுடன் ஒப்பந்தம் செய்த நாடு எது?

அ) பாகிஸ்தான்

ஆ) பிலிப்பைன்ஸ்

இ) இலங்கை

ஈ) இந்தோனேசியா

  • பிரம்மோஸ் என்பது ஒரு நடுத்தர சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இது இந்தியாவின் DRDO மற்றும் இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயீனியா ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது மற்றும் தயாரிக்கப்பட்டதாகும். நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், வானூர்திகள் அல்லது நிலஞ்சார் தளங்களிலிருந்து இதை ஏவலாம்.
  • இந்த ஏவுகணையை வாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நாடு சமீபத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

3. நடப்பாண்டில் (2021) வந்த பன்னாட்டு பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Educate Organise and Agitate

ஆ) Gender Equality: March against Patriarchy

இ)  Women in leadership: Achieving an equal future in a COVID-19 world

ஈ) Impact of COVID-19 on women

  • மகளிர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவர்களது சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு சர்வதேச பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2021) கருப்பொருள் “Women in leadership: Achieving an equal future in a COVID-19 world” என்பதாகும்.
  • ஐநா அவையின் பெண்கள் அமைப்பை பொருத்தவரை, உலகெங்கிலும் தலைமைப்பாத்திரங்களில் பெண்கள் குறைவாகவே உள்ளனர்.

4. சமீபசெய்திகளில் இடம்பெற்ற, சிங்கோர்கர் கோட்டை அமைந்துள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) கேரளா

  • மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள சிங்கோர்கர் கோட்டையின் பாதுகாப்புப் பணிகளுக்கு இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார். கலாசார அமைச்சகம் மற்றும் மாநில பழங்குடியினர் விவகாரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போது, புதிதாக அமைக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையி
    -ன் ஜபல்பூர் சரகத்தை அவர் தொடங்கிவைத்தார்.

5. INS குலிஷ் & INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள், எந்நாட்டின் துறைமுகத்துக்கு முதன்முறையாக சென்றன?

அ) இலங்கை ஆ) வங்காளதேசம்

இ) மியான்மர் ஈ) ஜப்பான்

  • INS குலிஷ் மற்றும் INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் அண்மையில் வங்கதேசத்தின் துறைமுக நகரமான மோங்லாவுக்கு சென்றன. நடைபெற்றுகொண்டிருக்கும், ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ (1971 விடுதலைப்போர்) நினைவாக அவை அங்கு சென்றன.
  • INS சுமேதா என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட கடல் ரோந்துக்கப்பலாகும். INS குலிஷ் என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை கப்பலாகும்.

6. BWF சுவிஸ் ஓபன் சூப்பர் 300’இல் தங்கம்வென்ற பாட்மிண்டன் வீராங்கனை யார்?

அ) P V சிந்து

ஆ) கரோலினா மரின்

இ) நவோமி ஒசாகா

ஈ) சாய்னா நேவால்

  • ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், BWF சுவிஸ் ஓபன் சூப்பர் 300 போட்டியில் தங்கம் வென்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை P V சிந்துவை 12-21, 5-21 என்ற செட் கணக்கில் அவர் தோற்கடித்தார்.
  • 2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு உலக சாம்பியனான P V சிந்து தோற்கும் முதல் இறுதிப்போட்டி இதுவாகும். கிடாம்பி ஸ்ரீகாந்த், போட்டியின் அரையிறுதியிலிருந்து விக்டர் ஆக்சல்சன் அவர்களால் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

7. சமீபத்தில், உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த உலக மல்யுத்த வீரர் யார்?

அ) வினேஷ் போகத்

ஆ) பஜ்ரங் புனியா

இ) யோகேஷ்வர் தத்

ஈ) சாக்ஷி மாலிக்

  • இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மேட்டியோ பாலிகோன் தரவரிசை தொடரில் அடுத்தடுத்து இரு தங்கப்பதக்கம் வென்றதை அடுத்து, உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். ரோமில் நடைபெற்ற 65 கிகி ஃப்ரீஸ்டைல் நிகழ்வின் இறுதிப்போட்டியில், அவர் மங்கோலிய எதிராளி -யைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் பஜ்ரங் புனியாவும் தங்கப்பதக்கம் வென்றார்.

8. இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள அறிஞர்களின் எண்ணிக்கை என்ன?

அ) 2

ஆ) 5

இ) 17

ஈ) 40

  • இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு, 40 அறிஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி அறிஞர்கள் ஆறு நாடுகளைச்சார்ந்தவர்களாவர். மேலும், பல்வேறு இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்கான பெல்லோசிப் அவர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சித்திட்டம், அனுபவம், கல்வித்தகுதி மற்றும் வெளியீட்டு பதிவின் அடிப்படையில் அறிஞரின் தேர்வு அமைந்துள்ளது.

9. குற்றத்தடுப்பு தொடர்பான ஐநா மாநாட்டை நடத்தும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) ஜப்பான்

  • குற்றத்தடுப்பு தொடர்பான ஐநா மாநாடு ஜப்பானின் கியோட்டோவில் தொடங்கியது. 1970’க்குப்பின் முதன்முறையாக ஜப்பான் இம்மாநாட்டை நடத்துகிறது. குற்றவியல் நீதி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பிரச்னைகள், கூட்டத்தின்போது நடைபெறும் விவாதத்திற்கான நிகழ்வு நிரல்களாக வைக்கப்பட்டுள்ளன.

10. உலக சிறுநீரக நாள் கொண்டாடப்படுகிற மாதம் எது?

அ) ஜனவரி

ஆ) பிப்ரவரி

இ) மார்ச்

ஈ) ஏப்ரல்

  • உலக சிறுநீரக நாளானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாம் வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படு -கிறது. “Living Well with Kidney Disease” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். பன்னாட்டு சிறுநீரகவியல் சங்கமும் பன்னாட்டு சிறுநீரக அறக்கட்டளைகள் கூட்டமைப்பும் இணைந்து இந்த உலகளாவிய பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மதிய உணவுத் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி

பள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நோக்கில், ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசியை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக 3 மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. சோதனை அடிப்படையில் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போது ஆறு மாநிலங்களில் உள்ள தலா 1 மாவட்டத்தில் மட்டும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2. இந்திய எல்லைக்கருகே பிரம்மபுத்திரா நதியில் அணை

இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லைக்கருகே பிரம்மபுத்திரா நதியில் அணையைக் கட்டுவதற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அருணாசல பிரதேசம், அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திரா நதி, சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் ‘யார்லங் சாங்போ’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்நதியில் அணையைக்கட்டுவதற்கு சீனா முடிவெடு -த்தது. அதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அணைகட்டும் திட்டத்தை 2021-25’ஆம் ஆண்டுக்கான பதினான்காவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் சீனா குறிப்பிட்டிருந்தது. இத்தகைய சூழலில், அந்த ஐந்தாண்டுத்திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் அணைகட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள -து. பிரம்மபுத்திரா நதி வங்கதேசத்திலும் பாய்வதால், சீனாவின் அணை கட்டும் திட்டத்துக்கு அந்நாடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

எனினும், இந்தியா, வங்கதேசத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையி -ல் அணை கட்டப்படும் என்று சீனா பதிலளித்தது. அணையை இந்த ஆண்டுக்குள்ளாகவே கட்டிமுடிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதில் சீனா மும்முரம் காட்டி வருகிறது. அருணாசல பிரதேச மாநில எல்லையை ஒட்டியுள்ள திபெத்தின் மெடாக் மாகாணத்தில் இந்த அணை கட்டப்படவுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவ வாய்ப்பிருப்பதாக நிபுணர் -கள் எச்சரிக்கின்றனர்.

3. கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பல்லாயிரம் ஆண்டு ‘பொக்கிஷங்கள்’

கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணியில், கண்ணாடி மற்றும் சங்கு வளையல், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானை வடிவமைப்பு பொருட்கள், கால்வாய் இருந்த அடையாளம் கண்டுபிடிக்கப்ப -ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த கொடுமணலில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் திட்ட இயக்குநர் இரஞ்சித் தலைமையில், ஒன்பதாவது அகழாய்வு பணி நடந்துவருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த, பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. திட்ட இயக்குநர் இரஞ்சித் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த அகழாய்வில், தொழிற்கூடங்கள் இருந்த பகுதியில், நீர் வெளியேறும் வகையில் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய், நொய்யல் ஆற்று பகுதி வரை சென்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

இரண்டு இடங்களில், 10 மீ., நீளம், 10 மீ., அகலத்தில் குழி தோண்டி அகழாய்வு செய்ததில் 30 செ.மீ., ஆழத்திலேயே பல வகையான கல்மணி, அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடி மற்றும் சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானை வடிவமைப்பு பொருட்கள், கால்வாய் இருந்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ., நீளத்தில், இரும்பு கரண்டி போன்ற பொருளும் கிடைத்துள்ளது.

ஓரடி ஆழத்திலேயே பொருட்கள் கிடைப்பதால், கவனமாக பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடம், கல்லறை தனியார் நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. தற்போது, நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில், அகழாய்வு நடக்கிறது.

1. India has commemorated the ‘Chabahar Day’ on which date?

A) 2021 March 2

B) 2021 March 4

C) 2021 March 6

D) 2021 March 8

  • The Ministry of External Affairs (MEA) stated that, India commemorates the ‘Chabahar Day’ on March 4, 2021 along the lines of the Maritime India Summit 2021 held in Delhi from March 2 to March 4. The virtual event witnessed the participation of ministers from Afghanistan, Iran, Armenia, Russia, Kazakhstan and Uzbekistan.

2. Which country has recently signed pact with India for purchase of BrahMos Missile?

A) Pakistan

B) Philippines

C) Sri Lanka

D) Indonesia

  • BrahMos is a medium–range supersonic cruise missile designed, developed and produced by BrahMos Aerospace, a joint venture company set up by India’s DRDO and Russia’s Mashinostroyenia. It can be launched from submarines, ships, planes or land–based platforms.
  • Philippines signed pact with India recently for possible purchase of this missile.

3. What is the theme of the International Women’s Day 2021?

A) Educate Organise and Agitate

B) Gender Equality: March against Patriarchy

C) Women in leadership: Achieving an equal future in a COVID–19 world

D) Impact of COVID–19 on women

  • International Women’s Day is observed every year on March 8 across the world, to highlight the achievements and problems faced by women.
  • The theme for this year is ” Women in leadership: Achieving an equal future in a COVID–19 world.” As per the United Nations Women, women remain under–represented in leadership roles and decision making across the world.

4. Singorgarh Fort, which was making news recently, is located in which state?

A) Maharashtra

B) Madhya Pradesh

C) Odisha

D) Kerala

  • The President of India Ram Nath Kovind laid the foundation stone for the conservation works of Singorgarh Fort in Damoh district in Madhya Pradesh. During the program organised by Ministry of Culture and the state’s Tribal Affairs Department, the President inaugurated the newly formed Jabalpur Circle of Archaeological Survey of India.

5. Indian Naval Ships INS Kulish and INS Sumedha visited the port of which country, for the first time?

A) Sri Lanka

B) Bangladesh

C) Myanmar

D) Japan

  • Indian Naval Ships INS Kulish and INS Sumedha recently arrived at the port city of Mongla in Bangladesh. They are visiting Bangladesh to commemorate the ongoing ‘Swarnim Vijay Varsh’ (Liberation War of 1971). INS Sumedha is an indigenously built offshore patrol vessel and INS Kulish is an indigenously built guided missile corvette.

6. Which Badminton player won gold in the BWF Swiss Open Super 300?

A) P V Sindhu

B) Carolina Marin

C) Naomi Osaka

D) Saina Nehwal

  • Olympic champion Carolina Marin won gold in the BWF Swiss Open Super 300 tournament. She defeated India’s ace badminton player PV Sindhu 12–21, 5–21, in the final match of the women’s singles event. This was the first final appearance of the reigning world champion P V Sindhu since the World championships here in 2019.
  • Kidambi Srikanth exited from the semi–final of the tournament by star Viktor Axelsen.

7. Which Indian wrestler has regained top spot in world ranking recently?

A) Vinesh Phogat

B) Bajrang Punia

C) Yogeshwar Dutt

D) Sakshi Malik

  • Indian wrestler Bajrang Punia has regained the top spot in the world rankings after he clinched a second successive gold medal at the Matteo Pallicone Ranking Series. In the 65 kg freestyle event final in Rome, he defeated his Mongolian counterpart to win gold. Bajrang Punia also won gold in the tournament last year.

8. How many scholars have been selected for India Science and Research Fellowship (ISRF) 2021?

A) 2

B) 5

C) 17

D) 40

  • For the India Science and Research Fellowship (ISRF) 2021, 40 scholars have been selected. These research scholars belong to six countries and have been awarded fellowship to conduct research in science and technology in various Indian institutes and universities.
  • The selection has been based on the scholar’s research proposal, experience, academic merit and publication record.

9. Which country is the host of UN Congress on crime prevention?

A) India

B) China

C) United States of America

D) Japan

  • The United Nation’s Congress on crime prevention commenced in Kyoto, Japan. Japan is hosting the congress for the first time since 1970. Key issues pertaining to criminal justice, crime prevention and international cooperation to promote rule of law are placed as agendas for discussion during the meeting.

10. The World Kidney Day is celebrated in which month, across the world?

A) January

B) February

C) March

D) April

  • The World Kidney Day is celebrated on the second Thursday of the month of March every year, across the world. This year’s theme is ‘Living Well with Kidney Disease’.
  • wo international bodies namely the International Society of Nephrology (ISN) and the International Federation of Kidney Foundations (IFKF) jointly organise the global campaign.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!